அவர் பேருந்து நிறுத்தத்தில் முன்பே சென்று நின்றிருந்தார். ஆனால், அதனால் எந்தவொரு பிரயோஜனமும் இல்லை. எப்போதையும்விட பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. பிறகு... அங்கிருந்து ஏறுவதற்கும் ஏராளமான ஆட்கள் இருந்தார்கள். அவர்களையெல்லாம் விலக்கிவிட்டு பேருந்திற்க்குள் ஏறுவதற்கான ஆற்றல் மட்டுமல்ல: மனதும் அவருக்கில்லை. எனினும், பேருந்து புறப்படுவதற்கு முன்பே எப்படியோ அவர் அதில் ஏறிவிட்டார்.
ஆட்களின் கூட்டத்தில் நெருக்கியடித்துக்கொண்டு அவர் நின்றிருந்தார்.
பேருந்து மெதுவாகவே நகர்ந்து போய்க் கொண்டிருந்தது. ஆனால், அவருக்கு அது தெரியவில்லை. அவருடைய மனதில் அப்போது எல்லாவற்றைப் பற்றியும் ஒருவகையான விரக்தி யுணர்வே இருந்தது.
முடிந்தவரைக்கும் மேல்நோக்கித் தலையை உயர்த்தியவாறு பேருந்தின் இன்னொரு தூணைப்போல அவர் நின்றிருந்தார்.
உண்மையிலேயே அன்று பேருந்தில் செல்ல வேண்டிய நிலையே அவருக்கு உண்டாகியிருக்காது. நிகழ்ச்சிக்கு அவரை அழைப்பதற்காக வந்திருந்த மூன்றுபேரும் கார் அனுப்புவதாகக் கூறினார்கள். ஆனால், அதுவரை எதுவுமே கூறாமலிருந்த அவர் வருவதாகவோ, இல்லையோ... என்றெதுவும்-
அப்போது முதன்முறையாகக் கூறினார்:
"வேணாம்'.
அவருடைய வார்த்தைக்கு பெரிய பலமிருந்தது. அது அறையில் ஒரு அதிர்ச்சியை உண்டாக்கியவாறு ஒலித்தது. அவரை அழைப்பதற்காக வந்தவர் களால் திகைத்துப்போய் அமர்ந்திருக்க மட்டுமே முடிந்தது. ஆனால், அப்போது குரலை மென்மைப் படுத்திக்கொண்டு அவர் கூறினார்:
"நேரத்துக்கு நான் அங்கு வந்துடுவேன். கார் எதுவும் வேணாம்.'
அப்போது அவர்களின் கூட்டத்திலிருந்த மாவட்டத் தகவல் அதிகாரி மீண்டும் அந்த நாளின் முக்கியத்துவத்தைப் பற்றி அவருக்கு ஞாபகப்படுத்தி னார். குழந்தைகளின்மீது மிகவும் அதிகமான அன்பு வைத்திருந்த மகானான சாச்சா நேரு பிறந்த நாள்... தேர்தலுக்குப் பிறகு அமைச்சர் முதன்முறையாக தொகுதிக்கு வரும்... பிறகு... இதையெல்லா
அவர் பேருந்து நிறுத்தத்தில் முன்பே சென்று நின்றிருந்தார். ஆனால், அதனால் எந்தவொரு பிரயோஜனமும் இல்லை. எப்போதையும்விட பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. பிறகு... அங்கிருந்து ஏறுவதற்கும் ஏராளமான ஆட்கள் இருந்தார்கள். அவர்களையெல்லாம் விலக்கிவிட்டு பேருந்திற்க்குள் ஏறுவதற்கான ஆற்றல் மட்டுமல்ல: மனதும் அவருக்கில்லை. எனினும், பேருந்து புறப்படுவதற்கு முன்பே எப்படியோ அவர் அதில் ஏறிவிட்டார்.
ஆட்களின் கூட்டத்தில் நெருக்கியடித்துக்கொண்டு அவர் நின்றிருந்தார்.
பேருந்து மெதுவாகவே நகர்ந்து போய்க் கொண்டிருந்தது. ஆனால், அவருக்கு அது தெரியவில்லை. அவருடைய மனதில் அப்போது எல்லாவற்றைப் பற்றியும் ஒருவகையான விரக்தி யுணர்வே இருந்தது.
முடிந்தவரைக்கும் மேல்நோக்கித் தலையை உயர்த்தியவாறு பேருந்தின் இன்னொரு தூணைப்போல அவர் நின்றிருந்தார்.
உண்மையிலேயே அன்று பேருந்தில் செல்ல வேண்டிய நிலையே அவருக்கு உண்டாகியிருக்காது. நிகழ்ச்சிக்கு அவரை அழைப்பதற்காக வந்திருந்த மூன்றுபேரும் கார் அனுப்புவதாகக் கூறினார்கள். ஆனால், அதுவரை எதுவுமே கூறாமலிருந்த அவர் வருவதாகவோ, இல்லையோ... என்றெதுவும்-
அப்போது முதன்முறையாகக் கூறினார்:
"வேணாம்'.
அவருடைய வார்த்தைக்கு பெரிய பலமிருந்தது. அது அறையில் ஒரு அதிர்ச்சியை உண்டாக்கியவாறு ஒலித்தது. அவரை அழைப்பதற்காக வந்தவர் களால் திகைத்துப்போய் அமர்ந்திருக்க மட்டுமே முடிந்தது. ஆனால், அப்போது குரலை மென்மைப் படுத்திக்கொண்டு அவர் கூறினார்:
"நேரத்துக்கு நான் அங்கு வந்துடுவேன். கார் எதுவும் வேணாம்.'
அப்போது அவர்களின் கூட்டத்திலிருந்த மாவட்டத் தகவல் அதிகாரி மீண்டும் அந்த நாளின் முக்கியத்துவத்தைப் பற்றி அவருக்கு ஞாபகப்படுத்தி னார். குழந்தைகளின்மீது மிகவும் அதிகமான அன்பு வைத்திருந்த மகானான சாச்சா நேரு பிறந்த நாள்... தேர்தலுக்குப் பிறகு அமைச்சர் முதன்முறையாக தொகுதிக்கு வரும்... பிறகு... இதையெல்லாம் தாண்டி, புதிய வட்டாட்சியர் பதவியை ஏற்றுக்கொண்ட பிறகு முதன்முறையாக நடத்தும்...
வெறுப்பும் கோபமும் அவருடைய மனதிற்குள் வேகமாக நுழைந்து கொண்டிருந்தன. அவர் நினைத் துப் பார்த்தார்.
சாச்சா நேரு? அது யார்? அப்படியொரு ஆளைப் பற்றி முன்பு எப்போதும் கேள்விப்பட்டதே இல்லையே? பிறகு... குழந்தைகளின்மீது அன்பு வைத்திருக்கக்கூடிய விஷயத்தை எடுத்துக்கொண்டால்... யார்தான் குழந்தைகளின்மீது அன்பில்லாமல் இருக்கிறார்கள்? காந்தி அன்பு வைக்கவில்லையா? ஆஸாத் அன்பு வைக்கவில்லையா? எனினும், இப்போது...
திடீரென்று அவர் உரத்த குரலில் கூற ஆரம்பித்தார்:
"போலோ... பாரத்மாதா கீ ஜே....!
மகாத்மாகாந்தி கீ ஜே!
பண்டிட் ஜவஹர்லால் நேரு கீ ஜே!'
ஆவேசம் நிறைந்த குரலில் அவர் மீண்டும்... மீண்டும் அவ்வாறு கூறினாலும், அவரைத் தவிர வேறு யாராலும் அதைக் கேட்கமுடியவில்லை.
அழைப்பதற்காக வந்திருந்தவர்களின் கூட்டத்தில் அவருடைய பழைய ஒரு நண்பரும் இருந்தார். மாணவர்களாக இருந்த காலத்தில் அவர்கள் இருவரும் அரசியலில் ஒன்றாகச் சேர்ந்து செயல்பட்டார்கள். பிறகு... நண்பர் அரசியலில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்க, அவர்...
நண்பர் அவருடைய முகத்தையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். அவருடைய முகபாவம் கொஞ்சம் கொஞ்சமாக இறுகிவருவதைப் பார்த்ததும், நண்பர் கேட்டார்:
"என்ன... எதுவுமே சொல்லாம சிந்தனையில மூழ்கியிருக்க?'
அவர் எதுவும் கூறவில்லை. நண்பரின் முகத்தையே வெறித்துப் பார்க்க மட்டும் செய்தார்.
மிகவும் முன்பே வேறு வேறு பாதைகளில் பிரிந்து சென்றிருந்தாலும், நண்பரின்மீது அவருக்கு அப்போதும் விருப்பம் இருந்தது. மனதின் ஒரு மூலையில் நண்பருக்கும் ஒரு இடம் இருந்தது. நண்பருக்கும் அந்த விஷயம் தெரியும்.
நண்பர் திடீரென்று கேட்டார்:
"போலீஸ் மைதானம் ஞாபகத்தில் இருக்கா?'
அவர் அதிர்ச்சியடைந்தார். போலீஸ் மைதானம்...?
நண்பர் சிரித்துக்கொண்டே கூறினார்:
"ஆமா... போலீஸ் மைதானம்... முன்பு ஒரு மழை பெய்துக்கிட்டிருந்த இரவு வேளையில நாம...'
அவர் கையை உயர்த்தி நண்பரை விலக்கினார்:
""வேணாம்... வேணாம்... அது எதுவும் இப்போ.'
ஆனால். "வேணாம்' என்று கூறினாலும், அவருடைய
மனதில் அப்போது பழைய நினைவுகள் எழுந்து வந்தன.
மழை பெய்துகொண்டிருந்த இருண்ட இரவு.. அவர்கள் இருவரும் காவல் நிலையத்திற்கு
முன்னால் பதுங்கிச் சென்றார்கள். பெரும் மழையில்
அவர்கள் நனைந்து, நீர் வழித்துகொண்டிருந்தது. காவல் நிலையத்தின் வெளிச்சத்திற்குப் பிரகாசம் குறைவாக இருந்தது. அங்கு அப்போது இருந்த போலீஸ்காரர் நின்றுகொண்டே தூங்கிக் கொண்டிருந்தார். அப்படித்தான் அவர்களுக்குத் தோன்றியது. வாழ்க்கையில் வருவதைப் பற்றியும் வராததைப் பற்றியும் நிச்சயமற்ற, இரண்டு பள்ளிக்கூட மாணவர்களாக அவர்கள் இருந்தார்கள். அவர்களிடன் இருந்தது நாட்டுப் பற்று மட்டுமே...
காவல் நிலையத்திற்கு நேர் எதிரிலிருந்த கட்டிடம்... அதன் வாசலில் சுவரோடு சேர்ந்து நண்பன் குனிந்து நின்றிருந்தான். நண்பன்தான் அதிக உயரமுள்ளவனாக இருந்தான. நண்பனின் தோளில் ஏறி அவன் எழுதினான்:
"மகாத்மாகாந்தி கீ ஜே!
பண்டிட் ஜவஹர்லால் நேரு கீ ஜே!
பிரிட்டன் இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டும்!
பிரிட்டிஷ் ஆட்சி முடியட்டும்!'
தொடர்ந்து அவர்கள் மழையில், இருட்டில் ஓடினார்கள். இரண்டு பேருக்கும் ஆழமான பயம் இருந்தது. பிடித்துவிட்டால்... ஆனால், எழுதியபோது அது எதுவும் மனதில் வரவில்லை.
சிறிது தூரம் ஓடியபிறகு, அவர்களுடைய பயம் போய்விட்டது. பிறகு அவர்கள் சிரிக்க ஆரம்பித்தார்கள். காலையில் பொழுது புலர்ந்தபோது, போலீஸ்காரர்கள் என்ன பார்ப்பார்கள்? அவர்களுக்கு முன்னால் சுவரில் பெரிய எழுத்துகளில்...
"பிரிட்டிஷ் ஆட்சி முடியட்டும்!
பண்டிட் ஜவஹர்லால் நேரு கீ ஜே!'
அவர்கள் நினைப்பார்கள்: இது எப்படி வந்தது? இதை யார் எழுதினார்கள்? நேற்று சாயங்காலம்வரை இங்கு இது இல்லாமலிருந்ததே! எங்களுக்கு முன்னால் இரவு வேளையில் யார் இங்கு வந்து இப்படி...?
அப்போது அவர்களை இனம்புரியாத பயம் ஆக்கிரமித்திருக்கும்!
அதை நினைத்து, மீண்டும்... மீண்டும் சிரித்தவாறு அவர்கள் ஓடினார்கள்.
மிகவும் முன்பு நடைபெற்றது. ஐம்பத்தைந்து வருடங்களுக்கு முன்னால்... எனினும், இப்போதும் அவையெல்லாம் மனதில் பசுமையாகவே இருக்கிறது.
எதுவுமே செய்யாமல், உலகத்தின்மீது முழுமை யாக கோபப்பட்டுக்கொண்டு வீட்டில் தனியாக இருந்தபோது, சில வேளைகளில் இந்த பழைய நினைவு களை நோக்கி அவர் திரும்பிச் செல்வதுண்டு. அதனால் பழைய நண்பர் அந்தச் சம்பவத்தைப் பற்றி ஞாபகப்படுத்தியபோது...
அவருடைய முகத்தில் தெரிந்த உணர்ச்சிகளை நண்பர் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார். நண்பர் சிரித்துக்கொண்டே கூறினார்.
"அப்படின்னா... ஞாபகம் இருக்கு. இல்லையா?'
அவரும் சிரித்தார்.
அழைப்பதற்காக வந்தவர்கள் போனபிறகு, மனைவி கேட்டாள்:
"கார் அனுப்புவதா சொன்னப்ப, வேணாம்னு ஏன் சொன்னீங்க? சவுகரியமா போகக்கூடாதா?'
அப்போது அவர் கடுமையான குரலில் கூறினார்:
"வேணாம்... கார் எதுவும் வேணாம். நகரத்திற்கு பொதுவா போறது காரில் இல்லியே!'
அதற்குப் பிறகு மனைவி எதுவுமே கூறவில்லை.
நகரத்தை அடைந்தபோது, பேருந்தில் கூட்டம் சற்று குறைந்தது. அதனால் அவருக்கு சிறிது நேரத்திற்காவது அமர்வதற்கு இருக்கையும் கிடைத்தது.
வாய்க்காலைக் கடந்து, மூன்று சாலைகள் சந்திக்கக்கூடிய சந்திப்பை அடைந்ததும், பேருந்து திடீரென்று நின்றது. இயந்திரத்தில் பிரச்சினை எதுவுமில்லை. சாலை நிறைய ஆட்கள் இருந்தார் கள். முன்னாலும், ஓரங்களிலும் அவர்கள் எதற்கு எதிராகவோ முழக்கங்கள் எழுப்பிக்கொண்டிருந் தார்கள்.
அவர் வெறுப்புடன் வெளியே பார்த்தவாறு அமர்ந்திருந்தார்.
அப்போதுதான் அந்த காட்சி அவருடைய கண்களில் பட்டது.
வாய்க்கால் பகுதியிலிருந்து வந்துகொண்டிருந்த கிராமத்துப் பாதையின் வழியாக ஒரு சிறுவன் நடந்து வந்துகொண்டிருந்தான். அவன் சுமார் பன்னிரண்டு வயது இருக்கக்கூடிய ஒரு பையனாக இருந்தான். ஒரு பழைய அரைக்கால் சட்டையை மட்டுமே அணிந்திருந்தான். பொத்தான்கள் எதுவும் இல்லாமலிருந்த அந்த அரைக்கால் சட்டையை வேட்டி அணிவதைப்போல அவன் இடுப்பில் சொருகி வைத்திருந்தான். அவனுடைய தலையில் மிகப்பெரிய ஒரு மூட்டை இருந்தது. அதிக எடையைக் கொண்டிருந்த அந்த மூட்டை அவனுடைய சிறிய தலையின் முன்பகுதியிலும் பின்பகுதியிலும் ஒடிந்து கிடந்தது. அவனால் தாங்கமுடியக்கூடிய அளவையும் தாண்டிய கனம் அந்த மூட்டைக்கு இருந்தது. சிறிது திறக்கப்பட்டிருந்த வாயின் வழியாக அவன் சத்தமாக மூச்சு விட்டுக்கொண்டிருந்தான். அவனுடைய மெலிந்து பலவீனமாகக் காட்சியளித்த கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன.
நெருப்பில் காட்டிப் பழுக்கவைத்த ஒரு இரும்புக் கம்பியைப்போல அந்த காட்சி அவருடைய களைப் படைத்த மனதிற்குள் ஆழமாக நுழைந்தது.
அவர் அதிர்ச்சியில் இருந்தார்.
கடவுளே... அந்தச் சிறுவன் இப்போது விழுந்து விடுவானே! அப்போது அந்தப் பெரிய மூட்டை அவனுடைய சிறிய கூட்டைப் போன்ற நெஞ்சில் அல்லவா விழும் என்பதை ஒரு அதிர்ச்சியுடன் அவர் நினைத்துப் பார்த்தார்.
அப்போது பேருந்து நகர ஆரம்பித்தது.
சிறுவன் பார்வையிலிருந்து விலகிக் கொண்டிருந் தான்...
அவர் திடீரென்று உரத்த குரலில் கூறினார்:
"பேருந்தை நிறுத்தணும்.'
பயணிகள் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருக்க, அவர் பேருந்திலிருந்து தாவி இறங்கி, ஒரு கனவில் நடப்பதைப்போல திருப்பி நடந்தார். அவருடைய மனதில் அப்போது சாச்சா நேருவின் பிறந்த நாளோ, அமைச்சருக்கும் ஆட்சியருக்கும் அளிக்கக்கூடிய வரவேற்போ, அழகான சீருடைகள் அணிந்து பெரிய பள்ளிக்கூடங்களிலிருந்து வரும் பிள்ளைகளோ, அவர்களுடைய பேண்ட் இசையோ, மார்ச் பாஸ்ட்டோ... எதுவுமே இல்லை.
உண்மையிலேயே கூறுவதாக இருந்தால்... ஏதோ ஒன்றை இழந்து விட்டோமென்ற உணர்வைத் தவிர, வேறு எதுவுமே அவருடைய மனதில் அப்போதில்லை.