பாரதி ஒரு முன்னோடிக் கவிஞர். கவிதை, சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, இதழாளர், சித்திரக்காரர் என பன்முகம் கொண்டவர் பாரதி. நாட்டுப்பற்றாளர். விடுதலை வேட்கையாளர். அவரின் வாழ்க்கை ஒரு வரலாறு. தமிழக வரலாற்றுடனும் இந்திய வரலாற்றுடனும் பின்னிப் பிணைந்தது.
பாரதியின் படைப்புகளை பலரும் ஆய்வுச் செய்துள்ளனர். செய்தும் வருகின்றனர். அவரின் வரலாற்றையும் பலரும் எழுதி உள்ளனர். எழுதியும் வருகின்றனர். பாரதியைப் பற்றி தேடத் தேட புது புது செய்திகள் கிடைத்து வருகின்றன. அண்மையில் வெüவந்த கடற்கரை மந்த விலாசத்தின் பாரதி விஜயம் ஒரு சான்று. ஒரு முக்கிய ஆவணம்.
பாரதியின் வரலாற்றைப் பல்வேறு அறிஞர்கள் எழுதியிருந்த போதிலும் பாரதியின் துணைவியார் செல்லம்மாள் அவர்களே பாரதி வரலாற்றைப் பதிவுச் செய்துள்ளார்.
மகாகவி பாரதியின் துணைவியார் செல்லம்மாள் எழுதிய பாரதியார் சரித்திரம் என்று அடையாளப்படுத்தப் பட்டுள்ளது.
" காய்ந்து போன தமிழ்ப் பயிரைத் தனது சொல் மாரியால் செழிக்கச் செய்த இந்த மஹாகவியின் வரலாறு மகா ஆச்சரிய மானது. அங்குமிங்கும் சில குறிப்புகளைக் கேட்டே நமக்கு அளவற்ற மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது. அவர் வரலாற்றை எழுதுகிறவர் எழுதியüத்தால் தமிழ் மரபிற்கே பெரும்பயனாகும்.
அத்தகைய பணியை அவரது வாழ்க்கைத் துணைவியே மேற்கொண்டு "பாரதியார் சரித்திரம்' என்னும் இந்த அரிய நூலை நமக்கு அüத்துள்ளார் செல்லம்மாள் ' என்று முன்னுரையில் சுத்தானந்த பாரதி குறிப்பிட்டுள்ளார்.
பாரதியின் வரலாற்றைக் கூறும்முன் பாரதியின் தந்தை சின்னசாமியி-ருந்தே வரலாற்றைத் தொடங்கியுள்ளார் செல்லம்மாள். பாரதியின் இயற் பெயர் சுப்பிரமணியன் என்றாலும் சுப்பையா என்னும் செல்லப்பெயராலே அழைக்கப்பட்டுள்ளார். படிக்கும் வயதிலேயே பாட்டெழுதுவதில் பாண்டித்யம் பெற்றவர் என்று எட்டயபுரம் ஜமீன்தார் அறிந்து தெரிவித்துள்ளார். சோமசுந்தர பாரதியும் சுப்ரமணிய பாரதியும் தோழர்களாக இருந்துள்ளனர்.
பாரதிக்கு பதினான்கு வயதிலும் செல்லம்மாளுக்கு ஏழு வயதிலும் மணவினை முடிந்துள்ளது. பாரத

பாரதிக்கு பதினான்கு வயதிலும் செல்லம்மாளுக்கு ஏழு வயதிலும் மணவினை முடிந்துள்ளது. பாரதி ஆச்சாரமாக அல்லாமல் அனைவர் முன்பும் மனைவி யைப் பிடிக்காது என்பதுடன் இப்படியொரு கணவர் வாய்த்தற்காக செல்லம்மாள் வருத்தப்பட்டுள்ளார்.
தந்தை இறப்பிற்குப் பின் துயருற்று இருந்த நிலையில் அத்தையின் அழைப்பின் பேரில் காசி சென்று முடி வெட்டி மீசையும் வளர்த்துக் கொண்டார்.
இருப்பினும் நந்தன் சரித்திரக் கீர்த்தனையைத் திருத்தமாக பாடி பாராட்டுப் பெற்றுள்ளார். இருவருக்குமிடையே கடிதப் போக்கு வரத்து இருந்ததையும் தெரிவித்துள்ளார்.
திருநெல்வே-யி-ருந்து திரும்பிய பாரதி நாகரிகமாக இருந்ததுடன் நாத்திகனாகவும் இருந்துள் ளார். இதனால் அவமரியாதை வார்த்தைகளும் கே-ப் பேச்சுகளும் கேட்க நேர்ந்ததைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பாரதியார் சரித்திரத்தில் செல்லம்மாள் ’நாகரிகமும் நாஸ்திக மும்’ என்று ஒரு அத்தியாயத்தையே எழுதியிருக்கிறார்.அதில் ‘பாரதியார் அப்போது நவநாகரிகமடைந்து வாழவேண்டுமென்று விரும்பினார்.
பெண்கள் கல்வியில் முன்னேற்ற மடைந்து, ஆங்கிலப் பெண்மணி களைப் போல நாகரிகமடைந்து வாழ வேண்டுமென்றும் கருதினார்.
நமது சம்பிரதாயங்களும் மூடப் பழக்க வழக்கங்களும் அவருக்கு பெருத்த வேதனையை உண்டு பண்ணின. ஒவ்வொருவரும் மற்றவர்களைக் குறைகூறிக்கொண்டே தாங்கள் தாராளமாகாத் தப்பிதம் செய்வதையும்,தகுந்த தலைவர் கüன்றி நாடு சீர்குலைந்திருப்பதை யும், பழைய சாத்திரங்கள் செல்லரித்துப் படிப்பாரின்றி அழிவதையும், மாந்தர்கள் அறியாமை எனும் சேற்றில் அழுந்தித் தவிப்பதையும் கண்டு ’பாரத நாட்டிற்கு யாரால் விமோசனம் ஏற்படப்போகிறது?’ என்று மனம் புழுங்கினார்.’ என்றும் குறிப்பிடும் செல்லம்மாள் பாரதி...
‘காளைப் பருவமானதாலும் பண்படாத சுதந்ததர வீறுபடைத்த மனமாகையாலும், அவருக்கு நாஸ்திக வாதத்தில் பற்றுண்டாயிற்று.அதைப் பற்றிய நூல்களை வாசிக்கலானார்.’ என்றும் குறிப்பிடுவதோடு, தனது தாத்தாக்கüல் ஒருவரான அப்பாச்சாமி சிவன் என்பவருடன் பாரதியார் நடத்திய நாஸ்திக ஆத்திக வாதத்தைப் பற்றியும் இந்த நூ-ல் விவரித்திருக்கிறார்.
பாரதியின் நோக்கையும் போக்கையும் புரிந்து கொண்ட செல்லம்மா அவர் போக்கிலேயே விட்டுள்ளார். அவர் போக்கிலேயே விட்டதனால் உறவினர்கள் செல்லம்மாளைத் திட்டியதாகவும் பதிவுச் செய்துள்ளார்.
எட்டயபுரம் ராஜா அவருக்கு உதவிகள் செய்த போதும் அவருக்கு அடிமையாக இருக்க பிடிக்காமலும் எட்டயபுரத்தில் இருக்க பிடிக்காமலும் வெüயே றவே விரும்பியுள்ளார்.
மதுரைக்குச் சென்று பண்டிதராக பணிபுரிந்து பின் சுதேசிமித்திரனில் பத்திரிகையாளராக இருந்துள் ளார். பாடல்களும் கட்டுரைகளும் வ. உ. சி. யின் தொடர்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்கத்தாவில் நிவேதிதாதேவியின் சந்திப்பு பாரதி வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்தியுள்ளது. மனைவியை சக மனுஷியாக மதிக்கக் கற்றுள்ளார்.
தூத்துக்குடியில் சுதந்திர தினத் தைக் கொண்டாடியதற்காக வ. உ. சி., சிவா மீது வழக்குத் தொடரப்பட்டது. பாரதியார் சாட்சிக்காக அழைக்கப் பட்டார். பாரதியின் பேரிலும் வாரண்டு இருப்பதாக அறிந்து அர சிடம் சிக்கினால் ' தேச ஸேவைக்கு விக்கினம் ஏற்படும்' என்று புதுவைக்குப் புறப்பட்டார் பாரதி.
புதுவையில் குவளையின் உதவி யால் தங்குவதற்கு ஒரு வீடு கிடைத்தது.
புதிய நட்பும் கிடைத்தது. இந்தியா பத்திரிகையும் வந்தது. இந்நிலை யில் கடையத்தில் இருந்த செல்லம்மா விற்கு பெண் குழந்தை பிறந்தது.
பாரதி தந்தையானார். இந்தியா வும் நின்று போனது. கர்மயோகி தொடங்கி அதுவும் தடைப்பட்டது. தருமம் தோன்றியது. வ. வே. சு. அய்யரும் அரவிந்தரும் வந்து சேர்ந்தார். "தேசாபிமானம் என்பது மனத்தில் ஏற்பட்ட பின் யாராலும் நீக்க முடியாத தன்மை கொண்டதல்லவா?" என செல்லம்மாவே தேசப்பற்று வின் தீவிரத்தை உணர்த்தியுள்ளார்.
ஆஷைக் கொலைச் செய்த வாஞ்சி நாதனை ஒரு சுதந்திர போராட்ட வீரனாக வரலாறு பதிவுச் செய்துள்ளது. ஆனால் செல்லம்மா " ஓர் இளைஞன் ஆய்ந்தோந்து பாராமல் செய்த பிழையானது " என்று பதிவுச் செய்துள்ளார்.
பாரதிக்குத் தொடர்புடையோரையும் பாரதிக்கு உதவி செய்வோரையும் அடக்கு முறைக்கு ஆளாக்கி பாரதி தனிமைப்படுத்தப் பட்டார். கடிதப் போக்கு வரத்தும் தடைப் பட்டது. ஆனாலும் பாரதி உற்சாகத் துடன் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
பாரதி ஒரு பெண் விடுதலை விரும்பி என்பதை அவர் வாழ்வில் நடந்த சம்பவங்களையும் சம்பாஷனைகளையும் சான்றுகளாக்கித் தந்துள்ளார். பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்பது பாரதியின் எண்ணம்.
பாரதியை ஏமாற்றி புதுச்சேரியி-ருந்து தமிழக எல்லை வரை அழைத்து வந்து தமிழக காவல் துறையிடம் ஒப்படைக்க முயன்றவரிடமும் பாரதி ' அவரிடம் கொஞ்சம் கூட துவேஷம் பாராட்டாமல் வரவேற்று வார்த்தையாடினார்' என்கிறார்.
தமிழ்ச் சிறுகதை உலகம் பாரதி எழுதிய ஆறில் ஒரு பங்கு சிறுகதையே தமிழின் முதல் சிறுகதை என்றும் வ. வே. சு. ஐயர் எழுதிய குளத்தங்கரை அரச மரம் என்றும் பட்டிமன்றம் நடத்திக் கொண்டுள்ளது. வ. வே. சு. வின் குளத்தங்கரை அரசமரக் கதையைப் பாரதி வியந்து பாராட்டியதைச் செல்லம்மாள் குறிப்பிட்டுள் ளார்.
செல்லம்மாள் பகவத் கீதையை மனப்பாடஞ் செய்ய முயலும் போது ' உச்சரிப்பு அவ்வளவு ஸ்பஷ்டமாக இருக்க நியாயமில்லை' என்று பாரதி தான் தமிழில் எழுதிய பகவத் கீதையைப் பாடம் செய்யச் சொன்னதாகவும் ' பகவானை எந்த பாஷையில் வேண்டுமானாலும் ஸ்தோத்தரிக்கலாம்' என்று அவாள் பாஷையில் எழுதி பாரதியின் தமிழ்ப்பற்றையும் கடவுள் குறித்த அவரின் பார்வையையும் தெரிவித்துள்ளார்.
எதற்காக பயந்து புதுவையில் புகுந்தாரோ அந்த பயத்தைத் தவிர்த்து பிறந்த மண்ணைக் காண விரும்பி தமிழகம் திரும்பிய பாரதியாரைக் காவல் துறையினர் கைது செய்து விசாரணைக்குப் பின் தென்னாட்டில் கடையத்தில் பாரதி குடியேறினார். கடையத்தில் சிறிது காலம் கழித்து விட்டு பிறகு ' சென்னை வாறஸம்'.
சுதேசிமித்திரனில் ஆசிரியர் பணி. வ. வே. சு. அய்யர் போன்றோருடன் மீண்டும் பழகும் வாய்ப்பு. கடற்கரையில் அவ்வவ்போது பிரறஸங்கம் என்று காலம் கழிந்தது.
திருவல்-க்கேணியில் உள்ள பார்த்த சாரதி கோவிலுக்குச் செல்லும் வழக்கத்தையும் அங்குள்ள யானைக்கு தேங்காயும் பழமும் கொடுக்கும் வழக்கத் தையும் கொண்டிருந்த பாரதியை மதம் பிடித்த யானை அவரைக் கீழே தள்üவிட்டது. காயமடைந்து யானையின் காலடியில் கிடந்த பாரதியைக் குவளைத் கண்ணன் தூக்கி வந்ததாக கூறியுள்ளார். ஆயினும் பாரதியார் யானை மீது கோபம் கொள்ளாமல் யாரென்று தெரியாமல் தள்ü விட்டது என்றாராம்.
அதன் பின்பும் சென்னை வந்த காந்தியைச் சந்தித்துள்ளார். மனம் குன்றாத நிலையிலும் உடல் குன்றத் தொடங்கியது. இறுதிக் காலத்தில் பகவானை பூஜிப்பதிலேயே காலம் கடத்தி காலம் ஆனார்.
இறைவனது திருவருள் பெற்றவர்களை இளமையிலேயே இறைவன் அழைத்துக் கொள்கிறார் என்பது பாரதி விசயத்திலும் பொய்க்க வில்லை என்று 1921 செப்டம்பர் 11 பாரதியார் விண்ணுலகம் எய்தினார் என்கிறார்.
" இவ்வுலகில் வாழ்ந்த போது பாரதியார் எத்தனையோ துன்பங்களை அனுபவித்தார். எவ்வளவோ கஷ்டங்களுக்கு உள்ளானார். ஆனால் தாய் நாட்டிடம் அவர் கொண்டிருந்த அளவிலாத அன்பு மட்டும் கணமும் ச-க்கவில்லை. தமிழையும் தமிழர்களையும் அவர் ஒரு கணமும் மறக்கவில்லை. அல்லும் பகலும் அனவரதமும் அவருடைய உள்ளத்தில் குடிகொண்டிருந்த மனோரதம் இதுதான்.
வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திரு நாடு"
என செல்லம்மாள் பாரதியார் சரித்திரத்தை நிறைவு செய்துள்ளார். நெஞ்சைக் கனக்கச் செய்துள்ளார்.
பாரதியார் சரித்திரம் என்னும் இத்தொகுப்பை செல்லம்மாள் பாரதி எப்போது எழுதினார் என்னும் குறிப்பு எதுவுமில்லை. சுத்தானந்த பாரதியும் முன்னுரையில் குறிப்பிடவில்லை. பதிப்புரையும் இல்லை. இது போன்ற வரலாற்றுத் தொடர்பான நூல்கüல் குறிப்புகள் அவசியம். ஒரு நூற்றாண்டு காலமாக பரவலாக அறியப்பட்ட பாரதித் தொடர்பான சம்பவங்களே, நிகழ்வுகளே பாரதியார் சரித்திரம் என்னும் இத்தொகுப்பிலும் உள்ளது. இத்தொகுப்பின் சிறப்பு செல்லம்மா பாரதியே இதை எழுதியிருப்பதால் நம்பகத்தம்மை என்ற ருசி கூடுதலாகவே இருக்கிறது. அதிலும் அவர் காலத்தில் அவர் பயன்படுத்திய மொழி நடையிலேயே இதை அவர் எழுதியிருப்பதால், அவரது மன உணர்வின் ஆழமும் தெüவாக விளக்கமுறுகிறது.
நம் காதலுக்குரிய மகாகவிஞனைப் பற்றி, அவரது உண்மைக் காத-யான செல்லம்மா பாரதியே இந்த நூலை எழுதியிருப்பதால், நூ-ன் உயரம் கூடுதலாகவே இருக்கிறது.