சிறப்பு நேர்காணல்! அப்பாவிடம் பிடித்ததும் பிடிக்காததும்... கபிலன் வைரமுத்து

/idhalgal/eniya-utayam/exclusive-interview-what-dad-likes-and-dislikes-kabilan-vairamuthu

கவிலன் வைரமுத்து-

வனப்பும் வளமுமாகத் தமிழுக்குக் கிடைத்திருக் கும் இலக்கிய இளைஞர். கவிதை, சிறுகதை, புதினம், திரைக் கதை, வசனம், பாடல்கள் என பல துறைகளிலும் அவர் வீரியமாய்த் தன்னை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்.

இதுவரை 11 நூல்களைப் படைத்திருக்கும் கபிலனின் அண்மை வெளியீடான ’அம்பறாத்தூணி’ பாராட்டுக் களைக் குவித்து வருகிறது. புதிய புதிய திசைகளில் பக்குவமாய்ப் பயணிக்கும் அவரிடம், நம் வாசகர்கள் சார்பில் சில கேள்விகளை வைத்தோம்.

அவற்றுக்கு அவர் தந்திருக்கும் கூர்மையான பதில்களில், அவரது முகமும் ’முகவரியும்’ அழகாய்ச் சுடர்கிறது.

* வாழ்க்கை எந்தத் திசையில் பயணிக்கிறது?

அர்த்தத்திற்கும் அர்த்தமின்மைக்கும் இடையே முன்னும் பின்னும் மீண்டும் மீண்டும் பயணிப்பதுதான் வாழ்க்கையாக இருக்கிறது. ஒரு நொடியில் அர்த்த முள்ளதாக தோன்றுபவை இன்னொரு நொடியில் அர்த்தமற்றவையாகத் தோன்றும். காலத்தால் நேரும் இந்த இயல்பான அலைபாய்தல் ஒருபுறம் இருக்க, தற்போது முழுக்க முழுக்க கருவிகளை நோக்கிய திசையில் பயணிக்கிறது நம் வாழ்வு. அதை மனிதர்களை நோக்கி மடைமாற்றுவதே தலையாயச் சவால். பழைய காயங்கள் பற்றிய புதுப்பிக்கப்பட்ட கற்பனைகளில் இருந்து விடுபட்டு புதிய காயங்களை உணரத் தொடங்குவதே நம்முதல் தேவையாக இருக்கிறது. அதுதான் என் திசை. என் படைப்பின் திசை.

kailan

* இந்த கொரோனா கால அனுபவம் எப்படி இருக்கிறது?

கொரோனா காலம் இன்னும் முடியவில்லை. எப்பொழுது முடியும் அல்லது எப்பொழுது முடிப்பார்கள் என்று தெரியவில்லை. எதிரி யார் என்றே தெரியாத உலகப் போரை நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இது பலருடைய உடல்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டது. எல்லாருடைய வாழ்வையும் புரட்டி போட்டிருக்கிறது. ஊரடங்கின் தொடக்க காலத்தில் நான் சில மாதங்கள் எங்கள் சொந்த ஊரில் தங்கியிருந்தேன். முழுக்க மூர்ச்சையாகிப் போன எங்கள் திரைத்துறையில் ஒரு சில எழுத்துப்பணிகள் மட்டும் நடந்துகொண்டிருந்தன. ஏற்கனவே செய்து வைத்திருந்த ஆய்வுக் குறிப்புகளைக் கொண்டு சிறுகதைகளும் எழுதத் தொடங்கினேன்.

நான் தங்கியிருந்த இடத்தின் அருகில் உள்ள கிராமங்களில் தினமும் மாலை ஒலிலிபெருக்கியில் ஒலிலித்த பாடல்கள் ஆறுதலாக இருந்தன. இன்று இத்தனை லட்சம் பேர் பார்த்துவிட்டார்கள்

கவிலன் வைரமுத்து-

வனப்பும் வளமுமாகத் தமிழுக்குக் கிடைத்திருக் கும் இலக்கிய இளைஞர். கவிதை, சிறுகதை, புதினம், திரைக் கதை, வசனம், பாடல்கள் என பல துறைகளிலும் அவர் வீரியமாய்த் தன்னை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்.

இதுவரை 11 நூல்களைப் படைத்திருக்கும் கபிலனின் அண்மை வெளியீடான ’அம்பறாத்தூணி’ பாராட்டுக் களைக் குவித்து வருகிறது. புதிய புதிய திசைகளில் பக்குவமாய்ப் பயணிக்கும் அவரிடம், நம் வாசகர்கள் சார்பில் சில கேள்விகளை வைத்தோம்.

அவற்றுக்கு அவர் தந்திருக்கும் கூர்மையான பதில்களில், அவரது முகமும் ’முகவரியும்’ அழகாய்ச் சுடர்கிறது.

* வாழ்க்கை எந்தத் திசையில் பயணிக்கிறது?

அர்த்தத்திற்கும் அர்த்தமின்மைக்கும் இடையே முன்னும் பின்னும் மீண்டும் மீண்டும் பயணிப்பதுதான் வாழ்க்கையாக இருக்கிறது. ஒரு நொடியில் அர்த்த முள்ளதாக தோன்றுபவை இன்னொரு நொடியில் அர்த்தமற்றவையாகத் தோன்றும். காலத்தால் நேரும் இந்த இயல்பான அலைபாய்தல் ஒருபுறம் இருக்க, தற்போது முழுக்க முழுக்க கருவிகளை நோக்கிய திசையில் பயணிக்கிறது நம் வாழ்வு. அதை மனிதர்களை நோக்கி மடைமாற்றுவதே தலையாயச் சவால். பழைய காயங்கள் பற்றிய புதுப்பிக்கப்பட்ட கற்பனைகளில் இருந்து விடுபட்டு புதிய காயங்களை உணரத் தொடங்குவதே நம்முதல் தேவையாக இருக்கிறது. அதுதான் என் திசை. என் படைப்பின் திசை.

kailan

* இந்த கொரோனா கால அனுபவம் எப்படி இருக்கிறது?

கொரோனா காலம் இன்னும் முடியவில்லை. எப்பொழுது முடியும் அல்லது எப்பொழுது முடிப்பார்கள் என்று தெரியவில்லை. எதிரி யார் என்றே தெரியாத உலகப் போரை நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இது பலருடைய உடல்களையும் கனவுகளையும் புதைத்துவிட்டது. எல்லாருடைய வாழ்வையும் புரட்டி போட்டிருக்கிறது. ஊரடங்கின் தொடக்க காலத்தில் நான் சில மாதங்கள் எங்கள் சொந்த ஊரில் தங்கியிருந்தேன். முழுக்க மூர்ச்சையாகிப் போன எங்கள் திரைத்துறையில் ஒரு சில எழுத்துப்பணிகள் மட்டும் நடந்துகொண்டிருந்தன. ஏற்கனவே செய்து வைத்திருந்த ஆய்வுக் குறிப்புகளைக் கொண்டு சிறுகதைகளும் எழுதத் தொடங்கினேன்.

நான் தங்கியிருந்த இடத்தின் அருகில் உள்ள கிராமங்களில் தினமும் மாலை ஒலிலிபெருக்கியில் ஒலிலித்த பாடல்கள் ஆறுதலாக இருந்தன. இன்று இத்தனை லட்சம் பேர் பார்த்துவிட்டார்கள் - இத்தனை மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து விட்டது என்று இணையத்தளம் கொண்டாடும் பெரும்பாலான பாடல்கள் அங்கே ஒலிலிக்கவில்லை. இளைஞர்களோடும் சிறுவர்களோடும் பேசியபோது நாம் மிக பிரபலம் என்று நினைத்த பல பாடல்களை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அங்கே ஒலிலிக்கும் பாடல்கள் எந்த படம் - யார் இசையமைப்பாளர் - யார் பாடியது - யார் எழுதியது என்று கிராமத்தைச் சேர்ந்த வர்களால் அவ்வளவு எளிதில் சொல்லிவிட முடியாது. பழைய பாடல்கள் புதிய பாடல்கள், பக்திப் பாடல்கள் என்று மாறி மாறி ஒலிலிக்கும். இசை ரசனை குறித்து நம் சமூக வலைத்தளங்கள் பரப்பும் ஒற்றைத் தன்மை எத்தனை செயற்கையானது என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. கொரோனோ பலருக்கும் பலவிதமான பாடங்களைக் தந்திருக்கிறது.

*அப்பாவைப் போல் திரையுலகத்துக்கு வந்துவிட்டீர்களே?

அவரைப் போல் வரவில்லை. அவரிடம் இருந்து உற்சாகம் பெற்று என்னைப் போல் வந்திருக்கிறேன்.

* இன்றைய திரைப்பாடல்களின் போக்கு எப்படி இருக்கிறது?

திரைப்படங்களில் முழு நீள பாடல்களுக்கான இடம் குறைந்து வருகிறது. இது இன்னும் சில ஆண்டு களில் பூஜ்ஜிய நிலைக்கு ddபோகும். அதன் பின் மீண்டும் பாடல்களுக்கான தேடலும் தேவையும் அதிகரிக்கும் என்று நினைக்கிறேன். ஒரு படத்தின் உயிரோட்டமாக விளங்கிய பாடல்கள் இன்று விளம்பர முன்னோட் டமாக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. ஒரு சில படங்களில் பாடல்கள் கதைசொல்லும் பின்னணி இசையாக கரைந்து போவதைப் பார்க்கிறோம். பாடலற்ற தன்மை என்பது மேற்கத்திய படங்களின் தாக்கம் என்றும் சொல்லலாம். இந்தத் தாக்கம் நீண்டநாள் நிலைக்காது என்று தோன்றுகிறது. அதே நேரத்தில் எதிர்காலப் பாடல்கள் நீண்ட பாடல்களாக இல்லாமல் குறும் பாடல்களாகவே அமையும் என்று நம்புகிறேன்.

*அப்பாவின் புகழ் உங்களுக்கு பலமா? பலவீனமா?

எத்தனையோ இளம் எழுத்தாளர்கள் அவரிடம் கற்றுக்கொள்வதை போல் நானும் கற்றுகொள்கிறேன். திரைத்துறையில் இன்னாரின் மகன் என்பதால் உபசரிப்பு இருக்கும். தேநீர்கிடைக்கும். வாய்ப்பு கிடைக்காது. கற்பனை கிடைக்காது. தனித்திறனும் தொடர் முயற்சிகளும்தான் படைப்புகளாகவும் வாய்ப்பு களாகவும் மாறும். அவையே அடையாளம். அவருடைய புகழ் எனக்கு பலமாக இருப்பதை நான் விரும்பிய தில்லை. அதை பலவீனமாக நான் கருதியதுமில்லை.

* சமூகப் பிரச்சினைகளின் போது படைப்பாளி கள் ஒதுங்கியிருப்பது சரியா?

எல்லாரும் எல்லாவற்றையும் பற்றி கருத்துச் சொல்ல வேண்டும் என்பது சமூக ஊடகங்கள் தங்களை வளர்த்துக் கொள்வதற்காக படைப்பாளர்கள் மீது நிகழ்த்துகிற ஒரு மாயத் திணிப்பு. இது தவறானபோக்கு. ஒதுங்கியிருப்பதும் ஓங்கி உரைப்பதும் அவரவர் விருப்பம். படைப்பாளர்களைப் பொறுத்தவரை தன் சமூகம் சார்ந்த அவலங்கள் படைப்புகளில் இயல்பாகவே வெளிப்படும். காரணம் படைப்புக் கான தேடல் நிகழ்ந்து நிகழ்ந்து படைப்பாளர் கள் தங்களையும் அறியாமல் சமூகத்தின் மனசாட்சியாக மாறுகிறார்கள். மனசாட்சிக்கு என்று ஒரு மொழியும் ஒலிலியும் உண்டு.

அந்த மொழியில் ஒலிலியில் பெரும்பாலான படைப்பாளர்கள் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். அது எல்லா நேரங்களிலும் எல்லாருக்கும் கேட்பதில்லை.

*பணமதிப்பிழப்பு குறித்து நீங்கள் எழுதி நடிகர் சிலம்பரசன் பாடிய பாடல் கடும் எதிர்ப்புக்குள்ளானது. கோமாளி படத்தில் நீங்கள் எழுதிய ஒளியும் ஒலிலியும் பாடல் தணிக்கைக்குள்ளானது. வருத்தப்பட்டீர்களா ?

என் எழுத்து இதுவரை பொய் பேசியதில்லை. என் எழுத்து இதுவரை யாரையும் காயப்படுத்தியது இல்லை. சில நேரங்களில் அது தவறாக புரிந்துகொள்ளப்படும் போது அங்கே விவாதம் நேர்கிறது. விவாதம் வெவ்வேறு வடிவம் பெறுகிறது. இது எல்லா காலங்களிலும் எல்லா படைப்பாளர்களும் சந்திப்பதுதான். இது விவாதத்திற்குரியது. வருத்ததிற்குரியது அல்ல.

*உங்கள் மக்கள் அணுக்கப் பேரவை, உங்கள் சமூக ஆர்வத்தைக் காட்டியது. அந்த அமைப்பின்மூலம் என்ன செய்தீர்கள்? என்ன செய்ய இருக்கிறீர்கள்?

கல்லூரிப் பருவத்தில் சக மாணவர்களைக் கொண்டு உருவாக்கிய மக்கள் அணுக்கப் பேரவை வழியாக பல்வேறு சமூக விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டோம். அதை “இளைஞர்கள் என்னும் நாம்’’ என்ற பெயரில் ஆவணப்படுத்தியிருக்கிறோம். தமிழகத்தில் அரசியல் பயிற்சி மையம் ஒன்றை நிறுவவேண்டும் என்பது எங்கள் கனவாக இருந்தது. அதற்கான முயற்சிகளைத் தொடர முடியவில்லை. ஆனால் கனவு கலையவில்லை.

* சமூகத்தில் இருந்து படைப்பாளிகள் விலகி இருக்க முடியாது என்பதால் கேட்கிறோம். இன்றைய அரசியல் போக்கு எப்படியிருக்கிறது ?

உலகம் முழுக்கவே அரசியல் இயக்கங்கள் செலவு செய்யும் பணத்தின் அளவு பல மடங்காக இப்போது அதிகரித்திருக் கிறது. இதில் அரசியலுக்காக செய்யும் செலவை விட அந்த அரசியல் பொதுமக்களுக்குப் புரிந்து விடக் கூடாது என்பதற் காகச் செய்யும் செலவு அதிகம். நிகழ்காலத்தின் விலை உயர்ந்த புதையல் தங்கமோ வைரமோ அல்ல. உண்மை.

*ஆன்மிகம் - பகுத்தறிவு உங்கள் பார்வை ?

புற உலகை எதிர்கொள்ள உதவுவது பகுத்தறிவு. அக உலகை எதிர்கொள்ள உதவுவது ஆன்மிகம். இரண்டுமே வெவ்வேறு தேடல். ஒன்று நீதியைத் தேடுகிறது. ஒன்று நிம்மதியைத் தேடுகிறது.

*சமீபத்தில் வெளிவந்த உங்கள் அம்பறாத் தூணி சிறுகதை தொகுப்பில் உங்களை அதிகம் வேலை வாங்கிய கதை எது ?

எல்விஸ். ஆழ்கடல் சுரங்கம் பற்றிய சிறுகதை. இதுவரை எந்த மொழியின் இலக்கியத்திலும் இந்தக் களத்தில் ஒரு சிறுகதை எழுதப்பட்டிருக்காது என்று உறுதியாக நம்புகிறேன். அந்த களத்தின் கட்டமைப்பையும் எதார்த்தங்களையும் எடுத்துரைப்பதற்கு நிறைய உழைக்க வேண்டியிருந்தது. வலிலிமையான களங்களை எளிமையாக எழுதுவது எளிதல்ல. முயன்றிருக்கிறேன்.

kabilan

* அரசியலில் களமிறங்கும் திட்டம் இருக்கிறதா?

நேர்மையான அரசியலிலின் முதல் தகுதி தியாகம். அது ஒரு மனநிலை. தற்போது என்னிடம் அந்தத் தகுதி இல்லை.

அரசியலிலில் ஈடுபட நேர்ந்தால் அந்தத் தகுதியை வளர்த்துக் கொண்டு ஈடுபடவேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.

* படைக்கும் போது உங்களுக்கு சுகமான அனுபவத் தைத் தருவது கவிதையா? திரைப்பாடலா? சிறுகதையா ? நாவலா ?

ஒரு பூங்காவிடம் “எந்த வகையான பூ பூக்கும் போது நீ மகிழ்ச்சியாக இருப்பாய்’’ என்று கேட்பதுபோல் இருக்கிறது. எல்லாப் பூக்களுக்கும் மணம் உண்டு. எல்லாப் படைப்புகளிலும் மகிழ்ச்சி உண்டு. எழுதி முடிக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சி தான் ஒரு ஆத்மார்த்தமான படைப்பின் அடையாளம். அந்த மகிழ்ச்சியைத் தராத படைப்பு முழுமை அடையாத படைப்பு.

*உங்கள் அப்பாவிடம் பிடித்ததும் பிடிக்காததும்?

அவருடைய தன்முனைப்பு பிடிக்கும். அந்த தன்முனைப்பின் காரணமாக அவர் தன்னையும் தன் உடல் நலத்தையும் மறப்பது பிடிக்காது.

* மறக்கமுடியாத அனுபவம்?

ஆஸ்திரேலிலியாவில் படித்துகொண்டிருந்தபோது ஒரு உணவகத்தில் இரண்டு ஆண்டுகள் சர்வர் வேலை பார்த்த அனுபவம். பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களை அடிக்கடி உபசரித்ததும், அவர்களிடம் அவ்வப்போது திட்டு வாங்கியதும், அவர்கள் கை கழுவிய கிண்ணங்களில் இருந்த நீரை மேஜையில் இருந்து சமையலறை வரை தளும்பாமல் எடுத்துச் சென்ற பக்குவமும், தமிழர்கள் வந்தால் அவர்களுக்குக் கூடுதலான புன்னகையோடு பரிமாறியதும், தடுக்கி விழப்போன ஒருபெல்ஜியம் பெரியவரைத் தாங்கி பிடித்ததும், ஒரு மெல்போர்ன் மூதாட்டி அழைத்து வந்த நாய்க் குட்டிக்கு தனியாகக் கறித்துண்டுகள் தந்து அதோடு நட்பானதும் மறக்க முடியாதவை.

* உங்கள் அம்மா பொன்மணியும் நாடறிந்த கவிஞர்? அவர் கவிதையில் உங்களுக்குப் பிடித்தது?

அம்மாவைப் போல் என்றாவது எழுத முடிந்தால் அதையே பெரிய சாதனையாக எண்ணுவேன். அவர் கவிதைகளில் இருக்கும் எளிமையும், அன்பும் மிகவும் பிடிக்கும் எனக்கு. "மீண்டும் சரஸ்வதி' என்ற அவர் கவிதைத் தொகுதியில் அனைத்து கவிதைகளும் உன்னதமானவை. அம்மாவின் "சத்திய தரிசனம்' கவிதை நான் மிகவும் ரசித்த கவிதை.

*உங்கள் பாடல்களில் உங்கள் அப்பாவுக்குப் பிடித்த பாடல் எது? அவரது பாராட்டைப் பெற்ற உங்கள் படைப்பு எது?

அனேகன் படத்தில் "தெய்வங்கள் இங்கே' என்ற என் பாடல் அவருக்கு பிடிக்கும். "பாதைகள் மாறும் - பாதங்கள் மாறும் - வழித்துணை நிலவு மாறாதே' என்ற வரிகளை ரசித்தார். கடந்த மாதம் வெளிவந்த அம்பறாத்தூணி சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்ற முப்பத்தோராம் நூற்றாண்டில் நிகழும், மூலா என்ற கதையை வெகுவாகப் பாராட்டினார்.

*உங்கள் சகோதரர் மதன் கார்க்கி பற்றி?

அண்ணன் கார்க்கி ஒரு நடமாடும் தமிழாராய்ச்சி மையம். மொழி விஞ்ஞானி என்பது அவருக்கு மிகவும் பொருத்தமான அடைமொழி என்று நினைக்கிறேன். மொழி ஆராய்ச்சி, பாடல்கள், வசனம், தமிழ் விளையாட்டுக்கள், குழந்தை பாடல்கள் என அவரின் பன்முக உயரம் வியப்புக்குரியது. சமீபத்தில் அவர் உருவாக்கியிருக்கும் சொல் அகராதி அபாரமான மொழிப் பங்களிப்பு. நவீன திரைத்துறையிலும் தமிழ் உலகிலும் அண்ணன் மதன் கார்க்கி பெருமைக்குரிய ஒரு தனி அடையாளம்.

* ஏன் மரபுக் கவிதையின் பக்கம் போகவில்லை?

என் மரபுக்கவிதைப் பக்கம் நீங்கள் போகவில்லை என்று நினைக்கிறேன். என் எல்லா கவிதைத் தொகுதிகளிலும் மரபுக் கவிதைகளும் உண்டு. ஆனால் மரபுக் கவிதைகளை மட்டுமே கொண்ட ஒரு தொகுப்பை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. விரைவில் அதற்கான முயற்சிகளைத் தொடங்குவேன்.

-நாடன்

uday011220
இதையும் படியுங்கள்
Subscribe