முன்னாள் அமைச்சர் கவிஞர் வேழவேந்தன் சிறப்பு நேர்காணல்
கவிஞர் கா. வேழவேந்தன் திராவிட இயக்கத்தின் மூத்த கவிஞர். ""கவிதைச் சோலை''யில் ஒளிவீசிக் கொண்டிருப்பவர். மரபு மாறாத செழுமையோடு இன்றும் கவிதைகளை எழுதிக் கொண்டிருக்கும் இவர் கவிதைகளில் தமிழ், தமிழர், தமிழ்நாடு என்கிற சிந்தனைகளும் சமுதாய மாற்றச் சிந்தனைகளும் ஓங்கி ஒலிலிக்கும். 5-5-1936-ல் கும்மிடிப்பூண்டியின் காரணி என்ற ஊரில் பிறந்தவர். அதே தொகுதியில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகச் செயல்பட்டவர். கலைஞரின் அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகத் தொண்டாற்றியவர். புரட்சிக்கவிஞரால் பெரிதும் பாராட்டப்பட்டவர். திராவிட இயக்கத்தின் மேல் தீராத பற்றுக் கொண்ட கவிஞர் தடம் மாறாமல் தன்மானத்தோடு நடைபோடுகிறவர். எண்பத்திரண்டு வயதைக் கடந்தும் இன்னும் மரபு மாறாமல் புதுப்புதுச் சிந்தனைகளோடு மரபுக் கவிதைகளை வாரித்தரும் இந்த வண்ணத்தோகைக் கவிஞரோடு ஒரு நேர்காணல் நம் "இனிய உதயம்' வாசகர்களுக்காக...
திராவிட இயக்கத்தின் மூத்த கவிஞர் நீங்கள். புரட்சிக்கவிஞரை அடியொற்றி ஒரு பேரெழுச்சி எழுந்த காலகட்டத்தில் கவிதை எழுதத் தொடங்கியவர். கவிதையின் மேல் எப்போது மோகம் பிறந்தது?
இயற்கை எழில் நிறைந்த நான் பிறந்த சிற்றூர் காரணி இல்லத்தின் வாயிலில் ஓடிக்கொண்டிருந்த ஆரணியாலும், மறுபுறத்தில் அல்லிலியும் கொட்டியும் பூத்த மூன்று குளங்களும் என்னுள் கவிதை உணர்வை ஊட்டின. என் தந்தை வெளியூர் சென்று திரும்பும்போது, மறவாமல் வாங்கி வந்த திவாகரம், சூடாமணி நிகண்டு, நல்வழி, மூதுரை, தண்டனையார் சதகம், அறப்பளீசுர சதகம் போன்ற நூல்கள் திண்ணைப் பள்ளியில் பயின்ற எனக்கு கவிதை நயம் சொல்லிலிக் கொடுத்தன.
சென்னைக்கு நான் வந்து சேர்ந்தபோது, இந்து தியாகிகள் உயர்நிலைப் பள்ளியின் தமிழாசிரியர் புலவர் தணிகை உலகநாதர் எனக்கு தனிக்கவனம் செலுத்தி யாப்பிலக்கணம் கற்பித்ததும் என் கவிதைப் பாட்டைக்கு உறுதுணை புரிந்தது.
மாணவப் பருவதிலேயே அறிஞர் அண்ணாவின் பேனாவால் மிகவும் ஈர்க்கப்பட்ட நான் திராவிட இயக்கமே நம் பாசறை என்ற தீர்க்க முடிவுக்கு வந்தேன். பாவேந்தரின் தித்திக்கும் தீந்தமிழ்க் கவிதைகளில் மூழ்கிப் போனேன்.
தம் "திராவிட நாடு' இதழின் முகப்புக் கவிதையாகவே வெளியிட்டு தாயுள்ளம் கொண்ட அறிஞர் அண்ணா என்னை ஊக்குவித்தார். கலைஞர் அவர்களின் முத்தாரமும் கவிஞர் கண்ணதாசனின் தென்றலும் என் கவிதைகளை வெளியிட்டு உற்சாகப்படுத்தின. இந்தி எதிர்ப்புப் போராட்ட நேரத்தில் நான் எழுதிய வீரியக் கவிதைகள் தமிழறிஞர்களால் பாராட்டப் பட்டன.
இப்படித்தான் தமிழ்க் கவிதையின்பால் என் காதல் பிறந்து வளர்ந்தது.
இந்தி தெரியாவிட்டால் கும்மிடிப்பூண்டியைக் கூடத் தாண்ட முடியாது என்று ஏளனம் பேசியவர்கள் உண்டு. ஆனால் அதே கும்மிடிப்பூண்டித் தொகுதியில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டீர்கள். கலைஞரின் அமைச்சரவையிலும் செயல்பட்டிருக்கிறீர்கள். அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல முடியுமா?
பத்தாண்டுகள் கும்முடிப்பூண்டித் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
அதற்கு முன்னர், இளம் வழக்கறிஞனாக இருந்தபோது, அந்தமான் தீவுகளில் மரம் வெட்டும் தொழில் செய்த நம் தமிழகத் தோழர்கள் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வேலை

அதற்கு முன்னர், இளம் வழக்கறிஞனாக இருந்தபோது, அந்தமான் தீவுகளில் மரம் வெட்டும் தொழில் செய்த நம் தமிழகத் தோழர்கள் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வேலை நீக்கம் செய்யப்பட்டபோது, அவர்களுக்காக வாதாட அறிஞர் அண்ணா அவர்களே என்னை நேரில் அழைத்து உற்சாகப்படுத்தி அனுப்பி வைத்தார்கள். மீண்டும் அவர்கள் அனைவருக்கும் வேலை பெற்றுத் தந்து வெற்றி கண்டபோது, பிறந்த என் மூத்த மகனுக்கே அவன் தாத்தா கே.எம். கண்ணபிரான், "வெற்றிவேந்தன்' என்றே பெயரிட்டார்.
அண்ணாவின் மறைவுக்குப்பின்னர் முதல்வர் பொறுப்பேற்ற கலைஞர் அமைச்சரவையில் தொழிலாளர் நல அமைச்சனாக ஆனேன். புகழ் வாய்ந்த மே தின விடுமுறைச் சட்டமே என் காலத்தில்தான் கொண்டு வரப்பட்டது. "ஜெனீபா' நகரில் நடந்த உலகத் தொழிலாளர் மாநாட்டிலும் இந்தியப் பிரதிநிதியாகச் சென்று பங்கேற்றேன்.
பச்சையப்பன் கல்லூரி மாணவராகத் தாங்கள் இருந்தபோதே அறிஞர் அண்ணா அவர்கள் திராவிடத் திருநாள் மலருக்காகக் கவிதை கேட்டுத் தன் கைப்பட உங்களுக்கு கடிதம் எழுதினார் இல்லையா? அந்த நிகழ்வைப் பற்றிக் கூறுங்கள்.
டாக்டர் மு.வ. அவர்களிடம் நேரிடையாகப் பயிலவே, இலயோலா கல்லூரியிலிலிருந்து பச்சையப்பன் கல்லூரிக்கு மாறி வந்தேன் அப்பொழுது.
அன்று மாலை வகுப்புகள் முடிந்தபின்னர், கல்லூரி விடுதி அறைக்குள் சென்று கதவைத் திறந்தபோது, அறிஞர் அண்ணா அவர்கள் தன் கைப்பட எழுதியிருந்த ஓர் அஞ்சலட்டை விழுந்திருந்தது. அதில் அண்ணா அவர்கள், "வினா உருவாகும்' திராவிட நாடு திராவிடன் திருநாள் மலருக்கு ஒரு கவிதை அனுப்புங்கள் என்று கேட்டிருந்தார். அண்ணாவின் கையெழுத்து மடலை அவ்வை நடராசன் போன்றோரிடம் காட்டி மகிழ்ந்த நான், அன்று இரவே அமர்ந்து மலருக்கு ஒரு கவிதை எழுதிக் கொண்டு மறுநாளே காஞ்சியில் திராவிட நாடு அலுவலகம் அமைந்த திருக்கச்சி நம்பி தெருவுக்குச் சென்றேன். அண்ணா அலுவலகத்திலேயே இருந்தார். அவரிடம் என் கவிதை உறையைத் தந்து, ""என்னண்ணா, நீங்கள் இந்தச் சாமானிய மாணவனுக்குப்போய் நேரம் செலவிட்டுத் தாங்களே அஞ்சல் எழுதலாமா? அந்த நேரம் ஒரு பெட்டிச் செய்தியை எழுதினால் இதழுக்குச் சுவை கிடைக்குமே!'' என்றேன்.
உடனே அந்தப் பெருந்தகை அறிஞர் அண்ணா சொன்னார்:
""இருய்யா, நீ யார்? சுயமரியாதை இயக்கத்தில் ஒரு கவிஞன். கவிதையை நான் வேண்டிக் கேட்டுப் பெறவேண்டும்; நீ தரவேண்டும். அதுதான் முறை. அதனால்தான் என் கைப்பட எழுதினேன்'' என்றார். அந்த அன்புத் தலைவரின் பாச அரவணைப்புதான் என் விரல்களை இன்னும் ஓட வைக்கிறது.
அறிஞர் மு.வ.வின் மாணவர் நீங்கள். அவருடைய தாக்கத்தில் பலர் எழுதினார்கள். ஆனால் அவருடைய நடை தங்களிடத்தில் காணப்படவில்லை. அப்படியே கவிதைக்குள் மூழ்கிவிட்டீர்கள். அந்தக் காலகட்டம் எப்படி இருந்தது?
குறுகிய வாக்கியத் தொடர்களில் டாக்டர் மு.வ. தீட்டிய "தம்பிக்கு', "அன்னைக்கு', "கரித்துண்டு', "அந்தநாள்' போன்ற படைப்புகள் நெஞ்சைக் கவர்ந்தாலும், அவர் வகுப்பறையுள் நுழைந்து சிலப்பதிகாரம் போன்ற காப்பியப் பாடங்களை நடத்திய அற்புதக் காட்சிகளை மறக்கத்தான் இயலுமா? "நாடுகாண் காதை' யாக இருந்தாலும், "காடுகாண் பாதை'யாக இருந்தாலும் அவர் வகுப்பில், எங்களையெல்லாம் நூலை மூடிவிடச் சொல்லிவிட்டு காதைகளின் முதலடி முதல் ஈற்றடிவரை அவருக்கு உரிய சங்கீதக் குரலிலில் ஏற்ற இறக்கத்துடன் பாடம் நடத்திய அழகே பேரழகுதான். தன் மாணவர்களையும், அவ்வப்போது பாராட்டித் தட்டிக் கொடுக்கவும் தயங்கமாட்டார். அவர் அன்று வகுப்பறையுள் நுழைந்த மு.வ. தன் கையிலே மடித்து எடுத்து வந்த "முத்தாரம் இதழிலிலிருந்து ஒரு கவிதையைப் படித்துப் பேசினார். ""இதோ பாருங்கள். "மழலைச் சிலை என்ற தலைப்பில் மணமாகாத ஒரு மாணவ நண்பர் எழுதியிருக்கிறார்.
அது இதுதான்: "பால் நிலவைக் கிள்ளிவந்து நெற்றியாக்கிப், படுவானின் குழம்பெடுத்துக் கன்னமாக்கி, சேல்விழியைப் பெயர்த்து வந்து கண்களாக்கி...' என்று சுவையோடு படித்துக் காட்டி, ""இதை எழுதியவர் ஒரு மாணவர்; அவர் நம் வகுப்பு மாணவர். அவர்தான் கவிஞர் வேழவேந்தன்'' என்று கூறிப் பாராட்டியபோது, ஒரு கோடி பரிசு பெற்றவன் போல் நான் மகிழ்ச்சியில் மிதந்தேன். அதேபோல், பின்னர் ஒரு நாள் இந்த எளியவனின் இல்லத்திற்கே திடீரென்று வருகை நல்கி நான் வண்ணத் தோகையை தொகுத்து நூலாக்கத் தூண்டியவரும் டாக்டர் மு.வ. அவர்களே.
ஒருமுறை திருக்குறள் மாநாட்டுக்காகக் கொழும்பு சென்றீர்கள். அப்போது கவியரசர் கண்ணதாசன் "ஈழம் நோக்கி இளவேழம்' என்று ஒரு கவிதையையே "தென்றல்' இதழில் எழுதினார்.
அந்த நினைவுகளைச் சற்றே அசைபோட முடியுமா?
ஈழக் கலவரங்கள் வெடிப்பதற்கு முன்னால், ஒருமுறை யாழ்ப்பாணத் தமிழர்கள் தாங்கள் நடத்தும் திருக்குறள் மாநாட்டுக்கு என்னையும் அழைத்திருந்தார்கள். இதுபற்றி "மாலையிட்ட மங்கை' போன்ற படங்களைத் தயாரித்துக் கொண்டிருந்த கவியரசர் கண்ணதாசனிடம் கல்லூரிவிட்டு வந்து மாலை நேரத்தில் பேசிக் கொண்டிருந்தபோது, இலங்கை செல்வது பற்றிச் செய்தியைக் கூறினேன். கேட்ட பின்னர் தம் "தென்றல்' இதழில் என் இலக்கியப் பயணத்தைப் பற்றி, "ஈழம் நோக்கி இளவேழம்' எனும் சிறப்புக் கவிதையே எழுதினார் என்பதுதான் அவர் இந்த இளங்கவிஞன் மீது காட்டிய அரிய பாச உணர்வு.
பின்னர் 1962-ல் ஈ.வெ.கி. சம்பத் தோன்றுவித்த, புதிய கட்சியில் அவர் இணைந்திருந்தபோது, சம்பத் அவர்கள் ஒரு நாள், "ஒரு தீவிரச் செயலாற்றும் மாணவ நண்பர் இயக்கத்திற்குக் கிடைத்தால் நலமாக இருக்கும் என்று கூறி "மாணவ நண்பர்' வேழவேந்தனைப் புதிய இயக்கத்தில் சேர நடவடிக்கை எடுங்கள்' என்றார்கள். ""மாணவர் வேழவேந்தன் என் கவிதை நண்பர்தான்; என்னைப் பிடிக்கும்தான். ஆனால் அவர் அண்ணாவின் மீது உயிரையே வைத்திருப்பவர்: அப்படி அண்ணாவிடம் இருந்து பிரிந்து வரச்சொன்னால் அடிக்கவே வந்துவிடுவார்.'' என்று பதில் கூறினாராம் நம் கவியரசர்.
தங்களுடைய முதல் கவிதைத் தொகுப்பு "வேழவேந்தன் கவிதைகளை' அறிஞர் அண்ணா வெளியிட்டார். "வண்ணத்தோகையை'ப் பேராசிரியர் தலைமையில் கலைஞர் வெளியிடப் பெரும்புலவர் தணிகை. உலகநாதனார் பெற்றுக் கொண்டார் இல்லையா? அப்போது தங்களுடைய மனநிலை எப்படியிருந்தது?
1963-ல் நான் மாணவப் பருவத்தில் எழுதிய கவிதைகளைத் தொகுத்து, "வேழவேந்தன் கவிதைகள்' எனும் தொகுப்பு நூலை, பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையார் தலைமையில் அறிஞர் அண்ணா, சென்னை கோகலே மண்டபத்தில் வெளியிட்டு ஒரு மணிநேரம் அற்புத உரையாற்றினார்.
அப்போதுதான் அந்த அறிவுலக மேதை கூறினார்:
""பாருங்கள். நான் கட்டுரை எழுதுவேன், சிறுகதை எழுதுவேன், நாடகம் எழுதுவேன், நாவல் எழுதுவேன். ஆனால் கவிதை மிகுதி எழுதுவதில்லை. ஒரு குடும்பத்தில் சில ஆண்டிற்கு முன்பே அண்ணனுக்குத் திருமணம் நடந்திருக்கும். தம்பிக்கோ பின்னர் சென்ற ஆண்டுதான் திருமணம் நடந்திருக்கும். ஆனால் அண்ணனுக்குக் குழந்தை இருக்காது; தம்பிக்கோ அழகான மழலை பிறந்திருக்கும். ஆனால் இதைக் கண்டு அண்ணன் பொறாமைப்படுவதில்லை. தம்பிபெற்ற மழலையைத் தூக்கிக் கொண்டு வீட்டு முற்றத்திற்கு வந்து, எதிர்வீட்டுக்காரனைப் பார்த்து, ""என் தம்பி பெற்ற அழகு மகன் எப்படிச் சிரிக்கிறான். பார்!'' என்று கூறிக்கூறி மகிழ்வதைப்போல, கவிதை எழுதாத நான், என் தம்பி வேழவேந்தன் பெற்ற கவிதைக் குழந்தைகளின் நேர்த்தியை உங்களிடம் எடுத்துக்கூற வந்திருக்கிறேன்'' என்றார். எத்தனை தலைசிறந்த உவமை இது. இந்த எளிய கவிஞனை இப்படிப் பாராட்டி மகிழ்ந்த, அவரின் இமயப் பண்பை இன்று எண்ணினாலும் பூரித்துப் போகிறேன்.
புரட்சிக்கவிஞர் தலைமையில் மாணவராக இருந்தபோதே கவிதை பாடியிருக்கிறீர்கள். சீனப் படையெடுப்பின் சூஎன்லாய் குறித்துக் கூடப் பாடினீர்கள். அப்போது அரங்கத்தில் நிகழ்ந்ததைப் பற்றிக் கொஞ்சம் குறிப்பிடுங்கள்.
1962-ல் இந்தியா மீது சீனத்துச் சூயென் லாய் படையெடுத்த நேரம் அது. தமிழ் எழுத்தாளர் சங்க மாநாட்டில், நம் பாவேந்தர் தலைமையில் போர்க்கண்டனம் கவியரங்கம் நடைபெற்றது. ஒல்லிலி மாணவனான நான் பாடியபோது, அரங்கில் கவனிக்காமல் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். நான் மட்டும் தடங்கல் இன்றி என் கவிதைகளைப் படித்தேன். அப்பொழுது சொன்னேன். ""சூ' வென்றே விலங்குகளை விரட்டு வோம் நாம்; "சூ' வருவார் என்பதற்கா இச்சொல் கண்டோம்!'' என்று கூறிக்கொண்டிருந்தேன். இதை கூர்ந்து கவனித்த பாவேந்தர், மேசையைத் தட்டி அமைதி ஏற்படுத்தியபின் சொன்னார்: ""இதோ இந்த மாணவன் ஒரு நுட்பமான கருத்தைக் கூறுகிறான்; கேளுங்கள்.'' என்று கூறிவிட்டு, என்னைப் பார்த்துத் திரும்ப அந்த வரிகளைப் படிக்கச்- சொன்னார். ""ஆடு, கோழி போன்றவை நம் தானியத்தைத் தின்ன வந்தால் அவற்றை விரட்டுவதற்கு நீண்ட நாளாக, "சூ'என்று கூறிவருகிறோம்.
பின்னால் "சூ' எனும் சூயென் லாய் வருவான் என்பதற்காக இச்சொல் கண்டுபிடித்தோம்'' என்ற விளக்கத்துடன் படித்தேன். உடனே அனைவரும் கைதட்டினர்.
பாவேந்தர், ""இப்போது தட்டுங்கள்; முன்பு ஏன் கவனிக்கவில்லை'' என்று கூட்டத்தினரைச் சினந்தும், என் கற்பனையைப் பாராட்டியும் பேசியது தொடர்ந்து என்னைக் கவிதை எழுத வழிநடத்தியது என்பதுதான் உண்மை.
"தமிழேறு' என்ற குறுங்காவியம் ஒன்றை எழுதியிருக்கிறீர்கள். அதற்குப் பின் அந்த முயற்சியில் தாங்கள் ஈடுபடவில்லையே. காவியங் களுக்கு வரவேற்பில்லை என்று கருதுகிறீர்களா?
தமிழ்நாட்டு மாணவன் ஒருவன் கடல் கடந்து ஆப்பிரிக்கா சென்று அமைதிநெறி தவழ்ந்திடப் போராடுவதுதான் என் முதல் குறுங்காவியம் "தமிழேறு'.
இப்போதெல்லாம் இதழ்களில் நாவல்கள் இடம்பெறுவதைவிட சிறுகதைகள், ஒருபக்கக் கதைகள் ஆகியவையே பெரிதும் வெளியாகின்றன.
நெடிய காவியங்களைப் படித்திட இளைஞர்களும் நேரம் இல்லாததால், நானும் குறுகிய பாடல்களிலேயே ஒரு கதைச் சம்பவத்தைக் கூறிவருகிறேன். அப்படி 50க்கு மேற்பட்ட சான்றோர் வாழ்வில் நிகழ்ந்த சுவைச் செய்திகளை வைத்துத்தான் என் ஏழாவது கவிதைத் தொகுதி "நாடறிந்தோர் வாழ்வில்' உருவாக்கியிருக்கிறேன்.
இன்றுவரை மரபுக் கவிதையிலேயே எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். குறிப்பாக எண்சீர், அறுசீர் விருத்தங்களை நெடுகப் பயன் படுத்தியிருக்கிறீர்கள். புதுக்கவிதையைக் குறித்துச் சிந்தித்துக்கூடப் பார்க்கவில்லையே? என்ன காரணம்?
"ஏன்?' என்பது பற்றி ஒரு தனிக்கவிதையே எழுதியிருக்கிறேன்.
"விதிமுறை ஏன்? இலக்கணமேன்?' என்றே என்னை வினவுகின்ற உன்னிடத்தில் கேட்பேன்: "ஓடும் நதிகட்குக் கரைகள் ஏன்' எனக்கேட்டாயா?
"நால்வரப்பும் வயலுக்கேன்?' எனக்கேட்டாயா?
விதி வகுத்து வீடுகளைக் கட்டினால் தான்வீதி எழில் நேர்கோடாய் மிளிரும்! செந்தேன் மதுக்கவிதை யாப்பழகைப் பெற்றால்தானே மனத்துள்ளே கல்வெட்டாய்ப் பதியும், நண்பா!'
வேறென்ன கூறுவேன்?
அறிஞர் கா. அப்பாதுரையார், மயிலை. சீனி வேங்கடசாமி போன்றோரிடம் நெருங்கிப் பழகியிருக்கிறீர்கள். அவர்களிடமிருந்து தாங்கள் கற்றுக்கொண்ட பண்புகள் என்று எவற்றைக் கருதுகிறீர்கள்?
ஒரு முன்னிரவு 11 மணிக்கு என் தொலைபேசி ஒலிலித்தது. எடுத்துக் கேட்டபோது மறுமுனையில் இருந்து பன்மொழிப்புலவர் அப்பாவின் குரல்.
""என்னய்யா இந்த இரவில்!'' என்றேன்.
""ஒன்றுமில்லை தமிழக அரசின் நூல் பரிசுத் திட்டத்திற்காக இந்த ஆண்டு போட்டிக்கு வந்த கவிதை நூல்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அவற்றில் உன் "வண்ணத்தோகை' முதல்பரிசு பெறுகிறது. முன்கூட்டியே சொல்லக்கூடாது என்றாலும் என் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளாமல் இருக்கமுடியவில்லை'' என்றார் அப்பா.
நான் கல்லூரி மாணவனாக இருந்தபோதே பெரும் போட்டியுடன் நடந்த தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் தேர்தலிலில் பன்மொழிப் புலவரை நிற்க வைத்து, கவியரசர் கண்ணதாசனின் உதவியுடன், அவர் வெற்றிபெற ஓடோடிப் பாடுபட்டத்தையும் நான் மறக்க முடிவதில்லை. பேரெழுத்தாளர் க.நா.சு. அவர்களை ஒரு வாக்கில் வெற்றி கொண்டார் அவர்.
எளிமைக்கே இலக்கியமான வரலாற்றாளர் மயிலை சீனி வேங்கடசாமி பலமுறை எங்கள் பட்டிமன்றத்தில் பேசி இருக்கிறார்; பாராட்டும் வழங்கியிருக்கிறோம்.
அறிஞர் மயிலை. சீனி. வேங்கடசாமியின் ""பேய் நட்பு'' குறித்துக் குறிப்பிட முடியுமா?
கல்வெட்டுகளையும், பட்டயங்களையும், மெய்க்கீர்த்திகளையும் ஆய்வு செய்து வரலாற்று நூல்கள் படைப்பதே மயிலையாரின் ஓய்விலாப் பணி. அப்படி ஒருமுறை ஓர் ஊரில் பாழடைந்த கோவிலிலின் உள்ளே சென்று அந்திக் கருக்கல் நேரத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு மாட்டுக்காரச் சிறுவன், ""ஐயா, அந்தப் பாழடைந்த இடத்தில் பேய்கள் உலாவுவதாகச் சொல்கிறார்கள். அங்கே அதிகநேரம் இருக்காதீர்கள்'' என்றார்.
""இருக்கட்டும் தம்பி, இங்கே இரவில் நான் தங்கி இருக்கும்போது, அந்தப் பேய் வந்தால், அதனிடமும் இந்த இடம் பற்றி மேலும் விவரம் கேட்டறிவேன்'' என்று கூறிவிட்டு, அந்த இருட்டுக் கோவிலிலில் படுத்துவிட்டதாக என் நண்பர்கள் கூறுவார்கள்.
அந்த அளவுக்கு வீழ்ச்சியுற்ற தமிழர் தம் நெடிய வளமார்ந்த வரலாற்றை மீட்கவேண்டும் என்பதே அப்பெருமகனின் தீராத் தாகமாக இருந்தது.
அன்றைக்குப் பட்டி தொட்டியெங்கும் திராவிட இயக்க இதழ்கள் "திராவிட நாடு', "நம்நாடு', "மன்றம்', "முத்தாரம்', "முரசொலிலி' உட்பட இருநூற்றுக்கு மேற்பட்ட இதழ்கள் வெளிவந்தன. இன்றைக்கு அப்படி ஒரு நிலையில்லையே. திராவிட இயக்கத்தின் சோர்வு என்று கருதுகிறீர் களா?
இன்றைய இளைஞர் சமுதாயம் தொலைக்காட்சிகள், இணையம் ஆகியவற்றில் மூழ்கிப்போய் தம் தேடலைத் தொலைத்துவிட்டு நிற்கின்றது. ஊத வேண்டிய சங்கை ஊதிக் கொண்டே இருந்தால், தமிழர் உலகத்தில் முதல் தரக் குடிமக்கள் ஆகும் கனவு நனவாகும்.