தன்னுயிர் ஈந்து தாய்மொழி காத்த தீரமிகு தியாக வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் தமிழ்நாட்டு இளைஞர்கள். அவர்களின் தியாகம் தான், ஆதிக்கம் செலுத்த வந்த இந்தியிடமிருந்து அன்னைத் தமிழுக்கு அரணாக இருக்கிறது. அரை நூற்றாண்டுக்கு முன் தமிழகம் கண்ட மொழிப்போர்க்களத்தின் விளைவுகளை அண்டை மாநிலங்கள் இப்போதுதான் மெல்ல மெல்ல உணர்ந்து கொள்ளத் தொடங்கியுள்ளன.
1938ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் நடைபெற்ற மாகாணத் தேர்தலில் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கட்சி, மூதறிஞர் இராஜாஜி தலைமையில் ஆட்சி அமைத்தது.
அப்போது பள்ளிகளில் இந்திப் பாடம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டதையடுத்து, தமிழறிஞர்கள் போராட்டக் களம் கண்டனர். இராஜாஜியின் அரசியலை நன்கறிந்தவர் அவரது ‘அன்பான எதிரியான தந்தை பெரியார். அவரது சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றன. பெரியார் உள்பட பலரும் சிறைப்பட்டனர். அறிஞர் அண்ணா முதன்முதலில் சிறைக் களம் கண்டதும் அந்தப் போராட்டக் களத்தில்தான்.
திருச்சியிலிருந்து சென்னை நோக்கி பட்டுக்கோட்டை அழகிரி தலைமையில் தமிழர் நெடும்பயணம் நடைபெற்றது. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உள்பட பலரும் அதில் பங்கேற்றனர். இந்தித் திணிப்பை எதிர்த்து நடந்த அந்தப் போராட்டத்தில் பெண்களும் கைக்குழந்தைகளுடன் சிறை சென்ற வரலாறு அதிகம் பேசப்படுவதில்லை.
அந்த சிறைக்களத்தில்தான் உடல்நலன் பாதிக்கப் பட

அந்த சிறைக்களத்தில்தான் உடல்நலன் பாதிக்கப் பட்ட நடராசன், தாலமுத்து என இரண்டு இளைஞர்களிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் விடுவிக்கிறோம் என அரசாங்கம் தெரிவித்த போதும், தமிழ் மானம் காக்கவும் தன்மானம் நிலைக்கவும் மன்னிப்பு கேட்க மறுத்து நடராச னும் தாளமுத்துவும் உயிர் நீத்தனர். சென்னை எழும்பூரில் உள்ள பெருநகர வளர்ச்சிக் குழும கட்டடத்திற்கு அந்தத் தியாகிகளின் பெயர்தான் சூட்டப்பட்டுள்ளது.
1965ஆம் ஆண்டு, மத்தியில் ஆட்சி செய்த லால்பகதூர் சாஸ்திரி தலைமையிலான அரசு, இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி (அலுவல்) மொழி என்ற நிலையினை எடுக்க முற்பட்டது தமிழகத்தில் மீண்டும் இந்தி எதிர்ப்பு போராட் டம் வலுப்பெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே, ஓர் இளைஞர் தன் உடலில் எரிஎண்ணெய் ஊற்றிக் கொண்டு, தீவைத்து, ‘தமிழ் வாழ்க.. இந்தி ஒழிக’ என உரக்க முழங்கிய படி கருகி வீழ்ந்தார். அவர்தான், கீழப்பழுவூர் சின்னசாமி. அவரைத் தொடர்ந்து பல இளைஞர்கள் தீக்குளித்தனர். நஞ்சு அருந்தி உயிர் விட்டோரும் உண்டு. அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர் சிவகங்கை ராசேந்திரன் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்து, இன்றும் அந்தப் பல்கலைக்கழக வளாகத்தில் சிலையாக நிமிர்ந்து நிற்கிறார். தமிழகமெங்கும் பரவிய மொழி உணர்வுத் தீயை அணைக்க துணை ராணுவம் வரவழைக்கப் பட்டும் நிலைமை கட்டுக் கடங்கவில்லை.
இந்தியுடன் ஆங்கில மும் இந்தியாவின் இணை ஆட்சி (அலுவல்) மொழி யாக நீடிக்கும் என உறுதியளித்து செயல்படுத்தியது இந்திய ஒன்றிய அரசு. அதன் பின்னரே போராட்டம் சற்று தணிந்தது. தேர்தல் களத்தில் ஆட்சி மாற்றமும் நிகழ்ந்தது. முதலமைச்ச ரான பேரறிஞர் அண்ணா, தமிழகத்தில் இந்திக்கு இடமில்லை எனும் வகையில் இருமொழிக் கொள்கைக் கான சட்டத்தைக் கொண்டு வந்து, தமிழுக்கு அரண் அமைத்தார். தமிழகத்தின் தனித்துவம் மெல்ல மெல்ல வடபுலத்துக்குப் புரியத் தொடங்கியது. 2004ல் கலைஞரின் ஆதரவைப் பெற்றிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இந்தியாவின் செம்மொழியாகத் தமிழை அறிவித்தது.
தமிழுக்கு கிடைத்த செம்மொழித் தகுதி, மற்ற மொழி பேசும் மாநிலங்களுக்கும் தங்கள் தாய்மொழி மீதான உணர்வைக் கூடுதலாக்கியது. கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த அறிஞர்கள் தங்கள் மொழிக்கும் செம்மொழித் தகுதி கிடைக்க வேண்டும் என ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி வெற்றி பெற்றோரும் உண்டு. மொழிக்கான சிறப்புத் தகுதியைவிட, பன்முகப் பண்பாட்டுத் தன்மை கொண்ட இந்தியாவின் தேசிய இனங்களின் மொழிகளை ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக்குவதே கூடுதல் தேவையாக இருக்கிறது.
இந்திக்கும் சமஸ்கிருதத்திற்கும் மத்திய ஆட்சி யாளர்கள் தருகிற முக்கியத்துவமும் நிதி ஒதுக்கீடும் இந்தியாவில் உள்ள பிற மொழி பேசும் மக்களை இரண்டாந்தர குடிமக்களாக்கி விடுகின்றன. அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் உள்ளன. இந்த அட்ட வணையில் இடம்பிடிப்பதற்காக மேலும் சில மொழிகள் காத்திருக்கின்றன. அத்தனை மொழிகளையும் இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழியாக ஏற்றுக்கொள்வதில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி பெற்ற இக்காலத்தில் ஒன்றிய அரசுக்கு நடைமுறைத் தடைகள் ஏதுமில்லை. மனத்தடைதான் அதனை செயல்படுத்த மறுக்கிறது.
இதனை உணர்ந்தே மராத்தி, வங்காளம் என இந்தி அல்லாத மாநிலத்தில் உள்ள மொழிஅறிஞர்களும் பொதுமக்களும் தங்கள் மொழிகளுக்கு முன்னுரிமை கோருகின்றனர். இந்தி பேசும் மாநிலங்களில்கூட ஆங்காங்கே உள்ள வட்டார மொழிகளை இந்தி தனது வாய்க்குள் கவ்வி, வயிற்றுக்குள் தள்ளி, செரிமானம் செய்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், அந்த மொழிகளைக் காப்பதற்கான குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து தாய்த்தமிழைக் காத்திட நடந்த மொழிப்போரில் உயிர் ஈந்த தியாகிகளுக்கு ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் நாளினை வீரவணக்க நாளாகக் கடைப்பிடிக்கும் வழக்கம் உள்ளது. அதன் தாக்கத்தை உணர்ந்த அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகாவைச் சேர்ந்த இளைய தலைமுறையினர் ‘திராவிட மொழிகள் நாள்’ எனக் கடைப்பிடிக்கும் புதிய வழக்கத்தைத் தொடங்கியுள்ளனர். அதற்கான முன்னோட்டமாக கடந்த ஜனவரி 22ஆம் நாள் சென்னை பெரியார் திடலில் அறிமுக நிகழ்வு நடைபெற்றது.
ரஊ உதஆயஒஉஒஆசந (நாம் திராவிடர்), ரஊ ஆதஊ நஞமபஐ ஒசஉஒஆசந(நாங்கள் தென்னிந்தியர்கள்) ஆகிய அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த தோழர்கள் அருள்பிரகாசம், ஆர்.எஸ்.கதிர், சூர்யா உள்ளிட்டோரும், கர்நாடகா வைச் சேர்ந்த அபிகவுடா, தெலுங்கு மொழி சார்பில் திராவிட சுரேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஜனவரி 25 அன்று ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் 150 மாவட்டங்களில் ‘திராவிட மொழிகள் நாள்’ கடைப்பிடிக்கப் பட்டுள்ளது.
எந்த மொழியில் இந்நாள் எந்தப் பெயரில் கடைப் பிடிக்கப்பட்டாலும் அங்கே தமிழ் மொழிக்காக உயிர் நீத்தோரின் வீர வரலாற்றை முன்னிறுத்துவதே சிறப்பு சேர்க்கும். மொழி நாள் என்ற அளவில் கடைப் பிடித்தால், காலப்போக்கில் வரலாறு மறந்து போகும்.
சடங்கு-சம்பிரதாயங்கள் நுழைந்து விடும். மொழிப் போர்க்களத்தில் உயிர்க் கொடை வழஙகிய தமிழர் களின் தியாக வாழ்வை பிற மொழிகளிலும் கொண்டு செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயமாகியுள்ளது.
திராவிட மொழிகள் என்பவை தென்னிந்தியாவில் மட்டுமல்ல, மத்திய இந்தியா-வடகிழக்கு இந்தியாவில் வாழும் பழங்குடிகள் பேசும் மொழிகள் பலவும் திராவிட மொழிகள் என ஆய்வாளர்கள் நிறுவியுள்ளனர். திராவிட மொழிக் குடும்பத்தைத் தவிர்த்து பிற மொழிக் குடும்பங்களைச் சேர்ந்த தேசிய இனங்களும் இந்தியாவில் உள்ளன. அனைத்து மொழிகளையும் காப்பதுதான் பன்முகத்தன்மை கொண்ட இந்திய ஒன்றியத்தின் அடையாளமாக விளங்கும்.
அதனை உலகத் தாய்மொழிகள் நாளான பிப்ரவரி 21 அன்று அதற்கான முன்னெடுப்புகளும் விழிப்புணர்வும் பெருகிட வேண்டும்.