Advertisment

வேறொரு இடத்தில் விசேஷம்! ஒ.வி.விஜயன் தமிழில் : சுரா

/idhalgal/eniya-utayam/elsewhere-special-ov-vijayan-tamil-sura

நீண்டகாலமாக ரத்த நோயாளியாக இருக்கக்கூடிய நண்பனைப் பார்ப்பதற்காக வந்த போதவிரதனிடம் நண்பன் கூறினான்:

Advertisment

"நான் இங்கிருந்து போறேன்.''

"எங்க?''

"மிகவும் தூரத்திற்கு. அங்க நல்ல தட்பவெப்ப நிலை. நோய் குணமாகும்.''

கூறியதைப்போலவே நண்பன் இடம் மாறினான். சரியாக ஒரு வருடம் கடந்தபிறக

நீண்டகாலமாக ரத்த நோயாளியாக இருக்கக்கூடிய நண்பனைப் பார்ப்பதற்காக வந்த போதவிரதனிடம் நண்பன் கூறினான்:

Advertisment

"நான் இங்கிருந்து போறேன்.''

"எங்க?''

"மிகவும் தூரத்திற்கு. அங்க நல்ல தட்பவெப்ப நிலை. நோய் குணமாகும்.''

கூறியதைப்போலவே நண்பன் இடம் மாறினான். சரியாக ஒரு வருடம் கடந்தபிறகு அவன் கிராமத்திற்குத் திரும்பிவந்து போதவிரதனைப் பார்த்தான். நேரம் நள்ளிரவு தாண்டியிருந்தது.

Advertisment

ss

"பொருத்தமற்ற நேரத்துல நான் வந்திருக்கேன்.'' நண்பன் கூறினான்:

"சிரமமா இல்லியே?''

"பரவாயில்ல...''

"இந்த நேரத்துலதான் என்னால வரமுடிஞ்சது.''

"அதனால ஒண்ணுமில்ல. இங்க வேற யாருமில்லியே?''

"எங்கதான் வேற யாரும் இருக்காங்க?'' நண்பன் சிரித்தான். தொடர்ந்து அவன் வேறிடத்தின் விசேஷங்களைப் பற்றிக் கூற ஆரம்பித்தான். "நல்ல காலநிலை... வெப்பமில்ல. குளிருமில்ல.''

"அப்படின்னா... பருத்தி மேலாடையையும் ரோம மேலாடையையும் மாத்தவேண்டாமில்லையா?" போதவிரதன் கேட்டார்.

"வேணாம்... அதுமட்டுமில்ல... அங்கு யாருமே இல்ல. ஆடைக்கான அவசியமே இல்ல.''

"திகம்பர மார்க்கம்... அப்படித்தானே?''

"அப்படி சொன்னா... முழுமையா விளக்கிய மாதிரி இருக்காது. ஆடை வேணாம். ஆனா... நினைச்சுப் பார்த்திருக்கிறியா... நம்மோட சதைகள் என்னன்னு..?''

"விசேஷமா... நினைச்சுப் பார்க்க முயற்சித்ததில்ல.''

"எலும்புகளுக்கு மேலே தொங்கிக்கிட்டிருக்குற கசங்கிய ஆடைதான் சதைங்க. அந்த ஆடைக்கு எலும்புதான் சுவர், ஆணி. ஆடை வேணாம்னு

நினைச்சா, ஆணியோட தேவையுமில்ல.''‌‌

நண்பன் இதைக் கூறிமுடிக்கும்போது, கோழி கூவியது. அதைக் கேட்டுக்கொண்டே போத விரதன் தூங்கிவிட்டார். ஆழமான அதிகாலைத் தூக்கம்...

uday011122
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe