நினைவின் ஆரம்பம்தான் அந்த அழைப்பின் ஆரம்பமும்.
"போதவிரதா!''
அப்போது அவன் பதில் கூறினான்:
" இதோ நான் வர்றேன்.''
"போதவிரதா...!''
தாய் அழைத்தாள். தந்தை அழைத்தார். ஆசிரியர் அழைத்தார். நண்பர்கள் அழைத்தார்கள்.
அப்போது அவன் கூறினான்: "நான் இதோ வர்றேன்.''
மனைவி அழைத்தாள். மகன் அழைத்தான். மக
நினைவின் ஆரம்பம்தான் அந்த அழைப்பின் ஆரம்பமும்.
"போதவிரதா!''
அப்போது அவன் பதில் கூறினான்:
" இதோ நான் வர்றேன்.''
"போதவிரதா...!''
தாய் அழைத்தாள். தந்தை அழைத்தார். ஆசிரியர் அழைத்தார். நண்பர்கள் அழைத்தார்கள்.
அப்போது அவன் கூறினான்: "நான் இதோ வர்றேன்.''
மனைவி அழைத்தாள். மகன் அழைத்தான். மகள் அழைத்தாள். அவர்களின் பிள்ளைகள் அழைத்தார்கள். அந்த அழைப்புகள் அவ்வளவும் போதவிரதனின் அறிவை உறுதிப்படுத்தியது...
"நான்...!''
ஒவ்வொரு இரவிலும் உறங்குவதற்குப் படுக்கும்போது, இறுதி சிந்தனை இதுவாகத்தான் இருந்தது.
"இது... நான்...!''
இரவை பகலும் பகலை இரவும் கடந்தன. சாதாரணமான இந்த திரும்பத் திரும்ப நடக்கும் செயல் போதவிரதனுக்கு பழகிப் போய்விட்டது. எனினும், இறுதியில் ஒரு இரவு, மற்ற இரவுகளிலிருந்து மாறுபட்டிருப்பதை போதவிரதன் அறிந்தான். வெளியே மரங்களுக்கு மத்தியிலிருந்து அசாதாரண மான ஒரு சத்தம் அழைத்தது: "போதவிரதா!''
போதவிரதன் பதில் கூறவில்லை.
இரவு புலரக்கூடாதா என்று போதவிரதன் ஆசைப்பட்டான். இரவு புலரவில்லை. மரங்களுக்கு மத்தியிலிருந்து அந்த சத்தம் மீண்டும் அழைத்தது.
சிலந்தி வலையைப்போன்ற மெல்லிய ஒரு பட்டு நூல் போதவிரதனின்மீது சுற்றிப் பிடித்தது. தட்டி விலக்கிவிட்டும் அதை நீக்க அவனால் முடியவில்லை.
மரங்களுக்கு மத்தியிலிருந்த யாரென தெரியாதவன் அந்த நூலை இழுத்தான். தடுக்க முடியாமல் போதவிரதன் மரங்களை நோக்கி நீங்கிக்கொண்டிருந்தான்.
ஒரு நடுக்கத்துடன் அறிமுகமற்றவனிடம் போதவிரதன் கூறினான்: "இது நானல்ல...''
யாரென தெரியாதவன் கனிவுடன் சிரித்தான். இதற்குமுன்பு பார்த்திராதவன் கூறினான்: "அதைப் புரியவைப்பதற்குத்தான் நான் உன்னை அழைத் தேன்.''