புராண கதாபாத்திரங்களில் சில எல்லாரையும் ஈர்க்கக்கூடியதாக இருக்கும். எத்தனை முறை அதன் கதையைக் கேட்டாலும் ஆர்வம் குறையாது. ‘கர்ணன்’ என்ற கதா பாத்திரம் அப்படிப்பட்டது. வீரம்-ஈகை- தியாகம் அனைத்தும் கொண்ட அந்த கதாபாத்திரம் தன் வாழ்வின் கடைசிவரை புறக்கணிப்புகளையும் அவமதிப்புகளையும் எதிர் கொள்ளும். மகாபாரதத்தில் கர்ணன் முதன்மை கதாபாத்திரம் இல்லை. ஆனால், கர்ணன் இல்லாமல் மகாபாரதம் முழுமை பெறுவதில்லை. அதனால் தான், கர்ணன் என்ற தலைப்பில் எத்தனை முறை திரைப்படங்கள் எடுக்கப்பட்டாலும் அது மக்களைக் கவர்கிறது.
எழுதப்பட்ட மகாபாரதத்திற்கு முன்பே நாட்டுப்புறத் தொன்மங்களில்லிகதைப்பாடல்களில் கர்ணன் கதை என்பது கர்ணபரம்பரையாக சொல்லப்பட்டு வருகிறது. அத்தகைய தொன்மங்களில் ஒன்றை தமிழ் முனைவர் பட்டத்திற்கான ஆய்வாளர் ரேவதி என்பவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
காண்டவவனம் என்ற பகுதியில் நாகர் இனமக்கள் வசித்து வருகின்றனர். தொல்குடிகளை அழித்துதானே தலைநகரங்கள் கட்டமைக்கப் படுகின்றன. அதுபோல, நாகர் இனமக்களை அழித்து, காண்டவவனத்தில் உருவாக்கப்பட்டது தான் இந்திரபிரஸ்தம் என்ற நகரம். அதுதான், இன்றைய டெல்லி. நாகர் இனமக்களை கண்ணனும் அர்ச்சுனனும் கொன்றும் விரட்டியும் காண்டவ வனத்தைக் கைப்பற்றுகிறார்கள். தப்பிய நாகர்கள், கர்ணனிடம் சென்று தஞ்சமடைகிறார் கள். தொல் குடிகளின் உரிமைகளுக்குத் துணை நிற்கிறான்லி பிறப்பின் காரணமாக ஒதுக்கப்பட்டும் ஒடுக்கப் பட்டும் அவமானங்களை சுமக்கின்ற கர்ணன்.
இந்தத் தொன்மம் குறித்து உரையாடியபோது தமிழறிஞர் நெல்லை கண்ணன் கூடுதலாக ஒரு செய்தியைக் குறிப்பிட்டுச் சொன்னார். நாகர்கள் என்கிற தொல்குடிகளை, புராணத்தில் நாகங்களாக (பாம்புகளாக) சித்திரிப்பது வழக்கம். அதன்படி, காண்டவவனத்தில் இருந்த பாம்புகளை கண்ணனும் அர்ச்சுனனும் விரட்டியும் கொன்றும் வேட்டை யாடியபோது, அதில் தப்பிய ஒரு கர்ப்பிணி பாம்பும் கர்ணனிடம் தஞ்சமடைகிறது. அந்த கர்ப்பிணி பாம்பின் வயிற்றில் பிறந்த குட்டி, தன் தலைமுறை யினர் அழிக்கப்பட்டதை அறிந்து கோபங்கொண்டு, தங்கள் இனத்தை அழித்தவர்களை அழிக்க வேண்டும் என கர்ணனிடம் கேட்கிறது. அத்துடன், கர்ணன் கையில் நாகாஸ்திரமாக அந்த நாகமே மாறுகிறது.
காண்டவவனத்து நாகம்தான் கர்ணனின் நாகாஸ்திரம் என்பது முக்காலமும் உணர்ந்த கண்ண னுக்கு தெரிந்துவிடுகிறது. கர்ணனின் கையில் உள்ள அந்த அஸ்திரத்திலிருந்து அர்ச்சுனன் தப்பமுடியாது என்பதை அறிந்த கண்ணன், குந்தியை கர்ணனிடம் அனுப்பி, தான்தான் அவனைப் பெற்ற தாய் என்ற உண்மையை உரைத்து, அதற்கு பதிலாக சில வரங் களை வாங்கச் செய்கிறார். அதில் ஒன்று, குருசேத்தி ரப் போர்க்களத்தில் ஒருமுறைக்கு மேல் நாகா ஸ்திரத்தை அர்ச்சுனன் மேல் ஏவக்கூடாது என்கிற வரத்தை குந்தி வாங்கிவிடுகிறார். களத்தில் ஒரு முறை அதை கர்ணன் ஏவியபோது, அர்ச்சுனனை தன் சாதுர்யத்தால் காப்பாற்றிவிடுகிறார் கண்ணன். எப்போது அர்ச்சுனனை பழி தீர்க்கலாம் எனக் காத்தி ருந்த நாகாஸ்திரத்தின் நோக்கத்தை முறியடித்தது கர்ணனிடம் குந்தி வாங்கிய அந்த வரம். அத்துடன், கர்ணனின் வாழ்வையும் அந்த குருசேத்திரப் போர் முடித்துவிடுகிறது.
வலிமை மிகுந்தவனை சூதுகளால் வெல்வது ராஜதந்திரம் எனப் புராணங்களில் போற்றப்படுகிறது. அத்தகைய வலிமையுள்ளவன், உரிமை மறுக்கப்பட்ட வர்களின் பக்கம் நின்றாலோ, தன்னை நம்பிய மக்களுக்கு நல்லது செய்தாலோ, ஏதேனும் சூழ்ச்சி செய்து அவனது உயிரை எடுத்துவிடுவது, அல்லது அவனது பெயரைக் கெடுத்துவிடுவது என்பது புராண இலக்கணமாக இருக்கிறது.
மகாபலி என்கிற மாவலி அரசனின் கதை என்ன? அவன் தன் நாட்டை நல்லபடியாக நிர்வாகம் செய்து வருகிறார். மக்களின் குறைகளைத் தீர்த்து வைக்கிறான். தன் வலிமையைப் பெருக்கிக்கொள்ள யாகம் நடத்துகிறான். அதுவும் அசுரர்களுக்கான முனிவரான சுக்கிராச்சாரியார் தலைமையில் யாகம் செய்கிறான். மாவலி மேலும் வலிமை பெற்றுவிட் டால் என்னாவது என தேவாதிதேவர்கள் நடுங்கு கிறார்கள். திருமாலிடம் முறையிடுகிறார்கள். அவர், வாமன அவதாரம் எடுத்து வருகிறார். யாகம் செய்யும் மாவலி அரசனிடம் மூன்றடி நிலம் கேட்கிறார். வழங்கியே பழக்கப்பட்ட மன்னனும் சரி என்கிறான்.
வாமன அவதாரத்திலிருந்து விஸ்வரூபமெடுக் கிறார் திருமால். அந்தப் பேருருவுடன் ஓர் அடியில் பூமியையும் மற்றோர் அடியில் வானத்தையும் அளந்துவிடுகி றார். மூன்றாவது அடி அளக்க நிலமில்லைலிஇடமில்லை. மன்னன் தன் தலையைக் கொடுத்து, அதில் அடி வைக் கச் சொல்கிறான். திருமால் வைக்கிறார். மன்னன் பூமிக்குள் அழுந்தி இறக்கிறான். மரணத்திற்கு முன் அவன் வைத்த கோரிக்கைதான் ஆண்டுக்கு ஒரு முறை திருவோணம் நட்சத்திரத்தில் தன் நாட்டு மக்களை வந்து காண வேண்டும் என்பது! அதுதான், ஓணம் திருநாளாக கேரளாவில் கொண்டாடப்படுகிறது.
மாவலி மன்னன் எந்தக் கெடுதலும் செய்ய வில்லை. யாகம் மட்டும்தான் செய்தான். அவன் கொல்லப்பட்டான் என்கிறது புராணம்.
இலங்கையை ஆண்ட இராவணன் தன் நாட்டை எப்படி வைத்திருந்தான் என்பதை கம்பர் மிகச் சிறப்பாக விளக்குகிறார். படைத்திறன், இசைத் திறன், நிர்வாகத் திறன், தவ வலிமை அனைத்தும் அமையப் பெற்றவனாகத்தான் இராவணன் இருந் தான். அவனை எப்படி சிறுமைப்படுத்துவது? பிறன் மனை நோக்கினான் என்கிற குற்றச்சாட்டு ஒன்றை வைத்து இராவணன் கதையையே முடித்துவிடுகிறது இராமாயணம். இத்தனைக்கும் சீதையின் மீது இராவணனின் சுண்டுவிரல்கூட படவில்லை என்பதை இதிகாசமே ஒப்புக்கொள்கிறது.
இராவணன், திராவிட நிலத்தின் மன்னன். மாவலி மன்னனோ, அசுரன். கர்ணன், பிறப்பின் அடிப்படையில் இழிவுபடுத்தப்பட்டவன். இவர்கள் மூவருமே வலிமையானவர்கள். தங்களை நம்பிய மக்களைக் காப்பாற்றியவர்கள். சிறப்பான நிர்வாகத்தை நடத்தியவர்கள். மூவருமே பழிவாங்கப்படுகிறார்கள். தூற்றப்படுகிறார்கள். அவர்களின் நற்பெயர் சிதைக்கப்படுகிறது (ஈட்ஹழ்ஹஸ்ரீற்ங்ழ் ஆள்ள்ஹள்ண்ய்ஹற்ண்ர்ய்).
இந்திர விழா பற்றி சிறப்பாகக் கூறுகின்றன தமிழ்க் காப்பியங்களான சிலப்பதிகாரமும் மணி மேகலையும். ஆனால், புராணத்தில் இந்திரன் மீது பாலியல் சார்ந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.
திராவிடர்கள், நாகர்கள், அசுரர்கள், தமிழர்கள் இதன் சங்கிலித் தொடர் தொடர்பு குறித்து பல ஆய்வு கள் வெளிப்பட்டிருக்கின்றன. பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பல ஆய்வுகளை மேற்கோள் காட்டி மிகச் சிறப்பான ஆய்வுரையை எழுதியிருக்கிறார். ஆனால், இந்த சங்கிலித் தொடரில் உள்ள கண்ணிகள் ஒவ்வொன்றையும் உயிரை எடுத்தோலிபெயரைக் கெடுத்தோ சீரழிக்கும் வகையிலேயே புராணக் கதைகள் பின்னப்பட்டிருக்கின்றன.