சங்க இலக்கியத்தில் பெண் போராளிகள்! - முனைவர் மஞ்சுளா

/idhalgal/eniya-utayam/female-fighters-sangam-literature-dr-manjula

ரு பொருளைப் பற்றிப் பேசுகிறோம் அல்லது விவாதிக்கிறோம் என்றால் அதைப் பற்றி உரையாடுவது அந்தக் காலத்தின் தேவை யாகிறது என்பதைச் சொல்லாமலேயே புரிந்து கொள்ள முடியும். பெண் - ஆண் சமத்துவம், பெண் விடுதலை, பெண் கல்வி, பெண்களுக்கான சொத்துரிமை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை போன்றவற்றைப் பற்றிச் சமீபகாலமாக அதிகம் உரையாட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். ஒரு பெண் தலைமைப் பொறுப்பில் இருந்தால் அந்த ஆட்சி அன்பு வழியில் அறத்தை நிலைநாட்டும் என்ற கருத்தியலுக்குக் கொள்ளி வைத்துவிட்டு வீட்டைப் பாதுகாப்பது மட்டுமே பெண்ணின் கடமையாகப் பார்க்கப் படுகிறது.

இயற்கையில் இரண்டு விதமான தத்துவங்கள் இருப்பது இயல்பு. ஆம் என்று சொன்னால் இல்லை என்று மறுப்பதும், ரோஜா மலர் பூக்கும் செடியில் முட்கள் முளைப்பதும், இருளைக் குறித்துக் கவலைப்படும் பொழுது கதிரவன் உதிப்பதும், மலைகள் சூழ்ந்த மண்ணில் பள்ளத்தாக்குகள் இருப்பதும் இயற்கை. இயற்கையில் அமைந்த இந்த முரண்கள் இரு வகையாக விளக்கப்படுகிறது. நட்பு முரண் என்பது ஒருவரை முழுமையாக வெறுக்காமல் அவரின் செயல்பாடுகளிலோ, கருத்துக்களிலோ எதிர்கருத்து உண்டாகும் நிலையில் அதைச் சொல்லித் திருத்திக் கொள்வது. பகை முரணில் ஒருவரை வீழ்த்தும் அவலம் ஏற்பட்டுவிடுகிறது. குறிப்பிட்ட நபரை முற்றிலும் வெறுக்கும் மோசமான மனநிலைக்குச் சென்றுவிடுகிறோம். ஆரோக்கியமான வளர்ச்சிக்கு நட்பு முரணே வழியாகும்.

ww

மேல் - கீழ், வலது - இடது, இருள் - ஒளி, நன்மை - தீமை, வானம் - பூமி போன்றவை தேவையின் காரணமாக இணக்கமான முறையில் எதிர் நிலையில் படைக்கப்பட்டிருக்கிறது. இதேபோல, பெண்ணின் பண்புகள் போதாமையாக உணர்ந்த வேளையில் ஆணையும், ஆணின் குணங்கள் முழுமை பெறவில்லை என்று தோன்றிய நிலையில் பெண்ணையும் படைத்திருக்கிறது இயற்கை. இங்கே யார் யாரைவிட உயர்ந்தவர் என்று வாதம் செய்வது அடிப்படைக் கொள்கையையே ஆட்டம் காண வைக்கும்.

பெண்ணின் வழியாகத் தலைமுறைகள் பூமியில் தொடரும் போதும் ஆணுக்குப் பெண் குறைந்தவள் என்று அடிமைப்படுத்த நினைப் பதும், பெண் என்பவள் ஆடவனின் பாலியல் தேவைக்காக மட்டுமே உண்டானவள் என்று கருதிப் பிள்ளை பெறும் இயந்திரமாகவும், பாலியல் இச்சையைத் தீர்த்துக் கொள்ள சின்னஞ்சிறு சிறுமி என்றுகூட பாராமல் பாலியல் வன்முறை நடத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.

தாய்வழிச் சமூகத்தின் உயர்வைக் கொண்டாடிய தமிழ்ச் சமூகத்தில், தாய்த் தெய்வ வழிபாட்டைப் போற்றிய தமிழ்ச் சமூகத்தில் மீண்டும் பெண்ணின் மகத்துவத்தைப் புரிய வைப்பது இன்றைய கடமையாக இருக்கிறது.

ஒரு பெண் சுயமரியாதையுடன் வாழ - கல்வியும், பொருளாதாரமும் மிகப் பெரிய காரணிகளாக இருந்து வருகின்றன. அவளின் தன்னம்பிக் கைக்கு அவளுக்குத் தெரிந்த கல்வியும், கலைகளும் பலவகையிலும் கைகொடுக்கின்றன. நாடோடிச் சமூகமாக இருக்கக்கூடிய ஔவையைத் தன் நாட்டில் இருக்க வைத்துவிடமாட்டோமா என்று விரும்பிய அதியமான் என்ற அரசன் ஔவைக்குத் தரவேண்டிய பரிசிலைத் தராமல் காலம் கடத்திக் கொண்டே இருந்தான். தன்னைக

ரு பொருளைப் பற்றிப் பேசுகிறோம் அல்லது விவாதிக்கிறோம் என்றால் அதைப் பற்றி உரையாடுவது அந்தக் காலத்தின் தேவை யாகிறது என்பதைச் சொல்லாமலேயே புரிந்து கொள்ள முடியும். பெண் - ஆண் சமத்துவம், பெண் விடுதலை, பெண் கல்வி, பெண்களுக்கான சொத்துரிமை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை போன்றவற்றைப் பற்றிச் சமீபகாலமாக அதிகம் உரையாட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். ஒரு பெண் தலைமைப் பொறுப்பில் இருந்தால் அந்த ஆட்சி அன்பு வழியில் அறத்தை நிலைநாட்டும் என்ற கருத்தியலுக்குக் கொள்ளி வைத்துவிட்டு வீட்டைப் பாதுகாப்பது மட்டுமே பெண்ணின் கடமையாகப் பார்க்கப் படுகிறது.

இயற்கையில் இரண்டு விதமான தத்துவங்கள் இருப்பது இயல்பு. ஆம் என்று சொன்னால் இல்லை என்று மறுப்பதும், ரோஜா மலர் பூக்கும் செடியில் முட்கள் முளைப்பதும், இருளைக் குறித்துக் கவலைப்படும் பொழுது கதிரவன் உதிப்பதும், மலைகள் சூழ்ந்த மண்ணில் பள்ளத்தாக்குகள் இருப்பதும் இயற்கை. இயற்கையில் அமைந்த இந்த முரண்கள் இரு வகையாக விளக்கப்படுகிறது. நட்பு முரண் என்பது ஒருவரை முழுமையாக வெறுக்காமல் அவரின் செயல்பாடுகளிலோ, கருத்துக்களிலோ எதிர்கருத்து உண்டாகும் நிலையில் அதைச் சொல்லித் திருத்திக் கொள்வது. பகை முரணில் ஒருவரை வீழ்த்தும் அவலம் ஏற்பட்டுவிடுகிறது. குறிப்பிட்ட நபரை முற்றிலும் வெறுக்கும் மோசமான மனநிலைக்குச் சென்றுவிடுகிறோம். ஆரோக்கியமான வளர்ச்சிக்கு நட்பு முரணே வழியாகும்.

ww

மேல் - கீழ், வலது - இடது, இருள் - ஒளி, நன்மை - தீமை, வானம் - பூமி போன்றவை தேவையின் காரணமாக இணக்கமான முறையில் எதிர் நிலையில் படைக்கப்பட்டிருக்கிறது. இதேபோல, பெண்ணின் பண்புகள் போதாமையாக உணர்ந்த வேளையில் ஆணையும், ஆணின் குணங்கள் முழுமை பெறவில்லை என்று தோன்றிய நிலையில் பெண்ணையும் படைத்திருக்கிறது இயற்கை. இங்கே யார் யாரைவிட உயர்ந்தவர் என்று வாதம் செய்வது அடிப்படைக் கொள்கையையே ஆட்டம் காண வைக்கும்.

பெண்ணின் வழியாகத் தலைமுறைகள் பூமியில் தொடரும் போதும் ஆணுக்குப் பெண் குறைந்தவள் என்று அடிமைப்படுத்த நினைப் பதும், பெண் என்பவள் ஆடவனின் பாலியல் தேவைக்காக மட்டுமே உண்டானவள் என்று கருதிப் பிள்ளை பெறும் இயந்திரமாகவும், பாலியல் இச்சையைத் தீர்த்துக் கொள்ள சின்னஞ்சிறு சிறுமி என்றுகூட பாராமல் பாலியல் வன்முறை நடத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.

தாய்வழிச் சமூகத்தின் உயர்வைக் கொண்டாடிய தமிழ்ச் சமூகத்தில், தாய்த் தெய்வ வழிபாட்டைப் போற்றிய தமிழ்ச் சமூகத்தில் மீண்டும் பெண்ணின் மகத்துவத்தைப் புரிய வைப்பது இன்றைய கடமையாக இருக்கிறது.

ஒரு பெண் சுயமரியாதையுடன் வாழ - கல்வியும், பொருளாதாரமும் மிகப் பெரிய காரணிகளாக இருந்து வருகின்றன. அவளின் தன்னம்பிக் கைக்கு அவளுக்குத் தெரிந்த கல்வியும், கலைகளும் பலவகையிலும் கைகொடுக்கின்றன. நாடோடிச் சமூகமாக இருக்கக்கூடிய ஔவையைத் தன் நாட்டில் இருக்க வைத்துவிடமாட்டோமா என்று விரும்பிய அதியமான் என்ற அரசன் ஔவைக்குத் தரவேண்டிய பரிசிலைத் தராமல் காலம் கடத்திக் கொண்டே இருந்தான். தன்னைக் காத்திருக்க வைக்கிறானே அரசன் என்ற கோபத்தில் அருந்தமிழ் ஔவை ஒரு பாடலைப் பாடுகிறாள். இந்த உலகம் என்பது ஒருவழிப் பாதை உடையது அல்ல. அது எல்லோருக்குமானது; அங்கே எல்லா விதமான வாய்ப்புகளும் இருக்கவே செய்யும் என்ற பொருளில் பாடுகிறாள்.

‘‘கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி

தன்அறி யலன்கொல்? என்னறி யலன்கொல்?

அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென

வறுந்தலை உலகமும் அன்றே அதனால்

காவினெம் கலனே சுருக்கினெம் கலப்பை

மரங்கொல் தச்சன் மைவல் சிறாஅர்

மழுவுடைக் காட்டகத்து அற்றே

எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே”

-என்ற செய்யுளின் வழியாக, அதியமான் தன் பெருமையையும் அறியாமல் என் அறிவையும் கருதாமல் பரிசில் தராமல் காத்திருக்க வைப்பது கூடாது என்று வெடித்துக் கூறுகிறார். கல்வியும் கலையறிவும் உள்ள எனக்கு இந்த உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும் சோறு கிடைத்துவிடும் என்று தன்னம்பிக்கையோடு பேசுகிறார். அதற்கான உவமையாக விறகு வெட்டிப் பிழைக்கும் சிறுவன், கையில் கோடரியுடன் செல்லும் போது அவனுக்காகக் காடுகள் காத்திருப்பாதாக மிடுக்குடன் அதியமானை விட்டுப் புறப்படத் தயாராகிறார்.

இதே ஔவை அரசியல் அறிவு பெற்றதன் சாட்சியாக அவர் தொண்டைமானிடம் சென்ற தூது அமைந்திருக்கிறது. அரசனுக்கு அறிவுரை கூறும் அளவுக்கு அவர் அறிவாற்றலால் சிறந்து விளங்கினார். ஒருவரைப் புகழ்வது போல அவரின் படைகளைக் கேலி செய்திருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு. தொண்டைமான் படைக்கலன்கள் நன்கு அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் அதியமானின் படைக்கலன்களோ பழுது பார்ப்பதற்காகக் கொல்லன் பட்டறையில் இருக்கின்றன என்று சொல்லும் போது அதியமான் தொடர்ந்து போர் செய்யும் விவரத்தை நுட்பமாகச் சொல்லி விடுகிறார்.

இதன்மூலம் தொடர் பயிற்சியில் இருக்கும் ஒருவரிடம் பயிற்சி இல்லாத வேறு ஒருவர் எப்படிப் போர் புரியமுடியும் என்றும் அப்படிப் போர் தொடுத்தாலும் அது தோல்வியைத் தரும் என்றும் மறைமுகமாகச் சொல்லி நல்வழிப்படுத்துகிறார். ஔவையின் அரசியல் பார்வைப் பதிவு செய்யும் புறநானூற்றின் தொண்ணூற்றியைந்தாம் பாடல் பெண்களின் அறிவாற்றலை உணர்த்துகிறது. இதனாலோ என்னவோ பெண்களை அடிமைப்படுத்த பெண் கல்வி மறுப்பைக் கையில் எடுத்துக் கொண்டது ஆதிக்க சமூகம். இன்று ஓரளவு இந்த அடிமை விலங்குகள் விலக காலம் கூடி வருகிறது.

தாய்வழிச் சமூகத்தின் அடையாளமாக விளங்கும் சங்க இலக்கியத்தில் பெண் ஆளுமைகளைப் பார்க்கும் போது உத்வேகம் பிறக்கிறது. பூவையரின் உறுதியான உள்ளத்திற்கும், வீரம் நிறைந்த வாழ்க்கைக்கும் பல உதாரணங்களைக் காட்டுகின்றன சங்கப் பாடல்கள். குழந்தையைப் பெறக்கூடிய தருணம் என்பது சொல்லில் வடிக்க முடியாத இன்பத்தருணம். அதை விட ஒரு தாய்க்கு மகிழ்ச்சி இருக்கிறது என்று பேசுகிறது சங்கப்படால்.

தான் பெற்ற மகனைப் போர்க்களத்தில் பறிகொடுத்த போதும் மகிழ்ந்தாளாம் தாய். இது எப்படிச் சாத்தியமாகும்! மீனை உணவாக உண்ணக்கூடிய கொக்கின் இறகுகளைப் போன்ற வெண்மையான நரைத்த கூந்தலை உடைய வயதான தாய் ஒருத்தியை, தன் மகன் இறந்துவிட்டான் என்ற துன்பத்தைவிட அவன் போர்க்களத்தில் யானையை எதிர்த்துப் போரிட்டு தானும் வீரப்புண் பட்டு இறந் தான் என்ற செய்தி பெருமைப்பட வைத்தது. அதனால் ஆனந்தக் கண்ணீர் சிந்தினாள். அந்தக் கண்ணீர் மழைவரும் போது மூங்கில் இலை நுனியிலிருந்து சொட்டும் நீர்த்துளியைவிட அதிகமானது.

‘‘மீன்உண் கொக்கின் தூவிஅன்ன

வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்

களிறுஎறிந்து பட்டனன் என்றும் உவகை

ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர்

நோன்கழை துயல்வரும் வெதிரத்து

வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே”

என்ற வரிகளில் வீர உணர்வு, அசாத்திய தைரியம் ஆகியவை வெளிப்படுகி்ன்றன. அந்த வீரத்தின் தொடர்ச்சியாக இன்றும் இராணுவப் பணிக் காகத் தன் தந்தையையோ, கணவனையோ, சகோதரனையோ, மகனையோ ஒப்புக் கொடுக்கும் வழக்கத்தைப் பார்க்க முடிகிறது.

ww

பொருளுக்காகத் தன் விடுதலை உணர்வைத் தியாகம் செய்ய வேண்டிய அவசியம் பெண்களுக்கு இல்லை என்பதைப் பேசும் இலக்கியம், மடந்தையருக்கு இருந்த அரசியல் அறிவை விளக்கும் இலக்கியம், அவர்களின் வீரப் பண்பைப் பறைசாற்றும் இலக்கியம், பண்டமாற்று மூலம் பெண்கள் தங்களுக்கான பொருள் தேவையிலும் தன்னிறைவு அடைந்ததை விளக்குகிறது. வேளாண்மைத் தொழில் செய்யும் மங்கையரை ‘கடைசியர்’ என்றும் ‘இளையோர்’ என்றும் அழைக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. காடும் காடு சார்ந்த இடத்தில் ஆடு மாடுகளை மேய்க்கும் ஆயர் வாழ்க்கையில் அதிகமான பால் வளம் நிறைந்திருந்தது. வீட்டின் தேவைக்குப் போக அதிகப்படியான தயிரைத் தயிர்ப்பானையில் வைத்து விற்கும் மகளிரை முல்லை நிலத்தில் காணலாம்.

அதே போலக் கடல் சார்ந்த நிலத்தில் வசிக்கும் பெண்கள் மீனையும், உப்பையும் விற்ற வாழ்வியலும் இலக்கியத்தில் இருக்கின்றன. பண்டமாற்று முறை என்பதால் ஒரு படி உப்புக்கு ஒரு படி நெல் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்லி உப்புக்கு நெல் ஈடாகும் என்று கூவிக்கூவி விற்றனர்.

‘‘பல்குழைத் தொடலை ஒல்குவயின் ஒல்கி

நெல்லும் உப்பும் நேரே ஊரீர்

கொள்ளீரோ எனச் சேரிதொறும் நுவலும்”

என்ற அகநானூற்று வரிகள் பெண்கள் வணிக உத்தியினை அறிந்து இருந்ததை விளக்குகின்றன. தழையாடை அணிந்த உமணர்களின் மனைவிகள் சேரிகள் தோறும் சென்று அங்குள்ள மக்களிடம் நெல்லும் உப்பும் ஒரே விலையாகும் வாங்கிக் கொள்வீர் என்று விற்றனர். இன்றைய நிலையில் வேலை பார்க்கும் பெண்களின் நிலை எப்படி இருக்கிறது? பெண்கள் வீட்டிலும் உழைக்க வேண்டி இருக்கிறது; பணியிடங்களிலும் அதிகமான உழைப்பைத் தரவேண்டி இருக்கிறது. இயேசுபெருமான் ஒற்றைச் சிலுவைதான் சுமந்தார், ஆனால் நாங்களோ இரட்டைச் சிலுவைகளைச் சுமக்கிறோம் என்று வேலைக்குப் போகும் பெண்கள் பாடுகின்ற அவலத்தைக் கேட்டுக் கொண்டிருக்கி றோம்.

மகளிர் தங்கள் காதலையும் காமத்தையும் சொல்லிக் கொள்ள முடியாத நிலையில் பலகாலமாக இருக்கின்றனர். நாணமும், அச்சமும் பெண்களுக்குத் தேவை என்று இந்தச் சமூகம் ஒடுக்கியே வைத்திருக்கிறது. அதனால்தான் பாலியல் சீண்டல் நடக்கும் வேளையில் அதைப் பற்றி வெளியில் சொல்லிக் கொள்ள முடியாமல் கடைசியில் தற்கொலை செய்து கொள்ளும் சோகமான முடிவை எடுத்து விடுகின்றனர். பிரச்சினைகளை எதிர்கொள்ளவும், அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடவும், விழிப்புணர்வு பெறவும், சக பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பெண்களுக்குத் தெரியும். அதன் வெளிப்பாடாகத் தன் பிரிவுத் துன்பத்தைப் பேசும் பாடலாக - குறுந்தொகைப் பாடலைச் சொல்லலாம்.

இரவு நேரத்தில் ஊரே தூங்கிக் கொண்டிருக்கிறது. கணவன் பொருள் தேடும் காரணமாகப் பிரிந்து சென்றிருக்கிறான். அவன் விரைந்து வராததால் வருத்தப்படுகிறாள் மனைவி. அதை யாரிடம் சொல்லி ஆறுதல் பெறுவது, எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்களே என்ற இயலாமையில் கோபம் வருகிறது. நான் பெற்ற காம நோயை அறியாமல் வீட்டில் இருக்கும் அம்மா முதலியோர் எப்படி உறங்கலாம்? என் நோய்க்கு மருந்தில்லாமல் நான் தவிக்கும் போது ஆறுதல் சொல்ல வேண்டியவர்கள் இல்லாததால் இதற்காக நான் முட்டிக் கொள்வேனா அல்லது இந்த ஊரைத் தாக்குவேனா என்று புரியாமல் அலைபாய்கிறாள் தலைவி. ஊர் உறங்கும் வேளையில் ஓ வென்று கூச்சலிட்டுக் கத்திவிடத் தோன்றுகிறது அந்தத் தலைவிக்கு.

விட்டுப் போன கணவனைத் தேடிக் கொண்டு புறப்பட்ட ஆதிமந்தியாரின் செயல் காதலை யும் காமத்தையும் பெண்கள் வெளிப்படுத்திவிடக் கூடாது என்று பேசும் கூற்றுக்கு எதிரானது. அதே போன்று வெள்ளிவீதியார் - மனைவியை விட்டுப் பிரியும் கணவன் பாலை நிலத்தில் செல்லும் போது அவனைத் தேடிக் கொண்டு சென்ற காதலியாக, அந்நாளைய விதிகளை மீறிய காதலியாக வாழ்ந்ததை இலக்கியங்கள் பதிவு செய்கின்றன. காதலன் பொருள் ஈட்டுவதற்காகப் பிரிந்து செல்ல நேர்கிறது. தான் மட்டும் வீட்டில் இருந்து கொண்டு என்ன செய்யப் போகிறோம் என்று காதலி அவரோடு செல்கிறாள்.

அதற்கு வெள்ளிவீதியாரை உதாரணமாகக் காட்டுகிறது அகநானூற்றுப் பாடல்.

குட்டிப் போட்ட பெண் புலியின் பசிக்காக மானைப் பிடித்து வரத் திட்டமிடும் ஆண் புலி தென்படும் பாலை வழியில் வெள்ளிவீதியார் தன் கணவனைத் தேடிக் கொண்டு சென்றுவிட்டார். அது போல் நானும் காதலனைத் தேடிச் செல்ல நினைக்கிறேன் என்று ஔவையார் பாடுகிறார். காதலன் பிரிவால் உண்ணமுடியாமல், உறங்க முடியாமல் உடல் அழகிழந்து வருந்துவதற்குப் பதிலாக வெள்ளிவீதியாரைப் போல் தேடிச் செல்வதே உத்தமம் என்ற முடிவுக்கு வருகிறார் ஔவை என்ற பெண் புலவர்.

காதல் நோய் வராமல் காத்துக் கொள்ளும் ஆற்றல் யாருக்குமே கிடையாது என்பதை ஒரு தலைவன் வழியாக வெள்ளிவீதியார் பதிவு செய்கிறார்.

தலைவியின் வழியாகச் சொன்னால் ஏற்றுக் கொள்ளப்படாமல் போய்விடுமோ என்ற அச்சத்தால் தன் வாழ்க்கையின் அனுபவங்களைத் தலைவன் மீது ஏற்றிப் பாடுகிறார்.

‘‘ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கின்

கையில் ஊமன் கண்ணின் காக்கும்

வெண்ணெய் உணங்கல் போலப்

பலந்தன்று இந்நோய் நோன்று கொளற்கு அரிதே”

என்ற பாடல் வழி காதல் நோயின் இன்ப துன்பம் விவரிக்கப்படுகிறது. உச்சிவெயில் தாக்கும் ஒரு பாறையின் மீது வைக்கப்பட்ட வெண்ணெய் உருகி ஓடிவிடாதபடி வாய் பேசமுடியாத, கைகள் ஊனமான மாற்றுத்திறனாளி ஒருவன் காவல் காக்கிறான்.

அவனால் எப்படி அதைப் பாதுகாக்க முடியும்? கையிருந்தால் உருகாதபடி வேறு இடத்தில் மாற்றி வைப்பான் அல்லது பேச முடிந்தால் யாரையேனும் உதவிக்கு அழைத்து அந்த வெண்ணெயைக் காப்பாற்றி விடுவான். ஆனால் இவை எதற்கும் வாய்ப்பில்லாத அவனால் என்ன செய்ய முடியும்.

அப்படித்தான் தன்னை மட்டுமல்ல, தன் தலைவியையும் தாக்கும் இன்பம் தரும் துன்ப நோய் என்கிறார் வெள்ளிவீதியார்.

வெற்றி பெற்றவர் பின்னால் செல்ல உலகமே காத்திருக்கும் சூழலில் தோல்வியைத் தழுவி யிருந்தாலும் அவன் பக்கம் அறம் இருந்தால் அவனே காலம் கடந்து நிற்பவன் என்ற மிகப்பெரிய உண்மையை உணர்த்தியவள் பெண். தேசப்பற்று, இனப்பற்று என்ற எல்லைகளைக் கடந்த நிலையில் பெண்ணின் மனம் சிந்தித்திருக்கிறது. பானை செய்யும் இடத்தில் கல்வி பெற்ற ஒரு பெண் வெற்றி தோல்வியை ஆராயும் இடத்தில் மகளிரின் ஆளுமை வெளிப்படுகிறது.

சோழன் கரிகாலனுக்கும், சேரமான பெருஞ்சேரலாதனுக்கும் வெண்ணிப் பறந்தலையில் பெரிய போர் நடந்தது. சோழ மன்னனான கரிகாலன் வெற்றி பெற்றான். சோழனுடைய ஆயுதம் சேர மன்னனின் மார்பைத் துளைத்துக் கொண்டு முதுகுவரை சென்றுவிட்டது. மார்பில் புண் பட்டால் பெருமையாகப் பார்க்கும் தமிழ்ச் சமூகம், முதுகில் தழும்பு இருந்தால் பழிக்கும். முதுகுப் புண் அவமானமாகுமே என்று கருதிய சேரன் உயிரை விடத் துணிந்தான். அந்தக் காலத்தில் வடக் கிருத்தல் என்று ஒரு வழக்கம் இருந்தது. அதன் படி வடக்கு நோக்கித் தர்ப்பைபுல் மீது அமர்ந்து, எதையும் உண்ணாமல் அருந்தாமல் உயிரைத் தியாகம் செய்துவிடுவர். சேரனும் இதைப் பின்பற்றி உயிர் துறந்தான்.

சோழன் ஆட்சிக்கு உட்பட்ட நிலத்தில் வாழ்ந்த வெண்ணிக் குயத்தியார் சோழனை உயர்த்திக் கூறிப் பரிசு பெற விரும்பாமல், தனக்குத் தண்டனை கிடைத்தாலும் சேரனை உயர்த்திப் பாடினார். தமிழனுக்கு வெற்றியைக் காட்டிலும் தன்மானமே பெரிது என்பதை உணர்த்தும் முறையில் வேந்தே! வெற்றிப் புகழ் உனக்குக் கிடைத்தது. அதை உனக்குத் தந்துவிட்டு உன்னால் உண்டாகிய புறப்புண்ணுக்கு வெட்கப்பட்டு வடக்கிருந்து பெரும் புகழ் பெற்றான் சேரன். எனவே அவன் உன்னை விட நல்லவன் என்று எதற்கும் அஞ்சாமல் தைரியமாகப் பாடிய வரலாறு பெண்ணுக்குரியதே!

‘‘சென்றமர்க் கடந்தநின் னாற்றல் தோன்ற

வென்றோய் நின்னினும் நல்ல னன்றே

கல்கொள் யாணர் வெண்ணிப் பறந்தலை

மிகப்புக ழுலக மெய்திப்

புறப்புண் ணாணி வடக்கிருந் தோனே!”

என்று வரிகள் எத்தனை உன்னதமானது. இவ்வாறு காலந்தோறும் பெண்கள் தங்களின் பங்களிப்பைச் செய்து வருகின்றனர். அறத்தை உறக்கப் பேசி, அன்பை விதையாக விதைத்து, அமைதியான வாழ்க்கைக்கு வித்திடுகின்றனர். வன்முறைகளைத் தடுக்கவும், வாழ்க்கை இன்னுமின்னும் மேம்படவும் பெண்களைச் சக உயிராக நேசிக்கும் மனநிலை உண்டாக வேண்டும். இன்று பெண்கள் இல்லாத துறைகளே இல்லை என்று மார்தட்டிக் கொள்கிறோம். ஆனால் அதற்குப் பின்னால் கடந்து வந்த போராட்டங்களைப் பார்க்கும் போது வேதனை தருகிறது.

கடந்து வந்த பாதை ஒரு பாடமாக அமைந்து புதிய வாழ்க்கைக்கு வழிகாட்டட்டும்! போராட்டமான வாழ்க்கையில் அமைதிப் பூக்களை மலரச் செய்வோம்!

uday011221
இதையும் படியுங்கள்
Subscribe