ங்களுக்கு வகுப்பறை அப்படின்னு எதுவும் கிடையாது. நாங்க மரத்து நெழலுலதான் உக்காந்து படிச்சோம். ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு மரத்தோட நிழல்தான் வகுப்பறையா இருந்துச்சு. மழை வந்துச்சுன்னா லீவு விட்டுடுவாங்க உடனே கலைஞ்சி வீட்டுக்கு ஓடிடுவோம். வெயில் காலத்துல ஒவ்வொரு மரத்தோட நிழலுலயும் மாறி மாறி உட்காரனும். இப்படி நாங்க வெயில்லயும் காஞ்சி, மழையிலயும் நனைஞ்சோம். நாங்க கஷ்டப்படுறதப் பாத்துட்டு ராமலிங்கம் அப்படிங்கிறவரு எங்களுக்கு ஒன்பதாம் வகுப்புக்கும், பத்தாம் வகுப்புக்கும் கட்டடம் கட்டிக்கொடுத்தாரு. அதற்கு துவக்க விழாவுக்கு ராமலிங்க ஐயாவே வந்தாரு. அப்ப நான் எட்டாவது படிக்கிறேன். இது 1993-ல நடந்தது. அப்ப எனக்கு வயசு 13.

ஒருநாள் எங்க ராசேந்திரன் ஆசிரியர் அவுரங்கசீப் வாழ்க்கை வரலாறைப் படிக்கச் சொல்லிட்டு, நான் ஹெச். எம். ரூம் வரைக்கும் போயிட்டு வரேன்னு சொல்லிட்டுப் போறாரு.

நான் என்ன பண்ணினேன், அங்க புரட்சி நடிகர்

விஜயகாந்த் பாடிய

Advertisment

’ராசாத்தி ஒன்னக் காணாத நெஞ்சு

காத்தாடி போலாடுது

பொழுதாகிப் போச்சு விளக்கேத்தியாச்சு

Advertisment

பொன் மானே உன்னைத் தேடுது...’

அப்படிங்கிற பாட்டு அந்த 88, 89- கள்ல ரொம்பவும் பிரபல்யமா இருந்துச்சு. அதாவது ”வைதேகி காத்திருந்தாள்” படத்துல. ஆர் சுந்தர்ராஜன்தான் இந்த படத்தோட இயக்குனர்.

அதுக்கப்புறம் “அம்மன் கோயில் கிழக்காலே” அதுவும் ஆர் சுந்தர்ராஜன்தான் இயக்குனாரு. அதுல வர்ற

’சின்ன மணிக்குயிலே…

மெல்ல வரும் மயிலே…

எங்கே உன் ஜோடி…

நான் போறேன் தேடி…

இங்கே உன் ஜோடியில்லாம…கேட்டாக்கா பதிலும் சொல்லாம…

குக்கூ எனக் கூவுவதேனடி

கண்மணி கண்மணி

பதில் சொல்லு நீ சொல்லு நீ’

-அதெல்லாம் அந்த படத்துல ரொம்பச் சிறப்பா இருக்கும்.

”ராதாதான்” அந்த படத்துல கதாநாயகி. இந்தப் பாட்டு எல்லாத்தையுமே நான் எங்க வகுப்பறையில பாடுவேன்.

அப்புறம்…

’ராசாத்தி ஒன்ன எண்ணி

ராப்பகலா கண்விழிச்சேன்

ராப்பகலா கண்விழிச்சேன்

ராணி உன்னை கைபிடிச்சேன்

ராப்பகலா கண்விழிச்சேன்

ராணி உன்னை கைபிடிச்சேன்...

பிறகு, இதே ராகத்துல…

சித்திர மாசத்துல

திருவாரூர் தேரோட்டம்

திருவாரூர் தேரோட்டம்

தேவி உன்னை கைப்பிடிச்சேன்

திருவாரூர் தேரோட்டம்

தேவி உன்னை கைப்பிடிச்சேன்....

அப்படிங்கற பாட்டு. எல்லாத்தையும் நான் பாடுனேன்.

அப்போ ஹெச்.எம். ரூமுக்குப் போன அந்த வாத்தியாரு சவுண்ட் கேட்டுட்டு பாதியிலேயே திரும்பி வர்றாரு.

“யார்ரா அங்க பாடுனது?” அப்படின்னு கேட்கி றாரு. அங்க இருந்து பசங்களான ராதாகிருஷ்ணன் இவங்க எல்லாருமே சேர்ந்து வேல்முருகன்தான் பாடுனான் அப்படின்னு சொல்லிட்டாங்க.

”உங்க அப்பா அம்மா, நீ ஆடு மேய்க்கக்கூடாது, மாடு மேய்க்கக்கூடாது, நம்ம புள்ளய பள்ளிக்கூடத்துல சேர்த்துவிட்டா ஒரு ரூபா, ரெண்டு ரூபா சம்பாதிச்சுக் கொடுப்பான், அப்படின்னு நெனைச்சி பள்ளிக்கூடம் சேத்துவிட்டா, நீ பாட்டு பாடுறியா. எந்திரிடா...” அப்படின்னு சொன்னாரு. வாடா ஹெச்.எம். ரூமுக்குன்னு அங்கே கூட்டிகிட்டு போறாரு.

நான் கத்துறேன், கதறுறேன், அழறேன்.

சார் நீங்க என்ன அடிச்சுட்டு விட்டுடுங்க சார். எவ்வளவுனாலும், எத்தனை அடின்னாலும் அடிச்சிட்டு விட்டுடுங்க சார். அப்படின்னு சொல்லி கதறி அழுறேன். அதெல்லாம் முடியாதுடா வாடா அப்படின்னு சொல்லிட்டு ஹெச்.எம். ரூமுக்கு இழுத்துட்டுப் போறாரு.

vv

அந்த சார், ரொம்பப் பொறுமைசாலி. ஆனா முறைச்சாருன்னா அவ்வளவுதான் இந்த உலகமே அழிஞ்சுபோற மாதிரி முறைப்பாரு. பார்த்தா ஒண்ணுமே இருக்காது. என்ன அப்படி முறைச்சுதான் இழுத்துட்டுப் போறாரு. நான் அழுதுகிட்டே போறேன்.

சார் நான் இனிமேல் பாடலை சார். என்ன விட்டுருங்க சார். எனக்கு டி.சி.ன்னாலும் கொடுத்துடுங்க சார். என்ன ஹெச்.எம். ரூமுக்கு அழைச்சிட்டுப் போகாதீங்க, அப்படின்னு சொன்னேன்.

அவர் கேட்கல. அங்க போய் நிக்கிறேன். உனக்கு வாத்தியார்ன்னா அவ்வளவு கேவலமா போச்சா... வரலாறு பாடத்த படிக்கச் சொன்னா பாட்டா பாடுற நீ. வர்றன் இருன்னு சொல்லிட்டு, என்ன வெளியிலேயே நிக்க வெச்சிட்டு, அவர் ஹெச்.எம். ரூமுக்குள்ள போறாரு.

அங்க போயி சார் நம்ம கிளாஸ்ல அருமையா ஒருத்தன் பாட்டு பாடறான் சார். ஆனுவல் டேயில கலெக்டர் வர்றாருல்ல அந்த மேடையில அவனைப் பாடவைக்கலாம் சார் அப்படின்னு சொல்றாரு.

”அப்படியா, அப்படின்னா நம்ம பாரதியார் பாட்டு, பாரதிதாசனார் பாட்டுதானே பாட வைக்கணும்.”-இது ஹெச்.எம்.

"ஆமாம் சார். அவனுக்கு குரல் நல்லா இருக்கு. சொல்லிக் கொடுத்து கத்துக்கொடுத்துட்டோம்னா நல்லா பாடுவான். நம்ம பள்ளிக்கூடத்துக்கும் நல்ல பேரு கிடைக்கும்" அப்படின்னு சொல்றாரு. இது எல்லாமே என் காதுல விழுது.

வாத்தியாரு வெளியில வர்றாரு. வந்து "டேய் வா ஹெச்.எம் கூப்பிடுறாரு." அப்படிங்கறாரு.

என் பயம் குறையுது.

திடீர்ன்னு எங்க வாத்தியார் குரல் மாறுது.

“டேய் கண்ணா அடுத்த மாசம் நம்ம ஸ்கூலுக்கு கலெக்டர் வராரு. நீ மேடையில பாடணும். ஹெச்.எம். சார் சொல்லிட்டார்னா நீ பாடணும்” அப்படின்னு சொன்னார்.

“நெஜமாவா?”ன்னு கேட்டேன்.

“நெசமாதாண்டா. நீ பாரதிதாசனார் பாட்டு ஏதாவது பாடு” அப்படிங்கறாரு.

ஹெச்.எம்.மும் பாடுறான்னு சொல்லிட்டார்.

மொத மொதல்ல எங்க வாத்தியாருதான் பாரதிதாசன் பாட்டை எனக்கு சொல்லிக் கொடுக்கிறார்.

’தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட

சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை

சிலைபோல ஏனங்கு நின்றாய் - நீ

சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்

விலைபோட்டு வாங்கவா முடியும்? - கல்வி

வேளைதோறும் கற்று வருவதால் படியும்!

மலைவாழை அல்லவோ கல்வி? - நீ

வாயார உண்ணுவாய் போ என் புதல்வி!

“இந்தப் பாட்டத்தான் நீ பாடணும் சரியா.? சரி நாட்டுப்புறப் பாட்டெல்லாம் பாடத் தெரியுமா?

அப்படின்னும் கேக்குறாரு.

அப்பதான் நான் பாடுறேன்

’சீரகம் பாத்தி கட்டி செடிக்கு செடி குஞ்சம் கட்டி

சீரகம் பாத்தி கட்டி செடிக்கு செடி குஞ்சம் கட்டி

சீமானார் பெத்த மக அன்ன பொண்ணு நடையே

நான் செடிக்கு செடி குந்தலாமோ சின்ன பொண்ணு நடையே

அஞ்சு கல்லு மோதிரமா அரும்பு வச்ச ரத்தினமா

அஞ்சு கல்லு மோதிரமா அரும்பு வச்ச ரத்தினமா

ஆசாரி செஞ்ச கல்லு அன்னப்பொண்ணு நடையே

நான் ஆச வச்சு கொஞ்சலாமோ செல்ல பொண்ணு நடையே

அதாவது செடியில பூ பறிக்கும் போது,

தண்ணி பாய்ச்சும்போது ஒரு பாட்டு பாடுனா எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட பாட்டு சார் இது அப்படின்னு நான் சொல்றேன்.

”இந்த பாட்டுதான். இது மாதிரி பாட்டுதான் அப்படின்னு சொல்றாரு. இது கிராமிய பாட்டு மாதிரியும் இருக்கும் மக்களுக்கு புடிச்ச மாதிரியும் இருக்கும். ஒரு விவசாயத்தைச் சார்ந்த மாதிரியும் இருக்கும். மண்சார்ந்த பாடலாவும் தெரியும். இதையும் அந்த பாரதிதாசன் பாட்டையும் கலெக்டர் முன்னாடி பாடு” அப்படிங்கறார்.

ஆனுவல் டேய்க்கு எல்லா ஏற்பாடும் நடக்குது. கலெக்டர் வராரு அப்படின்னு ஊரே திருவிழாக் கோலமா இருக்கு. தெரு முழுவதும் தோரணம் கட்டி, கோலம் போட்டு... அடடா, எங்க ஊரைப் பாக்குறதுக்கே பிரம்மாண்டமா இருந்துச்சு.

நான் வீட்டிலிருந்து கிளம்பி பள்ளிக்கூடம் போறேன். போகும்போது இந்த ஏற்பாடுகள் எல்லாத்தையுமே பாத்துக்கிட்டே போறேன். எல்லாமே எனக்காக செஞ்ச மாதிரியே தோணுச்சு.

விழாவோட முதல் நிகழ்ச்சியே என்னோட பாட்டாதான் இருந்துச்சு. நான் பாட ஆரம்பிச்சேன். எங்க ஊரு சனங்க எல்லாம் பின்னாடி வந்து நின்னுகிட்டு யாரு பாடுறது அப்படின்னு எட்டி எட்டிப் பாக்குறாங்க. நான் பாடி முடிச்ச உடனே ஊருசனமே கைத்தட்டுது. அது எனக்கு பெரிய ஆச்சரியமா இருந்துச்சு.

தைப்பூசத்துல பிறந்து மைக்க புடிச்சது எப்படி வரலாறா மாறுனுச்சோ, அதே மாதிரி எட்டாவது படிக்கும்போதே மைக்க பிடிச்சு எங்க ஊர்ப்பக்கம், ஒரு வரலாறு படைச்சேன்.

ஒரு மாவட்டத்தை கட்டி ஆளக்கூடிய ஒரு கலெக்டர்கிட்ட, 100 பிள்ளைகள் படிக்கக்கூடிய பள்ளிக்கூடத்துல ஆயிரம் பேருக்கு முன்னாடி, முதனை ஹையர் செகண்டரி ஸ்கூல்ல படிக்கிற அந்த பள்ளிக்கூடத்து மேடையில பாடி, மூணு சில்வர் தட்டு, மூன்று சர்டிபிகேட்டை மாவட்ட கலெக்டர் கையால வாங்குறேன்.

இதை வாங்கிட்டு எப்ப கீழே இறங்கினோனே அப்ப எங்க அப்பாவும், எங்க அம்மாவும் என்ன வாரி அணைச்சு முத்தம் கொடுக்குறாங்க. அப்புறம் என்ன வீட்டுக்கு அழைச்சிகிட்டு போயி, வெத்தலையில சுண்ணாம்பும், மஞ்சளையும் சேத்து கொழச்சி,

அதுல கற்பூரம் ஏத்தி எனக்கு ஆலம் எடுக்குறாங்க. இந்த ஆலத்தை தொட்டு என்னோட நெத்தியில வச்சி என்ன வாழ்த்துனாங்க.

காலையில விடியுது.

"வாடா தனசேகரன் மவனே... ஏய் கலெக்டர்கிட்டயே பரிசு வாங்கிட்டியாடா. நம்ம ஊருக்கே பெருமை சேத்துட்டுயப்பா அப்படின்னு ஊரு சனமே கூடிக் கூடி கூப்பிட்டுப் பாராட்டுறாங்க.

மனசுக்குள்ள எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சி.

அப்ப எனக்கு மனசுக்குள்ள ஒரு சின்ன சிந்தனை ஓடுது. ஒருவன் சாதிச்சான். அப்படின்னா ஊரே புகழுது. அப்ப இன்னும் கொஞ்சம் நாம் மெனக் கட்டம்னா இந்த நாடு புகழும்போல, இந்த உலகமே புகழும் போல. அப்ப நாம என்ன பண்ணனும்னா, இன்னும் நல்லா பாடக் கத்துக்கனும்ன்னு நினைச் சேன். அப்படி முடிவு பண்ணித்தான் நான் என்னுடைய பாட்டுப் பயணத்தை ஆரம்பிச்சேன்.

என்ன ஹெச். எம் ரூமுக்கு கூப்பிட்டு போன அதே எட்டா வது வாத்தியாரு இன்னைக்கு விருத்தாச் சலத்தில எனக்கு “கிராமிய இசை கலாநிதி”ன்னு விருது கொடுக்குறாங்க. அவ்வளவு வி.ஐ.பி.ங்க, ஐம்பதாயிரம் மக்கள் கூடி விருது வாங்குற அந்த இடத்துல... முன்னாடி வந்து நின்னுட்டு, எனக்கு இங்க ஒரு சீட்டு உக்கார்றதுக்கு கிடைக்குமா?

அப்படின்னு கேக்குறாரு.

”நான்தான் வேல்முருகனுக்கு முதலில் பாடச் சொல்லிக்கொடுத்த வாத்தியாரு. இந்த சீட்ட எப்படியாவது வேல்முருகன்கிட்ட கொடுக்கமுடியுமா? அப்படின்னு சொல்லிக் குடுத்து அனுப்புறாரு. மேடையில வந்து கொடுத்தோனேயே, நான் அந்த சீட்ட வாங்கி மேடையில படிச்சிட்டு ரொம்பவும் பூரிப்போட அவரை மேடைக்கு கூப்பிடுறேன். நான் மைக்ல சொல்றேன் நான் பாடுறதுக்கு காரணமாக இருந்தவரு இங்க வந்திருக்கும் எங்க சாருதான்.

அவர்தான் எனக்கு உதவி பண்ணினார். அப்படின்னு அவரை மேடைக்குக் கூப்பிட்டேன். வந்து மேடையில நின்னுகிட்டு எங்க சார் அழுவுறாரு…

வண்டி ஓடும்