கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு
-என்பது வள்ளுவரின் வாக்கு.
நாட்டு மக்கüன் மனநிலையை புரிந்து கொள்ளாமல், கொடுங்கோல் மனநிலையுடன் ஆட்சி செய்பவர்கள், மக்கüன் ஆதரவையும் மதிப்பையும் ஒருசேர இழப்பார்கள் என்பதுதான் இதன் எச்சரிக்கைக் குரல்.
இது இந்தியப் பிரதமர் மோடிக்காகவே விடுக்கப்பட்ட எச்சரிக்கைக் குரல்போல் அமைந் திருக்கிறது.
காரணம், இந்தியாவின் தலையில் இடியே விழுந்தாலும் அதைப்பற்றி எனக்கென்ன? என்கிற மாதிரி, எதற்கும் கவலைப்படாதவராக இருக்கிறார் மோடி.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/orissa.jpg)
ரோம் நகரமே தீப்பற்றி எரிந்த போது, அந்த நாட்டு அரசன் நீரோ, பிடில் வாசித்துக்கொண்டிருந்தான் என்பார்கள். அதுபோல், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கüல் ஒன்றான மணிப்பூரே, இப்போது பற்றி எரிந்துகொண்டு இருக்கிறது.
அங்கு மூண்ட இனக் கலவரத்தில், ஆயிரக்கணக்கான வீடுகள் தீயில் எரிந்துகொண்டே இருக்கின்றன. அங்கே, கிறிஸ்தவ வழிபாட்டுக் கூடங்கள் குறிவைத்து தகர்க்கப்பட்டு வருகின்றன. நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கி றார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் அங்குள்ள முகாம்கüல் தஞ்சமடைந்திருக்கிறார்கள். கொத்துக் கொத்தாய் மக்கள் அண்டை மாநிலங்களை நோக்கி, உயிர் தப்பி ஓடியபடியே இருக்கிறார்கள்.
அங்கங்கே துப்பாக்கிக் குண்டுகள் ஓயாமல் வெடிக்கின்றன. அப்பாவி மக்கüன் மரண ஓலத்தில், அந்த மாநிலமே அதிர்ந்து நடுங்குகிறது. அக்கம்பக்க மாநிலங்கள் உயிர் பயத்தில் வெடவெடக்கின்றன.
மணிப்பூரின் நிலவரத்தைப் பார்த்து, ஒட்டுமொத்த இந்தியாவும் துயரத்திலும் கவலையிலும் மூழ்கி இருக்கிறது. அங்கே அடுத்து என்ன நடக்குமோ? என்று எதிர்க்கட்சிகள் எல்லாம் பதறிப்போய் கைபிசைகின்றன.
ஆனால்-
இவ்வளவு நடந்தும், இதைக்கண்டு பதற வேண்டிய பிரதமர் மோடி மட்டும், யாருக்கோ, எங்கோ, ஏதோ நடக்கிறது என்கிற பாணியில், அதைப் பற்றிக் கொஞ்சமும் கவலையில்லாமல் எரிந்து கருகும் மணிப்பூரின் புகைமூட்டத்திற்கு நடுவே, ஐந்தாம் முறையாய் அமெரிக்காவுக்கு ஆனந்தமாக சுற்றுலா கிளம்பினார்.
மோடி அமெரிக்காவுக்கு வருவதை, அமெரிக்க மக்கள் கொஞ்சமும் விரும்பவில்லை. காரணம் மோடி ஒரு பாசிச மனிதர் என்பதும், மதவெறியோடு ஆட்சி செலுத்தும் அதிகார ஆசை கொண்ட நபர் என்பதும் அவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கிறது.
எனவே மோடி அமெரிக்கா வருகிறார் என்றதும், அமெரிக்க நாடாளுமன்றத் தில் இருக்கும் 75 எம்.பி.க்கள், மோடியை வரவேற்கக்கூடாது என்று எதிர்ப்புக்கொடி பிடித்தனர்.
"கோ பேக் மோடி' என சமூக ஊடகங்கüல் அமெரிக்காவின் டிரெண்டிங் குரல் கேட்டுக்கொண்டே இருந்தது.
நியூயார்க் நகரில் டிஜிட்டல் டிரக்கில் மோடி பற்றிய பிரச்சாரம் நடந்தது...
மோடியைப் பற்றிக் குறிப்பிடும்போது....
"பிரைம் மினிஸ்டர் ஆஃப் இண்டியா' என்று குறிப்பிடுவதற்கு பதில்...
"க்ரைம் மினிஸ்டர் ஆஃப் இண்டியா'
என்று குறிப்பிட்டு, அவர் மீது வெறுப்பை உமிழ்ந்தனர். மோடியை ஹிட்லர் என்றும் பதாகைகüல் விமர்சித்தனர்.
குஜராத் கலவரத்திற்கு பதில் என்ன? என்ற கேள்விகளை அங்கங்கே பெரிது பெரிதாக எழுதி வைத்திருந்தனர். சாலையோரங்கüல் மக்கள் திரண்டுநின்று, மோடியைக் கரித்துக்கொட்டி, சபித்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/orissa1.jpg)
ஆனால், இதையெல்லாம் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் -அமெரிக்காவிற்குச் சென்று, அந்த நாட்டு வீதிகüல் சொகுசாக உலா வந்தார் மோடி. அமெரிக்க அரசு பரிமாறிய விருந்தை ருசித்துச் சாப்பிட்டுவிட்டு, மணிப்பூரின் மரண ஓலம் காதில் கேட்டும், அவர் அமைதியாக இருந்தார்.
"இந்தியாவில் நிலைமை சரியில்லையே, உடனே நாடு திரும்புவோம். மணிப்பூரை சாந்தப்படுத்துவோம்' என்று நினைக்காமல், அமெரிக்க டூரை முடித்துக்கொண்டு, அங்கிருந்து எகிப்துக்கும் சென்றுவிட்டு, இப்போது ஆற அமர இந்தியாவுக்குத் திரும்பியிருக்கிறார்.
இங்கு வந்த
வராவது மணிப்
பூருக்கு விரைந்
தாரா? என்றால் அது
தான் இல்லை.
தனது அன்றாட
வேலைகளைப்
பார்க்க ஆரம்பித்து விட்டார் மோடி.
*
ஒரு நாட்டை ஆள்கிறவர், அந்நாட்டு மக்களை எல்லாம் தனது உறவுகளைப் போல் கருதவேண்டாமா?
அவர்கள் மேல் விழும் அடிகளை தன் மேல் விழுவதாக எண்ணித் துடிக்க வேண்டாமா?
மோடிக்கு இப்படி எதுவுமே ஆகவில்லை. அவர் மரத்துப்போன மனிதராகவே இருக்கிறார்.
இந்தியாவின் ஒரு மாநிலமே கலவரத்தில் பிடியில் சிக்கி இருக்கும்போதும், அவர் ராமநாமத்தை உச்சரித்துக்கொண்டு இருக்கிறார்.
இதில் கொஞ்சமும் அவருக்குக் குற்ற உணர்ச்சி இல்லை. ஆனால் வாக்கüத்த மக்கள்தான் இப்படிப்பட்ட ஒரு கொடுங்கோலருக்கு வாக்கüத்துவிட்டோமே என்று குற்ற உணர்ச்சியில் தலைகவிழ்ந்து நிற்கிறார்கள்.
மணிப்பூரில் அப்படி என்னதான் பிரச்சினை?
மணிப்பூரில், பெரும்பான்மையாக உள்ள மைத்தேயி சமூகத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து தங்களுக்கும் அதற்கான சலுகைகளை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறார்கள். இவர்கüன் பின்னணியில் மாநில பா.ஜ.க. இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த சமூக மக்கள் பொருளாதார நிலையில் முன்னேறியவர்களாக இருக்கிறார்கள்.
அதனால், கல்வி மற்றும் உயர் பதவிகüலும் அவர்கள் அங்கே கோலோச்சுகிறார்கள்.
எனவே, இப்படிப்பட்ட மைத்தேயி சமூக மக்களை பழங்குடிப் பட்டியலில் சேர்க்கக் கூடாது என்று அங்குள்ள குகி, நாகா உள்üட்ட பழங்குடி சமூகத்தினர் எதிர்த்து வருகின்றனர்.
காரணம், மைத்தேயி மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கினால், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டுப் பலன்கள் குறைவதோடு பழங்குடியின மக்களுக்கு சொந்தமான நிலமும் படிப்படியாக ஆக்கிரமிக்கப்பட்டுவிடும் என்பதே இவர்கüன் கவலை.
இவர்கüன் உரசலால் கடந்த மே 3-ஆம் தேதியே கலவரம் ஆரம்பித்துவிட்டது. அப்போதெல்லாம் "இந்தியாவின் எஜமான்' மோடி இங்கேதான் இருந்தார், அவர் நினைத் திருந்தால், உடனே நிலைமையை சரிசெய்திருக்கலாம். ஆனால் அதில் கவனம் செலுத்த அவருக்கு நேரமில்லை. காங்கிரஸ் உள்üட்ட எதிர்க்கட்சிகள், மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு தலையிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டு, அவர் அமைதி காத்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/orissa2.jpg)
வழக்கமாக மாதந்தோறும் வானொலியில் அவர் பேசும் மன் கி பாத் உரையை, ஜூன் 18-ஆம் தேதி வழங்கிய போது கூட, மணிப்பூர் பிரச்சினை குறித்தோ, அம்மக்கüன் கவலை குறித்தோ மோடி பேசவில்லை. அதனால் மணிப்பூர் மக்கள் மோடி மீது ஆத்திரமடைந்தனர். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆயிரக்கணக்கானோர் தங்கள் ரேடியோக்களை தூக்கிப்போட்டு உடைத்தனர். அவர்கüன் இந்த மனக் கொதிப்பையும் மோடி கண்டுகொள்ளவில்லை. மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்கக்கூட நேரம் ஒதுக்காமல், அவர் அமெரிக்காவுக்குக் கிளம்பிவிட்டார்.
எதிர்க்கட்சிகள்தான் இங்கே பதறுகின்றன. மணிப்பூரில் அமைதி திரும்ப என்ன வழி என்று யோசிக்கின்றன. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பேருக்கு ஆலோசனைக் கூட்டங்களை நடத்திக்கொண்டே இருக்கிறார். ஆனால் அங்கே உக்கிரம் தணிந்தபாடில்லை.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்க மணிப்பூர் கிளம்பிய ராகுலைக் கூட மோடியின் போலீஸ் தடுத்தது. ஆனாலும் அவர் ஹெலிகாப்டரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்திருக்கிறார். இதுபோல் மணிப்பூர் செல்லும் துணிச்சல் மோடிக்கு இன்னும் வரவில்லை.
மணிப்பூர், மயானக்காடாக மாறிக்கொண்டிருக்கிறது. அங்குள்ள பா.ஜ.க. முதல்வரான பைரோன் சிங்கை பதவி விலகச் சொல்லி, மக்கள் குரல் கொடுக்கிறார்கள்.
ஆனால் அவர், தனது ராஜினாமா கடிதத்தை எழுதி, அதை அவரது ஆதரவாளர்கள் கிழித்துவிட்டதாக நாடகமாடுகிறார்.
மற்ற மாநிலங்கüல் பா.ஜ,.க.வுக்கு எதிராக சின்னதாய் ஒரு குரல் எழுந்தாலே, அங்கே சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று துள்üக்குதிக்கும் மதவெறி வானரங்கள், மணிப்பூரில் சட்டம் ஒழுங்கே பற்றி எரியும்போதும், அங்கே ராணுவமும் துணை ராணுவமும் குவிக்கப்பட்டிருக்கும் நிலையிலும் வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள்.
நிமிடத்திற்கு நிமிடம் மணிப்பூரின் மரண ஓலம் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது.
இந்த விவகாரத்தில், இந்த நாட்டின் சட்டத்துறையும் நீதித்துறையும்கூட மௌனம் சாதிப்பதுதான் பெரும் கவலையை அüக்கிறது.
-ஆதங்கத்தோடு...
நக்கீரன்கோபால்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-07/orissa-t.jpg)