திரைத்தமிழ் மீது தீண்டாமை ஏன்? -இயக்குநர் பிருந்தாசாரதி

/idhalgal/eniya-utayam/director-brindasarathy

லக்கிய வரலாறு எழுதும் தமிழறிஞர் கள் "இக்கால இலக் கியம்' என்ற தலைப் பில் எழுதும்போது கவிதை, உரைநடை, சிறுகதை, புதினம் ஆகிய தலைப்பு களோடு நிறுத்திக்கொள்கிறார்கள். அந்த வரிசையில் திரைத்தமிழையும் இனி அவர்கள் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.

இயல், இசை, நாடகம் என்று தமிழை மூன்றாகப் பிரித்து முத்தமிழ் என்பார்கள். ஆனால் அந்த முத்தமிழை யும் ஒருங்கே இணைத்துத் தன்னகத்தே கொண்டது திரைத்தமிழ்.

கவிதை, சிறுகதை, புதினம், கட்டுரை ஆகிய நூல்கள் சில ஆயிரங் கள் விற்பதே குதிரைக்கொம்பாகி விட்ட இக்காலகட்டத்தில் லட்சக் கணக்கான மக்களை ஒரே நேரத்தில் சென்றடையும் வாகனமாக திரைத் தமிழ் இருக்கிறது.

pp

முக்கியமாக வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் பார்வையில் படுவதும் செவிகளில் கேட்பதும் திரைப்படக் காட்சிகளும், திரை இசைப்பாடல்களும் கொண்டு சேர்க்கும் தமிழே. நூல்கள் படிப்பதை மட்டுமல்ல. பத்திரிகை படிப்போர் எண்ணிக்கையையும் வெகுவாகக் குறைத் துக்கொண்டு வருகிறது இணையப் பயன்பாடு. இலக்கிய இன்பம் தரும் கவிதையோ சிறுகதையோ படிக்கப்படுவதைவிட சமூக ஊடகங்கள் மூலம் கிடைக்கும் துணுக்குகளையும், கேலிப் பேச்சுகளையும் அதிகம் படித்துக்கொண்டுள்ளனர் பலரும்.

அதே நேரத்தி

அதே நேரத்தில் நேர்ப்பேச்சிலும் இளந் தலைமுறையினர் ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள், கான்வெண்ட்டில் படித்து வளர்ந்த காரணத்தால். இவர்கள் தமிழைக் கேட்பது பார்ப்பதும் தமிழ்த் திரைப்படங்களிலேயே வாங்கிப்படிக்கும் புத்தகங்களும் ஆங்கில நாவல்களே. இந்தக் கவலைக்குரிய காலகட்டத்தில் திரைப்படம் என்றால் ஏதோ தீட்டுப்பட்ட பொருளைப் பார்ப்பது போல் பார்க்கத் தேவையில்லை.

இலக்கியம் படைத்த, படைக்கும் எழுத்தாளர்களின் சாதனைக்குச் சற்றும் குறைந்தல்ல பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம், கண்ணதாசன், வைரமுத்து உள்ளிட்ட பாடலாசிரியர்கள் செய்த சாதனையும், கலைஞர், கே.எஸ். கோபாலகிருஷ்ணன், ஸ்ரீதர், கே. பாலசந்தர், மகேந்திர மணிரத்னம் உள்ளிட்ட திரை உரையாடல் ஆசிரியர்கள் செய்த சாதனையும்.

நாடகத் தமிழ்தான் இன்று அறிவியல் வளர்ச்சி காரணமாக திரைத்தமிழாக உருமாறி இருக்கிறது.

முதலமைச்சராகப் பதவியேற்றபோது எம்.ஜி.ஆர். அவர்கள், ""இந்த முதலமைச்சர் நாற்காலியில் இருக்கும் நான்கு கால்களில் மற்ற மூன்று கால்கள் என்னவென்று எனக்கு தெரியாது. ஆனால் ஒரு கால் பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரத்தின் பாடல்கள் என்று மட்டும் எனக்குத் தெரியும்,'' என்று கூறியது ஒன்று போதாதா திரைத்தமிழின் வீச்சை அறிய.

"காடு வெளைஞ்சென்ன மச்சான்

நமக்குக்

கையும் காலும்தானே மிச்சம்'

"காடு வெளையட்டும் பொண்ணே

நமக்குக்

காலமிருக்குது பின்னே'

என்று சமூகப் பொருளாதார உரையாடல்கள் திரைப்பாடல்களில் நடக்க வில்லையா?

"உள்ளம் என்பது ஆமை- அதில்

உண்மை என்பது ஊமை

சொல்லில் வருவது பாதி- நெஞ்சில்

தேங்கிக் கிடப்பது பாதி'

என்று கண்ணதாசன் அழுத கண்ணீரில் தத்துவத்தின் சாரம் வெளிப்படவில்லையா?

"வசந்தங்கள் வாழ்த்தும்போது

bb

உனது கிளையில் பூவாவேன்

இலையுதிர் காலம் முழுதும்

மகிழ்ந்து உனக்கு வேராவேன்'

என்று வைரமுத்து காதலைப் புதுக்கவிதை உத்தியோடு திரையில் எழுதியதில் இலக்கிய அடர்த்தி இல்லையா?

பாடல்களில் மட்டுமல்ல...

உரையாடல்களிலும் இதுபோல் எண்ணற்ற உதாரணங் களை கூறமுடியும்.

"கோவிலிலே குழப்பம் விளைவித்தேன்.... கோவில் கூடாது என்பதற்காக அல்ல... கோவில் கொடியவர்களின் கூடாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக...' என்று தொடரும் நீண்ட நீதிமன்ற உரையாடலில் வெளிப்படும் கோபத்தில் அன்றைய சமூக நிலை சித்தரிப்பும், சொற்கள் துப்பாக்கிக்குண்டுகள் தெறிப்பது போல் தெறிக்கும் வேகமும் இல்லையா?

""ஊர்ல நாலு பேர் நாலுவிதமா பேசுவான்.

அதுக்கெல்லாம் நாம பயப்பட முடியுமா... சின்னக் குழந்தைங்க பழமொழி சொல்றது இல்லையா... சூரியனைப் பார்த்து நாய் கொலைக்குதுன்னு...

அது மாதிரி நெனைச்சுகிட்டு போயிட்டே இருக்கணும்''

-இது கைகொடுத்த தெய்வம் படத்தில் நண்பனின் மனைவியை கதாநாயகனோடு தொடர்புபடுத்தி சிலர் பேசும்போது நண்பன் கூறுவதாக கே.எஸ். கோபாலகிருஷ்ணன் எழுதிய வசனம்.

கர்ணன் படத்தில் கர்ணனும் துரியோதனன் மனைவியும் சொக்கட்டான் ஆடும் காட்சியில் "எடுக்கவோ... கோர்க்கவோ...' என்று துரியோதனன் பேசிய வசனத்திற்கு இணையான காவியத்தன்மை கொண்ட வசனமல்லவா அது? "என் காதலி உங்களுக்கு மனைவி ஆகலாம். ஆனா உங்க மனைவி எனக்கு காதலி ஆக முடியாது? என "அந்த ஏழு நாட்கள்' படத்தில் கே. பாக்யராஜ் எழுதிய வசனம் தமிழ்ப் பண்பாட்டை எதிரொலிக்க வில்லையா?

"அவன் வருஷத்துல 364 நாள் உயிரோட இருக்கிறதே இந்த ஒரு நாளுக்காகத்தான்...' என்று பிரிந்த காதலியின் திருமணநாளுக்கு அர்ச்சனை செய்யும் குடிகாரக் காதலன் பற்றி "சலங்கை ஒலி' படத்தில் வரும் கே. விஸ்வநாதன் தேவ நாராயணனின் வசனம் காதலின் புனிதத்தைத் கௌரவப்படுத்தவில்லையா?

"தப்பு என்ன பனியன் கையா... சின்னது பெரிசுன்னு பாக்குறதுக்கு...' என்ற சுஜாதா அவர்கள் "இந்தியன்' படத்தில் எழுதிய வசனம் தர்க்கவாதத்தை அழகாக எடுத்து வைக்கவில்லையா?

"நீங்க நல்லவரா... கெட்டவரா?' என்று ஆறு வயது சிறுவன் அறுபது வயது நாயகனைப் பார்த்துக் கேட்கும் கேள்விக்குப் பதிலளிக்க முடியாமல் அவர் திகைப்பது வாழ்வைப் பற்றிய விசாரணை இல்லையா?

"பசி தீர்ந்ததுக்கு அப்புறம் சாப்பிடற ஒவ்வொரு இட்லியும் திருட்டுதான்' என "கத்தி' படத்தில் ஏ.ஆர். முருகதாஸ் எழுதிய வசனம் பொதுவுடைமை போதிக்கும் அரசியல் அரிச்சுவடி அல்லவா?

இதுபோல் எண்ணற்ற உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

கதை சொல்லும் முறையிலும் திரைக்கதாசிரியர்கள் பயன்படுத்தும் உத்திகள் காவியங்கள், புதினங்கள், நாடகங்கள், சிறுகதைகள் ஆகியவற்றோடு ஒப்பிட்டு ஆய்வதற்கு உரியன. மற்ற இலக்கிய வகைகளோடு ஒப்பிட்டால் திரைக்கதை எவ்வளவு உயரத்திற்கு வளர்ந்திருக்கிறது என்பதை உணர முடியும்.

பராசக்தி, திருவிளையாடல், வீரபாண்டிய கட்ட பொம்மன், நாயகன், உதிரிப்பூக்கள், 16 வயதினிலே போன்ற படங்களின் திரைக்கதை நூல்களை பாடப் புத்தகமாகவே ஆக்கலாம். அல்லது அவற்றிலிருந்து சில காட்சிகளையாவது தற்காலத் தமிழ் பாடத்தில் இணைத்தால் மாணவர்கள் ஆர்வத்தோடு படிப்பார் கள் என்பது என் எண்ணம்.

ஆகவே இலக்கிய வரலாறு எழுதும் ஆசிரியர்கள் அவற்றை வெளியிடும் பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்கள் "திரைத்தமிழ்' மீது கட்டாயம் இனியும் பாராமுகம் காட்டாமல் கவனிப்பார்களா?

uday010719
இதையும் படியுங்கள்
Subscribe