கஸ்ட் பதினான்காம் தேதி இரவு எட்டரை மணிக்கு நான் மரணமடைந்தேன்.

எட்டு மணிக்கு டாக்டர் என்னை இறுதியாகப் பார்த்தார். எனக்கு எந்த ஆபத்தும் உண்டாகாதென்று அவர் உறுதியான குரலில் கூறினார். அப்போது கட்டிலைச்சுற்றி கூட்டமாக நின்றிருந்த மனைவியும் குழந்தைகளும் உறவினர் களும் நண்பர்களும் நிம்மதியாகப் பிரிந்து சென்றார் கள்.

அவர்கள் முன்னறையிலும் வாசலிலும் நின்றவாறு ஊர் விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால், ஜிம்மி மட்டும் போகவில்லை.

என் தலையணையில் முகத்தை அழுத்தி வைத்தவாறு, ஈரமான வட்டக் கண்களை மேலும் அகலத் திறந்து வைத்து, அவன் என்னையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

Advertisment

இடையே அவ்வப்போது அவன் முனகினான். டாக்டரின் வார்த்தைகளை அவன் நம்பவில்லை என தோன்றியது.

ஜிம்மியைத் தடவுவதற்கு நான் முயற்சித்தேன். ஆனால், என் கை உயரவில்லை. என் சரீரம் முழுவதும் கனமற்றுத் தோன்றியது.

ஹீலியம் நிறைக்கப்பட்ட பலூனைப்போல சரீரம் உயர்கிறதோ? எங்கும் நிறங்கள் பரவி இருக்கின்றனவோ? படுக்கையறையின் சுவர்களில்... சுவரில் அமைக்கப்பட்ட அலமாரிகளில்...

Advertisment

சாளரத்தின் வழியாக என்னால் இப்போதும் பார்க்கமுடிகிற தென்னையோலை நுனிகளில்...

ஒன்பது வண்ணங்கள் என்று எண்ணி முடிவுசெய்த முட்டாள் யார்? இதோ... எண்ணற்ற நிறங்கள்... நான் அறிந்திராத மிகவும் அழகான வண்ணங்களின் கலவை! இந்த வண்ணங்களைப் பயன்படுத்தி ஓவியங்கள் வரைந்தால், எப்படியிருக்கும்? ஓ...! என்னால் வரைய முடியவில்லை.... கை உயரவில்லை... விரல்கள் மடங்கவில்லை....

எனினும், முதல் முறையாகப் பார்க்கக்கூடிய அந்த வண்ணங்களுக்கு நான் பெயர்கள் வைக்க நினைத்தேன். என் ஓவிய நண்பர்கள் நான் கண்டுபிடித்த பெயர்களைக் கேட்டிருந்தால், குலுங்கிக் குலுங்கி சிரித்திருப்பார்கள்.

"இல்லாத வண்ணங்களுக்கு கிறுக்குத்தனமான பெயர்கள்'' என்று அவர்கள் கூறியிருப்பார்கள்.

காம்போஜ் ரெட்... விரிடியன் ப்ளாக்... ஸ்கார்லெட் லெமன்... ப்ரஷ்யன் மஜன்டா... க்ரோம் அம்பர்...

என்னைப்போலவே ஜிம்மியும் மாறிமாறி வரும் அந்த வண்ணங்களின் அழகைக் கண்டிருக்குமோ? வெண்ணிற சாமரத்தைப் போலிருந்த அவனுடைய ரோமங்களுக்கு மத்தியிலிருந்து கண்கள் வெளியே வருகின்றன.

அவற்றுக்கு அதிர்ச்சி உண்டானதைப் போல....

ஜிம்மி சற்று மெல்லிய குரலில் சத்தம் உண்டாக்கினான். அவனுடைய கண்களில் மனிதனின் அறிவு வெளிப்படுவதைப் போல தோன்றியது.

நான் அழைத்தேன்:

"ஜிம்மீ...''

ஆனால், என் குரல் வெளியே கேட்கவில்லை.

அப்போதுதான் எனக்கே தெரிந்தது- நான் இறந்து கொண்டிருக்கிறேன் என்பதே. எதிரிலிருந்த சுவரிலுள்ள "குக்கூ க்ளாக்'கில் நேரத்திற்கான அடையாளம் தெளிவாகத் தெரிந்தது. எட்டே கால்!

மரணத்தைப் பற்றி என் பாட்டி கூறக் கூடிய விஷயங்கள் நினைவில் வந்தன. நல்ல வாழ்க்கை வாழ்ந்தவன் மரணமடையும்போது, விஷ்ணுவின் தூதர்கள் தோன்றுவார்கள்.

கெட்ட மனிதன் மரணமடையும்போது, தோன்றுபவர்கள்.... கயிறுடனும் எருமையுடனும் வரும் எமனின் ஆட்கள்...

நான் போக்கிரி...

கயிறு இருக்கிறதா? எருமை இருக்கிறதா? எமனின் ஆட்கள் இருக்கின்றார்களா? நான் சுற்றிலும் பார்த்தேன்.

எதுவுமே இல்லை. அந்த அசாதாரண வண்ணங்களைத் தவிர..

பிறகு... ஜிம்மியும்.

எட்டரைக்கு நான் கட்டிலிலிருந்து உயர்ந்தேன்.

அறையின் மேற்கூரை வரை... அறையின் மேற்கூரையிலிருந்து பார்த்தபோது, கட்டிலில் அசைவே இல்லாமல் படுத்திருந்த என்னையும், என் நெஞ்சில் முகத்தை வைத்து அழுது கொண்டிருக்கும் ஜிம்மியையும் நான் பார்த்தேன்.

நான் முன்னறைக்குள் நுழைந்தேன். யாரும் என்னைப் பார்க்கவில்லை.

விலைவாசி உயர்வைப் பற்றி, திருமணங்களைப் பற்றி, புடவைகளைப் பற்றி, திரைப்படத்தைப் பற்றி.... இப்படி ஓராயிரம் காரியங்களைப் பற்றி அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். என்னைப் பற்றி யாரும் எதுவும் பேசவில்லை. எனக்கு சற்று கோபம் உண்டானது.

நான் என் மனைவியின் அருகில் சென்று நின்றேன்.

வாழ்க்கையின் அனைத்து சந்தோஷங்களிலும் துக்கங்களிலும் பங்குபெற்றவள் அவள். இப்போது அவள் என்ன பேசிக் கொண்டிருக்கிறாள் என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

"அவருக்கு ஏதாவது நடந்தால்... ஹோ... நினைத் துப் பார்க்க முடிய வில்லை.'' மனைவி சில பெண்களுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

எனக்கு சந்தோஷம் உண்டானது. அன்பு வைத்திருப்பவள் அவள்...

ஆனால், அதோ அவள் தொடர்கிறாள்: "எதுவுமே சம்பாதிக்கவில்லை. ஏதாவது பிரச்சினை உண்டானால், என் பிள்ளைகளை நான் எப்படி வளர்ப்பேன்?''

நான் ஒரு தோல்வி யடைந்த மனிதன் என்று அவள் கூறுகிறாள்.

குடும்பத்திற்கென ஒரு வங்கி சேமிப்பைச் சம்பாதித்து வைக்காத முட்டாள்....

படுக்கையறையில் ஜிம்மியின் உரத்த கூப்பாடு கேட்டது.

நான் இறந்துவிட்டேன் என்பதை அவன் இப்போதுதான் தெரிந்துகொண்டிருக்கிறான்... நிமிடங்களுக்குப் பிறகு...

asthi

அவனுக்குக் கவலை இருக்கிறது. நான் அவனை அந்த அளவிற்கு அன்புசெலுத்தி வளர்த்தி ருக்கிறேன். மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு ரசிகர் அவனை எனக்குப் பரிசாக அளித்தபோது, ஜிம்மி வெளுத்த பேட்மின்டன் பந்தைப் போன்றிருந்த சிறிய குட்டியாக இருந்தான். நான் பால் புட்டியில் பாலை ஊற்றி ஒரேயொரு குட்டிக்கு மட்டுமே கொடுத்திருக்கிறேன். ஜிம்மிக்கு... என் மரணத்தை நினைத்து இந்த பாமரேனியன் நாய் அளவிற்கு வேறு யாரும் கவலைப்படப் போவதில்லை.

கேட்டிற்கு வெளியே என் காலடியோசையைக் கேட்டவுடன், துள்ளிக் குதித்து வரக்கூடிய... என்மீது தாவி ஏறக்கூடிய... என் கால்களில் நக்கக் கூடிய ஜிம்மி... அவன் என்மீது அன்பு வைத்திருந் தான்...

ஆழமாக. நாளையிலிருந்து அவன் என்னைத் தேடியலை வான்.

தொடர்ந்து எழுந்த ஜிம்மியின் பரிதாபமான ஓலத்தைக் கேட்டு, முன்னறையில் நின்று கொண்டிருந்த வர்கள் வேகமாகப் படுக்கை யறைக்கு வந்தார்கள்.

கூட்ட அழுகை...

நான் இறந்துவிட் டேன் என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்ட தருணம்... கூட்ட அழு கையை உண்டாக்கியது என் மனைவியும் பிள்ளை களும்...

மற்றவர்கள் சூழலுக் கேற்றபடி தலைகுனிந்து நின்றிருந்தார்கள்.... நெஞ்சில் கைகளைக் கட்டியவாறு...

மேற்கூரையைப் பார்த்தவாறு... எதுவும் பேசாமல்....

சோகம்.

சோகத்தின் பலவிதமான முகங்கள்.

ஓவியம் வரைவதற்கேற்ற விஷயம்.

கூட்ட அழுகையின் பலம் குறைந்தது. அது என் மனைவியின் தனிப்பட்ட தேம்பலாக மாறியது. அந்தத் தேம்பல்கூட மெலிந்து... மெலிந்து வந்துகொண்டிருந்தது.

யாரோ மனைவியைத் தாங்கிப் பிடித்திருந்தார்கள். வேறொரு அறைக்குக் கொண்டுசென்றார்கள்.

நிமிடங்களுக்குள் துக்கத்தின் சத்தம் ஒரேயொரு உயிரில் மட்டுமே எஞ்சி நின்றது... ஜிம்மியின்... அவன் இடையே அவ்வப்போது முனகினான்... புலம்பினான்.

ஆட்கள் வேகமாக நடந்தார்கள்.

குத்துவிளக்கு...

சில்க் சட்டை.... வேட்டி...

என்னை அவர்கள் குளிப்பாட்டி படுக்கச் செய்தபோது, நான் அவர்களுக்கு மத்தியில் நடந்துகொண்டிருந்தேன்.

நான் ஒரு நண்பரிடம் விளையாட்டாகக் கூறி னேன்: "என் தலையை நல்லமுறையில் துவட்டணும். இல்லாவிட்டால்.... எனக்கு ஜலதோஷம் பிடிச்சிடும்.'' அவர் அதைக் கேட்கவில்லை.

பத்திரிகையாளரான அவர் பக்கத்து வீட்டிலிருக்கும் தொலைபேசியை நோக்கி ஓடினார். செய்தி யைக் கூறக்கூடிய நிமிடம்... ஓவியர் மரணமடைந்து விட்டார். அரை காலம் இடம் ஒதுக்கக்கூடிய செய்தி...

இன்னொரு நண்பர் என் முழு வாழ்க்கையையும் எடை போடுவதைக் கேட்டேன்: "இருந்த ஒரு நல்ல வேலையை விட்டெறிஞ்சாச்சு. ஓவியராம்! ஆர்ட்டிஸ்ட்! ஒரேயொரு ஓவியம்கூட விற்பனையானது இல்ல...''

கேட்டுக்கொண்டு நின்றிருந்தவர்கள் கூறினார் கள்:

"உண்மைதான்! குடும்பத்திற்காக மொத்தத்தில் வைத்துவிட்டு போயிருப்பது இருநூறு ஓவியங்கள் தான்!''

சிலர் என்மீது ஆணி அடித்தார்கள்: "பாவம்....

ஜீனியஸ் என்று தன்னைத் தானே நம்பிக்கொண்டி ருந்தார். தன் சொந்த வாழ்க்கையை நாசமாக்கிக் கொண்டார்''.

"நான் குடிப்பதை நிறுத்தப் போகிறேன். இவ்வளவு சீக்கிரம் இறப்பதற்கு நான் தயாராக இல்லை.'' என்னை உதாரணமாகக் கொண்டு ஒரு நல்ல பாடத்தைத் தேடிக் கண்டு பிடித்தான் இன்னொரு ஆள்.

பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள் கூட்டம் கூட்டமாக வந்தார்கள்.

என் தலைப்பகுதியில் அமர்ந்தவாறு, ஜிம்மி கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தான். வெண் சாமரத்தைப் போலிருந்த அவனுடைய ரோமங்கள் நனைந்திருந்தன.

அந்த பகுதியில் முக்கிய நபராகவும் சமுதாயத் தலைவராகவும் இருந்த ஒரு நடுத்தர வயது மனிதருக்கு ஜிம்மி அமர்ந்திருப்பது பிடிக்கவில்லை.

"இந்த நாய் எதற்கு இங்கு இப்படி உட்கார்ந்திருக்கு? இதை விரட்டி விடுறதுக்கு யாருமில்லையா?'' அவர் கத்தினார்.

ஜிம்மியை விரட்டுவதற்கு சிலர் சைகைகள் செய்தார்கள். சத்தம் எழுப்பினார்கள். ஜிம்மி அசையவில்லை.

இறுதியில் இரண்டு நபர்கள் முன்னால் வந்து ஜிம்மியின் காலரைப் பிடித்து இழுத்தார்கள். என் சரீரத்தைவிட்டு விலகும்போது, ஜிம்மி ஒரு பச்சிளம் குழந்தையைப்போல அழுதான். ஜிம்மியை அவர்கள் இரக்கமே இல்லாமல் வெளியேற்றியபோது, நானும் வெளியே சென்றேன். பாவம்! ஜிம்மி! அன்பைத் தவிர, வேறு எதையுமே என்னிடமிருந்து எதிர்பார்க்காத பேசாத பிராணி...

நாய்தான் மனிதனின் அருமையான நண்பன் என்று பண்டைக் காலத்திலேயே கூறியிருக்கும் பண்டிதரின் பெயர் என்ன?

மணிகள் கடந்து சென்றன.

பார்க்கவேண்டியவர்கள் அனைவரும் என் இறந்த உடலைப் பார்த்தார்கள். இறுதியில் அவர்கள் என்னை நெருப்பில் எரித்தார்கள்.

நான் அந்த காட்சியைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன்.நானும் ஜிம்மியும்...

சுடுகாட்டிலிருந்து அனைவரும் திரும்பினார்கள்- ஜிம்மியைத் தவிர.

இறுதிக் காரியத்திற்கு பெரிய ஒரு கூட்டமே வந்திருந்தது- இரண்டு அமைச்சர்கள் உட்பட...

என் மகன் அஸ்தியை எடுத்தான்- புதிய மேற்துண்டில்.

மாட்டின் மூத்திரத்திலும் இளநீரிலும் பாலிலும் சுத்திகரிக்கப்பட்ட அஸ்தியை வைத்துக்கட்டி, வீட்டிற்குக் கொண்டுவந்து வழிபட்டான். செம்புக் குடத்திலிருந்த அஸ்தியை அப்போதும் சிமென்ட் உலர்ந்திராத அஸ்தி மாடத்தில் வைத்தான்.

இறுதிக் காரியங்கள் முடிந்தவுடன், நான் முழுமை யான சிந்தனையில் ஆழ்ந்துவிட்டதைப்போல எனக்குத் தோன்றியது. யாரும் என்னைப்பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை.

அவர்கள் அனைவரும் சடங்கில் கலந்துகொள்ள வேண்டும் என்ற பெயருக்காக வந்தவர்கள். எனக்கு கவலை உண்டானது.

அவர்களுக்கு விவாதிப்பதற்கு புதிய மரணங்கள் வந்திருக்கின்றன.

நேற்று நகரத்தில் நடைபெற்ற ஒரு கார் விபத்தில் மரணமடைந்த மூன்று பேர்களைப்பற்றி பேசுகின்றனர்.

நான் அமைதியாக இருப்பதற்கு முயற்சித்தேன். நான் ஒரு முட்டாள். ஆட்கள் என்னை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று நான் ஏன் ஆசைப் படுகிறேன்? அப்படி அவர்கள் என்னை நினைவில் வைத்திருப்பதன்மூலம் எனக்கு என்ன கிடைக்கிறது?

நினைவு... நன்றி...

அன்பு... அபூர்வ சம்பவங்கள்... புரிந்துகொள்ள முடியாத மனப்போக்குகள்..

யாரும் என்மீது அன்பு வைத்திருக்கவில்லை ....மனைவி!

அவள் என்மீது அன்பு வைத்திருந்தவளாக இருந்திருக்கலாம். ஆனால், அவளும் என்னை மறந்து விடுவாள். இளம் வயது... அவளுக்கு.

இனியுமொரு திருமணம் அவளுக்கு நடக்கலாம். பிறகு...

ஜிம்மி இருக்கிறான் எனக்கு... ஜிம்மி...

அவன் என்னை மறக்கமாட்டான்.

நான் இங்கு மெதுவாக நடக்கிறேன்.

யாருக்குமே தெரியாமல்...

நாட்கள் வருகின்றன... போகின்றன.

ஜிம்மியைப் பற்றிக்கூட எனக்குத் தவறு நேர்ந்திருக் கிறதோ?

அவனுடைய கண்களில் இப்போது ஈரமில்லை.

அவன் ஓடிக் குதித்துத் திரிகிறான். கேட்டிற்குச் செல்கி றான். பார்ப்பவர்கள் அனைவரின் கால்களையும் நக்குகிறான்.

அவனுடைய துக்கமும் முடிந்துவிட்டது.

நான் ஒரு தத்துவவாதியாக ஆகிவிட்டேன். இதுதான் உலகம். இங்கு...

மொத்தத்தில் இருப்பது... என் அஸ்தி மட்டும்.

அந்த அஸ்தியை நாளை ஆற்றில் கரைத்து ஓட விடுவார்கள். அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கு அவர்கள் தவற மாட்டார்கள்.

நான் என் வீட்டைச் சுற்றி நடந்தேன். அனைவரும் உற்சாகத்துடன் இருக்கிறார்கள். குழந்தைகள் படிக்கிறார்கள். மனைவி பூச்சட்டிகளில் நீர் ஊற்றுகிறாள்.

வானொலி பாடுகிறது.

ஜிம்மி எங்கே?

நான் தேடி நடந்தேன்.

அவன் அஸ்தி மாடத்திற்கு முன்னால் இருந்தான்.

நன்றியுள்ளவன்...

அன்புள்ளவன்.

இப்படித்தான் நான் நினைத்தேன்.

கண்டது என்ன தெரியுமா?

அவன் அஸ்தி மாடத்திலிருந்து செம்புக் குடத்தை வெளியே எடுத்திருக்கிறான்.

அவன் என் எலும்பைக் கடித்து சுவைத்துக் கொண்டிருக்கிறான்! ப்