புகழ்க் கிரீடம் உண்ணிகிருஷ்ணன் புதூர் தமிழில் : சுரா

/idhalgal/eniya-utayam/crown-fame-nikrishnan-tamil-sura

றுதியாக மேடையேறும் நிகழ்ச்சி. கலையுலகிலிருந்து விடைபெறுவதற்கு சற்று முந்தைய நிகழ்ச்சி. ஒப்பனை செய்யப்படுவதற்காக ஆசான் ஒப்பனையறையில் படுத்திருந்தார். அழைக்கப் பட்ட கூட்டம்தான் அன்று... ஆளுநரும் முதலமைச்ச ரும் நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக வருகிறார்கள்.

"கலாதிலகம்' என்ற புகழ்க் கிரீடத்தை முதலமைச்சர் தான் அளிக்க இருக்கிறார்.

அன்றுவரை ஆற்றியிருக்கும் சேவைகளைக் கணக்கிட்டே குழுவிலிருப்பவர்கள் அவருக்கு அதை அளிப்பதற்குத் தீர்மானம் எடுத்திருக்கிறார்கள். இன்றிலிருந்து கலைநிகழ்ச்சியில் பங்கெடுக்கவேண்டியதில்லை.

ஆசானுக்கு சோர்வுண்டானது. கலைத்துறையிலிருந்து விடைபெற்றுக்கொள்வதுடன், அவர் அவராக இல்லாமல் போகிறார். எண்பத்தெட்டு வயதாகி விட்டது. பதின்மூன்றாவது வயதில் கச்சையைக் கட்டினார்.

பதின்மூன்றாவது வயதில் நடிகனானார். அன்று வாழ்வதற்கு வேறுவழி எதுவுமில்லை. அவருக்கு முன்னால் முக்கால் நூற்றாண்டு கடந்து சென்றிருக் கிறது. அதுவும் கலை மேடையிலேயே...

இன்றைய வாழ்க்கையையும் அன்றைய வாழ்க்கை யையும் பொருத்திப் பார்க்கமுடியாது. எவ்வளவோ கஷ்டங்களை சகித்துக்கொண்டு இருந்திருக்கிறார்.

எவ்வளவோ தூரம் ஒப்பனைப் பெட்டியைத் தலையில் வைத்துக்கொண்டு நடந்திருக்கிறார்.

கலைத் துறையிலிருக்கும் இன்றைய இளைஞர் களுக்கு என்ன தெரியும்? அவர்களெல்லாம் கலையைப் பெரிதாக எடுத்துக்கொள்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கூறமுடியாது. சிலர் இருக்கிறார்கள். இல்லையென்று கூறுவதற்கில்லை. விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள் மட்டும்...

கலைமேடை என்றால் கடவுளின் சந்நிதி என்றே அவர் எப்போதும் நினைத்து வந்திருக்கிறார். வேறு ஏதாவது நினைக்கக்கூடிய திமிர்த்தனமோ புதிய போக்கோ அவரைப் பொருத்தவரையில் உண்டானதில்லை.

அவர் என்றுமே தன் குருநாதர்களின் வழியிலேயே நடந்தார். பின்பற்றி நடப்பதும், பணிவும், உழைக்கக் கூடிய முனைப்பும்தான் ஒரு கலைஞனிடம் முதலில் இருக்கவேண்டியவை. அது இருந்தால், முகத்தில் உணர்ச்சிகள் தானே வந்து விழுந்துவிடும். தான் ஏற்று ஆடும் கதாபாத்திரங்களில் தன்னுடைய தனித்துவ முத்திரை பதிந்திருக்கிறதா என்பது அவருக்கே தெரியாது. சீடர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.

அனைவரும் அவரை "ஆசான்' என்றழைக்கின்றனர்.

வயதான காரணத்தால் அப்படி அழைக்கிறார்கள் என்றால், அவர் அதைப் பெரிதாக எடுத்துக்கொண்டி ருக்க மாட்டார். அப்படியல்லாமல்... நல்லவொரு வேடம் புனையக்கூடிய மனிதர் என்ற புரிதலுடனுள்ள அழைப்பு எனும் பட்சம், அதில் அவருக்கு பெருமையே... இன்று எதையும் செய்யமுடியவில்லை.

களைப்பு, தலைசுற்றல், காச சுவாசம்- அனைத்து நோய்களும் வந்து வளைத்துவிட்டிருக்கின்றன.

dd

பலவற்றுக்கும் ஆசைப்பட்டிருக்கிறார் என்பதென்னவோ உண்மை. ஆசைப்பட்ட அனைத் துமே கிடைத்துவிடுமென்று கூறுவதற்கில்லை. விதிக்கப் பட்டதே கிடைக்கும்.

அவர் ஒருத்தியைக் காதலித்தார். மோகினியாட்டக் காரி குஞ்ஞுலட்சுமியை. கிடைக்கவில்லை. புகையைப் போல மனதிலிருந்து ந

அவர் ஒருத்தியைக் காதலித்தார். மோகினியாட்டக் காரி குஞ்ஞுலட்சுமியை. கிடைக்கவில்லை. புகையைப் போல மனதிலிருந்து நீங்கி மறைந்துபோய் எவ்வளவு காலமாகிவிட்டது! இந்த உலகத்தில் எதுவுமே நிரந்தரமில்லை. அனைத்துமே மறைந்துபோகின்றன. கலையும் காதலியும்... அனைத்துமே.

அவருடைய வேடத்தைப் பார்த்து கண்களில் நீர் நிறைந்தவர்கள் உண்டு. அன்று அவருடைய வேடம் சுயம்வரத்தில் ஸ்ரீகிருஷ்ணன். வாலிபப் பருவத்திற்குள் நுழைந்த கிருஷ்ணன்தான் சுயம்வர கிருஷ்ணன். வயது இருபத்திரண்டு. பிருந்தாவனக் கரையில் அழகானவளாகவும் காமத்தைத் தூண்டக் கூடியவளாகவும் இருந்த ராதா, அவரைப் பொருத்த வரையில் குஞ்ஞுலட்சுமியாக இருந்தாள். அதனால் என்றென்றும் காதலனாக இருக்கும் கிருஷ்ணனின் வேடத்தை அவரால் முழுமையான ஈடுபாட்டுடன் நடிக்கமுடிந்தது. நடிப்பது சுயம்வர கிருஷ்ணனின் பகுதி. பல கதைகளும் மனதிற்குள் ஓடிவந்து சேர்கின்றன.

இப்போது அப்படிப்பட்ட கதைகளைப் பற்றி யாருக்காவது ஞாபகத்தில் இருக்கிறதா? எனினும், அந்தக் காட்சிகள் ஆசானுக்கு முன்னால், திரைச்சீலைக்கு முன்னால் தோன்றுவதைப்போல தெரிய ஆரம்பித்தன.

ஒப்பனை அறையிலிருந்த ஒப்பனைப் பெட்டியின் மீது ஆசான் சாய்ந்து அமர்ந்தார். ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவாக அவர் எங்கும் நிறைந்து நின்றிருந்தார். ஒப்பனை அறையிலும் மேடையிலும் ஒரே மாதிரி... வாலிபப் பருவம் முடிந்துவிட்ட காலத்திலா என்று தெரியவில்லை. ஸ்ரீகிருஷ்ணனின் கதாபாத்திரத்தில் நடித்த அவருக்கு, பிறகு நடிக்கக் கிடைத்த வேடம் யவனன். வேறுபட்ட முகங்கள்... ஒன்று- இளமை தவழக்கூடியது... காதல் உணர்வு கொண்டது... யாரும் விரும்பக்கூடியது.

இன்னொன்று- கொடூரத்தின் சின்னம்... கோபத் தின் உச்சம்... அரக்கத்தனம் கொண்டது. வயதான அரக்கனான யவனனின் கதாபாத்திரத்தை ஏற்றுக் கொண்டபோதும் அவரைப் பற்றி ஆட்கள் புகழ ஆரம்பித்தார்கள்.

கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த வகையில் ஆசானின் யவனனை வெல்வதற்கு யாருமே இல்லையென தீர்ப்பு எழுதினார்கள் அறிவாளி கள். அவர் என்றுமே... இன்றும்... கலைத்துறைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர். ஆனால், வேடங்களில் வந்த மாற்றங்கள் குறித்து வேதனை உண்டானது.

கிருஷ்ணனின் கதாபாத்திரத்தில் நடிக்கும் போது அவர் தன்னிலிருந்து உயர்ந்தெழுந்தார். எதிரிகளை அழிப்பவனும், நண்பர்களைக் காப்பாற்றுபவனும், நிரந்தர காதலனுமான கிருஷ்ணன் மூலமாக வாழ்ந்தார். பிருந்தாவனத்தின் ராதா, அம்பாடியின் இளமையின் சின்னங்களும் அழகிகளுமான ஏராளமான கோப குமாரிகள்... அவர் அனைவரையும் ஒன்றுபோல காதலித்தார்.

ஸ்ரீகிருஷ்ணனின் புல்லாங்குழலின் இசையைக் கேட்டால் போதும்... அனைவருமே ஓடிவருவார்கள். எல்லாருக்கும் குறைகள் இருந்தன.

கிருஷ்ணனுக்கு அதிக காதல் ராதாவிடம்தான். அப்படி இருக்குமோ? அனைவரின்மீதும் விருப்பமிருந்தது. ஆனால்..?

"அரிசி மாவும் அரிதாரமும் தயாரா இருக்கு. இனி படுக்கலாம்.'' ஒப்பனை செய்யும் ஆள் வந்து கூறியபோதுதான் ஆசான் நினைவுகளிலிருந்து மீண்டுவந்தார். ஒப்பனையறையை ஆசானின் கண்கள் சுற்றிப் பார்த்தன. அலங்காரப் பொருட்கள் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஒப்பனைப் பெட்டிகள், திறந்து கிடக்கும் பெட்டிகளுக்கு மத்தியில் தெரியும் மர முகங்கள், கிரீடங்கள்... அனைத்தையும் பார்த்தார். அந்தக் கூட்டத்தில் சுயம்வர கிருஷ்ணனின் கிரீடமும் பார்வையில் பட்டது. நான்கு பக்கங்களிலும் வரிசையாக மயில் பீலிகள் இணைக்கப்பட்டுக் காணப்படும் கிருஷ்ணனின் கிரீடம், மற்ற கிரீடங்களிலிருந்து வேறுபட்டது.

ஒப்பனையறையின் ஒரு மூலையில் விசேஷமாக அமைக்கப்பட்டிருந்த பீடத்தின்மீதிருந்த அந்தக் கிரீடம் அவரின் தலையின் அளவுக்குப் பொருத்தமாக இருந்தது. இப்போது அது பயன்படுத்தப்படாமல் வெறுமனே இருக்கிறது. கிரீடத்தைத் தொட்டு ஆசான் வணங்கினார். தரையில் விழுந்து நமஸ்கரித்தார். என்ன காரணத்தாலோ... கண்கள் நிறைந்திருந்தன.

பொதுவாக பகல் உணவு சாப்பிட்டு முடித்து, ஒப்பனை போடுவதற்கு முன்பு படுப்பதுதான் வழக்கமாக நடக்கக்கூடியது. அன்று ஆசான் எதுவும் சாப்பிடவில்லை. ஏகாதசி நோன்பு. அதுவும்... சொர்க்க வாசல் ஏகாதசி. விசேஷமான நாள். அன்று பகல் வேளையில் இரண்டுமுறை தலைசுற்றியது. இப்போதும் ஒரு மயக்கம் வருவதைப்போல இருந்தது. பரவாயில்லை. இன்றோடு இனிமேல் வேடம் அணியவேண்டிய தேவையில்லையே அதனால், பார்வையாளர்களைத் திகைப்படையவைக்க வேண்டும். யவனனைப் பார்த்து அதிர்ச்சியடைய வேண்டும். அந்த வேடத்தைப் பார்த்தால், அவருடைய வயது என்னவாக இருக்குமென்று எந்தக் காலத்திலும் ரசிகர்களால் கூறமுடியாத நிலை உண்டாகவேண்டும்.

சிறிது நேரம் தியானத்தில் இருப்பதைப்போல படுத்திருந்தார். தியானத்திற்குப்பிறகு கண்களைத் திறந் தார். ஒப்பனையறையைப் பார்த்துக்கொள்பவரிடம் ஒரு இளநீர் கொண்டு வரும்படி கூறினார். செதுக்கப் பட்ட இளநீரின் கண்ணைத் திறந்து ஆசானுக்கு முன்னால் சீடர்களில் ஒருவன் நகர்த்தி வைத்தான். இளநீர் முழுவதையும் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கினார்.

தொண்டைக் குழியின் வழியாக இளநீர் உள்நோக்கிச் சென்றபோது, உள்ளேயிருந்த கபக்கட்டிற்கு சிறிது நிம்மதி கிடைத்ததைப்போல இருந்தது. களைப்பு நீங்கியிருக்கிறது. தளர்ந்துபோயிருந்த நரம்புகளில் புத்துணர்ச்சி பரவியது.

ஒப்பனை செய்பவர் ஆசானின் முகத்தில் சிவந்த சாயத்தைத் தேய்த்தார். ஒப்பனை வேலைகள் முடிந்தன. இரண்டு பக்கங்களிலும் எழுந்து நின்று கொண்டிருக்கும் தேளின் அளவிலுள்ள மீசையைப் பார்த்ததும் ஆசானுக்கு உள்ளுக்குள் சிரிப்பு வந்தது. பருவத்தில் அடர்த்தியாக இருந்த மையை விரலின் நுனியால் தொட்டு பளபளக்கச் செய்தார். முகத்தில் ஒப்பனை மிகவும் சிறப்பாக இருந்தது. யவனனின் வெள்ளைநிறத் தலைப்பாகையை எடுத்து அணிந்தார். சிவப்புநிறத் துணியைத் தலைப்பாகையின்மீது இணைத்துக் கட்டினார்.

கழுத்திலிருந்து பாதம்வரை நீளமாகத் தொங்கிக்கொண்டிருக்கும் பட்டாணியின் உடுப்பை அணிந்தார். உடுப்பின் கீழ்ப்பகுதியில் நிறைய தொங்கல்கள் இருந்தன. வாளையும் கேடயத்தையும் கையிலெடுத்தார். மெதுவாக சுழற்றி ஒளிரச் செய்தார். நுனிப் பகுதியின் கூர்மையைப் பார்க்கும்வகையில் விரல்களால் ஓரங்களைத் தடவினார். மேடைக்குச் செல்ல தயாரானார்.

மேடையில் பல வண்ணங்களைக்கொண்ட திரைச்சீலை உயர்ந்தது. மத்தளத்தின், ஜால்ரா ஆகியவற்றின் மெதுவான சத்தம் உரத்து ஒலித்தது. சிலம்பின் ஓசை ஒலித்தது. பீலித்திருமுடி வைக்கப் பட்ட கிரீடமும் சிவப்புநிறத் துணி கட்டப்பட்ட தலைப்பாகையும் திரைச்சீலையின் மேற்பகுதியில் தெரிந்தன.

"வேடம் வரப் போகுது. கிருஷ்ணனும் யவனனும் ஒருவரோடொருவர் மோதக்கூடிய காட்சி. ஆசான் யவனனாக வருகிறார். கலையுலகைவிட்டுப் பிரிந்து செல்வதற்கு முன்னால் நடிக்கக்கூடிய இறுதி வேடம். அதனால் அரங்கமே நகரும் அளவுக்கு நிகழ்ச்சி இருக்கும்."

ஏதோ கலையின்மீது பைத்தியம் பிடித்தவன் அருகில் அமர்ந்திருக்கும் மனிதன் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக கூறினான். அவன் திரைச்சீலை விலகு வதைப் பார்த்தவாறு பொறுமையை இழந்து அமர்ந்தி ருக்கிறான் என்ற உண்மை ஆசானுக்குத் தெரியாது.

திரைச்சீலை இறங்கியது. விளக்கின் எரிந்து படரும் ஜுவாலைகள்... மலரின் சிவந்த கண்கள் ஜுவாலையில் உருகின. குரூரத்தனத்தை வெளிப்படுத்தும் கர்ஜனை முழங்கியது. கிருஷ்ணன் யவனனைப் பார்த்தார். கடுமையான போருக்குத் தயாராகி வந்திருக்கும் யவனனிடமிருந்து விலகியிருக்க விரும்புவதைப்போல கிருஷ்ணன் முன்னால் வந்தார். சற்று பின்னால்... யவனன்... வாளையும் கேடயத்தையும் அசைத்தவாறு.

கிருஷ்ணனின் முகத்தை யவனனால் பார்க்க முடியவில்லை. மறைத்து வைத்திருக்கிறார்.

பின்பக்கமாகச் சென்று கிருஷ்ணனின் தலை முடியை முகர்ந்து பார்த்தான். தேவ வாசனையை முகர்ந்த அசுரனைப்போல யவனன் நாசியைத் திறந்து வைத்தான். நாசியைத் திறந்து வைத்தபோது, தாடியும் மீசையும் கண்களும் ஒரே நேரத்தில் நடுங்கித் துடித்தன. வெறிகொண்டு மின்னிய யவனன், கிருஷ்ணனை கையைச் சுருட்டி தாக்க முற்பட்டான். பற்றியெரியும் குரோத நெருப்பில் கிருஷ்ணன் சாம்பலாகி விடுவாரா?

ஜராசந்தனின் நண்பன்... ஆயிரக்கணக்கான வீரர்களைக்கொண்ட போர்ப் படையின் நிகரற்ற தலைவன்... போரில் யவனனைத் தோற்கடிப்பதென்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. பலம்கொண்ட எதிரியைத் தோற்கடிப்பதற்கு என்ன வழியிருக்கிறது என்பதைப்பற்றி கிருஷ்ணன் சிந்தித்தார். வேறு வழியே இல்லையென்ற நிலை உண்டானபோது, மோதவேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது.

மேடையில் கிருஷ்ணனுக்கும் யவனனுக்குமிடையே நடைபெற்ற மோதல், பார்வையாளர்களை மூச்சுவிட முடியாமல்செய்து, பிடித்து அமரவைத்தது. இரண்டு சிறந்த வேடங்கள்... வேடத்தைவிட, அருமையான உடல் மொழியைக்கொண்ட ஆசானின் யவனன் காற்றுடன் கலந்து போர் செய்தான். கேடயமும் வாளும் அசைந்து புரண்டன.

கிருஷ்ணனுடன் மோதி இறக்கும் யவனனுக்கு மோட்சம் இருக்கிறது என்று புராணங்கள் உரத்துக் கூறுகின்றன.

யவனனாகப் பிறக்கநேர்ந்த இந்த வேற்று மதக்காரன் கடந்த பிறவியில் முசுகுந்தன்... முசுகுந்தனுக்கு மோட்சம் கிடைக்கவேண்டுமெனில், கிருஷ்ணனுடன் போர்புரிந்து இறக்கத்தான் வேண்டும். போர்புரிந்து தளர்ந்துபோன ஆசான், மேடையில் சோர்வடைந்து விழுந்தார். கிருஷ்ணனின் பாதக் கமலத்தில் தளர்ந்து விழுந்த யவனன் மேடையிலிருந்து எழாமலிருப்பதைப் பார்த்ததும், ஆட்கள் பதைபதைப்படைந்தார்கள்.

ஆசானுக்கு என்ன ஆனது? புகழ்க் கிரீடத்தை அணிவிப்பதற்காக முதலமைச்சர் காத்துக்கொண்டிருக்கிறார்.

நிறைந்த அரங்கத்தில் ஜால்ரா அடிப்பவனும் செண்டை அடிப்பவனும் குலுக்கி அழைத்தார் கள். கனமான வேடங்களை ஏற்று அரங்கையே அதிரவைத்து, தளரும் சூழ்நிலை உண்டானால், கையைப் பிடித்து எழுப்புவதென்பது வழக்கமாக நடக்கக் கூடியதுதான்.

ஆசானின் கையைப் பிடித்து இழுத்தபோது, கிட்டத்தட்ட அது குளிர்ந்துபோயிருந்தது. சிவந்த சாயம் தேய்க்கப்பட்டிருந்த நாசியில் கலைக் குழுவைச் சேர்ந்த ஆட்கள் விரலை வைத்துப் பார்த்தார்கள். இல்லை... மூச்சு இல்லை... புகழ்க் கிரீடத்தை ஆசான் பெற்று விட்டார்... நிரந்தரமாக.

அறிவிப்பாளர் கூறினார்: "இத்துடன் நிகழ்ச்சி முடிவடைகிறது. ஆசானின் புகழ்க் கிரீடம் வழங்கும் நிகழ்ச்சி நடப்பதற்கான வழியில்லை. அவர் தளர்ந்துகிடக்கிறார்.''

கதை முடிவடைவதற்குமுன்பே திரைச் சீலை விழுந்தது.

===

_____________

மொழி பெயர்ப்பாளரின் உரை

ணக்கம்.

இந்த மாத "இனிய உதய'த்திற்காக நான்கு மலையாள சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன். ஒவ்வொரு கதையும் தனித்தன்மை கொண்டவை. மாறுபட்ட கருவையும், களத்தையும் கொண்டவை.

"புகழ்க் கிரீடம்' கதையை எழுதியவர் தேசிய சாகித்ய அகாடெமி விருது பெற்ற மூத்த எழுத்தாளரான உண்ணிகிருஷ்ணன் புதூர். கிருஷ்ணனாகவும் யவன னாகவும் வேடம்புனைந்து மேடைகளில் ஆழமான முத்திரைகளைப் பதித்த ஆசானை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. கதையை வாசித்து முடித்தபிறகும் ஆசான் நமக்குள் வாழ்வார்.

"ஷார்ஜாவிலிருந்து வந்தவர்கள்' கதையை எழுதியவர் தேசிய சாகித்ய அகாடெமி விருதுபெற்றவரும், கடந்த 50 வருடங்களாக மலையாள சிறுகதைகளின் அரசராக ஆட்சிசெய்பவருமான டி. பத்மநாபன். ஒரு ரயில் பயணத்தில் நடைபெறும் சில சம்பவங்களைக்கொண்டு இந்த கதையை எழுதியிருக்கிறார் பத்மநாபன். இப்படிக்கூட ஒரு கதையை எழுதமுடியுமா என்ற ஆச்சரியம் கதையை வாசிக்கும்போது உங்களுக்கு கட்டாயம் உண்டாகும். கதையின் இறுதிப்பகுதி... என்றும் நினைவில் நிற்கும்.

"புதிய டி.வி. செட்' கதையை எழுதியவர் தேசிய சாகித்ய அகாடெமி விருதுபெற்றவரும், மலையாள பெண் எழுத்தாளர்களின் பேரரசியுமான மாதவிக்குட்டி. மாறுபட்ட கதைக்கரு. அதை ஆர்வத்தைத் தூண்டும் வண்ணம் மாதவிக்குட்டி எழுதியிருக்கிறார். கதையின் இறுதி... சிறிதும் எதிர்பார்த்திராத திருப்பம்!

"வேறொரு இடத்தின் விசேஷம்' கதையை எழுதியவர் தேசிய சாகித்ய அகாடெமி விருதுபெற்றவரும், நவீன மலையாள இலக்கியத்தின் துருவ நட்சத்திரமுமான ஒ.வி. விஜயன். ஒரு சிறிய கதையில் எவ்வளவு பெரிய விஷயத்தைக் கூறுகிறார் விஜயன்!

நான் மொழிபெயர்த்த இந்த நான்கு சிறுகதைகளும் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். என் மொழிபெயர்ப்புப் படைப்புகளை ஆர்வத்துடன் வாசித்துவரும் உயர்ந்த இலக்கிய உள்ளங்களுக்கு நன்றி.

அன்புடன்,

சுரா

uday011122
இதையும் படியுங்கள்
Subscribe