""வைகறை யாமம் துயில் எழுந்து, தான் செய்யும்
நல் அறமும் ஒண் பொருளும் சிந்தித்து, வாய்வதில்
தந்தையும் தாயும் தொழுது எழுக!' என்பதே
முந்தையோர் கண்ட முறை''
என்பது ஆசாரக்கோவைப் பாடல். அதாவது அதிகாலை துயில் எழுந்து, தான் அன்று என்னென்ன அறங்கள் செய்யப்போகிறோம். அதற்கு எப்படிப் பொருள் சேர்க்கப் போகிறோம் என்று சிந்தித்துப் பின் தந்தை தாய் இருவரையும் வணங்கித் தொடங்குவது நம் முந்தையோர் கண்ட முறை என்று ஆசாரக்கோவை யின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார் கூறுகிறார். நம் தமிழ் இலக்கியங்களிலும் திருப்பள்ளியெழுச்சி என்று துறை இலக்கிய வகை இருக்கின்றது. திருப்பாவை,
திருவெம்பாவை ஆகிய இரண்டும் அதிகாலை எழுவதையும் இறைவனை எழுப்புவதையும் பாடு பொருளாகக் கொண்டவை. வடவர்கள் துயில் எழுப்பு வதனை சுப்ரபாதம் என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.
திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமி என்றால் நம் காதுகளில் ஏழுமலையானின் வெங்கடேச சுப்ரபாதம் தாமாக ஒலி−க்கக் காண்கிறோம்.
"அதிகாலையில் சேவலை எழுப்பி
அதைக் கூவென்று சொல்லுகிறேன்'
""புத்தம் புது காலை, பொன்னிற வேளை''
என்று திரைப்படப் பாடல்களும் அதிகாலையின் அனுராகத்தைப் பாடத் தவறவில்லை. இவையெல்லாம் கதிரவன் வருமுன் விழித்தெழும் சீரிய ஒழுக்கத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலையில் செய்யும் வழிபாட்டுக்கும் வேள்விகளுக் கும் முழுத்தம் (நேரம் காலம்) பார்க்க வேண்டிய அவசிய மில்லை என்பர். இவையெல்லாம் அதிகாலையின் சிறப்பை உணர்த்தும்.
அதிகாலை நிகழ்த்தும் அற்புதங்கள் பல. உதித்து உயர்ந்தெழும் சூரியன், மலர்களை மட்டுமா மலரச் செய்கிறான். வாழ்க்கையில் உயர விரும்பும் பலரையும் மலரச் செயயும் பொழுது அல்லவா அது. ஆண்கள் எப்படி உறங்கி விழித்தாலும் குடும்பத்தின் குத்து விளக்காக ஒளிவீசும் பெண்கள் அதிகாலையில் எழுவது நம் முந்தையோர் கடைப்பிடித்த வழக்கமாக இருந்து வந்தது. இப்போது இதெல்லாம் கேள்விக் குறியாகிப் போய்விட்டது.
தொழில் யுகமாக மாறிய இக்காலத்தில் பகல் இரவு எது என்று பிரித்தறியாத அளவுக்கு வேலைகள் எல்லா நேரங்களிலும் செய்யப்பெறுகின்றன. சூரியன் ஓய்வு எடுக்கும் நேரத்தில் அவனது பணி மின்சாரத்திடம் மாற்றி விடப்படுகிறது. சூரியனுக்குப் பகல் ஷிப்ட், மின்சாரத்திற்கு இரவு ஷிப்ட் என்று ஆகிப்போனதால் மனிதனும் ஷிப்ட் டியூட்டி பார்க்க வேண்டியுள்ளது. முக்கியமாகக் கணினியில் பணிபுரிவோர் (ஐ.டி) அங்கிங்கெனாதபடி பரவி விட்ட இக்காலத்தில் பகல் இரவு வேறுபாடு இல்லாது போயிற்று என்று கூறினால் சாலப்பொருந்தும். இப்போதெல்லாம் ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானமாக இரவில் பணிக்கு (நைட் ஷிப்ட்) செல்லத் தயங்குவதில்லை. தயங்கவும் முடியாது. அயல்நாட்டுக்காரனிடம் பணி புரியும் திட்டப்பணிகளாக (பிராஜக்ட்) பணிகள் இருக்கின்றன. இங்கு இரவு, அயல்நாட்டிலோ அந்நேரம் பகல். சம்பளம் கொடுப்பவனின் நேரம்தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஆகவே, அவனது பகலாகிய நம் இரவில் ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் பணியாற்றித்தான் ஆகவேண்டும். இத்துறையில் இருப்போரில் பலருக்கு இந்த ஷிப்ட் முறையும் கைகொடுப்பதில்லை. திட்டப்பணி (ப்ராஜக்ட்) முடியும் வரை மூன்று நான்கு ஐந்து... நாள்கள் என்று போய் ஒரு வாரம்கூட உறங்காமல் வேலை செய்யும் பணியாளர்களையும் பார்க்க முடிகிறது. இவர்களுக்கு உரிய நேரத்தில் உறக்கம் இல்லை. அதனா
""வைகறை யாமம் துயில் எழுந்து, தான் செய்யும்
நல் அறமும் ஒண் பொருளும் சிந்தித்து, வாய்வதில்
தந்தையும் தாயும் தொழுது எழுக!' என்பதே
முந்தையோர் கண்ட முறை''
என்பது ஆசாரக்கோவைப் பாடல். அதாவது அதிகாலை துயில் எழுந்து, தான் அன்று என்னென்ன அறங்கள் செய்யப்போகிறோம். அதற்கு எப்படிப் பொருள் சேர்க்கப் போகிறோம் என்று சிந்தித்துப் பின் தந்தை தாய் இருவரையும் வணங்கித் தொடங்குவது நம் முந்தையோர் கண்ட முறை என்று ஆசாரக்கோவை யின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார் கூறுகிறார். நம் தமிழ் இலக்கியங்களிலும் திருப்பள்ளியெழுச்சி என்று துறை இலக்கிய வகை இருக்கின்றது. திருப்பாவை,
திருவெம்பாவை ஆகிய இரண்டும் அதிகாலை எழுவதையும் இறைவனை எழுப்புவதையும் பாடு பொருளாகக் கொண்டவை. வடவர்கள் துயில் எழுப்பு வதனை சுப்ரபாதம் என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.
திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமி என்றால் நம் காதுகளில் ஏழுமலையானின் வெங்கடேச சுப்ரபாதம் தாமாக ஒலி−க்கக் காண்கிறோம்.
"அதிகாலையில் சேவலை எழுப்பி
அதைக் கூவென்று சொல்லுகிறேன்'
""புத்தம் புது காலை, பொன்னிற வேளை''
என்று திரைப்படப் பாடல்களும் அதிகாலையின் அனுராகத்தைப் பாடத் தவறவில்லை. இவையெல்லாம் கதிரவன் வருமுன் விழித்தெழும் சீரிய ஒழுக்கத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலையில் செய்யும் வழிபாட்டுக்கும் வேள்விகளுக் கும் முழுத்தம் (நேரம் காலம்) பார்க்க வேண்டிய அவசிய மில்லை என்பர். இவையெல்லாம் அதிகாலையின் சிறப்பை உணர்த்தும்.
அதிகாலை நிகழ்த்தும் அற்புதங்கள் பல. உதித்து உயர்ந்தெழும் சூரியன், மலர்களை மட்டுமா மலரச் செய்கிறான். வாழ்க்கையில் உயர விரும்பும் பலரையும் மலரச் செயயும் பொழுது அல்லவா அது. ஆண்கள் எப்படி உறங்கி விழித்தாலும் குடும்பத்தின் குத்து விளக்காக ஒளிவீசும் பெண்கள் அதிகாலையில் எழுவது நம் முந்தையோர் கடைப்பிடித்த வழக்கமாக இருந்து வந்தது. இப்போது இதெல்லாம் கேள்விக் குறியாகிப் போய்விட்டது.
தொழில் யுகமாக மாறிய இக்காலத்தில் பகல் இரவு எது என்று பிரித்தறியாத அளவுக்கு வேலைகள் எல்லா நேரங்களிலும் செய்யப்பெறுகின்றன. சூரியன் ஓய்வு எடுக்கும் நேரத்தில் அவனது பணி மின்சாரத்திடம் மாற்றி விடப்படுகிறது. சூரியனுக்குப் பகல் ஷிப்ட், மின்சாரத்திற்கு இரவு ஷிப்ட் என்று ஆகிப்போனதால் மனிதனும் ஷிப்ட் டியூட்டி பார்க்க வேண்டியுள்ளது. முக்கியமாகக் கணினியில் பணிபுரிவோர் (ஐ.டி) அங்கிங்கெனாதபடி பரவி விட்ட இக்காலத்தில் பகல் இரவு வேறுபாடு இல்லாது போயிற்று என்று கூறினால் சாலப்பொருந்தும். இப்போதெல்லாம் ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானமாக இரவில் பணிக்கு (நைட் ஷிப்ட்) செல்லத் தயங்குவதில்லை. தயங்கவும் முடியாது. அயல்நாட்டுக்காரனிடம் பணி புரியும் திட்டப்பணிகளாக (பிராஜக்ட்) பணிகள் இருக்கின்றன. இங்கு இரவு, அயல்நாட்டிலோ அந்நேரம் பகல். சம்பளம் கொடுப்பவனின் நேரம்தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஆகவே, அவனது பகலாகிய நம் இரவில் ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் பணியாற்றித்தான் ஆகவேண்டும். இத்துறையில் இருப்போரில் பலருக்கு இந்த ஷிப்ட் முறையும் கைகொடுப்பதில்லை. திட்டப்பணி (ப்ராஜக்ட்) முடியும் வரை மூன்று நான்கு ஐந்து... நாள்கள் என்று போய் ஒரு வாரம்கூட உறங்காமல் வேலை செய்யும் பணியாளர்களையும் பார்க்க முடிகிறது. இவர்களுக்கு உரிய நேரத்தில் உறக்கம் இல்லை. அதனால்தான் இளம் வயதிலேயே ஊதிப் பருத்து நோயாளிகளாக மாறிவிடுகின்றனர் என்று ஆய்வு கூறுகிறது. காலத்தின் கட்டாயத்திற்கு மனிதன் ஒன்றும் செய்ய இயலாது.
கடமைக்காகக் கண் விழிக்கும் இவர்களை விட்டு விடுவோம். மற்ற இளைஞர் முதல் முதியவர்கள்வரை என்ன செய்கிறார்கள். ஃபேஸ்புக், டிவிட்டர் என்று கணினியின் முன் அமர்ந்து இரவைக் கழித்துப் பின்னிர வில் உறங்கச் செல்கின்றனர். கதிரவனின் கோபக் கதிர் வீச்சில் துயில் எழுகின்றனர்.
இரவில் முன்கூட்டியே தூங்கச் சென்று அதிகாலை யில் கண் விழிப்பது உடல் நலத்துக்கு நல்லது. அவர்கள் செல்வாக்கு மற்றும் அதிக ஆயுளுடன் திகழ்வார்கள் என 300 ஆண்டுகளுக்கு முன்னரே பெஞ்சமின் பிராங்க்ளின் என்ற அறிஞர் தெரிவித்து இருந்தார். அது முற்றிலும் உண்மை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனை நம் முன்னோர்கள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறிந்த விந்தையை எப்படிக் கூறுவது. அவர்களின் உடலி−யல் நுட்பத்தை எப்படிப் பாராட்டுவது. நாம் நம் கையில் இருக்கும் தீபத்தைத் தூக்கி எறிந்துவிட்டு மின்மினிப் பூச்சிகளைத் துரத்திப் பிடித்துக்கொண்டிருக்கிறோம்.
இந்த ஆராய்ச்சியை இப்போது நடத்திய இங்கிலாந் தைப் பாராட்டுகிறோம். இருக்கட்டும். ஆய்வு என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்.
இங்கிலாந்தில் உள்ள ரோம்ப்டன் பல்கலைக்கழக நிபுணர்கள் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதற்காக சுமார் 1100 ஆண்கள் மற்றும் பெண்களைத் தேர்ந்தெடுத்தனர். அவர்களில் அதிகாலையிலேயே எழுபவர்கள் ஒல்லி−யாகவும், நல்ல உடல் நலத்துடனும் இருந்தனர். இதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் காணப் பட்டனர். அதிக வேலையைச் சோர்வின்றிச் செய்தனர்.
அதே நேரத்தில் ஆந்தை போன்று இரவு முழுவதும் கண் விழித்துவிட்டு மிகவும் தாமதமாகப் படுக்கையை விட்டு எழுபவர்கள் உடல் நலத்தையும், மகிழ்ச்சியை யும் தொலைத்தவர்களாக இருந்தனர் என்பதைக் கண்டறிந்து ஆய்வறிக்கையாக ஒப்படைத்தனர். ஆகவே, அதிகாலையிலேயே எழுந்து வழக்கமான தங்கள் பணிகளைத் தொடங்குபவர்கள் உடல் நலத்துடன் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிகாலை எழுபவர்கள், முற்பகல் வரை தூங்குபவர் இந்த இரு பிரிவினரின் வேறுபாட்டைக் குடும்ப விளக்கிலும் இருண்ட வீட்டிலும் பாரதிதாசன் அழகாகப் படம் பிடிப்பார்.
இளங்கதிர் கிழக்கில் இன்னும் எழவில்லை, இரவு போர்த்த இருள் நீங்கவில்லை.
ஆயினும் கேள்வியால் அகலும் மடமைபோல், நள்ளிரவு மெதுவாய் நடந்துகொண்டிருந்தது.
தொட்டி நீலத்தில் சுண்ணாம்பு கலந்த கலப்பெண் இருள்தன் கட்டுக் குலைந்தது.
புலர்ந்திடப் போகும் பொழுது, கட்டி−ல் மலர்ந்தன அந்த மங்கையின் விழிகள்.
பாரதிதாசனின் இந்த வருணனையைப் பார்த்த பின்னுமா பத்து மணிவரை உறக்கம். கேள்வியால்தான் மடமை அகலும். ஆனால், நம்மவர்கள் சொல்வதை நாம் கேட்பது இல்லை என்பதை முடிவாகக் கொண்டிருக்கிறோம். ஓர் அயல்நாட்டுக்காரர் கூறினால் உடனே கேட்பது என்பது பெருவழக்காகியுள்ளது.
பொழுது புலர்ந்தது யாம்செய்த தவத்தால்
புன்மை இருட்கணம் போயின யாவும்
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி
தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்குநின்
தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்துநிற் கின்றோம்
விழிதுயில் கின்றனை இன்னும்எம் தாயே
வியப்பிது காண்! பள்ளியெழுந்தரு ளாயே!
என்று உறங்கிக்கொண்டிருந்த பாரதத்தைத் தன் கவிதைக் கரங்களால் தட்டி எழுப்பி விழிக்கச் சொன் னான் அந்த எழுச்சிக்கவி பாரதி. அவன் எழுப்பியது பாரத மணித்திரு நாட்டின் சோம்பேறிகளாகிய நம்மைத்தாம். இத்தனை எழுச்சிக் கவிதைகளை யாத்த அவன் ஒரு தாலாட்டுப் பாடலைக்கூட பாட வில்லை. அதற்குப் பாரதத்தின் குழந்தைகளாகிய நாம் சோம்பேறிகளாக உறக்கத்திலேயே காலத்தை வீணடித்து விடுவோமோ எனனும் எண்ணமே காரணமாக இருந்துள்ளது.
கருநிற மேகத்தின் ஆழத்தில் இருந்து நெட்டி முறித்துக்கொண்டு மெல்ல மெல்ல எழுந்து வரும் அந்தக் கதிர்க் குழந்தையின் உதயம், அழகான அமைதிச் சூழல், பறவைகளின் கொஞ்சும் மொழி, அவை பறக்கும் இனிய காட்சி என்று இவற்றை இரசிக்கப் பழகிக் கொண்டால் அதிகாலை அனுபவம் அழகான அனுபவமாக இருக்கும்.
நேற்றுவரை நித்திரையில் ஆழ்ந்திருந்தோம். இனியாவது அதிகாலையின் அதிசயங்களை அனுபவிக்கலாம். காலைக் கதிரவனைக் கரம் கூப்பி வரவேற்கலாம். மடமையில் இருந்து விடுதலை பெற அதிகாலையிலேயே விழித்தெழுவோம். இரவில் சீக்கிரம் படுத்து அதிகாலையில் எழுந்து புத்துணர்ச்சியுடன் வெற்றிப் பாதையில் பயணிப்போம்...
குழந்தைகள் பால் வேறுபாடு, இன வேறுபாடு இல்லாமல் தெருவில் ஓடி ஆடிக்கொண்டு இருக்கும்போது பார்க்கும் நடுத்தர வயதுள்ள எவருக்கும் ஓர் ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது.
""மகிழ்ச்சியால் துள்ளிக்கிட்டு இருந்தோம்; கவலைன்னா என்னான்னு தெரியாம திரிஞ்சோம்; ஏன்தான் பெரியவங்களா ஆனோமோ தெரியல? இளமைப் பருவத்திலேயே இருந்திருக்கக் கூடாதா?'' என்று ஏங்காதவர்கள் இருக்க முடியுமா? புலம்பாதவர்கள்தாம் இருக்க முடியுமா?
இளமைப் பருவம் இனிக்கும் பருவம். அந்தப் பருவம் மட்டுமல்ல. அந்தப் பருவத்து நினைவுகளுக்கும் இனிமை இருக்கும். வயது கூடக் கூட வாழ்க்கையில் கசப்புச் சுவை கூடிக்கொண்டே போகின்றது. ஆனால், இளமைப் பருவத்து நினைவு களை அசைபோடும்போது மட்டும் வயது கூடக்கூட இனிப்புச் சுவையும் கூடிக்கொண்டே போகின்றது. குழந்தைப் பருவத்தில் குறும்புத்தனங்கள் செய்த எவரும் இதனை மறுக்க மாட்டார்கள்.
ஒவ்வொரு பெரியவருக்குள்ளும் ஒரு குழந்தை உலவிக்கொண்டிருக்கும் என்பார்கள். பத்துக் குழந்தைகள் உலாவிக்கொண்டு இருக்கும் பெரிய மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அவர்களையெல்லாம்கூட நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டா. அதேபோல ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் ஒரு பெரியவர் உலவிக்கொண்டு இருப்பாரோ என்னும் வினா இக்காலத்துக் குழந்தைகளைக் காணும்போது எழுகிறது. அதிலும் சின்னத்திரைகள் நடத்தும் போட்டி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் குழந்தைகளுக்குள் பல பெரிய மனிதர்கள் உலவிக்கொண்டு இருப்பார்களோ? என்னும் ஐயம் பலருக்கும் எழுகிறது.
திருஞான சம்பந்தர்கூட உமையம்மையின் ஞானப்பால் அருந்திய பின்தான் "தோடுடைய செவியன்' என்று பாடத் தொடங்கினார். குமர குருபரர் மீனாட்சியம்மை நாவில் வேலால் எழுதியதனால் தான் கவி பாடினார். கவி காளிதாஸ் காளியின் அருள் பெற்றதனால்தான் கவிதை படைத்தார். ஆனால், இந்தச் சின்னத்திரைக் குழந்தைகள் மட்டும் எப்படி? தங்கள் பெற்றோரின் நாவுக்குப் பயந்தே ஒரு வேளை ஞானம் பெற்றுவிட்டனரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
சின்னத்திரைப் போட்டிகளுக்கும் சின்ன குழந்தைகளின் பெற்றோர்க்கும் இடையேயான அரசியல் ஒரு புரியாத புதிராக உள்ளது. எப்படி எப்படியோ தூண்டில் போட்டு இழுத்து விடுகின்றன பெற்றோர்களைச் சின்னத்திரைகள். விளைவு பெற்றோரின் நிறைவேறாத ஆசைகளைச் சுமக்கும் சுமைதாங்கிகள் ஆகிவிடுகின்றன குழந்தைகள்.
பத்து, பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுக் காய்ச்சல் ஒரு புறம் என்றால் மறுபுறம் சுமார் ஐம்பது, அறுபது விழுக்காட்டினர் சின்னத்திரைக் காய்ச்சலி−ல் சிக்கித் தவிக்கின்றனர். சின்னத்திரையைப் பார்த்தது சுவைத்ததெல்லாம் ஒரு காலம். இப்போதெல்லாம் சின்னத்திரைப் போட்டிகளில் பங்கேற்றுப் பரிசு பெற்றே ஆகவேண்டும் என்று நினைக்கின்றனர்.
அதற்கான அழைப்புகளும் சின்னத்திரையில் சுவர்ச்சிகரமாக மின்ன−டுகின்றன. பெற்றோர்க்கோ ஒரு புறம் மகனோ... மகளோ புகழ் ஏணியில் பயணிக்கத் தொடங்குகிறார். மற்றொரு புறம் ஒவ்வொரு போட்டியும் கோடிகள், வீடு, வாகனங்கள் என்று சொத்துகளைச் சேர்த்துக் கொடுக்கின்றன. பிறிதொரு புறம் எதிர்காலத்தில் குழந்தைகள் அத் துறையில் ஒளிர வாய்ப்பாக அமைந்துவிடுகிறது. விடுவார்களா பெற்றோர்கள். தங்களுக்குக் கிட்டாத வாய்ப்பு தங்கள் குழந்தைகளுக்குக் கிடைக்கிறதே. தங்கள் கனவை நிறைவேற்றவே தங்களால் பெற்று வளர்க்கப்பட்ட அடிமைகளாகப் பார்க்கின்றனர் குழந்தைகளை.
பாவம் அந்தச் சின்னஞ்சிறு மொட்டுகள், பெற்றோரின் கனவுகளைத் தங்கள் தோள்களில் சுமந்துகொண்டு தங்கள் இளமையையும் குறும்புகளையும் அறவே மறந்து, போட்டிக்காகக் கடுமையாக உழைத்து ஒரு பக்கமாக வளர்ச்சி அடையும் இக்காலக் குழந்தைகளைப் பார்க்கும்போது வியப்பு ஏற்படுவதில்லை. பரிதாபமே விஞ்சுகிறது. இதனை வளர்ச்சி என்று எப்படிக் கூறமுடியும். வீக்கம் என்று வேண்டுமானால் கூற முடியும். வளரும் குழந்தைகளின் உடல் மன வளர்ச்சியை மெல்ல மெல்ல அரித்துக்கொண்டிருக்கும் கறையான்களாக மாறிக்கொண்டு இருக்கின்றன சின்னத்திரைப் போட்டி நிகழ்ச்சிகள்.
துள்ளித் திரியும் பருவத்தில் அந்தப் பிஞ்சுகளைப் பயிற்சி பயிற்சி என்று இப்படி வதைத்தால் அந்தக் குழந்தைகளுக்குக் கழிந்து போன பிள்ளைப் பருவம், விளையாட்டுப் பருவம் மீண்டு வருமா? மீண்டும் வருமா? அது மட்டுமல்ல. குழந்தைகள் பிஞ்சிலே பழுத்துவிடாதா?
நம் முன்னோர்கள் குழந்தைகளின் முன்பு எதனை பேசலாமோ அதனை மட்டும் பேசினார்கள். பெரிய பெரிய செய்திகளை (விசயங்களை) குழந்தைகளின் முன் பேச மாட்டார்கள். இப்போதோ சின்ன சின்ன குழந்தைகள் பெரிய பெரிய விஷயங்களைப் பேசுகின்றன.
""கிருஷ்ணனுக்குப் பெண்களை ரொம்பப் பிடிக்கும். பெண்கள் மேல் அவ்வளவு ப்ரீத்தி. ஒரு யாமத்தில் முப்பது பெண்களைப் பார்த்தான். சாமக்கோழியை இடுப்பில் கட்டிக்கொண்டான். ஒவ்வொரு பெண்ணைப் பார்த்ததும் இடுப்பில் இருந்த சாமக்கோழியை ஒரு கிள்ளு கிள்ளுவான். அது கூவியதும், விடிஞ்சுடுத்து, நாழியாயிடுத்து, நா வரேன்னு சொல்−விட்டுக் கிளம்பிவிடுவான். இப்படியே இரண்டரை மணி நேரத்தில் முப்பது பெண்களைப் பார்த்துவிட்டு வீடு திரும்பினான். வீடு திரும்பி முன்னால் எப்படிப் படுத்திருந்தானோ அப்படியே வந்து நல்ல பிள்ளை மாதிரி படுத்துக் கொண்டான்'' என்று மழலை மாறாத சுமார் எட்டு வயது முதியவன் பேசுகிறான். இதனை எண்பது வயதுள்ள பாலகர்கள் ரசிக்கிறார்கள். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காண நேர்ந்தது இந்த விபரீதத்தை.
இப்படி உரையாற்றும் குழந்தையின் குணத்தில் எந்த மாறுபாடும் வராதா? அவன் கிருஷ்ணனாக மாறி கோபிகா ஸ்திரிகளைத் தேட மாட்டான் என்று என்ன நிச்சயம்? வளரும் குழந்தைச் சமுதாயத்தைச் சீரழிக்கும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் அவசியமா என்பதைப் பெற்றோர்கள் முதலி−ல் எண்ணிப் பார்த்தல் வேண்டும்.
இஃது ஒருபுறம் என்றால் போட்டிகளில் தேர்வு பெறாத குழந்தைகள் அத்தனை பேரின் முன்பு அழுவது காணச் சகிக்காத காட்சி. அதனைவிடவும் கொடுமை யான சகிக்க முடியாத காட்சி, அக்குழந்தையுடன் சேர்ந்து பெற்றோரும் அழுவது.
நாற்பது ஐம்பதுகளுக்குமேல் எல்லாருக்கும் பாலைவனச் சோலையாக இருப்பது. மனத்தைக் குளிரச் செய்வது, சோர்ந்த இதயத்திற்குச் சுறுசுறுப்பைக் கொடுப்பது இளமைப் பருவத்தில் தாம் செய்த மொறு மொறு குறும்புகளை அசைபோடுவதுதான். இந்தக் குழந்தைகள் தங்கள் நாற்பது ஐம்பதுகளில் எவற்றை அசைபோடுவார்கள். அசைபோட வெற்றுக் கஞ்சிகள் மட்டும்தான் இருக்கும். மொறுமொறுவென்று ஒன்றும் இருக்காதே...?
தன் குழந்தை கண்ணம்மா விளையாடிக்கொண்டு இருக்கின்றாள். அவளைக் காண்கிறான் பாரதி. அவனுக்குள் அவளை அள்ளி அணைக்க ஆவல் எழுகிறது. தழுவலாம் என்று நினைக்கும்போது குழந்தை உளவியல் அவனைத் தடுக்கிறது. விளையாடிக் கொண்டிருக்கும் மகளைத் தொந்தரவு செய்யாமல், அவளின் விளையாட்டுக் கலையாமல் அவளைத் தொடாமல் தூர இருந்தே தழுவி மகிழ்கிறான்.
""ஆடித் திரிதல் கண்டால் உன்னைப் போய் ஆவி தழுவுதடி'' என்கிறான். ஆடித் திரியும் போது தழுவினால் அதுகூட அந்தக் குழந்தையின் மகிழ்ச்சியைக் கெடுத்தது போல ஆகும் என்பதனால் தள்ளி இருந்து தன்னுடைய ஆவி அக்குழந்தையைத் தழுவுகிறது என்பான். குழந்தைகளின் விளையாட்டுப் பருவம் அவ்வளவு மகிழ்ச்சியானது. முக்கியமானது. அதனால் தான் பாரதி ஓடி விளையாடுவதை, ஆடித்திரிவதை அதிகமாகப் பாடுகிறான்.
""ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
அதுதாண்டா வளர்ச்சி- உன்னை
ஆசையோடு ஈன்றவளுக்கு
அதுவே நீ தரும் மகிழ்ச்சி''
என்பார் குழந்தைகளுக்காகவே பாட்டுக் கோட்டை கட்டிய பட்டுக்கோட்டையார்.
இந்தப் பாடலைக் கேட்ட மக்கள் எப்படிச் சிந்தித்தார்கள் என்று தெரியவில்லை. பட்டுக்கோட்டை குழந்தைகளிடம் குறையாத அக்கறை கொண்டவன். குழந்தைகளின் உடலும் உள்ளமும் சீராக வளர்ச்சி அடைதல் வேண்டும் என்பதைச் சொல்லவே இப்பாடலைப் பாடினான். அப்படிப் பாடியவன் முத−ல், ஆள் வளர வேண்டும் என்கிறான். சுவர் இருந்தால்தானே சித்திரம். பிறகு அதற்கேற்றாற்போல் அறிவு வளர வேண்டும் என்று சிந்தித்தவன் அவன்.
இரண்டில் ஒன்றை விட்டு ஒன்று வளர்ந்தால் அதனை வளர்ச்சி என்று கூற முடியாது. ஆள் மட்டும் வளர்ந்து அறிவு வளராது இருப்பின் அது ஆடிசம் (மனநோய்) என்னும் நோயின் அறிகுறி. நோயின் அறிகுறி. சின்ன குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சி மிகவும் முக்கியம். அதனால்தான் முத−ல் "ஆள் வளர வேண்டும்' என்று உடல் வளர்ச்சியைப் பற்றிப் பாடியிருக்கிறான் பட்டுக்கோட்டை.
ஆனால், சின்னத்திரைப் போட்டிகளில் பங்கு பெறும் குழந்தைகளின் அம்மாக்கள் தங்கள் குழந்தையின் உடல் வளர்ச்சியைப் பொருட்படுத்துகி றார்களா என்பது வினாவாக உள்ளது. அவர்களின் திறமை வளர்ச்சியையே பெரிதாக நினைக்கின்றனர் என்பது கண்கூடு. குழந்தைகளைப் பற்றி எப்படி எப்படியெல்லாமோ கனவு காண்கின்றனர். அதில் தவறு இல்லை. ஆனால், அதற்காக அணு அணுவாக அக்குழந்தைகளை வதைப்பது தவறு.
பெற்றோர்களின் கனவைத் தம் கண்களில் காணும் குழந்தைகளுக்குச் சொந்தக் கனவுகளும் இருக்கும் என்பதனை மறந்துவிடக்கூடாது பெற்றோர்கள். அவற்றை என்ன என்று அறிந்து அதன்படியும் குழந்தைகளை வளர்க்க முற்படுவது அறிவுடைமை. அப்போதுதான் பிற்காலத்தில் குழந்தைகளுக்குப் பழைய நினைவுகள் கூடாத வண்ணம் இருக்கும். குழந்தை மனம் கெடாத வண்ணம் இருக்கும்.