விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பன்னு சொன்னானாம்’’ என கிராமப்புறங்களில் சொல்வது வழக்கம்.
ராமனின் மனைவிதானே சீதை.. இதுகூடவா தெரியலை என்பதுதான் இதில் உள்ள எள்ளல். சீதைக்கு ராமன் சித்தப்பா இல்லை என்பது தெரிந்தது தான், அந்த சீதைக்கு இராவணன் அப்பா என்று சொன்னால் நம்மில் பலர் அதிர்ச்சியடையக்கூடும்.
300 இராமாயணங்கள் என வரலாற்று ஆய்வாளர் ஏ.கே.ராமானுஜன் எழுதிய புத்தகத்தில் இந்தியாவிலும் இந்தியாவை ஒட்டியுள்ள ஒவ்வொரு பகுதியிலும் இராமாயணக் கதை எந்தெந்த வகையில் மாறியிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டியுள்ளார்.
பல வகை இராமாயணக் கதைகளில் ஒன்று, இராவணனின் மகள் சீதை என்பதுமாகும். இராவணனுக்கும் மண்டோதரிக்கும் பெண் குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தையை தன் மகள் என்பதை இராவணன் வெளிப்படுத்தினால், இராவணனுக்கும் அவனது அரசுக்கும் ஆபத்து என முனிவர்களும் நிமித்திகர்களும் கூறுகிறார்கள். அதனால், பேறு நேர மயக்கத்தில் இருந்த தன் மனைவி மண்டோதரிக்குக்கூடத் தெரியாமல் அந்தக் குழந்தையை பெட்டியில் வைத்து, கடலில் வீசி விடுகிறான் இராவணன். இறைவடிவான சீதையை வீசியதும், கடல் பொங்குகிறது. ஆழிப்பேரலையாக மாறுகிறது. அந்தப் பேரலையில், பெண் க
விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பன்னு சொன்னானாம்’’ என கிராமப்புறங்களில் சொல்வது வழக்கம்.
ராமனின் மனைவிதானே சீதை.. இதுகூடவா தெரியலை என்பதுதான் இதில் உள்ள எள்ளல். சீதைக்கு ராமன் சித்தப்பா இல்லை என்பது தெரிந்தது தான், அந்த சீதைக்கு இராவணன் அப்பா என்று சொன்னால் நம்மில் பலர் அதிர்ச்சியடையக்கூடும்.
300 இராமாயணங்கள் என வரலாற்று ஆய்வாளர் ஏ.கே.ராமானுஜன் எழுதிய புத்தகத்தில் இந்தியாவிலும் இந்தியாவை ஒட்டியுள்ள ஒவ்வொரு பகுதியிலும் இராமாயணக் கதை எந்தெந்த வகையில் மாறியிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டியுள்ளார்.
பல வகை இராமாயணக் கதைகளில் ஒன்று, இராவணனின் மகள் சீதை என்பதுமாகும். இராவணனுக்கும் மண்டோதரிக்கும் பெண் குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தையை தன் மகள் என்பதை இராவணன் வெளிப்படுத்தினால், இராவணனுக்கும் அவனது அரசுக்கும் ஆபத்து என முனிவர்களும் நிமித்திகர்களும் கூறுகிறார்கள். அதனால், பேறு நேர மயக்கத்தில் இருந்த தன் மனைவி மண்டோதரிக்குக்கூடத் தெரியாமல் அந்தக் குழந்தையை பெட்டியில் வைத்து, கடலில் வீசி விடுகிறான் இராவணன். இறைவடிவான சீதையை வீசியதும், கடல் பொங்குகிறது. ஆழிப்பேரலையாக மாறுகிறது. அந்தப் பேரலையில், பெண் குழந்தை இருந்த பெட்டி, ஏதோ ஒரு நாட்டில் போய் விழுந்து, மண் மூடிவிடுகிறது.
மிதிலை நாட்டில் கடுமையான பஞ்சம் நிலவிய நிலையில், அதன் அரசரான ஜனகரே, வேளாண் மக்களுடன் இணைந்து நின்று ஏர் உழுகிறார்.
அப்போது, கொழுமுனை பட்ட இடத்தில் சத்தம் கேட்கிறது. என்னவென்று மண்ணை அகற்றிப் பார்த்தால் உள்ளே பெட்டி இருக்கிறது. அதைத் திறந்தால், பெண் குழந்தை சிரிக்கிறது. வாரிசு இல்லாத தனக்கு, நிலத்திலிருந்து கிடைத்த பெண் குழந்தையை பூமாதேவியாகவே கருதி சீதை எனப் பெயரிட்டு வளர்க்கிறார் ஜனக மன்னர்.
சீதை வளர்ந்து, அண்ணலும் நோக்கினான்-அவளும் நோக்கினாள்’ என இராமனைக் கண்டு, மணம் முடித்து, இராமனின் பட்டாபிஷேகம் தடைப்பட்டு, காட்டுக்குச் செல்லும்போது, கூடவே செல்கிறார். வனவாசத்தில் உள்ள அந்தப் பெண்தான் தன் மகள் என்பது இராவணனுக்குத் தெரியவருகிறது. அதை வெளிப்படுத்தினால் ஆபத்து ஏற்படும். ஆனாலும் தந்தையின் பாசம் விடவில்லை. அதனால், உண்மையை வெளிப்படுத்த முடியாமலும், உறவையும் உணர்வையும் பிரிய முடியாமலும் காட்டுக்கு வந்து சீதையை, அவர் நின்ற இடத்துடன் பெயர்த்து, பூ விமானத்தில் இலங்கைக்கு கொண்டு சென்று அசோக வனத்தில் சிறை வைத்தான் இராவணன். இதனால் இராமர் போர் தொடுத்து, அதில் தன் உறவுகள், நாடு அனைத்தையும் இழந்து, தன்னையும் இழந்தபோதும் சீதை தனது மகள் என்பதை இராவணன் சொல்லவில்லை என்பது இராமாயணக் கதைகளில் ஒன்று.
நாடகக்காவலர் எனப் பட்ட ஆர்.எஸ்.மனோகர் இதனை இலங்கேஸ்வரன் என்ற பெயரில் நாடகமாக அரங்கேற்றியுள்ளார். அதே பெயரில் தமிழில் திரைப்படமாகவும் வெளியானது. இந்நிலையில்தான், உலகில் முதன்முதலில் விமானத்தைப் பயன்படுத்தியது தங்கள் நாட்டின் மன்னனான இராவணன்தான் என்று இலங்கையின் தற்போதைய கோத்தபாய-ராஜேபக்சே அரசு உரிமை கொண்டாடுவதுடன், தனது நாட்டு விமானப்போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை மூலம் அதற்கான தரவுகளைக் கேட்டு விளம்பரம் செய்துள்ளது. தனது நாட்டு செயற்கைகோளுக்கும் ‘இராவணா’ என்று பெயரிட்டுள்ளது.
புராண-இதிகாசப் பாத்திரங்களுக்கு உரிமை கோருவது அதன் மீது நம்பிக்கை கொண்ட அரசுகளுக்கு வழக்கம். நேபாள நாட்டு பிரதமர் சர்மா ஒலி, இராமர் பிறந்த அயோத்தி என்பது இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் உள்ளதல்ல. அது, நேபாளத்தில் பிர்கஞ்ச் என்ற இடத்தின் மேற்குபுறத்தில் உள்ள தோரி என்ற இடத்தில் இருக்கிறது என்கிறார்.
அதற்கான ஆய்வுகளுக்கும் உத்தரவிட்டிருக்கிறார்.
இந்தியாவின் அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவதை விமர்சையாகக் கொண்டாடும் பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ் ஆட்சியில் நேபாள பிரதமர் அதனைத் தங்கள் நாட்டுக்கானதான உரிமை கோருவது புதிய சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது.
கடல் கடந்து படையெடுத்து, சீதையை இராமர் மீட்டு வந்ததை கம்பராமாயணம் உள்ளிட்ட பல இராமாயணங்கள் எடுத்துரைக்கின்றன. வடஇந்திய பழங்குடியினரோ மத்தியபிரதேசத்தில் உள்ள ஒரு ஏரியைக் கடந்து, இராவணன் சிறை வைத்திருந்த சீதையை இராமர் மீட்டதாக நம்புகிறார்கள். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மாண்ட்சவுர் என்பது இராவணன் மனைவி மண்டோதரியின் ஊர் என்றும், அதனால், டெல்லி போன்ற நகரங்களில் விஜயதசமி நாளில் இராம லீலா நடத்தப்பட்டு, இராவணன் உருவம் எரிக்கப்படும்போது, தங்கள் ஊர் மருமகனான இராவணனின் சிலைக்கு மாண்ட்சவுர் மக்கள் வழிபாடு நடத்தி, படைய லிட்டுக் கொண்டாடுகிறார்கள். கோண்டுவானா பழங்குடியினரும் இராவணனைத் தங்களின் தெய்வமாக வணங்குகிறார்கள். இமயமலை முதல் இந்தியப் பெருங்கடல் வரையிலான நிலப்பகுதியில் இராமாயணம் குறித்து பலப்பல மாறுபாடுகள் உண்டு.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இராமாயணத்தை ஆரிய-திராவிட யுத்தம் என்றும், திராவிடனான இராவணனை சூழ்ச்சியால் ஆரியர்கள் வீழ்த்தினார்கள் என்றும் முக்கால் நூற்றாண்டுக்கு முன்பே அரசியல் தளத்தில் அனல் பறக்கும் விவாதங்கள் நடந்துள்ளன. பண்டிதர் ஜவகர்லால் நேர தனது ‘டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ புத்தகத்திலும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
‘இராவண காவியம்’ என்று திராவிட இயக்கப் படைப்பாளியான புலவர் குழந்தை எழுதிய நூல் அப்போது தடை செய்யப்பட்டது. ரா.பி.சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்ற தமிழறிஞர்களுடன் இராமாயணம் குறித்து அறிஞர் அண்ணா நடத்திய சொற்போர், ‘தீ பரவட்டும்’ என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது. இராவணனை ‘இரக்கம் எனும் பொருளில்லா அரக்கன்’ என்று கவிச்சக்கரவர்த்தி கம்பர் பாடியதை கண்டித்து, அவர் மீது வழக்குத் தொடுக்கும் வகையில், ‘நீதிதேவன் மயக்கம்’ என்ற நாடகத்தை அண்ணா எழுதி, அதில் அவரே இராவணனாக நடித்து வாதங்களை வைத்தார்.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், இராவணனை எங்கள் மூதாதை என்கிறார். முத்தமிழறிஞர் கலைஞர், ‘இராவணன் எங்கள் பாட்டன்’ என உரைக்கிறார். தாய்நாட்டிலும் இராமாணம் உண்டு. தாய்லாந்திலும் இராமாயணம் உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாகக் கூறப் படுகிறது. அதில் காட்சிகளும் மாந்தர்களும் அவர்தம் உறவுகளும் மாறுபடுகின்றன. ஆனால், எங்குமே சீதைக்கு இராமன் சித்தப்பா என்பதாக இல்லை.