காலைக் கதிரவன் எழுவது முதல் மறைந்த பிறகான இரவு நேரம் வரை ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியாக உழைக்கும் வார நாட்களைக் கடந்து, இறுதியாகக் கிடைக்கும் விடுமுறை நாளை, விட்டுப்போன இதர பணிகளை செய்வதற்கும், ஓய்வு எடுப்பதற்குமே நாம் பொதுவாகப் பயன்படுத்துகிறோம். வழக்கமான வாழ்க்கையிலிருந்து சற்றே விலகி சுற்றுலா செல்லும்பொழுது மனம் புத்துணர்ச்சியைப் பெறுகிறது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. புதுமையான இடங்களைக் காண நாம் தொலைதூரம் பயணம் செய்துதான் பெறவேண்டும் என்றில்லாமல், நாம் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே இருப்பதையும் ரசிக்க கற்றுக்கொண்டோமெனில் அது நம்மை மன அழுத்தத்திலிருந்து பாதுகாத்து விடுகிறது. அப்படியாக அரிசோனாவில் எங்கள் இல்லத்திற்கு அருகே இருந்த “ஏ மௌண்டைன்” எனப்படும் அரிசோனா மலைக்கு வாகனத்தில் பயணித்து ஏழு நிமிடங்களிலேயே சென்றடைந்தோம். வீட்டிலிருந்து காலை 6 :10 மணிக்கு இருட்டில் கிளம்பிய நாங்கள், மலைப்பகுதிக்கு சென்றடைந்தபோது வெளிச்சம் வந்துவிட்டது. அடிவாரத்தில் வாகனத்தை நிறுத்துமிடத்தில் கண்காணிப்பாளரே இல்லாவிட்டாலும், இணைய வசதியின் மூலம் பணத்தைச் செலுத்தினோம்.
அவ்விடத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கான விலையைக் கொடுக்கிறோம் என்பதாகவே புரிந்தது.
தொடக்கத்தில் அகலமாக இருந்த ஏற்றமிகு பாதையில் ஏற ஆரம்பித்தோம். அதனை அடுத்த கரடு முரடான பாதையைத் தொடர்ந்து, மரத்தாலான படிக்கட்டுகள் சற்று உயரமாக காலை எடுத்து வைக்கும்படி சவாலாக அமைந்திருந்தது. ஏறும் வழியில் ஆங்காங்கே நின்றவாறு மாகாணத்தை திரும்பிப் பார்த்தால் விண்ணிலிருந்து மண்ணில் கொட்டிய நெருக்கமான நட்சத்திரங்கள் போல, மின்விளக்குகளும், வாகன விளக்குகளும், தெருவிளக்கு களும் கண்களுக்கு அழகினைக் கொடுத்தன. சுமார் இருபது நிமிடங்களில் நடைபயணமாக உச்சியை அடைந்து, கிழக்கு வானை நோக்கிக் காத்திருந்தோம். 360 டிகிரி கோணத்தில் அரிசோனாவின் நகரம் முழுவத
காலைக் கதிரவன் எழுவது முதல் மறைந்த பிறகான இரவு நேரம் வரை ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியாக உழைக்கும் வார நாட்களைக் கடந்து, இறுதியாகக் கிடைக்கும் விடுமுறை நாளை, விட்டுப்போன இதர பணிகளை செய்வதற்கும், ஓய்வு எடுப்பதற்குமே நாம் பொதுவாகப் பயன்படுத்துகிறோம். வழக்கமான வாழ்க்கையிலிருந்து சற்றே விலகி சுற்றுலா செல்லும்பொழுது மனம் புத்துணர்ச்சியைப் பெறுகிறது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. புதுமையான இடங்களைக் காண நாம் தொலைதூரம் பயணம் செய்துதான் பெறவேண்டும் என்றில்லாமல், நாம் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே இருப்பதையும் ரசிக்க கற்றுக்கொண்டோமெனில் அது நம்மை மன அழுத்தத்திலிருந்து பாதுகாத்து விடுகிறது. அப்படியாக அரிசோனாவில் எங்கள் இல்லத்திற்கு அருகே இருந்த “ஏ மௌண்டைன்” எனப்படும் அரிசோனா மலைக்கு வாகனத்தில் பயணித்து ஏழு நிமிடங்களிலேயே சென்றடைந்தோம். வீட்டிலிருந்து காலை 6 :10 மணிக்கு இருட்டில் கிளம்பிய நாங்கள், மலைப்பகுதிக்கு சென்றடைந்தபோது வெளிச்சம் வந்துவிட்டது. அடிவாரத்தில் வாகனத்தை நிறுத்துமிடத்தில் கண்காணிப்பாளரே இல்லாவிட்டாலும், இணைய வசதியின் மூலம் பணத்தைச் செலுத்தினோம்.
அவ்விடத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கான விலையைக் கொடுக்கிறோம் என்பதாகவே புரிந்தது.
தொடக்கத்தில் அகலமாக இருந்த ஏற்றமிகு பாதையில் ஏற ஆரம்பித்தோம். அதனை அடுத்த கரடு முரடான பாதையைத் தொடர்ந்து, மரத்தாலான படிக்கட்டுகள் சற்று உயரமாக காலை எடுத்து வைக்கும்படி சவாலாக அமைந்திருந்தது. ஏறும் வழியில் ஆங்காங்கே நின்றவாறு மாகாணத்தை திரும்பிப் பார்த்தால் விண்ணிலிருந்து மண்ணில் கொட்டிய நெருக்கமான நட்சத்திரங்கள் போல, மின்விளக்குகளும், வாகன விளக்குகளும், தெருவிளக்கு களும் கண்களுக்கு அழகினைக் கொடுத்தன. சுமார் இருபது நிமிடங்களில் நடைபயணமாக உச்சியை அடைந்து, கிழக்கு வானை நோக்கிக் காத்திருந்தோம். 360 டிகிரி கோணத்தில் அரிசோனாவின் நகரம் முழுவதும் தெரியும்படி, அற்புதமான காட்சியாக இருந்த தைக் கண்டோம். சூரிய உதயத்தை காண்பதற்காகவே அங்கு சரியான நேரத்திற்கு சென்றடைந்தோம். மலைகளின் பின்பகுதியில் ஒளிந்திருந்த கதிரவன், மெல்ல வெளியே வருவதைப் போன்ற தோற்றத்தைக் காண, கொள்ளை அழகு! தனது ஒளிக்கதிர்களை விரிக் காமல் அரைக்கோள பந்தைப் போன்ற பகலவன், அடிவானில் மலைகளுக்குப் பின்புறத்திலிருந்து உதயமானது. இந்தியாவில் காணும் உதயத்தைவிட அங்கு சூரியன் சற்றுப் பெரியதாக தோற்றமளித்தது.
பிப்ரவரி மாதத்தில் அன்றைய காலை வேளையில் குளிரைத் தாங்குகின்றபடி ஆடைகளையும், மலை ஏறுவதற்கேற்ற காலணிகளையும் அணிந்து சென்றதால், யாவற்றையும் ரசிக்க முடிந்தது. கைகளுக்கு உரை அணியாமல் சென்றதில், பொறுக்க முடியாத குளிரைத் தாங்க பக்கவாட்டில் இருந்த சட்டைப் பையில் கைகளை செருகிக்கொள்ள வேண்டியிருந்தது. ஏழு அடிக்கும் மேல் உயரமாக இருந்த பீனிக்ஸ்வாசிகள் வெகு இயல்பாக மலையின் மீது ஏறிச் சென்றதையும் காணநேர்ந்தது. அன்று நிலவிய ஒன்பது டிகிரி சென்டிகிரேட் வெப்ப நிலையில், ஆறு அல்லது ஏழு வயது மதிக்கத்தக்க குழந்தைகள்கூட எளிமை யான ஆடைகளிலேயே மலை ஏறுகிறார்கள். அங்கு வளர்ந்திருந்த கள்ளிச்செடிகளும், முட்களைக் கொண்ட புதர் செடிகளும் அவ்விடம் பாலைவனம் என்பதை அடையாளப்படுத்தின. பெரும்பாறைகளாலும், மணலாலுமான அரிசோனா மலையில் ராட்டில் (ழ்ஹற்ற்ப்ங் ள்ய்ஹந்ங்) எனப்படும் பாம்பு வகையினம் வாழ்கிறது என்பதால், இருள் சூழ ஆரம்பிக்கும் நேரத்திற்குப் பின் மலையின் மேல் ஏறுவதற்கு அனுமதியில்லை எனும் அறிவிப்புப் பலகையும் அங்கிருந்தது.
சற்று நேரத்தில் முழு வடிவப் பகலவன் மேலெழுந்தவாறு தோன்றி, அதன் பொன்னிறமான கதிர்கள் நகர் முழுவதும் பரவி, எதிர்ப்புறமுள்ள இடங்களிலும் பட்டு எதிரொளித்தது. மேற்குப் புறமாக நமது முகத்தைத் திருப்பினால் கிழக்கில் உதிக்கும் சூரியன் நமது கேசத்தையும் மின்னச் செய்து விடுகிறது. ஆங்கில நாவல்களில் நாயகன் நாயகியை வர்ணிக்கும் பொழுது, “மாலை நேர சூரிய வெளிச்சத்தில் மின்னும் தங்க நிறமேனியையும், ஒளிரும் பொன்னிறத் திலான கூந்தலையும் கொண்டிருந்தாள்.” என்று வாசித்ததையும், நமது திரைப்படங்களின் சிறந்த ஒளிப்பதிவாளரான பி.சி. ஸ்ரீராம் அவர்களது கேமராவையும் ஒளிரும் சூரியக்கதிர்கள் நினைவு படுத்தின. பொன்னிறம் மறைந்து மஞ்சள் நிறமாக மாறிய வேளையில் நகரின் மின்விளக்குகள் காணாமல் போயின. பிறகு அரிசோனா மலையிலிருந்து கீழே இறங்கினோம். நேரத்தையும் தொலைவையும் கணக்கிட்டபடியே மலையேறும் சிலரும் எங்களைக் கடந்து மேலே ஏறினார்கள்.
இறங்கும் வழியில் ஆங்காங்கே சற்று ஓய்வெடுத்தபடி அரிசோனா நகரின் அழகை வெவ்வேறு உயரங்களிலிருந்து கண்டு ரசித்தோம். மலையில் ஏறியபோது காணநேர்ந்த அரிசோனா வின் அடையாளமான சூரியனின் கல்வெட்டையும், ராட்டில் எனும் பாம்பு வகையின் சுருட்டிய வடிவத்தையும் இறக்கத்தில் மீண்டும் கண்ட பொழுது, அவை அர்த்தத்தைக் கொடுத்தன. உலகம் முழுவதும் உதயமாகும் சூரியன் என்றாலும் அரிசோனாவில் உதிக்கின்ற சூரியனின் அழகு, நகர் முழுவதும் பிரதிபலிக்கிறது. அவற்றைத் தடுக்கின்ற உயரமான கட்டிடங்கள் ஒரு சிலவற்றைத் தவிர, எந்தவொரு கட்டுமானமும் முதல் கூரையிலேயே முடிந்துவிடுகிறது. விடியலின் விசாலமான காட்சியைக் காண விழிகள் போதவில்லை. எத்தனை பேர் வந்தாலும், வந்து போன அடையாளங்களை தங்களது பாதச் சுவடுகளில்கூட விட்டுச் செல்வதில்லை. பாதையை விட்டு விலகி அருகேயுள்ள இடங்களில் பாதணிகளைப் பதிப்ப தில்லை. பாலைவனச் சூழ்நிலையில் போராடி வளரும் தாவரங்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டுமென அனைவரும் விரும்புகிறார்கள். எழுதி வைத்திருக்கும் பலகைகள் அறிவிப்பை மட்டுமே கொடுக்கின்றன. அதிகாரங்களை செலுத்துவதில்லை. அதற்கு அத்தனை பேரும் மதிப்பளிக்கிறார்கள். அங்கு வந்து சென்றதின் அடையாளமாக மண்ணில் இருக்கும் கற்களைக்கூட எவரும் எடுத்துச் செல்வதில்லை. ஒருவர் செய்வதை பலரும் தொடர்ந்தால் அவ்விடத்தின் அடையாளம் அழிந்துபோகும் என்பதாக அறிவிப்புகள் இருக்கின்றன. மண்ணில் வளரும் நுண்ணுயிரிகளையும் மனதில் கொள்கிறார் கள். இப்படியான அமெரிக்க அரசாங்கமா பிற நாடுகளின் மீது போர் தொடுத்து உயிரை அழிக்கிறது என்கிற கேள்வி நமக்குள் எழாமல் இல்லை.
கள்ளிச்செடிகள் வளர்ந்து காண்பதற்கு அழகான தோற்றத்தைக் கொடுக்கின்ற இம்மலையில் உணவைக் கொடுக்கின்ற தாவரங்களைக் காண முடியவில்லை. கலிஃபோர்னியாவில் விளையும் காய்கறிகளை இங்கு கூடுதலான விலைக்கு விற்பனை செய்கின்ற ஒரு சில இந்தியக் கடைகள் அருகேயுள்ள நகரில் இருக்கின்றன. அங்கு இந்துக்களுக்குத் தேவையான பூஜை சாமானங்கள், நெகிழியாலான சிறிய சிலைகள், மாலைகள், நெற்றிப் பொட்டுகள், மஞ்சள், குங்குமம் என சகலமும் சுமாரான தரத்தில் விற்பனையில் இருந்தன. இந்திய உணவை வீட்டில் சமைப்பதற்கான காய்கறிகளையும் மளிகைகளையும், டெம்பியில் உள்ள கொரியன் கடைகளைவிட மெக்சிகன் கடைகளில் மலிவான விலையில் பெறமுடிந்தது. இந்திய மண்ணில் விளையும் அதே காய்கறிகளின் வகைகள் மெக்சிகனில் விளைந்தவையாக, தனது அளவில் இரண்டு அல்லது மூன்று மடங்கு பெரியதாகவும், அதன் சுவையில் சற்றுக் குறைந்தும் இருந்தன. பல நாட்டு மக்களும் இங்கு குடியேறி வாழ்ந்து வருவதால், அந்தந்த நாட்டு மக்களுக்கு வேண்டிய வசதிகளும் பொருள்களும் அங்கு கிடைக்கின்றன. மலை ஏறுவதற்கேற்ற உடுப்புகளை இங்குள்ள கடைகளில் பெற்றபோது $ 16/ 25/ 45 என்ற டாலர்களில் பெற முடிந்தது. தரமான தயாரிப்புகளிலான ஆடைகள் இந்தியாவிலிருந்தே பெரும்பாலும் வந்திருக்கின்றன.
எங்கள் இருப்பிடத்திற்கு அருகேயிருந்த அரிசோனா மலை அவ்வாறு அழைக்கப்பட்டாலும், சற்று உயரம் குறைவான குன்றுதான் அது என்கிறபோது, எங்களுக்கு தண்ணீர் குடுவையைத் தவிர வேறெதுவும் அதிகமாகத் தேவைப்படவில்லை. பெரு அங்காடிகளில் விற்பனைக்காக ஒரு பகுதி முழுவதும் மலை ஏறுபவர்களுக்குத் தேவையான உபகரணங்கள் வகை வகையாக கொட்டிக் கிடந்தன. முதுகில் சுமக்கின்ற தண்ணீர் பைகள், ஊன்றுகோல்கள், கூடாரங்கள் அமைக்கத் தேவையான அதன் பகுதிப் பொருள்கள், இறைச்சிகளை சுட்டு உண்பதற்கான அடுப்புகள், எரிப்பதற்கான மரத்துண்டுகள், சிறிய வடிவில் எளிதாக மடித்து வைக்கக்கூடிய கனமற்ற நாற்காலிகள், உலர்ந்த உணவுப் பண்டங்களென அனைத் தும் அங்கிருந்தன. பெரும்பாலான அமெரிக்கர்கள் வார இறுதி நாட்களில் வீடு தங்குவதில்லை. விருப்பமான இடங்களுக்கு பயணம் செய்வதை அதிக எண்ணிக்கையிலான குடும்பங்கள் பின்பற்றுகிறார் கள். பொது இடங்களிலும் மக்களை கூட்டமாகக் காணமுடியவில்லை. கல்லூரி சமயங்களில் மாணவர்களும், விமான நிலையத்தில் பயணிகளும், தேவாலயங்களில் ஞாயிறன்று கூடுபவர்களும் தவிர, பிற இடங்களில் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்களைக் காண இயலவில்லை.
கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் இப்பகுதியில் சமூகமாக வாழும் மனிதர்களுக்கு தோள் கொடுக்க, தேவாலயங்கள் மனதளவில் நம்பிக்கையைக் கொடுக்கின்றன. இம்மதத்திற்குள் பிரிவுகளாக உள்ள கத்தோலிக்கர்கள், புரோட்டஸ்டன்கள் ஆகியோர், இவர்கள் அவர்களாகவும் அவர்கள் இவர்களாகவும் மாறுவதும் நடக்கின்றது. வாழ்க்கையில் சொல்ல முடியாத துன்பத்தைத் தாங்கமுடியாமல் விம்மி அழுது, தாங்கள் தேவாலயங்களை நாடி வருவதற்கான காரணங்களைச் சொல்லி, அதிலிருந்து மீண்டு வர கரங்களை எதிர்பார்க்கும் இளைய தலைமுறைகளைக் காணநேர்ந்தது. உடன் இருக்கிறோமென மேடை யில் இருப்பவர்கள் ஆறுதல் அளிக்கிறார்கள். தனது பிள்ளைகள் தனித்து வாழ மனதளவில் தயாராகும் வரை அவர்களைப் பாதுகாக்காமல், இவர்களது பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள் என்கிற கேள்வியும் நமக்கு எழுகிறது. கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஒன்றாக வாழ்வதாக ஒருவர் கூட அங்கில்லை. இந்தியாவில் தனித்து வாழ முற்படும் இளையோரைப் பற்றி சிந்தித்தபடியே அரிசோனா மலையிலிருந்து இறங்கி, அடி நிலத்தினை அடைந்து எங்களது வாகனத்தில் வீடு வந்து சேர்ந்தோம்.