ண்மைகாலமாக தமிழ்க்கவிதை உலகில் மண்மணம் மிக்க கவிதைகளைப் படைத்து, பலரின் கவனத்தையும் ஈர்த்து வருபவர் அமுதா தமிழ்நாடன். பல இலக்கிய மேடைகள் கண்டவர். கவியரசு கண்ணதாசன் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறார். இவரது தத்துவக் குரலாக ஒலித்த ’பொம்மையோ பொம்மை’ என்ற கவிதை, முன்னாள் அமைச்சர் கவிஞர் வேழவேந்தனால் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, பலரின் பாராட்டுக்களையும் குவித்திருக்கிறது. பல்வேறு முன்னணி இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகி இருக்கின்றன.

book

பெண்ணியம் தொடர்பான கட்டுரை களையும் எழுதிவரும் இவர், ’இருபதாம் நூற் றாண்டுத் தமிழ்ப் பெண் கவிஞர்கள்’ என்ற புதுவை சுந்தரமுருகனின் பெண் கவிஞர்கள் குறித்த நூலிலும் சிறப்பிக்கப்பட்டிருக்கிறார்.

முகநூல் தளத்திலும் தன் இலக்கியப் பங்களிப் பைத் தொடர்ந்து செய்துவருகிறார் அமுதா.

Advertisment

இவர் எழுதிய முதல் கவிதை நூலான ’நிலாக் கூடை’ தற்போது வெளியாகி, பரவலான பார்வையைப் பெற்றுவருகிறது. இவரது இந்த ‘நிலாக் கூடை’ என்ற கவிதை நூல், வண்ண மயமாக பொலிவுடன் உருவாக்கப்பட்டு, அமேசான் கிண்டிலில் வெளியிடப்பட்டிருக்கிறது.

பெண்ணுரிமை, கிராமியம், கிராமிய மக்களின் அன்புசூழ் வாழ்க்கை, ஏழ்மை, குடியின் கொடுமை, கொரோனா நெருக்கடி, குடும்ப உறவு களின் மேன்மை என பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்ட இந்தக் கவிதைத் தொகுப்பை, கொரோனா நெருக்கடியால் ஆன்லைனில் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சிகள் அண்மை யில் அரங்கேறின.

நிலாக் கூடைத் தொகுப்பை, இயக்குநரும் நடிகருமான யார் கண்ணன் சென்னையில் வெளியிட்டு அறிமுகம் செய்ய, அதை அவர் மகளும் உதவி இயக்குநருமான மீரா திரிபுர சுந்தரி மகிழ்வோடு பெற்றுக்கொண்டார்.

Advertisment

அதேபோல் பிரபல நடிகரும் கவிஞருமான ஜோ மல்லூரியின் தாயார் திருமதி அமலோற்பவம் அம்மாள் தேனியில் நிலாக்கூடை நூலை வாழ்த்தி மகிழ்ந்து வெளியிட, அதை நடிகர் ஜோ மல்லூரி பெற்றுக்கொண்டார்.

book

அதேபோல் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளரும் நெறியாளரும் எழுத்தாளருமான பத்மா நிலாக் கூடையை உற்சாகமாய் வெளியிட, அவர் கணவரும் திரைப்படப் பாடலாசிரியருமான அருண்பாரதி மகிழ்வுடன் பெற்றுக்கொண்டார்.

குடும்ப உறவுகளைக் கொண்டாடும் நிலாக் கூடையைத் திரைப்பிரபலங்கள் குடும்ப சகிதமாக வெளியிட்டு சிறப்பித்தது, கூடுதல் சிறப்பாகும்.

இதேபோல் இலக்கிய உலகின் சார்பில், மதுரையில் நிலாக்கூடை நூலை, ’பொற்கைப் பாண்டியன் கவிதா மண்டலத் தலைவர்’ பாவலர் பொற்கைப்பாண்டியன் வெளியிட்டு மகிழ்வு டன் அறிமுகம் செய்ய, அதனை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இயக்குநரின் நேர்முகச் செயலாளரும் ’மகிழ்ச்சி’ இதழின் ஆசிரியருமான சுந்தர்ராஜன் பெற்றுக்கொண்டு வாழ்த்தினார்.

மலைக்கோட்டை மாநகரான திருச்சியில். கவிஞரும் அரசியல் பிரபலமுமான திருமதி கவிசெல்வா, நிலாக்கூடையை உள்ளார்ந்த வாழ்த்துக்களோடு வெளியிட, அதை அவரது மகன் பரமாத்மி கன் மகிழ்வோடு பெற்றுக்கொண்டார்.

நிலாக்கூடை நூல் குறித்துத் தம் மன்முவந்த வாழ்த்தைத் தெரிவித்த பாவலர் பொற்கைப்பாண்டியன்....

’’கவிதாயினி அமுதா தமிழ்நாடனின் நிலாக்கூடை, தமிழ்கூறும் நல்லுலகால் பேசப்படும் நூல். ஒரு ஓவியக் கூடத்தையே முதுகில் சுமந்து பறந்து திரியும் வண்ணத்துப் பூச்சியாய் நான் நூலுக்குள் நுழைந்து பறந்து திரிந்தேன். எல்லாக் கவிதைகளிலும் உயிர் உலாவுகிறது. அப்பாவின் முத்தமாய் சில கவிதைகளில் மனசு தொலைந்துபோனது. எட்டுக்குடித் திருவிழாவில் தொலைந்து போன கால்கொலுசாய்.. கருக்காய், கருக்கரிவாள் போன்ற கிராமத்துச் சொல்லாடல்களில் வயலில் இறங்கி உழவு செய்த காலமும், கதிர் அறுத்த காலமும், ஆடுமேய்த்த காலமும் உணர்ந்து அனுபவித்தேன்.

நண்பர்களும் உறவினர்களும் வராத இல்லம் செங்கல் சூளை என்ற சொல்லாடல் தூங்கவிடவில்லை. அம்மாவின் சேலையைக் கிழித்து தாவணி கட்டிய நினைவுகளாய்க் கவிதைகள் மணக்கின்றன. அன்புத் தங்கை அமுதா தமிழ்நாடனைத் தமிழ்கூறும் நல்லுலகம் கண்டுகொண்டு கொண்டாடும். நூலாசிரியருக்கு வாழ்த்துகள்’’ என்று தன் வாழ்த்தைத் தெரிவித்தார்.

ஆன்லைன் மூலமாக வெளியிடப்பட்ட முதல் தமிழ்க்கவிதை நூல் என்ற பெருமையையும், ஒரே நேரத்தில் பல ஊர்களில் அறிமுகம்செய்து வெளியிடப்பட்ட நூல் என்ற பெருமையையும் அமுதாவின் ’நிலாக்கூடை’ பெற்றிருக்கிறது.

-சோழன்