எல்லா மொழித் திரைப்படங்களிலும் கதாநாயகன்-நாயகி இருப்பார்கள். காலத்திற் கேற்ற உச்ச நட்சத்திரங்கள் இருப்பார்கள். வசூல் மன்னர்கள் இருப்பார்கள். தமிழ்த் திரைப்படங்களிலும் இந்த நடைமுறை உண்டு. மற்ற மொழித் திரைப்படங்களில் இருந்து தமிழ்த் திரையுலகில் சற்று மாறுபட்டிருப்பது, நகைச்சுவை நாயகர்களின் தொடர்ச்சியான ஆதிக்கம்.
ஒவ்வொரு காலத்திலும் பிரபல கதாநாயகர்கள்-உச்ச நட்சத்திரங்கள் போலவே நகைச்சுவை நாயகர்களும் தனித்துவத்துடன் விளங்கிய வரலாற்றுத் தொடர்ச்சி தமிழ்த் திரையுலகுக்கு உண்டு என்பதை கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்கள் இனிய உதயம் இதழ் மேம்பாடு குறித்த ஆலோசனையின்போது பலதரப்பட்ட தகவல் பரிமாற்றங்களுக்கு நடுவே இணையாசிரியர் அவர்களிடம் சொன்னது இப்போதும் நினைவில் நிறைந் திருக்கிறது.
நகைச்சுவை நாயகர்களில் தனித்துவத்தை முதலில் வெளிப்படுத்தியவர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள். அதன்பிறகு சந்திரபாபு தொடங்கி சந்தானம் வரை பெரும் பட்டியலே உள்ளது. கவுண்டமணி, வடிவேலு காமெடிகள் காலங்கடந்தும் தலைமுறையினரை ஈர்க்கிறது. அரசியல் செய்திகளுக்கான மீம்ஸ்களுக்கு கவுண்டமணியும் வடிவேலுவும் இந்தத் தலைமுறைக்கும் கைக் கொடுககிறார் கள். கவுண்டமணி தன் நகைச்சுவைகளில் செந்திலை நையாண்டி செய்வார். வடிவேலு தன்னையே நையாண்டிக்குரிய பாத்திரமாக மாற்றிக் கொள்வார்.
வின்னர் படத்தில் கலக்கிய ‘கைப்புள்ள’ வடிவேலுவை ரசிகர்கள் மறக்க மாட்டார

வின்னர் படத்தில் கலக்கிய ‘கைப்புள்ள’ வடிவேலுவை ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். “வேணாம்.. வலிக்குது அழுதிடுவேன்” என்று அவர் பேசும் ’வீர’வசனம் நம் எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கும். முகபாவனையும் உடல்மொழியும் வசன உச்சரிப்பும் சரியாகக் கலந்த நகைச்சுவை களில் வடிவேலுவை மிஞ்ச ஆள் கிடையாது.
அப்படியே கொஞ்சம் மனத்திரையை ரீ-வைண்ட் செய்து கறுப்பு-வெள்ளை காலத்திற்குப் போவோமா?
“அடிப்பியா.. உங்க அப்பன் மவனே சிங்கம்டா” என்கிறார் அந்த நகைச்சுவை நடிகர். அவர் மீது மீண்டும் அடி விழுகிறது. திருப்பி அடிப்பார் என்று பார்த்தால் அப்போதும், “அடிப்பியா.. உங்க அப்பன் மவனே சிங்கம்டா” என்றபடியே குரல் கம்முகிறது. மீண்டும் அவர் மீது அடி விழுகிறது. இப்போதாவது திருப்பி அடிப்பார் என்று நினைத்தால், ஊஹூம். கண்ணீர்விட்டு அழுதபடி, அடிப்பியா.. உங்க அப்பன் மவனே சிங்கம்டா என்கிறார் அந்த நகைச்சுவை நடிகர். இந்தக் காட்சி 1940ல் வெளியான சகுந்தலை படத்தில் இடம் பெற்றது.
சகுந்தலைக்குத் துஷ்யந்தன் அணிவித்த மோதிரம் தண்ணீரில் விழுந்துவிடுகிறது. அதை ஒரு மீன் விழுங்கிவிடுகிறது. வலையில் சிக்கிய அந்த மீனை இரண்டு மீனவர்கள் பங்கு போட்டுக்கொள்ள விரும்புகிறார்கள். ஒரு மீனவர் பங்கு தர மறுத்து, மற்றொரு மீனவரை அடிக்கிறார். அப்போதுதான் அடிவாங்கியவர், ‘உங்க அப்பன் மவனே சிங்கம்டா என்று வீரம் பேசி, பிறகு அதே டயலாக்கை படிப்படியாக சுருதி குறைத்து, கடைசியில் அழுத நிலையில் உச்சரிக்கிறார். அடிவாங்கி வீரம் பேசியவர் நகைச்சுவை நடிகர் டி.எஸ்.துரைராஜ். அடித்தவர், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். 60 ஆண்டுகள் கழித்து, அவரது படத்தில் இடம்பெற்ற காட்சியின் சாயலில், கட்டதுரையிடம் அடிவாங்கும் கைப்புள்ளையாகக் கலக்கினார் வைகைப்புயல் வடிவேலு.
காலத்தைக் கடந்து நிற்பவை கலைவாணரின் சிந்திக்கத் தூண்டும் நகைச்சுவை காட்சிகள் என்பதற்கு மற்றொரு உதாரணம், ‘மணமகள்’ படத்தில் இடம்பெற்றுள்ள இந்தக் காட்சி...
ஒருவர்: “அண்ணே.. நம்ம தெருக்கோடி செல்லமுத்தண்ணன் நடக்குறது கொஞ்சம்கூட சரியில்லேண்ணே..’
கலைவாணர்: ”ஏன் அவருக்கு காலுல கட்டி வந்திருக்கோ?”
“அது இல்லண்ணே.. பொண்டாட்டிய ஆத்தா வூட்டுக்கு அனுப்பிட்டு.. எவளோ ஒருத்தியை கொண்டாந்து வீட்டுல வச்சிருக்காரு. ஊரு முழுக்க கடன்.. குருசாமி செட்டியாரு ஆளைப்புடிக்கிறதுக்கு வாரண்ட்டோட அலையுறாராம்.’
“அப்படியா? அப்ப செல்லமுத்து அண்ணன் குளோஸ். நல்லா தெரிஞ்சு வச்சிருக்கே.. அப்படித் தானே? அது இருக்கட்டும்.. தம்பி உன் ஜேப்புல (பாக்கெட்) என்ன இருக்கு?''
“அதுவாண்ணே கொஞ்சம் சில்லறை, அப்புறம் பேப்பரு, பேனா இதெல்லாம் இருக்கு”
“அப்படி சொல்லக்கூடாது.. சில்லறைண்ணா எவ்வளவு சில்லறை.. பேப்பருன்னா எத்தனை பேப்பரு.. அதுல என்னன்ன எழுதியிருக்கு? எல்லாத்தையும் விவரமா சொல்லணும்”
“இருங்கண்ணே.. ஒரு முறை பார்த்துட்டு சொல்றேன்..”
“பார்க்காம சொல்லணும் தம்பி”
“பர்க்காம எப்படிண்ணே முடியும்?”
“சரிதான்.. ஜேப்புல இருக்கிறத பார்க்காம சொல்ல முடியாது. செல்லமுத்தண்ணன் விசயம்னா பார்க்காமலேயே சொல்ல முடியும். அப்படித்தானே...
இப்படித்தான் நம்ம நாட்டுல, தன் தப்பை தெரிஞ்சிக்காம பிறத்தியானைப் பத்தியே பேசிக்கிட்டிருக்காங்க...” -என்பார் கலைவாணர். மணமகள் திரைப்படத்திற்கு திரைக்கதை- வசனம்: கலைஞர் மு.கருணாநிதி.
அந்தப் படத்தில் ஒரு கற்பனைக் காட்சி இடம்பெற்றிருக்கும். 1950ஆம் ஆண்டிலிருந்து கால இயந்திரத்தில் பயணித்து கலைவாணரும் டி.ஏ.மதுரமும் சக கலைஞரிகளும் 1960க்குப் போய் விடுவார்கள். அப்போது நாடு எப்படி மாறியிருக்கிறது என்பதற்கான காட்சிகள் இடம்பெற்றிருக்கும். சாதி-மத ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து, வறுமையை வென்று, பகுத்தறிவும் விஞ்ஞானமும் மனித உரிமையும் கொண்ட சமுதாயமாக உலகம் விளங்கும் என்கிற அந்தக் கற்பனை ஏறத்தாழ 60 ஆண்டுகள் கடந்த பிறகும் முழுமையாக நிறைவேறவில்லை.
1951ல் வெளியான ‘மணமகள்’ படத்திற்காக கலைஞருக்கு கார் பரிசளித்தார் கலைவாணர். அப்போது கலைஞருக்கு வயது 27. ஒரு தமிழ் எழுத்தாளர் தன்னுடைய எழுத்துத் திறமையால் 27 வயதில் கார் சம்பாதிப்பது என்பது இப்போதும்கூட எளிதல்ல. கலைஞரின் திறமையும் கலைவாணரின் உதவும் குணமும் அதனை அன்றே சாதித்துக் காட்டின.
மணமகள் படத்திற்காக கலைவாணருடன் கலைஞர் இணைந்து பணியாற்றிபோது, கலைவாணர் வீட்டில் ஒருவர் தங்கியிருந்திருக்கிறார். அவர், தமிழ்நாட்டு அரசியலின் மிக முக்கியமான தலைவர். எளிமையானவர். இலக்கியத் திறன் கொண்டவர்.
அவர்தான், தோழர் ப.ஜீவானந்தம்.
இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு, கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை விதிக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலரும் கைது செய்யயப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மற்றவர்கள், கட்சிக் கட்டளைப் படி தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டனர். அந்த சமயத்தில் தோழர் ஜீவாவைப் பாதுகாக்கும் பணியை மேற்கொண்டிருக்கிறார் கலைவாணர்.
காந்திய கொள்கையில் கலைவாணருக்கு ஈடுபாடு உண்டு. கம்யூனிசத் தலைவர்களுடன் பழக்கம் உண்டு. பெரியார்-அண்ணா உள்ளிட்ட திராவிடத் தலைவர்களிடம் நெருக்கமாக இருந்தவர். உயர்ந்த கொள்கைகளை நகைச்சுவைத் தேன் கலந்து திரை விருந்தாக வழங்கியவர். நாடகத்தில், திரைப்படத்தில் பெற்ற வருமானத்தைத் தன்னைச் சார்ந்திருந்தவர்களுக்கு வழங்கிய வள்ளல்தன்மைக் கொண்டவர்.
லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் தியாகராஜபாகவதருடன் கலைவாணர் சிறைப்பட்டபோது, தமிழகமே அவருக்காக கவலைப்பட்டது. இருவரின் விடுதலைக்காக, ஆளுக்கு ஒரு ரூபாய் தாருங்கள் என வழக்குநிதி வசூலித்தார் தந்தை பெரியார். பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் கலைவாணரின் விடுதலையை விரும்பினர். பிரிட்டிஷ் இந்தியாவில் பிரிவி கவுன்சில் வரை மேல்முறையீடு செய்யப்பட்டு இருவரும் விடுதலையானார்கள்.
எத்தனையோ நெருக்கடிகள், பொருள் இழப்புகள், துயரங்கள் எல்லாவற்றையும் கடந்து தனக்கும் மருந்தாக-மக்களுக்கும் மருந்தாக நகைச்சுவை விருந்து படைத்தவர் கலைவாணர்.