கிராமியப் பாடகர் வேல்முருகனின் என் பாட்டு வண்டிப் பயணம்! -சந்திப்பு: முனைவர் அ. பழமொழிபாலன்

/idhalgal/eniya-utayam/country-singer-velmurugans-journey-my-singing-carriage-meeting-dr-0

பொய்யான உலகம்

அப்பா நெய்வேலி லிக்னைட் கார்ப்ப ரேஷன்ல சென்ட்ரல் கவர்மெண்ட்ல வேலை பார்த்தாரு. தாத்தா பாத்த வேலைய, தாத்தா இறந்ததற்கு அப்புறம் அப்பாவுக்கு கொடுத்தாங்க.

ஒருமுறை அப்பா நைட்ஷிப்ட் வேலைக் குப் போகணும். விருத்தாச்சலத்தில் இருந்து நெய்வேலிக்கு போற பஸ்ல, அனசகுழியிலதான் போயி பஸ் ஏறனும். ராத்திரி ஏழரை மணி பஸ்ஸுக்கு போனா சரியா இருக்கும். அதுதான் கடைசி பஸ்.

அப்பா என்ன பண்றாரு வேலைக்குப் போறதுக்கு வீட்ல இருந்து புறப்பட்டு போறாரு. போயிக்கிட்டு இருக்கும்போதே பஸ், ஸ்டாப்பிங்ல நிக்கிறது தெரியுது. அப்பா சத்தம் போட்டுக்கிட்டே ஓடுறாரு. பஸ்ஸு, பஸ்டாண்டுல இருந்து கொஞ்சம் கொஞ்சமா மூவ் ஆகுது. இவர் பின்னாடியே ஓடுறாரு. ஓடிப் போயி பஸ்ஸு பின்னாடி தட்றாரு. தட்டின உடனே "ஏய் யாருடா அது பஸ்ஸ தட்டறவன்' அப்படின்னு கண்டக்டர் சத்தம் போடுறாரு.

"சார் நான்தான் சார். நைட் ஷிப்ட் வேலைக்குப் போகணும், பஸ் மூவாயிடுச்சு அதனாலதான் ஓடி வந்து பஸ்ஸ தட்னேன்' அப்படின்னு அப்பா சொல்றாரு.

ஆனா கண்டக்டர் என்ன பண்ணிட்டாரு... கதைய மாத்திட்டாரு. "ஏய் நீ என்ன தண்ணிய போட்டு வந்து தகராறு பண்றியா? பஸ் மூவ் ஆனதுக்கு அப்புறம் எதுக்குயா வந்து பஸ்ஸ தட்டுற? உனக்கு அறிவு கிறிவு இருக்கா இல்லையா? நாதாரிப் பசங்க வந்துட்டானுங்க பஸ்ஸ தட்டுறதுக்கு.'

அப்படின்னு ஏடாகூடமா பேச ஆரம்பிச்சுட்டாரு.

"தகராறு பண்றதுக்குல்லாம் வரல சார். நான் நைட் ஷிப்ட் வேலைக்குப் போகணும். அதனால தான் ஓடி வந்து பஸ்ஸ தட்டினேன்' அப்படின்னு, மறுபடியும் அப்பா என்னென்னமோ சொல்லிச் சமாளிச்சுப் பாக்குறார். ஆனா பஸ் கண்டக்டர் அத புரிஞ்சுக்கிற மாதிரி தெரியல.

ஏழை சொல் அம்பலம் ஏறாதும்பாங்களே... அது சரியாத்தான் இருந்திருக்கு.

"பஸ்ச தட்றதுக்கு உனக்கு என்னய்யா ரைட்ஸ் இருக்கு? நான் பாட்டுக்கு சொல்லிக்கிட்டே இருக்கேன் நீ பாட்டுக்கு வந்து பஸ்ல ஏறுவியா?'- அப்படின்னு கண்டக்டர் எகிறினார். இதனால் அப்பாவுக்கும் ஒரே வாக்குவாதம் உச்சத்துக்குப் போகுது.

கண்டக்டர் அப்பாவ அடிக்க வர்றாரு.

எங்கப்பா சொல்ற நியாயத்தை அவர் காதுகொடுத்துக் கேட்காமல், ஒரு டிராமாவை அரங்கேற்ற ஆரம்பிச்சிட்டார்.

தன் தோல் பையில இருக்கிற காசையெல்லாம் கீழ இறச்சி விட்டுட்டு, இந்தாளு திருட பார்க்க றாருன்னு பஸ்சை கொண்டுபோய் ஊமங்கலம் போலீஸ் ஸ்டேஷன்ல நிறுத்தி, எங்க அப்பா மேல புகாரையும் குடுத்துட்டாரு.

அப்பாவ போலீசுகாரரு கூப்பிடுறாரு.

"யோவ் இங்க வா. உனக்கு எவ்வளவு திமிரு இருந்தா, தண்ணிய போட்டுட்டு வந்து பஸ்ஸுல தகராறு பண்ணுவ?' அப்படின்னு சொல்லி லத்தியால அடிக்க ஆரம்பிக்கிறாரு.

அங்கயும்

அங்கயும் நீதி எடுபடலை. கடைசியா பஸ் கண்டக்டர் செல்வாக்கு, எங்க அப்பாவைக் கைது பண்ணவைக்கிது. அதனால், எங்க அப்பாவின் வேலையும் போகுது.

அரசியல்வாதிகளுக்கும், அதிகாரவர்க்கத் திற்கும், பணம் வச்சிருக்கவங்களுக்கும், பகட்டா இருக்கிறவங்களுக்கும்தானே சட்டம், வளைஞ்சி வளைஞ்சி குடுக்குது.

ஏழைங்களுக்கு எந்த சட்டம் நாயமா தீர்ப்பு சொன்னிச்சு? ஏழைங்களுக்கும் பாதிக்கப்பட்டவங் களுக்கும் ஆதரவா இருக்க வேண்டிய சட்டமும், அவங்களுக்கு எதிராவே ஆயுதம் எடுக்குது.

ஏழைங்களுக்குத் தீர்ப்பு சொல்லும்போது மட்டும்தான் நீதி தேவதை தன்னோட கண்ணுல கட்டியிருக்குற கருப்புத் துணிய ரொம்ப இறுக்கமா கட்டிக்கிறா. அவ வெச்சு இருக்குற தராசுத் தட்டுல எதுவுமே இல்லைன்னாகூட, அந்த தராசுத் தட்டு, மேலயும் கீழயுமாதான் நிக்குது.

அப்பாவ ஜெயில்ல போட்டுட்டாங்க அப்படிங்கிற செய்தி கேட்டதும், அம்மா நெஞ்சில அடிச்சுகிட்டு, வாசலுல விழுந்து ஒப்பாரி வைக்குது. அம்மா ஒப்பாரி வைக்கிற சத்தத்த கேட்டு ஊரு சனமே கூடிநின்னு வேடிக்க பாக்குது.

இதையெல்லாம் கேள்விப்பட்டு அப்ப சின்னப் பையனா இருந்த எனக்கு, அழுகை அழுகையா வந்துச்சு. இந்த நியாயத்தைக் கேக்குறதுக்கு இந்த உலகத்துல நமக்குன்னு யாருமே இல்லையே. நாம இப்ப அனாதையா தெருவுல நிக்கிறோமே அப்படின்னு நெனச்சி, தேம்பித் தேம்பி அழுதேன்.

திடீர்னு சாமி வந்த மாதிரி அம்மா எந்திரிச்சு எங்கேயோ போகுது. நானும் அரைக்காலு ட்ரவுசரோட பின்னாடியே போறேன். போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல போய் அம்மா கொஞ்சநேரம் நின்னுச்சு. ஒரு போலீஸ்காரர் ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்தாரு. அப்பதான் அம்மா சொன்னுச்சு. "ஐயா, என் புருஷன் பேரு தனசேகரு. அவரு இங்க போலீஸ் ஸ்டேஷன்ல இருக்காரு. அவர் எந்தத் தப்பும் பண்ணலை. அவரை விட்ருங்க' அப்படின்னு அம்மா கெஞ்சிக் கேட்டுச்சு.

உடனே அந்த போலீஸ்காரர் வீட்டுக்குப் போம்மா.

அவர ஜெயிலுக்கு கூட்டிட்டுப் போய்ட்டாங்க.

அப்படின்னு சொன்னாரு. அந்த போலீஸ் ஸ்டேஷன் வாசல்லயே அம்மா நெஞ்சில அடிச்சுக்கிட்டு ஓன்னு அழுது. நானும் சேர்ந்து அழறேன். இங்க சத்தம் கித்தம் போடக்கூடாது, போம்மா அப்படின்னு போலீஸ்காரர் விரட்றாரு.

அப்பாவை எந்த ஜெயிலுக்கு கூட்டிட்டுப் போனாங்க அப்படின்னு தெரியல. திக்கு தெசை தெரியாம, போறதுக்கு வழியும் புரியாம அம்மாவும் நானும் சோந்து போயி வீட்டுக்கு வந்தோம்.

நாங்க அழுத கண்ணீரு மண்ணதான் ஈரப்படுத் துனுச்சே ஒழிய, போலீஸ்காரங்க மனச ஈரப்படுத்தல. பாறைய ஈரப்படுத்துறதுக்கு ஏழையோடு கண்ணீருக்கு ஏது பலம். பலம் வாய்ந்த மிருகங்கள், அப்பாவி விலங்குகளை அடிச்சு சாப்பிடறது காட்டுலதான் நடக்குதுன்னா நாட்டுலயும் அப்படித்தான் நடக்குது காட்லயாவது கொஞ்சம் தர்மம் இருக்கும்.

ஒரு சிங்கம்கூட அனாவசியமா எந்த மிருகத்தை யும் அடிச்சுத் துன்புறுத்துறது இல்லை. அதுக்குப் பசி வந்தால் மட்டும்தான் போய் வேட்டையாடி சாப்பிடும். மத்த நேரத்துல அது பாட்டுக்கு படுத்தே கிடக்கும்.

ஆனா மனிதர்கள்ல மட்டும்தான் அதிகாரம் உள்ளவங்க அப்பாவி மக்கள் மீது தங்களுடைய ஆதிக்கத்தைத் திணிச்சி, கொடுமைப்படுத்திக்கிட்டு இருக்கிற சம்பவங்கள், காலம் காலமா நடந்துகிட்டே இருக்கு. இடி விழுறதுகூட ஏழைங்க தலையா பாத்துதான் விழுது.

ஏழையா பொறந்த ஒவ்வொருத்தருக்கும், ஒவ்வொரு மாதிரியான வன்முறைகள் நடந்து கிட்டேதான் இருக்கு.

சின்ன மொட்டை சோளக்கொல்லைக்கு குருவி ஓட்டறதுக்காக போயிட்டு இருந்தா. போகும்போது குயவர் வீட்டுத் தோட்டத்து வழியாதான் குறுக்கால போகணும். போகும்போது குயவர் மவன் சின்னாண்டி, சின்ன மொட்டைகிட்ட ஆசை வார்த்தைகளைச் சொல்லி இணங்கவச்சுட்டான். ரெண்டும் பானை சுடுற சூளைக்கு இடையில இருக்குற இடுக்குல போயி ஒதுங்கிடுச்சுங்க. சின்ன மொட்டை மூணு மாசம் கர்ப்பிணி ஆயிட்டா.

சின்ன மொட்டையோட வயிறு கொஞ்சம் கொஞ்சமா பெருசு ஆயிக்கிட்டே போகுது. வயித்தோட சைச பாத்துட்டு, சின்னமொட்டையோட ஆத்தா சாணங்கிக்கு சந்தேகம் வருது. என்னாடி ஏதாவது தப்புத்தண்டா பண்ணிட்டியான்னு மவளை கேட்டுச்சு. அதுல்லாம் ஒன்னும் இல்ல ஆத்தான்னு சொன்னா சின்ன மொட்டை. நாளாக நாளாக வயிறு பெருசா ஆயிட்டே போகுது.

ஏதோ தப்புதண்டா நடந்திருக்குன்னு சாணங்கி ஊர்ஜிதம் பண்ணிகிட்டு சின்ன மொட்டையை கூப்பிட்டா. இவள இப்படியே விட்ட சரியா வராதுன்னு, அவ சிண்ட புடிச்சு இழுத்துகிட்டு வந்து அடுக்கு பானை மூலையில போட்டு மிதி மிதின்னு மிதிக்கிறா அவங்க ஆத்தா. சொல்லுடி என்னடி நடந்துச்சு அப்படின்னு ஓடிப்போயி வௌக்குமாத்த எடுத்துக்கிட்டு வந்து அது நுனியைப் புடிச்சுகிட்டு அடிக்கட்டையால போட்டு அடி அடின்னு அடிக்கிறா.

அப்பதான் சின்ன மொட்ட அடி தாங்கமுடியாம சொன்னா. ஆத்தா... தப்பு பண்ணிட்டேன் ஆத்தா. என்ன மன்னிச்சிடு ஆத்தான்னு, ஆத்தா கால புடிச்சுக்கிட்டு கெஞ்சுறா சின்ன மொட்ட. அந்த குயவர் வீட்டு சின்னாண்டி ஆச வார்த்தை சொல்லி என்னை இணங்க வச்சுட்டான் ஆத்தா. அது இப்படி புள்ளையா வயித்துல வளரும்னு தெரியாம போச்சு. நான் ஏமாந்துட்டேனே அப்படின்னு "ஓ' ன்னு அழறா சின்ன மொட்டை. ஐயோ என் புள்ள மோசம் போயிட்டாளே அப்படின்னு அவ ஆத்தா சாணங்கி வாயிலயும் வயித்திலயும் அடிச்சுக்கிட்டு வாசல்ல வந்து ஒக்காந்துகிட்டு ஒப்பாரி வக்கிறா. ஊருசனமே தெருவுல வந்து நின்னுகிட்டு வேடிக்கை பாக்குது. சாணங்கி சாமி வந்த மாதிரி எந்திரிச்சு ஓடுனா நாட்டாமைக்காரர் வீட்டுக்கு.

ஐயா ஏம் புள்ள மோசம் போயிட்டா சாமி அப்படின்னு நாட்டாமக்காரர் காலுல விழுந்து கதறுனா. நாட்டாமைக்காரரு கேட்டாரு என்ன புள்ள ஆச்சு அப்படின்னாரு.

vv

அவ எல்லா விபரத்தையும் சொல்லி அழுதா... இதைக்கேட்ட நாட்டாமைக்காரருக்கு ஒன்னும் சொல்ல முடியல வாயடைச்சு போய் உட்கார்ந்து இருக்காரு. மலைக்கும் மடுவுக்கும் முடிச்சு போட்டுட்டாளே இந்த பய புள்ள. என்னடா பண்றது அப்படின்னு வாய் பேசமுடியாம உட்கார்ந்து இருந்தாரு.

"சரி புள்ள ராத்திரிக்கு பஞ்சாயத்தைக் கூட்டுறேன். ஒம்மவள கூட்டிக்கிட்டு அங்க வா ..' அப்படின்னு சொல்லி அனுப்பிவச்சாரு.

ராத்திரி 7 மணிக்கு பஞ்சாயத்து கூடுது. ஊர் நாட்டாமை ஆறு பேர். அந்த ஆறு நாட்டாமையும் சொல்லி வச்ச மாதிரி சொன்னாங்க, "அந்த பயபுள்ளைகிட்ட ஆயிரம் ரூபாய் அவதாரம் போட்டு, அத உனக்கு வாங்கித் தாரோம். ஒம் மகள எங்கயாவது போய் பொழச்சிக்கச் சொல்லு'

அப்படின்னு தீர்ப்பு சொன்னாங்க.

அட பாவி மனுசனுங்களா இதாடா தீர்ப்பு. இதே ஒங்க புள்ள இப்படி கெட்டுப் போயி வந்து நின்னா, ஒரு மஞ்ச கயிறு வாங்கிக்கிட்டு வரச்சொல்லி அவ கழுத்துல தாலில்லடா கட்டச் சொல்லியிருப்பீங்க. இப்படியாடா தீர்ப்பு சொல்லுவீங்க. உங்களுக்கு ஒரு ஞாயம். ஊருக்கு ஒரு ஞாயமாடான்னு அவளுக்குத் தோணுச்சி.

தர்மம் தலைகுனிஞ்சி நிக்கிறதும், அநியாயம் தலைவிரிச்சு ஆடுறதும், கலிகாலம் முத்திப்போச்சு அப்படிங்கிறத்துக்கு இது மாதிரியான தீர்ப்புகள்தான் உதாரணமா இருந்துச்சி.

என் மவ வயித்துல வளர புள்ளைக்கு யாரு அப்பன்னு கேட்டா நான் யார சொல்லுவேன் அப்படின்னு கேட்டா தாய்க்காரி.

அதுக்கு வடக்கு தெரு நாட்டாம சொன்னாரு.

"ஏன் புள்ள அதுக்காக சின்னாண்டிய ஒம் மவள கட்டிக்க சொல்றியா. அவனுக்கும் உனக்கும் ஏணி வச்சாலும் எட்டுமா புள்ள. அவன் கொலம் என்னா. கோத்திரம் என்னா. புள்ளைய அடக்கம் ஒடுக்குமா வளக்காம நாயம் கேட்க வந்துட்டா பஞ்சாயத்துல' அப்படின்னு தாறுமாறா பேசி குயவர் வீட்ல ஆயிரம் ரூபா பணத்தை வாங்கி, சாணங்கிகிட்ட கொடுக்கிறாரு அந்த நாட்டாமை.

புள்ளையோட நிக்கிற இவளை இனிமே யாரு கட்டிக்குவா. என் மவ வயித்துல புள்ளைய குடுத் துட்டு இப்படி நிக்கிறானே நாசமா போனவன். இவன் நல்லா இருப்பானா. அப்படின்னு மண்ண வாரி தெருவுல உட்டுட்டு, ஒங்காசும் வேணாம் ஒன்னும் வேணாமுன்னு தன்னோட மவ கைய புடிச்சுத் தரதரன்னு இழுத்துகிட்டு வீட்டுக்கு வந்தா சாணங்கி.

வீட்டுக்கு வந்தவ, தலையில இடிவிழுந்த மாதிரி செவுத்துல போயி சாஞ்சு உக்காந்துட்டா. மவக் காரி பாய சுருட்டிப் போட்ட மாதிரி தோட்டத்து திண்ணையில போயி காலக்குறுக்கிக்கிட்டு படுத்துட்டா.

உசுரு கூட பெருசு இல்ல இந்த ஏழைங்களுக்கு. மானங்கறது பெருசு.

எப்போதுமே நல்லது நமுத்துப் போன வெடி மாதிரி கம்முனு கெடக்கும். கெட்டது பாத்தீங்கன்னா சித்திரை வெயில்ல பத்திகிட்டு எறியிற காடு மாதிரி, ஒரு சனத்துல தீயா பரவும். அப்படித்தான் சின்ன மொட்டையோட சம்பவமும் ஊரு ஊரா பரவுச்சு.

ரெண்டு நாலு கழிச்சி பக்கத்து ஊர்ல இருந்து, பெரியான்னு ஒரு ஆளு சாணங்கி வீட்டுக்கு வந்தாரு. அவருக்கு வயசு 60 இருக்கும். சேதி கேள்விப் பட்டேன். உங்களுக்கு ஒன்னும் ஆட்சேபணை இல்லைனா கெட்டுப் போன ஒம் மவளைக் குடுங்க. ரெண்டாந்தரமா, கண் கலங்காம நான் வச்சு காப்பாத்துறேன் அப்படின்னு சொன்னாரு. சாணங்கிக்கு வயசு ஒரு பெருசா தோணல. எங்கேயாவது போயி, எப்படியாவது பொழச்சிக்கிட்டும் போ அப்படின்னு, சாணங்கி சின்ன மொட்ட கையப் புடிச்சு, அந்த பெரியான் கையில கொடுத்து, எங்கேயாவது போயி கண்காணாத எடத்துல பொழச்சிக்க அப்படின்னு சொல்லி ரெண்டு சேலைய சுருட்டி அவ கையில குடுத்து அனுப்புனா.

அந்தக் கடவுளு கையை புடிச்சுகிட்டு, ஊரை விட்டு, ஆத்தால திரும்பித் திரும்பிப் பார்த்துகிட்டும் அழுதுகிட்டும் போனா சின்ன மொட்ட.

இப்ப நான் ஊருக்கு போனாக்கூட, திட்டு திட்டா, ஈரம் ஈரமா இன்னும் காயாமத்தான் கெடக்கு சின்ன மொட்டையோட கண்ணீரும் அவளுக்கு நடந்த கொடுமைகளும்....

அவ திரும்பித் திரும்பி ஆத்தாளை பார்த்து, தேம்பித் தேம்பி அழுதுக்கிட்டுப் போன அந்த சத்தமும், இப்பவும் என் காதுல கேட்டுக்கிட்டேதான் இருக்கு.

சாணங்கி மாதிரிதான் ஞாயம் கிடைக்குமுன்னு, அம்மாவும் எவ்வளவோ அழுது அழுது பாத்துச்சு. ஆனா எந்த நியாயமும் கெடைக்காமலே போயிடுச்சு. அப்பா நிரபராதி அப்படிங்கறதும் யாருக்கும் தெரியாமலே போயிடுச்சு.

ஒரு குற்றவாளி விடுவிக்கப்படலாம். ஆனால் நிரபராதி என்னைக்குமே தண்டிக்கப்படக்கூடாது அப்படின்னு அரசியல் சாசனம் சொல்றதா... நம்ம வக்கீல்கள் எல்லாம் வசனம் வசனமா பேசுறாங்க.

ஆனால் நிரபராதிங்கதான் எப்போதுமே தண்டிக் கப்பட்டுக்கிட்டே இருக்காங்க.

இத இப்ப நெனச்சாகூட எனக்கு அழுக அழுகையா வருது. கண்ணெல்லாம் கலங்குது.

தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில

ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு

காயப்பட்ட சொந்தத்துக்கு கண்ணீர் விட்டா

சாயம் போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு

இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான்

ஈசானி மூலையில மேகம் இருக்கு

தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியில ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு

ஊருக்குப் போகும்போது அப்பா நெனப்பு

வந்தாலும், இல்ல சின்ன மொட்ட நெனப்பு வந்தாலும் இந்தப் பாட்டுதான் எனக்கு ஆறுதலா இருக்கும்.

(வண்டி ஓடும்)...

uday010623
இதையும் படியுங்கள்
Subscribe