திருமணத்திற்கு முந்தைய நாள் - மாதவிக்குட்டி தமிழில் : சுரா

/idhalgal/eniya-utayam/day-marriage-madhavikutty-tamil-sura

லமாரியைத் திறந்து பதினான்காவது முறையாகத் தன் திருமணப் புடவையை விருந்தாளிகளுக்குக் காட்டிக் கொண்டிருந்தபோது, சமையல்காரரின் உரத்த குரலை அபர்ணா கேட்டாள்.

"கோயம்புத்தூர்ல இருந்து பூ வந்திருச்சு. அப்புக்குட்டி... பூ வந்திருச்சு... முல்லைப் பூ...''

ஜரிகைப் புடவையைக் கட்டிலில் வீசிவிட்டு அபர்ணா வாசலுக்கு ஓடினாள். ஒரு பழைய வாடகைக் காரிலிருந்து சமையல்காரரும் வேறு சிலரும் சேர்ந்து பூக்கூடைகளை வெளியே எடுத்துக்கொண்டிருந்தார்கள். கோணியால் கட்டப்பட்டிருந்த புதிய கூடைகள். சமையல்காரர் சத்தமாகக் கூறினார்: "ரெண்டல்ல... மூணில்ல... நாலில்ல... ஒன்பது கூடை மலர்ந்த பூக்கள்...''

அவருடைய சந்தோஷத்தின் வெளிப்பாடாக சிவந்து நீண்ட பற்கள் வெளியே தெரிந்தன. அவர் ஒரு கூடையின் மூடியைக் கழற்றி நீக்கினார்.

"சாமந்திப் பூ இருக்கு...'' அவர் சொன்னார்.

"திறக்கவேணாம் அச்சுதா. திறந்தா நாளைக்கு எல்லாமே கரிஞ்சுபோகும்.'' அபர்ணா கூறினாள். "நாளை அப்புக்குட்டியின் தலையில் அச்சுதன் மாலையைக் கட்டி அணிவிப்பாரு.

தெரியுதா?

பந்தலில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள் சிரித்தார்கள்.

"உங்களுக்கு மாலை கட்டவும் தெரியுமா அச்சுதன் நாயர்?'' தாமஸ் மாஸ்டர் கேட்டார். தட்டின்மீது வண்ணத் தாள்களைக்கொண்டு உண்டாக்கப்பட்ட தாமரை மலர்களை தாமஸ் மாஸ்டர் பதித்துக்கொண்டிருந்தார். அவர் ஒரு மேஜையின்மீது வைக்கப்பட்டிருந்த நாற்காலியில் நின்றிருந்தார். அவர் பேசும்போதெல்லாம், அந்த நாற்காலி அசைந்தது.

"உங்களுக்கு சமையல் பண்ண மட்டுமே தெரியும்னு நான் நினைச்சேன் அச்சுதன் நாயர்...'' தாமஸ் மாஸ்டர் கூறினார்:

ss

"மாலை கட்டுறதுக்கு நீங்க எப்போ படிச்சீங்க? நங்ஙேலி பிராமண மடத்துக்கு நீங்க கத்துக்க போயிருந்தீங்களா?''

"இங்க பாருங்க... தாமஸ் மாஸ்டர். நீங்க மனசுல தோணுறதையெல்லாம் சொன்னா, அதைக் கேட்டுக்கிட்டு இருக்கிறவனில்ல இந்த அச்சுதன்.''

"கண்ணு... நான் இப்போ என்ன மனசுல தோணியதைப் பேசிட்டேன்? கண்ணு... நீ சாட்சியா இருக்கேல்ல? நீயே சொல்லு. மனசுல தோணுற எதையாவது நான் கூறினேனா?''

அபர்ணா பதில் கூறவில்லை. பூக்கூடைகளை பணியாட்கள் ஒவ்வொருவராக கிழக்குப் பக்கமிருந்த அறைக்குக் கொண்டு சென்றார்கள். அபர்ணா சந்தோஷத்துடன் அவர்களைப் பின்பற்றிச் சென்றாள்.

"கிழக்குப்பக்க அறையில பூவை வைக்கவேணாம்.'' பாட்

"கிழக்குப்பக்க அறையில பூவை வைக்கவேணாம்.'' பாட்டி கூறினாள்: "கிழக்குப் பக்க அறையில... அதிகாலையில சூரியன் வரும்ல? அதனால வடக்குப் பக்க அறையில வைக்கறதுதான் நல்லது. எடு... அச்சுதா. வடக்குப் பக்க அறையில... நல்ல புதிய பாயை விரிச்சு... அங்க வச்சா போதும். கொஞ்சம் நீர் தெளிக்கணும்...''

அச்சுதன் திருவாதிரை நடனத்தின் அசைவுகளை மனதில் நினைத்தவாறு பூக்கூடைகளை ஒவ்வொன்றாக எடுத்து வடக்குப் பக்க அறைக்கு மாற்றினார்.

"இங்க பார்த்த பூக்களை மாலையா கட்டுறதுக்கு யார் இருக்காங்க?'' அவர் கேட்டார்.

"வடக்குப் பக்கம் யாரோட சத்தம் கேக்குது?''

"அது பெண்களோடது.''

"அவங்களை அழைச்சு மாலைகட்ட சொல்லுங்க. எல்லாரும் இன்னைக்கு இங்க சாப்பிட்டுட்டுப் போனா போதும்னு சொல்லுங்க...''

வீட்டில் முல்லைப் பூவின்... சாமந்தியின்... துளசியின் வாசனைகள் பரவின.

"நாராயணி எங்கே?'' பாட்டி கேட்டாள்.

"நாராயணி அம்மா எங்க போனாங்க?''

"குளிக்கப் போயிருப்பாங்களோ?''

"சாப்பாட்டிற்குப்பிறகு நான் நாராயணியைப் பார்க்கல...''

"அம்மா பழைய பொருளுங்க வச்சிருக்கற அறைக்குப்

பின்னால நின்னுக்கிட்டிருக்காங்க.''

"பழைய பொருளுங்க வச்சிருக்கிற அறைக்குப் பின்னால ஏன் போய் நிக்கணும்? அங்க காடும் கொடிகளுமா இருக்கு. பாம்பு கடிக்கும். போய்க் கூப்பிடு... அச்சுதா. இந்த நாராயணிக்கு என்ன ஆச்சு? என் கடவுளே! நாளைக்கு ஒரு மங்கள நிகழ்ச்சி நடக்கப்போகுது. வீடு முழுசும் விருந்தாளிங்க... அவ பழைய பொருளுங்க வைக்கப்பட்டிருக்குற அறைக்குப் பின்னால போய் நின்னுகிட்டிருக்கா! ஆளுங்க என்ன நினைப்பாங்க?''

"ஆளுங்க என்ன நினைப்பாங்க? நாராயணி அம்மாவோட நோய் குணமாகலைன்னு நினைப்பாங்க. பத்து வருஷம் சிகிச்சை செஞ்சும் நோய் குணமாகலைன்னு நினைப்பாங்க. அப்படியில்லாம வேறென்ன?''

"பேசாம இரு... அச்சுதா. நீ போய் அவளை இங்க அழைச்சிட்டு வா...''

"அம்மாவுக்கு பைத்தியம் குணமாகலைன்னு எல்லாருக்கும் தெரியும் பாட்டி. நீங்க ஏன் அதை ரகசியமா வச்சிக்கிட்டிருக்கீங்க? அபர்ணா சத்தமாக சிரித்தாள்.

"உன்னைத் திருமணம் செஞ்சுக்கப்போற ஆளோட வீட்டைச் சேர்ந்தவங்களுக்கும் இதை அறிவிச்சிடணும்னு நீ சொல்றியா? பைத்தியம் பிடிச்சவளோட மகளை சுய உணர்வுள்ளவங்க திருமணம் செஞ்சுக்குவாங்களா?''

"எதையும் மறைச்சு வைக்கறதுல எனக்கு விருப்பமில்லை.''

"அப்படின்னா... இப்பவே நீ உன் அம்மாவுக்கு பைத்தியம் பிடிச்சிருக்குன்னு அவங்களுக்கு தந்தி அடிச்சிரு. தெரியுதா? உள்ளேபோய் உட்காரு. நீ பந்தலுக்குப் போக வேணாம். மணப்பெண் இப்படி ஓடிப் பாய்ஞ்சு நடந்து திரியறது நல்லதில்ல. ஆளுங்களை எதையாவது பேசவைக்காதே.''

அபர்ணா மீண்டும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்த தன் படுக்கையறைக்குள் நுழைந்தாள். பக்கத்து வீடுகளைச் சேர்ந்த பெண்கள் அவளுடைய ஆடைகளை எடுத்து திருப்பியும் புரட்டியும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். தன் தாய் தலையை குனிந்துகொண்டு வாசலுக்கு வந்துகொண்டிருப்பதை அபர்ணா பார்த்தாள். அவள் மீண்டும் அறைக்கு வெளியே ஓடினாள்.

"அம்மா... நீங்க எங்கே இருந்தீங்க?''

"நான் குளக் கோழியைப் பார்த்துக்கிட்டிருந்தேன்.''

"நாராயணீ... நீ எதுவுமே பேசாம உள்ளேபோய் உட்காரு. குளக் கோழியைப் பார்க்க போனதா நீ யார்கிட்டயும் சொல்ல வேணாம்.''

"சொல்லல அம்மா. நான் குளக் கோழியைப் பத்தி சொல்லமாட்டேன்.''

"நாராயணீ... நீ குளிச்சிட்டியா?''

"இல்லை... அம்மா.''

"அப்படின்னா நீ அபுவை அழைச்சிக்கிட்டு குளத்துக்குப் போ...''

"சரிம்மா...''

அபர்ணா தன் தாயுடன் சேர்ந்து குளத்தைநோக்கி நடந்தாள். அசோக மரத்திற்குக் கீழே பிரம்பு நாற்காலிகளில் அமர்ந்திருந்த மாமன்மார்கள் எழுந்தார்கள்.

"இப்போதா... நாராயணீ... உன்னோட நல்லதுக்குத்தான் நாங்க எல்லாத்தையும் செஞ்சு தந்தோங்கறதை உன்னால புரிஞ்சிக்க முடியுதில்ல..? ரெண்டு லட்சம் கொடுத்த காரணத்தாலதானே இந்த அளவுக்கு நல்ல குணம் கொண்ட ஒரு டாக்டர் உன் மகளைத் திருமணம் செஞ்சுக்க சம்மதிச்சார்? உண்ணிமேனனைக் கட்டாயப்படுத்தி சொத்து முழுசையும் உன் பேருக்கு மாத்தியதாலதானே இவையெல்லாம் நடந்தன? அப்போ நீ நினைச்சே... நாங்க மிகப்பெரிய பாவிகள்னு. இப்போ?

அவையெல்லாம் உன் நல்லதுக்காக செய்தவைன்னு இப்போ புரிஞ்சிக்கிட்டியா?''

"பேரு மாற்றியிருக்கவேண்டிய அவசியமில்ல. அவரோட அம்மா கொடுத்த சொத்துதானே? அதை என் பேருக்கு மாத்தியிருக்கத் தேவையில்ல.''

"பிறகும்... சம்பந்தமில்லாம பேச ஆரம்பிச்சிட்டியா? மனுஷப் பிறவியெடுத்தா, கொஞ்சமாவது நன்றி இருக்கணும் நாராயணீ... உனக்காக நாங்க இதையெல்லாம் செஞ்சும்...''

"எதுவுமே செய்யாமலிருந்தா... அபுவுக்கு ஒரு அப்பா இருந்திருப்பாரு. அபுவோட விளையாடுறதுக்கு ஒரு அப்பா....''

"சொத்தை எழுதி வாங்கிய காரணத்தாலதான் உண்ணி மேனன் ஊரைவிட்டு போயிட்டார்னு நீ நினைச்சுக்கிட்டு இருக்கியா? அவருக்கு வேற பெண் இருந்தா. அவளையும் அழைச் சிக்கிட்டுதான் இங்கேயிருந்து போனார்.''

"வாங்கம்மா. இருட்டுறதுக்குள்ளே நாம குளிப்போம்.''

அபர்ணா தன் தாயின் கையைப் பிடித்து இழுத்தாள். தாயின் உயிர்ப்பற்ற கண்களும், எப்போதும் வியர்த்துக்கொண்டிருக்கும் மேலுதடும் அவளுக்குள் இரக்க உணர்வை எழச்செய்தன.

"உன் அப்பாவுக்கு நான்னா உயிரு. யார் சொன்னாலும் நீ நம்பாதே.''

அந்த அதிர்ஷ்டமற்ற பெண் முணுமுணுத்தாள்.

"இல்லம்மா. யார் சொன்னாலும் நான் நம்பமாட்டேன்.''

நீரில் இறங்கி நின்றபோது அபர்ணா கேட்டாள்:

"அம்மா. நான் உங்களோட முதுகைத் தேய்ச்சுவிடட்டுமா?''

"வேணாம்... நான் உன் முதுகைத் தேய்ச்சு விடுறேன்.''

தன் பின்பகுதியின் இடது பக்கத்தில் இருப்பதாகக் கூறப் படும் மருவைப் பற்றிய கவலை அபர்ணாவிற்கு உண்டு. அது தன் புதிய மணமகனின் கண்ணில் படும்போது அவனுக்கு வெறுப்பு தோன்றுமோ? மணமகன் தன் மணப்பெண்ணை நிர்வணமாகப் பார்க்கவேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பானோ?

தன் தாயிடம் பேசி அப்படிப்பட்ட சந்தேகங்களைத் தீர்ப்பதற்கு அவள் முயற்சிக்கவில்லை. பாவம்... அம்மாவிற்கு என்ன தெரியும்? தனக்கு பத்து வயது நடக்கும்போது, தந்தை திடீரென ஒரு இரவுப்பொழுதில் வீட்டைவிட்டு ஓடிவிட்டார். காலையில் கண்விழித்துப் பார்த்தபோது, தந்தையை அங்கு எங்குமே பார்க்கமுடியவில்லையென்று தாய் கூறினாள். குருவாயூருக்கும் தந்தையின் ஊருக்கும் ஆள் அனுப்பினார்கள். பிரயோஜனமில்லை. பிறகு... காசிக்குப் போனவரும் பழனிக்குப் போனவரும் சபரிமலைக்குப் போனவரும் புட்டபர்த்திக்குப் போனவரும் கூறினார்கள்... தந்தையின் உருவச் சாயலில் இருந்த ஒரு துறவியை அவர்கள் ஒவ்வொருவரும் பார்த்ததாக. தந்தை கூறியதாக வார்த்தைகளை மனுதர்மத்திற்கேற்றபடி அவர்கள் படைக்கவும் செய்தார்கள். தன் தாய் மனநிலை பாதிப்பில் அபயம் தேடிக்கொண்டாள். அபிப்ராய வெளிப்பாட்டிற்கான விளக்கம் அதுவாகத்தான் இருந்தது. அந்த காரணத்தால் மட்டுமே தன் சகோதரர்களின் கோபத்திற்கு இரையாகாமல் அந்த வீட்டில் அபர்ணாவின் தாய் ஒதுங்கி வாழ்ந்தாள்.

தாய் குளித்து முடித்தவுடன் அபர்ணா கூறினாள்:

"தனியா போயிடுவீங்கல்ல..? நான் துணியைத் துவைச்சிட்டு மெதுவா வர்றேன்.''

தாய் குளத்திலிருந்து வெளியே வந்தாள். வானம் இருண்டு கொண்டிருந்தது. வியாழ நட்சத்திரம் உதித்து நின்று கொண்டிருப்பதை அபர்ணா பார்த்தாள். "தன் மணமகன் இந்த நட்சத்திரத்தைப் பார்ப்பானா?' அவள் நினைத்துப் பார்த்தாள். ஈரானுக்கு அவனுடன் சேர்ந்து போகும்போது அம்மா அழுவாளா? அம்மாவுடன் சேர்ந்து குளத்திற்கு தனக்கு பதிலாக யார் வருவார்கள்? அம்மாவைப்பற்றி உண்டாகக்கூடிய குற்றஉணர்வு ஒரு வேதனையைப்போல நெஞ்சுக்குள் பரவுவதை அபர்ணா உணர்ந்தாள். அம்மாவுக்கு யார் பால்கஞ்சி கொடுப்பார்கள்?

கண்ணீரைத் துடைத்துக்கொண்டு குளத்தைவிட்டு வெளியே வந்தபோது, மாமரத்திற்குக்கீழே அம்மா நின்றுகொண்டிருப்பதை அபர்ணா பார்த்தாள். சுமார் மூன்றடி தூரத்தில் தாடியும் முடியும் வளர்த்த ஒரு பிச்சைக்காரர் நின்றிருந்தார். கருப்புநிற ஆடையணிந்த ஒரு வயதான மனிதர்... அந்த மனிதர் வாசலில் பணிசெய்து கொண்டிருப்பவர்களில் கண்களை ஏமாற்றிவிட்டு எப்படி குளத்திற்கருகில் வந்தார்? அபர்ணா தனக்குத்தானே கேட்டுக்கொண்டாள். அந்த மனிதரைப் போகச்சொல்லி

அம்மா கூறலாமே! சாயங்கால வேளையில் பிச்சைக்காரர் கள் வருவதில்லையே! பைத்தியமாக இருக்குமோ? அம்மா விடம் அந்த மனிதர் பேசுவதைப்போல அபர்ணாவிற்குத் தோன்றியது.

"என்னைக் கொல்றதுக்குதான் அவங்க திட்டமிட்டாங்க. விஷம் கலந்த பாலை அறையில வச்சாங்க. வாசனை பிடிச்சு பார்த்தப்போ எனக்குப் புரிஞ்சிடுச்சு. அப்போ வெளியேறிட்டேன். கொல்றதுதான் நோக்கம்ன்ற விஷயம் உனக்குத் தெரியுமா?''

"ம்...''

"அப்படின்னா நான் வந்திருக்கவேண்டியதில்ல... இல்லியா?''

"ம்...''

அபர்ணா வேகமாக அவர்களுக்கு அருகில் வந்தாள். யாரென்று தெரியாத மனிதர் அவளை ஒருமுறை பார்த்துவிட்டு, வேலியைநோக்கி நடந்தார்.

"சொல்லுங்க அம்மா. அது யாரு? என் அப்பாவா?''

"இல்ல... அது... உன் அப்பா இல்ல...''

"பிறகு... அது யாரும்மா? அந்த ஆளு உங்ககிட்ட ஏன் பேசணும்?''

"அவரு ஒரு பைத்தியம் பிடிச்சவரு. பாதைதவறி வந்திருக்கணும். விருந்துதானே? உணவு கிடைக்கும்னு நினைச்சு வந்திருக்கலாம்.''

"அப்படியா? இப்போதான் எனக்கு சரியா மூச்சுவிட முடியுது. நான் நினைச்சேன்... என் அப்பா காசியில இருந்து திரும்பி வந்துட்டார்னு...''

"உன் அப்பா பார்க்குறதுக்கு பேரழகனா இருப்பாரு.''

தன் தாய் இந்த அளவிற்கு அழகாக சிரிப்பதை அபர்ணா இதற்கு முன்பு பார்த்ததேயில்லை. அதனால், அதிக சந்தோஷத்தால் அவளும் சிரித்தாள்.

uday011022
இதையும் படியுங்கள்
Subscribe