அனகா சசிதரன் எட்டாவது வகுப்பில் படிக்கும்போது அது நடைபெற்றது.
மனம் திறந்து உரையாடுவதற்கு அவளுக்கு ஒரு தோழி இருந்தாள். அவளுடைய பெயரும் "அ' என்ற எழுத்தில்தான் ஆரம்பித்தது. அஞ்சலி... ஆனால், யாரும்... தெய்வம்கூட அவள் கைகுவித்து நின்றதை எந்தச் சமயத்திலும் பார்த்ததில்லை. அவளுடைய பெயரும் குணமும் தை மாதமும் பனியும்போல ஒட்டி இருப்பதல்ல. மாசி வெயிலும், மழையும்போல வேறுபட்டு நிற்பதுதான் அவையிரண்டும் என்று கூறலாம். புரிகிறதா?
அவளுடைய பெயருக்கான அர்த்தம் அனகாவுக்கோ, அவளுக்கு அந்தப் பெயரை வைத்த தந்தை- தாய்க்கோ தெரியாது. அவளுடைய பெயர் உதட்டிலிருந்து உதிர்ந்து விழும்போது, ஈரமான கன்னத்தைத் தொடுவதைப் போன்ற ஒரு குளிர்ச்சி நிறைந்த சுகம் தோன்றுகிற தென்று முன்பு ஒருமுறை அவளுடைய தந்தை அவளிடம் கூறினார்.
இளம்பெண்களின் பெயர்களில் குளிர்ச்சியும் வெப்பமும் ஈரமும் புத்துணர்ச்சியும் சிலிர்ப்பும்... அனைத்தும் இருக்கின்றன என்று கூறும் அவர், "என் தங்க மகளே... உனக்காக... தேவைப்பட்டா நான் உயிரை விடுவேன்' என்று ஒருநாள் அவளிடம் கூறினார். அந்த அளவுக்கு அவருக்கு மகள்மீது விருப்பம். புரிகிறதா?
""என் அப்பா எங்கிட்ட அப்படி எதுவும் சொல்ல மாட்டாரு. எங்கிட்ட சிரிக்கிறதுகூட இல்ல.'
"அது... உன்னோட அப்பாவுக்கு உன்மேல அன்பு இல்லாததால இல்ல. தெரியுதா? சில ஆளுங்க அப்படி தான். எல்லாத்தையும் மனசில வச்சுக்கிட்டு நடப்பாங்க. எதையும் வெளியே காட்டிக்க மாட்டாங்க. உன் அப்பா அப்படிப்பட்ட ஆளா இருப்பாரு.'
ஒருமுறை அனகாவுக்கு காய்ச்சல் வந்தபோது, கடவுளே இரவு முழுவதும் அவர் தூங்காமல் அவளுக்கு அருகிலேயே இருந்தார். இடையில் அவ்வப்போது காய்ச்சலின் நிலைமையைத் தெரிந்துகொள்வதற்காக அவளுடைய நெற்றியை அவர் தொட்டுப் பார்த்துக்கொண்டேயிருந்தார். சந்தேகம் தீராமல், தாடைக்குக் கீழே... கழுத்திலும் கையை வைத்துப் பார்த்தார். அவளுடைய கழுத்து மாடப்புறாவின் சங்குபோல துடிப்பதை தன்னுடைய சிகரெட் புகையின் கறைபடிந்த நகங்களைக் கொண்ட விரல்களால் தொட்டுத் தெரிந்துகொண்டார். இடையில் அவ்வப்போது துணியை நனைத்து அவளுடைய நெற்றியிலிருந்து வெப்பத்தை ஒற்றி எடுத்துக்கொண்டிருந்தார்.
"போதும்... இனி வந்து கொஞ்சம் படுக்கக்கூடாதா? மணி பன்னிரண்டாயிடுச்சு.'
முகத்தை நன்றாகக் கழுவி, பகல் நேரத்து அழுக்கு முழுவதையும் அகற்றி, ஈரத்தாளில் தேய்த்துவிட்டு, தலைமுடியை வாரி இழுத்துக்கட்டிவிட்டு, நைட்டி அணிந்து எவ்வளவு நேரமாக தூங்குவதற்காக அவரை எதிர்பார்த்து அவள் படுக்கையறையின் சிறிய தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் அமர்ந்திருக் கிறாள்?
"மகளைத் தனியா படுக்க வச்சிட்டு, நாம எப்படி தூங்குறது? குழந்தைக்கு நூற்றியொரு டிகிரி காய்ச்சல்...'
"அது அந்த அளவுக்கு பெரிய காய்ச்சல் இல்ல. தேவைப்பட்டா இன்னும் ஒரு க்ரோஸின் தந்தா போதும். பிறகு நீங்க வந்து படுங்க...'
"நீ படு... நான் இன்னும் கொஞ்ச நேரம் மகள்கிட்ட இருந்துட்டு வர்றேன்.'
வேறு யாருக்காவது நூற்றியொரு டிகிரி காய்ச்சல் இருந்தால்... பரவாயில்லை. தெரிகிறதா?' ஒரு க்ரோஸின் சாப்பிட்டா போதும்... தெரியுமா?' என்று அவர் கூறியிருப்பார். ஆனால், மகளுக்கு ஒரு தலைவலி உண்டானால், அவள் சற்று தும்மினால் அவருக்கு மனக்கவலை வந்துவிடும். "டாக்டர் சாரதாகிட்ட போய்க் காட்டலாம். இப்போ... டெங்கு, எலிக்காய்ச்சல்னு பல காய்ச்சல்களும் உள்ள காலம். கவனமா இருக்கணும்' என்று கூறுவார் அவர்.
"என் அப்பாவுக்கு அந்த அளவுக்கு அன்பு இருக்கு அஞ்சலி.'
"அம்மாவுக்கு?'
"அம்மாவுக்கும் இருக்கு. ஆனா அப்பாகிட்டதான் அதிகமான அன்பு.'
அம்மா, அப்பாவிடம் "நீங்க பொண்ணைக் கொஞ்சி பாழாக் கிடாதீங்க. பொண்ணு வேறொரு வீட்டுக்குப் போகப் போறவ?' என்று கூறுவாள். அவர் தன் மனைவியின் முகத்தைப் பார்த்து மெல்லிய சிரிப்பை வெளிப்படுத்துவார். "நமக்கு பாசம் செலுத்தவும் கொஞ்சறதுக்கும் மொத்தத்துல ஒரு மகள்தானே இருக்கா வத்சலா!' அவருடைய பதில்.
அதைக் கேட்டு தாய் கவலையுடன் கூறுவாள்: "அன்பு செலுத்த வேணாம்னு யார் சொன்னது? எதையும் அளவுக்கு மேலே செய்யாதீங்க. நான் சொல்றதுக்கு அர்த்தம் அதுதான்.'
அப்பாவுக்கு மகளிடம் இருப்பதைப்போல,மகளுக்கும் அப்பாவிடம் பெரிய அளவில் பாசம் என்ற விஷயம் வத்சலாவிற்குத் தெரியாதா? தாய்களுக்கு ஆண் பிள்ளை களிடமும், தந்தைகளுக்கு பெண் பிள்ளைகளிடமும் அதிக பாசம் இருக்குமென்ற விஷயத்தை "ரீடர்ஸ் டைஜஸ்ட்'டின் ஒரு பழைய இதழில் அவள் வாசித்திருக்கிறாள். இப்போது அவள் "ரீடர்ஸ் டைஜஸ்ட்' வாங்குவதில்லை. சந்தா கட்டாத தால், அதன் அஞ்சல்மூலமாக உள்ள வருகை மின்சாரம் போவதைப்போல திடீரென்று நின்றுவிட்டது. "இனிமே ஆங்கிலப் பத்திரிகைகளே நமக்குத் தேவையில்ல. மலையாளத்திலேயே முதல்தரமான வார இதழ்களும் மாத இதழ்களும் இருக்கு.' அவர் கூறினார். அப்படித்தான் அவள் "ரீடர்ஸ் டைஜஸ்ட்' வாசிப்பதை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக "க்ருஹலட்சுமி' வாசிக்க ஆரம்பித்தாள். ஆபத்தான விஷயங்கள் வெளியே தெரிந்தும் தெரியாமலும் நடந்துகொண்டிருக்கும் இந்த புதிய காலத்தில் வளர்ந்து வரக்கூடிய பெண் பிள்ளைகளை நன்றாக வளர்க்க வேண்டுமென்றால், நல்ல அறிவு தேவைப் படுகிறது என்ற விஷயம் அவளுக்குத் தெரியாதா?
அவர் மிகவும் அருமையாகப் படிப்பார். அதனால்தான் வலது கையில் சுண்டுவிரல், நடுவிரல் ஆகியவற்றின் நகங்கள் இப்படி சிகரெட் கறை படிந்து காணப்படு கின்றன. புத்தகத்தை வாசிக்கும்போது, அவருக்கு சிகரெட் புகைக்கவேண்டும். பாருங்கள்... அவருடைய ஒவ்வொரு கேடுகெட்ட செயலையும்! அவள் அவருடைய சிகரெட் பிடிக்கும் பழக்கத்திற்கு எதிராக முன்பே போராடவும், போராட்டம் காலப்போக்கில் தோல்வியடைந்ததும்.., சத்தியாக்கிரகத்தில் ஈடுபடவும் செய்திருக்கிறாள். அப்போது அவர் கூறுவார்: "அடியே அனகாவோட தாயே... சிகரெட் புகைக்கறது ஆரோக்கியத்திற்கு கெடுதல் உண்டாக்கக்கூடியது. கெட்ட விளைவுகளைத் தரக்கூடியது. ஆனா புத்தகம் வாசிக்கிறது ஆரோக்கியத்திற்கு நல்லது செய்யும். அதை அவர் விளக்கிக் கூறுவார்: "படிக்கறதால கிடைக்கக்கூடிய நன்மை' புகை பிடிக்கறதால கிடைக்கக்கூடிய கெட்ட விளைவைச் சரிபண்ணிடும். தெரியுதா?'
"அப்பாவோட மூச்சுக்கு சிகரெட்டோட வாசனை இருக்கும். அது

"அப்பாவோட மூச்சுக்கு சிகரெட்டோட வாசனை இருக்கும். அது எனக்கு ரொம்பப் பிடிக்கும் அஞ்சலி.'
அஞ்சலி பொட்டு வைத்திராத தன் நெற்றியைச் சுளித்தாள். "ஸ்மோக்கிங் ஈஸ் இஞ்ஜூரியஸ் டூ ஹெல்த். ஈவன் பாஸீவ் ஸ்மோக்கிங்..' இன்று காலையில்தான் அவள் அதைப் பார்த்தாள். அவளுடைய தந்தை ஒரு ஆங்கில நாளிதழையும் ஒரு மலையாள பத்திரிகையும் வாங்குகிறார்.
படிப்பதற்காக மட்டுமல்ல- தடையற்றகாலைக் கடன் கழிப்பிற்காகவும்தான்- தான் பத்திரிகைகள் படிப்பது என்ற விஷயத்தை அவர் ஒருமுறை கூறுவதை அவள் கேட்டிருக்கிறாள்.
சிகரெட் புகைக்காத அவர் வீட்டிற்கு வெளியே இருக்கும் கழிவறைக்குள் நுழையும்போது தன்னுடன் இரண்டு பத்திரிகைகளையும் எடுத்துச் செல்வார். திரும்பிவரும் போது இரண்டிலும் ஈரம் படர்ந்து கிடக்கும். அதைப் பார்க்கும்போது அவளுக்கு வெறுப்பு தோன்றும்.
"எனக்கு என் அப்பாகிட்ட ஒரு பாசமும் இல்லை...
அப்பாவின் ஒவ்வொரு செயலும்தான் அதற்குக் காரணம்.'
அவளுக்கு தன் தோழியின்மீது பொறாமை உண்டாகும் என்பதல்ல. தோன்றியிருக்கிறது... ஒருமுறையல்ல. பல நேரங்களிலும்...
"என் முடியைப் பாரு... இன்னைக்கு அப்பாதான் முடியை வாரிக் கட்டிவிட்டாரு.'
அம்மா சீவும்போது முடி இழைகள் சீப்பின் பற்களில் சிக்கி வேதனையைத் தரும்.
"அப்பா சீவுறப்போ?'
"வேதனையே தோணாது. பாப்பாத்தி தலைமுடிகளுக்கு நடுவுல நடந்துபோறதைப்போல தோணும்.'
பாப்பாத்தி என்றால் வண்ணத்துப் பூச்சி. வண்ணத்துப் பூச்சி என்றால்... பட்டர்ஃப்ளை.
"வண்ணத்துப்பூச்சி தலைமுடி இழைகளுக்கு நடுவுல நடந்து போறதைப்போல தோணும்- அப்பா தலைமுடியை வாரி விடுறப்போ இல்லையா?'
அப்பா, வண்ணத்துப்பூச்சியின் கால்களால் அவளுடைய தலைமுடியைச் சீவி, பின்னி, மடித்துக்கட்டி, முன்னால் இரு பக்கங்களிலும் எடுத்துவிட்டு, சற்று தூரத்தில் விலகி அவளைப் பார்த்துக்கொண்டு நின்றுவிட்டு, "அருமை!' என்று கூறினார். கண்ணாடியில் பார்த்தபோது, அழகு அதிகரித்திருப்பதைப்போல அவளுக்கும் தோன்றியது.
"அம்மா... இனிமே எல்லா நாட்கள்லயும் என் தலைமுடியை அப்பா வாரினா போதும்.'
"பிறகு அம்மான்னு சொல்லிக்கிட்டு இங்க நான் எதுக்கு இருக்கேன்?'
"அம்மா... உங்களுக்கு தலைமுடியை வாரிவிடத்தெரியல.'
"உன்னைப் பெத்தெடுக்கறக்கு எனக்குத் தெரியும். உன் அப்பாவுக்கு அது தெரியுமா?'
உண்மையைக் கூறட்டுமா? அனகாவின் தந்தை தன் மகளின் அனைத்து காரியங்களையும் பார்ப்பதில் அவளுக்குச் சிறிதுகூட மனவருத்தம் இல்லை. ஏழு வயதாகும் வரையில் அவளைக் குளிப்பாட்டியதும் அவர்தான். மூன்றாம் வகுப்பில் சேர்ந்தபோதுதான் அவர் அதை நிறுத்தினார். "மகள் வளர்ந்துட்டா. இனி தனியா குளிக்கணும்' என்று அவர் அவளிடம் கூறவும் செய்தார். "அப்பா... நீங்க என்னைக் குளிப்பாட்டணும்' என்று அவள் பிடிவாதம் பிடித்து அழுதபோது அவளுடைய தாய் கூறியதைக் கேட்க வேண்டுமா? "காலை நேரத்திலேயே பொண்ணை அழவைக்காதீங்க. நீங்க போய் குளிப்பாட்டுங்க' என்று அவள் கூறினாள். கருவேப்பிலை சேர்த்து காயவைத்த தேங்காய் எண்ணெய்யை தலையில் அழுத்தித் தேய்த்து, குளியலறையில் கொண்டுபோய் நிறுத்தி, நீலநிற வாளியில் குளிர்ச்சியாக விழுந்துகொண்டிருக்கும் நீரை பிளாஸ்ட்டிக் "கப்'பால் அள்ளி அவளுடைய சரீரத்தில் ஊற்றும்போதும், வாசனை சோப்பின் நுரையை தலையிலும் முகத்திலும் கால்களிலும் தடவித் தேய்க்கும்போதும் இரண்டு மூன்றுமுறை அவர் திரும்பத் திரும்பக் கூறினார்: "நீ வளர்ந்துட்ட மகளே. இனிமே அப்பா... நான் இதைச் செய்யமுடியாது. தெரியுதா?'
"அப்பா... நீங்க குளிப்பாட்டலைன்னா நான் பள்ளிக்கூடம் போகமாட்டேன். தெரியுதா?' என்பது அவளுடைய பதிலாக இருக்கும். அம்மா அப்போதும் எதுவும் கூறவில்லை.
அவளுக்கு பேசுவதற்கு மட்டுமல்ல- சற்று வாய்திறந்து சிரிப்பதற்குக்கூட தயக்கமாக இருந்தது. வீட்டையும் வாசலையும் வழக்கம்போல காலை வேளையில் பெருக்கி சுத்தம் செய்து, துணிகளைத் துவைத்துப்போட்டு, சோறும் குழம்பும் வைத்து... எல்லாவற்றையும் அவள் அருமையாகச் செய்வாள். மெதுவாக என்பது மட்டுமே விஷயம். இரவில் அருகருகே படுத்திருக்கும்போது, கல்லேன் பொக்குடனைப் பற்றியோ மயிலம்மாவைப் பற்றியோ அல்லது இரோம் சர்மிளாவைப் பற்றியோ ஏதாவது இரண்டு வார்த்தைகள் அவளிடம் கூறும்போது, அதைக் கேட்பதற்கும் அவளுக்கு ஆர்வம் இருக்காது. அதனால் அவள் திரும்பிப் படுப்பாள்.
"உங்கிட்ட இல்லாம வேற யாருக்கிட்ட நான் இதையெல்லாம் சொல்லுவேன்' என்று வருத்தத்துடன் அவர் மேலே சுற்றிக் கொண்டிருக்கும் காற்றாடியைப் பார்த்தவாறு மல்லாந்து படுத்திருப்பார். அப்போது பக்கத்து அறையில் காற்றாடி சுற்றிக்கொண்டிருக்கும் சத்தத்திலிருந்து அவர் தன் மகளுடைய மென்மையான குரலைப் பிரித்துப் பார்ப்பார். "நான் அப்பா பக்கத்துல படுத்துத்தூங்கணும்.'
அப்படி... அப்படி... அவள் வளர்ந்து... வளர்ந்து... எட்டாவது வகுப்பை அடைந்தாள்.
ஒருநாள் அதோ... அஞ்சலி வருகிறாள்- கையில் முந்தைய நாள் பேப்பருடன். அது இங்குமங்குமாக நீர் விழுந்து உலர்ந்து சுருக்கங்களுடன் காணப்பட்டது. சில எழுத்துகள் மறைந்து போயிருந்தன. அன்று அவளுடைய தந்தை காலைக்கடன் கழிப்பதற்காக நீண்ட நேரத்தை எடுத்திருந்தார். நடந்து... நடந்து குஞ்ஞாப்புவின் குளிர்பானக் கடைக்கு முன்னால் வந்து நின்றதும், அவள் கேட்டாள்:
"அனகா... நீ நேத்தைய நாளிதழைப் படிச்சியா?'
"அப்பா படிச்சிக் காட்டினாரு.'
மாலை நேரத்தில் கண்ணூர் லோக்கலில் வந்து இறங்கக் கூடிய அவர் குளித்து, தேநீர் பருகிவிட்டு காலை நேர நாளிதழைக் கையிலெடுப்பார். சாய்வு நாற்காலியில் படுத்தவாறு, நீளமான கால் வைப்புகளில் கால்களைத் தூக்கி வைத்துக்கொண்டு அவர் நாளிதழை வாசிப்பார். அப்போது அவள் அருகில் வந்து அமர்வாள். அவளுக்கும் கேட்கவேண்டும் என்பதற்காக அவர் வாசித்துக் கொண்டிருக்கும் சத்தத்தின் அளவைச் சற்று அதிகப்படுத்துவார். அவ்வாறு தன் தந்தையின் குரலின் வழியாகத்தான் அவள் ஊர் விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொண்டாள். அவரோ ஒரு தணிக்கையும் இல்லாமலே நாளிதழை வாசித்து அவளைக் கேட்கச் செய்தார். "கண்ட விஷயங்களையெல்லாம் பொண்ணுக்கு படிச்சுக்காட்டாதீங்க. பொண்ணு கெட்டுப்போய்டுவா. சொல்லி வைக்கிறேன்.'
அவள் கூறினாள்.
மகள் அனைத்தையும் அறிந்துகொண்டு வளரட்டுமே என்பது அவருடைய எண்ணமாக இருந்தது. அந்த வகையில் ஏழாவது வகுப்பை அடையும்போதே அவளிடம் சமூக உணர்வு உண்டாக ஆரம்பித்திருந்தது. கிராமத்தின் படிப்பகம், அதன் ஆண்டுக் கொண்டாட்டத்தினை முன்னிட்டு பள்ளிக்கூடக் குழந்தைகளுக்காக நடத்திய கட்டுரைப் போட்டியில் இரோம் சர்மிளாவைப் பற்றி அவள் கட்டுரை எழுதினாள். அவள் எழுதமட்டும் செய்யவில்லை. தெரியுமா? மூக்கில் குழாயுடன் படுத்துக்கிடக்கும் இரோம் சர்மிளாவின் ஒரு வரைபடத்தையும் அவள் வரைந்து வைத்திருந்தாள்.
"எல்லாத்தையும் படிச்சுக் காட்டினாரா?'
"ஆமா.'
"இதையும் படிச்சுக் காட்டினாரா?'
அவள் நாளிதழின் உள்ளூர் செய்திகள் கொண்ட பக்கத்தில் விரலை ஊன்றினாள். அங்கு ஈரம் படர்ந்து உலர்ந்த அடையாளங் கள் இருந்தன. "எட்டாவது வகுப்பில் படிக்கும் சிறுமியைக் கெடுத்த தந்தை கைதானார்!' அனகா அந்த செய்திக்கு மேலே வேகமாக ஒருமுறை கண்களை ஓட்டினாள்.
"கடவுளே... நாம ரெண்டுபேரும் படிச்சிக்கிட்டிருக்கறது எட்டாவது வகுப்புலதானே?' ரத்தத்தின் நிறம் திடீரென்று வெளுத்ததைப்போல அனகாவின் முகம் வெளிறி வெளுத்தது. அவள் வேகமாக அந்தச் செய்தி முழுவதையும் வாசித்தாள். வாசித்து முடித்தபோது அவளுக்கு மூச்சு அடைப்பதைப்போல தோன்றியது.
"என்ன? உன் அப்பா உனக்கு இதை வாசித்துச் சொல்லலியா?' அவள் எதுவும் கூறமுடியாமல் மூச்சைப் பிடித்துக்கொண்டு நின்றுகொண்டிருப்பதைத் தொடர்ந்தாள்.திடீரென்று அவளுடைய நெஞ்சு துடிக்க ஆரம்பித்தது. அனைத்தையும் வாசித்து கேட்கச்செய்து, அதை மட்டும் தன்னிடமிருந்து மறைத்துவைத்து, நாளிதழை மடித்து மார்பில் வைத்து, கால்களை கால் வைப்புகளில் மேலும் சற்று நீட்டி வைத்து, சாய்வு நாற்காலியில் கண்களை மூடியவாறு படுத்துக்கிடந்த தந்தையின் முகம் அவளுடைய மனதில் தோன்றியது.
"அந்த பேப்பரை இங்க தா.'
அஞ்சலி கூறினாள். நெருப்புக்கொள்ளியைக் கீழே போடுவதைப்போல அனகா நாளிதழைத் தோழியின் கையில் எறிந்தாள்:
"பேப்பர்ல தினமும் வருவது நெருப்புதான். வாசிச்சா கண்ணு. சூடாகிடும், தந்தை இவ்வாறு ஒருநாள் கூறியது அவளுக்கு ஞாபகத்தில் வந்தது.
"சில நாட்களுக்கு முன்னால பேப்பர்ல வந்திருந்தது... ப்ளஸ் டூ படிக்கும் மகளை அவளுடைய அப்பா...
அதையும் நீ பார்க்கலையா?'
"இல்லை... நான் பார்க்க வேணாம்.'
அப்பா எப்போதும் தனக்கு விருப்பமுள்ளதை மட்டுமே வாசித்துக் கேட்கச்செய்திருக்கிறார் என்பது அவளுக்குப் புரிந்து விட்டது. மறுநாளிலிருந்து பள்ளிக்கூடத்திலிருந்து வந்தவுடன், தந்தை ஆறு பத்திற்கான லோக்கலில் வந்திறங்கி, வீட்டிற்கு நடந்து நுழைந்து வருவதற்கு முன்பே, நாளிதழை எடுத்து தானே வாசிக்கவேண்டுமென்று அவள் தீர்மானித்தாள். அப்போதுதான் "மகளே' என்ற தந்தையின் அழைப்பினைப் போன்ற ஒரு அழைப்பினை அவள் கேட்டதும், திரும்பிப்பார்த்ததும், குளிர்பானக் கடைக் குள்ளிருந்து முகத்தில் ஒரு குளிர்பான சிரிப்புடன் நின்று கொண்டிருந்த குஞ்ஞாப்புவை அவள் பார்த்ததும்... தொடர்ந்து, "மகளே.... உனக்கு ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ், ஐஸ் போட்டுத் தரட்டுமா?' என்று அவர் கேட்டார். "எங்கிட்ட பைசா இல்லை' என்று அவள் கூறினாள்.
"மகளே... நான் உங்கட்ட பைசா கேட்டேனா?' என்று அவர் கேட்டார். "அடியே... இப்போ பள்ளிக்கூடத்தில மணி அடிக்கும்.
நீ வர்றியா? நான் போறேன்' என்று அஞ்சலி கூறியபோது, "நீ போ' என்று அவள் கூறினாள். உண்மையிலேயே குளிர்ச்சியாக ஏதாவது பருகவேண்டும்போல அவளுக்குத் தோன்றியது. தொண்டையும் வாயும் வெயிலில் உலரப்போட்டிருப்பதைப் போல வறண்டு காய்ந்து காணப்பட்டன. அந்த நேரத்தில் ஜூஸ் கடையில் யாருமே இல்லை.
"உள்ளே வந்து உட்காரு மகளே. நீ எனக்கு மகளைப்போல... புரியுதா? அதனாலதான் உனக்கு நான் இலவசமாக ஜூஸ் தர்றேன். எப்போ வந்தாலும் தருவேன். ஆனா உன் அந்த தோழி இருக்கறாளே! அவளோட பேர் என்ன? அவளுக்கு நான் ஒரு துளி ஜூஸ்கூட தரமாட்டேன். ஆணவம் பிடிச்சவ.'
முதுகிலிருந்து பள்ளிக்கூட பேக்கை எடுத்து பெஞ்சில் வைத்துவிட்டு, அவள் அங்கு அமர்ந்தாள். தூரத்தில் பள்ளிக் கூடத்தில் மணியடிப்பது கேட்பதைப் போல அவளுக்குத் தோன்றியது. ஜூஸைப் பருகி முடித்தபிறகும், அவள் சிறிது நேரம் அங்கேயே வெறுமனே அமர்ந் திருந்தாள். வெறுமனே என்று கூறமுடியாது. புரிகிறதா? அப்பா குழாய்க்கு அடியில் நிறுத்திக் குளிப்பாட்டுவது, இல்லாத ஜுரத்தை இருப்பதாக மனதில் கற்பனை செய்து, நள்ளிரவு வேளைவரை இடையில் அவ்வப்போது நெற்றியில் தொட்டுப் பார்த்தவாறு தூங்காமல் அருகில் அமர்ந்திருப்பது, வண்ணத்துப்பூச்சி சீப்பால் தலைமுடியைச் சீவிப் பின்னுவது... என் கடவுளே! இப்படி என்னவெல்லாம்... என்னவெல்லாம் அவளுடைய கண்களுக்கு முன்னால் கடந்து சென்றன.
"என்ன மகளே? இன்னைக்கு என்ன பந்த்தா? யாரைக் கொன்னுட்டாங்க?'
"என் தலை வலிக்குது அம்மா. ரேவதி டீச்சர் வீட்டுக்குப் போன்னு சொன்னாங்க.' அவளுக்கு அழுகை வந்தது.
அவள் பள்ளிக்கூடத்திற்குச் சென்றாளா? அவளுடைய சிவந்த கண்களையும் ஈரமான கன்னத்தையும் பார்த்து ரேவதி டீச்சர் அவ்வாறு கூறினாளா? அவளுக்கு உறுதியாகத் தெரியவில்லை. அது மட்டுமல்ல- வீட்டினை நோக்கி நடக்கும்போது, கடந்த எட்டு வருடங்களாக நடக்கக்கூடிய பாதையைத் தவறவிட்டு, பகவதி கோவிலின் வெளிச்சுவருக்கு அருகில் அவள் பாதை முடிந்து நின்றிருந்தாள். பாசி படர்ந்த, ஈரம் மாறி வெயிலின் வெப்பம் பட ஆரம்பித்திருந்த சுவரில் முகத்தை அழுத்தி வைத்தவாறு அவள் சிறிது நேரம் வெறுமனே அவ்வாறு நின்றிருந்தாள். அப்போது அவளுடைய முதுகிலிருந்த பேக்கைச் சுற்றி, அதில் பூவும் பூ மொட்டும் இருக்கின்றன என்ற எண்ணத்தில் இருக்கவேண்டும்- ஒரு தேனீ வட்டம் சுற்றி பறந்துகொண்டிருந்தது. கோவில் சுவருடன் சேர்ந்து நின்றுகொண்டிருந்த அரசமரத்தில் ஒரு தேன்கூடு இருந்தது. ஒருமுறை வழிபாட்டிற்காகச் சென்றிருந்தபோது, அவள் அதைப் பார்த்து "அப்பா... அதோ ஒரு தேன்கூடு' என்று கூறவும் செய்தாள். "வேகமா நட... தேனீ கொட்டிடும்' என்று அவர் கூறினார். இப்போது... இந்த நிமிடம் அரச மரத்திற்கு மேலேயுள்ள எல்லா தேனீக்களும் வந்து தன்னைக் கொட்டட்டும்' என்று அவள் நினைத்தாள்.
ஒருநாள் அவள் காலையில் கண் விழித்தபோது, நடப்பதற்குச் சற்று சிரமமாக இருந்தது. கால்களுக்கு மத்தியில், மேலே என்னவோ சிக்கிக் கிடப்பதைப்போல... தெரிகிறதா? அது மந்தமான தாயின் கண்களில் பட்டாலும், அவள் எதுவும் கேட்க வில்லை. தந்தை குளித்துவிட்டு வருவதற்கு முன்பு... சீக்கிரமே தோழியை எதிர்பார்த்துக் கொண்டு நிற்காமல் அவள் பள்ளிக்கூடத்தை நோக்கி நடந்தாள். தந்தையைப்போல தன்னைப் பார்த்து சிரித்தவாறு குளிர்பானக்கடையில் குஞ்ஞாப்பு நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தாள். எவ்வளவு ஜூஸ்களை... எப்படிப்பட்ட வகை வகையான ஜூஸ்களை...
அவள் பருகினாள்! தெரியுமா? மாதுளை ஒரு கிலோவின் விலை நூற்றைம்பது ரூபாய். எனினும், தயங்காமல் அவர் மாதுளையின் ஜூஸ் அடித்து அவளுக்குக் கொடுக்கவில்லையா? "குடி... ஒரு துளி மீதம் வைக்காம குடி... மாதுளை ஜூஸைக் குடிச்சா முகம் வெளுத்து சிவக்கும்.' குஞ்ஞாப்பு இவ்வாறு ஒவ்வொன்றையும் கூறிக்கொண்டிருந்தார்.
"அனகா... நீ ஏன் இப்படி நடக்குறே?'
அவளுடைய நடையில் வித்தியாசம் இருப்பதை ரேவதி டீச்சர் கவனித்தாள். மாணவிகளின் விஷயத்தில் டீச்சர் மிகவும் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பாள்.
"ரெண்டு நாளாவே அவ இப்படித்தான் நடக்கிறா டீச்சர்.'
அஞ்சலி கூறினாள். ரேவதி டீச்சர் அனகாவின் முகத்தையே கூர்ந்து பார்த்தாள். இப்போது உதடும் கண்களும் வெளிறிப்போய்க் காணப்பட்டன. மாதுளையின் ஜூஸ் பருகிய பிறகும்,
முகத்தில் ஒரு துளி ரத்தத்தின் பிரகாசமில்லை. குஞ்ஞாப்பு ஜூஸில் நீர் கலந்து கொடுத்திருப்பார். ஜூஸ் கடைக் காரர்களை கவனமாகப் பார்க்கவேண்டும். புரிகிறதா?
மிக்ஸியிலிருந்து விழக்கூடிய ஜூஸை ஏற்று வாங்கக்கூடிய ஜக்கிற்கு அடியில் நமக்குத் தெரியாமல் அவர்கள் தண்ணீரை மறைத்து வைத்திருப்பார்கள்.
"அம்மா எதுவும் சொல்லலையா?'
"இவளோட அம்மா யார்கிட்டயும் எதுவும் சொல்ல மாட்டாங்க... டீச்சர்.'
வகுப்பில் பாடம் நடந்து கொண்டிருப்பதற்கு நடுவில் அனுமதி பெற்று, அவள் பள்ளிக்கூடத்தின் வாசலுக்கு கிழக்குப் பகுதியில், அரசமரத்திற்கு அருகில் தார்ப்பாயைக் கொண்டு மேற்பகுதி மறைக் கப்பட்டிருந்த பெண் பிள்ளை களின் சிறுநீர் கழிக்கும் அறைக்குச் சென்றாள். ஆண் பிள்ளைகளின் கழிப்பறையின் மேற்பகுதி அவ்வாறு மறைக்கப் பட்டிருக்காது. அவள் திரும்பி வந்து அரைமணி நேரம் ஆவதற்கு முன்பே மீண்டும் டீச்சரிடம் அனுமதி கேட்டபோது, வகுப்பறையில் எல்லாரும் சிரித்தார்கள். அவள் சுருங்கினாள். சொந்த தோலுக்குள் சுருங்கப் பார்த்தாள்.
ரேவதி டீச்சர் மந்தபுத்தி கொண்டவள் அல்ல. அவள் உடனடி யாக மந்தபுத்தி கொண்ட தாயை அலைபேசியில் அழைத்தாள்.
"மகளோட அப்பா அலுவலகத்தில இருக்காரு. ஆறு பத்துக்கு வரும் லோக்கல்ல வருவாரு.'
"அவளோடு அப்பாவை இல்ல... உங்களைத்தான் நான் பார்க்கணும். உடனே வாங்க.'
"அய்யோ... ரேவதி டீச்சர்... நான்... நான் எதுக்கு?'
"உடனடியா மகளைக் கூட்டிக்கிட்டுப் போகணும்- வீட்டுக்கில்ல.. ஆஸ்பத்திரிக்கு.'
"அய்யோ!'
இரண்டு நாட்கள் கடந்தபிறகும் யாரும் அவளை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவில்லை. கொண்டு போக வேண்டிய தந்தை அலுவலகத்தில் ஆடிட் நடந்து கொண்டிருந்ததால் அதில் மூழ்கியிருந்தார். லோக்கல் வண்டியில் இருக்கும்போதும், அலுவலகத்தில் ஆடிட்டர்களுக்கு முன்னால் கோப்புகளின் குவியல்களுடன் இருக்கும்போதும், சிரமப்பட்டு நடந்துகொண்டிருக்கும் மகளுடைய முகத்தை மனதில் பார்த்து அவர் கவலைப்பட்டார். அனகாவுக்கோ... கடவுளே... ஒரு அடி நடக்கக்கூட முடியவில்லை. அப்போதுதான் இரண்டு "ஹெல்ப் லைன்' செயல்பாட்டாளர்கள் வீட்டிற்கு வந்தார்கள். ஒருத்தி சுடிதார் அணிந்திருக்க, இன்னொரு பெண் ஒரு கசங்கிய புடவையை அணிந்திருந்தாள். "நீங்க யாரு?' என்று அவள் கேட்டதற்கு, "நாங்க "ஹெல்ப் லைன்' செயல்பாட்டாளர்கள்' என்று அவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் பதில் கூறினார்கள். தொடர்ந்து "அனகா சசிதரன் எங்கே? நாங்க அவகிட்ட பேசணும்' என்று கூறினார்கள்.
அப்போது அவள் "அதோ... அங்கு... அறையில மகள் படுத்திருக்கா' என்று கூறினாள். கூப்பிட்டால் எழுந்திருக்க வில்லை என்ற தகவலையும்... காலையிலிருந்து ஒரு துளி நீர்கூட அவளுக்குள் செல்லவில்லை. என்றும் கூறினாள்.
"நீங்க அவளை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய் காட்டினீங்களா என்று அவர்கள் கேட்டதற்கு, "இல்ல... அவளோட அப்பா ஆடிட்டிங்ல இருக்காரு. அதனால அப்பாவுக்கு நேரமில்ல' என்று அவள் கூறினாள். "நீங்க ஏன் மகளைக் கூட்டிப்போகக்கூடாது?' என்று அவர்கள் கேட்டதற்கு, "அய்யோ...!' என்று அவள் கூறினாள். "நீங்க என்ன ஒரு அம்மா!' என்று அவர்களும் கூறினார்கள்.
அவர்கள் தாயையும் அழைத்துக்கொண்டு அவளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். காரில் இருந்தவாறு மகள் அர்த்தமே இல்லாமல் பலவற்றையும் புலம்பிக்கொண்டிருந்தாள். வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசிக்கொண்டிருந்தாள். டாக்டர் சாரதா அவளை பச்சைநிறத் திரைச்சீலைக்குப் பின்னால் படுக்க வைத்து, மிகவும் தெளிவாக சோதித்துப் பார்த்துவிட்டு, அதை முடிவாகக் கூறினாள்.
அப்போது தாய் மகளை நோக்கிக் கையை ஓங்கவும், பிறகு நெஞ்சம் உருக அழவும் செய்தாள்.
"நீ இந்த சதி வேலைய அம்மா அப்பாகிட்ட செய்துட்ட இல்லையாடீ?' என்று சுற்றுப்புறச் சூழலை மறந்து அவள் அழுதாள்.
தொடர்ந்து... "யார்? உண்மையைச் சொல்லு. இல்லன்னா... உன்னை கழுத்தை நெறிச்சுக் கொன்னுட்டு, கிணத்துல குதிச்சு நானும் செத்துடுவேன்' என்று அவள் புலம்பினாள். "ஹெல்ப் லைன்' செயல்பாட்டாளர்கள், வயநாட்டு மலை ஜுரம் பாதித்ததைப்போல நின்று குதித்துக்கொண்டிருந்த தாயிடம், "அக்கா... கொஞ்சம் அமைதியா இருங்க. எல்லாத்தையும் நாம மககிட்ட மெதுவா கேட்டுத் தெரிஞ்சுக்கலாம். இப்பவே ரொம்ப அதிர்ச்சியடைஞ்சு போயிருக்குற அவளை கேள்விகளால சிரமப்படுத்த வேணாம்' என்று கூறினார்கள்.
ஆனால், அவள் எவ்வளவோ காலமாக தன்னிடம் ஒட்டிக்கொண் டிருந்த மந்த புத்தியை ஒரு சிங்கத்தைப்போல கிளறித் தெறிக்கச்செய்து, கோப நெருப்பினைப் பரவச்செய்தவாறு மீண்டும் மகளை நோக்கித் திரும்பினாள்.
"யார்னு சொல்லிடறதுதான் உனக்கு நல்லது. இல்லாட்டா உன்னை நான் விட்டுவைக்கப் போறதில்லை.'
அவள் தாயை கண்களைத் திறந்துகொண்டு பார்த்தாள்.
அந்த பார்வையில் ஒரு அனுபவக் குறைவும் பயமும் வார்த்தைகளால் விளக்கிக் கூறமுடியாத வேறு சில விஷயங் களும் இருந்தன.
"சொல்லுடீ... யாரு?'
"அப்பா.'
அதைக்கேட்டு இரண்டு "ஹெல்ப் லைன்' பணிப்பெண்களும் பேச்சை இழந்து மரத்துப்போய் நின்றுவிட்டார்கள். தாயோ? மேலே பறக்கும்போது வெடித்துக் காற்றுபோன ஒரு பலூனைப்போல தாய் நாற்காலியில் நொறுங்கி விழுந்தாள். மிகவும் அதிகமாக வெளிவந்த மூச்சின் இயக்கத்தில் அவளுடைய மார்பும் முதுகும் உயர்ந்து தாழ்ந்துகொண்டிருந்தன. பிறகு...
அவள் எதுவும் கூறவில்லை. கேட்கவில்லை. இனிமேல்... இப்போது... கேட்பதற்கு என்ன இருக்கிறது?
அங்கு ஆடிட் நடந்துகொண்டிருந்த அலுவலகத்தில் மதிய உணவுகூட சாப்பிடாமல் தளர்ந்து போயும் வியர்வையில் மூழ்கியும் அவர் பணி செய்துகொண்டிருந்தார்.
அப்போதுதான் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அனகா சசிதரன் ரகசியத்தை வெளிப்படுத்தி ஒரு மணி நேரம்கூட ஆகவில்லை. அலைபேசியின் காலம் அல்லவா? செய்தி பரவுவதற்கு நிமிடங்கள் போதுமே! அலைபேசியிலிருந்து அலைபேசிக்கு அது பரவியது. ஒரு அழைப்பு வேகமாக நுழைந்து அவருடைய அலைபேசியையும் அடைந்தது. யாரென்று தெரியாத மனிதனின் வார்த்தைகளைக் கேட்டபோது, தான் கொடுங்கல்லூர் பரணிப்பாட்டினைக் கேட்கிறோமோ என்று அவருக்குத் தோன்றியது.
"இப்படி எதுவும் பேசக்கூடாது. என்ன விஷயம்?
அதைச் சொல்லு.'
"உங்கிட்ட பேசவேண்டியதில்லை. உன்னுடைய அந்த... அது இருக்குதே! அதை அறுத்து நாய்களுக்கு தின்னக் கொடுக்கணும்! நாயே! கேடு கெட்டவளோட மகனே!'
காலையிலிருந்து எதுவுமே சாப்பிடாமல், தொடர்நது பத்துமணி நேரம் பணியாற்றியதன் விளைவாக அவருடைய தலை வெடித்து விடும்போல இருந்தது. அந்தத் தலை இப்போது காற்றாடியைப்போல சுற்றவும் ஆரம்பித்தது. அரைமணி நேரம் கடந்தபிறகு... அதோ வருகிறது... இன்னொரு தொலைபேசி அழைப்பு... ஊரிலிருக்கும் நண்பர்களின் அழைப்பு...
"இருந்தாலும் என் சசிதரா... நீ இதைச் செய்வேன்னு யாருமே நினைக்கல. உன் நண்பர்களான நாங்க இனிமே எப்படி வெளியே இறங்கி நடக்க முடியும்? ஆட்களோட முகத்தைப் பார்க்க முடியும்?
நீ இனிமே இங்க வர வேணாம். ரயில்ல தலையை வச்சு செத்துப் போயிடு... அதுதான் நல்லது.'
நண்பர்கள் அனைவரும் அவரிடம் தெரிவித்தார்கள்.
ஆறு பத்திற்கு ஊருக்கு வரும் வண்டி முன்பே கிளம்பிவிட்டி ருந்தது .இனி எட்டே காலுக்கு ஊருக்கு வரும் வண்டி இருக்கிறது. அதற்குப் பிறகு பத்து ஐந்துக்கு வரக்கூடிய இன்னொரு வண்டி.
அந்த வண்டிகள் அனைத்தும் வந்துபோய்விட்டன. ஒரு வண்டி யிலிருந்தும் அவர் ரயில் நிலையத்தில் இறங்க வில்லை. மறுநாள் நண்பர்கள் அழைத்தபோது அவருடைய அலைபேசி "ஆஃப்' செய்யப்பட்டிருந்தது. அலுவலகத் திற்கு அழைத்தபோது...? ஆடிட் பிரச்சினைக்குள்ளாகி யிருக்கிறது. காரணம்- அவர் இன்று அலுவலகத்திற்கு வரவில்லை.
"ஹெல்ப் லைன்' பணிப்பெண்களும் காவல்துறையினரும் அனகா சசிதரனை பிரச்சினையைப் பதிவு செய்வதற்காக ஜீப்பில் அமர வைத்து காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்கிறார்கள். அவர்களுடன் தாய் இருக்கிறாள். அவள் திடீரென்று முஸ்லிம் மதத்தில் சேர்ந்துவிட்டதைப்போல புடவையின் தலைப்பை இழுத்து தலையின் வழியாக இட்டு, முகத்தை மறைத்துக்கொண்டிருந்தாள். யாரும் தன்னுடைய முகத்தைப் பார்த்துவிடக்கூடாது. அவள் மனதிற்குள் கூறிக்கொண்டாள். ஜீப் வேகம் குறைந்து குளிர்பானக் கடையின் திருப்பத்திற்குள் நுழைந்தது. "அதோ... அப்பா...' அவள் கூறினாள். "அய்யோ... அப்பாவா? எங்கே?' என்று தாய் கேட்டாள்.
குஞ்ஞாப்புவை அனகா சுட்டிக் காட்டினாள். அப்போது சுட்டிக் காட்டிய அந்த விரல் நடுங்கிக்கொண்டிருந்தது. "காரை நிறுத்து!' என்று "ஹெல்ப் லைன்' பணிப்பெண்கள் கூறினார்கள்.
அவர்கள் ஜீப்பிலிருந்து குதித்து இறங்கினார்கள்.
அவர்கள் இருவரும் இப்போது பருத்திப் புடவைகளை அணிந்திருந்தார்கள். அவர்களுடைய கைகளிலோ கழுத்திலோ தங்கத்தின் ஒரு அடையாளம்கூட இல்லை. அவர்கள் மகளை அழைத்துக்கொண்டு ஜூஸ் கடையை நோக்கி நடந்தார்கள். அவளுடைய கழுத்து தளர்வடைந்து, கண்களுக்குக் கீழே கறுப்புநிறம் படரவும் செய்திருந்தது. டாக்டர் சாரதா எதையோ கலக்கிக்கொடுக்கவும், ஊசி போடவும், மாத்திரை கொடுக்கவும் செய்திருந்தாலும், விந்தி விந்திதான் இப்போதும் அவளுடைய நடை இருந்தது.
"மகளே... அப்பா எங்க இருக்காரு?'
அவள் கூறியதைக் கேட்டு, அவர்கள் எல்லாரும் சுற்றிலும் பார்த்தாலும், அவரை அங்கு எங்கும் காணவில்லை.
அவளுடைய ஒரு நிழல்கூட அங்கு இல்லை.
"அதோ... அப்பா...'
சட்டை அணியாமல், தொப்புளுக்குக் கீழே லுங்கி அணிந்து நின்றுகொண்டிருந்த குஞ்ஞாப்புவை அவள் சுட்டிக்காட்டினாள். தொடர்ந்து கோபத்துடன் குலுங்கிக் குலுங்கி அழுதாள். ஏதோ கெட்ட வாசனையை நுகர்ந்ததைப்போல அவர் மூக்கையும் வாயையும் மூடியவாறு நின்றுகொண்டிருந்தார். "எனக்கு எதுவுமே தெரியாது... நாராயணா' என்ற உணர்ச்சியை முகத்தில் கொண்டு வர முயற்சித்தாலும், முடியாமல் அவர் ஒதுங்கி நின்றார்.
"மகளே... அது குஞ்ஞாப்பு ஆச்சே?'
"இல்லை... அது என்னோட அப்பா... என் அப்பாதான் என்னை...'
"ஹெல்ப் லைன்' பணிப்பெண்கள் ஜூஸ் கடைக்குள் நுழைந்தார்கள். அங்கு ஒரு பெஞ்சும் இரு பக்கங்களிலுமாக மூன்று மூன்று பிளாஸ்ட்டிக் நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன. நிறம் மங்கிப்போன பழைய நாற்காலிகள்... ஒரே நேரத்தில் ஆறு பேர் அங்கு அமர்ந்து எலுமிச்சம்பழ ஜூஸோ சாத்துக்குடி ஜூஸோ மாதுளம் பழ ஜூஸோ அன்னாச்சிப் பழ ஜூஸோ பருகலாம். தேவைப்படுபவர்களுக்கு அவர் காரட் ஜூஸையும் கொடுப்பார்.
அதைத்தாண்டி வெளிச்சம் குறைவான ஒரு அறை இருந்தது. அங்கு பழைய ஒரு கட்டிலும் அதன்மீது அதிகமான அழுக்கு படிந்த ஒரு படுக்கையும் இருந்தது. தலைப்பகுதியில் எண்ணெய்க் கறை படிந்த தலையணையும் இருந்தது. குஞ்ஞாப்புவின் வீடு... தூரத்திலிருக்கும் இரிட்டி என்ற இடத்தில் இருந்தது. வீட்டை அடைவதற்கு மூன்று பேருந்துகளில் மாறி ஏறிச் செல்ல வேண்டும். அதனால் தினமும் போவதும் வருவதும் இல்லை. நல்ல வியாபாரம் இருக்கக்கூடிய நாட்களில் தாமதமாக ஜூஸ் கடையை அடைக்கும்போது, வீட்டிற்குச் செல்லாமல் அவர் ஜூஸின் ஈரமும் மணமும் உள்ள கடையிலேயே படுத்துத் தூங்குவார்.
"அடியே... அனகாவோட அப்பா ஜூஸ் கடை நடத்துறார். தெரியுமா?'
முதுகில் பேக்கைத் தொங்க விட்டவாறு அஞ்சலியும் தோழிகளும் குலுங்கிக்குலுங்கி சிரித்தவாறு பள்ளிக்கூடத் திற்கு நடந்துசென்றார்கள். அவர்களுடைய கூட்டத்தில் அனகா இல்லை. புரிகிறதா?
பிறகும் வண்டிகள் எப்போதும்போல வரவும் போகவும் செய்தன.
அவர் வரவில்லை.