"மருத்துவ மனைகளில் தினந்தோறும் நடைபெறும் மரணங்கள் மிகப் பெரிய செய்தியா? விளக்கை அணைத்துவிட்டு, அடர்த்தியான இருட்டில் தூங்குவதற்காக படுத்தபோது, அவர் கேட்டார். உரையாடல் நம் மருத்துவ மனைகளைப் பற்றிய செய்தி களை மையமாகக்கொண்டது.
கடுமையான இருட்டிற்குள்ளிருந்து அவர் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டவாறு தொடர்ந்தார்:
"உங்களால் நம்பவே முடியாத ஒரு சம்பவத்தைப் பற்றி கேட்கிறீர்களா? மருத்துவமனையில் கிடந்த ஒரு இறந்த உடலை மற்ற பிணங்களுக்கு மத்தியி-ருந்து இரண்டு உறவினர்கள் எடுத்தார்கள். இறந்த உடலை வாடகைக் காரின் பின் இருக்கையில் வளைத்து படுக்கச் செய்துவிட்டு, அவர்கள் புறப்பட்டார்கள். வழி... சற்று போக வேண்டும். பிரதான சாலையி-ருந்து பதினைந்து மைல் தாண்டியிருக்கும்....
குண்டும் குழிகளும் நிறைந்த... சிறிய சாலை. மழை... இடி முழக்கம்... மின்னல்.
இறந்த உடலுடன் உள்ள சந்தோஷமற்ற பயணத்தை வாடகைக்காரின் ஓட்டுநரைப் பொறுத்தவரையில் சீக்கிரம் முடிக்கவேண்டும். வாடகைக் கார் சீறி பாய்ந்து போய்க்கொண்டிருந்தது.
க்டோ.... க்டோ... என்ற சத்தத்துடன் கார் குழிகளில் குதித்துக்கொண்டும் குலுங்கிக்கொண்டும் இருந்தது. ஒரு குழியில் குதித்தபோது, ஓட்டுநரும் உறவினர்களும் சற்று நடுங்கி விட்டார் கள். காரணம்- இறந்த உடல் சற்று நீளமாக முனகியதோ? பயத்துடன் செவியைக் கூர்மைப்படுத்திக்கொண்டு வாடகைக் காரை மெதுவாக போகும்படி செய்தார் கள். மீண்டும் ஒரு குழியில் கார் குதித்த போது, இறந்த உடல் போத்தோ என்று சாய்ந்து விழவும், தெய்வத்தை அழைத்து அழவும் செய்தது!
வீட்டை நெருங்கியபோது, கவலை யுடன் காத்துக்கொண்டிருந்த தாய்- தந்தைக்கு முன்னால்...
உறவினர்களின் இரு தோள்களையும் பிடித்தவாறு இறந்த உடல் மெதுவாக....
மெதுவாக.... நடந்துசென்று அன்னை யிடம் பலவீனமான குர-ல் கஞ்சி வேண்டுமென கூறியது. நொடி நேரத்தில் கஞ்சி தயாரானது. அதை தாயின் கையி-ருந்து இறந்த உடல் ஆர்வத்துடன் வாங்கிக் குடித்தது.
"நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்! இப்படி.... பத்து வருடங்களுக்குமுன்பு நம் ஊரின் புகழ்பெற்ற டாக்டர், இறந்து விட்டதாக அறிவித்த இறந்த உடல்தான் உங்களுக்கு அருகில் படுத்திருக்கும் இந்த நான்!''
=