கிழக்குப் பக்கமிருந்த திண்ணையில் ஒரு பாயை விரித்து அமர்வதற்காக புறப்பட்டுக் கொண்டிருந்தாள் அம்முவம்மா.
அப்போது படியைக் கடந்து ஒரு மனிதர் வந்துகொண்டிருந்தார்.
அருகில் வந்ததும் ஆள் அடையாளம் தெரிந்தது.
அப்புக்குட்டன் நாயர்...
"தங்கமணி இப்போ எங்கு இருக்கான்னு நீங்க நினைக்கிறீங்க...
அம்முக்குட்டி அம்மா?
அவர் ஒரு முறை தலையைத் திருப்பி துப்பிவிட்டு, கேட்டார்.
"அவள் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அந்த கோவில் குளத்துல குளிக்கிறதுக்காக போனாள். இப்போ வருவாள். கொஞ்சம் துவைக்குறதுக்கு துணிகளும் இருந்தன.''
"அப்படின்னா... கேட்டுக்கோங்க.
இப்போ துணி துவைக்கிற காரியத்தை தங்கமணி செய்யல. இப்போ நனைஞ்ச துணியை அணிஞ்சுக்கிட்டு உடம்பைக் காட்டிக்கிட்டு அந்த குளத்தோட ஓரத்துல மேலே பார்த்துக்கிட்டு நின்னுக்கிட்டு இருக்கிறாள். குறவன்மார்கள் அதைப் பார்த்து நின்னுக்கிட்டு இருக்காங்க.''
"குறவன்மார்களா?''
"ஆமாம்... அந்த வழியா போகுற குறவன்மார்கள்! தங்களோட கூடையையும் குடையையும் கீழே இறக்கி வச்சிட்டு இந்த காட்சியைப் பாக்குறதுக்கமாக நிக்கிறாங்க.''
"இப்போ கேக்குறது உண்மையா?''
"நான் கொஞ்ச நாட்களாகவே இதைச் சொல்லணும்னு நினைச் சுக்கிட்டு இருந்தேன். தங்கமணி இந்த காரியத்தைச் செய்ய ஆரம்பிச்சு கொஞ்ச நாட்கள் ஆகி வ
கிழக்குப் பக்கமிருந்த திண்ணையில் ஒரு பாயை விரித்து அமர்வதற்காக புறப்பட்டுக் கொண்டிருந்தாள் அம்முவம்மா.
அப்போது படியைக் கடந்து ஒரு மனிதர் வந்துகொண்டிருந்தார்.
அருகில் வந்ததும் ஆள் அடையாளம் தெரிந்தது.
அப்புக்குட்டன் நாயர்...
"தங்கமணி இப்போ எங்கு இருக்கான்னு நீங்க நினைக்கிறீங்க...
அம்முக்குட்டி அம்மா?
அவர் ஒரு முறை தலையைத் திருப்பி துப்பிவிட்டு, கேட்டார்.
"அவள் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அந்த கோவில் குளத்துல குளிக்கிறதுக்காக போனாள். இப்போ வருவாள். கொஞ்சம் துவைக்குறதுக்கு துணிகளும் இருந்தன.''
"அப்படின்னா... கேட்டுக்கோங்க.
இப்போ துணி துவைக்கிற காரியத்தை தங்கமணி செய்யல. இப்போ நனைஞ்ச துணியை அணிஞ்சுக்கிட்டு உடம்பைக் காட்டிக்கிட்டு அந்த குளத்தோட ஓரத்துல மேலே பார்த்துக்கிட்டு நின்னுக்கிட்டு இருக்கிறாள். குறவன்மார்கள் அதைப் பார்த்து நின்னுக்கிட்டு இருக்காங்க.''
"குறவன்மார்களா?''
"ஆமாம்... அந்த வழியா போகுற குறவன்மார்கள்! தங்களோட கூடையையும் குடையையும் கீழே இறக்கி வச்சிட்டு இந்த காட்சியைப் பாக்குறதுக்கமாக நிக்கிறாங்க.''
"இப்போ கேக்குறது உண்மையா?''
"நான் கொஞ்ச நாட்களாகவே இதைச் சொல்லணும்னு நினைச் சுக்கிட்டு இருந்தேன். தங்கமணி இந்த காரியத்தைச் செய்ய ஆரம்பிச்சு கொஞ்ச நாட்கள் ஆகி விட்டன.''
"எஞ்சி இருக்குறவங்க எல்லாரும் குளிச்சிட்டுப் போன பிறகுதான் அவள் எண்ணெய்யைத் தேய்ச்சிக்கிட்டு இறங்குவாள். பிறகு... அந்த உடம்பைக் காட்டிக்கிட்டு ஒரு நிற்றல்....''
"என் குருவாயூரப்பா! என்ன நடக்கப் போகிறதோ? தெரியலையே! எனக்கு மனசுல ஒரு சுகமே இல்லாமப் போச்சு.''
"என்ன நடக்கப்போகுதுன்னு நான் சொல்லவேண்டியது இல்லையே! குறவன்மார்கள் ஒரு சரியான நேரத்தை இப்போ எதிர்பார்த்துக்கிட்டு இருக்காங்க. ஒருநாள் அவங்க தங்கமணியைத் தூக்கிட்டுப் போயிடுவாங்க.''
"சொல்லாதீங்க... உங்களோட கடுமையான நாக்கால அப்படி எதையும் சொல்லாதீங்க...''
"நேற்று இருட்டின பிறகு நான் அந்த வழியா போகுறப்போ, தங்கமணி உடம்பைக் காட்டிக்கிட்டு... சிரிச்சிக்கிட்டு நிற்கிறாள்.
குறவன்மார்கள் பார்த்துக்கிட்டு இருக்காங்க. ஒருநாள் அவங்க அவளைத் தூக்கிட்டுப் போயிடுவாங்க.நான் சொல்லாமப் போயிட்டேனேன்னு அப்போ சொல்லக் கூடாது.''
அப்புக்குட்டன் நாயர் வாசலைக் கடந்து சென்றார்.
"என் குருவாயூரப்பா! என்ன நடக்கப் போகுதோ? எனக்கு உறுதியா தெரியலையே!''- அம்முவம்மா தனக்குத் தானே கூறிக்கொண்டாள்.
இருட்டு மேலும் சற்று கனமான பிறகுதான் தங்கமணி வீட்டிற்குள் நுழைந்தாள். தன் தலைமுடியைப் பின்னால் அவிழ்த்துப் போட்டிருந்தாள்.
"குடும்பத்தின் மானம் காத்துல பறக்குற மாதிரி குளிக்காதே...
தங்கமணி!''- அம்முவம்மா கூறினாள்.
"அம்மா... நீங்க என்ன சொல்றீங்க?''-
அவள் கேட்டாள்: "நான் இப்போ என்ன செஞ்சிட்டேன்?''
"நீ எதுவுமே செய்யல. அப்படித்தானே? குளத்தின் ஓரத்துல ஈரத் துணியைச் சுத்திக் கிட்டு, உடம்பு முழுவதையும் காட்டிக்கிட்டு, அந்த குறவன்மார்களைப் பார்த்து சிரிச்சு நின்னுக்கிட்டு இருந்தது யார்? எனக்கு எல்லாமே தெரியும்.''
"நான் யாரையும் பார்த்து சிரிக்கல. அம்மா... உங்களுக்கென்ன பைத்தியம் பிடிச்சிருச்சா?''
"அப்படின்னா... எதைப் பார்த்து குறவன் மார்கள் குளத்தின் கரையில் கண்களை அகல திறந்து வச்சிக்கிட்டு நின்னாங்க?''
"குறவன்மார்களா? நான் குறவர்கள் யாரை யும் பார்க்கல. நான் குளிச்சிட்டு இங்கு வர்றேன்.
அந்த கிழவர் அப்புக்குட்டன் நாயரைத்தவிர, யாரையும் அங்கு எங்கும் நான் பார்க்கல..''
அம்முவம்மாவிற்கு கோபம் வந்தது. விளக்கை மகளின் முகத்திற்கருகில் கொண்டு சென்றவாறு அவள் உரத்த குரலில் கூறினாள்: "நான் உன் கழுத்தை அறுத்துடுவேன். பார்த்துக்கோ... தேவையில்லாத காரியத்தைச் செய்தால்...''
"அம்மா... இன்னைக்கு உங்களுக்கு என்ன ஆச்சு?'' தங்கமணி கேட்டாள்.
அவளுடைய கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த பவள மாலை திடீரென வெளிச்சத்தில் சற்று பிரகாசித்தது.
"உனக்கு இந்த மாலை எங்கிருந்து கிடைச்சதுடீ...?''- அம்முவம்மா கேட்டாள்.
"இது... எனக்கு அந்த வழியில கிடைச்சது..''
"உண்மையைச் சொல்லு... எதைக் கொடுத்ததால, உனக்கு அந்த குறவன்மார்கள் இந்த பவள மாலையைக் கொடுத்தாங்க?''-
அம்முவம்மா தோளில் ஒரு கையை வைத்தாள்.
"சொல்லு... எப்படி கிடைச்சது? இது கிடைக்கிறதுக்கு நீ என்ன செஞ்சே?'' "இதுவழியில கிடந்தது. யாரும் தந்ததல்ல...''- தங்கமணி கூறினாள்.
"உன்னை நான் கொன்னுடுவேன்.''
"கொன்னுடுங்க... ஆனால், இந்த மாலை எனக்கு வழியில கண்டெடுத்து கிடைச்சது தான்.''
_____________
மொழிபெயர்ப்பாளரின் உரை
வணக்கம்.
இந்த மாத "இனிய உதய'த்திற்காக 3 மாறுபட்ட சிறுகதைகளை நான் மொழிபெயர்த்திருக்கிறேன்.
"ஈரத் துணியும் ஈரமான கண்களும்' கதையை எழுதியவர்... மூத்த மலையாள எழுத்தாளரும், கேரள சாகித்ய அகாடெமி விருது பெற்றவருமான உண்ணிகிருஷ்ணன்புதூர்.
ஆதரவற்ற ஒரு பரிதாபத்திற்குரிய ஏழைத் தாயையும், அவளுடைய இரு அன்பு மகன்களையும் மையமாக வைத்து எழுதப்பட்ட கதை.
"இது வெறும் கதை அல்ல. உண்மையிலேயே நடைபெற்ற பல சம்பவங்களின் எழுத்து வடிவம்' என்று கூறுவதே சரியானது.
இதை உண்ணிகிருஷ்ணன் புதூர் 1960-ஆம் வருடத்தில் எழுதியிருக்கிறார்.
இதன் மூலம் அந்தக் காலகட்டத்தில் கேரளத்தில் ஆதரவற்ற பெண்களின் வாழ்க்கை எந்த அளவிற்கு துயரமும் கண்ணீரும் நிறைந்ததாக இருந்திருக்கிறது என்பதை நம்மால் உணர முடிகிறது.
இந்த கதையில் வரும் பெண்ணுக்காகவும் மகன்களுக்காகவும் என் கண்கள் கசிந்திருக்கின்றன. அத்தகைய உணர்வு இந்த கதையை வாசிக்கும் உங்களுக்கும் உண்டாகும் என்று எனக்கு தெரியும்.
"பவள மாலை' கதையை எழுதியவர்... மலையாளப் பெண் எழுத்தாளர்களின் நட்சத்திரமும், தேசிய சாகித்ய அகாடெமி விருது பெற்றவருமான மாதவிக்குட்டி.
தங்கமணி என்ற இளம்பெண்ணையும் அவளின் தாயையும் கதாபாத்திரங்களாக வைத்து எழுதப்பட்ட கதை.
இந்த கதையை மாதவிக்குட்டி 1966-ஆம் ஆண்டில் எழுதியிருக் கிறார்.
தங்கமணிக்கு பவள மாலை கிடைத்தது எப்படி?
கதையை வாசிப்பவர்களின் யூகத்திற்கே இதைவிட்டுவிடுகிறார் மாதவிக்குட்டி.
புதுமையான உத்திதான்!
"ஓநாய்கள் அவற்றின் குட்டிகளுக்கு கற்றுத் தருவது எப்படி?' என்ற ரஷ்ய மொழி கதையை எழுதியவர்... உலக புகழ்ப்பெற்ற இலக்கிய மேதையான லியோ டால்ஸ்டாய்.
இந்தச் சிறிய கதையின் மூலம் எவ்வளவு பெரிய உண்மையை டால்ஸ்டாய் வெளிப்படுத்துகிறார்!
அதுதான் லியோ டால்ஸ்டாயின் தனித்துவ முத்திரை!
இந்த மூன்று கதைகளும் உங்களின் உள்ளங்களில் நிச்சயம் வாழும். என் மொழிபெயர்ப்பு படைப்புகளை ஆர்வத்துடன் வாசிக்கும் உயர்ந்த உள்ளங்களுக்கு நன்றி.
அன்புடன்,
சுரா