சம்பவங்கள் நிறைந்த அந்த காலத்தைப் பற்றி இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். பழைய நினைவுகளில் ஆழமாக மூழ்கிப்போகும்போது, என் கண்கள் பல நேரங்களில் ஈரமாகிவிடும். இப்போது தேன்மா மரத்தைப் பற்றி நினைத்துப் பார்க்கிறேன். தேன்மா மரத்திற்குக்கீழே ஒன்று சேரக்கூடிய ஒரு நண்பர்களின் கூட்டம் இருந்தது. அந்த நண்பர்களின் கூட்டத்திலிருந்த உறுப்பினர் கள் அனைவரும் இன்று உலகத்தின் பல பகுதிகளிலும் சிதறிக் கிடக்கிறார்கள்.
ஒரு ஆள் பாரசீகத்தின் ஏதோ எண்ணெய் நிறுவனத்தில்...
இன்னொரு ஆள் மலேயாவில்... சிலர் ராணுவத்தில்...
ஹோட்டலில்...
தொழிற்சாலைகளில் வாழ்க்கையின் பல்வேறு துறைகளிலும் இப்படி சிதறி கிடக்கிறார்கள். லட்சக்கணக்கில் சம்பாதித்த நண்பர்கள் இருக்கிறார்கள்.
வாழ்க்கையை நடத்துவதற்காக ரயில் நிலையத்தில் பெட்டியைத் தூக்கிக் கொண்டு நடப்பவர்களும் இருக்கிறார்கள்.
மறக்கமுடியாத ஒரு காட்சி முன்னால் வருகிறது! சாத்தம் குறத்தெ பரமு புளிக்கல் துறையை நீந்திக்தான் ஊரைவிட்டே சென்றான். அதுவும் பெருமழைக் காலத்தில் ஆறு நிறைந்து நிற்கும்போது...
ஆற்றை பரமு நீந்தி கடப்பதைப் பார்த்தவர்கள் இருக்கிறார்கள்.
நீரோட்டத்தில் சிக்கி பரமு மூழ்கி துடிப்பதைப் பார்த்தவர்கள் இருக்கிறார் கள்.
இவற்றில் எதை நம்புவது? நான் இப்போதும் நம்புகிறேன்.... பரமு இறக்க வில்லை என்று. என் நண்பன் இந்த உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் உயிருடன் இருந்துகொண்டிருப்பான் என்பதுதான் என் நம்பிக்கை.
சரியா... தவறா...
உறுதிப்படுத்த முடியவில்லை. பரமு ஊரை விட்டுச்செல்லும்போது, கையில் இருந்தது ஐந்தரை அணா. ஐம்பத்தைந்து தேங்காய்களின் நார் விற்று கிடைத்த பணம்...
பரமுவின் மாமா கோபாலன் நாயருக்கு தேங்காய்க்காரன் அந்தோணி கொடுக்க வேண்டியதிருந்தது. அந்த காசை வாங்கிக்கொண்டுதான் பரமு ஊரைவிட்டு வெளியேறினான்.
பரமு ஊரைவிட்டு கிளம்பிச் சென்றதைவிட, கோபாலன் நாயருக்கு இப்போதும் கவலை அளிக்கக் கூடிய விஷயம் அந்த ஐந்தரை அணா போய் விட்டது தான்.
இப்போதும் என்னைப் பார்த்தால், கோபாலன் நாயர் அந்த ஐந்தரை அணாவின் கதையைக் கூறுவார்: "உண்ணிகிருஷ்ணா, அவன் அந்த ஐந்தரை அணாவை யும் எடுத்துக்கொண்டு போய்விட்டானே!'' இப்படித் தான் அந்த கதை ஆரம்பமாகும்.
"அதுவொண்ணும் பெருசு இல்ல... அய்யா.
ஐந்தரை அணாவை எடுத்துக்கொண்டு சென்ற பரமு.... ஒருவேளை ஐந்தரை லட்சத்தோட வந்தாலும் வரலாம். ஆண் பிள்ளைகள்....
எதையும் கணக்குப்போட்டு தீர்மானிக்கமுடியாது'' ஒரு ஆண் என்ற வகையில் கோபாலன் நாயரிடம் என்னால் அதை மட்டுமே கூறமுடிந்தது.
பரமுவைப்போல ரகசியமாக ஓடிச்சென்ற இன்னொருவனின் கதை எனக்குத் தெரியும்.
குத்துணூக்கி ரப்பாயியின் மகன் பறஞ்சு, போகும் போது, பாக்கெட்டில் இருந்தது இரண்டு கோலி குண்டுகளும் ஒரு ராணியின் தலை போட்ட முக்காலும்...
போய்... இருபத்தொரு வருடங்கள் கழித்து திரும்பி வந்தான். வந்த நாள் கோலாகலங்கள் நிறைந்ததாக இருந்தது.
குருத்தோலை திருநாளையொட்டி நாழி அரிசியை அடுப்பில் கொதிக்க வைப்பதற்கு என்ன வழி என்பதை நினைத்து கண்ணீர் விட்டுக்கொண்டிருந்த நேரத்தில் நான்கு பெட்ரோமாக்ஸ்கள், ஏழு கூலியாட்களால் தூக்கமுடியாத அளவிற்கு இருந்த பொருட்கள் ஆகிய வற்றுடன் பறஞ்சு பெனாங்கிலிருந்து வந்திருந்தான்.
பெட்ரோமாக்ஸின் துளைத்து நுழையும் வெளிச் சத்தைப் பார்த்ததும், ரப்பாயி நெஞ்சில்

பெட்ரோமாக்ஸின் துளைத்து நுழையும் வெளிச் சத்தைப் பார்த்ததும், ரப்பாயி நெஞ்சில் கையை வைத்து ஏசுவின் பெயரைச்சொல்லியவாறு காய்ந்த ஓலைகளாலான கதவை அடைத்து பாதுகாப்பு உண்டாக்கினார்.
தீவெட்டி கொள்ளையர்கள் வருகிறார்கள் என்றுதான் ரப்பாயி நினைத்தார். அரை கை இல்லாத இப்ராஹிம் திருட ஆரம்பித்திருந்த காலமது.
இரவு வேளையில் வந்து ஓலை கதவைத் தட்டியவாறு பறஞ்சு அழைத்தான்: "அப்பா... அப்பா... கதவைத் திறங்க...''
வீட்டிற்கு கதவு இல்லாததால் அந்த அப்பன் திகைப்படைந்து நின்று கொண்டிருந்தார். ஒருமணி நேரம் கடந்த பிறகுதான் வெளிவாசலே திறக்கப் பட்டது.
தொடர்ந்து சகோதரிகளும் அப்பனும் அம்மாவும் மகனும் சேர்ந்து ஒரே நேரத்தில் எழுப்பிய கூப்பாடு... ஆனந்தம் கரை புரண்டோடிய இதயத்தின் சத்தம்...
ஆகாயத்தையும் பூமியையும் தொட்டவாறு நின்று கொண்டிருக்கும் கந்தர்வனின் சந்தோஷம், மகனின் ஆச்சரியப்படத்தக்க வளர்ச்சியைப் பார்த்து ரப்பாயிக்கு உண்டானது.
ஊரிலுள்ள அனைத்து ஆட்களையும் வரவழைத்து பறஞ்சு கொண்டாடிய குருத்தோலை திருவிழா எங்கள் கிராமத்தில் நடைபெற்ற பெரிய திருவிழாக்களில் ஒன்றாக இருந்தது.
இருபத்தொரு வருடங்களுக்குமுன்பு தன் மகன் இறந்துவிட்டான் என ரப்பாயி உண்மையாகவே நினைத்துக்கொண்டிருந்தார்.
பரமுவைப் பற்றிய நினைவுகளைக்கூட மறந்துவிட்டிருந்த ஒருகாலத்தில் திரும்பிவந்த சம்பவம் நடைபெற்றது. அந்த காட்சியைப் பார்த்து மறந்திராத என் கிராமம் பரமுவின் வருகையை எதிர்பார்ப்பதில் தவறு உண்டோ? பின்புலத்தில் பலவும் நடக்கின்றன.
இந்த பட்டியலில் ஒரு இளம் பருவ தோழியின் கதையும் நினைவில் வருகிறது.
அம்மிணி! தெற்குப் பக்க வீட்டிலிருக்கும் அம்மிணி இப்போது உயிருடன் இருந்தால், அவளுக்கு இருபத்து நான்கு வயது நடக்கும். பதினைந்தாவது வயதில் அம்மிணி மரணத்தைத் தழுவினாள். நல்ல நிறத்தைக்கொண்ட...சதைப்பிடிப்பான ஒரு இளம் பெண்! இரவு வேளையில் தேன்மாங்காயைப் பொறுக்குவதற்காக வந்தாள். அப்போது வாயில் நெருப்புடன் ஒரு பெண் நின்றுகொண்டிருக்கிறாள்.
"யார் அது?'' என்று அம்மிணி கேட்டதற்கு, வாயைத் திறந்து அந்த பெண் குலுங்கிக்குலுங்கி சிரித்திருக்கிறாள்.
அப்போது உலையிலிருந்து வருவதைப் போல நெருப்பு ஜுவாலை உயர்ந்திருக்கிறது. சமையல் செய்யும் இடத்திற்கு அருகிலிருந்த மாமரத்தின் மேலே தூக்குப்பொட்டு இறந்த கிழக்குப்பக்க வீட்டைச் சேர்ந்த மாதவியின் ஆவி அது.
அம்மிணி "அய்யோ!'' என்று உரத்த குரலில் கூப்பாடு எழுப்பியதும், தலை குப்புற விழுந்ததும் ஒரே நேரத்தில் நடந்தன.
கூப்பாட்டைக் கேட்டு, போய் பார்த்தபோது பெரிய வாழை மரத்தை வெட்டி போட்டதைப்போல அம்மிணி கிடந்தாள்.
வாயிலிருந்து ரத்தமும் நுரையும் வழிந்து கொண்டிருந்தன.
நேரத்துடன் நேரம் சேரவில்லை.
அம்மிணி இறந்துவிட்டாள். அதற்குப்பிறகு இரவு வேளையில் தேன்மா மரத்திற்குக் கீழை மனிதர்கள் செல்வதே இல்லை.
தேன்மா மரம் எல்லா வருடங்களிலும் நிற்காமல் காய்க்கும். கிளைகள் மாங்காய்களைக்கொண்டு எடையைத் தாங்கமுடியாமல் குனிந்து நின்று கொண்டிருக்கும்.
கடுமையான கோடை காலத்தில் தேன்மாங்காய்கள் பழுத்து விழ ஆரம்பிக்கும். பகல்பொழுதுகளில் மாமரத்திற்குக்கீழே குழந்தைகள் வந்து கூடுவார்கள். சிறிய வீடுகளைக் கட்டி குடும்ப வாழ்க்கை நடத்து வதைப்போல நடிக்கும் சிறிய தாய்- தந்தையர்கள் அங்கு இப்போதும் வந்து கூடுவதுண்டு.காலம் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இரவு வேளையில்தான் தேன் மாம்பழம் அதிகமாக உதிர்ந்து விழும். யாரும் செல்லமாட்டார்கள். ஒருநாள் நள்ளிரவுப்பொழுதில் வீட்டின் இரண்டாவது தளத்தின் மேலே இருந்தவாறு தேன்மா மரத்தின் அடிப்பகுதி யைப் பார்த்தேன். அப்போது நெருப்பைக் கக்குபவ ளாக மாறிய கிழக்கு வீட்டு மாதவி குனிந்து நின்று மாம்பழத்தைப் பொறுக்கி போட்டுக்கொண்டிருந்தாள்.
"ஒண்ணு.... பத்து....
ஒண்ணு....
பத்து....'' இப்படி ராகத்துடன் எண்ணிக்கொண்டி ருந்தாள்.
கிழக்கு வீட்டு மாதவி சற்று கொஞ்சுவதைப்போல பேசுவாள். அது காரணமாக இருக்கலாம்...
நெருப்புடன் வந்த உருவமும் கொஞ்சியது.
பயத்தால் கண்களை இறுக அடைத்துக் கொண்டேன்.
தொடர்ந்து மெதுவாக பாட்டிக்கு அருகில் சென்றேன். அவளை இறுக அணைத்துக்கொண்டேன். நெருப்பு கக்கும் உருவத்தை நேரடியாக முகத்தோடு முகம் பார்க்கும்பட்சம், அதிக நேரம் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பில்லை.
தெற்குப்பக்க வீட்டின் அம்மிணியின் நிலை உண்டாகிவிடக் கூடாதே என்ற விருப்பம் இருந்தது. மீண்டும் தேன்மா மரத்தின் அடிப்பகுதிக்கு நினைவு நகர்ந்து சென்றது. தெற்கு திசை வீட்டைச்சேர்ந்த அம்மிணியை ஸ்ரிதர் அண்ணன் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தார்.
அம்மிணி மரணமடைந்த தகவல் தெரிந்ததும், ஸ்ரிதர் அண்ணன் வடக்குப் பக்கத்தில் அமர்ந்து தேம்பித்தேம்பி அழுவதைப் பார்த்தேன்.
அந்த காட்சியை என்னால் பார்க்க முடியவில்லை. தேன்மா மரத்தின் வரலாறு ஒரு மூன்று நூற்றாண்டுகளைக்கொண்டது.
அந்த மாவின் கன்றைக்கொண்டு வந்து நட்டவர் ஈச்சர மாமா. ஈச்சர மாமாவின் காலம் எங்களுடைய பரம் பரையின் பொற்காலம் என்று கூறலாம்.மானவிக்ரம சாமுதிரிப்பாடு தம்புரானின் போர் வீரர்களின் தலைவராக ஈச்சர மாமா இருந்தார். ஈச்சர மாமாவின் வாளும் கேடயமும் இப்போதும் பரணில் பெட்டிக்குள் இருக்கின்றன.
அங்கு வெள்ளிக்கிழமையன்று இப்போதும் நெய் விளக்கு ஏற்றப்பட்டு காட்டப்படும். ஈச்சர மாமாவிற்கு வருடத்திற்கொரு முறை இப்போதும் மரியாதையைக் காட்டும் வகையில் பூஜை செய்யப்படுவதுண்டு. எரித்தால் எரியக்கூடிய சாராயமும் வெந்த கோழிக்கறியும் அவருக்கு மிகவும் பிடிக்கும். இப்போதும் அந்த பூஜை செய்யப்படும் நாளன்று அவற்றைப் பரிமாறுவோம்.
ஈச்சர மாமா கோழிக்கோடு சாமுதிரிக்குச் சொந்தமான இடத்தில் தங்கியிருந்தார்.
வருடத்திற்கு இரண்டு முறைகளே வீட்டிற்கு வருவார்.
ஓணத்திற்கும் விஷுவிற்கும்.
புளிக்கல் துறையைக் கடந்துவிட்டால், பிறகு மஞ்சலில்தான் பயணம்.
மஞ்சலி-ருந்து வீட்டின் படிக்கட்டின்மீதுதான் பாதத்தையே வைப்பார்.ஈச்சர மாமா என்றாலே அனைவருக்கும் மிகுந்த பயம்.
கோழிக்கோடிலிருந்து வந்தபோது கொண்டு வந்ததுதான் தேன்மாவின் கன்று. தேன்மாவைப் பற்றிய கதைகள் இன்னும் பல இருக்கின்றன.
(இந்த கதைகளை என்னிடம் கூறியதே பாட்டிதான்.) ஈச்சர மாமாவின் காலத்தில் எங்களுடைய வீட்டு வாசலின் வழியாக தீண்டல் ஜாதிகளைச் சேர்ந்தவர் கள் நடந்து செல்லமாட்டார்கள். ஒருநாள் ஒரு ஆள்வழி தவறி வந்துவிட்டான். அந்த மனிதனின் தலையை வெட்டி எடுத்துக்கொண்டுதான் ஈச்சர மாமா குளிப்பதற்கே சென்றிருக்கிறார்.
இப்படிப்பட்ட செயல்களை நினைத்து பெருமைப் படக் கூடியவர்கள் என் வீட்டிலும் இருக்கிறார்கள்.
ஆனால், கண்டுண்ணி மாமாவின் காலம் வந்தபோது, எங்களுடைய வாசல்படியின் வழியாக செல்லாத ஜாதிக் காரர்கள் இல்லை. சிலர் உள்ளேயே வர ஆரம்பித் தார்கள்.
கண்டுண்ணி மாமாவின் காலத்திலிருந்து "இல்லத்த காயில்' குடும்பம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது.
சொத்து பலவும் பிறரின் கைகளுக்குச் சென்றன.
உறுப்பினர்கள் அதிகமானார்கள்.
இறுதியில் ஒவ்வொரு தாய்வழியிலும் தனித் தனியாக பாகங்களைப் பிரித்தார்கள்.
வசிக்கக்கூடிய வீடு எங்களுடைய பாகமாக கிடைத்தது.
குடியிருக்கும் வீடு இருந்த பாகத்தில்தான் தேன்மா இருந்தது.
தேன்மா மரம் பாகமாக கிடைத்தவர்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கும் என்று பாட்டி கூறினாள். ஆனால், நேரெதிரானவைதான் நடந்தன. மிகவும் அதிகமாக வறுமையின் துயரத்தை அனுபவித்தது எங்களுடைய தாயின் வழியில் இருந்தவர்கள்தான்.
ஏழு விமரிசையான இளம்வயது திருமணங்கள், மூன்று புனித நீராட்டுகள், இரண்டு திருமணங்கள், ஆறு மரணச் சடங்குகள்... இவை அனைத்தும் எங்களை வறுமையில் உழல்பவர்களாக ஆக்கின.
மூன்று தம்பதிகள் வீட்டில் உண்டானார்கள்.
அவர்களின் முக்கிய தொழிலே வாரிசுகளை உற்பத்தி செய்வதுதான் என்றானது.
மிகவும் அதிகமாக ஆதாயம் கிடைப்பதும் தேன்மா மரத்திலிருந்துதான்.மரம் பூக்கும்போதே ஆட்கள் குத்தகை எடுப்பதற்குவர ஆரம்பித்து விடுவார்கள். பிஞ்சு மாங்காய்கள் உண்டாகத் தொடங்கும்போதே யாருக்காவது விற்று விடுவோம்.
கிடைக்கும் காசில் உப்பு, மிளகாய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை வாங்குவோம்.
தேன்மாவின் ஒரு கிளையை எல்லா வருடங்களிலும் விட்டு வைப்போம்.
அந்த மாங்காய்கள் வீட்டிற்கானவை.
எல்லா வருடங்களிலும் தேன்மாவை விலைக்கு எடுப்பது கிளிராமன்தான்.
கிளிராமனுக்கு மாங்காய் வியாபாரத்தில் எவ்வளவோ ரூபாய்கள் லாபமாக கிடைக்கும்.
குருவாயூர் கோவிலில் சமையல் செய்யும் அய்யர் களுக்கு பெரிய மாங்காய்களையும் சிறிய மாங்காய் களையும் உப்பு மாங்காய்களையும் கொடுப்பது கிளிராமன்தான்.
மீன மாதம் வந்து விட்டால், தேன்மாங்காய்கள் பழுக்க ஆரம்பித்துவிடும். கோடை காலம் வந்து விட்டால், குழந்தைகளான எங்களுக்கு மிகுந்த சந்தோஷம் வந்துவிடும். முந்திரியும் மாம்பழமும் சாப்பிடுவதற்கு இருக்கும். கோடை காலம் முடிந்து மழை பெய்ய ஆரம்பித்துவிட்டால், ஏமாற்றம் உண்டாக தொடங்கி விடும். வானம் கறுக்க தொடங்கும்போது, மனதும் இருள தொடங்கும்.
இடவ மாதம் பதினைந்தாம் நாளிலிருந்து சிங்க மாதத்தில் அறுவடை நடப்பதுவரை அரை பட்டினி தான்.
சாப்பிடுவதற்கு எதுவுமே இருக்காது. கோடை காலத்து தேன்மாவின் கொட்டையைப் பிளந்து பருப்பை எடுத்து வைத்திருப்போம்.
பருப்பை உரலில் இட்டு இடித்து நொறுக்குவோம். சில நேரங்களில் அதில் சர்க்கரையைக் கலந்து சாப்பிடுவோம்.
பிறகு.... மிதுனம், கர்க்கிடகம் மாதங்களில் காளான்கள் முளைத்தால், அவற்றை வைத்து வறுவல்கள் உண்டாக்குவோம்.
மழைபெய்ய ஆரம்பித்துவிட்டால், தொழுவத் திற்குப் பின்னால் நிறைய காளான்கள் முளைக்கும்.
காளானை உப்பு போட்டு வேகவைத்து, மிளகாயையும் மஞ்சளையும் அரைத்து சேர்த்து, நல்லெண்ணெய்யை ஊற்றினால்....
அருமையான சுவையாக இருக்கும்!
மிதுன மாதம் கர்க்கிடக மாதமாக மாறிவிட்டால், நாங்கள் வாசலில் சுருங்கிப்போய் உட்கார்ந்திருப்போம். பள்ளிக்கூடத்திற்குச் செல்வதில்லை.
ஏரியும் நதியும் நிறைந்து கிடக்கும். வீட்டிற்கு முன்னால் தான் கானோ- வாய்க்கால் ஓடிக்கொண்டிருக்கிறது. கானோ- வாய்க்காலின் கம்பீரத்தை சேற்றுவாவிலிருந்து கோட்டப்புரம்வரை பார்க்கவேண்டும். ஆற்றின்வழியாக சிறிய... சிறிய படகுகள் வரிசையாக மிதந்து செல்வதைப் பார்க்கலாம். சிறிது நேரம் ஆற்றைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்பேன்.
சில நேரங்களில் கயிறு, கொப்பரை தேங்காய் ஆகியவை ஏற்றப்பட்டிருக்கும் பெரிய படகுகள் கொச்சிக்குச் செல்வதைப் பார்த்துக்கொண்டிருப்பேன்.
பெரிய படகில் ஏறி கொச்சிக்குச் செல்லவேண்டு மென அப்போது ஆசைப்பட்டிருக்கிறேன். சில வேளைகளில் தூண்டிலை எடுத்துக்கொண்டு மீன் பிடிப்பதற்காகச் செல்வேன்.
தூண்டிலில் "பூவ்வான்' என்ற மீன் சிக்குவதுண்டு.
பூவ்வான் மீனை நாங்கள் சுட்டு தின்பதுண்டு. முள் சிறிதும் இல்லாத மீன் பூவ்வான்.
மிதுன மாதம் கர்க்கிடக மாதமாக மாறினால், பசி அதிகமாவதே தெரியாது.
தேன்மாவின் மாங்காய் முடிவிற்கு வந்திருக்கும். ஒரு குடும்பத்தின் பெரியவரின் நிலையில் எப்போதும் தேன்மா இருக்கும். மழைக்காலத்தில் தேன்மா மரம் மழையில் நனைந்து நின்றுகொண்டிருக்கும்.
அணில்கள் உச்சிக்கொம்புகளில் ஓடி ஏறுவதைப் பார்க்கலாம்.
அணில்களின், கிளிகளின் அபய கேந்திரமாக தேன்மா மரம் இருக்கும். தேன்மா மரத்திற்குக்கீழே நின்றால், நனையவே மாட்டோம்.
கையிலிருந்த சொத்துகள் அனைத்தையும் இழந்து காசிக்குச்சென்று விட்டு, மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பிவந்த ஊதாரியான ஒரு வயதான மனிதரைப் போல தேன்மா மரம் அசைவே இல்லாமல் நின்று கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, எனக்கு மனதில் கவலை உண்டாகி இருக்கிறது.
எங்களுடைய குடும்பத்துடன் மிகவும் நெருக்க மான உறவை உண்டாக்கி வைத்திருக்கும் தேன்மாவின் மீது வீட்டிலுள்ள அனைவருக்கும் மிகுந்த மதிப்பு இருந்தது. தேன்மா மரத்தின் மாங்காயைச் சாப்பிடாத வர்கள் எங்களுடைய பரம்பரையில் இல்லை.
"இல்லத்தகாயில்' குடும்பத்தின் "தேன்மா மரம்' என்று கூறினால், அது ஊர் முழுக்க புகழ்பெற்றது.
தேன்மா மரத்தினடியில் சாயங்கால வேளையில் தீபமேற்றி வைப்பதுண்டு.தேன்மா மரத்தின்மேலே நாகங்கள் இருக்கின்றன.
இப்படியொரு அசாதாரணமான சிறப்பு தேன்மா மரத்திற்கு தரப்பட்டிருந்தது.
அதற்கான தனித்துவமும் இருந்தது.
மனிதர்களுக்கு வருடக்கணக்கில் சுவையைப் பகிர்ந்து அளித்துக் கொண்டிருக்கும் கனிவு மனம் கொண்டது அது!
மழைக் காலங்கள் பலவும் கடந்து சென்றன.
இப்போது இந்த கதையை எழுதும் வேளையில் தேன்மா மரம் விழுந்து கிடக்கிறது. கவலை முழுமை யாக நிறைந்திருக்கும் சூழல்... என் வீட்டிலுள்ள அனைத்து கண்களும் ஈரத்தில் இருக்கின்றன.
நேற்று இரவில் உண்டான அந்த பயங்கரமான காற்று தேன்மா மரத்தைக் கீழே வீழ்த்திவிட்டது. தேன்மா விழுவதைக்கேட்டதும், நாங்கள் அதிர்ச்சியில் நொறுங்கிவிட்டோம்.
வீட்டிலிருந்த பெண்கள் ஒன்றாக கூப்பாடுபோட ஆரம்பித்தார்கள்.
வந்தவர்கள்....
வந்தவர்கள் அனைவரும் அந்த காட்சியைப் பார்த்து திகைப்படைந்து நின்றுவிட்டார்கள். ஊரில் இருப்பவர்கள் மூக்கில் விரல் வைத்து கவலையை வெளிப்படுத்தினர்.
பாட்டி நாராயணனின் பெயரை தொடர்ந்து உச்சரிக்க தொடங்கினாள்.
குடும்பத்திற்கு ஆபத்து நெருங்கிவிட்டது என்று அவள் கூறினாள்.
அனைவரும் குனிந்த முகத்துடன், ஈரக்கண்களுடன் கடந்து சென்றார்கள்.
எங்களுடைய குடும்பத்திலேயே மிகவும் வயதான பெரியவர் மரணத்தைத் தழுவியிருக்கிறார்.
குடும்பமே அன்பு செலுத்தும் அந்த பெரியவரின் திடீரென உண்டான மரணத்தை நினைத்து இந்த மருமகன்... இதய வேதனையுடன் இப்போது கவலைப் படுகிறேன். அன்புள்ள மாமா.... உங்களின் கால்களில் இந்த மருமகன்... சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கு கிறேன்.