காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு
-என்கிற குறள் இப்போது தமிழக அரசியல் அரங்கில் ஆச்சரியமாகக் கோலோச்சுகிறது.
இந்தத் திருக்குறளில் இருந்தே தலையங்கத்தைத் தொடங்குகிறேன். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தனது கூர்த்த சிந்தனையால் இப்படியொரு குறளை எழுதி மிரட்டியிருக்கிறார் நம் வள்ளுவப் பேராசான்.
"வேல் ஏந்திய வீரர்களை எல்லாம் வீழ்த்தும் கூர்மை யான தந்தங்கள் கொண்ட யானை, சேற்றில் சிக்கிக் கொண்டால், அதை தந்திரம் கொண்ட நரிகள் கூட எளிதாகக் கொன்றுவிடும்' என்பது இதன் பொருள். 2016 டிசம்பரில் அப்பல்லோவில் அரங்கேறிய காட்சி களை, எப்படி, அப்படியே இந்தக் குறளில் வள்ளுவரால் சித்தரிக்க முடிந்தது?
இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் ஒரு கொடூரம் அப்பல்லோவில் அரங்கேறப்போகிறது என்று நம் வள்ளுவப் பேராசானுக்கு எப்படித் தெரிந்தது?
இந்த வியப்பு ஒருபுறமிருக்க, இந்தக் குறளை அடையாளம் கண்டு, இதன் மூலமே ஜெ.வுக்கு என்ன நேர்ந்தது என்று தமிழக மக்களுக்கு எளிதில் புரிய வைத்திருக்கும், நீதிபதி ஆறுமுகசாமியை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.
*
பொதுவாக அரசால் அமைக்கப்படும் விசாரணை கமிஷன்கள், அரசுப் பணத்தில் குளிர்காய்ந்துவிட்டு, கடைசியில் ஒரு மழுப்பல் அறிக்கையைத் தருவதே வழக்கம். அந்த வரிசையில்தான் இந்த ஆணையத்தின் அறிக்கையும் இருக்கும் என்று பலரும் கருதியிருந்த நிலையில், நடந்த கொடூரத்தை அப்பட்டமாக அம்பலப் படுத்தி இருக்கிறது ஆறுமுகசாமி ஆணையம். "அடப் பாவிகளா? இப்படி எல்லாமா சித்திரவதை செய்து, அந்த அம்மாவின் கதையை முடிச்சீங்க?'' என்று ஒட்டு மொத்த உலகத் தமிழர்களும் அதிர்ந்து போயிருக்கிறார் கள். இந்த அறிக்கையின் மூலம் நீதியரசர் ஆறுமுகசாமி யின் மன உறுதியும் வெளிப்பட்டிருக்கிறது.
ஜெ. அப்பல்லோவில் வைத்து கொஞ்சம் கொஞ்ச மாகக் கொல்லப்பட்டதை, அந்த காலகட்டத்திலேயே தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தது நம் நக்கீரன் தான். இதை அப்போது எந்தப் பத்திரிகையும் ஊடகமும் சொல்லவில்லை. நக்கீரன்தான் சொன்னது.
அந்த அதிரவைக்கும் உண்மைகள்தான், இப்போது ஆறுமுகசாமி ஆணையத்தின் மூலம் வெளிப்பட்டி ருக்கிறது.
ஆனாலும், அந்த ஆணையத்தின் அறிக்கையிலும் நமக்கு ஆதங்கம் உண்டு. காரணம், ஜெ.வின் உடலில் கால்கள் இல்லை என்று நாம் சொன்னோம்.
அதையொட்டி மக்களும் அந்த சந்தேகத்தைக் கிளப்பினர். ஆனால் தன்னிடம் சொல்லப்பட்ட சாட்சியங்களை மட்டுமே வைத்துக்கொண்டு, ஜெ.வின் உடலில் கால்கள் இருந்தன என்ற முடிவுக்கு அந்த ஆணையம் வந்திருக்கிறது. குறைந்தபட்சம் ஜெ.வின்
காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு
-என்கிற குறள் இப்போது தமிழக அரசியல் அரங்கில் ஆச்சரியமாகக் கோலோச்சுகிறது.
இந்தத் திருக்குறளில் இருந்தே தலையங்கத்தைத் தொடங்குகிறேன். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தனது கூர்த்த சிந்தனையால் இப்படியொரு குறளை எழுதி மிரட்டியிருக்கிறார் நம் வள்ளுவப் பேராசான்.
"வேல் ஏந்திய வீரர்களை எல்லாம் வீழ்த்தும் கூர்மை யான தந்தங்கள் கொண்ட யானை, சேற்றில் சிக்கிக் கொண்டால், அதை தந்திரம் கொண்ட நரிகள் கூட எளிதாகக் கொன்றுவிடும்' என்பது இதன் பொருள். 2016 டிசம்பரில் அப்பல்லோவில் அரங்கேறிய காட்சி களை, எப்படி, அப்படியே இந்தக் குறளில் வள்ளுவரால் சித்தரிக்க முடிந்தது?
இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் ஒரு கொடூரம் அப்பல்லோவில் அரங்கேறப்போகிறது என்று நம் வள்ளுவப் பேராசானுக்கு எப்படித் தெரிந்தது?
இந்த வியப்பு ஒருபுறமிருக்க, இந்தக் குறளை அடையாளம் கண்டு, இதன் மூலமே ஜெ.வுக்கு என்ன நேர்ந்தது என்று தமிழக மக்களுக்கு எளிதில் புரிய வைத்திருக்கும், நீதிபதி ஆறுமுகசாமியை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.
*
பொதுவாக அரசால் அமைக்கப்படும் விசாரணை கமிஷன்கள், அரசுப் பணத்தில் குளிர்காய்ந்துவிட்டு, கடைசியில் ஒரு மழுப்பல் அறிக்கையைத் தருவதே வழக்கம். அந்த வரிசையில்தான் இந்த ஆணையத்தின் அறிக்கையும் இருக்கும் என்று பலரும் கருதியிருந்த நிலையில், நடந்த கொடூரத்தை அப்பட்டமாக அம்பலப் படுத்தி இருக்கிறது ஆறுமுகசாமி ஆணையம். "அடப் பாவிகளா? இப்படி எல்லாமா சித்திரவதை செய்து, அந்த அம்மாவின் கதையை முடிச்சீங்க?'' என்று ஒட்டு மொத்த உலகத் தமிழர்களும் அதிர்ந்து போயிருக்கிறார் கள். இந்த அறிக்கையின் மூலம் நீதியரசர் ஆறுமுகசாமி யின் மன உறுதியும் வெளிப்பட்டிருக்கிறது.
ஜெ. அப்பல்லோவில் வைத்து கொஞ்சம் கொஞ்ச மாகக் கொல்லப்பட்டதை, அந்த காலகட்டத்திலேயே தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தது நம் நக்கீரன் தான். இதை அப்போது எந்தப் பத்திரிகையும் ஊடகமும் சொல்லவில்லை. நக்கீரன்தான் சொன்னது.
அந்த அதிரவைக்கும் உண்மைகள்தான், இப்போது ஆறுமுகசாமி ஆணையத்தின் மூலம் வெளிப்பட்டி ருக்கிறது.
ஆனாலும், அந்த ஆணையத்தின் அறிக்கையிலும் நமக்கு ஆதங்கம் உண்டு. காரணம், ஜெ.வின் உடலில் கால்கள் இல்லை என்று நாம் சொன்னோம்.
அதையொட்டி மக்களும் அந்த சந்தேகத்தைக் கிளப்பினர். ஆனால் தன்னிடம் சொல்லப்பட்ட சாட்சியங்களை மட்டுமே வைத்துக்கொண்டு, ஜெ.வின் உடலில் கால்கள் இருந்தன என்ற முடிவுக்கு அந்த ஆணையம் வந்திருக்கிறது. குறைந்தபட்சம் ஜெ.வின் ஏறத்தாழ ஐந்தரை அடி உயர உடல், எப்படி மூன்றரை அடிக்கும் குறைவாகச் சுருங்கியது என்பது பற்றி, அது விளக்கவில்லை.
ஜெ,வின் கால்கள் பற்றிய ரகசியங்கள், சசிகலாவுக்கும், ஸ்அப்பல்லோவுக்கும், ஜெ. உடலுக்கு எம்பாம் (ங்ம்க்ஷஹப்ம்) செய்த டாக்டர் சுதா சேஷை யனுக்குமே வெளிச்சம். கால்கள் விசயத்தில் ஆணை யத்தையே தள்ளாட வைத்திருக்கும் கில்லாடிகள் இவர்கள். எனினும், அப்பல்லோவில் வைத்து, ஜெ. கொல்லப்பட்டார் என்ற உண்மையை, ஆறுமுகசாமி ஆணையம் அம்பலப்படுத்தியதே, ஒருவித நிம்மதியை எல்லோருக்கும் ஏற்படுத்துகிறது.
ஆறுமுகசாமி ஆணையத்தின் 608 பக்க அறிக்கையில் உள்ள சில பகீரூட் டும் குறிப்புகளையும் நாம் கவனிக்க வேண்டும்.
* பெங்களூர் ஹோட்டலில் சசிகலாவின் (ஆர் 1) குடும்ப உறுப் பினர்கள், முதல்வர் பதவியைக் குறி வைத்து சதித்திட்டம் தீட்டியதாக, டெகல்கா பத்திரிகையில் ஏற்கனவே செய்தி வெளியானதாக சசிகலா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில்.... சிகிச்சை தொடர்பாக யாருக்கும் தெரியப்படுத்தாமலும் ரகசியம் காத்தும், அவரின் சிகிச்சைக்காக வெளி மருத்துவர்களை அழைத்தது போல், காட்சிப்படுத்தி... மறைந்த முதல்வரின் இதயத்தில் இருந்த சிறிய வெஜிடேசனுக்குக்கூட, அந்த வெளி மருத்துவர்கள் பரிந்துரைத்த ஆஞ்சியோ அறுவை சிகிச்சையோ, இயர்லி வால்வ் அறுவை சிகிச்சையையோ செய்யவிடாமல் இம்முறை சசிகலா மிகவும் எச்சரிக்கையுடன் மருத்துவமனையில் செயல்பட்டதாக ஆணையம் சந்தேகிக்கிறது.
* அவரது (ஜெ.) உடல்நிலையைச் சரிசெய்ய வேண்டும் என்ற உண்மையான எண்ணம் அவர்களுக்கு இருந்திருந்தால், அவர்கள் ஒரு தெராசிக் அறுவை சிகிச்சை நிபுணரை நியமித்து, அதற்கேற்ப சிகிச்சையைத் தொடர்ந்திருப்பர். (527-528)
*முதல்வர் ஜெ.’ மருத்துவமனையில் இருந்த 75 நாட்களில் முதல் நான்கு நாட்கள் மட்டும் தனது நோய்களுக்குத் திறம்பட சிகிச்சை பெற்றார். நீரிழிவு, ரத்தக்கொதிப்பு போன்ற பிரச்சினைகளையும் எதிர்கொண்டார். இருப்பினும் அவர் மருத்துவமனையில் இருந்த மீதமுள்ள நாட்களில், இதயம், நுரையீரல் வீக்கத்திற்காக சிகிச்சைகளைப் பெற்றிருக்க வேண்டும். மறைந்த முதல்வருக்கு இருந்த இந்த மோசமான பல உபாதைகள் குறித்த உண்மை, யாருக்கும் தெரிவிக்கப்படாதது ஏனென்பது திகைப்பூட்டுவதாக உள்ளது. (516-517 )
* இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள புகழ்பெற்ற மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனைக்குப் பின்னர், மிகப் பொருத்தமான சிகிச்சை முறைக்குத் தேவையான, அனைத்து முயற்சிகளும் சசிகலாவால் (ஆர்.1) செய்யப்பட்டிருக்க வேண்டும். வியக்கத்தக்க வகையில் மற்ற அனைவரையும் புறந்தள்ளி, மறைந்த முதல்வரின் நலனுக்கான பொறுப்பை ஏற்க முன்வந்தவர்கள் (சசி தரப்பினர்), குறிப்பாக, மறைந்த முதல்வர் மருத்துவமனையிலிருந்தபோது, அவரைச் சுற்றியிருந்த, அவரால் சலுகை பெற்ற சிலரே, அவருடைய விதியை வழி நடத்தினர்.
அவரது சரியான உடல் நிலை மற்றும் சிகிச்சையின் போக்கைப் பற்றிய நம்பத்தக்க, உண்மையான நிகழ்வுகளை வெளிப்படுத்தாததால், சிகிச்சையின் முழு விவரமும் வெளிப்படைத் தன்மையின்றி இரகசியமாக்கப்பட்டது. (பக்கம் 515-516)
* நோயாளி சுயநினைவுடன் இருந்தபோது அவரது உடல் நலப் பிரச்சினைகள் மற்றும் செய்யப்படவேண்டிய சிகிச்சை முறைகள் குறித்து, அவருக்குத் தெரிவிக்கப்படவில்லை. (516)
* நோயாளி இருளில் வைக்கப்பட்டது ஏன் என்பதும், பொறுப்பு முதல்வர், அமைச்சரவை சகாக்கள் மற்றும் அதிகாரிகள் ஏன் (சசிகலா வால்) நம்பத்தகுந்தவர்களாகக் கருதப்படவில்லை என்பதும் புரியாத புதிராக உள்ளது. (516)
*இவ்விவகாரம் அப்பல்லோ தரப்பு (ஆர் 2) மற்றும் சசிகலா (ஆர் 1) ஆகியோர் தங்கள் நோக்கத்திற்கேட்ப செயல்புரிவதற் கான திட்டத்தின் ஒரு பகுதியே என்றுதான் கருதத் தோன்று கிறது. இதன் திட்டங்கள் அனைத் தும் அறிவார்ந்த வகையில் திட்டமிடப்பட்டு வடிவமைக் கப்பட்டுள்ளது. (தெளிவாக சதித்திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது என்று உணர்த்துகிறது அறிக்கை) (516)
*டாக்டர் ரிச்சர்ட் பீலே, ஜெ’வைக் கவனிக்காவிட்டால், மாரடைப்பு அல்லது பக்க வாதம் ஏற்படலாம் என்று குறிப்பிட்டிருந்தார். ( 512 )
*ஜெ’வின் பின்னடைவுக்கு வழிவகுத்த இதய நோய்க்கு சிகிச்சையளிக்கத் தவறிவிட்ட னர். ( 511)
* எய்ம்ஸ் மருத்துவர்கள், ஐந்துமுறை வருகை தந்தபோதும், அவர்கள் ஜெ.வுக்கு எந்தவித சிகிச்சையையும் மருந்தையும் பரிந்துரைக்கவில்லை. (பக்கம் 512 )
* அமெரிக்கா, பாம்பே, யு.கே.வைச் சேர்ந்த மருத்துவர்கள், இதய அறுவை சிகிச்சை அவசியம் தேவை என்று கருத்து தெரிவித்தது மனதில் கொள்ளப்படவேண்டும். அவ் வாறிருக்க, எப்படி இந்த நோக்கம் புறக்கணிக்கப்பட்டது என்பது மருத்துவமனையால் விளக்கப்படவில்லை.
ஆஞ்சியோகிராம் செய்வதற்கு அடிப்படைத் தேவையான இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு, உரிய நேரத்தில் சரியாக இருந்தும், நோயறிதல் செயல் முறையான ஆஞ்ஜியோகிராம்கூட ஏன் செய்யப்பட வில்லை என்பதும், இதய சிகிச்சை சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படாமல் தவிர்க்கப்பட்டது ஏனென்றும் விளக்கப்படவில்லை.
இருப்பினும் சசிகலா, மருத்துவமனை நோயாளி யைப் பார்க்கவோ அல்லது அவரிடமிருந்து கருத்தைப் பெறவோ, அறுவை சிகிச்சை நிபுணரைக்கூட அனுமதிக்கவில்லை.
*மருத்துவமனையில் காவிரி நதி நீர்ப்பிரச்சினை குறித்து அதிகாரிகளுடன் ஜெயலலிதா விவாதித்ததாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் கலைஞர், ’மருத்துவமனையில் என்ன நடந்தது என்பது குறித்த புகைப்படம் வெளியிடப்பட வேண்டும். அப்போதுதான் ஜெ.வின் உடல்நிலை குறித்த மர்மம் தெளிவாகும் என்றும் அவர் கூறினார். ஆனால் அது புறக் கணிக்கப்பட்டது. செல்வி ஜெயலலிதாவுடன் பல்வேறு கருத்துவேறுபாடுகள் கொண்டிருந்தாலும், அவர் விரைவில் குணமடைய வாழ்த்தினார். ஆனால் எல்லாம் துரதிர்ஷ்டவசமாகவே நடந்தேறி யது. (529 )
முடிவாக-
*ஜெவுக்கு நடந்த அத்தனை கொடுமைகளையும் பற்றிச் சொல்லும் ஆணையம், இதில் சசிகலாவைக் (ஆர் 1) குற்றம் சாட்டுவதைத் தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலவில்லை’ என்று அடித்துச் சொல்கிறது. (பக்கம் 558). அதோடு, * ஜெ.வின் மரணத்தைப் பொறுத்தவரை ‘வி.கே.சசிகலா, கே. எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதார அமைச்சர் டாக்டர் சி.விஜய பாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக ஆணையம் முடிவுசெய்து, விசாரணைக்குப் பரிந்துரைக்கிறது. (பக்கம் 558)
-இப்படி ஜெ.வின் மரணத் துக்குக் காரணமாக முக்கிய குற்றவாளிகள் யார் யார் என்று அம்பலப்படுத்திய இந்த அறிக்கை, ஜெ.வின் நிலை குறித்து அவருக்கு நெருக்கமானவர்களே கவலைப்படவில்லை என்பதை கீழ்க்கண்ட செய்தி மூலம் உணர்த்துகிறது.
* ஓ.பன்னீர் செல்வம், ‘மறைந்த முதல்வரின் மறைவுக்குப் பின்னர், சிறிதும் காலத்தினைத் தாழ்த்தாமல், தமிழக முதல்வர் பதவிக்குத் தன்னைப் பொருத்திக்கொள்ளத் தயார் நிலையிலிருந்து, மறைந்த முதல்வரின் வாரிசாகத் தன்னை நிலை நிறுத்திக்கொண்டது, தற்செயலான நிகழ்வாகத் தோன்றவில்லை. அதிகார மையத்தின் சூழ்ச்சிகளால் புதிதாகக் கிடைத்த பதவி அவருக்கு நீண்டகாலம் நீடிக்கவில்லை.
-என்றும் அந்த அறிக்கை அழுத்தமாகக் குறிப்பிட்டிருக்கிறது.
அதேபோல், ஜெயலலிதா டிசம்பர் 5 ஆம் தேதி இறந்ததாக அறிவிக்கப்பட்டது பொய் என்றும், அதற்கு முதல்நாளான டிசம்பர் 4 ஆம் தேதி பிற்பகல் 3.50 மணிக்கே அவர் இறந்துவிட்டார் என்றும், ஜெ’ இறந்த செய்தியை ஒருநாள் முழுக்க யாருக்கும் தெரியாமல் மறைத்துவைத்துவிட்டார்கள் என்றும் ஆணைய அறிக்கை குற்றம்சாட்டுகிறது. அதுபோல், ஜெ. மோசமாகப் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாக இருந்தபோதே, அப்பல்லோ அதிபரான பிரதாப் ரெட்டி, அவர் உடல் நலம் தேறிவிட்டதாகவும், அவர் எப்போது விரும்பினாலும் டிஸ்சார்ஜ் ஆகலாம் என்றும் அடிக்கடி செய்தியாளர்களிடம் சொன்னதைப் பொய் என்று சொன்ன ஆணையம், அப்பல்லோவின் நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறது.
*
இந்த ஆறுமுகசாமி ஆணையம் அறிவித்திருக்கும் இந்த சுரீர் உண்மைகள், ஒட்டுமொத்த உலகத் தமிழர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எதிர் முகாமில் உள்ளவர்களும்கூட, அந்த அம்மாவுக்கு இப்படியொரு நிலை வந்திருக்கக்கூடாது என்று கலங்குகிறார்கள்.
நமக்குள்ள ஆச்சரியமும் வேதனையும் என்னவென்றால், ஜெ’வால் பதவி சுகத்தையும், பல்வேறு வசதி வாய்ப்புகளையும் பெற்று, அவரால் கோடிகளில் புரண்டுகொண்டிருக்கிற ஜெ.வின் முன்னாள் அமைச்சரவை சகாக்களும், அவர் ஆளாக்கிய அரசியல் புள்ளிகளும், இது பற்றியெல்லாம் கவலைப்படாமல், யாருக்கோ எதுவோ நடந்தது போல, இது பற்றி வாயையே திறக்காமல், வழக்கம்போல் இருக்கிறார்கள். தானாடாவிட்டாலும் தசை ஆடும் என்கிற பழமொழி அவர்களிடம் பழுதாகிப் போய் பரிதாபமாக நிற்கிறது.
அவர்களின் விசுவாசமும் நன்றி உணர்வும் தூக்கில் தொங்குகின்றன. அவர்கள்தான் இப்படி என்றால், எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து அந்தக் கட்சியில் இருக்கும் சீனியர் ஆட்கள்கூட, ஜெ’வுக்கு நிகழ்த்தப்பட்ட அத்தனை அப்பல்லோ கொடூரங்களையும் எளிதாகச் செரித்துக் கொண்டிருக்கிறார்கள், ஜெ.வின் கொடூர மரணத்துக்குக் காரணமான எவர் மீதும் எவருக்கும் கோபம் ஏற்படவில்லை? அவர்களின் சட்டையைப் பிடித்து, அம்மாவைக் கொன்றுவிட்டீர்களே... உருப்படுவீர்களா? என்று கேட்கும் எண்ணம்கூட எவருக்கும் வரவில்லை.
ஜெ. இருந்ததையும் அவர் அப்பல்லோவில் வதைபட்டதையும் அவர் அநியாயமாகக் கொல்லப் பட்டதையும் ஒரு கெட்ட கனவாக நினைத்து, அவரவரும், தங்கள் வேலைகளைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
பாவம் இவர்களை எல்லாம் நம்பி, அம்மா...
அம்மா... என்று இவர்கள் அழைத்ததை நம்பி.... தங்கத் தாரகையே, பொன்மனச் செல்வியே!.... இவர்கள் புகழாரம் சூட்டியதை நம்பி.... தனக்குப் பின் பெரும் கூட்டம் இருக்கிறது என்ற நினைப்பில்.... கடைசிவரை ஜெயலலிதா ஒருவித கர்வம் கொண்டிருந்தாரே, அதை நினைத்தால், அவர் மீது நமக்கே பரிதாபம் வருகிறது.
நிறைவாக நாம் சொல்லவருவது என்னவென்றால், ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையை சட்டப் பேரவையில் தாக்கல் செய்திருக்கும் தமிழக அரசு, ஜெ. விவகாரத்தில், கொலைக் குற்றவாளிகள் என்று ஆணையத்தால் அடையாளம் காட்டப் பட்டவர்கள் மீது, உடனடியாக நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். கொலையாளிகள் என்று தெரிந்தும் அவர்களை மக்கள் முன் சுதந்தரமாக நடமாட அனுமதிக்கக்கூடாது.
எதிர்பார்ப்போடு,
நக்கீரன்கோபால்