அன்பின் கிளைகள்.. -செல்வி சிவஞானம்

/idhalgal/eniya-utayam/branches-love-selvi-sivagnanam

வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்;

மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;

கானில் வளரும் மரமெலாமே நான்;

காற்றும் புனலும் கடலுமே நான்.

- பாரதி

கணவர் செல்ல வேண்டிய திருமணம் அது.

""எனக்கு அவசர வேலை. நீ போய்ட்டு வா!''

என்று என்னிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்து ""ஏழரை டூ ஒன்பதுக்கு முகூர்த்தம்...'' ஏழு மணிக்கு அங்கிருக்கும்படியாக கிளம்பிப் போகுமாறு சொல்லி விட்டார்.

காலையில் எழுந்து வீட்டு வேலைகளை முடித்துவிட்டேன்.

""கார் புக் பண்ணி போய்விட்டு வந்துடு...''

கணவர் சொல்லை மீறி... எவ்வளவு தூரம்... எவ்வளவு பில் வருமோ வேண்டாம், பஸ்ஸிலிலேயே போகலாமே...

(அன்னைக்குன்னு பார்த்து இப்படியா தோணனும்?)

பஸ்ஸில் ஏறி திருமண மண்டபம் பெயர் சொல்லிலி நிறுத்தம் வருகையில் சொல்லுங்க என டிக்கெட் பெற்று, ஜன்னலோர சீட்பிடித்து, சிறிது நேரம் அதிகாலைப் பொழுதின் போக்குவரத்து நெரிசலற்ற சென்னையை ரசித்து விட்டு கண்மூடி அசதியில் சிறிது தூக்கம் போட்டுவிட்டேன்.

""ம்மா... எறங்குங்க... இங்கே இறங்கினா கல்யாண மண்டபம் உங்களுக்குப் பக்கம்...''

கண்டக்டர் சொல்லவும் நன்றி சொல்லிலிவிட்டு, பஸ்விட்டு இறங்கி நடக்க... ஏதோவொரு நெருடல்...

""இன்னும் ஐந்நூறு நாட்கள் இருக்கே... இப்பவேவா ஐயோ!''

மனம் சோர்ந்து நிச்சயம் அதுவா இருக்கக்கூடாது சாமியை வேண்டிக்கொண்டு நடக்க மனமின்றி ஆட்டோவைக் கூப்பிட, ""நீங்க சொல்ற மண்டபம் இதோ இருக்கேம்மா...

இதுக்கு ஏன் ஆட்டோ?''

என்ற ஆட்டோக்காரரிடம் அவசர புன்னகையை உதிர்த்து திருமண மண்டபத்தினுள்ளே அவசர அவசரமாகச் சென்று, ""பாத்ரூம் எங்கே?'' தேடி உறுதியானது! அதேதான்!

மண்டபத்தின் உள்ளே மஞ்சள் நிற காக்ரா சோளியில் அதற்கேற்ப நகையணிந்த நவநாகரீக மங்கை ஒருத்தி, மாமா பையனோ... காதலனோ அவனின் கை பிடித்து, தோளில் சாய்ந்து ரகசியமாய்ப் பேசியபடியே நடந்து அருகில் வர... நாதஸ்வர ஓசை சத்தத்தினூடே, ""இங்கே பக்கத்தில் மெடிக்கல் ஷாப் எங்கே இருக்கு?''

என்கிறேன் சன்னமாய் அவளது காதில் மட்டும் விழும்படியாக.

எனது படபடப்பும் பரிதவிப்பும் உடல் மொழியும் அவளுக்கு என் மாதாந்திர அவதியை உணர்த்த... சட்டென்று சொல்கிறாள்.

""எனக்குத் தெரியாது. நானும் ஏரியாவுக்குப் புதுசுதான்!''

உதவ நேரமோ அல்லது மனதற்றவள் போலவோ என்னை விட்டு விலகிக் கடந்து போவதில் அவசரம் காட்டினாள்.

சற்று தூரம் சென்றவுடன், அந்த பையனிடம் எதையோ சொல்லிலிச் சிரிக்க, அவன் என்னை திரும்பிப் பார்த்த பார்வையில்...

""இந்தக் கல்யாணமே பார்க்க வேண்டாம் சாமி! வீட்டுக்குப் போனால் போதும்!'' என்று தோன்றுகிறது.

ஐயர் மந்திரம் ஓதிக் கொண்டிருக்க... மணமகள் வந்து ஆசி பெற்று, கூரைப் புடைவையையும் மாலை மலர்ச் செண்டு தாம்பூலத் தட்டில் பெற்றுச் செல்வதையும்... மணமகளின் அழகையும்... மண்டபத்தின் அலங்காரத்தையும்... முகூர்த்தம் நேரம் நெருங்க வாழ்த்தக் காத்திருக்கும் உறவினர்கள் நட்புகளின் கூட்டத்தையும் பார்த்தபடியே...

வெளியே வந்து பார்க்கிங் சரி செய்துகொண்டிருந்த செக்யூரிட்டி மனிதரைப் பார்த்து, ""அண்ணா! இங்கே மெடிக்கல் ஷாப் எங்கேயிருக்கு?'' என்கிறேன்.

உடனே பதற்றமான குரலில்,

""யாருக்கு என்னம்மா ஆச்சு?''

""அடி ஏதும் பட்டுச்சா... உடம்புக்கு முடியலயா...?''

கேட்டுக் கொண்டே மண்டபத்தினுள்ளே எட்டிப்பார்க்கும் அவரிடம், ""யாருக்கும் ஏதுமில்லையண்ணா! எல்லாம் நல்லபடியாகவே நடக்கிறது. எனக்குத் தான் ஒரு பொருள் வாங்க வேண்

வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்;

மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;

கானில் வளரும் மரமெலாமே நான்;

காற்றும் புனலும் கடலுமே நான்.

- பாரதி

கணவர் செல்ல வேண்டிய திருமணம் அது.

""எனக்கு அவசர வேலை. நீ போய்ட்டு வா!''

என்று என்னிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்து ""ஏழரை டூ ஒன்பதுக்கு முகூர்த்தம்...'' ஏழு மணிக்கு அங்கிருக்கும்படியாக கிளம்பிப் போகுமாறு சொல்லி விட்டார்.

காலையில் எழுந்து வீட்டு வேலைகளை முடித்துவிட்டேன்.

""கார் புக் பண்ணி போய்விட்டு வந்துடு...''

கணவர் சொல்லை மீறி... எவ்வளவு தூரம்... எவ்வளவு பில் வருமோ வேண்டாம், பஸ்ஸிலிலேயே போகலாமே...

(அன்னைக்குன்னு பார்த்து இப்படியா தோணனும்?)

பஸ்ஸில் ஏறி திருமண மண்டபம் பெயர் சொல்லிலி நிறுத்தம் வருகையில் சொல்லுங்க என டிக்கெட் பெற்று, ஜன்னலோர சீட்பிடித்து, சிறிது நேரம் அதிகாலைப் பொழுதின் போக்குவரத்து நெரிசலற்ற சென்னையை ரசித்து விட்டு கண்மூடி அசதியில் சிறிது தூக்கம் போட்டுவிட்டேன்.

""ம்மா... எறங்குங்க... இங்கே இறங்கினா கல்யாண மண்டபம் உங்களுக்குப் பக்கம்...''

கண்டக்டர் சொல்லவும் நன்றி சொல்லிலிவிட்டு, பஸ்விட்டு இறங்கி நடக்க... ஏதோவொரு நெருடல்...

""இன்னும் ஐந்நூறு நாட்கள் இருக்கே... இப்பவேவா ஐயோ!''

மனம் சோர்ந்து நிச்சயம் அதுவா இருக்கக்கூடாது சாமியை வேண்டிக்கொண்டு நடக்க மனமின்றி ஆட்டோவைக் கூப்பிட, ""நீங்க சொல்ற மண்டபம் இதோ இருக்கேம்மா...

இதுக்கு ஏன் ஆட்டோ?''

என்ற ஆட்டோக்காரரிடம் அவசர புன்னகையை உதிர்த்து திருமண மண்டபத்தினுள்ளே அவசர அவசரமாகச் சென்று, ""பாத்ரூம் எங்கே?'' தேடி உறுதியானது! அதேதான்!

மண்டபத்தின் உள்ளே மஞ்சள் நிற காக்ரா சோளியில் அதற்கேற்ப நகையணிந்த நவநாகரீக மங்கை ஒருத்தி, மாமா பையனோ... காதலனோ அவனின் கை பிடித்து, தோளில் சாய்ந்து ரகசியமாய்ப் பேசியபடியே நடந்து அருகில் வர... நாதஸ்வர ஓசை சத்தத்தினூடே, ""இங்கே பக்கத்தில் மெடிக்கல் ஷாப் எங்கே இருக்கு?''

என்கிறேன் சன்னமாய் அவளது காதில் மட்டும் விழும்படியாக.

எனது படபடப்பும் பரிதவிப்பும் உடல் மொழியும் அவளுக்கு என் மாதாந்திர அவதியை உணர்த்த... சட்டென்று சொல்கிறாள்.

""எனக்குத் தெரியாது. நானும் ஏரியாவுக்குப் புதுசுதான்!''

உதவ நேரமோ அல்லது மனதற்றவள் போலவோ என்னை விட்டு விலகிக் கடந்து போவதில் அவசரம் காட்டினாள்.

சற்று தூரம் சென்றவுடன், அந்த பையனிடம் எதையோ சொல்லிலிச் சிரிக்க, அவன் என்னை திரும்பிப் பார்த்த பார்வையில்...

""இந்தக் கல்யாணமே பார்க்க வேண்டாம் சாமி! வீட்டுக்குப் போனால் போதும்!'' என்று தோன்றுகிறது.

ஐயர் மந்திரம் ஓதிக் கொண்டிருக்க... மணமகள் வந்து ஆசி பெற்று, கூரைப் புடைவையையும் மாலை மலர்ச் செண்டு தாம்பூலத் தட்டில் பெற்றுச் செல்வதையும்... மணமகளின் அழகையும்... மண்டபத்தின் அலங்காரத்தையும்... முகூர்த்தம் நேரம் நெருங்க வாழ்த்தக் காத்திருக்கும் உறவினர்கள் நட்புகளின் கூட்டத்தையும் பார்த்தபடியே...

வெளியே வந்து பார்க்கிங் சரி செய்துகொண்டிருந்த செக்யூரிட்டி மனிதரைப் பார்த்து, ""அண்ணா! இங்கே மெடிக்கல் ஷாப் எங்கேயிருக்கு?'' என்கிறேன்.

உடனே பதற்றமான குரலில்,

""யாருக்கு என்னம்மா ஆச்சு?''

""அடி ஏதும் பட்டுச்சா... உடம்புக்கு முடியலயா...?''

கேட்டுக் கொண்டே மண்டபத்தினுள்ளே எட்டிப்பார்க்கும் அவரிடம், ""யாருக்கும் ஏதுமில்லையண்ணா! எல்லாம் நல்லபடியாகவே நடக்கிறது. எனக்குத் தான் ஒரு பொருள் வாங்க வேண்டும் அண்ணா...'' என்கிறேன் உதவிகோரும் வாஞ்சையுடனான குரலில்.

""மணி ஏழுதான் ஆகுது. காலைலேயே கடை எங்கண்ணா திறந்திருக்கும்?'' என்று பரிதவிப்புடன் கேட்கிறேன்.

""கொஞ்சம்தூரம் தள்ளி இருக்கும்மா. என்னானு சொல்லுங்க... நான் வாங்கிவாரேன்''.

தயங்கித் தயங்கிச் சொல்லிவிடுகிறேன்.

""அது வந்து.... எனக்கு நாப்கின் வேணும்னா''

""அட இதப்போயி பயந்து சொல்லிக்கிட்டு, காசக் குடும்மா! என்ன கம்பெனிம்மா?''

""எதுவானாலும் வாங்கிடுங்ணா.''

நூறு ரூபாய் எடுத்துக் கொடுத்துவிட்டு, அங்கே ஒரு ஓரமாக உட்கார முயற்சிக்கும்போதுதான் கவனிக்கிறன்.

""ஐய்யோ, ஒரு காலைத் தாங்கித் தாங்கி மிகச் சிரமப்பட்டு நடக்கும் இவரையா வேலையா வாங்கிவிட்டேன்?''

அவரை நோக்கி ஓடினேன்.

""ண்ணா ண்ணா! இவ்ளோ சிரமப்பட்டு நடக்கறீங்க. நானே போய் வாங்கிக்கிறேண்ணா!''

அதற்குள் அவர் மூன்று சக்கரம் பொருந்திய மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் ஈருருளியில் ஏறி ஸ்டார்ட் செய்து, எஞ்சின் சத்தத்தினூடே லேசாகச் சிரித்து,

""போய் உக்காரும்மா. என் வீட்டுப் பிள்ளைக்கு வாங்கித் தரமாட்டேனா?'' என்று ஆக்சிலேட்டரை முறுக்கினார்.

பதற்றமாய் நகம் கடித்துக் கொண்டே கல்யாணமண்டப ஆபிஸ் வாசலில் சற்றுத் தள்ளி உட்காரும் என்னிடம், திருமண மண்டப மேனேஜர் வந்து கேட்கிறார்.

இங்கிருந்த செக்யூரிட்டி எங்கம்மா? காரையெல்லாம் இஷ்டத்துக்கு வழில விட்டுட்டுப் லிபோறாங்க ஒழுங்குபடுத்தாம எங்க போய்ட்டார்?

""நான் தான் கொஞ்சம் கடைக்கு அனுப்பினேன் சார். நான் வேண்ணா பார்க்கிங்க கவனிக்கட்டுமா'' என்கிறேன்.

எதுவுமே சொல்லாமல் என்னைப் பார்த்துக் கொண்டே மேனேஜர் தன் அறைக்குள் போய் உட்காருகிறார்.

பதினைந்து நிமிடங்கள் கழித்து வந்த செக்யூரிட்டி அண்ணா வண்டியைப் பார்க்கச் செய்யும்போது அருகில் போய் நிற்கிறேன்.

பேப்பர் சுற்றிய பொட்டலத்தை என் முன் நீட்டி.

""பக்கத்துல கடை திறக்கலம்மா, கொஞ்சதூரம் போயி வாங்க வேண்டியதாப் போச்சு. அதான் லேட்டு!'' என்றவர்.

""நீங்க போயிருந்தா சிரமம்தான். நான்தால வண்டில போய் சுத்தித் தேடி வாங்கியாந்தேன்.!''

சட்டென்று மனதினருகில் வந்துவிடுபவர்களிடம் நன்றியென்று ஒற்றை வார்த்தையில் சொல்லிலிவிடத் தோன்றுவதில்லை.

நெகிழ்வான பார்வையில் அவரது கண்களை சில வினாடிகள் பார்த்துவிட்டு, "உங்களை ஆபீஸ் ரூம்ல அந்த சார் தேடினாங்க அண்ணா' என்கிறேன்.

""அவுங்க அப்படித்தான் நீ போப்பா...'' என்கிறார்.

திருமணம் முடிந்து, மொயப்பணம் கொடுத்து போட்டோ எடுத்து, சாப்பிட்டு விடைபெற்று வெளியே வந்ததும், முதல் வேலையாக என்னவருக்கு போன் செய்தேன்.

se

""நாள் நெருங்கிவிட்டது தெரியும்தானே? பேக்ல நாப்கின் எடுத்து வச்சுட்டுப் போகமாட்டியா? எல்லாமே கவனக்குறைவுதான் உனக்கு!'' என்று வைத என் கணவர் அந்த மனிதருக்கு நன்றி சொல்லி ஏதாவது பணம் கொடுத்துவிட்டு வா என்றார்.

பார்க்கிங் சரிசெய்யும் சகோதரரை நோக்கி, ""ண்ணா! சைதாப்பேட்டைக்கு பஸ் எங்கேணா?'' என்று பேச்சுக் கொடுக்கிறேன்.

அவரது ஊர் குறித்து விசாரிக்க, அவரோ எனது ஊரைப்பற்றிக் கேட்க விழுப்புரம் மாவட்டம் என்றவுடனே மலர்ந்து, நம்மூர்ப்பிள்ளைதான் என்கிறார்.

""ஓ அப்படியா? நீங்க எங்கண்ணா?''

""கள்ளக்குறிச்சிப்பா!''

""இங்கே எப்படிண்ணா...''

""இருபது வருஷமா சென்னைதாம்மா, மகளை இங்க கட்டிக் குடுத்தது. பொஞ்சாதி போனபெறவு மருமவளோட ஒத்துப்போகல, இங்க மவளோடு வந்துட்டேன். பேரம் பேத்திகளோட சந்தோசமா போகுது நாளு. விழா விசேஷம்னா ஊருக்குப் போவம்மா....'' என்றவரிடம்...

பர்ஸிலிலிருந்து கொஞ்சம் பணம் எடுத்து, ""செலவுக்கு வச்சுக்கோங்க. உங்க மகளாட்டம் நெனச்சு வாங்கிக்கோங்க'' என்றேன்.

அதே சிரிப்போடு, ""நானும் மகளா நெனச்சுத் தாம்மா உதவினேன். மனிதாபிமானத்தோட செஞ்ச உதவிக்கு பணம் கொடுக்கக்கூடாது தாயீ.

இத்தனை பேரு கல்யாண மண்டபத்துல நெறஞ்சிருக்க நீ என்கிட்ட ஓடி வந்து "அண்ணா'ன்னு கேட்ட பாரு... அந்த அன்பு போதும்மா எனக்கு!''

அவர் இப்படிப் பேசவும், கண்கள் கலங்கிப் போகின்றன எனக்கு.

""போய்ட்டு வரேண்ணா...''

அவர் சொன்ன வழியில் போய்ப் பேருந்தைப் பிடித்து, இரண்டு மணி நேர பயணத்துக்கு பிறகு வீடு வந்து சேர்ந்து, ஸோஃபாவில் சரிந்து, ஆசுவாசப்படுத்திக் கொண்டபோது அந்தச் சகோதரரின் வாஞ்சையும் கரிசனமுமான உதவியிலும் நெகிழ்ந்த நெஞ்சம், மாதந்தோறும் வரும் அந்த வயிற்றுவலியைக்கூட உணர்த்த வில்லையெனக்கு.

அப்பாவின் புளியமரம்

மகன் சூர்யா கேட்டுக்கொண்டே இருக்கிறான் தாத்தாவின் புளியமரங்களைப் பார்க்க வேண்டுமென்று...

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகேயுள்ள இளங்காடு கிராமத்திலிலிருந்து சென்னைக்கு நம்ம வீட்டு சமையலுக்கான புளி வருடந்தோறும் வந்துகொண்டிருக்க சில நேரங்களில் ஆய்ந்து சுத்தம் செய்யப்படாத அதாவது புளிக்கொட்டை நீக்கப்படாத புளி சமையலுக்கு அம்மாவால் அனுப்பி வைக்கப்படும்.

மே மாத பள்ளி விடுமுறை நாட்களில் என் மகன்களோடு உட்கார்ந்து புளியைத் தட்டி கொட்டைகளை நீக்கி சுத்தம் செய்யும் பொழுதுகளில் தாத்தாவின் புளியமரங்களைப் பற்றிப் பேரன்களிடம் சொல்லிலிக் கொண்டிருப்பேன்.

பத்து வயதில் எனது சித்தப்பா என்னையும் என் அண்ணனையும் எங்களின் கழனி அமைந்துள்ள இளங்காடு கிராமத்தின் ஊருக்கு உள்ளே மத்தியில் அமைந்திருக்கும் மரத்தின் புளியை உலுக்க அழைத்துப் போவார். மிகப் பெரிய மூன்று மரங்கள் ஐந்தடி இடைவெளியில் பிரமாண்டமாகத் தனது கிளைகளைப் பரப்பித் துளிவெயில் கூடத் தரையில் விழாவாறு அடர்த்தியான நிழலைத் தரும் அம்மரத்தை சுற்றிலும் நான்கு ஆட்கள் நின்று கைகளைக் கோர்த்துப் பிடித்தால் மட்டுமே அந்த மரத்தைக் கட்டியணைக்க முடியும்.

சித்தப்பா அழைத்து வந்த ஆட்கள் மடமடவென மரத்திலேறி கிளைகளைப் பிடித்து உலுக்க, மரத்தின் அடியில் பரப்பியிருக்கும் தார்ப்பாய் மீது புளியம்பழங்கள் படபடவென பெரும் சத்தத்துடன் விழுவதைப் பார்க்கும்போது பத்து வயது சிறுமியான நானும் எனது அண்ணனும் ஆச்சரியம் மேலிட அண்ணாந்து பார்த்து மரத்தின் கிளைகள் ஆடுவதையும் கீழே கொட்டும் பழங்களையும் கண்டு கைகளைத் தட்டி ஆர்ப்பரிப்போம் இந்தப் புளியமரத்தின் கதைகளை எனது மகன்களிடம் நான் சொல்லும்போதெல்லாம் அவர்கள் என்னிடம் கேட்பது தாத்தாவின் புளியமரங்களை நாங்களும் பார்க்க வேண்டும் என்பதாகவே இருந்தது.

நானே பத்து வயதில் பார்த்தது.

அப்பா இறக்கும்போது எனது ஐந்தாவது வயதில் அந்த மரங்கள் பூத்துக் காய்த்து புளியம்பழங்களை கொடுக்க ஆரம்பித்திருந்தது.

ஊரில் குலதெய்வக் கோவிலுக்கு போகும் பாதையில் அந்த கிராமத்தைக் கடக்கும்போதெல்லாம்... வயலிலில் இறங்கி பம்ப் செட்டில் குளித்துக் களித்து நுங்கு பறித்துத் தின்பதோடு சரி... இளங்காடு கிராமத்திற்குள் பயணித்துப் புளியமரம் பார்க்க தோன்றவில்லையெனக்கு... ஆனால் எனது மகனுக்காக இன்று அப்பாவின் மரம் பார்க்கப் போகிறேன்.

தம்பியின் மகள் சடங்காகி இருப்பதாக போன் வரவும், நானும் சூர்யாவும் ஊருக்குப் பயணப்பட்டோம். சடங்கு விழா முடிந்த பிறகு அடுத்த நாள் காலை குலதெய்வக் கோவிலுக்கு எனது தம்பியின் இரு சக்கர வாகனத்தில் கிளம்பினோம்.

ஓரத்தில் பனைமரங்கள் வரிசையாக நின்றிருந்த சாலையில் இருபுறமும் கரும்பும் நெல்லும் பயிரிடப்பட்டுக் கண்ணுக்குக் குளிர்ச்சியாக அசைந்தாட, அதே சாலையில் நடந்தே சென்று ஆடிப்பாடிய எனது பால்யவயது நினைவுகள் இன்னும் அதிக நெகிழ்வைத் தர, டிராபிக் இல்லாத அந்தக் கிராமத்துச் சாலையில் இயற்கைக் காற்றின் வாசம் முகத்தினை வருட, மகனோடு பேசியபடி ஈருளிப் பயணம் அதீத மகிழ்வைத் தந்தது.

ஏரிக்கரையின் ஓரமாக அமைந்துள்ள அப்பாவின் கழனியைக் கடந்து ஊருக்குள் இறங்கியவுடன் சூர்யா சொல்கிறான் ""ம்மா யாருகிட்டயும் வழி கேக்காம நீயே கண்டுபிடி பார்க்கலாம்''

""இங்கே ஒரு மைதானம் போல காலிலியிடம் கிடக்கும் அதேயே காணோமேடா. நிறைய வீடுகள் கட்டியிருக்காங்க இப்போ...'' என்கிறேன் சுற்றிச் சுற்றி கண்களைச் சுழல விட்டபடி...

முப்பத்தைந்து வருடங்களுக்குப் பிந்தைய கிராமத்தைத் தேடுகிறது எனது கண்களும் மனதும்...

என்னது மைதானமா? நாம் வரும் பாதையில் பிள்ளைங்க விளையாடிட்டு இருந்தாங்க. ஒருவேள அந்த வழியாக இருக்குமோ... சரி வந்து வண்டில உட்காருங்க அந்த பக்கமாகக் கூட்டுட்டு போறேன் என்று வண்டியை ஸ்டார்ட் செய்தான் சூர்யா... மீண்டும் தார்ச்சாலையில் வந்த வழியே வர... சிறிய கிரௌண்டில் பத்து பன்னிரண்டு வயதொத்த பிள்ளைகள் கூட்டமாகக் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

அருகில் சென்று, "தம்பி இங்கே மூன்று பெரிய புளியமரங்கள் ஒட்டினாப்போல நெருக்கமா இருக்குமே எங்கே இருக்குப்பா?' என்றவுடன்...

"ஓ சிவஞானமூட்டு புளியமரமா? இங்கனதான்'

என்று அழைத்து போகிறார்கள்.

அட! சிறுவர்களுக்குக்கூட தெரிந்திருக்கிறது அப்பாவின் பெயர் என்று வியப்பில் அவர்களின் பின்னே நானும் மகனும் நடந்துபோக நிறைய மெத்தை வீடுகள் ஓட்டு வீடுகள் கடந்து குடிசைகளுக்கிடையே சந்து பொந்துக்களில் நடந்து. நான் முன்பு இறங்கி மைதானத்தைத் தேடினேன் அல்லவா... அதே இடத்தில் திரும்பி வீடுகளைக் கடந்து அழைத்துப் போக... சூரியாவிடம் நான், பார்த்தியா வழியெனக்கு மறக்கல சரியாத்தான் வண்டிய இங்கே நிறுத்தச் சொன்னேன்... என்று என்னை நானே மெச்சிக் கொள்கிறேன்...

அதோ மரங்கள் வந்தேவிட்டது...

என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை.

எத்தனை வருடங்கள் கழித்துப் பார்க்கிறேன்...

அப்படியேதான் இருக்கிறது. மனிதனுக்கு வயதானால் வரும் தோல் சுருக்கங்கள் போல சுருக்கங்கள் சற்று அதிகமாக இருக்குமெனத் தோன்றுகிறது.

எனக்கு ஏதோ அப்பாவையே பார்த்துவிட்டதொரு உணர்வு.

சொல்லவியலாத ஏதோவொன்று என்னை கண்கலங்கச் செய்ய வேகமாக ஓடிச் சென்று மரத்தைக் கைகளால் தொட்டு அப்படியே மரத்தின் மீது சாய்ந்து கொள்கிறேன்.

மகனோ மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்து கண்கள் விரிய வாவ் என்றவன்...

மரத்தில் சாய்ந்து நின்று கொண்டிருந்த என்னைப் பார்த்து...

""ரிலாக்ஸ் ம்மா...'' என்று என்னை ஆசுவாசப்படுத்த முயற்சிக்கிறான்.

மூச்சு உள்ளிழுத்து வெளியேவிட்டு சற்றே அமைதியாகி சுற்றிலும் பார்த்து அச்சூழலை அப்படியே உள்வாங்குகிறேன்.

மரங்களைச் சுற்றிலும் இடம்விட்டு சற்றுத் தள்ளி குடிசைகள் சூழ்ந்திருக்க... மரத்தின்கீழ் சாணத்தில் மெழுகி தரைசுத்தமாக பராமரிக்கப்பட்டு இருக்க அருகில் இருந்த குடிசையிலிலிருந்து ஒரு பெண் குளிர்ந்த நீரை மொண்டு வந்து கொடுக்கிறார்.

என் நிலைகண்டு எனக்கு தண்ணீர் கொடுக்க வேண்டுமென்று அந்த பெண்ணுக்குத் தோன்றியிருக்கலாம்.

மரத்தை அண்ணாந்து பார்த்து நீர் குடித்து மிடறு விழுங்கி...

""யாரும்மா மரத்தில் புளி உலுக்குவாங்க?'' என்கிறேன்.

""சிவஞானமூட்டு புள்ள தொர (துரை) தாங்க வருவாரு... இந்த முறை காச்சல் (விளைச்சல்) கம்மியா போச்சு மருந்து வைக்க ஆளுங்க கூட்டியாந்து காட்டிட்டுப் போனாரு... இன்னும் மருந்து வைக்கலங்க...''

எனது அண்ணன் துரை மரங்களைப் பாதுகாக்க முயற்சிகள் செய்கிறார் என்ற தகவலெனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

அதற்குள் அங்கே வயதான மூன்று பெண்கள் என்னைச் சூழ்ந்துகொண்டு, புருவம் சுருங்க ஒருவர் கேட்கிறார்.

""நீ சிவஞானம் பொண்ணு ஞானமா?''

எனக்குக் குதூகலம் வருகிறது...

ஆமாமென்று ஆனந்தக் கண்ணீரோடு சிரிக்க...

""உங்க அப்பாரு சிரிப்பு அப்படியே வருதே...'' என்று என்னை ரசிக்கிறார்கள். ""நீ சின்னப் புள்ளியில இங்க வந்திருக்க... ஞாபகம் இருக்கா...''

""ஆமாம் பாட்டி முப்பத்தஞ்சி வருஷங்களாச்சு...'' என்கிறேன்.

இத்தனை வருடங்கள் கழித்து மரங்களைப் பார்க்க வந்த என்னிடம் அவர்களும் மரத்தைப் பற்றியே பேசுகின்றனர். சாயங்காலமானா ஊர் செனம் பூராவும் இங்கு தான் கூடி கதை பேசுவோம்... மத்தியான வெயிலுக்கு குளுமையா இங்குதான் அம்புட்டு பேரும்... உட்காருவோம்... பெருசுகள் இங்கனதான் கண்ணசரும்...

ஊரு புள்ளைங்க எல்லாம் இங்கதான் வௌயாடுமென்று சொல்கிறார்கள். எனக்குத் தண்ணீர் கொடுத்த புள்ளத்தாச்சிப் பொண்ணு சொல்கிறார். எனக்கு கல்யாணமாகி ஒன்றரை வருஷமாச்சி... பாண்டிச்சேரிதான் அம்மா ஊரு...

நா இங்க வந்த நாளிலிருந்து பாக்குறேன்... இந்த சிவஞானமூட்டு மரம்தான் இந்த ஜனங்களுக்கு பீச் மாதிரி... பொழுதுபோக்குறது எல்லாம் இங்கனதான்.

என் அம்மா சொல்வார், ஊர் மக்கள் புளி எடுத்தது போக மிச்ச மீதி தான் நமக்கு கிடைக்கிறதென்று.

என் அப்பா வாங்கும்போதே அது இருபது வருட மரம்.

இப்போது கிட்டத்தட்ட நூறு வயதை நெருங்குகிறது. பேச்சுவாக்கில் அவ்வப்போது மரத்தை அருகில் சென்று தொடுவதும்... அதன் கிளைகளை நிமிர்ந்து பார்ப்பதுமாய் நானிருக்க...

அந்த பெண்களிடம் சொல்கிறேன், எனக்கு நேரமாகிவிட்டது நான் சற்று நேரம் மரங்களோடு இருந்துவிட்டு கிளம்புகிறேன்னு...

அந்தப் பெண்களும் ஏதோ புரிந்து கொண்டவர் களைப் போல என்னை விட்டு விலகுகிறார்கள்.

நானும் மகனும் நெகிழ்ச்சியாக மரங்களைச் சுற்றி நடந்தபடியே பேசுகிறோம். மகிழ்ச்சியாகப் புகைப்படங்களை எடுத்துக் கொள்கிறோம். அந்த கிராமத்தின் முதியவர்கள் முதல் சிறு குழந்தைகள் வரை அந்த மரங்களின் பொருட்டு என் அப்பாவின் பெயரைச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

அதாவது சிவஞானமூட்டு மரமென்று...

முப்பத்தைந்து வயதில் தன் குடும்பத்தினரோடு நீண்ட நாட்கள் வசிக்கப் பெரியதொரு வீட்டை கட்டும் முயற்சியில் ஏற்பட்ட விபத்தில் இளம் மனைவியையும் குழந்தைகளையும் தவிக்கவிட்டு இறந்து போன அப்பா... இந்த மரங்களை வாங்கியதன் பொருட்டு தன் பெயரை ஒரு கிராமமே தலைமுறை தாண்டியும் சொல்லிலிக் கொண்டு இருக்கப்போகிறது என்பதை அப்போது என் அப்பா நிச்சயம் உணர்ந்திருக்க மாட்டார்.

மரத்தினிடம் விடைபெற்றோம். அப்பாவிட மிருந்து விடைபெற்றேன்... அப்பாவை, தாத்தாவைப் பார்த்துவிட்ட திருப்தி எங்கள் மனதில்... இளைய தலைமுறைக்கு மரங்கள் பற்றிய புரிந்துணர்வை, மரங்களின மீதான காதலை ஏற்படுத்திய மகிழ்வுடன்.

uday010320
இதையும் படியுங்கள்
Subscribe