ண்டியில் நல்ல கூட்டமாக இருந்தது. எனினும், அந்தக் கூட்டத்தி லும் கதவிற்கருகில் நின்றுகொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் அவ்வப்போது என்னைப் பார்ப்பதையும் ஆவேசமாக என்னவோ மெதுவாகப் பேசுவதையும்... பிறகு மீண்டும் பார்ப்பதையும் கவனித்தேன்.

நான் சந்தோஷத்துடன் நினைத்தேன்... ரசிகர்களாக இருக்கும். எங்கு சென்றாலும் ரசிகர்கள் இருப்பார்கள் அல்லவா?

இறங்கவேண்டிய ஸ்டேஷன் நெருங்கிக்கொண்டிருந்ததும், நான் அந்தக் கூட்டத்தின் வழியாக வாசலைநோக்கி நடந்தேன். அந்த இரண்டு இளைஞர்களையும் உரசிக்கொண்டுதான் நான் வெளியேற கடக்கவேண்டியதிருந்தது. கடக்கும்போது நான் அவர்களைப் பார்த்து மெல்லிய ஒரு புன்னகையைத் தவழவிட்டேன்.

Advertisment

ss

அப்போது உடனடியாக அவர்களில் ஒருவன் கேட்டான்:

"சார்... தவறா நினைக்கக்கூடாது. சார், நீங்க டி. பத்மநாபன் இல்லைல்ல?'' என்ன கூறுவதென்று தெரியாமல் நின்றுகொண்டிருக்க, அவன் தொடர்ந்து கூறினான்:

"என் நண்பன் சொல்றான் சார்... உங்களை கவிதைங்க எழுதுற டி. பத்மநாபன்னு. இல்லைன்னு நான்... இறுதியில பந்தயம் கட்டியிருக்கோம் சார்... நீங்களே சொல்லுங்க சார்.''

ஆமாம் என்றோ, இல்லையென்றோ நினைக்கக்கூடிய வகையில் பரிதாபமாகப் புன்னகைக்க மட்டுமே என்னால் முடிந்தது. அப்போது அந்த இளைஞன் தன் நண்பனிடம் தைரியமாகக் கூறினான்:

"பார்த்தேல்ல... டி. பத்மநாபன் இல்ல. நான் முன்னாடியே உன்கிட்ட சொல்லியும் நீ....''

நான் ப்ளாட்ஃபாரத்தில் இறங்கிவிட்டு, இரண்டாவது இளைஞனிடம் கூறினேன்:

"பரவாயில்ல... பலரும் இப்படி தவறா நினைச்சிருக்காங்க.''

அப்போது வண்டி நகர்ந்துவிட்டிருந்தது.