இந்த மரத்திற்கும் அதற்கே உரிய ஒரு கதை இருக்கிறது. மரத்திற்கும் கதையா? ஆமாம்... ஏன் இருக்கக்கூடாது? தமயந்தியின் பார்வை அந்த மரத்திலேயே பதிந்திருந்தது. அலைகள் மேலே வருவதும், திரும்பிச் செல்வதும்போல நிறைய கேள்விகளும் பதில்களும் வந்து போய்க்கொண்டிருந்தன.
இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பிருந்த உலகத்திற்கும் இன்றைய உலகத்திற்குமிடையே நின்றுகொண்டு, தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்வதற்கு முயற்சித்தவாறு மரம் வளர்ந்து கொண்டிருந்தது. ஏதோ பெரிய ஒரு பறவை சிறகுகளை விரித்தவாறு உள்ளே பறப்பதைப்போல... இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பிருந்த விஷயம் இனி எந்தக் காலத்திலும் திரும்பவராதே!
இதுதான் அந்த இடம்... வாழ்க்கையின் சூரியன் முதன்முதலாக உதித்தது இங்குதான். அதன் வெளிச்சத்தில் தான் பயணம் ஆரம்பமானது. மகிழ்ச்சி நிறைந்த ஒரு புலர்காலைப் பொழுதாக இருந்தது அது. பூமி பசுமை நிறைந்ததாக இருந்தது. சூரியன் பொன்நிறக் கதிர்களை உதிர்த்தவாறு, ஆகாயத்தில் ஒரு பந்தைப்போல உருண்டுருண்டு நீங்கிக்கொண்டிருந்தது. பறவைகளின் சத்தம்... மல்ஹார் ராகத்தில் ஒலித்துக்கொண்டிருந்தது.
உண்மையிலேயே அந்த நேரத்தில்தான் ராமேஸ்வர் அங்கு ஒரு மரக்கன்றை நட்டவாறு கூறினான்: "பாரு தமயந்தி. ஒருநாள் இந்த மரக்கன்று உன்னிடம் ஒரு கதை கூறும்!' இன்று அந்த மரத்தைப் பார்க்கும்போது, அதன்மீது அவனுக்கு எந்த அளவுக்கு நெருக்கமும் ஈடுபாடும் இருந்தன என்பதைப் புரிந்துகொள்கிறாள். உண்மை யிலேயே இன்று அது ஒரு கதையைக் கேட்கச் செய்வதைப் போலவே தோன்றுகிறது.
ஆர்வம் நிறைந்த நாட்களாக அவை இருந்தன. அவள் அப்போது பதினொன்றாம் வகுப்பிலும், ராமேஸ்வர் பன்னிரண்டிலும் படித்துக் கொண்டிருந்தார்கள். இயற்கையின் இயல்பான அழகு கிராமத்தில் நிறைந்து நின்றிருந்தது. தீஜ் கொண்டாடப்படும் காலத்தில் கிராமம் புதிய மணப்பெண்ணைப்போல அலங்கரிக்கப்பட்டு காணப்படும். அத்துடன் அந்த மரங்களும்... அவை பூமியில் உறுதியாக நின்றுகொண்டு, ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தன. மேகங்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு, கவலைகளை மறைக்கின்றன என்று யாரோ குற்றம் சாட்டினார்கள். சில வேளைகளில் அவை மழையாக பெய்யவும் செய்தன.
சில நாட்களில் அவர்கள் பள்ளிக்கூடத்திலிருந்து சீக்கிரமே வெளியே வந்து, அந்த இடத்தில் மணிக் கணக்கில் அமர்ந்திருப்பது வழக்கமான செயலாக இருந்தது.
அப்போது அவள் ராமேஸ்வரின் செவியில் மெதுவாக சிலவற்றைக் கூறி சந்தோஷத்தில் ஆடுவாள்.
அந்த மரம் சிறிது சிறிதாக வளர்வதை அவள் பார்த்துக் கொண்டேயிருந்தாள்.
ஒவ்வொரு நாளும்... வாரமும்... மாதங்களும்... வருடங்களும்...
அவளுடைய கண்களில் அது நின்றுகொண்டிருக்கும் இடத்திலேயே நின்றவாறு, மிகப்பெரிய அளவில் மாறிக்கொண்டிருந்தது.
ஆளரவமற்ற ஒரு இடமாக அது இருந்தது. காதல் சம்பந்தப்பட்ட செயல்களுக்கு இந்த அளவுக்கு அழகான ஓரிடம் பூமியில் வேறெங்கும் இருக்காது. அங்கு வருவதற்கு ஒரு பாதையோ வரப்போ கிடையாது. ராமேஸ்வரின் தந்தையின் கட்டுப்பாட்டிலிருந்த ஒரு சிறிய தோட்டமது. அங்கு மரங்கள் நெருக்கமாக வளர்ந்திருந்தன. எனினும்... எப்போது பார்த்தாலும் யாரோ இருப்பதைப்போல தோன்றும்.
ராமேஸ்வருக்கு அந்த இடத்தின்மீது ஒரு தனிப்பட்ட விருப்பமிருந்தது. எப்போதிருந்து விருப்பப்பட ஆரம்பித்தான் என்பதைக் கூறுவது சிரமமானது. அங்கிருந்து சற்று தூரத்தில் பள்ளிக்கூட

ராமேஸ்வருக்கு அந்த இடத்தின்மீது ஒரு தனிப்பட்ட விருப்பமிருந்தது. எப்போதிருந்து விருப்பப்பட ஆரம்பித்தான் என்பதைக் கூறுவது சிரமமானது. அங்கிருந்து சற்று தூரத்தில் பள்ளிக்கூடம் இருந்தது.
வளைந்து நெளிந்து கிடக்கும் ஒற்றையடிப் பாதைகளைக் கடந்து அந்த இடத்திற்கு வரவேண்டும். கிராமத்தின் பூகோள விரிவாக்கம் திடீரென உண்டானது.
முன்பு அங்கு யாருமே இல்லாமலிருந்தார்கள். இப்போது அங்கு வீடுகளின் மேற்கூரைகளை மட்டுமே பார்க்கலாம். அந்தத் தோட்டம் இப்போதும் அங்கிருக்கிறது. தன்னுடைய தனித்துவ முத்திரையைப் பதித்தவாறு அந்த மரமும்...
இப்போது ராமேஸ்வர் இருந்திருந்தால், எந்த அளவுக்கு சந்தோஷத்தில் இருந்திருப்பான்! 25 வருடங் களுக்கு முந்தைய காலத்திற்குச் சிந்தனையைச் செலுத்து வதற்கு அவள் வெறுமனே முயற்சித்துக்கொண்டிருந்தாள்.
கடந்துசென்ற காலத்தைப் பற்றி நினைத்துப் பார்த்தாள். கணவனின் மரணம்... இறந்த தந்தைக்குக் கர்மம் செய்யும் இளைஞனான மகன்!
தொழிற்சாலைகளுக்காக அந்த மரங்களுக்கு மத்தியில் சாலை அமைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியைக் கேட்டபோது, கணவனின் மரணத்தால் உண்டான வேதனை அதிகரித்தது. இரவிலும் பகலிலு மாக பூமியின் நெஞ்சைக் கிழிப்பதைப்போன்ற திட்டங் களை சிலர் செயல்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றியது.
கிராமத்தில் வளர்ச்சியின் பகுதியாக பலவும் வர இருக்கின்றன என்ற சிந்தனை ஊரில் இருப்பவர் களிடமும் வளர்ந்துகொண்டிருந்தது.
சமீபத்திலிருந்த கிராமங்களிலும் மேல்நோக்கி தலையை உயர்த்திப் புகையைத் துப்பிக்கொண்டிருந்த அடுப்புகள் அதிகரித்துக்கொண்டே வந்தன. அதைப் பார்த்து அவர்கள் பயப்பட ஆரம்பித்திருந்தார்கள்.
தொழிலதிபர்களின் சம்ஹார தாண்டவம் அங்கேயும் கூட வரப்போகிறது என்பதை அவள் புரிந்துகொண்டாள். சிந்திக்கச் சிந்திக்க அவளுக்கு அழுகை வந்தது. பழைய நினைவுகள் அனைத்தையும் கரையான் அரித்து விட்டிருந் தன. புதியவை வேதனையை உண்டாக்கின.
ராமேஸ்வரின் குருதியில் குளித்த சரீரம் இப்போது திடீரென அவளுடைய கண்களுக்கு முன்னால் தோன்றியது.
அவனுடைய மோட்டார் சைக்கிள் சாலையின் அருகில் விழுந்துகிடந்தது. அவனுடைய சிரித்துக் கொண்டிருக்கும் முகம் அசைவற்றும் சாந்தமானதாகவும் இருந்தது. முகத்தில் ஆங்காங்கே ரத்தம் உறைந்து காய்ந்து காணப்பட்டது.
இந்த ராட்சச வாகனங்கள் ஒருநாள் எல்லாரது உயிரையும் எடுக்குமென்று சிந்தித்ததில்லை. அவனு டைய உயிரைக் காப்பாற்றுவதற்கு, மரணம் ஒரு வாய்ப் பைக்கூட தரவில்லை.
தன் வாழ்க்கை என்ற மூட்டையில் தாங்கிக்கொள்ள முடியாத வேதனைகளையும், பாசமுள்ள ஒரு ஆண் குழந்தையையும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்து ராமேஸ்வர் பாதுகாத்து வைத்தான்.
முன்னால் மலையைப்போல வாழ்க்கை... அதைத் தாண்டிச் செல்லவேண்டும். போகும் யாருமே எந்தக் காலத்திலும் திரும்பி வருவதேயில்லையே! அழிந்து போகும் வயது எப்போதும் அதை நினைவுபடுத்துகிறது. அம்மாவின் அம்மாவும் அம்மாவின் அப்பாவும் மரணமடைந்ததற்குப் பின்னாலிருந்த வாழ்க்கை அவளால் தாங்கிக்கொள்ள முடியாததாக இருந்தது. மகனுடைய கல்லூரி விடுமுறை முடிந்திருந்தது. நகரத்திற்குத் திரும்பிச் செல்லும்போது அவன் கூறினான்:
"அம்மா... ஆசைப்படுற விலை கிடைக்கறதா இருந்தா நாம அந்த தோட்டத்தை விற்கலாம்.'
அவன் கூறியதை அவள் கவனிக்கவில்லை. விவசாயத்தி லிருந்து வரக்கூடிய வருமானத்தை வைத்து அவனுடைய படிப்பும் செலவும் நடந்துகொண்டிருந்தன. ஆனால், தோட்டத்தை விற்கக்கூடிய விஷயத்தை மகன் கூறியதற்குக் காரணம் என்ன? சிறிது நேரம் அவள் தர்மசங்கடமான நிலைக்கு உள்ளானாள்.
சூரியன் மறைந்தது. தயங்கிக்கொண்டும் பதுங்கிக் கொண்டும் இருள் பரவியது.
"கேளுங்க... கவனிங்க... இன்னிக்கு புகழ்பெற்றவங்களும் பெரிய மனுஷங்களுமான பலரும் கிராமத் துக்கு வர்றாங்க. கிராமத்து மக்களோட கூட்டத்துக்கு அழைப்பு விடுக்குறாங்க. எல்லாரும் கூட்டத்துக்கு வாங்க... நம்முடைய கிராமத்தில அழகான சாலைங்களை அமைக்கிறதுக்காக...''
காவலாளி கூறியதை அனைவரும் கேட்டார்கள். இதையறிந்து அவளும் அதிர்ச்சியடைந்தாள்.
மகனுக்கு இந்த விஷயம் முதலிலேயே தெரிந் திருக்குமோ? அதனால்தானே அவன் தோட்டத்தை விற்றுவிடலாமென்று கூறினான்? அவளுடைய மனதிற்குள் இந்தக் கேள்வி கடந்துசென்றது.
மரத்தின் கதையை அவள் யாரிடமும் கூறியதில்லை. ராமேஸ்வருக்கும் அவளுக்கும் தவிர, வேறொரு ஆளுக்குக்கூட இதைப்பற்றித் தெரியாதே!
மகனுக்குத் தெரிந்திருக்கலாம். தந்தை இறந்தபிறகு, தாயின் மனதில் அவனுடைய இடத்தில் தோட்டத்திலிருந்த அந்த மரம்தான் இருந்தது. பல கதைகளும் கூறப் படாமலே தெரிந்துகொள்ள நேருமே! இவ்வாறு பலவற்றைப் பற்றியும் சிந்தித்துக்கொண்டு அவள் அமைதி யற்ற நிலைக்கு ஆளானாள்.
ஏதாவதொரு பொருளை இழப்பதற்குமுன்பே, தானே அதனை ஏன் கையைவிட்டுப் போகச் செய்ய வேண்டும்? தன்னுடைய கவலைகளைக் குறைப்பதற்காக அவன் இவ்வாறு கூறியிருக்க வேண்டும். அதை நினைத்தபோது, அவளுடைய மனதில் மகன்மீது கொண்டிருந்த அன்பு அதிகமானது.
அந்த மரத்திற்கு கணவனின் இடம் இருந்தது. தோட்டத்திலிருந்த அந்த மரத்தைவிட்டுப் பிரிய அவளால் முடியவில்லை. அந்தச் சிந்தனையை என்றென் றைக்குமாக மனதிலிருந்து அழித்து நீக்குவதற்கும்...
கிராமத்தில் சாலையைப்பற்றி பேசி, மக்கள் பதைபதைப்புடன் இருந்தார்கள். சாலைக்கு இடத்தை விட்டுக்கொடுப்பதாக இருந்தால், எந்த அளவுக்கு இழப்பீட்டுத்தொகை கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொள்வதில்தான் அவர்களுக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. பிறகு... பணத்திற்குப் பிரச்சினையே இருக்காது.
"இழப்பீட்டுத் தொகை கிடைச்சிட்டா தமயந்தியும் பணக்காரியாகிடுவா...''
இப்படிப்பட்ட பரபரப்பான வதந்திகள் ஊரில் பரவிவிட்டிருந்தன. அதனால் அவளுக்கு உறக்க மில்லாமல் போனது.
அன்றைக்கு ஒரு விடுமுறை நாளாக இருந்தது. உச்சிப் பகல்பொழுதில் ஒரு கூட்டம். அதிகாரிகள் கிராமத் திற்கு வந்தார்கள். சிலருக்கு அது தெரிந்திருந்தது. அவர்கள் மாலை அணிவித்தும், பட்டாசு வெடிக்கச் செய்தும் அவர் களை வரவேற்றார்கள்.
"அய்யாக்கள் வெற்றிபெறட்டும்! அய்யாக்களின் வெற்றி கிராமத்து மக்களோட நன்மை...'' கோஷங்களால் கிராமம் அதிர்ந்தது.
பிரகாசமாக மின்னிக்கொண்டிருந்த வாகனங்களிலிருந்து அவர்கள் இறங்கியபோது, கிராமத்து மக்கள் எல்லாரும் அவற்றைச்சுற்றி கூடினார்கள். சிலர் அவற்றைத் தொட்டுப் பார்த்தார்கள். வாகனத்தில் ஏதாவது அடையாளம் இருக்குமோ என்று அவர்கள் பயப்பட்டார் கள். சிலர் அவற்றின் விலையைப் பற்றி விவாதித்து ஆச்சரியப்பட்டார்கள்.
"எல்லாரும் உட்காருங்க...'' காவலாளி கூறினார்.
ஆட்கள் அமர்ந்தார்கள்.
"நீங்க எல்லாரும் பணக்காரங்களாகப் போறீங்க. உங்க ஒவ்வொருத்தருக்கும் இனி கார் இருக்கும்.'' வெண்ணிற குர்தா அணிந்திருந்தலி கறுப்புக் கண்ணாடி அணிந்த ஒரு மனிதர் கூறினார்.
"அழகான சாலைகளை நாங்க உண்டாக்குவோம். அங்க உங்களோட கார்களும் ஓடும்...'' ஃப்ரெஞ்ச் கட் தாடியைக் கொண்டிருந்த இன்னொரு மனிதர் ஆங்கிலச் சுவையுடன் சூசகமாகக் கூறினார்.
"நீங்க எங்களுக்கு நிலத்தைத் தாங்க. உங்களோட அதிர்ஷ்டம் எந்த அளவுக்கு தலைகீழா மாறும்ங்றதை நாங்க காட்டறோம்.'' விலை மதிப்புள்ள ஜீன்ஸும் டிலிசர்ட்டும் அணிந்திருந்த ஆள் தன்னுடைய இனிய குரலில் கூறினார்.
மக்கள் கூட்டத்திலிருந்து ஆதரவு கோஷங்கள் எழுந்தன. அதைக்கேட்டு மற்றவர்கள் உரத்த குரலில் ஆரவாரம் செய்தார்கள்.
"சிந்தாபாத்' கூறுவதற்காக அவர்கள் சிலரை உடன் அழைத்து வந்திருந்தார்கள். அவர்களின் பார்வை மக்களுக்கு மத்தியில் பல இடங்களிலும் பரவியிருந்தது.
இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்துவிட்டு, எதிர்வினை ஆற்றாமல் தமயந்தியால் இருக்கமுடியவில்லை. அவள் கோபத்து டன் சத்தமாகக் கூற ஆரம்பித்தாள்:
"எனக்கு வாழ்க்கையில இனி எதுவுமே வேணாம். சாலையும் பண இழப்பீட்டுத் தொகையும் வேணாம். எஞ்சியிருப்பதை வச்சு என்னால வாழ்ந்துடமுடியும். என்னோட ஒரு துண்டு பூமியைக்கூட நான் யாருக்கும் விட்டுத்தர மாட்டேன். பூமியைத் தந்தா மரங்கள் எல்லாத்தையும் வெட்டிடுவாங்க. தொழிலுங்க இங்கயும் தாண்டவ நடனமாடும்.
என்னோட தோட்டத்தில இருக்குற ஒரு மரத்தைக் கூட வெட்டுறதுக்கு நான் யாரையும் அனுமதிக்கமாட் டேன். அது என்னோட கணவரோட இறுதி அடை யா ளம்.''
நிறைந்த கூட்டத்தில் அவளுடைய உரத்த குரலில் எழுந்த பேச்சைக்கேட்டு, ஆட்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்து நின்றுவிட்டார்கள்.
"கணவன் மரணமடைஞ்சதால பைத்தியம் பிடிச்சிட்ட ஒரு பெண்! கிராமத்தோட வளர்ச்சியை இவள் விரும்பல.''
அதிகாரிகளுடன் சேர்ந்து வந்திருந்த ஒரு ஆள் இதைக் கூறியதும், பத்து... இருபது கற்கள் தமயந்தியின் சரீரத்தில் வந்து விழுந்ததும் ஒரே நேரத்தில் நடந்தன. கூட்டம் அலங்கோலமானது.
கிராமத்து ஆட்கள் தமயந்தியை நகரத்திலிருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்கள். எனினும், கூட்டம் தொடர்ந்து நடந்தது. நடக்கவேண்டியதுதான் நடந்தது. சாலை அமைப்பதென ஒருமித்த குரலில் தீர்மானிக்கப்பட்டது.
எஃப்.ஐ.ஆர். போடவில்லை. அனைத்தும் முன்பே முடிவுசெய்யப்பட்ட திரைக்கதையைப்போல, அது ஒரு இயல்பான விபத்து மட்டுமே என மாறியது.
மறுநாள் பத்திரிகைகளில் செய்தி இவ்வாறு வந்தது:
"வளர்ச்சிக்கு எதிராக செயல்பட்ட ஒரு பெண் கிராமத்துக் கூட்டத்தில் வன்முறையில் இறங்கி பிரச்சினையை உண்டாக்க முயற்சித்தாள். மக்கள் அவளை அமைதிப்படுத்த கடுமையாக முயற்சித்தார்கள். இதற் கிடையில் அவளுக்குக் காயம் உண்டானது. மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டாள். உடல்நலம் தேறி வருகிறது.'
இந்த விஷயம் மகனுக்குத் தெரியவந்தபோது, கால்களுக்குக் கீழே மண் நகர்வதைப்போல உணர்ந்தான்.
முகத்தில் ரத்தம் வற்றியது. பிரச்சினை மோசமாகி விடாமல் இருப்பதில் அதிகாரிகள் மிகவும் கவனமாக இருந்தார்கள்.
மகன் வேகமாக மருத்துவமனைக்குச் சென்றான்.
சூழல் மோசமாக இருந்தது. நிலைமை மேலும் மோசமாகாமல் இருப்பதற்காக அங்கு போலீஸ்காரர்கள் காவல்காத்துக் கொண்டிருந்தார்கள். தமயந்தியைப் பார்ப்பதற்கு யாரையும் அனுமதிக்கவில்லை. மிகவும் சிரமப்பட்டுத்தான் மகனால் தாயைப் பார்க்கமுடிந்தது.
"மகனே... எல்லாம் முடிஞ்சது. அக்கிரமக்காரங்க எல்லாத்தையும் தட்டிப்பறிச்சு எடுத்துக்கிட்டாங்க. இப்போ அந்த மரத்தைக்கூட அவங்க வெட்டியிருப் பாங்க.'' தாய் இறுதிமூச்சை விட்டாள்.
அதிர்ஷ்டமற்ற மகன் நீண்டநேரம் தாயின் பிணத் தைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதான். அவன் அழுது கொண்டிருந்தபோது, போலீஸ்காரர்கள் அறிக்கை தயார் செய்வதில் தீவிரமாக இருந்தார்கள்.
அனைத்தையும் பார்த்துக்கொண்டும் கேட்டுக் கொண்டும் நின்றிருந்த ஒரு மனிதன் பிணத்தைக் கொண்டு செல்வதற்கு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கொடுத்தான்.
ஓட்டுநர், தாயின் பிணம், அவனும் மட்டும்... இருபது கிலோமீட்டர் தூரம்... பாதை முழுக்க அவன் அழுது கொண்டேயிருந்தான். ஓட்டுநர் ஓட்டிக்கொண்டே யிருந்தான்.
சில இடங்களில் ஓட்டுநர் ஆம்புலன்ஸை நிறுத்தி விட்டு, புகையிலையைக் கசக்கி வாயிலிட்டான். ஒரு வழக்கத்தைப்போல... அழுதுகொண்டிருந்த அவனைப் பார்த்து அந்த ஆள் கூறினான்:
"நீ அழாதே... சில நாள் கடந்துபோயிட்டா, எல்லாம் சரியாயிடும். உலகமே இப்படித்தான் நண்பா."
தாய் போய்விட்டாள் என்று அவனுக்குத் தெரியும். அவனுடைய பேச்சை ஒரு ஆறுதல் என்பதைப்போல அவன் ஏற்றுக்கொண்டான். அதற்குப்பிறகு இருந்த பயணத்தில் அவனுடைய தேம்பல் மட்டுமே இருந்தது.
தாயின் பிணத்துடன் கிராமத்தை அடைந்தபோது, மக்கள் கூட்டமாகக் கூடினார்கள். ஓடிவந்து ஒரு ஆள் கூறினான்: "உன் அம்மாவோட பேர்ல இருக்கற பூமியோட விலைக்கான காசோலை தயாரா இருக்கு... போய் வாங்கிக்க. அம்மாவோட மரணத்திற்கான நஷ்டப் பரிகாரத்தை நாம ஒண்ணுசேர்ந்து பின்னால வாங்குவோம்.''
"என்ன காசோலை? என்ன நஷ்டப் பரிகாரம்?''
இவ்வளவையும் கூறிவிட்டு தாயின் பிணத்தை வாசலில் இறக்கி வைத்துவிட்டு, அம்பைப்போல அருகிலிருந்த தோட்டத்தை நோக்கி அவன் ஓடினான். நான்கு பக்கங்களிலுமிருந்த மரங்களை ஒவ்வொன்றாக ஜே.சி.பி. பெயர்த்து எடுத்துக்கொண்டிருந்தது.
ஆனால், அந்த மரம் மட்டும் அப்போது அதனுடைய இடத்தில் பத்திரமாக இருந்தது. எதுவுமே முடிவிற்கு வரவில்லை என்பதைப்போல... அவன் அதற்குக்கீழே அமர்ந்து உரத்த குரலில் அழுதான்.
"இங்கே பாருங்க... இந்த மரத்தையாவது வெட்டாம இருங்க. இது என் அம்மா, அப்பாவோட இறுதி அடையாளம்.'' அவனுடைய குரல் தூரங்களுக்கும் பரவியது. ஆனால், அதைக் கேட்பதற்குத்தான் யாருமே இல்லை.
பார்வையற்றவர்கள் காது கேட்காதவர்கள், பேசும் ஆற்றல் இல்லாதவர்கள்- இப்படித்தான் அங்கு கூடியிருந்தவர்களின் நிலைமை இருந்தது. ஒரு ஆளின் தேம்பியழும் சத்தம் மட்டும் அதிகமானது. யாருடைய இதயமும் கனியவில்லை. குரூரத் தன்மை... அன்பின் இறுதித் துளியைக்கூட உறிஞ்சியெடுத்ததைப்போல...
"மக்கள் இனியும் எந்த அளவுக்கு வீழ்ச்சியை சந்திப்பார்கள்?' இந்த உலகத்திலிருந்து தூரத்திலுள்ள வேறு ஏதோ உலகத்திலிருக்கும் ஒரு தாயின் இதயத்திலிருந்து இந்தக் கேள்வி கூர்மையான அம்பைப்போல புறப் பட்டு, காலத்தின்மீது ஆழமாக காயத்தை ஏற்படுத்தி யது. ஆனால், வேதனையின் இடத்தில் ஒரு அட்டகாசம் நான்கு பக்கங்களிலும் உரத்து ஒலித்துக்கொண்டிருந் தது. அந்த அரக்கத்தனமான அட்டகாசம் முழுத் தோட்டத் தையும் நாசமாக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தது.
அழுது அழுது அவன் திரும்பவும் வீட்டின் வாசற் படியை அடைந்தபோது, ஆட்களின் கூட்டம் அதிகமாகி விட்டிருந்தது.
தாயின் பிணம் இப்போதும் அங்கு கிடந்தது. ஒட்டப் பட்ட ஒரு கவரும் அருகிலிருந்தது. யாரோ இடையே கொண்டுவந்து வைத்திருக்கிறார்கள். நிறைந்த கண்களுடன், வாடிய முகத்துடன் அந்த கவரை அவன் எடுத்துத் திறந்தான்.
"நஷ்டப் பரிகாரமாக எத்தனை லட்சம் கிடைத்தது மகனே...'
அதைத் தெரிந்துகொள்வதற்கான ஆர்வம் மக்கள் மத்தியிலிருந்து உயர்ந்தது.