அதிகாரத் திமிரை அடக்கிய விவசாயிகள்!

/idhalgal/eniya-utayam/farmers-who-suppressed-arrogance-power

"பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்

அலகுடை நீழ லவர்''

-என்றார் நம் அறிவாசான் திருவள்ளுவர்.

அரசாங்கங்களையே தமது குடை நிழலின்கீழ் கொண்டுவரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள் என்பதே இதன் பொருள்.

அப்படிப்பட்ட விவசாயிகளை மதிக்காமல், அவர்களின் வலிமையைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லாமல், அவர்கள், சேற்றிலும் வயலிலும் வாழ்கிற கந்தலாடைக் கூட்டம்தானே என்று நினைத்து, தனது கார்ப்பரேட் நண்பர்களுக்காக அவர்களை நசுக்க நினைத்தார் அதிர்ஷ்டத்தால் பிரதமரான மோடி.

ff

இந்தியக் குடிமகன்களின் ஒவ்வொருவர் கணக்கிலும் தலா 15 லட்ச ரூபாயை வரவு வைப்போம் என்பது போன்ற ஏராளமான, பொய்யையும் புரட்டையும் அவிழ்த்துவிட்டு, அதையே தனது பலமாக நினைக்கிறவர் மோடி. அந்த தெம்பில், அவர் விமானம், அஞ்சல்துறை, தொலை தொடர்புத் துறை, ரயில் போக்குவரத்துத் துறை உட்பட, அரசு மற்றும் அரசு சாரா பொது நிறுவனங் களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விற்பதன் மூலம், இந்த தேசத்தையே விற்கத் துடித்துக்கொண்டிருக்கிறார்.

விவசாயத் தொழிலையும் இந்த சுருட்டும் பட்டியலுக்குள் கொண்டுவரத் துடிக்கும் அவர், அதற்கு வசதியாக விவசாயத்தையும் விவசாயிகளின் உரிமையையும் அவர்களின் வாழ்வாதாரத்தையும் பறிக்கும் வகையில், வேளாண் சட்டங்கள் என்ற பெயரில், மூன்று குழிபறிக்கும் சட்டங்களைக் கொண்டுவந்தார்.

தனது கார்ப்பரேட் நண்பர்களான அதானி, அம்பானிகளிடம் ஒட்டுமொத்த விவசாயிகளையும் அடிமைப்படுத்த வேண்டும் என்பதுதான், இந்த வேளாண் சட்டங்களுக்கான அவரது ஒரே நோக்கம்.

அந்த டேஞ்சரஸ் சட்டங்களை நாடே எதிர்த்தது. எதிர்க்கட்சிகள் அனைத்தும், இவை தவறான சட்டங்கள் என்று சுட்டிக்காட்டிப் போர்க்கொடி தூக்கின. ஒட்டுமொத்த விவசாயிகளும் இந்த படுபாதக சட்டத்தை ஏற்கமாட்டோம் என்று எதிர்த்துக் குரல் கொடுத்தனர். ஆனால் எதையும் பொருட்படுத்தாத மோடி, அ

"பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்

அலகுடை நீழ லவர்''

-என்றார் நம் அறிவாசான் திருவள்ளுவர்.

அரசாங்கங்களையே தமது குடை நிழலின்கீழ் கொண்டுவரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள் என்பதே இதன் பொருள்.

அப்படிப்பட்ட விவசாயிகளை மதிக்காமல், அவர்களின் வலிமையைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லாமல், அவர்கள், சேற்றிலும் வயலிலும் வாழ்கிற கந்தலாடைக் கூட்டம்தானே என்று நினைத்து, தனது கார்ப்பரேட் நண்பர்களுக்காக அவர்களை நசுக்க நினைத்தார் அதிர்ஷ்டத்தால் பிரதமரான மோடி.

ff

இந்தியக் குடிமகன்களின் ஒவ்வொருவர் கணக்கிலும் தலா 15 லட்ச ரூபாயை வரவு வைப்போம் என்பது போன்ற ஏராளமான, பொய்யையும் புரட்டையும் அவிழ்த்துவிட்டு, அதையே தனது பலமாக நினைக்கிறவர் மோடி. அந்த தெம்பில், அவர் விமானம், அஞ்சல்துறை, தொலை தொடர்புத் துறை, ரயில் போக்குவரத்துத் துறை உட்பட, அரசு மற்றும் அரசு சாரா பொது நிறுவனங் களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விற்பதன் மூலம், இந்த தேசத்தையே விற்கத் துடித்துக்கொண்டிருக்கிறார்.

விவசாயத் தொழிலையும் இந்த சுருட்டும் பட்டியலுக்குள் கொண்டுவரத் துடிக்கும் அவர், அதற்கு வசதியாக விவசாயத்தையும் விவசாயிகளின் உரிமையையும் அவர்களின் வாழ்வாதாரத்தையும் பறிக்கும் வகையில், வேளாண் சட்டங்கள் என்ற பெயரில், மூன்று குழிபறிக்கும் சட்டங்களைக் கொண்டுவந்தார்.

தனது கார்ப்பரேட் நண்பர்களான அதானி, அம்பானிகளிடம் ஒட்டுமொத்த விவசாயிகளையும் அடிமைப்படுத்த வேண்டும் என்பதுதான், இந்த வேளாண் சட்டங்களுக்கான அவரது ஒரே நோக்கம்.

அந்த டேஞ்சரஸ் சட்டங்களை நாடே எதிர்த்தது. எதிர்க்கட்சிகள் அனைத்தும், இவை தவறான சட்டங்கள் என்று சுட்டிக்காட்டிப் போர்க்கொடி தூக்கின. ஒட்டுமொத்த விவசாயிகளும் இந்த படுபாதக சட்டத்தை ஏற்கமாட்டோம் என்று எதிர்த்துக் குரல் கொடுத்தனர். ஆனால் எதையும் பொருட்படுத்தாத மோடி, அவசர கதியில் அந்தக் கழுத்தறுக்கும் சட்டங்களை 2020 செப்டம்பரில் குடியரசுத் தலைவரின் கையெழுத்தோடு அடாவடியாக அமலுக்குக் கொண்டு வந்துவிட்டார்.

அந்த வஞ்சக சட்டங்களை மோடி அரசு திரும்பப் பெறவேண்டும் என்ற உரிமைக்குரலை ஒடுக்கவே அவர் முயன்றார். இதன் பிறகுதான் விவசாயிகள், இந்தியத் தலைநகரான டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தை கடந்த நவம்பர் 26, 2020-ல் தொடங்கினார்கள்.

விவசாயிகளின் வலிமையை உணராமல், அவர்களை வீழ்த்த நினைத்த மோடியின் ஒன்றிய அரசு, ஓராண்டுக் காலம் அவர்களோடு முட்டி மோதியது. காவல்துறையையும் ராணுவத்தையும் அவர்களுக்கு எதிராக ஏவி, அடக்குமுறையைக் காட்டி அடக்க முனைந்தது. முடியவில்லை. நாளுக்கு நாள் போராட்டக் களத்தில் இருந்த விவசாயிகளின் வைராக்கியமும் உறுதியும் அதிகமானதே தவிர, அவர்களின் போராட்ட குணம் தளரவே இல்லை.

விவசாயிகளை அடக்குமுறைகளால் வீழ்த்த முடியாது. விட்டால், அவர்கள் தங்கள் சாம்ராஜ்யத்தையே ஜனநாயக வழியில், தேர்தலில் வீழ்த்திவிடுவார்கள் என்பதை உணரத் தொடங்கினார் மோடி. பஞ்சாப், உ.பி. உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் வர இருப்பதால், வேறு வழியின்றி அவர்களிடம் மண்டியிடுவதைத் தவிர வேறு மார்க்கமில்லை என்ற முடிவுக்கு அவர் வந்து சேர்ந்தார்.

ff

விவசாயிகளின் வீரியமான போராட்டத்தைக் கண்டு நடுங்கியதால் தான், விவசாயிகளுக்கு எதிராகத் தான் கொண்டுவந்த மூன்று வேளாண்மை சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக கடந்த 19-ஆம் தேதி அரண்டுபோய் அறிவித்தார் மோடி.

அப்போது கூட, அந்த சட்டங்களின் பாதகங்களை உணர்ந்து வாபஸ் பெறுகிறோம்’ என்று மோடி பெருந்தன்மையாகச் சொல்லவில்லை. இந்த சட்டங்களை, விவசாயிகளில் ஒரு பகுதியினர் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதால்தான் வாபஸ் பெறுகிறோம் என்று, கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லை என்ற பாணியிலேயே அறிவித்தார் மோடி.

வாபஸ் அறிவிப்பின் தொடர்ச்சியாக, நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரின் முதல்நாளான 29-ஆம் தேதி, அந்த உதவாத சட்டங்களை ரத்து செய்வதற்கான சட்ட திருத்த மசோதாவை அவரது பா.ஜ.க. அரசு, வெற்றி பெற முடியாத தலைகுனிவோடு தாக்கல் செய்திருக்கிறது.

இதன்மூலம் நாடாளுமன்றத்திலும் விவசாயிகளின் போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது. இன்னும் சொல்வதானால், ஜனங்களுக்கான ஜனநாயகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது.

இவ்வளவு நாட்களாக மோடி, எக்காரணம் கொண்டும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறமாட்டோம். இது தொடர்பாக அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று பிடிவாதம் காட்டிவந்தார். அவரது அடிப்பொடிகளும் ஆதரவாளர்களும்கூட மோடி சொன்னால் சொன்னதுதான். சட்டம் போட்டால் போட்டதுதான் என்று ஜால்ரா போட்டுவந்தனர். இப்போது விவசாயிகளிடம் மோடி, அந்தர்பல்டி அடித்தவுடன், இந்த அடிப்பொடிகளும், "விவசாய சட்டங்களை ரத்து செய்த மகாத்மா மோடி' என்று வெட்கமில்லாமல் பஜனை பாடுகின்றனர். மோடியும் அந்த பா.ஜ.க. பஜனை கோஷ்டிகளும் எப்படியோ போகட்டும்.

நினைத்துப் பாருங்கள். கடந்த ஒருவருட காலமாக, தங்களின் சுக, துக்கங்களை எல்லாம் மறந்து, தங்கள் வீடு வாசல்களை மறந்து, டெல்லியில் முகாமிட்டு, மழையிலும், பனியிலும் வெயிலிலும் போராடிய, ஏறத்தாழ 10 லட்சம் விவசாயிகளின் தன்னலமற்ற போராட்டத்தை நாம் மனம் குளிர வாழ்த்திப் பாராட்டியே ஆகவேண்டும்.

அவர்கள் நடத்திய போராட்டம் சாதாரணப் போராட்டமல்ல; உலகமே வியப்போடு திரும்பிப் பார்த்த அறவழிப் போராட்டம்.

சமகாலத்தில் இப்படியொரு போராட்டத்தை உலகம் கண்டதில்லை. நாம் கூட நம் சுதந்திரப் போராட்டத்தைப் பார்த்ததில்லை. இப்போது நம் கண்ணெதிரே, இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டமாக, இந்தப் போராட்டம் விவசாயிகளால் நடத்தப்பட்டிருக்கிறது. முரட்டுத்தனமான மோடியின் அரசுக்கு எதிராக, காந்தியின் அறவழியில் நடத்தப்பட்ட போராட்டம் இது.

டெல்லியை முற்றுகையிடுவோம் என்று விவசாயி கள் அறிவித்தபோது, விவசாயிகளை டெல்லிக்குள் விடமாட்டோம் என்று, எல்லைப் பகுதியான "சிங்கு' பகுதிக்கு வெளியிலேயே நிறுத்திவைத்தது மோடி அரசு. அவர்கள் மீறி வந்துவிடாதபடி முள்கம்பி வேலிகளையும் பேரி கார்டு உள்ளிட்ட தடுப்புகளையும் உருவாக்கினார்கள். விவசாயிகளுக்கு எதிராக போலீஸ், ராணுவம் என எல்லாமும் கொண்டுவந்து குவிக்கப்பட்டன. பெரும் முரட்டுத்தனம் அங்கே கடைப்பிடிக்கப்பட்டன. அதோடு, விவசாயிகளை பயமுறுத்த தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் வாகனங் களையும் கொண்டுவந்து வரிசையாக நிறுத்தி வைத்தனர். இப்படி விவசாயிகளை பீதியின் நடுவில் நிற்கவைத்து பயமுத்தியது மோடி அரசு.

farmers

போலீசின் இரக்கமற்ற கொடூர தாக்குதல்களையும் சங் பரிவாரக் கும்பலின் தாக்குதலையும் விவசாயிகள் எதிர்கொள்ள நேர்ந்தது. அந்த நிலையிலும் இந்தப் போராட்டத்தை விவசாயிகள் மிகவும் கவனமாகக் கையாண்ட விதம், பெரும் மலைப்பை ஏற்படுத்துகிறது.

பத்து லட்சம் பேர், ஒரு வருடமாக ஒரே இடத்தில் குவிந்திருந்தும், அங்கே ஒரு சிறு அசம்பாவிதமும் இல்லை. எந்தவிதமான குற்றச் சம்பவமும் அங்கே அரங்கேறவில்லை. அதிலும் போராட்டத்தை முன்னெடுத்து நின்றவர்களான சீக்கியர்கள், இடுப்பில் எப்போதும் குறுவாள் வைத்திருப்பார்கள். தங்கள் டர்பன் தலைப் பாகையிலும் கத்தி வைத்திருப்பார்கள். அப்படி இருந்தும், அதை எவரும் பயன்படுத்தவில்லை. வன்முறை என்ற பேச்சுக்கே அங்கே இடமில்லை என்ற நிலையில் அவர்கள் ராணுவக் கட்டுப்பாட்டோடு போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.

எத்தனையோ இடர்ப்பாடுகளை அவர்கள் சந்தித்தபோதும் அவர்களின் ரௌத்திரம் தவறாகத் திசை மாறவில்லை. எங்கும் ஒழுங்குமீறலும் ஏற்படவில்லை.

போலீசிடம் எவரும் தகராறு செய்துவிடக்கூடாது என்று, அதை கவனிக்க ஒரு கமிட்டி. இந்த விவசாயிகள் விவகாரத்தை எவரும் அரசியல் ஆக்கிவிடக்கூடாது என்று கண்காணிக்க ஒரு கமிட்டி- போராட்டத்தில் ஈடுபட்ட 10 லட்சம் பேரின் உணவு, உடை, குடிநீர், உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை கவனிக்க கமிட்டிகள் -இப்படி எண்ணற்ற குழுக்களை உருவாக்கி, தங்கள் கட்டுப்பாட்டைக் காப்பாற்றியிருக்கிறார்கள் விவசாயிகள். அவர்கள் போராட்டத்தில் எங்கேயும் களை மண்டவில்லை.

அதுமட்டுமல்ல; தாங்கள் போராடும் பகுதிக்கு அருகே இருக்கும் கிராமத்துப் பிள்ளைகளுக்கு மாலை நேரத்தில் வகுப்பெடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு விழிப்புணர்வுப் பாடத்தையும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அதே போல் போராடிக்கொண்டிருக்கிற தங்கள் மனமும் சோர்ந்து விடக்கூடாது என்று மாலை நேரங்களை ஆடல், பாடல், கூத்து என்று கலையம்சம் ததும்புவதாக ஆக்கிக்கொண்டிருக்கி றார்கள்.

ஏறத்தாழ 700 பேரை பலி கொடுத்து அவர்கள் இந்தியாவுக்கே -ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கே -சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்திருப்பது ஆச்சரியத் தின் உச்சம். மூச்சுத் திணறிக்கொண்டிருந்த ஜனநாயகம் இப்போது சுதந்திரமாக சுவாசிக்கிறது. அதற்கான ஆக்சிஜன் காற்றை இந்த வெற்றியின் மூலம் விவசாயிகள் உருவாக்கியிருக்கி றார்கள்.

பி.ஜே.பி. ஆட்சியின் மிக மோசமான தோல்வி இது.

இந்த வெற்றியின் மூலம், பா.ஜ.க.வின். தோல்வி வரலாறு தொடங்கியிருக்கிறது. அதன் முதல் அத்தியாயத்தை விவசாயிகள் எழுதியிருக்கிறார்கள்.

அதையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போதே, நம் கைகள் அவர்களை நோக்கி தானாகக் குவிகிறது.

உலகமே அவர்களின் போராட்டத்தைக் கண்டு வியந்தது. அறவழியில் போராடி மோடியின் சர்வாதிகாரத் திமிரை அடக்கி, அவரை முதல்முறையாகத் தோற்கடித்திருக்கும் விவசாயிகளுக்கு நமது ராயல் சல்யூட்.

பெருமிதத்தோடு,

நக்கீரன்கோபால்

uday011221
இதையும் படியுங்கள்
Subscribe