ரு நள்ளிரவு வேளையில் போதவிரதன் எரி நட்சத்திரங்களைக் கனவு கண்டான். ஒன்றுக்குப் பின்னால் ஒன்றாக அவை ஆகாயத்திலிருந்து பறந்து விழுந்து பற்றி எரிந்தன.

Advertisment

அவன் உறக்கத்திலிருந்து கண் விழித்து வெளியே பார்த்தான். அப்போது நிலவில் பெரிய ஒரு நிழல்...

Advertisment

ss

போதவிரதன் எழுந்து வாசலுக்கு வந்தான். நிழலை விழச் செய்தது எது என்பதை அவன் பார்த்தான். பற்றி எரியாத ஒரு எரி நட்சத்திரம்... பெரிய ஒரு பாறையைப்போல அது போதவிரதனின் வீட்டிற்கு மேலே தொங்கிக் கொண்டிருந்தது.

போதவிரதனுக்கு சாதாரண விஷயமாகத் தோன்றவில்லை. தான் மிகவும் அதிகமாகப் படித்திருக்கும் ஒரு மனிதன் என்பதை அவன் நினைத்துப் பார்த்தான்.

இலக்கணம், கணித அறிவியல்...

தயக்கமின்றி அவன் எரி நட்சத்திரத்திடம் கேட்டான்: "எரி நட்சத்திரமே... உனக்கு என் அளவுக்கு இலக்கணம் தெரியுமா?"

"உன் அளவுக்கு என்றல்ல...''- எரி நட்சத்திரம் கூறியது: "யார் அளவுக்கும் தெரியாது. எனக்கு இலக்கணமே தெரியாது.''

"கணிதம், காவியம்,

ஜோதிடம்..?"

"தெரியாது.''

"மோசம்..!''

எரி நட்சத்திரம் அடக்கமாகக் கூறியது: "ஆகாயத்திலிருக்கும் நட்சத்திரங்களான எங்களுக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது."