என்றும் மறையாத கருப்பு நிலா -ராசி அழகப்பன்

/idhalgal/eniya-utayam/black-moon-never-fades-rasi-alagappan

ரு மரணம் தான், தான் வாழ்ந்த வாழ்க்கையின் வரலாற்றைச் சொல்லும் என்பார்கள். அப்படித் தான் கருப்பு நிலாவாக திரை உலகில் பயணம் மேற்கொண்ட விஜயகாந்த் எனும் மாமனிதன், புகழ் வாழ்வின் உச்சத்தைத் தொட்டு உலகத் தமிழ் மனங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

அகல் விளக்கு என்று தன் வாழ்க்கையை தொடங்கி விருதகிரி என்று தன் திரைப்பட வாழ்க்கையை முடித்துக்கொண்டு -இன்று வரலாற்றின் எல்லா பக்கங்களிலும் தன் வள்ளல் தன்மையால் அள்ளி அள்ளித் தந்த நிகழ்வுகளால் இன்று அவரின் பின்னே அவரை நினைத்து வரும் கண்ணீர்க் கடலாய் திரண்டு வந்து, தொழுத காட்சி எல்லோரையும் கலங்கவைத்தது.

அப்படி என்ன விஜயகாந்த்? கலை உலகில் சாதித்துவிட்டார்? அப்படி என்ன நடிப்பைத் தந்துவிட்டார்?

எம்.ஜி.ஆர். போல் வசீகர சிகப்பு நிறம் அவரிடம் உண்டா ?

சிவாஜி கணேசன்போல் உடல் அசைவுகளில் ரசிகர்களை ஈர்த்துவிட்டாரா? இல்லை ஸ்டைலில் ரஜினிகாந்தை மிஞ்சிவிட்டாரா ? உலக நாயகன் கமல்ஹாசன் உடல் மொழியைத் தாண்டிவிட்டாரா ?

பிறகு எப்படி இவர் இலட்சக் கணக்கான மக்களை ஈர்த்து தன் மரணத்தில் கண்ணீர்க் கடலில் ஆழ்த்தி விட்டார்?

சாதனை என்பது என்ன ? வெறும் நடிப்பு மட்டும்தானா ?

100 நாட்கள் வெள்ளித்திரையில் ஓடிய கணக்கு மட்டும்தான் வெற்றியா ? இல்லை என்று விஜயகாந்தின் வாழ்க்கை நமக்கு எடுத்துக்காட்டுகிறது . அவர் திரைக்கு வரும்போது இரண்டு மிகப்பெரிய திரை ஜாம்பவான்கள் திரையில் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தார்கள் .

ஒருவர் ரஜினிகாந்த் .இன்னொருவர் கமலஹாசன்.

இரண்டு பேருக்கு இடையிலும் ஒரு முரட்டு நாயகனாய் கருப்பு நிறத்துடன் விஜயகாந்த் திரைக்கு உள்ளே நுழைந்தார் அகல் விளக்கு என்ற பெயரோடு.. பாசக்கார மதுரை மண்ணின் மைந்தனுக்கு இயக்குனர் காஜா, விஜயராஜ் என்ற பெயரை விஜயகாந்த் என்று மாற்றினார் .

தன் நண்பனை திரையுலகில் ஒரு உயர்ந்த இடத்திற்கு கொண்டு வந்து விடவேண்டும் என்று தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டு உடன் நடந்தவர் வேறு யாருமல்ல இப்ராஹிம் ராவுத்தர் என்கிற அற்புதமான நண்பன் . கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு போன்றது அவர்களின் திரை நட்பு.

எண்பதுகளின் துவக்கத்தில் ராஜாபாதர் தெருவிலுள்ள ரோகிணி லாட்ஜ் என்கிற அந்த இடம்தான் விஜயகாந்தின் ஆரம்ப திரைப்படப் புகலிடமாக இருந்தது . அங்கே வேடந்தாங்கல் பறவைகள் போல பல இளைஞர்கள் கதை சொல்வதற்காக வந்து கூடினார்கள். அதே சமயத்தில் பலரும் தனக்கு உதவி வேண்டும் என்றும் கூடினார்கள்.

அந்த ராஜாபா

அந்த ராஜாபாதர் தெரு அவர்களுக்கு வரமாக அமைந்தது .

ஒரு காலத்தில் ராமாவரம் தோட்டத் திற்குள் நுழைந் தாலே முதலில் சாப்பிட்ட பிற் பாடு தான் புரட் சித் தலைவர் மற்ற வர்களைப் பார்ப் பார் என்ற நிலை.

அதேபோல் ராஜாபாதர் தெருவுக்குள் விஜயகாந்த் அலுவலகத்திற்கு வருபவர்கள் ஏதாவது தேனீரோ , குளிர்பானமோ , உணவோ சாப்பிடாமல் அங்கிருந்து அகன்றுவிட முடியாது என்ற நிலை வந்தது.

அதற்கு காரணம் இப்ராஹிம் ராவுத்தர் , விஜய காந்த் மனம் தான். ரசிகர்களை தன்னுடைய புகழுக்காக வளர்க்கிறார்கள் என்பது ஒரு வகையில் உண்மைதான் .

ஆனாலும் அந்த ரசிகர்களை உயர வைப்பதும், அவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டுவதும், அதற்குப் பின்னால் சமூகத்திற்கு தன்னை அர்ப்பணித்துக் கொள்ளுமாறு மாற்றுவதும் மிகப்பெரிய பண்பு . பொறுப்பு. அந்த பண்பும் பொறுப்பும் விஜயகாந்திடம் நிறைவே இருந்தது .அதனுடைய முழுமை தான் அரசியல் பயணம். அதில் அவர் எதிர்க்கட்சித் தலைவராகவும் வெற்றிக்கொடி நாட்டினார் என்பது நிகழ்கால சான்று.

1978-ல் தான் அவர் திரை வாழ்க்கை துவங்கியது .

2010-ல் விருதகிரி என்ற படத்தோடு அவர் திரை வாழ்க்கை நிறைவு பெற்றது.

156 படங்கள். குறிப்பாகச் சொல்லவேண்டும் என்று சொன்னால் அவருடைய திரை வாழ்க்கையில் ஆரம்பத்தில் அகல் விளக்கு , இனிக்கும் இளமை என்று தொடங்கினாலும் நீரோட்டம் , சாமந்திப்பூ என்று வளர்ந்து தூரத்து இடி முழக்கம் என்ற படம்தான் அவரை எல்லோரும் பார்க்கவைத்தது . விஜயன் அந்த திரைப்படத்தை இயக்கினார் அருமையான படம் என்றா லும் அது வெற்றிகரமான இடத்தைப் பிடிக்கவில்லை .

விஜயகாந்த் சோர்ந்துவிட்டார்.

இனி நாம் மதுரைக்குச் சென்றுவிடலாம் என்று நினைத்தார் .

தி நகர் பாண்டி பஜாரில் இன்று ம.பொ.சி. சிலை எதிரே உள்ள இடத்தில் அன்று கே.பி. டிராவல்ஸ் இருந்தது.

அதில் ஏறி மதுரைக்குப் போய்விடுகிறேன் என்று விஜயகாந்த் சொல்ல , இப்ராஹிம் நண்பர், "அப்படி யெல்லாம் சொல்லாதே உன்னை இந்த திரையுலகத்தில் உச்சநிலையில் உன்னை உயர்த்தாமல் விட மாட்டேன். போய் உடனே இரண்டு நாளில் திரும்பி வா " என்று சொன்னார் . உடனிருந்து கேட்டேன்.

vv

அப்படியே நடந்தது.

இப்போதும் அது நினைவுக்கு வருகிறது .சொன்னது நிறைவேறியது. உடன் இருந்து பார்க்கத் தான் இன்று இப்ராஹிம் ராவுத்தர் இல்லை. இப்ராஹிம் ராவுத்தர் இறந்து பல ஆண்டுகள் ஆகின. இப்ராஹிம் ராவுத்தர் மரணத்தின் போதும் நான் அங்கு இருந் தேன் .

விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் வந்தார். இறுக்கமான மனதோடு அவர் வந்து சிறிது நேரம் அமர்ந்திருந்து சென்றார். தயாரிப்பாளர் ஏ.எல் அழகப்பன் அவர்களுடன் நானும் இருந்தேன். இரண்டு நண்பர்களுக்கு இடையே அப்போது பிளவுபட்ட மனநிலை.

ஆனால் விஜயகாந்தின் மனம் என்ன நினைத்திருக் கும்? "நண்பா என்னைவிட்டு பிரிந்து விட்டாயே" என்று தானே நினைத்திருக்கும் ! இப்ராகிம் ராவுத்தர் என்ன நினைத்துக் கொண்டு மூச்சடக்கி இருப்பார்?

"நண்பா நீ உச்சத்தில் வந்துவிட்டாய் மேலும் நீ வரவேண்டும்" என்றுதானே நினைத்திருப்பார்.

காலம் வேடிக்கை நிகழ்த்திவிட்டுப் போகிற விந்தை.

திரைப் பட பயணத்தை முதலில் காஜா துவக்கி வைத்தார்.

இறுதிப் படமாக விருதகிரி என்ற படத்தை கதை எழுதி இயக்கவும் செய்து முடித்துக்கொண்டார் விஜயகாந்த்.

நான் துவக்கப் படத்தை வெளியாகி சில மாதங் களுக்குப் பின் பார்த்ததாக நினைவு. ஆனால் இறுதிப் படத்தை தி.நகர் கிருஷ்ணவேணி தியேட்டரில் பகல் காட்சியில் பார்த்தேன்.

எண்பதுகளின் காலம் தமிழ்த் திரைப்படங்களின் பொற்காலம் என்று ஐம்பது வயது கடந்தவர்கள் இன்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மையாகவும் இருக்கலாம்.

எப்போதும் தன்னை எளிமையாகவே வைத்துக் கொண்டிருந்தார் விஜயகாந்த் .

ஒருமுறை ஒரு பெண் மதுரையைத் தாண்டி ஒரு ஊரிலிருந்து வீட்டை விட்டு ஓடி வந்து விட்டாள். காரணம் விஜயகாந்தை பார்க்க வேண்டும் என்று .. பார்த்துவிட்டு அவர் கேட்டார்.

"எப்படி வந்தாய்? கையில் பணம் இருக்கிறதா? "

என்று..

"ஒன்றுமில்லை "என்றாள். "எதற்காக வந்தாய்?"

"உங்களைப் பார்க்கத் தான் வந்தேன். "

"சரி என்ன செய்கிறாய் ?" "படித்துக் கொண்டி ருக்கிறேன்"

உடனே அவர் அதிர்ச்சி அடைந்து தன் நண்பன் இப்ராஹிம் இடம் சொன்னார்.

"இந்தப் பெண்ணை வீட்டிற்கு அனுப்பி வைக்க ஒரு ஆளை உடன் அனுப்பி அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு வா பணமும் கொடுத்தனுப்பு "என்று சொன்னார்.

vv

பணம் தந்து போய் வா என்று அனுப்பலாம் .

ஆனால் ஒருவரை கூடவே சென்று விட்டுவிட்டு வா என்று சொல்வது கருணை யின் உச்சம் . அதை விஜய காந்திடம் பார்த்தேன்.

மூன்றுவிதமான இயக் குனர்கள் அவரை மாற்றிக் காட்டினார்கள். ஆரம்ப காலத்தில் கதைகளுக்கு கதா நாயகனாக மாற்றினார்கள்.

காஜா , விஜயன், ராமநாராய ணன், நேதாஜி போன்ற இயக்குனர்கள்.

பிறகு அவரை பெண்கள் பால் ஈர்க்கும் கதாநாயகனாக கலைமணி, ஆர். சுந்தர்ராஜன், விக்கிரமன், பாலு ஆனந்த், விசு போன்றவர்கள் கதைகளை அமைத்தார் கள் . அதற்குப் பின் நீதியின்பால் மக்களின் குரலாக மாற்றுகிற வேலையை எஸ்.ஏ . சந்திரசேகர் , ராம. நாராயணன், முருகதாஸ் வந்தார்கள்.

லியாகத் அலிகான் வசனம் அரசியல் தீயை மூட்டி யது. இந்த மூன்றுதான் விஜயகாந்த்தை கேப்டனாக மாற்றியது.

இதனிடையில் திரைப்படக் கல்லூரி மாணவர் களின் பக்கம் விஜயகாந்த் பார்வை திரும்பியது .

நான் திரைப்படக் கல்லூரி மாணவர்களின் கடைசி ஆண்டு குறும்படங்களைரி பார்த்து அதனுடைய கதையையும் தொழில்நுட்பத்தையும் பற்றி எழுதியது . திரைப்பட கல்லூரி மாணவர்களின் த மர்டர் எக் கோ. ஊமை விழிகள் ஆனது.

ஆரம்பத்தில் ஆடல் பாடல் இல்லாமல் நடிக்கத் தயங்கினார் . பிறகு நம்பி நடித்தார் என்று இயக்குனர் அரவிந்தராஜ் என்னிடம் பகிர்ந்துகொண்டார்.

பாரதிராஜா, பாலச்சந்தர், பாலுமகேந்திரா, மகேந்திரன், எஸ்.பி. முத்துராமன் என ஒரு பக்கம் தமிழ்த் திரையை மாற்றி ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாலும் திரைப்படக் கல்லூரி மாணவர்களின் வருகை முற்றிலுமாக தமிழ்த் திரை ரசனையை மாற்றி அமைத்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

அதற்கு காரணமாக இருந்தவர் கேப்டன் விஜய காந்த் தான்.

விஜயகாந்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தவை எவை

1. அவருடைய எளிமை .

2. தனக்குத் தெரிந்ததை திரைப்படத்தில் செய்தது

3. எவரிடமும் பொய்யாகப் பேசாமல் இருந்தது. தன்னை நம்பியவர்களை எப்பொழுதும் விட்டுவிடாமல் காத்துக் கொண்டிருந்தது

4. சண்டைக் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்தது .

5. வசனங்கள் உச்சரிப்பில் தீப்பொறி பறந்தது.

அவர் திரை வாழ்வில் பட்ட அவமானங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. பல முன்னணித் தமிழ் நடிகைகள் அவர் கருப்பாக இருக்கிறார், முரடாக இருக்கிறார் நடிக்கமாட்டேன் நம்முடைய திரை வாழ்க்கை முடிந்துவிடும் என்று கேலி பேசியவர்களும் உண்டு .

ஆனால் அவர்களே பிற்காலத்தில் விஜய காந்த் உடன் நடிப்பதை பெருமையாக சொல்லிக் கொண்டதும் உண்டு .

இவையெல்லாம் காலத்தின் மாற்றம்.

விஜயகாந்தைப் பொறுத்தவரை நடிப்பு என்பது ஒரு அடையாளம். எம்.ஜி.ஆர். திரைப்படத்தைப பார்த்து கற்றுக் கொண்ட ஈகை, கருணையை விஜயகாந்த் தன்னிடம் வரித்துக்கொண்டார். இதன் வழியாக அவர் செய்த செயல்களே அவரின் இன்றைய புகழ் நிலை.

தமிழின் மேல் அளப்பரிய பற்று . இலங்கைத் தமிழர்களின் உயர்வு குறித்து என்றுமே யோசனை. விழுந்துகிடந்த நடிகர் சங்க சூழலை மீண்டும் நிலைநிறுத்திக் காட்டியது. தமிழ்க் கலைஞர்களின் பின்னால் இருக்கும் ரசிகர்கள் ஒன்றாக இருக்கவேண்டும் பிரிந்து சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது என்பதை அவர் உறுதியாக நம்பினார்.

உதயம் தியேட்டரில் கமல்ஹாசன் படமும் விஜயகாந்த் படமும் ஒரே நேரத்தில் ரிலீசானது.

ரசிகர்கள் பேனர் வைக்கும் பிரச்சினையில் அடித்துக்கொண்டார்கள். பேனரை கிழித்துக் கொண்டார்கள் .நள்ளிரவு ஒரு மணி இருக்கும்.

கமல்ஹாசன் அவர்கள் அங்கு போய் பார்த்து விட்டு வாருங்கள் என்று அனுப்பினார். போனேன் .

அந்த இடம் யுத்தக்களம் போல் காணப்பட்டது .எல்லோரும் உருட்டுக் கட்டை வைத்துக்கொண்டு எங்களுடைய விஜயகாந்த் முன் நீங்கள் யார்? என்று அடிப்பது போல் நின்றுகொண்டிருந்தார்கள். சுப்பையா முகத்தில் கோபம் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது.

சைதை பரமன் கமல் நற்பணி இயக்கம் பொறுப்பில் அவரும் கோபமாக இருந்தார். இருந்தார். நான் சமாதானப்படுத்தினேன். அடுத்த நாள் வடபழனியில் படப்பிடிப்பில் விஜயகாந்த் அவர்களை சந்தித்து நான் நடந்ததைச் சொன்னேன் .

கமல்ஹாசன் அவர்கள் உங்கள் மேல் அளப்பரிய மரியாதையும் , பாசமும் வைத்திருக்கிறார்.

எந்தவிதத்திலும் உங்களை குறைத்து மதிப்ப தில்லை .நடந்த நிகழ்வுக்கு வருத்தம் தெரிவிப்பதாகச் சொன்னேன்.

அவர் முந்திக்கொண்டு, நான் அவரிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் இந்த நிகழ்விற்கு என்று சொல்லி தொலைபேசியில் பேசியது இன்று வரை எனக்கு மனதில் பசுமையாக உள்ளது.

இப்ராஹிம் ராவுத்தர் என்கிற நண்பரோடு திரைப்படத்தில் பயணித்த காலமும் அதற்குப்பின் தனது மனைவி பிரேமலதா உடன் பயணித்த காலமும் வெவ்வேறு என்றாலும் அது காலத்தின் அடையாளங்கள்.

மன்றத்தின் வாயிலாய் ஊராட்சிப் பதவிகளை பிடித்த அவ பிறகு தேசிய திராவிட முற்போக்கு கழகம் என்ற கட்சியை துவங்கி இரண்டு முறை வென்று ஒருமுறை எதிர்க்கட்சித் தலைவராகவும் அமர்ந்து அவர் விழுந்ததும் எழுந்ததும் யாவரும் அறிந்த ஒன்றுதான்.

ஒருமுறை புரட்சித்தலைவர் தனது குரலை இழந்து மீண்டும் பெற்றார். அதேபோன்றுதான் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்களும் குரலை இழக்க நேர்ந்து மீண்டும் பெற முயற்சித்து முடியாமல் போனது காலத்தின் கோலம்.

அரசியல் நல்லவனைவிட வல்லவனையே எதிர்நோக்கி காத்திருக்கிறது என்பதை தான் நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

எது எப்படி என்றாலும் கேப்டன் விஜயகாந்த் தன்னுடைய வாழ்வை இனிமையாகவும் நேர்மை யாகவும் பயணித்தார் என்பதை அவர் இறந்த பிற்பாடு வந்த லட்சக்கணக்கான கடல்போன்ற மக்கள் திரளே சாட்சி.

யாரோ ஒரு மதுரைக்காரனாக திரைக்குள் நுழைந்து மதுரை வீரனாக மறைந்த வரலாறு தமிழகத்தின் தனிப்பெரும் புரட்சி.

அதற்கு அடையாளம்தான் தமிழக அரசு, அரசு மரியாதை செலுத்தி வழியனுப்பி வைத்தது.

uday010124
இதையும் படியுங்கள்
Subscribe