சிற்றம்பலம் மானுடம் வென்தம்மா... கோவி.லெனின்

/idhalgal/eniya-utayam/chitambalam-manutam-venthamma-govlennin

டித்து உணருவதைவிட பார்த்து மகிழ்வதில் பெரும் பொழுது கழிகின்ற காலம் இது. காலையில் எழுந்ததும் பல்துலக்குவதற்கான பொருட்களைத் தேடிய கைகள், அலைபேசியைத் தேடுவது அண்மைக்கால வழக்கமாகிவிட்டது.

காட்சி உலகத்தில் மானுடர்கள் நிறைந்திருக்க, அவர்களிடம் சமூக-அரசியல்-பண்பாட்டு மாற்றத் தை உருவாக்கும் நோக்கத்துடன் மலர்ந்திருக்கிறது "மானுடம்' காலாண்டிதழ். சங்கம் வைத்து தமிழைப் போற்றி வளர்த்த மாமதுரையிலிருந்து வெளியாகும் மானுடம், சான்றோர்க்கு அணி என்பதைத் தன் அடையாளமாகப் பொறித்திருக்கிறது.

அச்சு ஊடகங்கள் தட்டுத் தடுமாறும் சூழலில், கனமான கட்டுரைகளுடன் காலண்டிதழ் என்பது பெரும் சவாலான பணிதான். மண்ணைக் காக்கும் மனதிடமும், மக்களின் எதிரிகளை அடையாளப்படுத்தும் ஆவேசமும் கொண்டோருக்கு சவால்களும்கூட சாதனைகளாகும். "மானுடம்' ஆசிரியர் குழுவிடம் மனதிடமும் ஆவேசமும் இருப்பதை அதன் உள்ளடக்கத்தில் காண முடிகிறது.

இந்திய ஒன்றியத்தில் பெரும்பான்மை பலத்துடன் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு மீண்டும் அமைந்த நிலையில் 2019 மே-ஜூலை பருவத்திற்கான காலாண்டிதழின் தலையங்கத்தில், இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி இனி எப்படி இருக்கும் என்பதை சுட்டிக்காட்டி எழுதியிருந்தது மானுடம்.

இனி சட்டம் என்பதெல்லாம் மைய அரசின் சட்டங்கள்தான். வரிவிதிப்பு, என்.ஐ.ஏ.,

இனி சட்டம் என்பதெல்லாம் மைய அரசின் சட்டங்கள்தான். வரிவிதிப்பு, என்.ஐ.ஏ., தகுதித் தேர்வு, நதிநீர் ஆணையம், உணவு, மருந்துக் கொள்கைகள், புதிய கல்விக் கொள்கைகள் என அனைத்து உரிமைகளும் மைய அரசின் கீழ் போய்விட்டன. இந்த மைய அரசுச் சட்டங்களால் இந்திய ஒன்றியம் என்பது இனி ஏக இந்தியா என்பதைச் சட்டப்படியானதாக ஆக்கிவிடும். இனி மாநில வளங்கள் என்பது இந்திய வளங்கள்தான். அதைச் சூறையாடுவதை யாராலும் தடுக்க முடியாது என அந்தத் தலையங்கம் எச்சரித்து எழுதியிருந்தது. அந்த காலாண்டிதழ் வெளியாகி அடுத்த காலாண்டு நிறைவதற்குள் ஒரே நாடு-ஒரே தேர்தல்-ஒரே குடும்ப அட்டை எனத் தொடங்கி, மதவாதப் பாகுபாடு காட்டும் குடியுரிமை திருத்தச் சட்டம் வரை பலவற்றை எதிர்கொள்கிறார்கள் இந்திய ஒன்றியத்திற்குட்பட்ட மாநிலங்களில் வாழும் மக்கள். ஜம்மு-காஷ்மீர் என்ற மாநிலம் இந்தியாவின் திறந்தவெளிச் சிறைச் சாலையாகி, மாநிலம் என்கிற தகுதியையும் இழந்து ஒன்றியப் பகுதிகளாக பிளக்கப்பட்டிருக்கிறது. குடிமக்கள் பதிவேடு என்கிற அச்சுறுத்தலால் பல மாநிலங்களும் போர்க்களமாகியுள்ளன.

ee

அரசியல் தளத்தில் எத்தகைய விளைவுகள் ஏற்படும், மக்களின் நலன் எவ்வாறெல்லாம் பறிக்கப்படும் என்பதைச் சுட்டிக்காட்டுவதுடன் மானுடத்தின் பணி நின்றுவிடவில்லை. அதனை சமூக-பண்பாட்டுத் தளத்தில் எதிர்கொள்வது எப்படி என்பதையும் இந்த மண்ணுக்குரிய தன்மைகளுடன் விளக்குகிறது அந்த இதழில் இடம்பெற்றுள்ள தங்க.செங்கதிர் எழுதிய தண்ணீரும் தமிழரும் கட்டுரை.

இடியுடைப் பெருமழை எய்த ஏகம் பிழையாவிளையுள் பெருவெள்ளம் சுரப்ப மழை பிணித்(து) ஆண்ட மன்னவன் -என்கிற புறநானூற்றுப் பாடல் வரிகளை எடுத்துக்காட்டி, தண்ணீரைத் தேக்கி வைத்துப் பயன்படுத்தும் பழந்தமிழ்ச் சமூகத்தின் பண்பாடு இன்றைய அரசியலில் எங்கே போனது என்ற கேள்வியை முன்வைக்கிறது. முடியாட்சியில், சங்கிலித் தொடர் போன்று ஓர் ஏரி நிரம்பியவுடன், தானாகவே அடுத்தடுத்த ஏரிகள் நிரம்பும் வகையில் ஏரிகள் கட்டமைக்கப்பட்டிருந்தன என்று குறிப்பிட்டிருப் பதுடன், குடியாட்சியில், தமிழ்நாட்டில் ஆக்கிரமிப்பு களுக்கு மடியாமல் எஞ்சி நிற்கும் பல கண்மாய்கள் சங்க காலத்தைச் சேர்ந்தவை என்பதை வெளிப்படுத்துகிறது.

தமிழ்நாட்டின் 27 மாவட்டங்களிலும், 184 நகரங்களிலும் தண்ணீர்த் தட்டுப்பாடு தலைவிரித் தாடுகின்றது. நிலத்தடி நீர் மட்டம் கடுமையாகக் குறைந்துள்ளது என எச்சரித்து, தண்ணீர் தனியார் மயத்திற்கு எதிராகக் கடுமையான போர்க்குரல் எழுந்த தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் இன்று ஜீரோ வாட்டர் சிட்டியாக ஆனதால், மனிதர்கள் நகரை விட்டு வெளியேறும் துயரநிலைக்கு ஆளாகியிருக் கிறார்கள் என தமிழ்நாட்டு மக்களை நோக்கி அபாய மணி அடித்து விழிப்புறச் செய்கிறது இந்தக் கட்டுரை.

உலகமயப் பொருளாதாரச் சூழலும், புவி வெப்பமாதல் உள்ளிட்ட இயற்கை சமநிலைச் சீர்கேடும் சமூக-அரசியல்-பண்பாட்டுத் தளத்தில் உள்ளும் புறமுமாகப் பல மாற்றங்களை விளைவிக்கின்றன.

அவற்றை உணர்வதற்கு முன்பாகவே வளர்ச்சியும் வீழ்ச்சியும் கிடுகிடுவென நிகழ்ந்து விடுகின்றன. உண்மையான சிக்கல்களை மடைமாற்றும் வகையில் திருவள்ளுவருக்கு காவி வண்ணம் பூசுவது போன்ற போலியான சிக்கல்கள் உருவாக்கப்படுகின்றன. இதுபோன்ற திசைதிருப்புதல்களை கவனப்படுத் துகிறது மானுடம்.

யுகன் எழுதியுள்ள மீசை என்னும் ஆண்பான் முடி என்ற கட்டுரையில், சங்க இலக்கியங்கள் "அணல்' எனும் பெயரில் ஆணின் முகத்தில் வளரும் தாடியைக் குறிப் பதையும், அதுவே ஆணுக்குரிய அடையாளமாகக் கருதப்பட்ட நிலையில், அதனுடன் மீசையும் சேர்ந்து கொண்ட பின்னணியும், பிற்காலத்தில் மீசையே ஆணின் அடையாளமாக முன்னிறுத்தப் பட்டதையும் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார்.

சங்க இலக்கிய காலத் தொடக்கத்தில் இருந்த மீசை என்ற பொருளும் அதன் வடிவமும் காலத்திற்கேற்ப மாறி வந்துள்ளது. வீரத்திற்கும் ஆண்மைக்கும் மீசைக்கும் உயிரியல் அடிப்படையில் எவ்வித தொடர்பும் இல்லை என்ற பொழுதும் பெண்ணிட மிருந்து வேறுபட்டு ஆணாகத் தெரிவதாக இருந்த முகத்தின் முடியான தாடி வீரத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. பின்னர் அந்தத் தாடி திருத் தப்பட்டு மீசை என்றானது.

சிலகாலம் சாதி மற்றும் அதிகாரத்துடன் செயல்பட்ட அது இன்று ஆண் மற்றும் வீரத் தமிழன் எனும் அடையாளமாக மாறிப்போய்விட்டது என்று அந்தக் கட்டுரை நிறைவடைகிறது.

ஆழ்ந்த பொருளும் விரிந்த பார்வையும்

ஆய்வுக் கண்ணோட்டமும் கொண்ட

கட்டுரைகளுடன் வெளியாகியுள்ள மானுடம்

2019 ஆகஸ்ட்-அக்டோபர் காலாண்டிதழில் ஈழ எழுத்தாளர் தீபச்செல்வனின், அகதியாய் அலைவுறும் ஈழத்தமிழனம் கட்டுரை, இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவற்றப்பட்டுள்ள நிலையில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. எழுத்தாளரும் ஆய்வாளருமான ஸ்டாலின் ராஜாங்கத்தின் வதையை தலைகீழாக்கிக் கொண்டாடுதல் என்கிற கட்டுரை, இந்து புராணக் கதைகளின் பின்னணியில் கொண்டாடப்படும்

பெரும் பண்டிகைகளின் மீதான பண்பாட்டுப் படையெடுப்பை அயோத் திதாசப் பண்டிதரின் ஆய்வு களை முன்வைத்து விரிவாக விளக்குகிறது.

இந்து புராணங்களின் கதைகளில் அழித்தல் மட்டுமல்ல, அவை நிகழ்ந்த விதத்தைச் சொல்லும்போது தந்திரமாக நிகழ்ந்ததாகச் சொல்வது ஒரு பொதுத் தன்மை. அதுவே தர்மம் என்றும் சொல்லப்படுகிறது என்பதை அவர் சுட்டிக் காட்டுகிறார்.

"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' என்ற தொல்காப்பிய இலக்கணத்தை ஒத்ததாக இருக்கிறது மானுடம்.

தொடர்புக்கு:

மானுடம்

11-10-, 4சி, பழனிச்சாமி காம்பவுண்ட்,

இமையம் நகர்,

எஸ். ஆலங்குளம், மதுரை-14.

அலைபேசி: 63835 70936

uday010120
இதையும் படியுங்கள்
Subscribe