ஒரு நாளு எங்க மாமா என் கோயம்புத்தூர் ரூமுக்கு வற்றாரு. அவரு சொல்றாரு அம்மா உன்னை பாக்கணுமாம். அதனால உன்னை ஊருக்குக் கூட்டிக்கிட்டு வர சொன்னாங்க அப்படின்னு சொல்றாரு.
எனக்கு அப்ப விவரம் ஒன்னும் புரியல. கிளம்பி மாமாகூட போறேன். ஈரோட்டில் இறங்கி அங்கிருந்து ஒரு பஸ் புடிச்சு, சேலம் வந்து சேலத்திலிருந்து ஒரு பஸ் புடிச்சு விருத்தாச்சலம் வர்றதுக்கு, சாயங்காலம் மணி 5 ஆயிடுச்சு. விருதாச்சலத்துல இறங்கி முதனை பஸ்ல ஏறுறேன். பஸ்ல இருந்தவங்க எல்லாம் என்ன பாத்து கேட்டாங்க, எப்பா உனக்காகதான் எல்லாம் காத்துட்டு இருக்காங்க அப்படிங்கிறாங்க. எனக்கு மனசு உடைஞ்சுபோச்சு, ஆஹா அம்மாவுக்கு என்னமோ ஆயிடுச்சு அப்படின்னு. பஸ்ஸ விட்டு இறங்குகிறேன். ஒரே மேளச் சத்தமா கேக்குது. கடைசியா என் பெயரை சொல்லித் தான் பால் கொடுத்திருக்காங்க. அப்ப அம்மாவுக்கு கண்ணுல ஓரமா தண்ணி வடிஞ்சிருக்கு. அந்த வடிஞ்ச கறை நான் போற வரைக்கும் கன்னத்துல காயாம இருந்துச்சு.
அம்மா வாயில துணியைக் கட்டி, காலு கட்ட விரல் ரெண்டையும் சேர்த்து துணியாலயே முடிச்சுப் போட்டு, நாற்காலியில உட்கார வச்சிருந்தாங்க.
நான் அப்படியே போயி அம்மாவ உட்கார வச்சிருந்த நாற்காலி கால புடிச்சுக்கிட்டு அப்படியே உக்காந்துட்டேன். கண்ணுல தாரை தாரையா தண்ணி வடியுது. தேம்பித் தேம்பி அழறேன். 15, 16 வயசுல அம்மாங்ற ஒன்னைத் தவிர வேற எனக்கு என்ன விவரம் தெரியப் போகுது.
அம்மாவோட இருந்த ஒவ்வொரு நிமிசமும் மனசுக்குள்ள திரையில ஓடுற மாதிரி ஓடுது.
எங்களுக்கு தாகம் தணிப்பதற்கு இரண்டு மூனு கிலோமீட்டர், எங்கே குளம், குட்டை, ஊத்து தோண்டி இருக்காங்கன்னு பார்த்து தண்ணி மொண்டுக்கிட்டு, தலையில ஒரு குடம், கக்கத்துல ஒரு கொடத்த வச்சிக்கிட்டு தண்ணி தூக்கிக்கிட்டு வருவாங்க. நானும் சும்மாடு கோலி, தலையில வச்சு, அம்மா கூடவே மண்பானையில தண்ணி தூக்கிக்கிட்டு வருவேன்.
தண்ணிக்கே இப்படின்னா, அப்ப எல்லாம் சோத்துக்கே வழியில்லை. ஒரு அரை படி அரிசி இருந்தா அன்னைக்கு ராத்திரி பொழுது ஓடும். அரிசி இல்லன்னா அம்மா ஒரு ஒரு வீடா போய் கடன் கேக்கும். நாளைக்கோ இல்லைன்னா அதுக்கு மறுநாளோ கொடுத்துடறேன். ஒரு அரை படி அரிசி கொடுங்கன்னு. இது பிச்சை எடுக்குறதவிட மோசமான பொழப்பு.
எங்களுக்கு சோறு பத்தலைன்னா சோத்தை எங்களுக்குப் போட்டுட்டு, அம்மா சோறு வடிச்ச கஞ்சி குடிச்சிட்டு அப்படியே படுத்துக்கும்.
அம்மா செஞ்ச தியாகத்தை எத கொடுத்தும் நிரப்ப முடியாது.
அம்மா கட்டிக்கிறதுக்கு சேலைன்னு பார்த்தா

அம்மா கட்டிக்கிறதுக்கு சேலைன்னு பார்த்தா ஒன்னோ ரெண்டோதான் இருக்கும். வேலைக்குப் போயிட்டு வரும்போது அந்த சேலையோட குளத்தில குளிச்சிட்டு பாதிச் சேலையை புழிஞ்சு மார்வரைக்கும் கட்டிக்கிட்டு, மீதி சேலையை புழிஞ்சு அதை ஒத்த கையில புடிச்சுகிட்டு, அப்படியே காத்துல உலத்திக்கிட்டே வரும். வீடு வரைக்கும் வந்து இன்னொரு சேலையை மாத்துனுன்னாலும் மாத்தும், இல்லன்னா அப்படியேகூட இருந்திடும்.
எனக்கு ராத்திரில தூங்குறதுக்கு அம்மாவோட சேலைதான் வேணும். அம்மா சேலையை போத்திக்கிட்டுதான் தூங்குவேன். அம்மாவோட சேலை இல்லன்னா எனக்கு தூக்கம் வராது. எனக்கு பத்துப் பதினைந்து வயசு ஆனதுக்கு அப்புறம்கூட அம்மா சேலையை போத்தாம நான் தூங்க மாட்டேன். மழைக்காலத்திலயும், பனிக்காலத்திலயும், வெயில்காலத்துலகூட அம்மாவுடைய சேலையை தலையை மூடிக்கிட்டு, கால குறுக்கிக்கிட்டு படுத்துட்டா ஏதோ கருவறையில் கிடக்கிற மாதிரி இருக்கும். சேலை உள்ள அம்மாவோட வாசம் கமகமன்னு உடம்பு முச்சூடும் பரவும். அம்மாவுடைய சேலையை எத்தனை முறை தொவச்சி இருப்பாங்கன்னு தெரியாது. ஆனா நான் 15, 16 வயசுல போத்திக்கிட்டப்பகூட அந்த சேலையில பால் வாசம் மாறாம இருந்துச்சு.
எனக்கு இப்ப அண்ணன் ”இளையகம்பன்” எழுதி, சித்தன் ஜெயமூர்த்தி பாடிய பாட்டுதான் கண்ண குளமாக்குது.
முன்நூறு நாள் சுமந்து - என்ன
மூச்சடக்கி பெத்தெடுத்து
பல நூறு தவம் இருந்து - என்ன
பக்குவமா ஈன்றெடுத்து
மாருலையும் தோளுலையும்
நான் உறங்க ஏனை கட்டி
காட்டுலையும் மேட்டுலையும்
நெத்தி வேர்வை நித்தம் சொட்டி
எனக்காக தியாகம் செஞ்ச சாமி….
எனக்காக தியாகம் செஞ்ச சாமி….
என்னைக்குமே நீ தான் என் பூமி
பொத்திப் பொத்தி என்ன வளத்தது யாரு
பொத்திப் பொத்தி என்ன வளத்தது யாரு
நீதான்னு சொல்லி தெரியணுமா ஓ அம்மாவோ
கோடி சாமி உனக்கு ஈடாகுமா
களை வெட்ட நெல்லறுக்க
கால் கடுக்க நீ நடப்ப - எனக்கு
நெல்லு சோறு பொங்கித் தந்து
நீச்ச தண்ணி நீ குடிப்ப
மாத்திக்கட்ட இல்லாம
விதியேன்னு நீ இருப்ப - எனக்கு
சேப்புகட்டி வச்சிருந்து புது துணி நீ எடுப்ப
உத்தமியே நான் படிக்க - நீ
ஓடா நீ தேஞ்சியம்மா - உன்
ஒத்தக் கல்லு மூக்குத்தியதான்
அடகு நீ வச்சியம்மா
பெத்தவளே நீ தான் ஏன் கோயிலம்மா - உன்
தியாகத்துக்கு தெய்வந்தான் நிகராகுமா
-இல்லடியே அதுல இருக்கும் சொல்லெல்லாம் அழுது அரற்றும்.
எத்தனை ஜென்மம் எடுத்தாலும், என்னென்ன
கைமாறு செஞ்சாலும், நாம் கோடி கோடியா சம்பாதிச்சாலும் அம்மா பட்ட துன்பத்துக்கும்,
அவங்க கொடுத்த தாய்ப்பாலுக்கும், ஈடு இணையா எதைக் கொடுத்திட முடியும்.
சொந்த பந்தம் எல்லாம் வருது. வருசக்கணக்கா பார்க்காத முகமெல்லாம் வந்து கூடி ஒப்பாரி வச்சு அழுதுட்டுப் போறாங்க. சாயங்கால மணி மூணு ஆச்சு, அம்மாவ தூக்கிட்டுப் போய் வாசல்ல உட்கார வச்சு, வாசலுல ஒரு குழிபறிச்சி, அம்மா தலையில எண்ணை, சீயக்காய் எல்லாம் வச்சு குளிப்பாட்டு றாங்க. குளிப்பாட்டி, பொறந்த வீட்டுலருந்து வந்த சேலையை கோடித் துணியா அம்மா மேல போத்தி, தூக்கி பாடையில வைக்கிறாங்க. தூக்கி வச்சோன்ன அம்மாவுடைய பழைய சேலை எல்லாத்தையும் சுருட்டி பாடையில அம்மா பக்கத்திலேயே போய் வைக்கிறாங்க. சின்ன பசங்களுக்கு எல்லாம் பத்திய பத்த வச்சு, அதை வாழைத்தண்டுல குத்திக்கிட்டு பாடையை சுத்தி சுத்தி வராங்க.
அம்மா… அம்மா… அம்மா… நான் இனிமே யாரு சேலையை போத்திக்குவேன் அம்மா…
பாடையில வச்சு தூக்கிட்டுப் போகும்போது அப்ப எனக்கு தோணுச்சு ஊர்ல இனிமே நமக்கு எதுவுமே இல்ல அப்படின்னு. உண்மை தானே அம்மா இல்லைன்னா அப்புறம் ஊருல நமக்குன்னு என்ன இருக்கு.
சுடுகாட்டில் போயி பாடைய இறக்கி வக்கிறாங்க. அந்த சுடுகாட்டுல குழி தோண்டி அதுல அம்மாவை உக்கார வைக்கிறாங்க. மண்பானைல வெண்பொங்கல் சோத்த வச்சு அம்மா மடியில வைக்கிறாங்க அப்புறமா உப்பு எல்லாம் தூவி, அரிசி போட்டு, மண்ணை போட்டு மூடுறாங்க. மண்ணை போட்டு மூடியதும் அம்மா வாய்க்கு நேரா ஒரு குச்சிய சொருகி, அந்த குச்சியில பால் ஊத்து றாங்க. உசுரா இருக்கும்போது அம்மா பசிக்கு ஒரு டம்லர் பால்கூட கெடைக்கில. இப்ப செத்ததுக்கு அப்புறம் பால் ஊத்துறாங்க. எனக்கு அழுது அழுது கண்ணெல்லாம் வீங்கிப் போச்சு.
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்துபெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் - செய்யஇரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி
அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் - உருசியுள்ள
தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ
மானே என அழைத்த வாய்க்கு
-படிச்ச பட்டினத்தார் பாட்டெல்லாம் மனசில் வருது.
யாருடைய தாயா இருந்தா என்ன? அம்மாங்கிற ஒருத்தவங்க இறக்கும்போது அந்த துயரம் மனச என்ன பாடு படுத்துமுன்னு பட்டினத்தார் பாட்ட படிக்கும்போதுதான் தெரியுது.
எல்லா சடங்கு முடிஞ்சு வீட்டுக்கு வரோம்.
அதுக்கு அப்புறம்தான் நான் அம்மா பாட்டு எல்லாம் கேட்க ஆரம்பிக்கிறேன்.
இசைஞானி இளையராஜா சாரோட
பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா…
இந்த பிள்ளை மனசு பித்தத்திலும் பித்தமடா
அப்புறம்…
அம்மானா சும்மா இல்லடா ஆ…
அவ இல்லேனா யாரும் இல்லடா ஆ
அப்புறம்
உன்னைப்போல ஆத்தா
என்னை பெத்து போட்டா
அடி என்னைப் பெத்த ஆத்தா
கண்ணீரைத்தான் பாத்தா
-இது ராமராஜன் படம். அப்பதான் கரகாட்டக்காரன் வந்த நேரம். இந்த எல்லா பாட்டையும் அம்மாவை நினைச்சு நினைச்சு அப்படியே கேட்கிறது. ஒரு வீட்ல ஒருத்தவங்க டெத் ஆயிட்டாங்கன்னா ஒரு வருஷம் அந்த தூக்கம் அந்த வீட்டில் இருந்துக்கிட்டே இருக்கும். இப்ப எல்லாம் ரெண்டே நாள்லயே மறந்துடறாங்க.
அம்மா இறந்ததுக்கு அப்புறம், அப்பா ரொம்ப மன உளைச்சலுக்கு ஆளாகுறாரு. அதுக்கு அப்புறம் அப்பா வேலைக்கு சரியா போகாம நிறைய குடிச்சு, குடிக்கு அடிமையா ஆகுறாரு. கடன் வாங்க ஆரம்பிக்கிறாரு.
அதுக்கப்புறம்தான் இனிமே நாம அப்பாகூட இருந்து அப்பாவைப் பார்த்துக்கலாம் அப்படின்னு முடிவுபண்ணினேன். அம்மா இறந்ததுக்கு அப்புறம் பாட்டுங்குற விஷயத்துக்கே நான் போகல. ஏன்னா அன்றாட நாட்கள் நகர்வதற்கே கையில காசு இல்லாம ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அப்பாவும் வேலைக்குப் போறதில்ல. அதனால பாட்டுல என்னால கவனத்தை செலுத்த முடியல.
பையனுக்கு பணம் அனுப்பனும். சம்பளம் வாங்கித் தாரேன், சம்பளம் வாங்கித் தாரேன் அப்படின்னு அப்பா ஊரு பூரா கடன் வாங்கி வச்சுட்டாரு. அதுக்கு அப்புறம்தான் நான் பார்த்தேன். இனிமே அப்பாவை எந்த விதத்திலும் நம்பவேண்டாம் அப்படின்னு முடிவுபண்ணினேன்.
இப்ப என்ன பண்ணலாம்னு யோசிக்கும்போது காலேஜ்ல ட்ரம் போர்டு யூஸ் பண்ணுவாங்க. இதை ப்ரோக்ராம்ல செகப்பு டிரஸ் போட்டுக்கிட்டு ட்ரம்ப் அடிப்பாங்க. பின்னாடி ஒரு 20 பேர் ஒரு ஆம்பிஷனுக்காக நின்னுகிட்டு இருப்பாங்க.
அந்த 20 பேர்ல நம்மளும் ஒருத்தரா நின்னா ஒரு 50 ரூபாய் கொடுப்பாங்க. அது மாதிரி வேலைக்கு போக ஆரம்பிச்சேன். அப்படியே போயிட்டு வரும்போது ஒரு இடத்தில் வந்து லட்சுமி மில் அப்படின்னு ஒரு இடம். அதுல உள்ள மண்டபத்துல கச்சேரி நடக்குது. அப்ப வந்து ட்ரிபிள் பேங்க் கோர்ஸ்தான் ரொம்ப ஃபேமஸ். இத பெரிய பெரிய நிகழ்ச்சிகள்ல பயன்படுத்துவாங்க. நான் பஸ்ல வரும்போது அந்த காட்சியை நடக்கிறத பாத்தேன். டக்குனு அடுத்த ஸ்டாப்பிங் இறங்கிட்டேன். அப்படியே அந்த மண்டபத்தில் உட்கார்ந்து ஆர்கெஸ்ட்ரா பார்க்கிறேன்.
பார்த்துட்டு அவங்க கிட்ட கார்டு வாங்கிட்டு நான் அவங்ககிட்ட பாடுறத்துக்கு வாய்ப்பு கேட்கிறேன். அங்கே எனக்கு வாய்ப்பு கிடைக்கல. திரும்பி வந்துட்டேன். பெருசா வேற எதுவும் முயற்சி யும் பண்ணல. காலேஜ் மூணு வருஷம் முடிஞ்சு வீட்டுக்கு வந்துட்டேன். அப்பா குடிக்கிறாருன்னு அண்ணன் கேட்டோன்ன அவங்களுக்குள்ள ஒரு சின்ன தகராறு வருது. உடனே அண்ணனும் அண்ணியும் பிரிந்துபோய் நெய்வேலியில் அப்பாவுடைய கோட்டர்ஸ்ல தங்கிட்டாங்க.
அப்பா மட்டும் இருக்காரு. இப்ப நான் அவர் கூடவே இருக்கேன். எங்க ஆயாவும் கூட இருக்காங்க.
அவங்கதான் எங்களுக்கு சமைச்சு கொடுக்கி றாங்க.
ஐ.டி.ஐ. முடிச் சிட்டு சும்மா இருக்கிறதா அப்படின்னு விருதாச்சலத்துல கிருஷ்ணா இன்ஸ்டிட் யூட்ல டைப்ரைட்டிங் கிளாஸ் சேருறேன். அங்க டைப்ரைட்டிங் பண்ணிட்டு இருக்கும்போது, ஒருத்தரோட பழக்கம் கிடைக்குது. அவர் பேரு ரவிச்சந்திரன். அவரோட நண்பர் பேரு ராஜேந்திரன் விருத்தாச்சலத்துல செல்லியம்மன் கோயில் திருவிழாவில் கச்சேரி பண்றதுக்காக ஓமகுச்சி நரசிம்மன், பழனிவேல்னு ஒரு சிங்கர், அப்புறம் மோகன் வைத்யா இவங்க எல்லாம் அந்த மேடைக்கு வராங்க. அங்க நான் ஒரு வாய்ப்பு கேக்குறதுக்காக போயிருந்தேன். வாய்ப்பு கிடைக்காததல, பிளஸ் ஒன், பிளஸ் டூ சேர்ந்திடலாம்னு முடிவுபண்ணி பள்ளிக் கூடத்தில சேர்ந்துட்டேன். இது நடந்தது 99-ல. அப்ப ஸ்கூல்ல டெய்லி பிரேயர் நடக்கும். காலையில் டெய்லி பாட்டு போடுவாங்க சாயங்காலம் பெல் அடிச்ச உடனே எல்லா
ரும் போயிடுவாங்கன்னு தமிழ்த்
தாய் வாழ்த்து பாடும்போதே ஜன
கன மனவும் சேர்த்துப் பாடிடுவோம்.
அப்புறம் நெஞ்சில் கை வச்சிட்டு உறுதிமொழி சொல்லுவாங்க. “நான் காலையில் எழுந்தவுடன் இன்றைய பாடங்களைப் படிப்பேன். வீட்டுக்கு சென்றதும் வீட்டு வேலையை சரியாக செய்து அந்தந்த பாடங்களை அன்றன்றே முடித்து, என்னு டைய வேலையை செவ்வனே முடிப்பேன். காலையில் எழுந்தவுடன் பல் துலக்கி காலை கடன் முடித்து, வீட்டு பாடம் படித்து, எண்ணெய் தேச்சு, வாக்கெடுத்து தலை சீவி, காக்கி கால் சட்ட, வெள்ளை மேல் சட்டை போட்டுகிட்டு பள்ளிக்கு நேரத்தோடு வருவேன். வந்து ஆசிரியர் சொல்வதைக் கேட்பேன் இது என் உறுதிமொழி அப்படின்னு சொல்லுவோம்.’
அப்புறம் ஒரு திருக்குறள் சொல்லி அதுக்கு பொருளும் சொல்லுவோம். தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு. எப்படி ஒரு கிணற்றை தோண்டும்போது அள்ள அள்ள நீர் அருவி மாதிரி ஊற்றாக வருகிறதோ, அது மாதிரி கற்க கற்க நம்மளுடைய அறிவும் வளரும். இதைத்தான் தொட்டனைத் தூறும் மணற்கேணி என்கிற குறள்ல திருவள்ளுவர் கூறியிருக்கிறார். அப்படின்னு சொல்லுவோம்.
ஒரு நாளு தமிழ்த்தாய் வாழ்த்தும், ஜனகன மனவும்பாடும்போது கரண்ட் கட் ஆயிடுச்சு. இப்ப நான் என்ன பண்றேன், ஓடிப்போயி அந்த விட்டத்துல நின்னுகிட்டு தமிழ்த்தாய் வாழ்த்தும் ஜன கன மனவும் பாடுறேன்.