இரக்க மனம் கொண்டவர் (ராஜஸ்தானி மொழிக் கதை) ராமஸ்வரூப் கிஸான் தமிழில் : சுரா

/idhalgal/eniya-utayam/compassionate-rajasthani-language-story-ramaswaroop-kisan-tamil-sura

குளிர்காலம்... இரவு எட்டு மணியாவதற்கு இன்னும் சிறிது நேரமாகும். ரயில் சரியாக எட்டரைக்கு வந்துசேரும். வண்டி வந்துசேர்வதற்கு இன்னும் நேரமிருக்கிறது. நான் சிறிது நேரம் ரயில் நிலையத்திற்கு உள்ளேயே நடந்துவிட்டு வெளியே வந்து, ஸ்டேஷனுக்கு முன்னாலிருந்த சிற்றுண்டிக் கடைக்குமுன்பு போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்தேன். தேநீருக்கு கூறுவதற்கு மத்தியில் மிகவும் அருகில் வந்தமர்ந்து ஒரு மனிதர் என் காதில் ரகசியமாகக் கூறினார்:

"பாயி ஸாப்... என் கையில கொஞ்சம் துணிங்க இருக்கு வேணுமா?''

நான் சற்று தயங்கினேன். முதல் திகைப்பு மாறியவுடன் அவரை சற்று கூர்ந்து பார்த்தேன். கறுத்து... உயரமான நடுத்தர வயது மனிதர். நாற்பது நாற்பத்தைந்து வயது வரும்.

அழுக்கடைந்த ஆடைகள். ஒரு அங்குல நீளத்திற்கு வளர்ந்திருக்கும் தாடி ரோமங்கள். வெடித்துக் கீறிய கால்களில் ஹவாய் செருப்பு. பேசும்போது மதுவின் புளித்த நாற்றம்... நான் சற்று திகைத்தேன். துணிகளா? அதுவும் இங்கு... இந்த டாபாவில்... இந்த நேரத்தில்? அவரிடம் மூட்டையோ, பொட்டலமோ, பையோ- இப்படி எதுவுமே இல்லை. பிறகு...துணி எங்கிருக்கிறது?

அதுவும் காதில் ஒரு ரகசியத்தைக் கூறுவதைப்போல... இது என்ன ஒரு நிலை? ஏதோ பிரச்சினை இருப்பதைப்போல தெரிகிறதே! இந்த ஆள் யார்? ஏதாவது திருடனாகவோ தட்டிப் பறிப்பவராகவோ இருப்பாரோ?

அவர் மீண்டும் கூறினார்: "பாயி ஸாப்... என்ன சிந்திக்கிறீங்க? நாலு மீட்டர் "ஜகஜித் காட்டன் டெக்ஸ்டைல்' காட்டன் துணி. பைஜாமாவும் குர்தாவும் தைக்கறதுக்காக வாங்கினேன். இப்போ நான் ஜெய்ப்பூருக்குப் போறேன். ஆனா டிக்கெட்டுக்கு காசில்ல.. இதை பாதி விலைக்கு தர்றேன். உண்மையான விலை இருநூத்தம்பது. நூத்தி இருபத்தஞ்சு தந்தா போதும்.''

அவர் அணிந்திருந்த குர்தாவையும் பைஜாமா வையும் கவனித்தேன். கிழிந்திருக்கின்றன. அந்த அளவுக்குப் பழையனவாக இருந்தன. நான் பதைபதைப்புடன் சிந்தித்தேன்.

ஜெய்ப்பூருக்குச் செல்வதா? வண்டிக் கட்டண மில்லாமல்? பைஜாமாவையும் குர்தாவையும் தைப்பதற்காக வாங்கிய துணியைப் பாதி விலைக்கு விற்று, வண்டிக் கட்டணத்திற்கான பணத்தைத் தயார் செய்யப் பார்க்கும் ஒரு ஆள்! வண்டிக் கட்டணத்திற்கான பணம் கையில் இல்லையென்றால், பிறகு எதற்காக துணியை வாங்கவேண்டும்? இருநூற்றைம்பது ரூபாய் கையிலிருந்தால், ஒருமுறை ஜெய்ப்பூருக்குப் போய்விட்டு, திரும்பி வந்துவிடலாமே! இந்த ஆளின் பிரச்சினை என்னவாக இருக்கும்? ஒருவேளை இந்தத் துணி ஏதாவது கடையிலிருந்து திருடப்பட்டதாக இருக்குமோ?

அந்த மனிதரைப் பற்றி எனக்குள் பல வகைப்பட்ட சந்தேகங்கள் உண்டாயின.

அவர் ஒரு பீடியைப் பற்றவைத்துவிட்டு,

அவர் ஒரு பீடியைப் பற்றவைத்துவிட்டு, என்னைப் பார்த்தார்.

நான் கேட்டேன்: "உங்க கையில வண்டிக்கான கட்டணம்கூட இல்லாமலிருந்தும், இந்தத் துணியை எதுக்காக வாங்கினீங்க?''

"யார் வாங்கியது? கையில நாலணா காசுகூட இல்ல. இருந்த வெறும் முப்பது ரூபாய்ல பகல்லயே கால் புட்டி வாங்கிக் குடிச்சிட்டேன்.''

"அப்படின்னா... இந்தத் துணி திருடப்பட்டதா?''

"உங்களுக்கு என்னைப் பார்க்கறப்போ திருடன்னு தோணுதா? நான் திருடனில்ல பாயி ஸாப். நல்ல குடும்பத்தில பிறந்தவன். தீப்லானா கிராமத்தில பேனிவாள் சாதியைச் சேர்ந்தவன் நான். கொஞ்சம் குடிப்பேன்றது உண்மை. ஆனா திருடனில்ல.''

ஒரே நொடியில் என் சந்தேகத்தில் பாதி குறைந்து விட்டது. உடனடியாக நான் கூறினேன்: "பர்லியைச் சேர்ந்த பேனிவாள்தான் நானும்...''

தீப்லானாவும் பர்லியும் அருகருகே இருக்கும் கிராமங்கள். இரு கிராமங்களிலும் பேனிவாள் சாதியைச் சேர்ந்தவர்கள்தான் பெரும்பாலும் இருக்கிறார்கள். அதனாலேயே அவரின் மனதை அறியக்கூடிய என் ஆர்வம் அதிகமானது.

நான் கேட்டேன்: "எப்படி இப்படி ஆனீங்க நண்பரே?''

"ஆமா... அப்படியெல்லாம் நடந்திருச்சு. எல்லாமே தலைகீழாயிடுச்சு. அனைத்தையும் விளக்கமா கேட்கணும்னா, வாங்க... கடைக்குப் போவோம்.''

"நான் குடிக்கிறதில்ல...''

"பேனிவாள் மது குடிக்கிறதில்லியா? அது எப்படி சரியாகும்?''

"இல்ல... நான் தொடுறதில்ல..." நான் மெதுவாகக் கழன்றுகொண்டேன்.

"அப்படின்னா... எனக்கு ஒரு கால் புட்டிக்கான காசைக் கொடுங்க. இல்லைன்னா... ஒரு நூத்து இருபத்தஞ்சு ரூபா தாங்க. இந்தாங்க... அதுக்கு பதிலா இந்த துணியை வச்சுக்கோங்க...''

அவர் பைஜாமாவின் இடுப்புப் பகுதியில் திணித்து வைத்திருந்த துணியை எடுத்து என் மடியில் வைத்தார். நான் அதன்மீது விரல்களால் ஒருமுறை வருடிப் பார்த்தேன்.

"நீங்க இதை எங்கிருந்து வாங்கினீங்க?'' நான் கேட்டேன்.

"ஷ்யாம் பனியாகிட்ட கடனுக்கு வாங்கினேன்.

ஆண்களுக்கான ஆடைங்களை அவர் கடனா தருவாரு. என் விஷயமா இருக்கறதால, மிகவும் நொந்துக்கிட்டுதான் தந்தாரு. அந்த பொல்லாத மனுஷர் என்னை படாதபாடு படுத்தினாரு. ஒருவகையில பார்த்தா... அந்த பாவம் பனியா என்ன தவறைச் செஞ்சிட்டாரு? என் மனைவியும் பிள்ளைகளும் அவர்கிட்ட கறாரா சொல்லிவச்சிருக்காங்க- இந்த ஆளுக்கு எந்தவொரு பொருளையும் கொடுக்கக் கூடாதுன்னு. என்ன சொல்றது? என் விஷயம் கஷ்டமானதுதான். எதிரிகளுக்குக்கூட இப்படிப்பட்ட நிலைமை வரக்கூடாது. வீட்ல இருக்கற எல்லாருமே நாய்ங்களைப்போல எனக்குப் பின்னாடி ஒண்ணுசேர்ந்து குரைச்சிக்கிட்டு இருப்பாங்க. பிள்ளைங்களோட தாய் மிகவும் கண்டிப்பானவ. அவ ஆண் பிள்ளைங்களை தன்பக்கம் இழுத்துக்கிட்டா. எல்லாரையும் என் எதிரிகளாக்கிட்டா...''

"அதற்கு ஏதாவது காரணம் இருக்கும்ல..?''

"இந்த குடிப் பழக்கம்தான் காரணம்.''

"அதை நீங்க வேண்டாம்னு விலக்கிவைக்கக் கூடாதா?'' நான் சற்று கடுமையான குரலில் கேட்டேன்.

"பாயி ஸாப்... உயிரையேகூட விடலாம். ஆனா குடிப் பழக்கத்தை நிறுத்தமுடியாது. வெறும் ரெண்டே ரெண்டு பெக்...'' இரண்டு கைவிரல்களை உயர்த்தியவாறு அந்த மனிதர் கூறினார்.

ss3

"பகல் வேளையிலும் குடிப்பீங்களா?''

"இல்ல... பகல் பொழுதுல அப்படி குடிக்கறதில்ல. அது எப்படி முடியும்? மனைவியோட வீட்டைச் சேர்ந்தவங்க கொடுத்து வாழக்கூடிய நிலையில இல்லைன்றதை மட்டும் மனசுல வச்சிக்கோங்க. சாயங்கால நேரத்துல தேவைப்படுற ரெண்டு பெக்குக்குதான் அடியே... அசிங்கம் பிடிச்சவ, ரொம்பவும் தரம் தாழ்ந்தவள்னு நான்தான் சொன்னேன்ல..?''

"நீங்க அடிப்பீங்களா?''

"இல்ல பாயி ஸாப்... உங்கமேல சத்தியம். யாரையும் ஒருமுறைகூட நான் அடிச்சதில்ல. அடி வாங்க மட்டுமே செஞ்சிருக்கேன். கழுதையைப்போல எல்லா வேலைங்களையும் நான் செய்வேன். ஐம்பது சென்ட் நிலம் இருக்கு. எதுக்குமே லாயக்கில்லாத தரிசு நிலம்.

நனைக்கலாம்னா... தண்ணிக்கு எங்க போறது? எனக்கு ரெண்டு ஆண் பிள்ளைங்க இருக்காங்க. ரெண்டு பேரும் நல்ல குடும்பங்கள்ல கல்யாணம் பண்ணியிருக் காங்க. பெயர் பெற்ற குடும்பம் என்னோடது.

ஆனா என்ன பிரயோஜனம்? உண்மையாவே சொல்றதா இருந்தா... சாப்பாடுகூட கிடைக்குறதில்ல. வேற வழியில்லாம இன்னைக்கு வீட்டைவிட்டு வெளியேறி வந்தேன். ஜெய்ப்பூருக்குப் போய் ஏதாவது வேலை தேடணும்!''

"ஜெய்ப்பூர்ல நீங்க என்ன செய்யப் போறீங்க?''

"டயர் வேலை... என் கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம் குடும்பத்திலிருக்குற இளைஞருங்க அங்க டயர் வியாபாரத்தையும் காயலான் கடைங்களையும் நடத்துறாங்க. குறைஞ்ச விலைக்கு பழைய டயரை வாங்கி, அதை வெட்டி துண்டுகளாக்கி, செங்கல் சூளைகள்ல விறகா பயன்படுத்துவாங்க. கூர்மையான கைக் கோடரியால டயரை சிறுசிறு துண்டுங்களா வெட்டி எடுப்பாங்க. ரெண்டு பெக் அடிக்கறதுக்கும் ரெண்டு ரொட்டிங்களை சாப்பிடுறதுக்கும் தேவைப்படுற காசு... எனக்கு அந்த அளவுக்கு கிடைச்சா போதும்.''

நான் அந்த ஆளையே ஒருமுறை பார்த்தேன். அவர் கூறியவை அனைத்தும் உண்மைதான் என தோன்றியது. நான் கேட்டேன்:

"குடிப் பழக்கத்தை நிறுத்துறதுக்கு முயற்சி செய்திருக்கீங்களா?''

அவர் கரகரப்பான குரலில் கூறினார்:

"ஆமா. நான் முயற்சி செய்திருக்கேன். ஏழு வருஷங்களா நான் அதை கண்ணாலேயே பார்க்கல. என்ன செய்றது? ஒரு தடவை மகளோட கணவனுக்கு தொற்று நோய் பாதிச்சது. அவனோட வயலுக்கு விதை விதைக்கறதுக்காக நான் போனேன். முப்பது சென்ட் நிலத்தை பதினஞ்சு நாட்கள்ல ஒட்டகத்தின்மேல உட்கார்ந்து நான் விதைச்சேன். நான் என் வேலையை மிகுந்த கவனத்தோட செய்வேன். கடவுள் மேல சத்தியம்...''

அவர் மீண்டும் ஒரு பீடியைப் பற்ற வைத்தார்.

"விதைப்பு முடிஞ்சு வீட்டுக்குத் திரும்பி வந்தப்போ, என் மருமகன் ஒரு புட்டி நாட்டு சாராயத்தை எடுத்து வச்சான். நான் மறுத்தேன். அவன் ஒத்துக்கல. என்கிட்ட சொன்னான்: "கடுமையான களைப்பும் சோர்வும் இருக்கு. வீட்டுக்குப் போய் மூணு நாலு நாள் குடிச்சுப் பாருங்க. களைப்பு சரியாயிடும்'னு.

அன்னையில இருந்து இன்னிக்குவரை குடிக்கிற பழக்கம் என்னைவிட்டுப் போகாம பின்தொடர்ந்து கொண்டேயிருக்கு. அதுலயிருந்து இனிமே விடுதலை கிடைக்கும்னு தோணல. அது இனிமேல் சுடுகாட்டுலதான் சரியாகும். அதோ... வண்டி வரப்போகுது. நான் சொன்னது மாதிரி காசைத் தாங்க. இப்படி... இந்த விஷயத்தைப் பேசிக்கிட்டே இருந்தா, எங்கும் போய்ச் சேரமுடியாது.''

அவர் என் தொடையைக் கையால் தட்டிவிட்டு, எழுந்துநின்று கொட்டாவி விட்டார்.

நான் துணியைத் திருப்பித் தந்தேன். ஒரு நூறு ரூபாய் நோட்டை அவருடைய கையில் வைத்துவிட்டுக் கூறினேன்: "இந்த நூறு ரூபாயை வாங்கிக்கோங்க. துணியை நான் வாங்கல. இந்த காசை வச்சு, பைஜாமா வையும் குர்தாவையும் தச்சிக்கோங்க...''

"நண்பரே... நான் என்ன பிச்சைக்காரனா? எனக்கு பிச்சை எதுவும் வேணாம். இன்னும் இருபத்தஞ்சு ரூபாய் கொடுத்து, இந்தாங்க... இந்த துணியைக் கையில வச்சிக்கோங்க..''

"இருநூத்து ஐம்பது ரூபாய்க்கான துணிக்கு நூத்து இருபத்தஞ்சு மட்டும் தர்றதுக்கு... நான் அந்த அளவுக்கு கேடு கெட்டவனில்ல...''

"அப்படின்னா... இருநூத்தம்பது தாங்க...''

"பாருங்க... நானும் ரயில்ல போகணும்! தேவைக்கான காசு மட்டுமே என்கிட்ட இருக்கு. இருந்தா இருநூத்தம்பதையும் தந்திடுவேன். ஆனா எந்த காரணத்தைக்கொண்டும் துணி வேணாம். மதிப்பிற்குரிய மனுஷன் நான்! நீங்க என்ன வார்த்தை இங்க பேசுறீங்க? பிச்சையாக நினைக்க வேணாம். எப்போதாவது திருப்பித் தந்தாபோதும். தீப்லானா கிராமம் எங்கோ... அமெரிக்காவிலயோ வேற எங்கயோ இல்லையே?''

நான் கூறியதைக்கேட்டு அந்த ஆள் துணியை பைஜாமாவின் இடுப்புப் பகுதியில் செருகிவைத்தார்.

இதற்கிடையில் தோளில் ஹோல்டால் என கூறப்படும் பயணப் பையுடன் இரண்டு பேர் அவருக்கருகில் வந்து தோளில் தட்டினார்கள்: "டேய் சுரேஷ்... நீ இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கே? எவ்வளவு நேரமா உன்னைத் தேடித் திரியிறோம்! வண்டி வர்ற நேரமாச்சுடா!''

நான் கேட்டேன்: "யார் இவங்க?''

"இவங்கதான் ஜெய்ப்பூர்ல டயர் வியாபாரம் செய்யுற என் கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம் நண்பருங்க...''

"இவரை அறிமுகப்படுத்தி வைக்கறேன். இதுதான் எங்க கிராமத்தைச் சேர்ந்த சவுதரி. இப்போ ஜெய்ப்பூர்ல டயர் வியாபாரத்தில எங்களுக்கு உதவுறதுக்காக வர்றாரு.''

ஹோல்டால் வைத்திருந்தவர்களில் ஒரு ஆள் சிரித்துக்கொண்டே கூறினார்.

"ம்... உடனடியா வா சுரேஷ். ரயில் வர்றதுக்கு இன்னும் கொஞ்ச நேரம்தான் இருக்கு.'' இன்னொரு ஆள் கூறினார்.

சுரேஷ் அவர்களிடம் கேட்டார்: "ஜெய்ப்பூருக்கு பயணச்சீட்டு கட்டணம் எவ்வளவு?''

"அறுபது ரூபா...''

"இந்தா... பிடிச்சிக்கோ..." அவர் நூறு ரூபாய் நோட்டை கையில் கொடுத்துவிட்டுக் கூறினார்: "என் டிக்கெட்டை வாங்கிடு... நான் ஒரு பெக் குடிச்சிட்டு இதோ வந்திடுறேன்...''

அவர்களிடமிருந்து நாற்பது ரூபாயை வாங்கிக்கொண்டு அவர் மதுக்கடையை நோக்கி ஓடினார். நான் அங்கேயே அமர்ந்திருந்தேன்.

எனக்குள் ஒரு கேள்வி விடாமல் பாடாய்படுத்திக் கொண்டேயிருந்தது. நான் நினைத்தேன்... திரும்பி வரும்போது கேட்கலாம்...

அவர் சில நிமிடங்களிலேயே மது அருந்திவிட்டுத் திரும்பி வந்தார். நான் அவரை அழைத்தேன். அவர் அங்கு நின்றார். நான் கூறினேன்: "போறதுக்கு முன்னால இன்னும் ஒரு விஷயத்தை சொல்லிட்டுப் போங்க.''

அவர் என்னையே புன்சிரிப்புடன் பார்த்தார். "என்ன மீதமிருக்கு? என்னை இனி வெறுமனே விடுங்க...''

"ஆரம்பத்தில நீங்கள் குடிக்க ஆரம்பிச்சது எப்படி?''

"பாயி ஸாப்... நீங்க ஏன் இப்படி கிளறிக்கிளறி கேக்குறீங்க? நீங்களும் இந்த கெட்ட பழக்கத்திற்கு அடிமையா ஆகியிருப்பீங்களோன்னு எனக்குத் தோணுது.''

"இல்ல... நான் தொடுறதே இல்ல...''

"அப்படின்னா கேட்டுக்கோங்க. சுருக்கமா சொல்றேன்.'' அவர் பீடியைப் பற்றவைத்தவாறு கூறினார்: "இதை என் அப்பாதான் எனக்கு கத்துத் தந்தார். சின்னப் பையனா இருந்தப்போ, நான் மதுக் கடையில அப்பாவுக்கு வாங்கிக் கொடுப்பேன். வழியில நடந்து வர்றப்போ மூடியைத் திறந்து ஒண்ணுரெண்டு மடக்குங்கள உள்ளே கொண்டு போவேன். பிறகு... பிறகு... அதிக விருப்பம் உண்டாயிருச்சு. அப்படிச் செஞ்சு செஞ்சு... குடிக்கறதுங்கறது ஒரு பழக்கமாகவே ஆயிடுச்சு. அவ்வளவுதான் விஷயம். சரி... இனி நான் போகலாமா?''

வண்டி மேலுமொருமுறை சீட்டியடித்தது.

அவர் ஜெய்ப்பூர் விரைவு வண்டிக்குள் ஏறினார்.

நான் என்னுடைய ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த மது புட்டியை எடுத்து ரயில் தண்டவாளத்தை நோக்கி வீசி எறிந்தேன். தொடர்ந்து ஹனுமான் கட் செல்லும் பேசஞ்சர் வருவதை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். அடுத்த நிமிடம் என் மனதிற்குள் ஒரு கேள்வி எழுந்து வந்தது: "அவர் உனக்கு எல்லாவற்றையும் தந்துவிட்டுப் போய்விட்டார். ஆனால், நீ அவருக்கு என்ன கொடுத்தாய்?'

மிகப் பெரிய சந்தேகத்தை மனதிற்குள் வைத்தவாறு நான் எனக்கான ரயிலில் ஏறினேன்.

uday010522
இதையும் படியுங்கள்
Subscribe