வீரசந்தானத்தின் ஞானச்செறுக்கு -இயக்குனர் தரணி நறுக் பேட்டி

/idhalgal/eniya-utayam/director-tharani-interview

றைந்த ஓவியர் வீர.சந்தானம் முக்கிய பாத்திரத்தில் நடித்த "ஞானச்செருக்கு' திரைப்படம், படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த காலத்திலேயே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்தப் படம் திரையிடப்படுவதற்கு முன்பே, சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு 6 பெரிய விருதுகளைச் சம்பாதித்திருக்கிறது. விரைவில் "ஞானச்செருக்கு' திரைக்கு வர இருக்கும் நிலையில், இந்தப் படத்தின் இயக்குநர் தரணியை அவரது பரபரப்பான பணிகளுக்கு நடுவே தேடிப்பிடித்தோம். அப்போது...

ஞானச்செருக்கு உருவானவிதம் பற்றி?

ஞானச்செருக்கு எனக்குள் தானாய் முளைத்த ஒரு கதைக்கருவின் அடிப்படையில் உருவான படைப்பாகும்.

dd

நான்கு வருடத்திற்கு முன் நான் மேற்கொண்ட சின்ன துணிச்சலான முயற்சி இது என்று சொன்னால் அது மிகையாகாது. என் சிந்தனைக்கு வடிவம் கொடுக்க என் நண்பர்கள், உறவுகள், படக்குழுவினர் என பலரும், எந்த ஒரு பொருளாதார எதிர்பார்ப்பும் இன்றி எனக்குத் துணை நின்றார்கள். இப்படி இவர்களின் ஒத்துழைப்பால் விளைந்த அழகிய படைப்பே ஞானச்

றைந்த ஓவியர் வீர.சந்தானம் முக்கிய பாத்திரத்தில் நடித்த "ஞானச்செருக்கு' திரைப்படம், படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த காலத்திலேயே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்தப் படம் திரையிடப்படுவதற்கு முன்பே, சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு 6 பெரிய விருதுகளைச் சம்பாதித்திருக்கிறது. விரைவில் "ஞானச்செருக்கு' திரைக்கு வர இருக்கும் நிலையில், இந்தப் படத்தின் இயக்குநர் தரணியை அவரது பரபரப்பான பணிகளுக்கு நடுவே தேடிப்பிடித்தோம். அப்போது...

ஞானச்செருக்கு உருவானவிதம் பற்றி?

ஞானச்செருக்கு எனக்குள் தானாய் முளைத்த ஒரு கதைக்கருவின் அடிப்படையில் உருவான படைப்பாகும்.

dd

நான்கு வருடத்திற்கு முன் நான் மேற்கொண்ட சின்ன துணிச்சலான முயற்சி இது என்று சொன்னால் அது மிகையாகாது. என் சிந்தனைக்கு வடிவம் கொடுக்க என் நண்பர்கள், உறவுகள், படக்குழுவினர் என பலரும், எந்த ஒரு பொருளாதார எதிர்பார்ப்பும் இன்றி எனக்குத் துணை நின்றார்கள். இப்படி இவர்களின் ஒத்துழைப்பால் விளைந்த அழகிய படைப்பே ஞானச்செருக்கு.

உங்களுக்கும் ஓவியர் சந்தானத்துக்கும் இடையில் ஏற்பட்ட உறவு பற்றி?

2015-ல் எனக்கும் ஓவியர் வீர.சந்தானம் அய்யா அவர் களுக்கும் நட்பு ஏற்பட்டது. அன்று முதல் அவருடைய இறுதி நாட்கள் வரை நாங்கள் கைகோத்துப் பயணித்தோம். அவர் இறப்பதற்கு முதல்நாள் இரவுகூட நானும் அவரும் ஒன்றாகத்தான் உணவு அருந்தினோம். அவரை ஓவியர் எனும் பிம்பத்தில் மட்டும் அடக்கி விட முடியாது. அவர் பன்முகம் கொண்டவர். எழுத்து, கவிதை, நடிப்பு, பேச்சு, சமூக செயற்பாடுகள் என அவரது திசைகள் விரிந்துகொண்டே இருந்தன. போராளிகள் துப்பாக்கி கொண்டு மட்டும் போராடுவதில்லை. சில நேரங்களில் தூரிகை கொண்டும், பேனா கொண்டும் களமாடு கிறார்கள். வீர சந்தானம் ஒரு தூரிகைப் போராளி. நான் மிகைப்படுத்தவில்லை அவர் இன்னொரு வள்ளுவர். இரண்டாம் வள்ளலார். அவரோடு இளமைக் காலம் முதல் அவருடன் பயணித்தவர்கள் வேண்டுமானால் என்னோடு முரண்படலாம். ஆனால் நான் கண்ட வீர சந்தானத்தை மட்டும்தான் நான் சொல்ல முடியும். இது என் எண்ண வெளிப்பாடு. வீர.சந்தானம் அடுத்த தலைமுறையின் சொத்து.

அவரின் தொடர்ச்சியாக நான் இயங்க முயற்சிக்கிறேன். ஞானச்செருக்கு படம் உருவாகத் தொடங்கும் முன்னர் படத்தில் அவர் ஒரு பங்காக இருந்தார். படம் வடிவம் பெற்றபோது அவரே படமாகவே இருந்தார். படத்திற்கு உயிர் கொடுத்த வீர.சந்தானம் இன்று உயிரோடு இல்லை என்பது பெரும் சோகம்.

ஞானச்செருக்கு தொட்டிருக்கும் உயரங்கள்?

ஞானச்செருக்கு படம் நிறைவடைந்து நான்கு மாதங்கள் ஆகின்றன. படத்தின் தகுதியை நிரூபிக்க நான் அதை சர்வதேச அளவிலான திரைப்படப் போட்டிகளுக்கு அனுப்பினேன். படம் இன்று வரை 6 சர்வதேச விருதுகளையும் 23 சர்வதேச நாடுகளின் சிறந்த படத்திற்கான பரிந்துரைகளையும் பெற்றுள்ளது. இது மேலும் தொடரும் நிலையில் இருக்கிறது.

"ஞானச்செருக்கு' உங்கள் மனதில் உருவான திலிருந்து இப்போது திரைக்கு போகும் வரையில் நீங்கள் சந்தித்த சவால்கள்?

அனைத்துப் படங்களும் அதற்கான சவால்களை கடந்துதான் திரைக்கு வருகிறது. அதற்கு ஞானச் செருக்கு மட்டும் விதிவிலக்கு அல்ல. ஞானச்செருக்கு சுய முயற்சி என்பதால் பொருளாதார நெருக்கடிகள் அதிகம். குறைந்த பொருளாதாரத்தில் இன்று தயாரிக்கப்படும் படங்களுக்கு இணையான சிறந்த வடிவமைப்பைத் தர வேண்டும் என்று நினைத்தேன்.

அது தொடர்பான போராட்டங்கள் அதிகம். அடுத்து படத்தின் ஜீவநாடி யாக இருந்த ஓவியர் வீர. சந்தானம் அவர்களின் திடீர் மறைவு, எங்களை நிலைகுலைத்தது. பிறகு நெடிய பயணத்தில் மனம் தாழாது தொடர்ச்சியாக இயங்க வேண்டும்.

இன்னம் பல பல ஏற்ற இறக்கங் களைக் கடந்துதான் ஞானச்செருக்கு உருவானது. ஆனால் இன்று கடந்த வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும்போது, உதட்டில் சிறு மலர்ச்சியுடன் மனம் இலகுவாகிறது.

படத்தில் பணிபுரிந்த மற்ற கலைஞர்கள் பற்றி?

ஞானச்செருக்கில் குறிப்பிடத் தக்கது அதன் தொழில்நுட்ப பணிகள் தான். இதனால், உலகத் திரைப் படங்களுக்கு இணையாக ஞானச் செருக்கால் அவற்றோடு போட்டியிட முடிந்தது. கோபிதுரைசாமி ஒளிப்பதிவை கவனித்துக் கொண்டார். பெரிய பொருளாதாரம் இல்லாத நிலையில் படத்திற்கான ஒளிக் கருவிகள் மற்றும் காட்சிக்கான பாதை வடிவமைப்புக் கருவிகளை (பழ்ஹஸ்ரீந் ஹய்க் ற்ழ்ர்ப்ப்ஹ்) நாங்களே குறைந்த விலையில் வடிவமைத்தோம். படத்தொகுப்பு மகேந்திரன். ஞானச்செருக்கு படத்தில் பாதி அவர்தான். அதைத் தொடர்ந்து சக்கரவர்த்தி இசையமைத்துத் தந்தார், பாடல் நெய்தல், சப்தம் கண்ணன், காட்சி பிம்பம் அரவிந்த், நிறம் வடிவமைப்பு லோகேஷ்வரன் என அனைவரும் எதிர்காலத்தை மட்டும் கருத்தில் கொண்டு உழைத்தார்கள். படத்தின் பாடல்கள் எல்லோரையும் கரைய வைக்கும்.

இந்த பயணத்தில் மறக்க முடியாத நிகழ்ச்சி?

ஞானச்செருக்கின் மொத்த பயணமும் மறக்க முடியாதது.

ஞானச்செருக்கு எதைப் பேசுகிறது?

ஞானச்செருக்கு, படைப்பு விடுதலையைப் பற்றித் தீவிரமாக பேசுகிறது. அதிகாரத்திற்கு மண்டியிடாத கலைஞனின் வாழ்வியல் தேடலே ஞானச்செருக்கு. இன்றைய அரசியல் சூழலையும் கலையையும் அரசியலையும் தீவிரமாக ஞானச்செருக்கு பேசுகிறது.

ஞானச்செருக்கு யாருக்கான படம்?

ஞானச்செருக்கு மக்களுக்கான படைப்பு. குறிப்பாக இளைஞர்களுக்கானது. மேலும் இலக்கோடு பயணிக்கும் அனைவருக்கும் ஞானச்செருக்கு ஒரு நம்பிக்கை.

uday010619
இதையும் படியுங்கள்
Subscribe