சிற்றம்பலம் -மதம் பிடித்த மனிதர்கள்! -கோவி.லெனின்

/idhalgal/eniya-utayam/chirambalam-religious-people-govlenin

ல்லா மதங்களும் அன்பை போதிக்கின்றன. அந்த மதங்களின் வழியே அரசியல்-அதிகாரம்- நிறுவனமயம் என ஆகும்போது அன்புக்குப் பதில் வெறித்தனமே தலையெடுத்து ஆடுகிறது.

lenin

மனிதர்களைப் பிறப்பின் அடிப்படையில் வருணங்களாக-சாதிகளாகப் பிரித்து வைத்து, தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் கொடுமை இந்த மண்ணில் நிலைப்பெற்றிருப்பதற்கு காரணம், மனுஸ்மிருதி எனும் நூலில் கூறப்பட்டிருக்கும் கருத்துகளேயாகும். நால் வருணத்தாரில் முதல் வருணத்தார் தவிர, மற்றவர்கள் படிநிலையில் ஒருவருக்கு கீழே ஒருவரை வைத்திருப்பதும், இந்த நால்வருணத்திலும் வராத அவருணத்தாரான பஞ்சமர்களைத் தீண்டத்தகாதவர்களாக காலப்போக்கில் ஆக்கியதும் மனுஸ்மிருதி அடிப்படையிலான சமூகக் கட்டமைப்புதான். எந்த வருணத்தாராக இருந்தாலும் அதில் உள்ள பெண்களை ஒடுக்கும் வகையிலேயே மனு தர்மம் உள்ளது. இதனை எதிர்த்து தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் போராடியதை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான முனைவர் தொல்.திருமாவளவன் ஓர் இணையக் கருத்தரங்கில் எடுத்துக் கூறியதற்காக, இந்துத்வா மதவெறி சக்திகள் அவரை மோசமாக சித்தரித்தும், வழக்குத் தொடர்ந்தும், போராட்டம் நடத்தியும் தமிழ்நாட்டைப் பதற்றமாக்க நினைக்கின்றன.

எதிர்க்கப்பட வேண்டியவர் திருமாவளவன் அல்ல. மனு நீதி நூலில் உள்ள கருத்துகள்.

ஆனால், ‘மதம்’ எனும் பித்து மனிதனின் ம

ஆனால், ‘மதம்’ எனும் பித்து மனிதனின் மூளைக்குள் போதையூட்டும் வெறிபோல ஏறிவிடும்போது, சகிப்புத்தன்மை என்பதே அற்றுப் போய்விடுகிறது. உண்மையை நோக்கிய பார்வை திசை திருப்பப்பட்டு, சக மனிதர்களை வேட்டையாடும் போக்கை நோக்கிச் செல்கிறது. மாட்டுக்கறி வைத்திருந்தார்கள் என்று கூறி முஸ்லிம்களையும் தலித்களையும் வெட்டிய மதவெறியை இந்த மண்ணில் பார்த்திருக்கிறோம். தமிழர்களைக் கொன்று குவித்த புத்தமத வெறியை இலங்கையில் பார்த்தோம். எல்லா மதங்களிலும் இத்தகைய வெறிப்பிடித்தவர்கள் இருககிறார்கள்.

lenin

'அல்லாஹூ அக்பர்’ (இறைவன் மிகப் பெரியவன்) என்று உரக்க குரல் எழுப்பியபடி, பிரான்ஸ் நாட்டின் கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் கத்தியுடன் நுழைந்த முஸ்லிம் நபர் ஒரு பெண்ணின் கழுத்தை அறுத்தும், இன்னொரு பெண்ணின் தலையைத் துண்டித்தும் பச்சைப் படுகொலை செய்திருக்கிறான்.

‘மதம்’ என்ற சொல்லுக்கு உண்மையான அர்த்தம் என்ன என்பதை மதவெறிப் பிடித்த ஒவ்வொரு மனித மிருகமும் தங்களின் கொடூரத்தனத்தால் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றன. இறைவன் மிகப் பெரியவன் என்றால், அந்த இறைவனால் படைக்கப்பட்டதாக நம்பப்படும் சக மனிதர்களின் உயிரை எடுக்கும் அளவுக்கு இறைவனை விடப் பெரியவன்களா இந்த மதவெறியன்கள்?

முஸ்லிம் மத வழக்கப்படி அல்லாவுக்கோ முகமது நபிக்கோ உருவம் கிடையாது. உருவம் கொடுப்பது பாவம்-குற்றம் எனப் படுகிறது.

dd

பிரான்ஸ் நாட்டு பத்திரிகையான ஈட்ஹழ்ப்ண்ங் ஐங்க்ஷக்ர், முகமது நபியை கார்ட்டூனாக வரைந்ததால் அங்கே பெரும் கலவரம் வெடித்தது. அண்மையில், நபி பற்றிய கார்ட்டூன்களுடன் பாடம் நடத்திய பிரான்ஸ் ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டார். இவற்றையடுத்து, முஸ்லிம் மத அடிப்படைவாதிகளுக்கு எதிரான சட்டங்களை வலுவாக்கியது பிரான்ஸ் அரசு. இன்னும் சில ஐரோப்பிய நாடுகளும் இதே வழியைக் கடைப்பிடிக்கின்றன. இதற்கு முஸ்லிம் நாடுகளிடமிருந்து எதிர்ப்பு வெளிப்படுகிறது. இந்த நிலையில்தான், பிரான்ஸ் தேவாலயத்தில் கொடூரக் கொலைகள் நடந்துள்ளன.

ஒரு மதம் வலுவாக உள்ள நாட்டில் உள்ள பார்வை, இன்னொரு மதத்தைக் கடைப்பிடிக்கும் நாட்டில் மாறுபடும். ஒரு நாட்டில் மைல்கல்லாகக் கருதப்படுவது, இன்னொரு நாட்டில் மயில்சாமியாக வணங்கப்படும். ஒருவர் கிழக்கு திசை பார்த்து கும்பிட்டால், இன்னொருவர் மேற்கு நோக்கித் தொழுவார். மாட்டுக்கறி என்றால் சிலர் கொதிப்பார்கள். பன்றிக்கறி என்றால் சிலர் பதறுவார்கள். இரண்டு கறியையும் விரும்பி சுவைப்பவர்களும் இருக்கிறார்கள். எல்லா இடங்களிலும் ‘நாங்கள் சொல்வதே சட்டம்’ என ஊடுருவ நினைத்தால் கொலைக்குத்துகளே தொடரும். ஒரு மதவெறி கூட்டத்துக்கு எதிராக பிற மதவெறிசக்திகளும் அவை சார்ந்த அரசுகளும் ஒன்று சேர்ந்து கூடுதல் வன்முறைகளை விதைக்கும்.

‘மதம்’ பிடித்து அலைபவர்களே மனிதகுலத்தின் கொடூர எதிரிகள். அவர்களின் தற்காலிக வெற்றி அபாயகரமானது. காலம் இத்தகைய அபாயங்கள் பலவற்றைக் கடந்துதான் மனிதகுலத்தைக் காப்பாற்றியிருக்கிறது.

இப்போதும் காப்பாற்றும் என்கிற நம்பிக்கையை விதைக்கின்றன பின் வரும் நிகழ்வுகள்.

நான்கு வயது சிறுவனிடம் அவனது சொந்தக்காரர்கள் கேட்டார்கள். “நீ இந்துவா? முஸ்லிமா?’’

“நான் மும்பை இந்தியன்’’ என்றான் சிறுவன்.

அவன் அப்பா ஆசிஃப், முஸ்லிம்.

அம்மா ரச்சனா, இந்து.

இருவரும் திருமணத்திற்குப் பிறகும் அவரவர் மதவழிபாட்டு முறைகளையே பின்பற்றுகிறார்கள்.

‘லவ்ஜிகாத்’ எனச் சொல்லி விளம்பரங்களைக் கூட தடுக்கும் நாட்டில்தான் ரச்சனா தனது மத வழக்கப்படியே தொடர்ந்து வாழ்கிறார். அவர் கழுத்தில் உள்ள தாலி, அவரது முஸ்லிம் மாமியார் கொடுத்தது. வளைகாப்பு நடத்தியவரும் மாமியார் தான். ‘தனிஷ்க் விளம்பரம் போலத்தான் நான் வாழ்ந்து கொண்டி ருக்கிறேன்’ என ட்விட்டரில் பதிவு செய்துள்ளார் ரச்சனா.

THE HINDU நாளேட்டில் The Other India என்ற தலைப்பில் Jyoti Punwani எழுதியுள்ள கட்டுரையில், ஆர்க்கிடெக்ட் ரச்சனா போலவே எழுத்தாளர் சரயுவும் தனது மதக் கலப்பு பெற்றோரின் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். இருவருமே அவரவர் மத நம்பிக்கைகளை மாற்றிக் கொள்ளவில்லை. ஒருவர் கோவிலுக்குப் போகும்போது மற்றொருவர் துணைக்குச் செல்வார். அதுபோலத்தான் முகரம் நேரத்து வழிபாடு என்றாலும் ஒருவருக்கொருவர் துணையாகச் செல்வர் என்கிறார்.

ஷோயிப்-வித்யா காதல் இணையர் தங்கள் திருமணத்திற்கு இரு வீட்டார் தரப்பிலும் ஆதரவு இருக்காது என்பதால் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின், ஷோயிப்புக்கு அவரது வீட்டிலிருந்து போன். இருவரையும் வீட்டுக்கு கூப்பிட்டு பெரிய விருந்துடன் திருமண விழாவை நடத்தினர். தன்னுடைய மார்வாடி உறவினர்களுடன் ஷோயிப் தீபாவளி கொண்டாட்டங்களில் பங்கேற்பது வழக்கமாகி விட்டது.

பத்திரிகையாளர் முஸ்தபா தனது காதல் மனைவி பிராச்சி பிங்ளேயின் பெயரை திருமணத்திற்குப் பிறகு மாற்றமாட்டேன் என்று உறுதியாகச் சொல்லிவிட்டார். குடும்பத்தில் முணுமுணுப்புகள் எழுந்தபோதும் அவரின் உறுதி குறையாமல் மணமகளைக் கைப்பிடித்தார். அதன்பின் முஸ்தபாவின் தம்பிக்கு நிக்காஹ் நடந்தது. அப்போது மூத்த மருமகள் செய்ய வேண்டிய சம்பிரதாயங்கள் அனைத்தையும் பிராச்சியைத்தான் செய்யச் சொன்னார் அவரது மாமியார்.

பிராச்சி சாமி கும்பிடும்போது, அவர்களின் இரண்டு வயது மகன் மணி அடிக்கிறான். முஸ்தபா நமாஸ் செய்யும்போது அருகிலே நின்று உற்று கவனிக்கிறான். “அவன் வழி எது என்பதை அவனது விருப்பம் போல தேர்வு செய்து கொள்ளட்டும்’’ என்கிறார்கள் அம்மாவும் அப்பாவும் அன்பு பொங்க.

மதம் பிடித்தவர்களிடமிருந்து மீளட்டும் மனிதம்.

uday011120
இதையும் படியுங்கள்
Subscribe