உதிர்ந்து விழும் மனித ஆன்மாக்கள் - டி.பத்மநாபன் தமிழில் : சுரா

/idhalgal/eniya-utayam/falling-human-souls-d-padmanabhan-tamil-sura

பாலத்தின்மீது ஒரு விளக்குத் தூணில் சாய்ந்தவாறு நான் சிறிது நேரம் நின்றேன். மனதில் அகற்ற முடியாத அளவிற்கு சுமை இருந்தது.

அதன்வழியாக செல்வது முதன்முறையல்ல... அதற்கு முன்பும் போயிருக்கிறேன். ஆனால், அப்போதெல்லாம் இதைப்போன்ற ஒரு நினைப்போ வேதனையோ உண்டானதில்லை. சரீரம் தளர்ந்துகொண்டிருக்கிறது. கண்களுக்கு முன்னால் ஒரு மெல்லிய படலம் மறைத்துக் கொண்டிருக்கிறது. கவலையை அடையாளப்படுத்தும் திரைச் சீலையைப்போல...

ஆறு ஓடாமல் அசைவற்றுக் கிடக்கிறது. எனினும், விளக்குகளின் நீல வெளிச்சத்தில் அவள் ஒரு அழகியாக மாறியிருக்கிறாள். நான் ஒரு நீண்ட பெருமூச்சுடன் கூறினேன்: "தங்கம்மாவைப் போலவேதான்!' அப்போது என் வறண்ட உதடுகளில் ஒரு புன்சிரிப்பு பரவியிருக்கவேண்டும். இரண்டு பேரும் நகரத்தின் அசுத்தங்களுடன் உறவுகொண்டிருப்பவர்கள். ஆனால், தங்கம்மா... இரவில் மட்டுமல்ல- பகலிலும் அழகிதான். அந்த அழகு நிரந்தரமானதாக இல்லாமலிருக்கலாம். பரவா யில்லை- அவளும் அதைப் புரிந்து கொண்டுதானேயிருந்தாள்!

எனக்குத் தவறு நேர்ந்திருக்கிறது. அந்த அளவிற்கு ஆழமானதல்ல அவர்களுக்கிடையே தோற்றத்தில் இருக்கக்கூடிய உறவு. எதற்கு கூறுவதற்குத் தயங்கவேண்டும்? நான் அவளைக் காதலிக்கிறேன்.

யாருக்கு முன்னால் வைத்தும் கூறுவதற்குத் தயாராக இருக்கி றேன்... நான் தங்கம்மாவைக் காதலிக்கிறேன்!

அங்கு... தெருவின் ஒரு திருப்பதில்தான் அவள் வசிக்கிறாள். முதல் தெருவில்... ஒன்பதாவது எண்... வீடு அல்ல... அவளுக்கு வீடு இல்லை.

இன்று காலையில்தான் நான் இங்கு வந்தேன். இரண்டு வருடங்களுக்குப் பிறகு... வந்தவுடனே அவளைப் பார்ப்பதற்கு கிளம்பியும் விட்டேன். எதிர்பார்ப்புகள் மொட்டாக அருப்பவும், உதிரவும் செய்துகொண்டிருந்தன. வாசலுக்கு அருகில் சிறிதுநேரம் தயக்கத்துடன் நின்றுகொண்டிருந்தேன். அது அடைக்கப்பட்டிருந்தது. காரணமற்ற ஒரு பயம்... அவள் அங்கு இருப்பாளா? இல்லாவிட்டால்...

அவளைப் பார்த்தால், நான் என்ன கூறுவது? என்னவெல்லாம் கூறுவது?

தங்கம்மா எனக்குத் தந்த வேட்டியையும், அவளுக்குத் தருவதற்காக நான் வாங்கிய புடவை யையும் பொட்டலமாகக் கட்டி கையில் வைத்திருந் தேன். வியர்வைபட்டு அவை ஈரமாயின.

அந்த கதவைத் தட்டி அழைத்தபோதுதான், வாழ்க்கையிலேயே முதன்முறையாக நான் அவளுக்காக கண்ணீர்விட்டேன்.

பழைய கிழவி வந்து சந்தேகத்துடன் பார்த்தாள். என்னவேண்டும் என்பது அதற்கு அர்த்தம். எனக்கு தங்கம்மாவைப் பார்த்தால் போதும். அவளுடைய எந்தவொரு உதவியும் வேண்டாம். பிறகு வருவதை நான் பார்த்துக்கொள்வேன்.

நான் கூறினேன்: "தங்கம்மாவைப் பார்க்கணும்.' எகிப்தின் ஏதோ கல்லறைக்குள்ளிருந்து அப்போது தான் உடைத்து எடுக்கப்பட்ட மம்மியைப்போல கிழவி இருந்தாள். அனைத்தும் இருந்தன. ஆனால், உயிர் இல்லை.

காத்து நின்றுகொண்டிருப்பதற்கு எனக்குப் பொறுமை இல்லை. என்னை அவள் மறந்திருக் கலாம். ஆனால், தங்கம்மாவை அவளால் எப்படி மறக்க முடியும்? அவளுக்குச் சம்பாத்தியத்தை உண்டாக்கித்தந்த தங்கம்மாவை...?

அவளுடைய முகத்தில் ஒரு உணர்ச்சிகளின் பரவல் உண்டானது.

நான் காய்ந்த மண்ணாங்கட்டியின்மீது நீரைத் தெளித்துக்கொண்டிருந்தேன்.

"தங்கம்மா இங்கேயிருந்து போயிட்டாளே!'

அவ்வாறு கூறிவிட்டு, அவள் சிரிப்பதற்கு முயற்சித்தாள்.

தெருவின் வழியாக போய்க்கொண்டிருந்தவர்களில் சிலர் என்னையே வெறித்துப் பார்த்துக்கொண்டி ருந்தார்கள்.

அந்த வெட்கமற்ற கிழவி கூறினாள்: "வாங்க... நாம உள்ளே போகலாம்.'

அந்த கதவிற்கருவில் ஒரு கற்சிலையைப்போல நான் நின்றிருந்தேன். என்ன காரணத்தாலோ... தங்கம்மா அங்கு இருக்கமாட்டாள் என்று புறப்படும்போதே பயந்தேன். அதைப்போலவே நடக்கவும் செய்தது.

புடவை, வேட்டி ஆகியவை இருந்த பொட்டலம் வியர்வையில் நனைந்தது.

டாக்டர் கூறியதை நான் நினைத்துப் பார்த்தேன்: "மனம் சோர்வடைவதற்கு எந்த நேரத்திலும் இடம் கொடுக்கக்கூடாது. இல்லாவிட்டால்...'

அப்போது கிழவி கூறினாள்:

"நீங்க ரொம்பவும் களைச்சுப் போயிருக்கீங்க.'

அவள் மீண்டும் கூறினாள்:

"இப்போது... இங்கு... அறைகள் காலியா இருக்கு. இன்ஸ்பெக்டரும் சூப்பர்வைஸரும் போயிட்டாங்க. இரண்டு இளம்பெண்கள்தான் இருக்காங்க... கல்லூரியில் படிப்பவர்கள்.'

என் இதயம் பலமாகத் துடித்துக்கொண்டிருந்தது. உடல்நலக் கேட்டின் ஆரம்பம்...

நெஞ்சில் ஒரு தூண்டிலின் இழுப்பு!

ஆமாம்!

அப்போது...

"உங்களுக்கு அறை வேணுமா?'

தாழ்வாரத்தில் வயதிற்கு வந

தாழ்வாரத்தில் வயதிற்கு வந்த இரு இளம்பெண்கள் வந்துநின்று கிழவியை அழைத்தார்கள். என்னால் அவர்களை நன்கு பார்க்கமுடிந்தது.

தங்கம்மா அங்கு இல்லையென்ற உண்மை கூர்மையான வாளைப்போல மனதைக் குத்திக் கொண்டிருந்தது.

அவள் எங்கு போயிருப்பாள்? நான் விசாரித்தபோது, அந்த கிழவி என்னை நோக்கி கண்களை அகலத் திறந்து வைத்துக்கொண்டு பார்த்தாள்... அர்த்தமேயற்ற ஒரு கேள்வி அது என்பதைப்போல.

எனக்கு என்னவோபோல இருந்தது.

நான் யோசித்தவாறு நின்றுகொண்டிருக்க, அவள் கதவை சத்தமாக அடைத்தாள்.

என் தலையிலிருந்து கால் வரை எரிந்தது.

தெருவில் பகல் வெளிச்சம் திடீரென்று மறைந்து, இருட்டு பரவியது. அப்போது நேரம் பன்னிரண்டு மணியாகியிருந்தது- நடு உச்சிப் பொழுது!

என் பலவீனத்தை நினைத்து தனக்குத்தானே நான் கவலைப்பட்டுக் கொண்டிருந்த ஒரு காலம் இருந்தது. அது பின்னால் கடந்து சென்றுவிட்டது என்பது நம்பிக்கையாக இருந்தது. அந்த நம்பிக்கை தகர்ந்துவிட்டது.

என்ன செய்யவேண்டும் என்ற ஒரு வடிவமும் இல்லாமல் நான் திரும்பி நடந்தேன். பக்கத்தில் வசிப்பவர்களிடம் விசாரித்து, பயன் உண்டாகவில்லை.

பூங்காவிற்கு முன்னால் அந்த சட்டக்கல்லூரி மாணவனைப் பார்த்தேன். அவன் தனியாக இருந்தான். என்னைப் பார்த்ததும், அவன் சற்று அதிர்ச்சியடைந்தான்.

"ஓ... நீங்களா?'

நான் எதுவும் கூறவில்லை.

"எப்போ வந்தீங்க? ரொம்பவும் மெலிந்து போயிருக் கீங்களே!'

நான் தங்கம்மாவைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தேன்.

நான் பார்த்தபோது, அவளுடன் மிகவும் நெருக்க மான உறவை வைத்திருந்தவர்களில் ஒருவன் அந்த சட்டக்கல்லூரி மாணவன். அவளைப் பார்ப்பதற்கு அவன் பல நேரங்களில் அங்கு வந்திருக்கிறான். முதலில் ஒரு மாதம் அங்கு தங்கியிருக்கவும் செய்தான். குளியலறையிலிருந்து வரும்போது, தங்கம்மாவைப் புகைப்படம் எடுப்பதை நான் பார்த்தேன்.

அவளுடைய சம்மதத்துடன்தான்... நான் கூறுவது இதுதான்- அவர்கள் நெருங்கிய உறவில் இருந்தார்கள்.

நான் சந்தோஷப்பட்டேன். தங்கம்மாவைப் பற்றிய தகவலைத் தெரிந்து கொள்வதற்கு எனக்கு.... இதோ... அவளுடைய ஒரு சினேகிதன் கிடைத்திருக்கிறான்.

அவன்மீது எனக்கு பொறாமை உண்டாகவில்லை.

அவளைப் பற்றி நான் அவனிடம் கேட்டேன்.

ஆனால், அவன் அவளை மறந்துவிட்டதைப்போல தோன்றியது.

"தங்கம்மா!'

நான் அதிர்ச்சியடைந்தேன்.

"ஆமாம்! நம்முடன் வசித்தாளே... அவள்!'

நான் அவளைப்பற்றி தெரிந்துகொள்வதில், மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன்.

சட்டக்கல்லூரி மாணவன் புன்னகைத்தவாறு கூறினான்:

"புரிஞ்சிடுச்சு... ஆனால், அவளுடைய பெயர் தங்கம்மா இல்லையே!'

எந்த நாசமாய்ப் போனதாக வேண்டுமானாலும் இருக்கட்டும்... அவளுடைய பெயர் எனக்கு ஒரு பிரச்சினையே இல்லை. ஒருவேளை அவள் ஒன்றுக்கும் மேற்பட்ட பெயர்களுடன் அறியப்பட்டிருக்கலாம். என்னிடம் அவள் "தங்கம்மா' என்றுதான் கூறினாள். எனக்கு அவள் எப்போதுமே தங்கம்மாதான்.

எனக்கு அவளைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால், அவனுக்கு சிறிதுகூட விருப்ப மில்லாமலிருந்தது. எனினும், எனக்காக என்பதைப் போல கூறினான். அதன் சுருக்கம் இதுதான்: அவள் அங்கிருந்து போய்விட்டாள்! எங்கிருக்கிறாள் என்பதைப் பற்றி யாருக்கும் எந்தவொரு தகவலு மில்லை. யாரிடமும் கூறாமலே போயிருக்கிறாள்.

ஏதோ சிந்தனையில் இருந்ததைப்போல அவன் கூறினான்:

"அவள் இறந்திருக்கணும்.'

நெஞ்சில் ஒரு தூண்டிலின் இழுப்பு உண்டானது.

நான் கேட்டேன்:

"ஏன்... நீங்க அப்படி சொல்றீங்க?'

"ம்... ஒண்ணுமில்ல... எனக்கு ஒரு தோணல்.'

எனக்கும் தோன்றியது... அவள் இறந்திருக்க வேண்டும்.

அந்த நிலையில் அவளை நினைத்துப் பார்ப்பது வேதனை தரக்கூடிய விஷயமாக இருந்தது. மிகுந்த சந்தோஷத்துடனும் வசதிகளுடனும் அவள் உயிருடன் வாழ்ந்துகொண்டிருப்பதைப் பார்க்கவேண்டும் என்பதுதான் எப்போதும் என்னுடைய பிரார்த்தனையாக இருந்தது. எனினும், இறந்திருக்கவேண்டும். அப்படி இல்லாமல்... உயிருடன் இருப்பதற்கு வழியில்லை.

என் பதைபதைப்பைப் பார்த்து அவன் ஆச்சரியப் பட்டான்.

"உங்களுடன் எந்தவொரு தொடர்பும் இல்லை யென்று அவள் சொன்னாளே!'

நான் கவனிக்கவில்லை என்பதைப் பார்த்தபிறகும், அவன் கூறினான்:

"அவளுக்கு இறுதியில் உடல்நலம் பாதிச்சிடுச்சு.'

அவன் காறித் துப்பினான்.

"நேஸ்ட்டி பிச்...'

நான் நடந்தேன்.

ஓட்டை விழுந்த பாத்திரத்தில் நீர் வேகமாக நுழைவதைப்போல ஒரு சந்தேகம் என் இதயத்திற்குள் பாதை போட்டது. கெய்ரோவில் வைத்து தான் பார்த்ததாக பால் கூறிய பெண் ஒருவேளை தங்கம்மா வாக இருப்பாளோ?'

(அவனுக்கு ஒரு வர்த்தகக் கப்பலில் பணி).

அதுவரை அதைப்பற்றி நினைத்துப் பார்க்காதது குறித்து எனக்கு ஆச்சரியம் உண்டானது. தகவல்கள் அனைத்தும் மிகவும் பொருந்திப் போகின்றன. வெளுத்து, மெலிந்த தோற்றத்தைக்கொண்டவள். சாதாரணமாக இருப்பதைவிட அதிகமான தலைமுடி இருந்தது. இருபத்தைந்திற்கும் முப்பதிற்கும் இடையே வரக்கூடிய வயது இருக்கும். மிகவும் கவனத்தை ஈர்த்தது- எப்போதும் கவலை நிறைந்திருக்கும் அந்த கண்கள்தான். அவை நினைவிலிருந்து எந்தச் சமயத்திலும் விலகிச் செல்லவில்லை.

பாலின் வார்த்தைகளை நான் நினைத்துப் பார்த் தேன்: "காதில் வாங்கிக் கொள்... அவள் அறிவாளி. எனக்கு ஒரு காசுகூட செலவாகவில்லை.'

அவன் இதையும் சேர்த்துச் சொன்னான்:

"எனக்கு அவளை மறக்க முடியும் என்று தோன்ற வில்லை. இப்போதும் நான் அவளை கனவுகண்டு கொண்டிருக்கிறேன்.'

பின்னால் ஒரு ஆங்கிலோ இந்தியன் பெண்ணை அமரச்செய்து, "மெரினா'வின் வழியாக எண்பது வேகத்தில் மோட்டார் பைக்கை ஓட்டுவது என்பதை வாழ்க்கையின் மிகப்பெரிய லட்சியமாக எண்ணிக் கொண்டிருக்கும் ஒருவன்தான் அவ்வாறு கூறினான்!

இயற்கை அழகு ஆட்சி செய்யும் என் கிராமத்தின் ஏரியின் கரையில் எந்தவொரு ஆரவாரமும் இல்லாமல் பால்ய காலத்தைச் செலவிட்ட ஒரு இளம்பெண், வாழ்க்கையின் மத்திய பகுதியில் வாசலுக்கு அருகில் யாருமே இல்லாமல் தயங்கி நின்றுகொண்டிருக்கிறாள்- கடல்களுக்கு அப்பாலிருக்கும் கெய்ரோவில்!

ss

அது... தங்கம்மாவாகத்தான் இருக்குமா?

இருக்கலாம்... இல்லாமலும் இருக்கலாம்.

நான் வெறுமனே அலைந்து திரிந்தேன். குறிப்பிட்டுக் கூறும் வகையில் யாரையும் பார்க்கவில்லை. பரந்து கிடக்கும் இந்த உலகத்தில் நான் தனி மனிதன் என்ற நம்பிக்கை ஒவ்வொரு நிமிடமும் அதிகமாகிக்கொண்டு வந்தது. எதற்கு வாழவேண்டும் என்றுகூட சந்தேகப்பட்டேன். என் அன்பிலும் பயத்திலும் கவலையிலும் வெறுப்பிலும் பங்குகொள்வதற்கு இதுவரை யாருமே இல்லை. சிலர் கூறினார்கள்- ஒரு நோயாளி என்று. வேறு சிலர் கருத்தை வெளியிட்டார்கள்- ஒரு "மெண்டல் ரெக்' என்று.

என் மனதில் வீசிக்கொண்டிருந்த சூறாவளிகளின் சக்தியை அவர்களால் அனுபவித்து அறிய முடிந்திருந்தால்...!

என் இதயத்தின் ஆழத்தை அளப்பதற்கு அவர்கள் முயற்சித்தி ருந்தால்...!

எதுவுமே நடக்கவில்லை.

இந்த குளிரிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் தப்பிப்பதற்காக நான் எனக்குள் ஒரு குடிலை உருவாக்கினேன். மற்றவர்கள் கோட்டையையும் அரண்மனையையும் கட்டிக்கொண்டிருக்கும்போது, எனக்கு ஒரு குடில்கூட இல்லையென்றால்...

எல்லாம் சரியாகிக்கொண்டு வந்த கட்டம் வந்தபோது...

நான் நினைத்தேன்- அவளைச் சற்று பார்க்க முடிந்தால்...!

என்ன செய்வேன் என்கிறீர்களா?

அளவற்ற கவலையின், தீவிரமான ஏமாற்றத்தின், தாங்கிக்கொள்ள முடியாத வேதனையின் சூறாவளியாக நான் அவளைத் தூக்கிக்கொண்டு செல்வேன்.

ஒரு பெண்ணையும் ஆணையும்போல நாங்கள்- எப்படிப்பட்ட ஒரு அனுபவமாக இருக்கும்!

நடந்து... நடந்து மீண்டும் பூங்காவிற்கே வந்தேன். இதற்கிடையில் அங்கு வரக்கூடிய வேறு இரண்டு பேரையும் பார்த்தேன். அவர்களிடம் கேட்டதற்குக் கூறினார்கள்:

"இங்கு இல்லை. எங்காவது போயிருப்பாள். இல்லா விட்டால்.... இறந் திருப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது.'

நான் கேட்டேன்:

"அதில் என்ன உறுதி?'

அவர்கள் கூறினார்கள்:

"நாங்கள் இந்த நகரத்தில் வசிப்பவர் கள். அதனால்தான்...'

பூங்கா காலியாக இருந்தது. சிவப்புநிற மலர்கள் மூடிய ஒரு மரத்திற்குக் கீழே அமர்ந்து நான் சிந்தித்தேன். இந்த பூமி இந்த அளவிற்கு அழகானதாக இருக்கும்போது, மனிதன் எதற்காக இறக்கவேண்டும்! வாழவேண்டும் என்பதற்காகத்தானே அவன் பிறக்கவே செய்கிறான்!

திடீரென்று எனக்குத் தோன்றியது: அவள் இறந்திருக்க மாட்டாள். உயிருடன் இருக்கலாம்... எங்காவது... இதே நகரத்தில்தான். இல்லாவிட்டால்... எப்படி பார்த்தாலும்... அவள் இறந் திருக்க மாட்டாள். கண்களை மூடிப் படுத்தவாறு நான் தங்கம்மாவைப் பற்றிக் கனவுகள் கண்டேன்.

அவள் ஒரு முன்மாதிரியாக இருந்தாள். அதிகமாக எதுவும் பேசுவதில்லை. எப்போதாவது பார்த்தால், அது... அவள் எனக்கு யாருமில்லை என்பதைப்போல இருக்கும். நான் ஒரு நோயாளியாக இருந்தேன் அல்லவா? இடையில் ஒரு விஷயத்தைக் கூறிக்கொள்கிறேன்- சில நேரங்களில் தோன்றுகிறது- எல்லாருமே நோயாளிகள்தான்.

கிழிந்த சட்டையைத் தைப்பதற்காக ஊசியும், நூலும் தேவைப்பட்டன. அவளிடம் இருக்கின்றன என்ற விஷயம் எனக்குத் தெரியும். இரவு முழுவதும் எங்கோ இருந்திருந்த அவள் காலையில் திரும்பிவந்து ஆடையை மாற்றிக்கொண்டிருந்தாள். முதலில் நான் அதை கவனிக்கவில்லை. கண்ணாடியில் என் உருவத்தைப் பார்த்துவிட்டு, அவள் திரும்பி நின்றாள்.

வெட்கம் காரணமாக அவளுடைய முகம் சிவந்தது. அப்போது ரவிக்கை மேஜையின்மீது இருந்தது.

அப்படிப்பட்ட ஒரு தோற்றத்தில் எத்தனை பெண்களைப் பார்த்திருக்கிறேன் என்று கேட்டால், குறைவாகத்தான்... எனினும், எனக்கு கூச்சம் உண்டாகவில்லை.

அங்கு ஒரு பழைய புத்தகத்தைப் பார்த்தேன்.

"யோஷன்னான் எழுதிய சுவிசேஷம்.'

அதன் முதல் பக்கத்தில் எழுதப்பட்டிருந்தது:

"என் அன்பிற்குரிய மகள்...' மீதிப் பகுதி கறுத்த மையால் மறைக்கப்பட்டிருக்கிறது. என்ன காரணத்தாலோ... அப்போது என் கைகள் நடுங்கவும், மனம் மவுனமாகவும் செய்தது.

அது... அவள் தினமும் வாசிக்கக்கூடிய புத்தகமாக இருக்கலாம்.

ஊசியையும் நூலையும் எடுத்துக்கொண்டு நான் நடந்தேன். அறையை அடைந்தபோது தோன்றியது- அந்த அளவிற்கு குழப்பமுள்ள ஒரு மனநிலையில் நான் இல்லை. அங்கு... நான்காவது அறையில் வசிக்கக்கூடிய இளம்பெண்- இங்கு யாராவது முதன்முறையாக வந்தால், அந்த கிழவியின் மகளாக இருப்பாள் என்று மனதில் நினைப்பதற்கு வாய்ப்புள்ள அவள்- என்னைப் புரிந்துகொண்டிருக்கிறாள். பைத்தியத்தின் சாயல் என்று கூறுவதற்கு வாய்ப்புள்ள ஒரு பரஸ்பர எண்ணம்... என்னவென்று கூறமுடியாத ஒரு உறவு... அது இருக்கிறது என்பதை நான் நம்புகிறேன்.

அந்தச் சம்பவம் ஆன்மாவின் தொங்கிக் கொண்டிருக்கும் நரம்புகளில் ஆழமான ஒரு இசையைப் பரவச் செய்தது.

சில நாட்கள் கடந்தபிறகு- அந்த சட்டக்கல்லூரி மாணவன் அங்கு வசிக்க ஆரம்பிக்கிறான். சாயங்காலக் குளியல் முடித்து திரும்பிவரும் அவளுடைய கையைப் பிடித்துக்கொண்டு அவன் கூறுகிறான்:

"ஓ... என் இதயமே! எனக்கு உன்னைப் பார்க்கும்போது...'

மவுனம்...

"ஒரு தாங்கமுடியாத...'

அவன் தொடர்ந்து கூறினான்:

"பிறகு... எனக்கும் உஸ்மானுக்குமிடையே ஒரு பந்தயம்...'

"என்ன?'

"உன் வயதைப் பற்றிதான்... இருபது இருக்கும் என்று கூறுகிறான் அவன். பத்தொன்பது ஆகியிருக்காது என்று நான்... பெரிய அளவிற்குப் பிடிவாதம்...'

"போ... பொய் சொல்லாதே.'

"உண்மை! முப்பது ரூபாய் பந்தயம்! முப்பது ரூபாய்! அது கிடைத்தால்...'

அவன் அவளுடைய ஈர ஆடையை மாற்றினான். இல்லாவிட்டால்... நான் அப்படி நினைத்தேன்.

அறைக்குள் அமர்ந்து கிழவி கைக்குட்டை பின்னிக்கொண்டிருந்தாள்.

எஞ்ஜினியரும் சூப்பர்வைஸரும் எந்த நிமிடத்தி லும் வந்து நுழைவார்கள். நான் கதவை அடைத்தேன்- என் அறையின்-

பிறகு... ஒருநாள் நான் பணிக்குச் செல்லாமல் சோம்பேறித்தனமாக உட்கார்ந்திருந்தேன். அதிகமான வெப்பம்... வெளியே செல்வதற்குத் தோன்றவில்லை. காற்று இல்லாத வானம் வெள்ளியைப்போல மின்னிப் பிரகாசித்துக்கொண்டிருந்தது. அப்போது என்னை பாடாய் படுத்திக்கொண்டிருந்த நூற்றுக் கணக்கான பிரச்சினைகளுக்கு பரிகாரத்தை சிந்தித்துக் கொண்டிருந்தபோது, வாசலில் ஒரு இருமல் சத்தம்... அவள் வந்து தயக்கத்துடன் நின்றுகொண்டிருக் கிறாள்.

"ஓ...!' நான் என்னையே அறியாமல் கூறிவிட்டேன். அவள் என்னைத் தேடியும் வர ஆரம்பித்திருக்கிறாள்! எதன் ஆரம்பமாக இருக்கும்?

நான் எழுந்து நின்றேன். அவளிடம் உள்ளே நுழைந்து அமரும்படி கூறவில்லை.

அவளுடைய முகத்தில் ஒரு மென்மைத்தனம் பரவியிருந்தது.

"நான் உங்களிடம் ஒரு விஷயத்தைக் கேட்பதற்காக வந்திருக்கிறேன்.'

எனக்கென்றல்ல- எதுவும் கூறாமலே யாராலும் அதைத் தெரிந்து கொள்ளமுடியும். பிறகு எதற்கு அந்த முன்னுரை?

"ஓய்வு நேரத்தில் எனக்கு கொஞ்சம் ஆங்கிலம் கற்றுத்தர முடியுமா?'

எதிர்பார்த்திராத அந்த கேள்வியைக் கேட்டதும் முடிவில் எனக்கு ஆச்சரியமும், பிறகு சிரிப்பும் தோன்றியது.

நான் கேட்டேன்.

"தேவை?'

அவளுடைய முகம் மலர்ந்தது.

அறைக்குள் வந்து பூனை கையை நக்க ஆரம்பித்தது.

அவள் அதைப் பார்த்துக்கொண்டே கூறினாள்:

"எவ்வளவு காலத்திற்கு இப்படியே வாழ்வது?'

மெல்லிய ஒரு கம்பியை இழுத்து விட்டதைப்போல அவளுடைய குரல் ஒலித்தது. அந்த கண்கள் ஆழம் காணமுடியாத இரண்டு நீலநிற நீர்நிலைகளாக மாறிக்கொண்டிருந்தன.

எனக்கு என்னவோபோல இருந்தது.

ஒரு நீண்ட பெருமூச்சுடன் அவள் தொடர்ந்தாள்:

"ஒரு மிட்வைஃப் பணிக்காவது முயற்சித்துப் பார்க்கலாம் என்று பார்த்தால், எனக்கு என்ன ஒரு தகுதி இருக்கு?'

சில வாரங்களுக்கு முன்பே அந்த சட்டக்கல்லூரி மாணவனின் கைகளில் கிடந்து கொஞ்சியவள் அவள்.

அவளுடைய வயதின் மீதுதான் அவன் பந்தயம் கட்டினான்- பத்தொன்பது ஆகியிருக்கவில்லை என்று.

நான் நினைத்துப் பார்த்தேன்- எப்படிப்பட்ட நாடகங்கள்! அவளுக்கும் அதெல்லாம் தெரியாதா? தெரிந்திருக்கலாம்... நான் பார்த்தேன். செண்பக மலர்களாக இருந்த அந்த கன்னங்களில் காலத்தின் நகலெடுக்கும் தாள் பதிந்து கொண்டிருந்தது.

அவள் கேட்டாள்:

"எர்ணாகுளத்தில் இருந்து மட்டும் இப்படி எவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள் என்று தெரியுமா?'

அவள் சென்ற பிறகும், அந்த கேள்வி என் காதில் முழங்கிக் கொண்டேயிருந்தது.

இறுதி முறையாக... எனக்கு தந்தி வந்துசேர்ந்தி ருக்கிறது. உடனே புறப்படவேண்டும். பணி சம்பந்தப் பட்ட விஷயம்... போகாவிட்டால், சிரமம் உண்டாகும். ஆனால், நான் தர்மசங்கடமான நிலையில் நின்று கொண்டிருந்தேன். டிக்கெட்டிற்கான பணத்தைச் சிரமப்பட்டு ஏற்பாடு செய்து கொள்ளலாம். வழிச் செலவு விஷயம் பரவாயில்லை. ஆனால், எப்படி ஆடை அணிந்து வெளியேறுவது? ஒரு வேட்டி இல்லையே!

உள்ளவை அனைத்தும் பலமுறை அணிந்து, நைந்து, தாறுமாறாக இருக்கின்றன.

நான் சிந்தித்துக்கொண்டிருக்க, அவள் வந்து கேட்டாள்.

"நான் உள்ளே வரட்டுமா?'

அவள் வந்தாள்.

"உங்களுக்கு ஒரு தந்தி வந்திருக்கு... இல்லையா?'

உள்ளுக்குள் நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.

"உடல்நலக்கேடு எப்படி இருக்கு? இப்போது வெளியே போவதில்லையே!'

நான் அவளை உச்சிமுதல் உள்ளங்கால்வரை பார்த்தேன். எனக்குத் தோன்றியது- என்னைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் அவளிடம் கூறுவதற்கான நேரம் இதோ வந்துசேர்ந்திருக்கிறது.

ஆனால், நான் கூறவில்லை. என்னால் கூறமுடிய வில்லை. நான் உதட்டைக் கடித்தவாறு வெளியே பார்த்தேன்.

அந்த தாள் அவளுடைய கையில் இருக்கிறது. ஆனால், அவள் ஆங்கிலம் படிக்கவில்லை.

நான் கூறினேன்:

"சாயங்கால க்ராண்ட் ட்ரங்கில் நான் போகணும்.'

சிறிது நேரத்திற்கு அவள் எதுவுமே கூறவில்லை. எங்கு என்றோ, ஏன் என்றோ கூட கேட்கவில்லை.

நானும் பேசாமல் இருந்தேன்.

பிறகு... அவள் கேட்டாள்:

"காசு இருக்குதா?'

நான் முனகினேன்.

அறை முழுவதிலும் அவள் கண்களை ஓட்டினாள்.

அனைத்தும் அனாதையான நிலையில் கிடந்தன.

"சலவை செய்த ஆடை இல்லையா?'

"சட்டை இருக்குது.'

அவள் சென்று, ஒரு வேட்டியுடன் திரும்பிவந்தாள். நான் மறுக்கவில்லை. எனக்கு வேட்டிக்கான தேவை இருந்தது.

"சீக்கிரம் வரமுடியுமா?'

"பார்க்கணும்...'

அவள் சாளரத்தின் திண்டின்மீது கையை ஊன்றிய வாறு ஒரு கனவில் என்தைப்போல நின்று கொண்டிருந்தாள்.

நான் புறப்பட்டேன். இரண்டு வருடங்கள் கடந்தபிறகு, வந்திருக்கிறேன். வந்தபோது... அவளும் போய்விட்டாள். எங்கு?

புடவை, வேட்டி ஆகியவை இருந்த பொட்டலம் வியர்வையில் குளித்தது.

நான் தங்கம்மாவைப் பற்றி அதிகமாக சிந்தித்தது அவளைவிட்டுப் பிரிந்தபிறகுதான். சினேகம் நிறைந்த நடத்தையே எனக்கு அவளிடமிருந்து கிடைத்தது. ஒன்றிற்கும் மேற்பட்ட தடவை அவள் தன்னுடைய இதயத்தை எனக்கு முன்னால் திறந்து காட்டினாள். நானோ எதுவுமே கூறாமல் போய்விட்டேன்.

புயலடித்துக்கொண்டிருந்த வாழ்க்கையில் ஒரு பாதுகாப்பான இடத்தைத் தேடி அவள் துடுப்பைப் போட்டுக்கொண்டிருந்தாள்.

நான் அவளுக்காக என்ன செய்தேன்?

என் ராகம் தவறான தாளத்தைக் கொண்டது.

அவளுடையதும் அப்படித்தான். இரண்டும் ஒன்றாகச் சேர்ந்து, சுத்தமான... புதுமையான ஒரு இசை பிறக் கட்டும் என்று நினைத்தபோது- நாம் நினைப்ப தைப்போல காரியங்கள் நடப்பதில்லை.

நான் ரயில் நிலையத்தை நோக்கி நடந்தேன். பாலத்திற்கு அந்தப் பக்கம் சென்றபோது, அதிர்ச்சி யடையக்கூடிய ஒரு காட்சியைப் பார்க்க நேர்ந்தது. கரையிலிருந்து சற்று தூரத்தில் ஒரு பெண்ணின் பிணம் மேலே கிடந்தது. இளம்வயதில் தவளை இறந்து கிடப்பதை நான் பார்த்திருக்கிறேன். அதைப் போலதான்... கை, கால்களைத் தொங்கப் போட்டுக் கொண்டு... முதுகை வெளியே காட்டிக்கொண்டு...

என்னை கடுமையான பயம் ஆக்கிரமிக்க, என் சரீரம் நடுங்கியது. இதயத்தின் துடிப்பு நிற்பதைப்போல உணர்ந்தேன். நிச்சயம் அது அவளுடைய உடல்தான். இல்லாவிட்டால்... அவள் கெய்ரோவில்... அந்த...

அதை நினைத்தபோது, மனம் வெந்து புகைந்தது.

எது எப்படியோ... அவள் போய்விட்டாள். வேதனையைத் தரும் அந்த காட்சியிலிருந்து கண்களை எடுத்து, நான் ஆகாயத்தைப் பார்த்தேன்.

காற்றுகூட இல்லாத ஒரு சூனியத்தின் வழியாக என்னை யாரோ இழுத்துக்கொண்டு சென்றார்கள்.

uday011220
இதையும் படியுங்கள்
Subscribe