ஔவை போற்றுதும் கொன்றைவேந்தன்

/idhalgal/eniya-utayam/be-happy

அம்மம்மா ஔவைதன் பாட்டமுதின் ஈடுரைக்க

இம்மா வுலகினிலே ஏதொன்றும் உளதாமோ?

கொன்றை வேந்தனெனும் கூத்தன் பெயரதாலே

நின்றாளும் அறவுரைக்கு நிகரேது தமிழில்!

ovai

அன்னையும் தந்தையுமே கண்முன்னே தெய்வமென்றார்;

பின்னை அவர்சற்றே பின்வாங்கினார் போலவொரு

சொற்றொடரை யாக்கிச் சுழலவைத்தார் சிந்தனையை

உற்றதோர் ஆலயத்தைத் தொழுதல்மிக நன்றென்றார்!

ஆலயமா? பெற்றோரா? ஆர்நல்ல தெய்வமாவார்?

ஆலயந்தான் அன்னைதன் திருவடியே என்றுணர

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வமென்றார்!

பின்னையோர் ஆலயத்தைப் போய்த்தேட வேண்டுங்கொல்!

எண்ணென்ப யேனை எழுத்தென்ப எனநீட்டிக்

கண்ணென்ப வாழும் உயிர்க்கென்றார் வள்ளுவனார்

என்ப'எ

அம்மம்மா ஔவைதன் பாட்டமுதின் ஈடுரைக்க

இம்மா வுலகினிலே ஏதொன்றும் உளதாமோ?

கொன்றை வேந்தனெனும் கூத்தன் பெயரதாலே

நின்றாளும் அறவுரைக்கு நிகரேது தமிழில்!

ovai

அன்னையும் தந்தையுமே கண்முன்னே தெய்வமென்றார்;

பின்னை அவர்சற்றே பின்வாங்கினார் போலவொரு

சொற்றொடரை யாக்கிச் சுழலவைத்தார் சிந்தனையை

உற்றதோர் ஆலயத்தைத் தொழுதல்மிக நன்றென்றார்!

ஆலயமா? பெற்றோரா? ஆர்நல்ல தெய்வமாவார்?

ஆலயந்தான் அன்னைதன் திருவடியே என்றுணர

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வமென்றார்!

பின்னையோர் ஆலயத்தைப் போய்த்தேட வேண்டுங்கொல்!

எண்ணென்ப யேனை எழுத்தென்ப எனநீட்டிக்

கண்ணென்ப வாழும் உயிர்க்கென்றார் வள்ளுவனார்

என்ப'எனும் ஒட்டெதற்கு? இவ்விரண்டும்' சொல்லெதற்கு?

மன்னுயிர் என்றாலே வாழ்தலன்றிச் சாதலுண்டோ?

வாழும் உயிரென்றது குறுக்கமோ? பிறகெதற்கு?

தாழும் மனவுணர்வு தருமின்பம் பெரிதாமோ?

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகுமென்ற

பண்ணார்ந்த ஔவைமொழி பகருங்கால் உண்மையிலே

குறுகத் தரித்த குறளுக்குக் குறளன்றோ?

மருவினிய செந்தமிழின் மாண்பை மிகுக்குமன்றோ?

மக்களைப் பெறுதல் எனுமோர் அதிகாரம்

தக்கபல சிந்தனைகள் தாமுரைக்கும் ஆனாலும்

ஔவை உரைத்ததொரு அருங்கருத்(து) ஆண்டில்லை!

செவ்வி அறிதலெனும் சிந்தனை குறளிலுண்டு!

ஆனாலும் பெற்றோர் உரைக்குமுன்பே குறிப்பறிந்து

தானா(மா)கச் செய்துவிடும் மக்கள்அரு மருந்தன்றோ?

ஏவாமக் கள்மூவா மருந்தென்றார் ஔவையார்தாம்.

சொன்னாலும் கேளாத பிள்ளைகளைப் பார்க்கின்றோம்

என்னமன வேதனைகள் இப்பிள்ளை களாளென்று

தன்(ம்)துயர் பேசுகின்ற தந்தையரைக் காண்கின்றோம்!

என்செய்து தீருமிந்த இழிநிலைகள் அப்பப்பா!

போருக்குச் செல்கவென ஏவியபின் (புற) நானூற்று

வீரமகன் தான்சென்றன் அதனினும் ஔவைசொன்ன

ஏவாதே வினையாற்றும் மக்கள், இளமையுற

மூவாது நாம்வாழ முன்னிற்கும் மருந்தன்றோ

venkatசுற்றத்தைத் தழுவிவாழ் என்றே அறமுரைத்தார்

நற்றமிழ் வள்ளுவனார், அவருந்தாம் குற்றத்தைப்

பார்த்திட்டால் சுற்றமில்லை என்றாரா?சொல்லிடுவீர்!V கூர்ந்துமிக நோக்கின் குற்றமும் உற்றதேயாம்!

குற்றங்கண்(டு) உரைத்திடிலோ சுற்றத்தான் ஓடிவிடும்!

எற்றானும் பொறுத்தலே ஏற்புடைய நெறியாகும்!

உலகத்தோ(டு) ஒட்டிவாழ் என்றார்திரு வள்ளுவனார்

கலகமனம் படைத்தோரும் கண்டுள்ளோம் நம்வாழ்வில்!

ஊராரைப் பகைக்காதே உன்வாழ்வு அவர்கையில்

வேராய் இருந்தபலர் விழுதாக நிலைபெறாது

மாறாய் அழிவுற்ற மாக்கதைகள் பலவுண்டு!

தீராத பகைவளர்த்தல் வேண்டாமென்(று) ஔவைதாம்

ஊருடன் பகைக்கின் வேருடன் கெடுமென்றார்!

தேர்ந்திடுக இக்கருத்தைத் தெளிவாக மக்களெல்லாம்!

புறத்தாற்றின் போஓய்ப் பெறுவதெவன்?வள்ளுவமாம்

அறத்தாற்தாற்றின் இல்லறமே அதனினும் மேலன்றோ?

இல்லற மல்லதுநல் லறமன்று ஔவைமொழி

சொல்லறம் பிறழாத தூயநல் உரையென்றோ?

கற்பு கற்பென்றே கதைக்கின்றோம் அஃதென்ன?

மற்றஃ(து) ஆண்களுக்கில் லையாமோ?என்றவினா

எங்கும் ஒலிக்கிற(து) ஏராளம் இடித்துரைகள்!

பொங்கும் உளங்களுக்குப் பொறுப்பாய் விடையுண்டா?

உண்டுண்டு ஔவைமொழி கொன்றை வேந்தனிலே!

சொன்னசொல் தவறாத திடம்வேண்டும் எவ்வெவர்க்கும்

வன்னத் தமிழினிலே வாகான ஒருவிளக்கம்

முன்னம் எவர்தாமும் மொழியாத புதுவிளக்கம்

'கற்பெனப் படுவது சொற்றிறம் பாமை'யென

அற்புதம்! சொல்மாறி சோமாறி எனத்தக்கார்!

சொன்னசொல் காப்பதற்காய்ச் சொல்லரிய இன்னல்பல

துன்னிய அரிச்சந்தி ரன்கதையின் துலக்கம்தான்

கற்பெனப் படுவது சொற்றிறம் பாமையாம்!

கற்பெனில் ஆண்தகைக்கும் ஆமென்று கண்டுணர்க!

(போற்றுவம்)

uday011218
இதையும் படியுங்கள்
Subscribe