கவிஞர் இலக்கியா நடராஜன் எழுதிய ’பெயர் தெரியாத பறவையென்றாலும்’, ‘மயானக் கரை ஜனனங்கள்’ ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டுவிழா அண்மையில் காரைக்குடியில் நடந்தது. நூல்களை முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட, அதை கவிஞர் வைரமுத்து பெற்றுக்கொண்டார். அமைச்சர் பெரியகருப்பன், ஆசிரியர் நக்கீரன் கோபால், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் மா.ராஜேந்திரன், கவிஞர் சக்திஜோதி உள்ளிட் டோர் பங்கேற்றனர். கவிஞர் இலக்கியா நடராஜன் ஏற்புரையாற்றினார்.
இந்த விழாவில் கலந்துகொண்டவர்களின் உரைகளில் இருந்து...
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bookrelease_3.jpg)
ஆசிரியர் நக்கீரன் கோபால்:
ஜென்ம சாபல்யம் அடைந்தது போன்ற மகிழ்வில் இருக்கிறார் இலக்கியா நடராஜன். காரணம் இந்த நிகழ்ச்சிக்காக கடந்த மூன்று மாதங்களாக அவர் உழைத்திருக்கிறார். அவரை முதன்முதலில் ஐயா சின்னக்குத்தூசி அவர்களின் அறையில்தான் சந்தித்தேன். அவர் பேசுவதே சுவாரஸ்யமாக இருக்கும். அவர் எதையும் விவரிக்கிற பாங்கு நம்மை ரசிக்க வைக்கும், அவர் சிறந்த கதைசொல்லியாகவும் இருக்கிறார். தனக்கு உடல் பலவீனம் ஏற்பட்டபோது மருத்துவர்களிடமும் அலைந்த அனுபவத்தை அவ்வளவு சுவாரஸ்யமான கதையாக அவர் விவரித்திருக்கிறார். அவர் எவ்வளவு சிறந்த படைப்பாளர் என்பதற்கு, அவரது அனுபவக் கதைகளும் கவிதைகளுமே சாட்சி. அவர் எழுதிய கவிதைகளில் அப்பாவைப் பற்றி எழுதியது, ரொம்பவும் மனதைத் தொட்டது. வாழ்வின் அனுபங்களில் இருந்து தனது படைப்பு களைப் படைப்பவராக இலக்கியா நடராஜன் திகழ்கிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bookrelease1_2.jpg)
முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம்:
நண்பர்கள் துணைவர்களாக இருக்கலாம். நண்பர்கள் தொந்தரவு செய்பவர்களாக இருக்கக் கூடாது. இடுப்புத்துணி அவிழ்ந்தால் மட்டுமல்ல, தோள்துண்டு விழுந்தால்கூட எடுத்துக் கொடுக்கிறவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட நண்பராக இலக்கியா நடராஜன் இருக்கிறார். என்னோடு அரசியல், இலக்கியம் என்று பல ஆண்டுகளாக அவர் பயணிக்கிறார். நான் மேடைகளில் பேசுகிறபோது, எந்த மேற்கோள் பாடல்களையாவது மறந்து விட்டால், அவரிடம்தான் கேட்பேன். இவரது சிறுகதைகளில் வருகிற பாத்திரங்கள், மனதில் பதிகிறவர்களாக இருக்கிறார்கள். நாற்காலி என்ற இவரது ஒரு கதைக்கு, கதாபாத்திரமே நாற்காலிதான். அதேபோல் அமலி என்ற இவரது பாத்திரப்படைப்பு என்னைக் கவர்ந்தது. அதை யெல்லாம் நீங்கள் படிக்கவேண்டும். கவிதை என்பது சிறுகதையில் இருந்து மாறுபட்டது. சில பொருள்களை, சில உண்மைகளை, உரைநடையில் சொல்ல முடியாது. கவிதை களில்தான் சொல்ல முடியும். அதையும் உணர்ந்தவர் இவர்.
கவிஞர் வைரமுத்து:
கவிதை என்ன செய்யும்? மானுடத்தோடு கவிதை நடந்து செல்லும். மனிதர்களைக் கவிதை ஆற்றுப்படுத்தும். எனவே கவிஞன் பாராட்டத் தகுந்தவன். மகாகவி காளிதாசன்கூட எழுது வதற்கு ஒரு சூழல் வேண்டும் என்று சொல்கிறான். குளத்தோரம் ஆலமரம் வேண்டும். அதன் நிழல் தரைமெழுக வேண்டும். குளத்தில் மலர்கள் மலர்ந்திருக்கவேண்டும். அதனிடையே அன்னப்பறவைகள், நீந்தவேண்டும்.. என்றெல்லாம் பட்டியலிட்டு விட்டு கடைசியில், என் மனைவியின் தாளிப்பு வாசம் வரவேண்டும் என்கிறான். அங்குகூட தன் மனைவியின் சமையல் இருக்கவேண்டும் என்று அவன் சொல்கிறான்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bookrelease2_0.jpg)
கவிஞர்களான நாங்கள் எல்லாம், சுதந்திரப் போராட்டத்தில் குதிக்க வேண்டியதில்லை. நாட்டுக் காக போராடத் தேவையில்லை. வீடு, குடும்பம், என்றெல்லாம் தியாகம் செய்யத் தேவையில்லை. தமிழுக்காகத் தீக்குளிக்க வேண்டியதில்லை. இன்றைய டீசல் நாகரிகத்தில், ஒருவன் கவிஞனாக இருப்பதே தியாகம்தான். பத்திரிகை நடத்துவதே தியாகம்தான். பத்திரிகைக்கு எழுதுவதே தியாகம் தான். நூல் வெளியிடுவது என்பது பெரிய தியாகம் தான். அதிலும் நம் இலக்கியா நடராஜன், அறிஞர் அண்ணாவுக்கு மிகவும் பிடித்த, இந்த மண்ணின் மூத்த கவிஞர் எங்கள் மீராவின் பட்டறையில் வார்க்கப்பட்டவர்.
ப.சிதம்பரம், இவரது நூலுக்கு ஒரு அணிந்துரை எழுதியிருக்கிறார். அதைப் படித்து மகிழ்ந்தேன்.
அவர் மட்டும் பொருளா தார மேதையாக இல்லாது போயிருந்தால், தமிழுக்கு நோபல் பரிசு வாங்கித் தரும் எழுத்தாளராக சிதம்பரம் இருந்திருப் பார்.
இலக்கியன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-11/bookrelease-t.jpg)