நான் நித்தம் நித்தம் மனதால் வாசிக்கும் அமைதிக் கவிதை. ஆடம்பரம் இல்லாமல் அமைதியாய்த் திகழ்வதே அழகிய உயரமென வாழ்ந்து காட்டும் வைகறைப் பெண்மணி அவர்.

அவரை-

ராதையை போல என்று சொல்லவா?

ஆண்டாளைப் போல என்று பாடவா?

Advertisment

அவர்...”ஏங்க...என்னங்க....” என்ற சொற்களால் ஒரு மாபெரும் தலைவரைக் கட்டியாளும் காவிய மகள். யார் வந்தாலும்.... வயது வேறுபாடு இன்றி... சிறியவர்களையும் கூட ‘ங்க..’ போட்டு மரியாதயாய் விளிக்கும் மகரந்தப் பெண்மணி அவர். இனி வரும் சந்ததிகளுக்கு.. இந்த ’ங்க..’ எனும் மரியாதை விளிப்பு, கொஞ்சம் புதிய வார்த்தையாகவும் பழமை சார்ந்ததாகவும் தான் இருக்கும்.

durga

30 ஆண்டுகளுக்கு முன்புதான், தமிழ்க் குடும்பங்களில் இப்படிப்பட்ட அபூர்வப் பெண்களை அதிகமாகப் பார்க்க முடிந்தது. அப்படி இருந்தவர்கள் கூட இப்போது, புள்ளி வைத்த கோலங்களிலிருந்து கொஞ்சம் ரங்கோலியாக மாறிவிட்ட காலமிது.

Advertisment

”என் அம்மா அப்படித்தான் இருந்தார்கள்.

ஆனால் இன்று என் பேரப் பிள்ளைகளுக்காக இப்படி மாறி கொண்டார்கள்”- என்று இப்போது சிலர் பெருமை பேசுவதைக் கண்டு நாம் மகிழ்ச்சி அடைவதா? அல்லது காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப அவர்களும் மாறிவிட்டார்கள் என்று நாம் வருத்தப்படுவதா? என்று அறியாத காலமிது. இத்தனை நவயுக மாற்றங் களுக்குப் பின்னரும் தன் மீது நாகரிக அழுக்கு படியவிடாமல் கிராமிய வாசனை மாறாமல் வாழ்கிற பரிசுத்த தேவதை அவர்.

இளமையிலேயே அதீதமான அனுபவ அறிவு பெற்றவர் இவர். ஜன்னலோர ஒற்றைப் பார்வையாய், தலைவரை எட்டிப்பார்க்க தயங்கிய அந்தப் பெண், ஜன்னல் சாத்தும் நேரம் கூட இன்று பிரிந்திருக்கக் கூடாது என்று நினைக்கும் அளவிற்கு தன் காதலை வெளிப்படுத்தவும் புரிந்துகொள்ள வைக்கவும் ஆண்டுகள் பல கடக்க வேண்டிய தாயிற்று.

durga

சாதாரண குடும்பங்களில் கணவர் மீது ஏற்படும் அன்பும் காதலும் இயல்பாக அரங்கேறிவிடும். ஆனால் ஒரு மாநிலத்தின் மிக முக்கியமான ஒருவர், கணவராய் வாய்த்த நிலையில், நாட்டின் பார்வையே குவியக் கூடிய ஒரு குடும்பத்தில், நாட்டு மக்களையெல் லாம் பாதுகாக்க வேண்டிய நாயகரே கணவரான குடும்பத்தில், உலகம் தெரியாத- அரசியல் தெரியாத- ஒரு பெண், குடும்பப் பொறுப்பேற்றால் அவரது வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கும்? அதை எல்லாம் இனிதாக எதிர்க்கொண்டு தன்னையும் அவர்களுக்கேற்றவாறு வடிவமைத்துக்கொண்டு, அன்பு மயமாய் அனைவரையும் ஆட்கொண்டு, அனைத்தையும் நிர்வகிக்கும் வித்தகத்தை அவர் எப்படிக் கற்றார்? அது துர்க்கா அன்னைக்குக் காலம் கொடுத்த அருட்கொடை.

அந்த மாபெரும் குடும்பத்தில் அவர் சந்தித்த நெகிழ்ச்சியான தருணங்கள், மகிழ்ச்சியான ஒத்திகைகள் என அவர் அப்படி கடந்து வந்த பாதைகள் ஏராளம் இருக்கலாம். அவை அவரை நாளுக்கு நாள் சுடரவைத்தபடியே இருக்கின்றன.

அவரின், புகைப்படங்கள் எல்லாம் புன்னகை படங்கள் தான்.

பொட்டிட்டு சேலை அணிந்து, பூ வைத்து, லக்ஷ்மி பாதி சரஸ்வதி பாதி என்று அப்படி வந்து நிற்பார் அம்மா துர்கா.

”என்ன ரேகா நீ நேர்ல பார்த்து இருக்கிறாயா?” என்றார் முகநூல் தொடர்பில். அந்த வாய்ப்பு எனக்கு இன்னும் கிடைக்கவில்லை. விரைவில் வருகிறேன் என்றேன்.

அவர் எழுதிய ’அவரும் நானும்’ என்கின்ற புத்தகத் தைப் படித்த பொழுதுதான், சாதாரண பெண்கள் எல்லாம் அசாதாரண பெண்களாக மாறுவதற்கு பக்குவமான நிலைமையும் பொறுமையும் மிக முக்கியம் என்பதை உணர்ந்து கொண்டேன். பிறகு அவர்களைச் சுற்றி நடக்க கூடிய விஷயங்களை தீவிரமாக தேட ஆரம்பித்தேன். நல்ல மனைவியாக இருக்க வேண்டும் என்பது ஒவ்வொரு பெண்ணின் மிகப்பெரிய கனவு. அந்தக் கனவு பல நேரங்களில் அசலாக மாறுவதே இல்லை.

durga

மனைவி ஆன பின்னும் ஒருவர் முழுநேர மனைவியாக இருப்பது என்பது சாத்தியம் இல்லை என்கிற உலகத்தில் தான் நாம் இன்று பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

காரணம் அலுவலகப் பணிகளும் ஏனைய பணிகளும் துரத்திக் கொண்டே இருக்கும். ஆனால் அவர் தன்னை முழுக்க முழுக்க குடும்பத்துக்காகவே ஒளிரவிடுகிறார். அது புகழ்பெற்ற குடும்பத்தின் வெளிச்சத்தை மேலும் பன்மடங்காக்குகிறது.

எவ்வளவு பணபலம் இருந்தாலும், எவ்வளவு பதவி உயர்வோடு இருந்தாலும், பல நேரங்களில் சின்னச் சின்ன கோபங்கள்..ஏற்படுவது மனித இயல்பு. எல்லாவற்றையும் கடந்து வந்தே ஆக வேண்டும் என்பது வாழ்க்கை போதிக்கும் பாடம். ஆனால் இந்தப் பாடம் கூட வேண்டாத அளவுக்கு வாழ்க்கை அவருக்கு புன்னகைகளையே நெய்துகொடுக்கிறது.

தலைவரைப் பற்றி அவர் எழுதுகிறார்..

நான் அவங்க மேல வச்சிருக்கற அன்பு என்று. இவர் இப்படிச் சொல்லும் பொழுது, கணவர் என்னும் மந்திரத்தை இவர் எப்படி எல்லாம் உச்சரிக்கிறார் என்று எண்ணிப் பார்த்து மகிழ்கிறேன்.

d

எல்லோரும் தன் கணவர் தன்னோடு எல்லா நேரமும் இருக்க வேண்டும் என்பதற்காக தலையணை மந்திரம் ஓதுவதாகச் சொல்வார்கள். ஆனால் அவரது உண்மையான, உயிர்ப்பான மந்திரம், தனது நாயகரான எங்கள் தலைவரின் பெயராகத்தான் இருக்கிறது. அவர்... தலையணை மந்திரம் பாடினால் கூட, இந்த மக்களுக்கு இயன்றதை எல்லாம் செய்யுங்கள்.. என்றுதான் பாடி இருப்பார்.

காத்திருந்த தமிழகத்திற்கு

விடிவெள்ளி போல் ஒரு நாள் வரும் என்று,

பூத்திருந்த மக்களுக்கு

என்றைக்கு எங்கள் சூரியன் உதிக்கும் என்று

கண்விழித்துக் காத்திருந்த மக்களுக்கு

பேராசை மட்டும் தான் இருந்தது

தலைவர் முதல்வராக வேண்டும் என்று.

ஆனால், அன்னையே நீங்கள் உங்கள் கணவர் எங்கள் தலைவராக வேண்டும் என்பதற்காக அவர் காதுகளில் என்ன மந்திரத்தை ஓதினீர்கள்? அதன் வேகத்தில்தான் இரவு பகலாக தமிழகத்தின் மீது படிந்திருந்த துயர் நீக்க, ஊன் உறக்கம் மறந்து அவர் ஓடிக்கொண்டே இருக்கிறார்.

நீங்கள் திருமணமாகி வீட்டுக்குள் நுழைந்தவுடன்...”நீங்கள் திரையில் நடிப்பது எனக்கு பிடிக்கவில்லை” என்று சொன்னவுடன்... யாருக்குக் கிடைப்பார்கள் “ சரி நான் இனி நடிக்கப் போக மாட்டேன்” என்கிற கணவர்.

அதேபோல்,” மை இட வேண்டாம். பொட்டு வைத்து விடு என் தாயைப் போல” என்று சொன்னவுடன், தாயின் உருவமாகவே மாறிய மனைவி... எங்கள் தலைவரைத் தவிர வேறு யாருக்கும் வாய்க்க வாய்ப்பில்லை.

ஆகஸ்ட் 20- அன்றைக்கு உங்கள் கழுத்தில் நீங்கள் மாங்கல்யம் பூண்ட புனித நாள். அறியாத பருவத்தில் அந்த மாங்கல்யத்தைச் சுமந்த உங்களுக்கு, அந்த நொடியில் இருந்த அதே பூரிப்பும் அதே ஆச்சரியமும் இன்றும் இருக்க வேண்டும் என்று மகளாய் வாழ்த்துகிறேன்.

durga

நீங்கள் அணியும் சேலையில் அவ்வளவு நேர்த்தி!

நான் வைத்திருக்கும் இரண்டு சேலைகள் உங்களிடம் இருப்பதைப் பார்த்து நான் பெருமை கொண்டேன்.

உங்கள் கூந்தலில் மல்லிகை குடியேறாத நாள் ஒன்று இல்லை.

சேலை கட்டுவது பெண் களுக்கு அழகு என்றால், துர்காம்மா... நீங்கள் கட்டும் சேலை மடிப்பின் விதமே, பலமடங்கு கூடுதல் அழகுதான். எப்போதும் செவிவிட்டு இறங்காத உங்கள் வைரத்தோடுக்கு நான் மிகப்பெரிய ரசிகை. கண்கள் இரண்டையும் தாண்டி நீங்கள் பேசும் பேச்சை, என் காதுகள் கேட்பதோடு.. உங்கள் மூக்கில் ஜொலிக்கும் வைரம், எனக்கு எப்போதும் ஞாபகப்படுத்தும் அந்த ஆண்டாளை!

துர்க்கை பற்றி எல்லா கோயில்களிலும் சொல்வதுண்டு.. துர்க்கையை வேண்டிக்கொள்... கணவன் மனைவி தாம்பத்திய வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் நடக்கும் என்று.

உண்மைதான் தாயே, உம்முடைய வேண்டுதலால் உமக்கு கிடைத்த மகிழ்ச்சி உங்கள் கணவர் எங்கள் முதல்வரானார்.

உங்களை மகிழ்ச்சிப்படுத்திய அந்த மாற்றத்தில் இருந்து தமிழகத் தின் பெண்களுக்கெல்லாம் மாபெரும் விடிவுகாலம் வந்ததைப் போல உணர்கிறேன். பெண்ணான என் கண்கள், அதிகம் ரசிப்பது நடிகைகளைத் தாண்டி உங்களைத்தான்.

மாமா.. அவுகளப் பார்த்தா மரியாதையும் பயமும் இன்னும் இருக்கு-என்று சொல்கிற உங்களால்தான், மிகச்சிறந்த மருமகளாய் இன்றும் இருந்து கொண்டிருக் கிறீர்கள்.

எங்கள் தலைவர் பதவி ஏற்ற நேரத்தில் உன் ஆனந்தக் கண்ணீரால் எங்களையும் கண்ணீர் சிந்த வைத்த தாயே! அன்று முதல், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற சொல்லை எங்கு பார்த்தாலும் எப்போது கேட்டாலும் எங்கள் கண்களில் நீர் நிறைந்து நிற்கிறது. இதை எழுதுகிற பொழுது பல இடங்களில் என் மனது உடைந்து உடைந்து ஒட்டப் பட்டது.

மிசா நாளின் போது... “ஒரு நாள் பிரிவு தாங்காத மனைவிகளுக்கு மத்தியில் அவர் எப்ப வருவார் என்று தெரியாமல் ஜெயில் வாசத்தை ஜெயில் கம்பிகளுக்கு நடுவில் பகிர்ந்து கொள்ள முடியாமல்”.. .என்று நீங்கள் அமைதியான தருணம், உண்மையில் இன்னும் நீடூழி வாழ வைக்கும்.

வயது என்ன ஆனா லும் சரி. முதுமை உங்களைத் தழுவினா லும் சரி. உலக மக்கள் எப்படிப் புரிந்து கொண்டாலும் சரி. உங்கள் பேரப் பிள்ளை களுக்குப் பிள்ளைகள் இருந்தாலும் சரி. அழகு குறைந் ததோ என்கின்ற சந்தேகம் உங்களுக்கே இருந்தாலும் சரி.. உங்கள் மீன் குழம்புக்காய் காத்திருக்கும் எங்கள் தலைவரை- உங்கள் ரசத்திற்காகக் காத்திருக்கும் எங்கள் முதல்வரை- உங்களை விட அதிக நேரம் உரிமை கொண்டாடும் எங்கள் நாயகரை - மகிழ்ச்சி குறையாமல் நீங்கள் வைத்துக்கொள்வீர்கள் என்பது தெரியும். அவரை இடையிடையே போதுமான ஓய்வையும் எடுக்கச் செய்யுங்கள் தாயே...

எங்கள் வாழ்வை இருளில் இருந்து மீட்டுத் தந்த பெருமை அவரை மட்டுமே சாரும். வாழ்த்த வயதில்லை என்றெல்லாம் ஒதுங்கிக் கொள்ளப் போவதில்லை நான். சிறு குழந்தை போல கட்டியணைத்து ஒரு முத்தம் தந்தாள் என்பதைப்போல, என் வாழ்த்தையும் ஏற்றுக் கொள்ளுங்கள். எனக்குப் பிடித்த பலதும் உங்களிடம் இருக்கிறது. எல்லோரும் வாய் நிறைய அண்ணி என்று அழைப்பார் கள். எனக்கு நீங்கள் அன்னையே.

மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக் கும், ஸ்டாலின் துர்கா அவர்களுக்கும் மக்களின் இதயத்தில் மங்காத சுடர் விளக்காய் என்றென் றும் வாழ வாழ்த்துகிறேன். அந்நாளில் வாழ்ந் ததைப் போல் எந்நாளும் வாழ்ந்திட வேண்டு மென்று இந்நாளில் நான் வாழ்த்துகிறேன்.

பூக்கள் எப்போதும் தரும் நறுமணத்தை போல, கடல் அலைகள் எப்போதும் தரும் மகிழ்ச்சியைப் போல, ஒருவருக்கு ஒருவராய் ஒன்றுக்குள் ஒன்றாய் இரு கண்களைப் போல இருவரும் ஒன்றாய் பல்லாண்டு வாழ்ந்திட, பல்லாயிரம் மக்களின் சார்பாக ஒற்றை எழுது கோலில் வடிக்கிறேன் உங்களை. வாழ்த்துகிறேன் அம்மா... வாழ்த்துகிறேன் ஐயா!