திருமணமான மகள் தன்னைவிட்டுப் படிப்படியாக விலகிவிலகிச் சென்றபோது, தாய் வாழ்க்கையில் முதல்முறையாக தனிமையின் கசப்பான பழங்களை சாப்பிட ஆரம்பித்தாள். தனிமை என்பது தான் இதுவரை கவனம் செலுத்தாத ஒரு விஷமுட்டி மரம் என்பதாக அவளுக்குத் தோன்றியது.

மகளுடைய அசைவுகளையும் உணர்ச்சி மாற்றங் களையும் மட்டும் பார்த்துக்கொண்டு வாழ்ந்த நிலையில், வேறெதிலும் கவனம் செலுத்துவதற்கு அவளுக்கு நேரம் கிடைக்கவில்லை. அவள் பிறந்த வருடத்திலேயே அவளுடைய கணவர் மரணத்தைத் தழுவினார். தந்தை- தாய்... இருவரின் கடமைகளையும் நிறைவேற்றுவதற்கு பாடுபட்டுக்கொண்டு அவள் வாழ்ந்தாள். தான் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள் மட்டுமே என்பதை அவளிடமிருந்து மறைத்து வைப்பதற்கான நட்பு களிடமிருந்து கடன் வாங்கினாள்.

அவளுக்கு பட்டாடைகள் வாங்கிக் கொடுத்தாள். நகரத்திலேயே மிகச்சிறந்த ஆசிரியைகளை அழைத்து வரச் செய்து, அவளுக்கு படிப்பு சொல்லித்தர ஏற்பாடு செய்தாள். அவளுடைய பிறந்தநாள் கொண்டாட்டங் களில் தோட்டத்திலிருந்த மரக் கிளைகளில் வண்ண விளக்குகளை எரியவைத்தாள். இறுதியில் வசதி படைத்தவனும், நல்ல பழக்க வழக்கங்களைக் கொண்டவ னுமான ஒரு இளைஞனுக்கு அவளைத் திருமணம் செய்தும் கொடுத்தாள்.

அதற்குப்பிறகு என்ன நடந்தது? தனக்கொரு மகனும் கிடைத்திருக்கிறான் என்று பக்கத்து வீடுகளில் இருப்பவர்களிடம் எவ்வளவோ முறை கூறிவிட்டாள். ஆனால், அந்த மருமகன் திருமணத்திற்குப்பிறகு மரியாதைக்குக்கூட அவளிடம் பேசியதில்லை.

Advertisment

அவனுக்கு என்ன ஆனதென்று அவள் மகளிடம் கேட்டாள். அவள்மீது அன்பை வெளிப்படுத்திய இளைஞன் எவ்வளவு வேகமாக வெறுமொரு அறிமுக மற்றவனைப்போல வடிவமெடுத்துவிட்டான்! அவளைப் பற்றி மனம்போனபடி ஏதாவது குற்றச்சாட்டுகளைக் கூறி பரப்பி விட்டிருப்பானோ? கணவர் இல்லாமல் அழகை ஒரு சுமையாக நினைத்து வாழ்ந்துகொண்டிருந்த காலத்தில் பல ஆண்களும் அவளைக் கவர்வதற்கு முயற்சித் தனர். யாருடைய காமத் தூண்டிலிலும் விழுந்துவிடாமல் மகளிடம் ஈஸ்வரனையும் ஈஸ்வரியையும் தரிசித்து அவள் வாழ்ந்தாள். அவளை அணைத்துக்கொண்டு இரவுப் பொழுதில் தூங்காமல் படுத்திருந்த நிலை இருக்க, அவளுடைய அன்பில்லாமல், ஒரு காலம் தனக்கு வந்து சேருமென்று கனவில்கூட நினைத்ததில்லை. மரணம்வரை தான் அவளுடன் சேர்ந்துவாழ்வோம் என்பதுதான் அவளுடைய முழுமையான நம்பிக்கையாக இருந்தது.

திருமணத்திற்குமுன்பு மகளுக்கு வேறொரு இளைஞனுடன் உறவிருந்தது. அவன் கடற்படையில் பொறியாளராக இருந்தான். கப்பலைவிட்டு விடுமுறை யில் கரைக்கு வரும்போது, அவன் அவளுக்கும் மகளுக்கும் வெளிநாட்டுத் துணிகளையும் அழகினை மேம்படுத்தக்கூடிய பொருட்களையும் வாசனை திரவியங்களையும் கொண்டுவருவான். அந்த உறவு ஏதோ தவறான புரிந்துகொள்ளல் காரணமாக தகர்ந்து சாம்பலாகிவிட்டது. கட்டிலில் கவிழ்ந்துபடுத்து சிறிது நேரம் அழுதுவிட்டு, மகள் அவளிடம் கூறினாள்:

"இனிமேல் நான் அந்த ஆளை எந்தக் காலத்திலும் நினைக்கமாட்டேன்.''

Advertisment

ss

அந்த காதல் உறவின் தகர்தலுக்குக் குற்றவாளி மகள்தான். எனினும், மகளைத் திட்டுவதற்கு அவளுக்கு மனம் வரவில்லை. இருபது வயது ஆகியிராத அந்த இளம்பெண்ணால் ஒரு குடும்பப் பெண்ணாக முடியாதே! அவள் வேறொரு மனிதனுடன் சேர்ந்து இரண்டு முறை திரைப்படம் பார்ப்பதற்குச் சென்றதாகக் கூறி, அவளைத் "தேவிடியா' என்று அழைப்பதற்கு ஒரு மனிதனுக்கு அதிகாரம் இருக்கிறதா? எப்போதும் கப்பலில் பணியாற்றிக்கொண்டிருக்கும் ஒருவனுக்கு, தன் காதலி வீட்டிற்கு வெளியே போகக்கூடாது என்று கூறி பிடிவாதம் பிடிப்பதற்கு உரிமையிருக்கிறதா? மகளுக்கு தைரியமளிப்பதற்காக அவளுடைய செயல்களை நியாயம் கண்டுபிடிப்பதற்கு அவள் என்றுமே தயாராக இருந்தாள். அது காரணமாக இருக்கலாம்... பல நேரங்களில் மகள் அவளைக் கட்டிப் பிடித்துக்கொண்டு அவளுடைய காதில் கூறியிருக்கி றாள்:

"இந்த உலகத்திலேயே நல்ல அம்மா என்

அம்மாதான்.''

பெருமை காரணமாக தன் அடிவயிறு வலிப்பதைப் போல அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் அவள் உணர்ந்திருக்கிறாள். மகளைக் கட்டுப்படுத்த வேண்டுமென கூறிய நட்புகளை அவள் எதிரிகளாகப் பார்த்தாள். அவளுக்கு அப்போது தன் மகளின் அன்பு மட்டுமே தேவைப்பட்டது.

மருமகனைத் தன்னிடமிருந்து விலக்கியது யாரென்பதை மகளிடம் கேட்டபோது, அவள் தன்னுடைய தோள்களைக் குலுக்கினாள்.

"அப்படியா? எனக்குத் தெரியாது.'' அவள் கூறினாள்.

தன் கவலையை அவள் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை என்பதை அந்த சைகையும் அந்த வார்த்தைகளும் வெளிக்காட்டின.

தாய் முன்னறிவிப்பின்றி மகளுடைய வீட்டிற்கு வந்தபோது, கதவைத் திறந்த வேலைக்காரியின் உதடுகள் வெளிறிப் போயின.

"அம்மா... இங்க... கீழேயே இருங்க. நான் மேலே போய் சின்னம்மாக்கிட்ட சொல்றேன்.'' அவள் கூறினாள்.

"வேணாம். நான் மேலே வரலாமே!'' தாய் கூறினாள்.

"அய்யோ... வேணாம். யாரும் மேலே வர்றது எஜமானுக்குப் பிடிக்காது. என்னை சத்தம் போடுவாரு.'' வேலைக்காரி கூறினாள். ‌

"அப்படின்னா... நான் இங்கேயே இருக்கேன். நீ போய் அவங்க ரெண்டு பேரையும் அழைச்சிட்டு வா.'' தாய் கூறினாள்.

அரை மணிநேரம் கடந்தபிறகு, மகள் கண்விழித்து முகத்தைக் கழுவிவிட்டு தாய் இருந்த இடத்திற்கு வந்தாள். ‌‌‌

"அம்மா... என்ன... இவ்வளவு சீக்கிரம் வந்திருக்கீங்க?'' அவள் கேட்டாள். தன்னைப் பார்த்து அவள் சந்தோஷப் படுவாள் என்றும், தன் கன்னத்தில் முன்பைப்போல ஒருமுறை முத்தமிடுவாள் என்றும் தாய் நினைத் திருந்தாள். அன்பின் வெளிப்பாடுகள் நடக்கவேயில்லை.

"உன்கிட்ட ஏன் ஒரு மாற்றம்?'' தாய் கேட்டாள். ‌‌‌

"மாற்றமா? என்கிட்ட என்ன மாற்றம்?'' மகள் கேட்டாள். ‌‌‌‌

"நான் வந்திருக்கறது பத்தி உங்கிட்ட எந்த சந்தோஷமும் தெரியலை. கார் ஷெட்ல நான் கொண்டுவந்திருக்கற நேந்திர வாழைக் குலையும் காய்கறிகளும் இருக்கு. வேலைக்காரங்ககிட்ட அடுக் களையில எடுத்துவைக்கச் சொல்லு'' தாய் கூறினாள்.

"அம்மா... இனிமேல காய்கறிகளைக் கொண்டுவரவேணாம். அவருக்கு அதெல்லாம் பிடிக்காது.'' மகள் கூறினாள்.

"நீங்க காய்கறிகளைப் பயன்படுத்துறது இல்லியா?'' தாய் கேட்டாள்.

மகள் எதுவும் கூறவில்லை.

"நான் என்ன குற்றம் செஞ்சேன் மகளே? நீங்க ரெண்டு பேரும் என்ன காரணத்துக்காக எங்கிட்ட இந்த அளவுக்கு குரூரமா நடந்துக்கறீங்க? யாராவது கற்பனையில உண்டாக்கிய பொய் கதைகளை நீங்க நம்பிட்டீங்களா?'' தாய் கேட்டாள்.

அப்போதும் மகள் மௌனத்தைத் தொடர்ந்தாள். தேநீர் பருகுவதற்குக்கூட நிற்காமல், அம்மா தன் காரை ஓட்டிக்கொண்டு தன்னுடைய வீட்டிற்குத் திரும்பினாள். தான் அருகிலிருப்பது மருமகனுக்கு மட்டுமல்ல... மகளுக்கும் பிடிக்கவில்லை என்பதை அவள் புரிந்துகொண்டாள். அன்று தாய் உணவைச் சமையல் செய்யவோ குளிக்கவோ இல்லை. இருளடைந்திருந்த அறையில் மல்லார்ந்து படுத்து, மகளைப் பற்றிய பால்யகால சம்பவங்களைத் திரும்பத் திரும்ப நினைத்து கண்ணீரைச் சிந்திக்கொண்டிருந்தாள்.

தன்னை ஆனந்தத்தில் மூழ்கச் செய்த உரையாடல் களும், குறும்புகளும்தான் இப்போது மிகுந்த வேதனையைத் தருகின்றன என்பதை தாய் புரிந்துகொண்டாள். உலகத்திலேயே மிகச்சிறந்த தாய் என்று மகள் பாராட்டிக் கூறிய பெண். தலையணையை அணைத்துக் கொண்டு "மகளே...'' என் மகளே..! என்று அழைத்துக் கொண்டிருந்தாள்.

சிறிது காலம் கடந்ததும், தாய் முற்றிலும் தனிமையானவளாகி விட்டாள். அவளுடைய தலைமுடி முழுவதும் நரைத்துவிட்டது. சரியான தூக்கமில்லாத காரணத்தால் ரத்த அழுத்தத்திற்கும் இரையாகிவிட்ட அந்தப் பெண்ணை பரிதாப உணர்வுடன் மட்டுமே பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் பார்த்தார்கள்.

"மகள் வர்றதில்லியா?''

பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் கேட்டார்கள். ‌

"ம்... ராத்திரியில வருவாள். பகல்ல ரெண்டு பேருக் குமே வேலை அதிகம்...'' தாய் கூறினாள். இயல்பாகப் பொய் கூறுவதையும் அவள் கற்றுக்கொண்டாள்.

ஒருநாள் அவள் குளியலறையில் மயங்கிவிழுந்து விட்டாள். பெருக்கிச் சுத்தம் செய்யும் பெண்தான் பக்கத்து வீடுகளில் இருப்பவர்களை அழைத்ததும், அவளை மருத்துவ மனைக்குக் கொண்டுசென்றதும்... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுய உணர்வு திரும்ப வந்தபோது, பெருக்கி சுத்தம் செய்யும் பெண் கேட்டாள்:

"அம்மா... நீங்க மகளைப் பார்க்க வேணாமா?''

"அவளுக்குச் சொல்லவேணாம். உடல்நலம் சரியாகி வீட்டுக்குத் திரும்பிப்போனபிறகு அவங்களுக்குச் சொன்னா போதும். அவளை வெறுமனே பயமுறுத்த வேணாம்.'' தாய் கூறினாள்.

காய்கறிக்காரனும் பெருக்குபவளின் கணவனும் பால்காரனும் துணி சலவை செய்பவனும் தாயைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வந்தார்கள்.

"மகள் வரலையா?'' சலவை செய்பவன் கேட்டான். தாய் ஒரு பலவீனமான சிரிப்பைச் சிரித்தாள்.

"அவளுக்குச் சொல்லல.'' அவள் கூறினாள்.

"நான் சொல்லிட்டேன். இன்னிக்கு காலைல நான் அங்க போய் சொன்னேன். பணத்தோட மருத்துவமனைக் குப் போகலாம்னு சார் சொன்னாரு...'' காய்கறிக்காரன் கூறினான்.

"பொழுது சாயங்காலம் ஆகிட்டது.'' சலவை செய்பவன் கூறினான்.

"இனி அவங்க வர மாட்டாங்க.'' பெருக்கும் பெண் கூறினாள். ‌

"எந்த தரித்திரம் பிடிச்ச ஆள் இந்த அம்மாவைப் பத்தி மருமகனுக்குத் தவறான தகவல்களைத் தந்தது? மகாபாவி! மகளோட திருமணம் முடிஞ்சு ரெண்டு வருஷம்கூட ஆகல. அம்மாவைப் பார்த்தாலே அடையாளம் தெரியல. அந்த அளவுக்கு வெளிறிப் போயிட்டாங்க.'' காய்கறிக்காரன் கூறினான். ‌‌‌‌

"சொந்த மகளே செஞ்சுவச்ச வேலையா இருக்கும். பழைய விஷயங்களை அம்மா சொல்லி, அந்த ஆள் கேட்டுடக் கூடாதுன்னு நினைச்சுச் செஞ்திருப்பாங்க...'' பெருக்கும் பெண் கூறினாள்.

அந்த வார்த்தைகளைக்கேட்டு தாய் அதிர்ச்சியடைந்து விட்டாள். ஆனால், அவற்றிலிருந்த உண்மையின் குரூரக் குரலை அவளால் கேட்கமுடிந்தது.

===