சிற்றம்பலம் : செத்து(ம்) பிழைத்தவர்கள்! கோவி.லெனின்

/idhalgal/eniya-utayam/dead-s-survivors-g-lenin

ரு வாரகாலமாக ‘செத்து‘ப் போயிருந்த வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் திடீரென்று உயிர்த்தெழுந்திருக்கிறார். உலகப் பேரிடரான இந்த கொரோனா காலத்திலும் இரும்புக்கதவு நாடான வடகொரியாவில் என்ன நடக்கிறது என்று தெரியாத நிலையில், பொதுநிகழ்ச்சிகளில் காணப்படாமல் இருந்த கிம் ஜோங்கின் இருப்பு குறித்துப் பரவிய செய்திகள் உண்மையா? வதந்தியா? என்றுகூட உறுதி செய்யப்பட முடியவில்லை. பக்கத்து நாடான தென்கொரியா முதல் பகையும் உறவுமாக இருக்கும் அமெரிக்கா வரை கிம் ஜோங் உடல் நிலை குறித்துப் பல கருத்துகளை வெளியிட்டன.

kim

இந்த நிலையில்தான், உரத் தொழிற்சாலை ஒன்றை சிவப்பு ரிப்பன் வெட்டி கிம் திறந்து வைக்கும் படம் வடகொரிய அரசால் வெளியிடப்பட்டது. கொரோனா காலத்தில் மாஸ்க் எதுவுமில்லாமல் கிம் இருக்கும் படம் எப்போது எடுக்கப்பட்டது என்ற விவாதத்திற்கு வழி வகுத்தது.

இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத முதல் மத்திய அரசு அமையக் காரணமாக இருந்தவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன். நெருக்கடிநிலைக் காலத்தை எதிர்கொண்டு ஜனதா கட்சியை உருவாக்கி, ஆட்சியில் அமர்த்தியவர். அவர் இறந்துவிட்ட

ரு வாரகாலமாக ‘செத்து‘ப் போயிருந்த வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் திடீரென்று உயிர்த்தெழுந்திருக்கிறார். உலகப் பேரிடரான இந்த கொரோனா காலத்திலும் இரும்புக்கதவு நாடான வடகொரியாவில் என்ன நடக்கிறது என்று தெரியாத நிலையில், பொதுநிகழ்ச்சிகளில் காணப்படாமல் இருந்த கிம் ஜோங்கின் இருப்பு குறித்துப் பரவிய செய்திகள் உண்மையா? வதந்தியா? என்றுகூட உறுதி செய்யப்பட முடியவில்லை. பக்கத்து நாடான தென்கொரியா முதல் பகையும் உறவுமாக இருக்கும் அமெரிக்கா வரை கிம் ஜோங் உடல் நிலை குறித்துப் பல கருத்துகளை வெளியிட்டன.

kim

இந்த நிலையில்தான், உரத் தொழிற்சாலை ஒன்றை சிவப்பு ரிப்பன் வெட்டி கிம் திறந்து வைக்கும் படம் வடகொரிய அரசால் வெளியிடப்பட்டது. கொரோனா காலத்தில் மாஸ்க் எதுவுமில்லாமல் கிம் இருக்கும் படம் எப்போது எடுக்கப்பட்டது என்ற விவாதத்திற்கு வழி வகுத்தது.

இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத முதல் மத்திய அரசு அமையக் காரணமாக இருந்தவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன். நெருக்கடிநிலைக் காலத்தை எதிர்கொண்டு ஜனதா கட்சியை உருவாக்கி, ஆட்சியில் அமர்த்தியவர். அவர் இறந்துவிட்ட தகவலை, நாடாளுமன்றத்தில் அறிவித்தார் பிரதமர் மொரார்ஜி தேசாய். இரு அவைகளும் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்திக் கலைந்தன. ஜெ.பி.யின் மரணச் செய்தியை, ஆல் இண்டியா ரேடியோ சோக கீதத் துடன் அறிவித்தது. பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. அதன்பிறகு, ஜெ.பி உயிருடன்தான் இருக்கிறார் என்று அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனையிலிருந்து கிடைத்த அதிகாரப்பூர்வ செய்தியை அறிவித்தது வானொலி.

அவசரப்பட்டு இறப்புச் செய்தி வெளியிட்டதற்கு ஜனதா அரசு மன்னிப்பு கோரியது. அதன்பிறகு நிஜமாகவே ஒரு நாள் ஜெயப்பிரகாஷ் நாராயணன் இறந்துபோனார். அன்றைக்கு இரண்டாம் முறையாக மாணவர்களுக்கு லீவு வழங்கினார் மாபெரும் அரசியல் தலைவரான ஜெ.பி.

dd

அமெரிக்கா-ரஷ்யா இரண்டு வல்லரசுகளால் உலக நாடுகள் இரு அணிகளாகப் பிரிந்திருந்த காலத்தில், யார் கூடவும் கூட்டாளி இல்லை என அணி சேரா நாடுகளை உருவாக்கித் தலைமை வகித்தது இந்தியா. ஆனாலும், சோவியத் யூனியனுடனான (ரஷ்யா) இந்தியாவின் நட்புறவை அமெரிக்காவும் நன்றாக அறியும். இந்திய மக்களும் அறிந்துகொள்ள வேண்டுமல்லவா? அதனால், சோவியத் அதிபர் பிரஷ்னேவ் 1982ல் இறந்தபோது இந்தியாவில் அரசு விடுமுறை விடப்பட்டு, அரசு துக்கமும் கடைப்பிடிக்கப்பட்டது.

சோவியத்தின் அடுத்த அதிபர் ஆந்த்ரபோவ் 1984ல் இறந்தார். அதற்கும் பள்ளிக்கூடம் லீவு விடப்பட்டது. அடுத்து வந்த அதிபர் செர்னன்கோ அதற்கடுத்த ஆண்டே இறந்தார். அவருக்காக வும் லீவு விட்டது இந்திய அரசாங்கம். சோவியத் யூனியனின் கம்யூனிஸ்ட் அரசு கூட இந்தளவுக்கு சென்ட்டிமென்ட் கடைப்பிடித்திருக்குமா எனத் தெரியாது. செர்னன்கோவைத் தொடர்ந்து கோர்ப்பசேவ் அதிபர் ஆனதும் மாணவர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமானது.

கோர்ப்பசேவ் நலமுடன் ஆட்சி செய்தார். சோவியத் யூனியன் என்கிற வல்லரசுதான் அவர் காலத்தில் இறந்து போனது.

1984 அக்டோபர் 31 காலையில் இந்திராகாந்தி அம்மையார் தனது பாது காலவர்களாலேயே சுடப்பட்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிர் இல்லை. இந்தியாவைப் பொறுத்தவரை பிரதமரின் இறப்புச் செய்தியை குடியரசுத் தலைவர் அறிவிக்க வேண்டும் என்பது மரபு. ஜனாதிபதி ஜெயில்சிங் வெளிநாட்டில் இருந்தார். தற்போது போல தகவல் தொழில்நுட்ப வசதிகள் கிடையாது. அதனால், அவர் தனி விமானத்தில் மாலை நேரத்தில் தாயகம் திரும்பி, கையெழுத்திடும் வரை, இந்திரா காந்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவே அரை மணிக்கு ஒருமுறை ஆல் இந்தியா ரேடியோ செய்தி வாசித்தது.

பள்ளிக்கூடத்தில், பிரதமர் நலம் பெற பிரார்த்தனை செய்துவிட்டு, அமைதியாக வீட்டுக்கு கலைந்து செல்லலாம் எனத் தெரிவித்தார்கள். ஆனால், இலங்கை வானொலி, பி.பி.சி, ஆஸ்திரேலிய ஒலிபரப்புகள் வரை இந்திராகாந்தி மரணமடைந்துவிட்டதை முன்கூட்டியே சொல்லிவிட்டன. இறந்த அம்மையார் நலம் பெற பள்ளிகளில் பிரார்த்தனை நடந்தது.

அன்று மாலை 6 மணிக்கு மேல்தான் இந்திராகாந்தியின் மரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டபோது, எம்.ஜி.ஆர்.

dd

அப்போலோ மருத்துவமனையில் சுயநினைவின்றி சிகிச்சை பெற்று வந்தார். அடுத்த நாள், எம்.ஜி.ஆரும் இறந்துவிட்டதாக வதந்திகள் பரவின. ஆனால், அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்றே வந்தார். அதன்பின், அவர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அமெரிக்காவில் அவர் இருந்த போதும் வதந்தி இறக்கைக் கட்டிப் பறந்தது. “எம்.ஜி.ஆர். செத்துப்போய் ஐஸ்பெட்டியில் உடம்பை வச்சிருக்காங்க. தீபாவளி முடிஞ்சதும் அறிவிப்பாங்க’’ என்று ஒவ்வொரு வாயும் வானொலியாகி, வதந்திச் செய்தியைப் பரப்பியது.

எம்.ஜி.ஆரோ அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புரூக்ளின் டவுன்ஸ் டேட் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று நினைவு திரும்பி, நலம் பெற்றார்.

அத்துடன், அமெரிக்கா விலிருந்தபடியே ஆண்டிப் பட்டியில் போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராகி 3 ஆண்டுகள் ஆட்சி செய்து, அதன்பின் மரண மடைந்தார்.

கலைஞர் இறந்து விட்டார் என்று எத்தனை முறை வதந்தி பரப்பப் பட்டது என க்விஸ் போட் டியே நடத்தி பரிசளிக் கலாம். 1990கள் முதல் 2018 வரை பலமுறை வதந்தி பரப்பியே அவரை 94 வயது வரை வாழ வைத்த வர்கள் வசவாளர்கள்.

செல்வி ஜெயலலிதா உடல்நிலை பற்றிய வதந்தியை அவரைச் சார்ந்திருந்தவர் களும், மருத்துவமனையும், அரசுத் தரப்புமே முனைப்பாகப் பரப்பியதால், அவையெல்லாம் உண்மைதானா என அவரது மரணத் துக்குப் பிறகு விசாரணை கமி ஷனை அமைக்கும் நிலை உருவானது அண்மைக்கால வரலாறு.

uday010520
இதையும் படியுங்கள்
Subscribe