கேர் ஆஃப் ஸ்வாத் பள்ளத்தாக்கு இந்திமொழிக் கதை -மனீஷா குல்ஸ்ரேஷ்ட் தமிழில்: சுரா

/idhalgal/eniya-utayam/care-swat-valley-hindi-story-manisha-kulsresht-tamil-sura

"இது என்னுடைய இருப்பு சம்பந்தப்பட்ட விஷயம். இந்தக் கூட்டத்தில் அமர்ந்திருக்கும் அன்பிற்குரியவர்களே! என்னுடைய பண்டிதத்தனத்தை உயர்த்திப் பிடிப்பவளல்ல நான். ஆனால், தேடிப்பெற்ற அறிவியலைப் பெரிதாக நினைக்கக்கூடியவள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். கூறுபவர்கள் கூறட்டும்... நான் இந்த விவாதங்கள் நிறைந்த நிகழ்ச்சிக்குள் நுழைந்துதான் ஆணவம் கொண்டவளாகி விட்டேனென்று அவர்கள் கூறிக்கொள்ளட்டும்... கார்கி என்னும் பெயரைக்கொண்ட இங்கிருக்கும் பெண், மகரிஷி வாசாக்னுவின் மகள்... ரிஷி குலத்திலிருந்து இந்த மிகப்பெரிய நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்காக விரும்பி வந்திருக்கும் முதல் பெண் என்று... அறிவின் கோபுரமான ஆசார்ய யாஞ்ஞவல்கியருடன் நேருக்குநேர் நின்று விவாதம் செய்யக்கூடிய அகங்காரம் பிடித்த பெண்ணென்று... அது என்னை பாதிக்காது!

ஆனால் நீ... இந்த மிகப்பெரிய சபையில், சக்கரவர்த்தியும் ஞானியுமான ராஜரிஷி ஜனகரின் இடத்தில் இருந்துகொண்டு, ஆச்சாரியரிடம் கேள்விகளை எழுப்பக்கூடாதென்று எனக்குக் கட்டளை பிறப்பிக்கக் கூடாது... அன்பிற்குரியவனே! ஆன்மாவைப் பற்றியும் பரமாத்மாவைப் பற்றியும் உள்ள வார்த்தைப் போர் இது. இல்லை... உன்னால் என்னைத் தடுக்கமுடியாது. உண்மைதான்... நான் வாதம் புரிவதைக் கற்றுக்கொண்டதும் பயிற்சி பெற்றதும் என்னுடன் சேர்ந்து விளையாடிய உன்னுடனும் என் தந்தையுடனும் இருந்துதான். நம்முடைய திருமணம் நிச்சயிக்கப்பட்டதும் உண்மை. ஆனால்... அது இந்த கார்கியை ஆச்சாரியருடன் நடைபெறக்கூடிய வாத- விவாதத்திலிருந்து விலக்குவதற்கு ஒரு காரணமே அல்ல. அன்பிற்குரிய எதிர்கால மணமகனே! இதைக் கேள்... நான் அறிவால் வார்த்தெடுக்கப்பட்ட பெண். பயனற்ற சித்தாந்தங்களால் மரத்துப்போகச் செய்துவிட்ட மூளைகளை அறிவால் தட்டியெழுப்ப அறிந்தவள்... அறிவின் கவசத்தை அணிந்து தந்திரமாக ஒப்பித்து வைக்கப்பட்டிருக்கும் சாத்திரங்களைக் கேள்விகேட்டு புதுப்பிக்கும் ஆற்றல் கொண்டவள்... அந்த நான் ஏன் விலகியிருக்க வேண்டும்?

ஆச்சாரியர் எங்கே? எனக்கு இதுவொரு அபூர்வ வாய்ப்பு! மிகப்பெரிய ஞானியான யாஞ்ஞவல்கியருடன் நேருக்குநேர்! எனக்குத் தெரியும்... உன்னைக் கவலைப்படச் செய்யும் உணர்வு எதுவென்று. ஒரு பெண்... அதுவும் நீ திருமணம் செய்துகொள்ளப் போகும் இந்த கார்கி... தலையை உயர்த்தி, கண்களைப் பார்த்து, புகழ்பெற்ற இந்த சபையில் இருந்துகொண்டு மிகப்பெரிய பண்டிதர்களை நேருக்கு நேர் சந்திக்கி றாள்! அதுவும்... முற்றிலும் ஆண்கள் இனம்!

அவர்களிடம் கேள்வி எழுப்புகிறாள். அது உன்னுடைய தரத்திற்கு சேரக்கூடியதில்லையே!

சரி... நானொரு காரியத்தைச் செய்கிறேன். என்னுடைய இந்த இளமையான உடலை ஒரு துணியால் மூடிப் புதைத்துக்கொள்கிறேன்.

அதுவும் போதாதென்றால் இந்த யக்ஞ குண்டத்திலிருந்து சாம்பலை எடுத்துத் தேய்த்து முகத்தை அவலட்சணமாக்கிக் கொள்கிறேன். பெண்ணென்று நீ நினைத்துக்கொண்டிருப்பது இந்த சரீரத்தைதானே? இல்லையா அன்பிற்குரியவனே? இதைக் கேள். தந்தையிடமும் சென்று கூறு. எனக்குள் இருக்கும் அறிவோ திறமையோ பிரகாசிப்பதற்கு இந்த சரீரம் ஒரு தடையாகவே இல்லை என்பதை... அதற்கு இவள் எந்தக் காலத்திலும் சம்மதிக்கமாட்டாள் என்பதை... போய்க் கூறு...''

ஆடிட்டோரியம் முழுவதும் நீண்டநேர கைத்தட்டல்களின் எதிரொலிப்புகள்... சுகந்தா மேலும் கீழும் மூச்சுவிட்டவாறு ஒப்பனை அறைக்கு வந்தாள். எல்லாரும் நம்பிக்கையற்ற முகத்துடன்... மகிழ்ச்சியுடன் சுற்றிலும் கூடிநின்றார்கள். பாராட்டுகளால் அவளை மூடினார்கள்.

"அடடா! முதல் மேடையில இந்த அளவுக்கு கைத்தட்டல் வேற யாருக்கு கிடைச்சிருக்கு? சுகந்தா... அருமையான நடிப்பு!''

"என்ன ஒரு டயலாக் டெலிவரி! ஆளுங்க இப்படி அமைதியா இருக்கமுடியாது... தெரியுமா?''

"உண்மையாவா?''

"ஆமா...''

கார்கியின் வேடத்தில் சுகந்தா ஒப்பனையறையின் கண்ணாடியில் தன்னைத்தானே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். நடுக்கம் விலகிச் செல்லாமலிருந்தாலும், இப்போதும் நாடத்தில் தன்னுடைய உரையாடல்கள் அளித்த ஒரு சந்தோஷம் அவளுக்கு உள்ளிலும் வெளியிலும் நிறைந்திருந்தது. மிகவும் நீளமாக இருந்த கண்ணாடியில் தன்னுடைய முழுத் தோற்றத்தையும் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள் சுகந்தா.

கார்கி! ஜனகனின் மிகப்பெரிய சபையின் நவரத்தினங்களில் ஒருத்தி! மகாஞானி! மிகப்பெரிய யாகத்தில்... மிகப்பெரிய வாத- விவாதத்தில்... அளவற்ற உற்சாகத்துடன்... மிகப்பெரிய பண்டிதர்களுடன் வார்த்தைப்போரில் ஈடுபடுவதற்கு ஏங்கியவள்! ஹா.... இந்த சுகந்தாவா? யார் இவள்? கார்கியையும் தன்னையும் சேர்த்து இணைத்திருந்த அந்த கற்பனைக் கயிறு அறுந்துவிட்டதைப்போல அவளுக்குத் தோன்றியது. கார்கியின் வண்ணமயமான மேலாடையைக் கழற்றியெறிந்தாள் சுகந்தா. தன்னுடைய வெண்மைநிறத் துப்பட்டாவைக் கழுத்தில் அணிந்தாள். முழங்கால்வரை இறங்கிக்கிடந்த கூந்தலி-ருந்து பூக்களைப் பிரித்தெடுத்து எறிந்துவிட்டு, சுருட்டிக் கட்டிவிட்டாள். அகலமான கருத்த நெற்றியில், ஒப்பனை செய்யும் பெண்ணான நிதி, திரவ சாயத்தால் மஞ்சள் வண்ணத்தில் மூன்று நீளமான கோடுகளையும், அவற்றுக்கு மத்தியில் சிவப்புநிறத்தில் ஒரு பெரிய பொட்டையும் வரைந்திருந்தாள்.

"கடந்தகாலம் என்றால் என்ன? எதிர்காலம்? நிகழ்காலம்? நேரம் என்றால் என்ன? நேரம் பிணைந்து கிடப்பது எதன்மீது? திரும்பத் திரும்ப நடைபெறும் இந்த செயலுக்கு அடிப்படைக் காரணமென்ன அன்பிற்குரியவரே... யாஞ்ஞவல்கியரே... கூறுங்கள். ஆகாயத்திற்கு மேலே என்ன இருக்கிறது? பூமிக்குக் கீழே என்ன இருக்கிறது? இவற்றின் ரத்தமும் சதையும் கலக்கப்பட்டிருப்பது எங்கே? கூறுங்கள்... இந்த பிரம்மலோகம் என்றால் என்ன? அது எப்போது உருவம்பெறத் தொடங்கியது? கூறுங்கள் ஆச்சாரியரே!''

உடனடியாக யாஞ்ஞவல்கியரின் வேடத்திலிருந்த அனூஜ், இருக்கையைவிட்டு எழுந்தான். எரிந்துகொண்டிருக்கும் விழிகளால் கார்கியைப் பார்த்தான்.

"உன் தலைக்குள் இதைப்போன்ற சந்தேகங்களை நிறைத்துவைக்காதே கார்கி. பெண்களின் மண்டையோட்டிற்கு அதற்கான பலமில்லை. வெடித்துச் சிதறிவிடும்!''

அதைக் கேட்டதும் சிறிது உரையாடலை சுகந்தா மறந்துவிட்டாள். ஆனாலும் கலக்கமடையாமல் ஞாபகத்தில் கொண்டுவந்து விட்டாள். மன தைரியம்! எந்தவிதத் தடையுமின்றி வந்தது.

"ராஜரிஷி ஜனக மகாராஜர் பொறுத்துக்கொள்ள வேண்டும்! ஆனால் கூறுங்கள்... என்னுடைய இந்த கேள்விகள் அர்த்தமற்றவையா?''

கார்கியின் பார்வையை சந்திக்கமுடியாமல் ஜனகராஜா தலையைத் தாழ்த்திக்கொண்டார்.

"ஆச்சாரிய யாஞ்ஞவல்கியரே... என்னை மன்னித்துவிடுங்கள். காசியிலோ வேறு ஊர்களிலோ வீரர்களின் பிள்ளைகள், சுதந்திரமாகக் கட்டப்பட்ட நாணைக் கொண்ட வில்லையெடுத்து மூத்தவர்களைப் போருக்கு அழைப்பதைப்போன்ற சிறுபிள்ளைத்தனமான செயல்- இங்கு நான் உங்களைப் பார்த்துக் கேள்விகள் கேட்பது என்னும் விஷயம் எனக் குத் தெரியாததல்ல. அவர்களை நீங்கள் எப்படி மன்னிப்பீர்களோ அதேபோல... இப்போது இந்த கார்கியையும் கருதிக்கொள்ள

"ஆச்சாரிய யாஞ்ஞவல்கியரே... என்னை மன்னித்துவிடுங்கள். காசியிலோ வேறு ஊர்களிலோ வீரர்களின் பிள்ளைகள், சுதந்திரமாகக் கட்டப்பட்ட நாணைக் கொண்ட வில்லையெடுத்து மூத்தவர்களைப் போருக்கு அழைப்பதைப்போன்ற சிறுபிள்ளைத்தனமான செயல்- இங்கு நான் உங்களைப் பார்த்துக் கேள்விகள் கேட்பது என்னும் விஷயம் எனக் குத் தெரியாததல்ல. அவர்களை நீங்கள் எப்படி மன்னிப்பீர்களோ அதேபோல... இப்போது இந்த கார்கியையும் கருதிக்கொள்ளுங்கள். என் கேள்விகளுக்கு உங்களிடம் பதில்கள் இருக்கின்றன என்று எனக்குத் தெரியும். தயவுசெய்து கூறுங்கள். பாருங்கள்... இந்த மிகப்பெரிய சொற்போரில் வெற்றி பெறுபவர்களுக்கு அளிக்கவிருக்கும் பொன் சுற்றப் பட்டிருக்கும் கொம்புகளைக்கொண்ட இந்த ஆயிரம் காமதேனுக்களை! உங்களின் தர்மாசிரமத்தை அடையப்போகிறோம் என்ற ஆவலால், அவற்றின் கண்களிலிருக்கும் பிரகாசத்தையும் எதிர்பார்ப்பையும் பாருங்கள்!" கார்கி மெதுவாக அந்த பசுக்களுக்கு அருகில் நடந்துசென்று ஒரு பசுவைப் பாசத்துடன் தடவினாள்.

கோபத்தை விலக்கிய குரலில் யாஞ்ஞவல்கியர் கூறினார்: "ஓ... கார்கி. கேள்... ஓ... இவைதான் உனக் கான என் பதில்கள்!''

சுற்றிலும் நடப்பவை எதுவுமே... நாடகம் முடிவடைந்ததோ... திரைச்சீலை விழுந்ததோ... விளக்குகள் ஒளிர்ந்து அணைந்ததோ எதுவுமே அறியாமல் அமைதியாக சுகந்தா நின்றுகொண்டி ருந்தாள்.

பார்வையாளர்கள் மத்தியிலிருந்து உயர்ந்த கைத்தட்டல்களின் சத்தம்தான் அவளை இந்த உலகத்திற்கு மீண்டும் கொண்டுவந்தது. சியாமள் அனுப்பிய செய்தி அவளுடைய அலைபேசியின் திரையில் ஒளிர்ந்தது: "அருமை... சுகந்தா! உன்னை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்!''

இதற்குப்பிறகு என்ன வேண்டும்?

கண்ணாடியைப் பார்த்து அவள் ஒப்பனையைத் துடைத்து நீக்கினாள். இடப்பக்க கண்ணுக்குக் கீழே சதைப்பகுதி வயலட் நிறத்தில் வீங்கியிருக்கிறது! அப்போது அவளுடைய சரீரத்திற்குத் தளர்ச்சி உண்டானது. மேடை அளித்த உற்சாகம் முடிந்தது. கண்ணாடியில் தன் கண்களில் தோன்றிய பெருமை, கண்ணீருக்கு வழிவிடுவதை அவள் பார்த்தாள். சிரமப்பட்டு சுகந்தா தன் முகத்தைப் பிரகாசிக்கச் செய்தாள். சுற்றிலும் பாராட்டுகளின் மழையாக இருந்தது.

"முதல் நடிப்பு வெளிப்பாடே அருமை!''

"சுகந்தா... சியாமள் பாபுவைப் பாரு... அவரு பெருமையால கண்கள் கலங்கிக் காணப்படுறாரு.''

"புராண காலம் அதேபோல மேடையில் வெளிப்பட்டதே! பார்வையாளருங்க இப்பகூட அங்கிருந்து திரும்பி வரல. அடடா! அருமை!''

"அப்படியா?''

"கடவுளுக்கு நன்றி! முதல் நடிப்பு அனுபவம் சிறப்பா அமைஞ்சிட்டது. நாளைக்கு பத்திரிகைகள்ல நல்ல செய்திகள் வரும்.''

"ஆமா... அதிகபட்சம் ஒரு ஓரத்துல... ஒரு பத்தி... பழைய காலமெல்லாம் போச்சுடா! இப்போ அரசியல், சினிமா... நாடகம் எதுக்கு?''

"விவரமில்லாம... ஒவ்வொண்ணையும் பேசிக்கிட்டிருக்காதேடா. இது... சியாமள் பாபுவின் நாடகம்... சும்மால்ல... அப்படி அவங்களால ஒதுக்கமுடியுமா?" அவர்கள் எல்லாருக்கும் ஒன்றாக அமர்ந்து இரவு உணவு சாப்பிடும் திட்டம் இருந்தது. ஹோட்டல் நிருலாஸில்... வெளியே வராந்தாவில்... மிக முக்கிய நபர்களுடனும் ஊடகங்களைச் சேர்ந்தவர்களுடனும் சியாமள் பேசிக்கொண்டிருந்தார். அதற்குள் சென்று சியாமள் பாபுவைப் பார்ப்பதென்பது நாகரீகமாக இருக்காது என்ற விஷயம் சுகந்தாவிற்குத் தெரியும். அவள் மெதுவாகத் தன் ஹேண்ட் பேக்கை எடுத்துத் தோளில் இட்டவாறு எல்லாருக்கும் "பை!'' கூறினாள்.

"ஏய்... சுகந்தா! என்ன இது? நோ!...''

"அனூஜ்... முடியாது. குழந்தை என்னை நினைச்சு அழ ஆரம்பிச்சாச்சு. அவருக்கோ இன்னைக்கு இரவு நிறைய வேலை. ஹ்ம்... ஒருநாள் நீங்க எல்லாரும் சேர்ந்து அங்க வாங்க. காலை உணவுக்கு... நான் பீட்ஸாவும் தாய் ஃபுட்டும் தயாரிக்கிறேன்.''

"ஒருநாள் நாங்க சொல்லாமலே வர்றோம். சர்ப்ரைஸ்... சரியா? குட் நைட்...''

"ஆ... நிதீ... அந்த சியாமள் பாபுகிட்ட சொல்லிடு. அவர் ஆட்களோட கூட்டத்தில இருக்கார். நான் பிறகு ஃபோன் பண்றேன்.''

யாரையும் கவனிக்காமல் வேகமாக காரிடார்களைக் கடந்து சுகந்தா ஸ்ரீராம் சென்டரின் வாசலை அடைந்தாள். வெளியே வந்ததும் அவளிடமிருந்து ஒரு நீண்ட பெருமூச்சு வெளிவந்தது.

கூந்தலை மேலுமொருமுறை ஒதுக்கிக் கட்டுவதற்கு மத்தியில் அவள் பேருந்து நிறுத்தத்தை அடைந்தாள். இருட்டுக்கு அடர்த்தி அதிகமாகிவிட்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக விழுந்துகொண்டிருந்த மழைத்துளிகள் மேற்கூரையாகப் போடப்பட்டிருந்த ஓட்டில் உண்டாக்கிக் கொண்டிருந்த சத்தம்... அது சுகந்தாவிற்கு நாடகத்திற்காகக் கிடைத்த கைத்தட்டல்களின் தொடர்ச்சியாகத் தோன்றியது. ஒருவேளை இயற்கை அவளை மகிழ்ச்சிகொள்ளச் செய்யலாம். இல்லையென்றால் விளையாடுகிறதோ? முகத்தில் நீர் வந்து வீங்கிய பகுதியை அவள் தன்னையே அறியாமல் விரல்களால் வருடினாள்.

"சுகந்தா... கொஞ்ச நாட்களாவே நான் கவனிக்கிறேன். வீட்லயிருந்து வெளியே போறதுக்கு ஒண்ணு இல்லைன்னா இன்னொண்ணுன்னு காரணங்களை நீ உண்டாக்கிட்டு இருக்கே. பாரு... மன்யாவோட ப்ராக்ரஸ் கார்ட். அவள் அஞ்சாவது இடத்தில விழுந்திருக்கா!''

"ஹேய்... என்ன வினய் இது? உங்களுக்குத் தெரியாதது மாதிரி? அவளுக்கு சிற்றம்மை நோய் பாதிச்சிருந்தது.''

"ஆனா... அப்போதும் உன்னோட சுத்தல்களுக்கு ஒரு குறையும் இல்லியே?''

"தயவுசெய்து... இப்போ ஒரு வாக்குவாதத்துக்கு நான் தயாரா இல்ல...''

"நானும் தயாரா இல்ல. இல்ல... என்னோடு வாதம் செய்றதுக்கு நீ யாரு? நேரடியா சொல்றேன். உன் எல்லா நடவடிக்கைகளையும் இப்போ... இங்க நிறுத்திக்கணும்.

குழந்தைகளைப் பார்த்துக்கணும். அதை மட்டும்... கேட்டேல்ல? உன்னோட இந்த விளையாட்டுங்க ரொம்ப அதிகமா இருக்கறது எப்போ தெரியுமா? நான் என்னோட வேலையில மிகவும் தீவிரமா இருக்கற சமயத்தில... போதும்! கொஞ்சகாலம் ஃப்ரெஞ்ச் மொழியைக் கத்துக்கறதா சொல்லித் திரிஞ்சே... அது என்னாச்சு? அந்த காசை வீணாக்கிட்டே... கரியாக்கிட்டே... அதுக்குப்பிறகு... இதோ... வெடிச்சு மலருது அடுத்த பைத்தியக்காரத்தனமான செயல். நாடகம்! அவளோட ஒரு ரிகர்ஸலும் தியேட்டரும்....''

"வினய்... மூடைக் கெடுத்துடாதீங்க. சாயங்காலம் என்னோட முதல் மேடை நிகழ்வு...''

"ஹோ! மூட்... நீயொரு தாயா? பாரு சுகந்தா... அதிக வேலையால நடுக்கம் உண்டாகுது. நடுராத்திரி வேளையிலதான் என்னால திரும்பிவர முடியும். நீ என்ன நினைக்கிறே? ரெண்டு பிள்ளைகளையும் தனியா விட்டுட்டு..?''

"மன்யா பார்த்துக்குவா. க்ரோஸின் ஸிரப் கொடுத்திருக்கேன். அவன் தூங்கிட்டான். மூணு மணிநேர விஷயம்தானே வினய்? பரவாயில்ல...''

"நடக்காது சுகந்தா.''

"ப்ளீஸ்... வினய். சியாமள் பாபுவின் நாடகம்! டிக்கெட்டுங்க முழுசும் வித்துத் தீர்ந்தாச்சு. எனக்கு தான் பிரதான கதாபாத்திரம்! இது எதுவுமே தெரியாம இல்லையே? ஒரு பழிவாங்கற எண்ணத்தில... இறுதி நிமிஷத்தில... சிந்திக்கக்கூட முடியல...''

"ஊர்சுத்திப் பிறவிங்க! அவுத்துப் போட்டுட்டு அலைஞ்சு திரியறதுக்கு ஒவ்வொரு காரணம்..!''

"வினய்... நீங்க எப்பவுமே பிஸி... எட்டுல இருந்து எட்டுவரை அலுவலகத்தில... பிள்ளைங்க பள்ளிக்கூடத்தில... இருந்தாலும் நான் அவங்களை நல்லா பாத்துக்கறேன். அவங்க வர்றப்போ தனியா இருக்கக்கூடாதுங்கறதுக்காக பெரும்பாலும் ரிகர்ஸல் எல்லாம் இங்கதான் நடந்துச்சி. இது எதுவுமே உங்களுக்குத் தெரியாதது இல்லியே?''

"ஓ... ரிகர்ஸல்... பகல் நேரத்தில இங்க... ஓகே. இப்போ இதோ... ராத்திரியிலும்... அதுவும் வெளியில..! சரிதான் சரிதான். இந்த நகரத்துல இரவு வேளையில ஊர் சுத்தறது...'' சற்று மென்மையாகி அவன் தொடர்ந்து கூறினான்:

"சுகந்தா... உன் பாதுகாப்பு... உனக்கில்ல... குறைந்த பட்சம் நானாவது அதை நினைச்சே ஆகணும்...''

"அப்படின்னா... நீங்களும் வாங்க என்கூட...''

அவள் கோபத்துடன் கூறினாள்.

"மனைவியோட தெருக்கூத்தைப் பார்க்கறதுக்கு... அப்படித்தானே? அருமை! சரிதான்...'' அளவற்ற வெறுப்புடன் அவன் வார்த்தைகளைக் கக்கினான்.

ss1

சுகந்தா அமைதியாக அவனைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். தன்னுடைய கழுத்துப் பட்டையைக் கழற்ற முயற்சிப்பதற்கு மத்தியில் அவன் கூறினான்:

"இன்னைக்கு எனக்கு உணவு வேணாம். ஒரு வாடிக்கையாளரோட சேர்ந்து டின்னர் இருக்கு. நீயும் வரவேண்டியது அது...''

"எதுக்கு? இளமையா இருக்கற மனைவிய வாடிக்கையாளருக்கு முன்னால காட்டுறதுக்கா?''

கூறி முடிப்பதற்குமுன்பே... "தேவையில்லாததை உளர்றியா?'' என்று அலறியவாறு அவன் அவளுடைய கைகளைப் பலமாக பிடித்துத் திருகினான்.

அவனைத் தள்ளி விலக்கி, கைகளை சுதந்திரமாக்கிக்கொண்டு சுகந்தா கோபத்துடன் கூறினாள்:

"இது தேவையில்லாததுன்னா, மேடைநாடகத்தை தெருக்கூத்துன்னு சொல்லாம இருக்கவாவது நீங்க கத்துக்கணும்.''

"சரிடீ... உன்கிட்டயிருந்து நான் பல விஷயங்களைக் கத்துக்கறேன். நான் அலுவலகத்தில இருக்கறப்போ, உன்னோட கச்சடா நாடகக்காரர்களை இங்க என் வீட்டுக்கு வரவழைச்சு அவுத்துப்போட்டு ஆட்டம்... ரிகர்ஸலாம்!

நான் அந்த அளவுக்கு குருடன்னு நினைச்சியா?

அவளோட ஒரு சியாமளன்... பெங்கா- பாபு...

அவனோட மனைவி... அந்த பெண்ணியவாதி... முழு நேரமும் தொலைக்காட்சியில உட்கார்ந்து கூப்பாடு போடுறதைக் கேட்கலாம். கணவன் இங்க என் வீட்ல... என் மனைவியோட...''

"வினய்! கொஞ்சம் மரியாதையா பேசுங்க. உங்களோட மகள் கேட்டுக்கிட்டிருக்காங்கறதை நினைச்சாவது வாய்வழியா மலம்கழிக்காம இருங்க. ஹோ... நான் போறேன்...''

"ஓ! நீ போறியா? அந்த அளவுக்கு ஆயிட்டியா? பார்க்கறேன்!'' அவன் அவளைச் சிறிதும் எதிர்பாராமல் படுக்கையின்மீது தள்ளி விழச்செய்தான். ஆனால் அவள் வேகமாக எழுந்தாள். ஒரே தாவலில் தன் பையை எடுத்துத் தோளிலிட்டு அவனைப் பார்த்து உரத்த குரலில் கூறினாள்:

"நான் போவேன். தடுக்கறதா இருந்தா தடுங்க.''

கட்டுப்பாட்டை இழந்த வினய் அவளுடைய முகத்தில் முஷ்டியைச் சுருட்டிக் குத்தினான். திருமண மோதிரத்தால் சிறிய காயத்தை இடது கண்ணுக்குக் கீழே உண்டாக்கினான். நொடி நேரத்தில் அங்கு ரத்தம் கட்டி, வீங்கியது. இடது கண்ணை மூடியவாறு அவள் மின்னலைப்போல படிகளில் இறங்கி வெளியேறினாள். கேட்டைத் திறக்கும் அவளை சாளரத்தின் வழியாகப் பார்த்துக்கொண்டே அவன் சத்தமான குரலில் கூறினான்:

"அந்த அளவுக்கு திமிர் பிடிச்சிருச்சு. இல்லையா? ஞாபகத்துல வச்சுக்கோ. இனி திரும்ப வரக்கூடாது!''

".......''

"திரும்ப இங்க வர்றதுக்கு நீ முயற்சிக்கக் கூடாது.''

சுகந்தா ஒரு வாடகைக் காரைப் பிடித்து மெட்ரோ ஸ்டேஷனுக்குச் சென்றாள். போய்ச் சேரவேண்டிய நேரத்திற்கு மிகவும் முன்பே அவள் அரங்கத்திற்குச் சென்றுவிட்டாள்.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை வினய் உண்டாக்காமல் இருந்திருந்தால், குழந்தைகளுக்கு உணவளித்து சாப்பிடச் செய்து, நன்னுவை ஸிரப் கொடுத்து உறங்கச்செய்து மன அமைதியுடன் அவளால் வந்திருக்க முடியும். எப்போதும் வரக்கூடிய பணிப்பெண் வந்து உணவு வைப்பாள். ஆனால், குழந்தைகள் டி.வி.யைதான் பார்த்துக் கொண்டிருப்பார்கள். சரியாக சாப்பிடமாட்டார்கள். இதுவொரு சாதாரண நாளாக இருந்திருந்தால், சுகந்தா அவர்களுக்கு பிட்ஸாவையோ பர்கரையோ உண்டாக்கிக் கொடுத்திருப்பாள்.

இவையனைத்தையும் நினைத்துக்கொண்டேதான் அவள் மேடைக்கருகில் சென்றாள்.

சியாமள் பாபு விளக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மூழ்கியிருந்தார். மேடையமைப்பு முற்றிலும் நவீன தொழில்நுட்ப விஷயங்களுக்கு வழிமாறிவிட்டிருந்தது. பாரம்பரியமான திரைச்சீலைகள் மாறி, இப்போது டிஜிட்டல் திரைகள் இருந்தன. இது செலவைக் குறைத்து, அழகை மிகவும் அதிகரித்துக் காட்டியது. குருகுலத்தின் புலர்காலைப் பொழுதை மேடையில் பார்க்கும்போது, உண்மையல்ல என்று தோன்றவில்லை. காற்றில் ஆடக் கூடிய மரங்களும் ஆசிரமும் அங்கேயே வந்துவிட்டதைப் போன்ற தோற்றம்! மந்திர உச்சரிப்புகளும் கிளிகளின் சத்தமும் இருந்தன. சவுண்ட் எஃபெக்ட்களும் முற்றிலும் மாறியிருந்தன. ஒரு மூலையில் யாக குண்டம்! அதிலிருந்து உயரக்கூடிய நெருப்பு ஜுவாலைகளாக ஆரஞ்சு நிறத்திலிருந்த திரைச்சீலைகள்... இன்னொரு பக்கத்தில்... அதோ... மகா வாத- விவாதத்தில் வெற்றிபெறுபவருக்காக ஜனக மன்னர் ஏற்பாடு செய்துவைத்திருக்கும் பரிசுப் பொருளான ஆயிரம் பசுக்களின் நிழல்கள் அமைக்கப்பட்டிருந்தன.

அத்துடன் முடியவில்லை. அவற்றின் பிரதிநிதியாக ஒரு உண்மையான பசுவையே நிறுத்தியிருந்தார்கள். இந்த ஒரு நாடகத்திற்காக செலுத்தப்பட்ட உழைப்பு சாதாரணமானதல்ல. மிகவும் சிரமமானது! வெளியிலிருந்து பார்ப்பவர்கள் மனதில் நினைப்பதற்கும் அப்பாலிருந்தன இந்த கடுமையான முயற்சிகள்! ஹோ!

சுகந்தா முற்றிலும் ஒரு ஆச்சரியத்துடன், செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளைப் பார்த்தாள். அவை அவளுடைய மனதிலிருந்த கவலையைத் துடைத்து மாற்றின.

சியாமள் தனித்துவ குணங்கள்கொண்ட மனிதர். தன்னுடைய புகழ் அனைத்தையும் மூடிமறைத்துக் கொண்டுதான் அனைவருடனும் பழகுவார். அருகில் நின்றுகொண்டிருக்கும் மனிதர்களிடம் அவரின் இருப்பு உற்சாகத்தை உண்டாக்கும்.

எட்டு மாதங்களுக்குமுன்பு சுகந்தாவின் அண்ணன் அனுராக்தான் சியாமளை அவளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான். அவர்கள் கல்லூரி நண்பர்கள். அன்று சியாமள் பாபுவின் ஒரு புகழ்பெற்ற நாடகத்தின் நூறாவது மேடையேற்றம். வாரக்கணக்கில் சுகந்தாவுக்குள் அந்த நாடகத்தைப் பற்றிய நினைவுகள் தங்கி நின்றிருந்தன. அன்று அந்த மிகப்பெரிய புகழ்கொண்ட மனிதருடன் இணைந்து ஒருநாள் தான் பணியாற்றுவோமென்று அவளுடைய மிகவும் தூரத்துக் கனவில்கூட அவள் நினைத்த தில்லை. ஒருநாள் வெறுமனே இருந்த நேரத்தில் தோன்றிய ஒரு சிறிய சலனமது. சுகந்தா சியாமளுக்கு ஃபோன் செய்தாள்.

"உங்களுடைய நாடகத்தில ஒரு கதாபாத்திரம் கிடைச்சா நடிக்கிறேன் சியாமள்ஜி. ஒரு மரத்தோட... ஒரு செடியோட கதாபாத்திரம் கிடைச்சாலும் சரிதான். நான் தயார்!''

"அப்படியா? அதுக்குக்கூட வரிசையில ஆள் இருக்கே... அனுவின் தங்கையே! திரைச்சீலைய உயர்த்தறதுக்கும் இறக்கறதுக்கும் ஒரு ஆள் தேவைப்படுது. பார்க்கறியா?''

"போதும்... சியாமள் பாபுவோட குழுவுல இருக்கேன்னு என்னால சொல்லமுடியணும். இப்போதைக்கு அவ்வளவுதான் வேணும்...''

"சரி... நீ எதுவரை படிச்சிருக்கே?''

"எம்.எஸ்ஸி தாவரவியல்...''

"என்னைக் கொல்லு.''

"ஏன்?''

"கடவுளே! இந்தக் கலைன்னு சொல்லப்படுற விஷயம் இருக்கே! அதனோட ஏதாவது தொடர்பு?''

"இல்ல...''

"நாடகம் ஏதாவது வாசிச்சிருக்கியா?''

"இல்ல....''

"பார்த்திருக்கியா?''

"இல்ல... அய்யோ! பார்த்திருக்கேன்... பள்ளிக்கூடத்தில படிக்கிறப்போ...''

"சரி... சுகந்தா... நீ கார்கியைப் பத்தி கேள்விப்பட்டிருக்கியா?''

"எந்த கார்கி?''

"புராணத்தில வர்ற கார்கி...''

"ஆ... ஓ... கொஞ்சம்... சமஸ்கிருதத்திலோ வேற எதிலோ ஒரு பாடத்தைப் படிக்கிறப்போ...''

"வலைத்தளத்தில பாரு. பார்த்துப் படி. ஸ்கிரிப்ட் வேலைய ஆரம்பிக்கறப்ப என்கூட சேர்த்துக்கறேன்.''

"என் கதாபாத்திரம் சம்பந்தப்பட்ட விஷயம்... ஸ்கிரிப்ட்... பிறகு..''

"மேடை விஷயம். பிறகு... முதல்ல மேடைக்குப் பின்னால வேலை செய்... படி...''

"அப்படின்னா... அதுவே நடக்கட்டும்.''

ஸ்க்ரிப்ட் பணி... இரண்டுமாத காலம் கார்கிக்குள் சுகந்தா மூழ்கிவிட்டிருந்தாள். சியாமள் அவளுக்கு விலைமதிப்பற்ற வழிகாட்டியாக இருந்தார். நாட்கள் செல்லச்செல்ல கார்கி தனக்குள் ஆவேசமாக நுழைவதைப்போல அவள் உணர்ந்தாள். சியாமளின் மனைவி அனாமா அந்த சமயத்தில் ஒரு தொலைக்காட்சித் தொடருக்கு உதவியாளராக ஆரம்பித்தாள். பணமும் புகழும் சற்று குறைவாகக் கிடைக்கக்கூடிய தன் கணவரின் லட்சியப் படைப்பான கார்கியைவிட, தொலைக்காட்சியில் வரும் அந்த ஜனரஞ்சகத் தொடரே நல்லது என்று அவளுக்குத் தோன்றியிருக்க வேண்டும்! அந்தச் சூழ்நிலையில் சிறிதும் எதிர்பாராமல், சுகந்தாவிற்குள் கார்கி இருக்கிறாளோ என்றவொரு சிந்தனை சியாமள் பாபுவுக்கு உண்டானது. இறங்கிக் கிடக்கும் கூந்தல், அகலமான நெற்றி, நாடியின் கீழ்ப்பகுதிக்கு மத்தியில் இருக்கும் அழகான சிறிய பள்ளம், யாருக்கும் எளிதில் கீழ்ப்படியமாட்டேன் என்று உரத்த குரலில் கூறுவதைப்போன்ற நீண்ட நாசி, பெரிய... துடிக்காத இமைகளைக்கொண்ட கண்கள், சரியான உயரமும் அதற்கேற்ற சரீரமும்- அத்துடன் கனமான... உறுதியான குரலும்!

மேடையில் ஒரு தூணாகவாவது இருந்தால் போதுமென்று வந்த அவள் பிரதான கதாபாத்திரத்தில்!

"கார்கி? நான்..? சியாமள் தா... இல்லை... என்ன வச்சு...''

"முடியும்... உன்னை வச்சு செய்யமுடியும்...''

அந்த வார்த்தைகளிலிருந்த உறுதி மட்டும் போதும்... சுகந்தாவுக்கு கார்கிக்குள் புகுந்து விளையாடுவதற்கு...

உரையாடல்களை மனப்பாடமாக்கிக் கொள்வதுதான் சுகந்தாவின் முதல் தவமாக இருந்தது.

"ஆச்சார்ய யாஞ்ஞவல்கியரே... கூறுங்கள்... எதையும் இணைக்கக்கூடியது நீர் என்றால், நீரை எது இணைக்கச் செய்கிறது?'

"அப்படியென்றால் கூறுங்கள். பிரம்மத்தின் தனிப்பட்ட சிறப்புகள் என்ன?'

குளியலறையில் சரீரம் முழுவதையும் சோப்பு நுரையில் மூழ்கச்செய்து ஷவருக்கு அடியில் நின்றுகொண்டு அவள் கூறுவாள்: "சரி... நான் ஒரு காரியத்தைச் செய்கிறேன். என்னுடைய இந்த இளமையான உடலை ஒரு துணியால் மூடிப் புதைத்துக்கொள்கிறேன். அதுவும் போதாதென்றால், இந்த யக்ஞ குண்டத்திலிருந்து சாம்பலை எடுத்துத் தேய்த்து முகத்தை அவலட்சணமாக்கிக் கொள்கிறேன். பெண் என்று நீ நினைத்துக்கொண்டிருப்பது இந்த சரீரத்தைதானே? இல்லையா அன்பிற்குரியவனே..? இதைக் கேள். தந்தையிடமும் சென்று கூறு. எனக்குள் இருக்கும் அறிவோ திறமையோ பிரகாசிப்பதற்கு இந்த சரீரம் ஒரு தடையாகவே இல்லை என்பதை...

அதற்கு இவள் எந்தக் காலத்திலும் சம்மதிக்கமாட்டாள் என்பதைப் போய்க் கூறு...'

கடந்த சில மாதங்களாகவே சுகந்தா இப்படிப்பட்ட ஒரு பிரம்ம உலகத்தில் வாழ்ந்துகொண்டிருந்தாள். இன்றுதான் அவள் பூமியைத் தொடும் நாள்!

"இதுதான் என் கார்கி! ஞானி ஜனகரின் சபையிலிருக்கும் நவரத்தினங்களுள் ஒருத்தி...''

"சியாமள் தா... கார்கியைப் பத்தி எனக்கு இப்பவும் சில விஷயங்கள்...''

நேற்று நடைபெற்ற இறுதி ரிகர்ஸலுக்கு மத்தியில் இது...

"கேளு சுகந்தா. மேடையில கார்கியா ஏறுறப்போ உனக்குள்ள எந்தவொரு சந்தேகமும் இருக்கக்கூடாது. கேளு...''

"சியாமள்தா... நம் நாடகத்தில கார்கிக்கு ஒரு எதிர்கால மணமகன் இருக்கான் இல்லியா? அவனோட தந்தை மகரிஷி வாசாக்னுவோட சீடர்... மற்ற எட்டு பேரோட சேர்ந்து கார்கி மகா வாத- எதிர்வாதத்தில யாஞ்ஞவல்கியரோட சொற்போர் புரியறதுக்கு எதிரா செயல்பட்ட அந்த மனிதர்... இதுக்கு ஏதாவது சித்தாந்தத்தோட பின்புலம் இருக்கா? கார்கி பிரம்மச்சாரிணியா வாழ்ந்திருப்பதற்கான சாத்தியம்தான் இருக்குன்னு ஒரு வாதத்தை இணையதளத்தில பார்த்தேன். ஆனா...

ஒரு கூட்டத்தைச் சேர்ந்தவங்க சொல்றாங்க...

யாஞ்ஞவல்கியரோட மனைவியா கார்கி ஆகிட்டாள்னு. ஆனா நம்ம நாடகத்தில உங்களோட கார்கியைப் பாருங்க... தன்னோட இளம் வயதிலிருந்து சேர்ந்து விளையாடிக்கிடிருந்த ஒரு இளைஞனோட திருமணம் நிச்சயிக்கப்பட்டவள் அவள்னு... அவனோ இப்படிப்பட்ட ஒரு சொற்போர் நடைபெறுகிற அவையில கார்கி கேள்விகள் கேட்கக்கூடாதுன்னு சொல்லக்கூடியவங்க பக்கத்தில... சியாமள்தா... இதுல எது உண்மை? நான் நாளை கார்கியாகப் போறவ. எது உண்மையான கார்கி? இது நீங்க சொந்தமா படைச்ச கார்கியா? திருமண நிச்சயதார்த்தமானவள்? இல்லன்னா... ஏதாவது புராண அடித்தளம் அதுக்கு இருக்கா? சொல்லுங்க....''

"எது எப்படியிருந்தா என்ன? சுகந்தா... பாரு... காதல், போர், எழுத்து- இந்த மூணு விஷயங்கள்ல எதுவும் நடக்கும்... எதுவும்..! செய்யக்கூடாததுன்னு எதுவுமே இல்லை. கார்கிங்கற இந்த புரட்சிப் பேரழகியை எடுக்கும்போது, அதேபோல மேடையில படைச்சா அந்த புகழ்பெற்ற பெண்ணுக்குச் செய்யக்கூடிய அவமரியாதை இல்லியா? யார் அவள்? கேள்வி கேட்டவள்! அதுவும் அந்தக் காலத்தில! நேரம், காலம் என்பவை உண்மையா இருந்தா, அதுக்கான அடித்தளம்- அதாவது அதை ஒண்ணோட ஒண்ணா இணைச்சிருக்கக்கூடிய சட்டம் எதுன்னு கேட்டு அதிரச் செய்தவள்! "பிரபஞ்சத்தில்' என்ற பதில்ல திருப்தியடையாதவள்! அப்படின்னா... பிரபஞ்சம் எங்கு இணைக்கப்பட்டிருக்குங்கறதை ஆராய்பவள்! அதுக்கெல்லாம் யாஞ்ஞவல்கியர் கொடுத்த பதில்கள் என்னைப் பொருத்தவரையில தலையும் வாலுமில்லாத முட்டாள்தனமானவை.''

"ஏன் சியாமள்தா?''

"அவரோடையது ஒரு குழப்பமான பதில் இல்லியா? இதுக்கெல்லாம் பின்னால... அழிவில்லாத... நிரந்தரமான உணர்வுன்னெல்லாம்... அதுவில்ல. தன் பக்கம் சரியான பதில் இல்லங்கற புரிதல் உண்டானபிறகு, யாஞ்ஞவல்கியர் கார்கியைப் பார்த்து கோபிச்சாரு. இவையெல்லாம் பின்னால சேர்க்கப்பட்டவையா இருக்கலாம். தெரியுதா?

அதேமாதிரி... ஒருவேளை பெரும்பாலானவை அவளோட பதில்களா இருக்கலாம். அது யாஞ்ஞவல்கியர் கூறியதுன்னு பரப்பப்பட்டும் இருக்கலாம். பாரு சுகந்தா... தெரியுமில்லியா? இதுவொரு ஆண்களோட உலகம். "பிராமணனான ஆண் சிங்கத்துக்கே இதுக்கெல்லாம் பதில்சொல்ல முடியும்'னெல்லாம் கருத்தை வேணும்னே உண்டாக்கவேண்டியது அப்போதைய தேவையா இருந்திருக்கலாம். அதுக்காக... கார்கிகூட கீழ்ப்படிஞ்சிருக்கலாம். ஞானியான ஒரு ஆச்சாரியர் பதிலில்லாம கேலியா பார்க்கப்படுறதை கார்கி விரும்பாமலும் இருந்திருக்கலாம். அவளுக்கு முக்கியம்... பதில்கள் என்பதிலதானா? எங்கிருந்து அவை வந்தன என்பதுல இல்லியா? புகழ்பெற்ற ஆச்சாரியரான யாஞ்ஞவல்கியர் அதே பெருமையோட ஆயிரம் பசுக்களோட திரும்பிச் செல்லட்டும்னு கார்கி கருதியிருக்கவும் செய்யலாம். அவர் ஒரு பிரம்மரிஷி இல்லியா? அந்த பரிசுக்குத் தகுதி கொண்டவரும்கூட... இந்த காரணங்களால... பெண்ணுங்கற இருப்பை கேள்வி கேட்டவங்களுக்கு எதிரா கார்கி அமைதியாக இருந்திருக்கலாம். ஆனா, நானில்ல... என் கார்கி...

அந்த பெண் வாதத்தை சத்தமாகக் கேட்பாள். எது வந்தாலும்... இது கெட்டகாலம் சுகந்தா. வரையறைங்க இருக்கு. கார்கியை நாம அதிகமா படைச்சா... நிகழ்ச்சி முடிஞ்சபிறகு ஆளுங்க தியேட்டரை எரிச்சிடக்கூடாதே!''

"உண்மை சியாமள்தா.''

"நம்மோட பாரம்பரியம் செழிப்பானது. மறுக்கறதுக்கில்ல. ஆனா, விஷயங்களெல்லாம் உண்மையானவையா வெளியே வரல. அதனால, நாம செயலற்றவங்களாகிட்டோம். பிராமண ஆதிக்கம் அதுல பலதையும் பெரிய அளவுல மறைச் சிட்டது. அவங்களுக்கு வேண்டியமாதிரி வளைச்சு ஒடிச்சிட்டாங்க. எதுக்கு? சிம்பிள்..! அவங்களோட பரம அதிகாரத்தைக் காப்பாத்தறதுக்கு!''

சியாமளின் வேறுபட்ட உணர்வை சுகந்தாவால் புரிந்துகொள்ள முடிகிறது என்பது தெரிந்ததும், அவர் திடீரென கூறினார்: "ஆ... சுகந்தா... உரையாடல் எல்லாத்தையும் நன்றாக மனப்பாடம் பண்ணிட்டேல்ல? நாளைதான் நம்மோட நாள்...''

"சரி... தா...''

"ஹ்ம்... உணர்ச்சிங்களை நாடகத்தனமா ஆக்கணும். அத்தோட கூர்மையும்... அதுதான் புராண காலத்தோட அடையாளம். நாம இந்த பகல் வெளிச்சத்தில மட்டும்தானே ரிகர்ஸல் பண்ணிப் பார்த்திருக்கோம்! மேடைவிளக்கு ஒரு பிரச்சினை... அதன் வெப்பமும் வெளிச்சமும்... சிறிய ஒரு குழப்பநிலை தோணும். ஆனா கண்டுக்க வேணாம். ஞாபகத்தில வச்சுக்கோ... உன்னோட தெளிவான உச்சரிப்புதான் உன்னோட துருப்புச் சீட்டு. தைரியமா முன்னேறிப்போ...

நாளை...''

இறுக்கமான மார்புக் கச்சை, தொப்புளுக்குக் கீழே சுற்றிய புடவை... வேதகால ஆடை... பொன் நிறத்திலிருந்த மேலாடை சுகந்தாவுக்குப் பெரிய அளவில் ஒரு நிம்மதியைத் தந்தது. ஆடைகளின் தோற்றப் பொலிவிலும் ஆழமான கவனத்தைச் செலுத்தக்கூடியவர் சியாமள் பாபு. அவர் ஒப்பனையறைக்கு வந்தபோது, சுகந்தா கூந்தலை வாரிக்கொண்டிருந்தாள்.

"நிதீ... முதல் காட்சியில கூந்தல் இப்படி தொங்கிப் பறந்து... கார்கி தனியா வாழறதுக்கு உறுதிமொழி எடுக்குற ரெண்டாவது, மூணாவது காட்சிகள்ல தலைமுடி ஒரு தடையா இருக்கக்கூடாது. உருண்டையா சுருட்டி மேல்நோக்கி... அதேதான். பிறகு இந்த பொன்நிற துப்பட்டா இல்ல. அப்போ வெள்ளை. ஞாபகத்தில இருக்கில்லியா? நெத்தியியில இருக்கற மூணு கோடுங்க கொஞ்சமும் மங்கலாகிடக் கூடாது- உச்சக்கட்ட காட்சி வரைக்கும்! பிறகு... ஸிம்பிள் ஒப்பனை. உதட்டுச் சாயம் பூசியதாவே தெரியக்கூடாது. கண்கள்ல ஆழம் இருக்கறதை உணரணும்.''

நடந்து இங்குவந்து சேர்வதற்கு முன்னால் இவையனைத்தையும் கூறி முடித்த சியாமள், சுகந்தாவுக்கு முன்னால் வந்து முகத்தைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்து விட்டார்: "சுகந்தா... இது... என்ன நடந்துச்சு? கீறல்... ரத்தம்...ஹேய்... நேத்து இல்லாத...''

"சியாமள்தா... நான் கொஞ்சம் பாத்ரூமில் வழுக்கி விழுந்துட்டேன்...''

அவளுடைய உள்ளுக்குள்ளிருந்து அடக்கி வைக்கப் பட்ட வார்த்தைகள் எப்படியோ வெளிவந்தன.

சியாமள் உடனடியாக ஆச்சாரியப்படும் வகையில் அமைதியானவராகி விட்டார். ஆனால், அந்த கண்கள் இவ்வாறு கூறின: "சுகந்தா... நான் நாடக உலகத்திற்கு வந்து பதினைந்து வருடங்களாகி விட்டன. இந்த மாதிரியான விளக்கங்களை எவ்வளவோ முறை கேட்டிருக்கிறேன்! வருடா வருடம் எத்தனையோ கார்கிகள்...

அம்ரபாலிகள்...

வாசவதத்தைகள்...

வசந்தசேனைகள்...

தேவயானிகள்...

சர்மிஷ்டைகள்...

இவர்கள் எல்லாருமே முகத்தில் இந்த எதிர்ப்பை வெளிப்படுத்தும் அடையாளத்துடன்தான் மேடையில் நடித்திருக்கிறார்கள். சொல்லக்கூடிய காரணங்களும் ஒரே மாதிரி:

"குளியலறையில வழுக்கி விழுந்துட்டேன்... குழந்தை விளையாட்டு பொம்மையால் அறியாம அடிச்சிடுச்சு... பேருந்து- வாடகைக் கார் கதவு முகத்தில அடிச்சிடுச்சு... நீ முதல் நபரல்ல சுகந்தா.'

ஆனால்... வெளியே கூறியது இதுதான்: "பரவாயில்ல சுகந்தா. நிதீ... கொஞ்சம் பனிக்கட்டிய அழுத்தி வச்சா... ரத்தக்கட்டு இறங்கிடும். பிறகு கன்ஸீலர் தடவு. பிறகு, ஃபவுண்டேஷனை கொஞ்சம் அடர்த்தியா போடு. சரியாகிடும். பரவாயில்ல... சீக்கிரமா நடக்கட்டும்... நேரமாகுது.''

அத்துடன் சுகந்தா சாதாரண நிலைக்கு வந்தாள். ஒப்பனைக்குப்பிறகு தனியாக இருந்தபோது, உரையாடல்களை மீண்டும் மறந்துவிட்டதைப்போல அவளுக்குத் தோன்றியது. தாளை எடுத்து அவற்றை மீண்டுமொரு முறை வாசித்தாள். வெள்ளையில் அந்த கறுத்த எழுத்துகள்! சிறிய அந்த எழுத்துகளுக்கான அர்த்தங்கள் அவற்றைவிட மிகவும் பெரிதாகி பெரிதாகி...

ஆ... எது வேண்டுமானாலும் நடக்கட்டும்! அனைத் தும் முடிந்தன. நாடகம் வெற்றிபெற்றுவிட்டதே!

பேருந்துகள் எதுவும் வரவில்லை. ஆட்கள் வாடகைக் கார்களை அழைத்து, போய்க்கொண்டி ருந்தார்கள். அவளும் ஒரு வாடகைக் காரை கையைக் காட்டி நிறுத்தினாள்.

"எங்க போகணும் மேம்?''

மேலேயிருக்கும் சாளரத்திலிருந்து ஒரு சரளைக் கல் பாய்ந்துவந்து முதுகில் விழுந்ததைப்போல அந்த வார்த்தைகள்...

"இந்த வீட்டுக்கு இனிமே திரும்ப வரக்கூடாது. என் வீடு அவுத்துப்போட்டு ஆடுறவுங்களுக்கானது இல்ல. எந்தக் காலத்திலும் திரும்ப வரக்கூடாது...'

"மேம்... என்ன ஒரு மழை! எங்க போகணும்?''

எங்கு?

"கார்கீ... இந்த அவையிலிருந்தும் குருகுலத்திலிருந்தும் வெளியே செல்! இந்த மேடைக்கும் தியேட்டருக்கும் அப்பால் உனக்கொரு வீடும் இருக்கிறது. அங்கு உன்னுடைய பிள்ளைகள் இருக்கிறார்கள். உன் கணவனும் இருக்கிறான்.

அவன் இன்று வெளியே சாப்பிடுகிறான். பணிப்பெண் உணவைத் தயாரித்து வைத்துவிட்டுச் சென்றிருப்பாள். ஆனால் குழந்தைகள் டி.வியைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். சாப்பிட்டிருக்க மாட்டார்கள். மன்யா வீட்டுப் பாடத்தைப் பாதி செய்துவிட்டு நிறுத்திவிடுவாள். நன்னுவுக்கு காய்ச்சல் இருக்கும். முட்டாளே... இவற்றையெல்லாம் மறந்து விட்டா உன்னுடைய இந்த...'

"மேம்... எங்க போகணும்? சொல்லுங்க...''

"என்ன? வீடு... வீடு இல்லாம வேற எங்க..?''

"எந்தப் பகுதியில? வீடுகளுக்கு முகவரி இருக்கும்ல மேம்?''

"ஓ! ஆமா...''

சுகந்தா மழையிலிருந்து உடனடியாக டாக்ஸிக்குள் ஏறினாள். தலையைப் பின்னோக்கி சாய்த்தவாறு அமர்ந்தாள். வெளியே மழை அதிகமானது. கண்களிலும் மழை... அவள் கைக்குட்டையை எடுத்து கண்களில் ஒற்றினாள்.

அவளுடைய இதயம் முணுமுணுத்தது: "என் முகவரி... அது என்னுடைய தொப்புள் கொடிக்கும் கர்ப்பப் பாத்திரத்திற்குமிடையே எங்கோ சிக்கித் தொங்கிக்கொண்டிருக்கிறது. அறிவு ஆகாயத்தை முத்தமிட ஏங்குகிறது. கர்ப்பப் பாத்திரம் பூமியில் வேர்களை ஆழமாக ஊன்றி நிற்க... ஆனால் இருக்கிறது... எனக்கும் இருக்கிறது ஒரு முகவரி...

இதோ... அனைவரும் கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள். நான் கார்கி..? யாஞ்ஞவல்கியர்... நான் அகல்யா? கவுதம முனிவர்... நான் பன்வரீதேவி... இல்லாவிட்டால் ரூப் கன்வார்? சரீர புனிதத்திற்காகப் போராடும் முரட்டு மனிதர்கள்... நான் பப்பில் கொல்லப்பட்ட இளம்பெண்? சிவஸேனா... நான் நஸ்ஹீன் ஃபர்ஹாதி? டெஹ்ரான் சிறை... நான் சாட்டை வாரின் அடிகளை வாங்கிய இளம்பெண்? ஸ்வாத் பள்ளத்தாக்கு..!''

uday010122
இதையும் படியுங்கள்
Subscribe