செப்டம்பர் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் உலகக் கவிஞர்கள் மாநாட்டினை அங்கோர் தமிழ்ச் சங்கம் மிகச் சிறப்பாக நடத்தியது. இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், வளைகுடா நாடுகள், பிரான்சு, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளிலிருந்து கவிஞர்கள், எழுத்தாளர்கள், பல்வேறு தமிழ் அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கம்போடியாவின் பாரம்பரிய அப்சரஸ் வரவேற்பு நடனத்துடன் முதல்நாள் விழா தொடங்கியது. தொடக்க உரையாற்றிய பத்மஸ்ரீ மனோகரன், மறைமலை இலக்குவனார், சிங்கை முஸ்தபா, இலங்கை முரளிதரன், தமிழகத்தைச் சார்ந்த கா.ந.கல்யாணசுந்தரம், வணங்காமுடி, மலேசிய கவிஞர் இராசேந்திரன், இந்திரா ஜவஹர், கண்மணி குணசேகரன் ஆகியோர் அங்கோர் தமிழ்ச்சங்கத்துக்கும் கம்போடிய அரசுக்கும் வாழ்த்துக்கூறினார்கள்.

ln

அங்கோர் தமிழ்ச்சங்கத்தின் இந்த மாபெரும் அரங்கில் தமிழில் தன்முனைக் கவிதைகள் எனும் புதிய வடிவத்துக்கு சிறந்த அங்கீகாரமாக கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் தொகுத்து ஓவியா பதிப்பக வெளியீடான - 52 கவிஞர்களின் தொகுப்பு நூலான "வானம் தொடும் வண்ணத்துப் பூச்சிகள்' நூலை கம்போடியா நாட்டின் கலை மற்றும் பண்பாட்டுத்துறை இயக்குனர் திரு.மோர்ன் செபீப் (சொக்கையா) வெளியிட்டார். நூலினை மலேசிய எழுத்தாளர் சங்கத் தலைவர் இராசேந்திரன் பெற்றுக்கொள்ள, பாடலாசிரியர் கவிஞர் விவேகா முன்னிலை வகித்தார். மேலும் தன்முனைக் குழுமத்தைச் சேர்ந்த கவிஞர்கள் சுமதிசங்கர், அன்புச்செல்வி சுப்புராஜூ, முனைவர் தர்மாம்பாள் ஆகியோர் உடனிருந்தனர். கவிஞர்களுக்கு கம்போடியா அரசின் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் அவர்களது தமிழ்ச்சேவையைப் பாராட்டி சர்வதேச இளங்கோவடிகள் விருது வழங்கப்பட்டது.

Advertisment

விழா மேடையில் நக்கீரன் குழுமத்தின் "இனிய உதயம்' இதழின் இணை ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடன் ஐயா அவர்களின் தன்முனைக் கவிதைகள் நூலுக்கு தந்த வாழ்த்துரைக்கும் , கவிஞர் சாந்தா தத் , கவிஞர் வதிலை பிரபா மற்றும் அங்கோர் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் வாழ்த்துரைகளுக்கும், தொகுப்பில் உதவியாய் இருந்த கவிஞர்கள் சாரதா க.சந்தோஷ், அனுராஜ், அன்புச்செல்வி சுப்புராஜூ, இளவல் ஹரிஹரன் மற்றும் ஜென்ஸி ஆகியோருக்கும் நன்றி கூறினார் கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம்.

விழா மேடையில் அங்கோர் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் தலைவர் சீனிவாச ராவ், செயலர் ஞானசேகரன் மற்றும் துணைத்தலைவர் ரமேஷ்வரன், பன்னாட்டுத் தமிழர் நடுவத்தின் தலைவர் சித்தர் திருத்தணிகாசலம் ஆகியோருக்கு, உலகத் தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம் மற்றும் தன்முனைக் கவிதைகள் குழுமத் தலைவர் கவிச்சுடர் கா.ந. கல்யாணசுந்தரம் வாழ்த்துமடல் வழங்கி சிறப்பு செய்தார்.

kk

Advertisment

கவியரங்கில் தமிழகத்தைச் சேர்ந்த 30 கவிஞர்கள் கவிதைகள் வாசித்தனர். இரண்டாம் நாள் கருத்தரங்கில் கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம் தலைமையில் தமிழ் கூறும் நல்லுலகின் இலக்கியத் தடம் எனும் கருத்துமழை பொழிந்தது. இதில் பக்தி இலக்கியத் தடம் குறித்து கவிஞர் காந்திதாசன், மரபு இலக்கியத் தடம் குறித்து பாவலர் கருமலைத்தமிழாழன், இலக்கியத்தில் புதுக்கவிதைகள் தடம் குறித்து பேராசிரியர் மறைமலை இலக்குவனார், தமிழ் இலக்கியத்தடத்தில் ஹைக்கூ மற்றும் தன்முனைக் கவிதைகள் குறித்து கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம், தற்கால கவிதைகளின் இலக்கியத்தடம் என பொதுவில் கவிஞர் ஓசூர் மணிமேகலை, பகுத்தறிவு இலக்கியத்தடம் என கவிஞர் வணங்காமுடி அவர்களும் மிகச்சிறப்பாக தங்களது கருத்துக்களை மழையெனப் பொழிந்தார்கள். அரங்கமே கைத்தட்டி மகிழ்ந்தது. இதேபோல் ஈழத்துக் கவிஞர்கள் மற்றும் மலேசியக் கவிஞர்களுக்கு கவியரங்க மேடை அமைத்துக் கொடுத்த பெருமை அங்கோர் தமிழ்ச்சங்க அமைப்பைச் சேரும்.

விழா அரங்கில் தமிழகத்துப் பாடலாசிரியர் விவேகா சிறப்புரையாற் றினார்கள். மேலும் பாடலாசிரியர்கள் அஸ்மின், இந்துமதி, பாமினி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

விழா அரங்கில் பெங்களூருவைச் சேர்ந்த இந்திரா ஜவஹர் சிறப்பாக திரைஇசைப்பாடல்களைப் பாடி அசத்தினார். இதேபோல் சென்னை கவிஞர் காலாவதி குலசேகரன் சிறப்பாக தமிழிசைப் பாடல்கள் பாடி கைத்தட்டல்கள் பெற்றார். விழாவில் உலகத்தமிழ் கவிஞர்கள் மாநாட்டு சிறப்பு பாடலை கவிஞர் யுவன் எழுதி இசையமைத்தது வெளியிடப்பட்டது. இலங்கைக் கவிஞர்கள் வன்னியூர் செந்தூரன், யோ புரட்சி ஆகியோர் உரை சிறப்பாக இருந்தது. ஆஸ்திரேலியாவிலிருந்து வந்து சிறப்பு சொற் பொழிவு நடத்தினார் சைவப் புலவர் சிவஸ்ரீ பால. இந்திர குருக்கள். பல கவிஞர்களது நூல்களும் மேடையில் அறிமுகம் செய்யப்பட்டது சிறப்பு.

தமிழகத்திலிருந்து கவிஞர்கள் வ.உ.சி பெயரன் முத்துக்குமார சாமி, மறைமலை இலக்குவனார், பெருங்கவிக்கோ வ.மு.சேதுராமன், கவிச்சுடர் கா.ந.கல்யாணசுந்தரம், கருமலைத் தமிழாழன், அரங்க சுப்பிரமணியன், எஸ்.கிருஷ்ணன், திருவாரூர் இராஜகோபாலன், வணங்காமுடி, ஓசூர் மணிமேகலை, மலர்வண்ணன், கவிரிஷி மகேஷ், சென்னையைச் சேர்ந்த கவிஞர்கள் சுமதி சங்கர், அன்புச்செல்வி சுப்புராஜூ, முனைவர் தர்மாம்பாள், காலாவதி குலசேகரன், சிங்கராஜன், குலசேகரன், காந்திதாசன், ரவி தமிழ்வாணன், அமுதன் ஆகியோரும் மற்றும் உமையவன், மாடசாமி, சுஜாதா, மீனாட்சி, ரித்திகா, தேசிங்கு ராஜா, முருக பாரதி, டீக்காரம் விஜயகுமார், சேலம் வழக்கறிஞர் ஜெயராமன் ஆகியோர் சிறப்பாக பங்களித்தனர். பல்வேறு நாடுகளிலிருந்து வந்த தமிழறிஞர்கள் உரையாற்றினார்கள். விழாவின் இறுதிநாளில் கவிஞர்களுக்கு பல்வேறு விருதுகளை கம்போடியா அரசு வழங்கிச் சிறப்பித்தது.

பன்னாட்டுத் தமிழர் நடுவத்தின் தலைவர் சித்தர் திருத்தணிகாசலம் தமிழர் கலாச்சாரத்துக்கும் கம்போடியா நாட்டுக்குமான தொடர்பினை சிறப்பாக எடுத்துரைத்தார்.

அங்கோர் தமிழ்ச்சங்க தலைவர் சீனிவாச ராவ் பேசும்போது அங்கோர் தமிழ்ச் சங்க வளர்ச்சிக்கும் பல்வேறு கலாச்சார நிகழ்வுகள் நடத்துவதற்கும் உறுதுணையாக இருக்கும் கம்போடியா நாட்டின் கலை மற்றும் பண்பாட்டுத்துறை இயக்குனர் திருவாளர் மோர்ன் செபீப் (அவரை அன்போடு சொக்கையா என அழைக்கிறார்கள்) அவர்களை பாராட்டி பேசினார். மேலும் எதிர்வரும் மே 2020-ல் தமிழக அரசு மற்றும் கம்போடியா அரசின் துணையுடன் மன்னன் இராஜராஜ சோழன் சிலையினை கம்போடியாவில் நிறுவி தமிழின் தொன்மையை விளக்கும் வண்ணம் கலாச்சார மய்யம் அமைக்கப்படும் என்றும் கெமர் மக்களுக்கு நல்லதோர் மருத்துவமனை ஏற்படுத்துவதாகவும் அறிவித்தார்.

கெமர் மொழி மட்டுமே அறிந்த மோர்ன் செபீப் இரண்டுநாள் மாநாடு முழுவதும் அமர்ந்திருந்து ரசித்தார். விழாவில் பல காணொலிக் காட்சிகள் தமிழின் வரலாறு தொன்மையைக் குறிக்கும் விதத்தில் காட்சிப்படுத்தப்பட்டன. கம்போடியா நாட்டு பாரம்பரிய நடனம் அப்ஸரஸ்களால் கம்பராமாயணம் நடித்துக் காட்டிய விதம் அனைவரது கருத்தையும் கண்ணையும் கவர்ந்தன.

இரண்டு நாள் மாநாட்டு நிகழ்வுகளை ஈழத்துக் கவிஞர் சிம்மக்குரலோன் நாகேந்திர ராஜாவும், நம் தமிழகத்து கவிஞர் ஓசூர் மணிமேகலையும் தமக்கே உரிய தனித்தன்மையுடன் தொகுத்து வழங்கியது மாநாட்டின் வெற்றிக்கு கூடுதல் சிறப்பு.

இரண்டு நாள் மாநாடு முடிந்ததும் அனைத்துக் கவிஞர்களையும் அழைத்துச்சென்று அடுத்த இரண்டு நாட்கள் கம்போடியாவின் புகழ்மிக்க அங்கோர்வாட் கோவிலையும் மற்றும் கலாச்சார நினைவிடங்களையும் சுற்றிக்காண்பித்தனர். ஆறுநாட்கள் அனைத்துக் கவிஞர்களையும் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கவைத்து தமிழகத்து உணவுகளையும் சிறப்பாக ஏற்பாடுகள் செய்து கொடுத்த அங்கோர் தமிழ்ச்சங்க நிர்வாகிகளுக்கு நாம் என்றென்றும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.