நடப்பு இல்லாத ஆவணங்களைப் பாதுகாக்கும் இடமாகவே ஆவணக் காப்பகத்தை இதுவரை குறிப்பிட்டு வந்திருக்கிறோம். இன்றைய செய்திகள் வருகின்ற தினசரி தாள்களோ, இன்றைய பதிவுகளோ ஆவணம் என்று குறிப்பிடப்படுவதில்லை. டல்ஹௌசி காலத்துப் பத்திரங்களும், ராபர்ட் கிளைவின் கையெழுத்தும், வெல்லெஸ்- பிரபுவின் செய்திகளின் அடையாளப் பதிவுகளும் ஆவணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. சமூக, பொருளாதார, அரசியல் பற்றிய முதன்மையான வைப்பகமாக ஆவணக் காப்பகம் திகழ்கிறது.
முதன்மையான தகவல்களை ஆவணக் காப்பகமே பாதுகாக்கிறது. சென்னையில் எம்டன் கப்பலானது பீரங்கிக் குண்டுகளால் சேதமடைந்ததற்கான ஆவணமும் ஆவணக் காப்பகத்தில் பாதுகாப்பாக உள்ளது. தற்பொழுது ஒரிசாவில் காப்பக நீதித்துறையை ஏற்படுத்துவதற்காக 38 கோடி நிதியை ஒதுக்கியிருக்கிறார்கள். நமது ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தில் 350 ஆண்டுகளுக்கு முன்பு பாரசீக மொழியில் எழுதப்பட்ட மெட்ராஸ் ஜனாதிபதியின் தீர்ப்பு, பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இப்படியான பழைய பத்திரங்களெல்லாம் இங்கு பத்திரமாக வைக்கப்பட்டிருப்பதென்பது அதிசயமான ஒன்று.
கடந்த காலத்தின் சமூக, பொருளாதார, அரசியல் பற்றிய முதன்மையான தகவல்களை, நிகழ்காலத்துடன் இணைக்கும் கண்ணிகளின் இருப்பிடமாகவும், நம் நாட்டின் பண்பாட்டின் தொடர்ச்சியில் பங்களிக்கும் பெட்டகமாகவும் ஆவணக் காப்பகம் திகழ்ந்து வருகிறது. மனிதர்களைப் போலவே ஆவணங்களும் பன்முகத்தன்மை வாய்ந்தவை. ஓலைச்சுவடிகள், துண்டுப் பிரசுரங்கள், செய்தித்தாள்கள், நூல்கள், இசைத்தட்டுகள், காணொ-களென பலதரப்பட்டவை முதன்மை ஆவணங்களாக நம்பகத் தன்மையின் தூண்களாக இருக்கின்றன. அகநானூறு என்பதை முதன்மை ஆவணமாகக் கொண்டால், அதற்காக எழுதப்பட்ட உரையை இரண்டாவது ஆவணமாகக் கொள்ள வேண்டும்.
நேரடி சாட்சியங்கள், கடந்த காலம் பற்றிய வடிகட்டாத கணநேரக் கண்ணோட்டம் (ன்ய்ச்ண்ப்ற்ங்ழ்ங்க் ஞ்ப்ண்ம்ல்ள்ங்ள் ண்ய்ற்ர் ற்ட்ங் ல்ஹள்ற்) ஆகியவை ஆவணங்களாக இருக்கின்றன. இன்றைய காலத்தில் முகநூ-ல் அவதார் என்கிற செய-யின் மூலமாக நமது உருவங்களை வடிகட்டி (ச்ண்ப்ற்ங்ழ்ங்க்) கிரேக்கர்கள் போலவும், இமாலயர்கள் போலவும், லத்தீனைச் சேர்ந்தவர்கள் போலவும் மாற்றிக்காட்டுகிறார்கள். திரைப்படத்தில் வடிவேலுவை 23-ஆம் பு-கேசியாகக் காட்ட வேண்டுமென்றால் உட-ல் ஆறு கட்டுகள் கொண்டதாக மாற்றுகிறார்கள். இதி-ருந்து “வடிகட்டாத” என்ற சொல்-ன் பொருளை நாம் புரிந்துகொள்ளலாம். மன்னராக ஒருவர் வென்று வந்த பிறகு அவருக்கென்று ஒரு பாரம்பரியத்தைக் கொடுப்பார்கள். இன்றைய நாட்களில் சிலருக்கு பணம் வந்த பிறகு, பல குழுக்களில் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கோ,
நடப்பு இல்லாத ஆவணங்களைப் பாதுகாக்கும் இடமாகவே ஆவணக் காப்பகத்தை இதுவரை குறிப்பிட்டு வந்திருக்கிறோம். இன்றைய செய்திகள் வருகின்ற தினசரி தாள்களோ, இன்றைய பதிவுகளோ ஆவணம் என்று குறிப்பிடப்படுவதில்லை. டல்ஹௌசி காலத்துப் பத்திரங்களும், ராபர்ட் கிளைவின் கையெழுத்தும், வெல்லெஸ்- பிரபுவின் செய்திகளின் அடையாளப் பதிவுகளும் ஆவணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. சமூக, பொருளாதார, அரசியல் பற்றிய முதன்மையான வைப்பகமாக ஆவணக் காப்பகம் திகழ்கிறது.
முதன்மையான தகவல்களை ஆவணக் காப்பகமே பாதுகாக்கிறது. சென்னையில் எம்டன் கப்பலானது பீரங்கிக் குண்டுகளால் சேதமடைந்ததற்கான ஆவணமும் ஆவணக் காப்பகத்தில் பாதுகாப்பாக உள்ளது. தற்பொழுது ஒரிசாவில் காப்பக நீதித்துறையை ஏற்படுத்துவதற்காக 38 கோடி நிதியை ஒதுக்கியிருக்கிறார்கள். நமது ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தில் 350 ஆண்டுகளுக்கு முன்பு பாரசீக மொழியில் எழுதப்பட்ட மெட்ராஸ் ஜனாதிபதியின் தீர்ப்பு, பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இப்படியான பழைய பத்திரங்களெல்லாம் இங்கு பத்திரமாக வைக்கப்பட்டிருப்பதென்பது அதிசயமான ஒன்று.
கடந்த காலத்தின் சமூக, பொருளாதார, அரசியல் பற்றிய முதன்மையான தகவல்களை, நிகழ்காலத்துடன் இணைக்கும் கண்ணிகளின் இருப்பிடமாகவும், நம் நாட்டின் பண்பாட்டின் தொடர்ச்சியில் பங்களிக்கும் பெட்டகமாகவும் ஆவணக் காப்பகம் திகழ்ந்து வருகிறது. மனிதர்களைப் போலவே ஆவணங்களும் பன்முகத்தன்மை வாய்ந்தவை. ஓலைச்சுவடிகள், துண்டுப் பிரசுரங்கள், செய்தித்தாள்கள், நூல்கள், இசைத்தட்டுகள், காணொ-களென பலதரப்பட்டவை முதன்மை ஆவணங்களாக நம்பகத் தன்மையின் தூண்களாக இருக்கின்றன. அகநானூறு என்பதை முதன்மை ஆவணமாகக் கொண்டால், அதற்காக எழுதப்பட்ட உரையை இரண்டாவது ஆவணமாகக் கொள்ள வேண்டும்.
நேரடி சாட்சியங்கள், கடந்த காலம் பற்றிய வடிகட்டாத கணநேரக் கண்ணோட்டம் (ன்ய்ச்ண்ப்ற்ங்ழ்ங்க் ஞ்ப்ண்ம்ல்ள்ங்ள் ண்ய்ற்ர் ற்ட்ங் ல்ஹள்ற்) ஆகியவை ஆவணங்களாக இருக்கின்றன. இன்றைய காலத்தில் முகநூ-ல் அவதார் என்கிற செய-யின் மூலமாக நமது உருவங்களை வடிகட்டி (ச்ண்ப்ற்ங்ழ்ங்க்) கிரேக்கர்கள் போலவும், இமாலயர்கள் போலவும், லத்தீனைச் சேர்ந்தவர்கள் போலவும் மாற்றிக்காட்டுகிறார்கள். திரைப்படத்தில் வடிவேலுவை 23-ஆம் பு-கேசியாகக் காட்ட வேண்டுமென்றால் உட-ல் ஆறு கட்டுகள் கொண்டதாக மாற்றுகிறார்கள். இதி-ருந்து “வடிகட்டாத” என்ற சொல்-ன் பொருளை நாம் புரிந்துகொள்ளலாம். மன்னராக ஒருவர் வென்று வந்த பிறகு அவருக்கென்று ஒரு பாரம்பரியத்தைக் கொடுப்பார்கள். இன்றைய நாட்களில் சிலருக்கு பணம் வந்த பிறகு, பல குழுக்களில் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கோ, கோவில் அறங் காவலராகவோ, கல்லூரியை ஆரம்பித்து கல்வித் தந்தையாக மாறவோயென, அடுத்தக் கட்ட உயர்வுக் குச் செல்ல வேண்டுமென்றால் அவர்களுக்கு புகழ் வேண்டும். அதைப்போல புகழை விரும்பிய அன்றைய மன்னர்களைப் போற்றிப் பாடி, அவரிட மிருந்து பெறுகின்ற பொற்காசுகளுக்காக உயர்த்திப் பாடுகின்ற புலவர்களை நான் வாடகைப் புலவர்கள் என்றுதான் குறிப்பிடுகிறேன். அவர்கள் பாடுவது மெய்கீர்த்திகளல்ல.
மக்களால் எழுதப்பட்ட பொது ஆவணங்கள் தான் பல நேரங்களில் குரலற்றவர்களின் குரலாக இருக்கின்றன. மொரிஷியஸ் தீவுகளுக்கும், ஃபிஜி தீவுகளுக்கும், தென்னாப்பிரிக்காவிற்கும் அடிமை களாகக் கடத்தப்பட்ட வர்களது மெய்கீர்த்தி யானது, ஐரோப்பாவிலோ, பிரான்சிலோ, ஜெர்மனியிலோ, பிரிட்டிஷ் நூலகத்திலோவென ஏதோவொரு இடத் தில் ஆவணமாக உறங்கிக் கொண்டி ருக்கலாம். அதனைக் கண்டடைந்தால் அம் மக்களது ரத்தமும் வியர்வையும் நமக்குத் தெரிந்துவிடும். அடிமைகளாக, ஒப்பந்தக் கூ-களாக புலம்பெயர்ந்த நம் தமிழர்களின் வர லாற்றை வேறு எப்படி மீள் கட்டமைக்க முடியும்?
ஆவணங்கள் குறித்த தெளிவான கோட்பாடு இக்காலத்தின் தேவையாக இருக்கிறது. மரபு சார்ந்த ஆவணங்கள், ஓவியங்கள், நுண்கலைகள் ஆகியவையும் நமது மரபின் காப்பகங்கள்தான். காப்பக நெறிமுறைகளின் அறக்கோட்பாடு (ஹழ்ஸ்ரீட்ண்ஸ்ஹப் ங்ற்ட்ண்ஸ்ரீள்) என்பது பதிவுகளின் உண்மைத் தன்மையை கையாள்வதாகும். செய்திகளை, அறிவுப்புலத்தை செழுமைப்படுத்தும் வல்லமை மிக்க தரவுகளை ஜனநாயகப்படுத்த வேண்டியது இன்றைய கட்டாயத் தேவையாக இருக்கிறது?
காப்பகங்களில் காத்து வரும் ஆவணங்களை அனைவருக்கும் எளிதில் கிடைக்கும்படி செய்ய வேண்டும். இதற்குப் பெயர் சலுகையல்ல; உரிமை என்று பொருளாகும்.
பல தகவல்களை நிறைய பேர் அடைகாத்துக் கொண்டு இருப்பார்கள். நாட்டு வைத்தியர், தான் பயன்படுத்தும் மருந்தின் பெயரை எவருக்கும் சொல்லாமல், “பெயர்சொல்லா மருந்து” என்றே பெயர் வைத்திருப்பார். இறக்கும் தருவாயில் தனது மகனின் காதில் சொல்-விட்டுச் செல்வார்கள். சிலர் சொல்லாமலேயே இறந்து விடுவார்கள். பழைய நூல்களைக் காத்துக்கொண்டிருக்கும் நூலகங்களும் ஒரு ஆவணக் காப்பகம்தான். வன்முறையாலும், தீக்கிரையாக்கப்பட்டும் அழிக்கப்பட்ட நூலகங் களில் கிபி 4-ஆம் நூற்றாண்டின் அலெக்சாண்டர் நூலகம், கிபி 12-ஆம் நூற்றாண்டின் நாளந்தா நூலகம், 1814-ஆம் ஆண்டில் அழிக்கப்பட்ட அமெரிக்கா காங்கிரஸ் நூலகம், 1933-ஆம் ஆண்டில் நாசம் செய்யப்பட்ட நாஜிக்கள் நூலகம், 1984-ஆம் ஆண்டில் சீரழிக்கப்பட்ட சீக்கிய நூலகம் 2015-ஆம் ஆண்டில் ஒழிக்கப்பட்ட ரஷ்ய நூலகம் என இவையாவும் அடையாளங்களில்லாமல் அழிந்துவிட்டன.
இந்தியாவில் இருக்கின்ற பெயரைக் குறிப்பிட விரும்பாத சில ஆவணக் காப்பகங்களின் அவலமாக அங்குள்ள புத்தகங்கள், பத்திரங்கள் போன்றவை மூட்டைகளாகக் கட்டப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மழை நேரத்தில் நூலகங் களில் காக்க முடியாத ஆவணங்கள் இருந்தன. தற்பொழுது பலவற்றையும் மின்னாக்கம் செய்து வருகிறார்கள்.
பழந்தமிழர்கள் ஆவணப்படுத்தியதை தொல்-யல் துறையின் அகழ்வாராய்ச்சியில் கண்டடைந்திருக்கிறோம். சிந்துவெளியின் விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்று என்பதை நான் பல முறை கூறிவருகிறேன். சிந்துவெளியின் எழுத்துக்களை அதன் சொற்றொடர்களை படிக்கமுடியவில்லை என்கிறோம். ஆனால் சிந்துவெளியை ஒத்த கீறல்கள் இந்தியாவில்தான் 90% கிடைக்கின்றன. இந்தியாவை முழுமையாக எடுத்துக்கொண்டால் தென்னகத்தில்தான் அவை 90% அதிகமாகக் கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் கொடுமணல், அழகன்குளம், கீழடி போன்ற இடங்களில் ஏறு தழுவுதல், கோழிச்சண்டை, பானைக்கீறல்கள், செப்புத் தகடுகள், கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், நூல்கள் போன்ற ஆயிரக்கணக்கான அடையாளங் களை நாம் காண்கிறோம்.
தொல்காப்பிய வரியான, “மெய்யின் இயற்கை புள்ளியது இயங்கல்” என்பதில் மெய்யெழுத்து என்றால் புள்ளி வைக்கச் சொல்கிறார். கீழடியிலும், சிவகளையிலும் கிடைத்த பானை ஓடுகளில் ஆதவன் என்ற பெயரையும், திருப்பரங்குன்றம் கல்வெட்டுகளில் அந்துவன் என்ற பெயரையும் நாம் காண்கிறோம். கடந்த மூன்று ஆண்டுகளில் 12-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இப்பெயர்களை இட்டிருக்கிறேன். சேரலாதன், நல்லாதன் போன்றவையெல்லாம் கொங்கு சம்பந்தப்பட்ட இடங்களில் அழைக்கப்படுபவை. நமது இந்தியாவில் தமிழ்நாட்டு மக்களைப்போல ஆவணப்படுத்திய முயற்சி வேறு எங்குமேயில்லை. 30 மாநிலத் தேர்தல்களையும், இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களையும் நடத்தியபோது, உத்திரபிரதேச மாவட்டத்தின் 70 மாவட்டங்களுக்கும், மத்திய பிரதேசத்திலும், பீகாரிலும், வடகிழக்குப் பகுதிகளிலுமுள்ள அத்தனை மாவட்டங்களுக்கும் நான் விமான ஊர்தியிலும் ஹெ-காப்டரிலும் சென்றிருக்கிறேன்.
ஆயிரம் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஓலைச்சுவடிகளி-ருந்து சங்க இலக்கியங்களை படியெடுத்தவன் என்ன நினைத்து அதனைச் செய்திருப்பான்?! அச்சு இயந்திரங்கள், ஆவணக் காப்பகங்கள் உருவாகும்; இணையதளங்கள் கொண்ட வசதிகள் வரும்; நூல்கள் மின்னாக்கம் பெறும் என்றெல்லாம் நினைத்து அதனை செய்திருப்பார்களா?! யார் பாராட்ட வேண்டு மென்று எண்ணியிருப்பார்கள்?! தொடர்ந்து காலம் காலமாக நம் மொழியையும் இலக்கியத்தையும் தோளில் சுமந்துகொண்டு வந்திருக்கிறார்கள். திருக்குறள் நம் கைகளில் மக்கள் மூலமாகவே வந்து சேர்ந்திருக்கிறது. அதனைக் கொண்டாடிய ஒரு மன்னரை கூட தமிழகம் பார்க்கவில்லை. இடைக்காலத்தில் வந்த மன்னர்களெல்லாம் ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் கொண்டாட கிராமங்களில் சாவடிகள் அமைத்து பணம் கொடுத்தார்கள். திருக்குறளை சொல்-க் கொடுக்க ஒருவர் இருந்ததில்லை. குமரிமுனையில் வள்ளுவர் சிலை இல்லாத இடத்தை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. வள்ளுவர் கோட்டமும், பேருந்துகளில் வள்ளுவர் படமும், தொடர்ந்து நாம் ஆவணப்படுத்தி வந்ததில், இக்காலத்தின் வெற்றியாக இருக்கிறது.
கடந்த 500 ஆண்டுகளாக தென் ஆசியாவில் அச்சு இயந்திரம் வந்த பிறகு, அச்சில் ஏற்றப்பட்ட நூல்களில் முதல் 300 ஆண்டுகள் 40 சதவீதத்திற்கும் மேல் தமிழ் நூல்கள்தான் இடம்பெற்றிருக்கின்றன. இன்று இணையத்தில் இணையற்ற மொழியாக தமிழும் இடம்பெற்றிருக்கிறது. தமிழ் ஆவணங்களை மின்னுருவாக்கம் செய்வதில் தமிழ்நாட்டு நிறுவனங்கள் முதல் சர்வதேசப் பல்கலைக்கழகங்கள் வரை பங்கு பெறுகின்றன. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், தமிழ் இணையக் கல்வி கழகம், மத்திய ஆராய்ச்சி நூலகம் (ஸ்ரீங்ய்ற்ழ்ங் ச்ர்ழ் ழ்ங்ள்ங்ஹழ்ஸ்ரீட் ப்ண்க்ஷழ்ஹழ்ஹ்), தெற்கு ஆசிய திறந்த காப்பகம் (நர்ன்ற்ட் ஆள்ண்ஹ ர்ல்ங்ய் ஹழ்ஸ்ரீட்ண்ஸ்ங்) போன்ற நிறுவனங்களெல்லாம் தொடர்ந்து மேற்கொண்டு இப்பணியை முன்னெடுக் கின்றன. எண்ணிமப்படுத்துவதில் முன்னோடி களாக நியூயார்க் பொது நூலகம், பஞ்சாப் டிஜிட்டல் நூலகம், நூலக அறக்கட்டளை போன்றவை இடம்பெறுகின்றன.
டிராகன் சின்ட்ரோம் (க்ழ்ஹஞ்ர்ய் ள்ஹ்ய்க்ழ்ர்ம்ங்) எனும் வியாதியைப் பற்றியும் பேச வேண்டும்.
அகழாய்வுப் பணி செய்பவர்கள் அதனை யாவருக் கும் காட்டவேண்டும்; நாம் யாவரும் அதனைப் பார்க்க வேண்டும். அதனைக் கொடுக்காதவர் களும் இருப்பார்கள். தொல்-யல் துறையில் தோண்டுபவர்கள்தான் எழுதவும் வேண்டுமென்பதற் கும் நீதிமன்றத்தில் வழக்காடி வென்றிருக்கிறோம். அவர்கள் எழுதிக் கொடுத்தாலும் பிறகு பதிப்பு வரவேயில்லை. ஆராய்ச்சி மாணவர்களுக்கு தவணை முறையில் சொல்-க் கொடுக்கின்ற பேராசிரியர்களும் இருக்கிறார்கள். இப்படி எவருக்கும் கொடுக்காத வியாதியைத்தான் டிராகன் சின்ட்ரோம் என்கிறோம். டெல்-யில் உரையாட-ல் ஈடுபட்டிருக்கும் பொழுதுகூட, இடைப்பட்ட ஒரு மணி நேரத்தில் நூலகத்திற்குச் சென்று, எனக்கு வேண்டிய நூல்களின் பெயர் களை நூலகரிடம் கொடுத்துவிட்டு வந்திருக்கி றேன். அவரிடம் சில பணங்களும் கொடுத்து வைத்திருப்பேன். நூலகத்திலேயே வாசிப்பதற்கு எனக்கு நேரம் இருக்காது. தேடிக் கண்டடைந்து அவற்றை நகலெடுத்து எனக்கு அனுப்பிவிடுவார்கள். இப்படியானவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் தான் செல்வந்தர்கள். கொடுப்பதன் இன்பத்தை அறிந்தவர்கள்.
ஆவணக் காப்பகங்களில் பணிபுரிபவர்களின் மனப்பாங்கு நேர்மறையாக இருக்கவேண்டும்.
அவர்களுடையது மிகவும் பொறுப்புள்ள பணி யாகும். நூலகங்களுக்கும் ஆவணக் காப்பகங் களுக்கும் இடையே வர்க்கப் போராளிகள் போல எந்தவித தொடர்பும் இருப்பதில்லை. கன்னிமாரா நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், ஆவணக் காப்பகங்கள் என யாவரும் தனித் தனி தீவாக இயங்குகிறார்கள். ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் மட்டும் 5 லட்சம் ஆவணங்கள் இருக்கின்றன. அதன் அறக்கட்டளை உறுப்பி னராக நானும் இருப்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இதுவரை 30 லட்சம் பக்கங்களை எண்ணிமப்படுத்தியிருக்கிறோம். தமிழிலுள்ள அதிக நூற்பட்டியலை ஓசிஎன்சி (ஞஈசஈ) இணையத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறோம்.
கிராமபோன் ரெக்கார்டுகள், திருமணப் பத்திரிகை கள், நாடகங்களின் சுவரொட்டிகள், தினமணி சிறப்பு இதழ்கள், கணிதமேதை ராமானுஜத் தின் கையெழுத்துப் பிரதி, திருக்குறளின் முதல் அச்சு போன்றவையெல்லாம் ஆவணங்களாக இந்நூலகத்தில் இன்றும் இருக்கின்றன.
அமெரிக்க நூலகத்தில் தரைத்தளத்திற்கு கீழே ஏழு மாடிகள் அமைத்து நூல்களை பத்திரப்படுத்தி, அணுகுண்டு எறிந்தாலும் நூல்களில் இடம்பெற்றிருக் கும் ஞானம் அழிந்துவிடாதபடி பாதுகாக்கி றார்கள். அந்த அளவிற்கு முக்கியத்துவம் பெற்றவை அவை. எனவே ஆவணங்களை யாவரும் பெறும் படி, அவற்றை ஜனநாயகமாக்கப்பட வேண்டும். பாராளுமன்றத்தை ஆவணக் காப்பகம் என்று கொண்டால், அங்கு 75 அடி நீளத்தில் பித்தளையில் செய்த வாசுகி பாம்பை ஒருபுறம் தேவர்களும் மறுபுறம் அசுரர்களும் பாற்கட-ல் அமிர்தத்தை கடைந்தெடுக்கிற சிலையை வைத்திருக்கிறார்கள். அசுரர்களுக்கு அமிர்தத்தைக் கொடுக்காமல் ஏமாற்றுவதற்காக, கடவுள் பெண் உருவத்தில் வந்து நடனமாடுகிறார். அதனை அசுரர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது, கடவுள்கள் அமிர்தத்தை முழுவதுமாகக் குடித்துவிட்டனர்.
“பாராளுமன்றம் ஓர் ஆவணக் காப்பகம் என்றால் பாற்கடல் என்பது பசிபிக் பெருங்கடல் போல, இன்னொரு பெருங்கடல்தான். வாசுகி பாம்பு கூட ரொம்ப நல்ல பாம்புதான்.”
இதைப் பற்றி சங்க இலக்கியம் என்ன பேசுகிறது என்பதை ஆராய்ந்தால் திருமாலைப் பற்றிப் பேசுகின்ற ஒரு பரிபாட-ல், “இருகை ஒரு மால்”(இரு கை கொண்ட ஒரு மால்) அதாவது, தேவர்கள் அசுரர்களுக்கு வஞ்சனை செய்து கொடுக்காமல் இருந்ததால், அதில் ஒரு கை நாணயம் இல்லாத கை என்பதைக் குறிக்கும் விதமாக “நயனில் ஒருகை” என்கிறது. வானோர் அமிர்தத்தைக் கொடுத்தாலும் அதைத் தானாக உண்ணாமல் பிறருக்கும் கொடுத்து வாழ்பவர்கள் இன்னும் இருப்பதால்தான் உலகம் (உன்பால் அம்மை உலகம்) இயங்கிக் கொண்டிருக்கிறது.
அப்படிப்பட்ட விழுமியம்! நம் தமிழர் விழுமியம்!