வ்வொரு வருடமும் இலக்கியத்திற்கான நோபல் பரிசு மிகுந்த எதிர்பார்ப்புடன் காணப்படுகின்ற நிலையில் இந்த வருடமும் அந்த எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருந்தது. ஏனெனில் இந்த வருடம் இரண்டு நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலக்கிய சமூகத்தினரிடையே பரவலாக பேசப்பட்ட கருத்து என்னவென்றால் அப்பரிசுகளில் ஒன்று பெண் எழுத்தாளருக்கு வழங்கப்படலாம் என்பதே. அவர்களின் எண்ணத்திற்கு ஏற்றவாறே அறிவிப்பும் வெளியானது. 2018-ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு போலந்து நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான ஓல்கா டோகர்க்ஸுக்கும் 2019-ஆம் ஆண்டிற்கான பரிசு ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த பீட்டர் ஹண்ட்கேவிற்கும் கிடைத் துள்ளது. இக்கட்டுரை 2019-ஆம் ஆண்டின் நோபல் பரிசிற்கு சொந்தக்காரரான பீட்டர் ஹண்ட்கே பற்றியது.

ஹண்ட்கேவின் படைப்புகள் புதுமையை விரும்புகின்ற படைப்புகளாக உள்ளன. தனது படைப்புகளில் எளிமையான மொழியைக் கையாண்டு மனித வாழ்வின் எதார்த்தங்களை கருப்பொருளாக உட் புகுத்தி தன் எண்ணங்களால் அவற்றை அலங்கரித்து சாமானிய மக்களும் உள்வாங்கும் வகையில் அவருடைய படைப்புகள் அமைந்திருக்கின்றன. ஹண்ட்கே தனது மொழியியல் புத்திக் கூர்மையின் மூலம் மனித அனுபவத்தின் எல்லைகளையும் தனித்தன்மையையும் ஆராய்ந்து முக்கியத்துவம் வாய்ந்த படைப்புகளை உருவாக்கியதே இந்த வருடத்தின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற காரணமாக அமைந்திருப்பதாக ஸ்வீடிஷ் அகடெமி அறிவித்துள்ளது.

dd

1942-ஆம் ஆண்டு ஆஸ்திரியா நாட்டில் பிறந்த இவர், ஒரு நாடக ஆசிரியராக அவரது முக்கிய படைப்பான அஃபண்டிங் தி ஆடியன்ஸ் 1966-ல் வெளிவந்து இவரை இந்த உலகம் அறிந்து கொள்ளும்படி தன்னை உருவாக்கிக் கொண்டார். இவருடைய பெரும்பாலான படைப்புகள் வழக்கத்திற்கு மாறான கதை பின்னோட்ட மும் வசனங்களும் பெற்றிருந்ததால் வாசகர் கள் பலரால் ஈர்க்கப்பட்டு பெருமளவில் வாசிக்கப்பட்டன. 1968ஆம் ஆண்டு வெளியான "கஸ்பர்' என்ற நாடகம் ஒரு தனிப்பட்ட மனிதனின் சொல்லொண்ணா துயரமான மொழித் திணிப்பையும் சமூகத்தின் கலாச்சார தாக்கத்தையும் விவரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தன்னுடைய மொழித் திறமையை புத்தகங்கள் எழுது வதுடன் சுருக்கிக் கொள்ளாமல் சில திரைப்படங் களுக்கு திரைக்கதையும், தன் சொந்த நூலான தி லெஃப்ட் ஹண்டேட் உமன்-யை படமாகவும் இயக்கியுள்ளார். 1978-ஆம் ஆண்டு வெளியான இவரது தி லெஃப்ட் ஹண்டேட் உமன் என்ற திரைப்படமானது திருமணமான ஒரு பெண் தன் உள்ளுணர்வுகளை உணர்ந்து யாரையும் சார்ந்திருக் காமல் சுயமாக எவ்வாறு தன் சமூகத்தை எதிர் கொண்டு வாழ்கிறாள் என்பதனை துல்லியமாக சித்தரித்துள்ளது. 1980-ஆம் ஆண்டு இப்படத்தின் கதையம்சம் மற்றும் கதைக்கருவின் தனித்தன்மையை உணர்ந்து ஜெர்மன் நாட்டின் அர்தோஸே சினிமாவுக் கான தங்க விருதினை பெற்றார். மேலும் பிரபல ஜெர்மனிய திரைப்பட கலைஞர் விம் வெண்டேர்ஸ் உருவாக்கிய "விங்ஸ் ஆப் டெஸிர்' படத்திற்கு இவருடைய பங்கு இன்றியமையாதது.

Advertisment

சாதனை படைப்பவர்கள் சர்ச்சைக்கு உள்ளாவது வழக்கமானதே. ஹண்ட்கே மட்டும் இதற்கு விதி விலக்கல்ல. இவர் தன் துறையில் பல சாதனைகளை எட்டியிருந்தாலும் சர்ச்சைகளும் உடனே ஒட்டிக் கொண்டன. யுகோஸ்லோவியா நாட்டின் முன்னாள் அதிபரும் செர்பியா போர்க் குற்றங்களுக்கு பொறுப் பானவருமான ஸ்லோபோடன் மிலோசொவிச் இறுதிச்சடங்கில் அவர் ஆற்றிய உரை பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. 2006-ஆம் ஆண்டு ஹென்றிச் ஹெய்ன் பரிசிற்காக இவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டது, ஆனால் அவரின் அரசியல் கருத்துகள் கிளப்பிய சர்ச்சைக்காக நிராகரிக்கப்பட்டார். இதேபோன்று 2014-ஆம் ஆண்டு "இன்டர்நேஷனல் இப்சென் அவார்ட்' வழங்கப்பட்ட போதும் அவரின் திறமைகளை முடக்கும் வகையில் சில எதிர்ப்புகளும் எழுந்தது. அதேபோல தற்போது ஹண்ட்கேவிற்கு வழங்கப்பட்ட நோபல் பரிசு பலரை ஆச்சரியத்திலும் சிலரை வெறுப்பிலும் ஆழ்த்தியுள்ளது மேலும் பல நேர்மறை மற்றும் எதிர்மறை கருத்துக்களும் சமூக வலைத்தளங்களில் பெரிதும் பகிரப்பட்டுவருகின்றன. அல்பேனியா (Albania), போஸ்னியா (Bosnia) மற்றும் கொசாவா (kosvo) போன்ற நாடுகள் தங்களின் எதிர்ப்பினை தீவிரமாக வெளிப்படுத்தியுள்ளனர். இதற்கு அவர் ஸ்லோபோடன் மிலோசொவிச்சிற்கு காட்டிய விசுவாசமே முக்கிய காரணமாக பேசப்படுகின்றது.

1996-ல் எ ஜெர்னி டு தி ரிவர்ஸ்: ஜஸ்டிஸ் பார் செர்பியா என்ற ஒரு பயணக்கட்டுரை எழுதி செர்பியா நாட்டு மக்களின் நன்மதிப்பை பெற்றது மட்டுமல்லாமல் அவர்களின் தீவிர ஆதரவாளராகவும் பார்க்கப்பட்டார். இதன் வெளிப்பாடாக 1999-ல் ஜெர் மனியின் மதிப்புமிக்க விருதான 'பிஎச்னீர் பரிசினை' செர்பிய தலைநகரமான பெல்கிரேடு (Belgrade) மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக திரும்ப ஒப்படைத்துவிட்டார்.

இவர் செர்பியா நாட்டின் மீது கொண்ட பற்றின் பிரதிபலிப்பாக செர்பியா நாளிதழ்கள் ஹண்ட்கேவை போற்றி "செர்பியர்களின் நண்பன்' என்றும் 2012-ஆம் ஆண்டிலிருந்து கலை மற்றும் அறிவியல் துறைகளில் அவர் ஆற்றிய சிறப்பம்சங்களை சித்தரித்து எழுதியுள்ளன. லிபெரல் சராஜேவோ (Liberal Sarajevo) கட்சியின் ரியூப் பஜிரோவிச் (Reuf Bajrovic), , ""ஹண்ட்கே ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் மிலோசொவிச்சிற்கும் ஆதரவாக அவரது படைப்பின் ஒரு பகுதி பெருமையாக பார்க்கப்படுகிறது'' என்று தனது கருத்தினை பதித்துள்ளார்.

Advertisment

இவ்வாறு ஒருபுறம் ஹண்ட்கேவிற்கு குவியும் பாராட்டுகளை பட்டியலிட்டுக் கூறும்போது அவரைப்பற்றி எழும் எதிர்மறை கருத்துகளையும் கவனத்தில் கொள்வது அவசியமாகிறது. அல்பேனியா நாட்டின் பிரதம மந்திரி இதி ராமா (Edi Rama) தனது சமூக வலைத்தள பக்கத்தில் ""ஒரு உன்னதமான பரிசு அளிக்கப்படுவதைக் கண்டு நான் வெறுத்து உமிழ்வேன் என்றும் ஒருபோதும் நினைத்ததில்லை"" என்று தன் எதிர்ப்பினை தெரிவித்துள்ளார். மேலும் போஸ்னியா சங்கத்தின் இஸ்லாமிய உறுப்பினரான செபிக் டிசபரோவிச் (Sefik Dzaferovic) ""நோபல் பரிசு வழங்கும் குழு அதன் தரத்தினை இழந்துவிட்டது என்றும் ஹண்ட்கேவிற்கு வழங்கப்பட்டது மிகவும் அவதூறான மற்றும் வெட்கக்கேடான செயல்'' என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இவ்வாறு பலரின் தனிப்பட்ட கருத்திற்கு இலக் கானாலும் ஹண்ட்கே தனது எழுபத்தியோராம் வயதில் விருதுகளுக்கெல்லாம் தலையான நோபல் பரிசினை வென்று தனது இலக்கியப் படைப்புகளுக் கான உரிய அங்கீகாரத்தை அடைந்துள்ளார் என்பதே நிதர்சனமான உண்மை. அரசியல் ஈடுபாடுகள், சித்தாந்த ஈர்ப்புகளுக்கு அப்பாற்பட்டு தனிப்பட்ட திறமைகளுக்கு தகுந்த வெகுமதி கிடைக்கும் என்பதற்கு 2019-ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற பீட்டர் ஹண்ட்கே தான் சிறந்த உதா ரணம். இதே ஹண்ட்கே 2014-ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்குவதில் முரண்பாடு இருப்பதாகவும் இது ஒரு தவறான நியமனம் என்று வெளிப்படையாக தன் கருத்தினைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத் தக்கது. இருந்தபோதிலும், பல கருத்து மோதல்கள் இருந்தாலும் ஒரு கலைஞனுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரமானது முறையே தக்க நேரத்தில் கிடைக்கும் என்பதை ஹண்ட்கேக்கு அளிக்கப்பட்ட பரிசின் மூலம் நோபல் தேர்வுக் குழு உறுதி செய்துள்ளது.