டேஞ்சரஸ் ஜக்கி! எதிப்புக் கொடி பிடிக்கும் ஆன்மீக உலகம்

/idhalgal/eniya-utayam/dangerous-juggy-spiritual-world-holds-flag-opposition

"சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு

நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.'

-என்கிறார் வள்ளுவர்.

தரையை வேகமாகக் கைகளால் அடித்தால், அப்படி அடித்தவர்களுக்குத்தான் அது வலியை ஏற்படுத்தும். அதுபோல், ஆத்திரக்காரர்கள் வெளிப்படுத்தும் கோபமும், அவர்களுக்கே பாதிப்பைத் தரும் என்று இந்தக் குறள் மூலம் உணர்த்துகிறார் வள்ளுவர்.

இந்தக் குறள், இப்போது ஈஷா மைய ஜக்கிக்கும் அவரது கும்பலுக்கும்தான் மிகப் பொருத்தமானதாக இருக்கிறது.

ஜக்கியின் அத்தனை ஆபாச சேட்டைகளையும், மோசடிகளையும் நமது நக்கீரன் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்திருக்கிறது. அதனால் நக்கீரனை பல வகையிலும் தாக்கி வருகிறார்கள் ஜக்கியின் அடிப்பொடிகள். இதற்கெல்லாம் நாம் கவலைப்படவில்லை. அதே சமயம், ஜக்கியின் ஆபாச பாலியல் அத்துமீறல் விவகாரங்களும், அவர் ஏகபோகமாகக் குவித்திருக்கும் பல லட்சம் கோடி அளவிலான சொத்துகளும், இப்போது ஜக்கி தரப்பிற்கு எதிரான விளைவுகளையே ஏற்படுத்தி வருகின்றன.

இத்தனை காலமாக ஆன்மீக மயக்கத்தில், ஜக்கியை உண்மையான துறவி என்றும், அவரது ஈஷா மையத்தை அறச்செயல்கள் நிறைந்த ஆசிரமம் என்றும் நம்பி வந்த, பலரும் இப்போது "அடப் பாவிகளா' என்று திகைத்து, அவர்களைச் சபிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

போதாக்குறைக்கு, தனது கார்ப்பரேட் ஈஷா மையத்தின்மூலம் சைவ சமய ஆன்மிகத்தின் நெறிகளை உருக்குலைத்து வரும் ஜக்கிக்கு எதிராக, தமிழகத்தின் புகழ்வாய்ந்த ஆதீன கர்த்தர்களும், ஆன்மிக அன்பர்களும்கூட, தங்கள் மனக் கொதிப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

ஜக்கியை நக்கீரன்மூலம் நாம் அம்பலப்படுத்தி யதைக் கண்ட இப்படிப்பட்ட சைவ சமயப் பெருமக்கள், நமது நிருபர் தம்பிகள்மூலம் நக்கீரனில் பதிவு செய்திருக்கும் கருத்துக்கள், பல தரப்பிலும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன.

அவர்களின் கருத்துகளில் சிலவற்றை "இனிய உதயம்' வாசகர்களான நீங்களும் அறிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில், உங்கள் பார்வைக்கு இங்கே வைக்கிறேன்.

குறிப்பாக-

=சைவ இலக்கிய ஆன்மிக விரிவுரையாளரான மாரியப்பன், பல கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். இவர், 2010-ல் அப்போதைய துணை முதல்வர் ஸ்டாலினின் அவர்களிடமிருந்து தமிழறிஞர் பட்டம் பெற்றவர். அவர் சொல்லும்போது, "ஈஷா புகுத்திவரும் வழிபாட்டு முறைகளையும் சடங்குகளையும் சைவ சமயம் ஏற்றுக்கொள்வதில்லை. அப்பழுக்கற்ற ஒழுக்கத்தை மட்டுமே சைவம் வலியுறுத்துகிறது. ஈஷாவில் வைக்கப்பட்டிருக்கும் தியான லிங்கம், 28 ஆகமங்களுக்கு உட்பட்டு அமைக்கப்படவில்லை. பணத்தாசையால் அவரவர் இஷ்டத்துக்கும் சிவலி

"சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு

நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.'

-என்கிறார் வள்ளுவர்.

தரையை வேகமாகக் கைகளால் அடித்தால், அப்படி அடித்தவர்களுக்குத்தான் அது வலியை ஏற்படுத்தும். அதுபோல், ஆத்திரக்காரர்கள் வெளிப்படுத்தும் கோபமும், அவர்களுக்கே பாதிப்பைத் தரும் என்று இந்தக் குறள் மூலம் உணர்த்துகிறார் வள்ளுவர்.

இந்தக் குறள், இப்போது ஈஷா மைய ஜக்கிக்கும் அவரது கும்பலுக்கும்தான் மிகப் பொருத்தமானதாக இருக்கிறது.

ஜக்கியின் அத்தனை ஆபாச சேட்டைகளையும், மோசடிகளையும் நமது நக்கீரன் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்திருக்கிறது. அதனால் நக்கீரனை பல வகையிலும் தாக்கி வருகிறார்கள் ஜக்கியின் அடிப்பொடிகள். இதற்கெல்லாம் நாம் கவலைப்படவில்லை. அதே சமயம், ஜக்கியின் ஆபாச பாலியல் அத்துமீறல் விவகாரங்களும், அவர் ஏகபோகமாகக் குவித்திருக்கும் பல லட்சம் கோடி அளவிலான சொத்துகளும், இப்போது ஜக்கி தரப்பிற்கு எதிரான விளைவுகளையே ஏற்படுத்தி வருகின்றன.

இத்தனை காலமாக ஆன்மீக மயக்கத்தில், ஜக்கியை உண்மையான துறவி என்றும், அவரது ஈஷா மையத்தை அறச்செயல்கள் நிறைந்த ஆசிரமம் என்றும் நம்பி வந்த, பலரும் இப்போது "அடப் பாவிகளா' என்று திகைத்து, அவர்களைச் சபிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

போதாக்குறைக்கு, தனது கார்ப்பரேட் ஈஷா மையத்தின்மூலம் சைவ சமய ஆன்மிகத்தின் நெறிகளை உருக்குலைத்து வரும் ஜக்கிக்கு எதிராக, தமிழகத்தின் புகழ்வாய்ந்த ஆதீன கர்த்தர்களும், ஆன்மிக அன்பர்களும்கூட, தங்கள் மனக் கொதிப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

ஜக்கியை நக்கீரன்மூலம் நாம் அம்பலப்படுத்தி யதைக் கண்ட இப்படிப்பட்ட சைவ சமயப் பெருமக்கள், நமது நிருபர் தம்பிகள்மூலம் நக்கீரனில் பதிவு செய்திருக்கும் கருத்துக்கள், பல தரப்பிலும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன.

அவர்களின் கருத்துகளில் சிலவற்றை "இனிய உதயம்' வாசகர்களான நீங்களும் அறிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில், உங்கள் பார்வைக்கு இங்கே வைக்கிறேன்.

குறிப்பாக-

=சைவ இலக்கிய ஆன்மிக விரிவுரையாளரான மாரியப்பன், பல கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். இவர், 2010-ல் அப்போதைய துணை முதல்வர் ஸ்டாலினின் அவர்களிடமிருந்து தமிழறிஞர் பட்டம் பெற்றவர். அவர் சொல்லும்போது, "ஈஷா புகுத்திவரும் வழிபாட்டு முறைகளையும் சடங்குகளையும் சைவ சமயம் ஏற்றுக்கொள்வதில்லை. அப்பழுக்கற்ற ஒழுக்கத்தை மட்டுமே சைவம் வலியுறுத்துகிறது. ஈஷாவில் வைக்கப்பட்டிருக்கும் தியான லிங்கம், 28 ஆகமங்களுக்கு உட்பட்டு அமைக்கப்படவில்லை. பணத்தாசையால் அவரவர் இஷ்டத்துக்கும் சிவலிங்கம் அமைப்பது பாவச்செயலாகும். அதுபோல் கோவிலின் அருகில் வசிப்பவர் கள் யாராவது இறந்துவிட்டால் கூட ஆகமங் களின் படி அந்தக் கோவிலின் நடையை உடனே சாத்திவிடுவார்கள். அப்படி இருக்க, வழிபாடு நடத்தும் பகுதியில் சுடுகாடு அமைத்திருப்பது பெரும் பிழையாகும்' என்று கண்டித்திருக்கிறார்.

= இதையே வழிமொழியும் மதுரை ஆதீனம் அவர்களும், "மரபுவழி சைவ சித்தாந்தங்களில் நான் இதுவரை தியான லிங்கம் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை. இதெல்லாம் பணம் பண்ணுவதற்கான வழியே தவிர, மற்றபடி ஒன்றுமில்லை. தமிழ்நாட்டில் புதிதாக முளைத்துள்ள இந்த கார்ப்பரேட் சாமியார்கள், பவுர்ணமித் திருவிழா போன்ற விழாக்களை நடத்தி, மக்களைத் திரட்டி ஆண்கள், பெண்கள் என்கிற வித்தியாசமின்றி டான்ஸ் ஆடுவதெல்லாம் தவறானது. ஈஷா மையத்தில் பெண்கள் மூளைச்சலவை செய்யப்படுவதாக நானும் கேள்விப்பட்டேன்' என்று கூறியதோடு, "கோவில் வளாகத்திற்குள் உடலை எரியூட்டும் சுடுகாடு அமைத்திருப்பது சைவ சமய நெறிகளுக்கு எதிரானது' என்றும் அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார்.

அதேபோல் ஈஷா பௌர்ணமி விழாவுக்கு ஒருமுறை நேரில் சென்று பார்த்து அதிர்ந்ததாகவும், "மியூசிக் போட்டு வெளிநாட்டினர் கூச்சலிட்டு ஆடியதைக் கண்டு பதட்டமாகி அங்கிருந்து ஓடி வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

= இதேபோல் சிவகிரி ஆதீனம் அவர்களும், "எந்த வேதத்திலும், சுலோகத்திலும் தியான லிங்கம் என்ற சொல்லே இல்லை. இதை வைத்துக்கொண்டு ஈஷா மையம் வியாபாரம் செய்கிறது. அது கார்ப்பரேட் கம்பெனியாகவே இருக்கிறது' என்று கூறியிருக்கிறார்.

s

= இதே கருத்தை எதிரொலித்த தூத்துக்குடி மாவட்டம்- பெருங்குளம்- ஆதீனம் அவர்கள், "ஒவ்வொருவரும் வெவ்வேறு முறையைக் கடைப்பிடித்து சிவலிங்க வழிபாடு நடத்துவது ஆகம விதிகளுக்கு எதிரானது. இவர்களின் தியான லிங்கத்திற்கும் கடவுளுக்கும் கொஞ்சம்கூட சம்பந்தமில்லை' என்று அடித்துச் சொல்லியிருக்கிறார்.

= தெய்வத் தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் மூலம் அவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள் நம் நிருபர்களிடம் தங்கள் கருத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.

அப்போது, "இந்து சமய அறநிலையத்துறை உருவாகி 64 ஆண்டுகள் ஆகிவிட்டது. தமிழர் களின் கோயில்களைக் கைப்பற்றவேண்டும் என்ற சூழ்ச்சியால், அதைக் கலைத்துவிட்டு, பக்தர்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று போராட்டத்தைத் தூண்ட முயன்றார் ஜக்கி. உத்தரப்பிரதேச யோகி ஆதித்யநாத் போல, தமிழ்நாட்டில் தன்னை வடிவமைத்துக் கொள்ளத் துடிக்கிறார். கொல்லைப்புற வழியாக, பா.ஜ.க. மூலம் முதல்வராகும் கொடூரத் திட்டமும் ஜக்கிக்கு இருக்கிறது' என்று அதிரடியாகச் சொல்லியிருக்கிறார்கள்.

= சூரியனார்கோவில் ஆதீனம் உள்ளிட்ட மூன்று ஆதீனங்களும் ஜக்கி குறித்த கருத்துகளைப் பகிர்ந்திருக்கிறார்கள். அப்போது, ஜக்கி உருவாக்கி நடத்திவரும் பீடமாகட்டும், தியானக் கூடமாகட்டும், எல்லாமே தமிழர் பண்பாட்டுக்கு முரணானது. ஜக்கி அமைத்த ஆதி யோகி சிலை, அவரைப் போலவே இருக்கிறது. அதை பிரதமர் மோடி திறந்துவைக்கிறார். இதிலிருந்தே ஜக்கியின் நோக்கம் எப்படிப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ளலாம். உலகம் தோன்றிய காலத்திலிருந்தே உள்ள காட்டை அழித்து, அங்கிருந்த வனவிலங்குகளை அழித்து, மலைவாழ் மக்களின் இடங்களைப் பறித்து, தனது ஈஷா மையத்தை அமைத்திருக்கிறார் ஜக்கி என்று குற்றச்சாட்டுகளை ஒருசேர வைத்தார்கள்.

= இவர்களின் வரிசையில் ஜக்கி பற்றிய விமர்சனத்தை வைத்த கும்பகோணம் ஜோதிமலை இறைப்பணி திருக்கூடத்தின் நிறுவனரான திருவடிக்குடில் சுவாமிகள், விரிவாகவே வைத்திருக்கிறார். அதில்... "92-94 வாக்கில், அயோத்திப் பிரச்சினை பெரிதாக இருந்தபோது, இந்தியா முழுக்க இந்துத்துவா சக்திகள் ஆன்மீகவாதிகளைத் தூக்கி நிறுத்தினர். அப்படி வடநாட்டில் நிலைநிறுத்தப்பட்டவர்தான் யோகா குருவான ராம்தேவ். அதேபோல், தமிழகத்தில் அவர்களால் நிறுத்தப்பட்டவர்கள்தான் ஜக்கியும் நித்தியும். இதில் ஜக்கியை ஆன்மிகவாதியாகவும் ஏற்கமுடியாது, யோகா மாஸ்டராகவும் ஏற்கமுடியாது. இப்படிப்பட்ட நபர்களின் குற்றப் பின்னணி பற்றியும், பின்புலம் பற்றியும் அவர்கள் கவலைப்படவில்லை.

நாங்களும் ஆன்மிகப் பணி செய்கிறோம் என்று சில வீடியோக்களை அவர்கள் வெளியிட்டனர். அதற்கான செயல் திட்டங்களாக, மரம் வளர்க்கிறோம், உணவளிக்கிறோம், இயற்கையைப் பாதுகாக்கிறோம், கல்வி வளர்ச்சி மற்றும் மருத்துவம் போன்றவற்றில் ஈடுபடுகிறோம் என்ற போர்வையில் மக்களிடம் அவர்கள் இறங்கினார்கள். சிதிலமடைந்த கோவில்களைக் காட்டி, அதைச் சுத்தம் செய்து, கார்ப்பரேட் சிந்தனை யோடு அதை வீடியோ கவரேஜ் செய்து பரவலாக்கி, "பாருங்க.. நம்முடைய பண்பாடு எப்படி சிதைந்து போகிறது?' எனச்சொல்லி, மக்களிடமும் அதிகார மட்டத்தில் உள்ளவர்களிடமும் அதைப் பேசுபொருள் ஆக்கினார்கள். இதுதான் அவர்களின் உத்தி ஜக்கியின் சுயரூபம் தெரிந்து அவரிடமிருந்து தப்பியவர்களும் ஏராளம், சிக்கியவர்களும் ஏராளம். ஆறுகளைப் பாதுகாக்கிறேன் என்று அடுத்த திட்டமிடலைக் கையில் எடுத்தார் ஜக்கி. அந்த நேரத்தில், சிறுசிறு ஆன்மிகப் பணி செய்பவர்கள், ஆதீனங்கள் மற்றும் இறைப்பணி செய்பவர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்தார். ஒருசிலர் போனார்கள். ஆத்மார்த்தமாக ஆதீனங்கள் இந்தப் பணிகளைச் சரிவர செய்திருந்தால், ஜக்கி வாசுதேவ் போன்ற கார்ப்பரேட்டுகள், தமிழ்நாட்டில் கால் பதித்திருக்க முடியாது.

இங்கு என்னென்ன தேவைகள் இருக்கின்றன? என்னென்ன பிரச்சனைகள் இருக்கின்றன? இவற்றை எப்படி கொண்டுசென்றால் பரவலாகப் பேசப்படும்? இதை எப்படி உலக வர்த்தகத்துக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள முடியும்? என்கிற திட்டமிடலோடுதான், ஜக்கி அனைத்தையும் செய்தார். கார்ப்பரேட் சிந்தனையுடன் ஜக்கி கையிலெடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் உலக அளவில் செல்வதைப் பார்த்து இளைஞர்களும் இளம்பெண்களும் ஈர்க்கப்பட்டனர். அங்கே மனிதகுலத்துக்கும் ஆன்மிகத்துக்கும் எதிரான செயல்கள் நடக்கிறதென்று அவர்களில் பலரும் வெளியே வந்துவிட்டார்கள். ஈஷாவில் நடப்பது ஒன்றிரண்டு தவறல்ல. ஒட்டுமொத்தமும் தவறாகவே இருக்கிறது' என்று தெரிவித்த திருவடிக்குடில் சுவாமிகள்....

"ஜக்கியின் முகத்தைப் பார்த்தாலே, "நம்மை யாரும் எதுவும் பண்ணிட முடியாது' என்கிற திமிர் தெரியும். யார் அதிகாரத்துக்கு வந்தாலும் அவர்களை அழைத்துக்கொண்டு வரமுடியும் என்ற அரசியல் பலமும், மறுபுறம் சினிமா பிரபலங்களின் பலமும் அவருக்கு இருந்தது. இந்த மக்களுக்கு இது போதும் என்பதை நன்கு தெரிந்துகொண்டு வளர்ந்துவிட்டார் ஜக்கி. ஆரம்பித்தபோதே, இவரது பின்னணி குறித்து விசாரித்து களை எடுத்திருக்கவேண்டும். அப்படி செய்யாமல் விட்டுவிட்டதால், அபாய கூடாரமாக மாறி நிற்கிறது ஈஷா. பெண்களை ஆன்மிகம் என்ற போர்வையில் இழிவுபடுத்தும் நிலைக்கு போயிருக்கிறது.

விரைவில் இதற்கு ஒரு முடிவு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆன்மிகப் போர்வையில் புற்றீசல் போல் வளர்ந்து வருபவர்கள், ஒரு கட்டத்துக்கு மேல் அவர்கள் செய்யும் தவறுகளால், அவர்களாகவே அழிந்துவிடுவார்கள். இதற்கு பிரேமானந்தா, நித்தியானந்தா போன்ற உதாரணங்கள் உண்டு. விரைவில் ஜக்கிக் கும் ஒரு முடிவு வரும் என்ற நம்பிக்கை துளிர்க்க ஆரம்பித்திருக்கிறது.

தமிழக அரசு, ஈஷா யோகா மைய விவகாரத்தில் முழு கவனத் துடன் செயல்பட்டு, அங்கு நடக்கின்ற கொடுமைகளுக்கு ஒரு முடிவு கட்டவேண்டும். உண்மையை வெளிக்கொண்டு வருபவர்களுக்கு உரியமுறையில் முழுப் பாதுகாப்பு அளிக்கவேண்டும்' என்றெல்லாம் வேண்டுகோளையும் அவர் வைத்திருக்கிறார்.

= இவர்கள் சொல்வதுபோல், அயோத்தியை அரசியலாக்கி, தமிழகத்தில் தானும் ஒரு ஆதித்யநாத் போல் வடிவமைத்துக்கொள்ள ஆசைப்பட்டாரா? முதல்வர் பதவி மீது அவருக்குக் கண் இருந்ததா? என்கிற சந்தேகம் சிலருக்கு ஏற்பட்டிருக்கலாம்.

உண்மையில், கடந்த ஜனவரியில் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நடந்த சூட்டோடு, அங்கு சென்ற ஜக்கி, மீடியாக்களிடம், ​​500 ஆண்டு காலப் போராட்டத்திற்குப் பிறகு, இப்படியொரு "நாகரிக தருணத்தை' இந்தியா சந்தித்திருக்கிறது என்று புளகாங்கிதத்தோடு சொன்னார்.

மேலும் தனது டுவிட்டர் பக்கத்தில் "ராமர் கோவில் கட்டுவதற்காக பல தலைமுறைகளாக போராடிய மக்களுக்கு என் நன்றிகள். இது வெறும் கல்லால் கட்டப்பட்ட கோவில் அல்ல. பக்தி யாலும், தியாகத்தாலும் கட்டப்பட்டிருக்கிறது. கடந்த காலத்திற்கு மட்டு மல்ல; எதிர்காலத்துக்கும் ராமர் உத்வேகத்தைத் தரக்கூடியவராகத் திகழ்கிறார்.' என்றெல்லாம் உற்சாகத்தை அள்ளித்தெளித்தார்.

அதேபோல் தன் டுவிட்டர் பதிவிலேயே தன் ரோல் மாடல் யார் என்பதையும் அவர் உணர்த்தினார். அந்தப் பதிவில் "ஸ்ரீ யோகி ஆதித்யநாத் ஜீயின் தொலைநோக்குப் பார்வையும், தலைமையும் உத்தரப் பிரதேசத்தை வளர்ச்சி மற்றும் கலாச்சாரத்தின் உருவகமாக மாற்றுவதற்கு வழிவகுக்கின்றன. அவரது சுறுசுறுப்பும், மக்களின் நல்வாழ்வுக்கான அர்ப்பணிப்பும் உண்மையிலேயே பாராட்டுக்குரியது.' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

புடைசூழக் காட்சி தரும் இளம் பெண்கள், அரை நிர்வாணம், மெல்லிய ஆடை, நீரில் நனைந்து வரும் பிஞ்சுகளிடம் தீட்சை என்ற பெயரில் வக்கிரத்தோடு பிரயோகிக்கும் மன்மத வித்தைகள் இவற்றுக்கு நடுவே கோடிகோடியாய் குவித்து வைத்திருக்கும் கரன்சிகள் என, எல்லை மீறிய சொகுசு வாழ்வில் மூழ்கித் திளைத்த ஜக்கி, எந்த உயரத்தை அடைவதற்காக, மேலும் மேலும் சுழன்றுகொண்டிருந்தார் என்பதை அவரது இந்த வெளிப்பாடுகள் உணர்த்துகின்றன.

ஆனால், அவரது அரசியல் ஆசையும் பதவி ஆசையும் பலிப்பதற்கு முன்பாக, அவரது அத்தனை ஆபாசக் கூத்தடிப்புகளும் நக்கீரன் மூலம் பகிரங்கமாகி, அமெரிக்காவை நோக்கி அவரை ஓட வைத்திருக்கிறது. அவரது மாயைகள் இனி இங்கே எடுபடாது. அவரது ஆபாச வித்தைகளுக்கு தமிழகம் இனியும் இடம் தராது. இதையே ஜக்கிக்கு எதிரான ஆன்மீக உலகின் எழுச்சி காட்டுகிறது.

இன்று, ஆன்மிக உலகமே ஈஷாவின் அசிங்கங்களுக்கும் ஆபத்துக்களுக்கும் எதிராக அணிவகுக்க ஆரம்பித்திருப்பது, நல்ல அறிகுறியை உணர்த்துகிறது.

எனவே, ஆன்மிகத்தின் பேரில் மிகமிக மோசமான குற்றங் களை அரங்கேற்றிவரும் டேஞ்சரஸ் நபரான ஜக்கி மீதும் அவரது குற்ற சாம்ராஜ்யமான ஈஷா மையத்தின் மீதும் அதிரடியாக சட்ட நடவடிக்கைகள் விரைவில் பாய வேண்டும் என்பதே ஆன்மிக நம்பிக்கை உடையவர்களின் விருப்பமாக இருக்கிறது.

அனைவரின் குரலாக,

நக்கீரன்கோபால்

uday011224
இதையும் படியுங்கள்
Subscribe