மாலை நேரமாகிவிட்ட பிறகும், கடையில் நல்ல கூட்டம் இருந்தது.
என்னைப்போலவே எல்லாரும் மழை நிற்பதற்காகக் காத்திருப்பார்கள் என்று நான் நினைத்தேன்.
பகல் முழுவதும் மழை பெய்துகொண்டிருந்தது அல்லவா? "இது' சற்று நின்றபிறகு வெளியே செல்லலாம் என்று நினைத்து நான் வீட்டிலேயே இருந்தேன். வீட்டிலோ பல பொருட்களும் இல்லாமற் போயிருந்தன. உப்பு, மிளகாய், அரிசி, கோதுமை மாவு- இப்படிப் பலவும். ஆனால், மழை பெய்யும்போது மலையில் ஏறி இறங்கி கடைக்குச் செல்லக்கூடிய சக்தி எனக்கில்லை. அதனால் இடையில் ஆகாயத்தைப் பார்த்தவாறு வேறெதுவுமே செய்யாமல் பொறுமையை இழந்து நான் வீட்டிலி−ருந்தேன்...
கடைக்கு வந்திருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வயதான பெண் தொழிலாளிகளாக இருந்தார்கள். அவர்களில் சிலரை எனக்கு அறிமுகம் இருந்தது. கடையிலும்... பிறகு... அங்கு... அருகிலேயே உள்ள தீப்பெட்டி நிறுவனத்தின் முன் னாலும், வேறு சில இடங்களில் வைத்தும்... தங்களுக்கு தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிவிட்டு இருட்டுவதற்கு முன்பே வீட்டிற்குப் போய்ச் சேரவேண்டும் என்ற அவசரத்தில் இருந்தார்கள்- அவர்கள் அனைவரும். "முகுந்தா... இந்தா... எனக்கு நூறு தேங்காய் எண்ணெய் மட்டும் போதும்'. "எனக்கு ரெண்டு கிலோ அரிசி வேணும். அதைக் கொண்டு போயே ஆகணும். வீட்ல குழந்தைங்க மட்டுமே இருக்காங்க. கொஞ்சம் சீக்கிரம் தா...' இப்படிப்பட்ட அவர்களுடைய வேண்டுகோள்களைக் கேட்டவாறு நான் வாசலி−ன் ஓரத்தில் விலகி நின்றிருந்தேன்.
இதற்கிடையில் கடைக்காரன் என்னைப் பார்த்துவிட்டான். "என்ன வேணும்?' என்று கேட்கவும் செ

இதற்கிடையில் கடைக்காரன் என்னைப் பார்த்துவிட்டான். "என்ன வேணும்?' என்று கேட்கவும் செய்தான். ஆனால், "அவசரம் இல்ல. அவங்க எல்லாருக்கும் கொடுத்தபிறகு... போதும்' என்று கையாலும் முகத்தாலும் வெளிப்படுத்தியவாறு நான் வாசலின் ஓரத்திலேயே நின்றுகொண்டிருந்தேன்.
இவ்வாறு ஒரு சாட்சியைப்போல அங்கு நின்று கொண்டிருந்த போதுதான், அந்தச் சிறுமி என் கவனத்தில் பட்டாள்.
சிறுமி எனக்கு மிகவும் அருகிலேயே நின்றிருந்தாள்- வாச−ன் ஓரத்தி−ருந்த தூணில் சாய்ந்தவாறு.
அதிகபட்சம் ஆறோ ஏழோ வயது மட்டுமே மதிக்கக்கூடிய அந்தச் சிறுமிக்கு, பறித்து நட்டபிறகு நீர் கிடைக்காததால் வாடிப்போய்விட்ட ஒரு செடியின் வாட்டம் இருந்தது. அவளுடைய ஆடைக்கு நிறமில்லாமலிருந்தது. அந்த அளவுக்கு அது பழையதாக இருந்தது. தலைமுடியில் எண்ணெய்ப் பசையே இல்லாமலிருந்தது. வாரிக்கட்டப்படவோ, பின்னப்படவோ எதுவுமே செய்யப்படாமல் அது அடர்த்தியாக காடென காட்சியளித்தது. ஆனால், என்னுடைய கவனம் இதில் எதிலுமே இல்லை. சாதாரண நிலையைவிட பெரிதாக இருந்த அவளுடைய அழகான கண்களிலேயே என் கவனம் இருந்தது. அந்த கண்களில் உலகம் முழுவதுமே பிரதிபலிலித்தது.
நான் அவளுடைய மெந்த தோளில் கையை வைத்தவாறு கேட்டேன்:
""பேரு என்ன?''
சிறுமி என்னை சந்தேகத்துடன் பார்த்தாளே தவிர, எதுவுமே கூறவில்லை.
நான் மீண்டும் கேட்டபோது அவள் தயங்கியவாறு கூறினாள்:
""அஸ்வதி.''
அப்போதும் அவளுடைய முகத்தில் சந்தேகம் இருந்தது.
நான் சந்தோஷத்துடன் கூறினேன்:
""நல்ல பேரு...''
அப்போது சிறுமி எதுவும் கூறவில்லை. சற்று புன்னகைக்கக்கூட இல்லை.
வாசலின் ஓரத்திலிருந்த மேஜையின்மீது நிறைய கொள்கலன்கள் இருந்தன. கண்ணாடி, பிளாஸ்டிக் ஆகியவற்றால் ஆனவை.
அவற்றுக்குள் பல வகையான மிட்டாய்களும், சிறிய சிறிய கேக்குகளும், பிஸ்கட்களும் இருந்தன. மிட்டாய்கள் வண்ணத்தாள்களில் சுற்றப் பட்டிருந்தன.
சிறுமியின் சுருட்டி வைக்கப்பட்டிருந்த வலது கை ஒரு கண்ணாடி புட்டியின் மேலே இருந்தது.
அவளுடைய கவனமோ சற்று கண்ணாடி புட்டியிலும், சற்று கடைக்காரனின் முகத்திலும் மாறி மாறிப் பதிந்துகொண்டிருந்தது.
ஆனால் கடைக்காரன் சிறுமியைப் பார்க்கவில்லை.
கூட்டம் கிட்டத்தட்ட முடிவடைந்தபோது அவன் என்னிடம் கூறினான்:
""வந்து கொஞ்ச நேரமாயிருச்சே! என்ன வேணும்?'' ஆனால் நான் கூறினேன்:
""அது பரவாயில்லை... நீங்க முதல்ல இவளை அனுப்புங்க. இவள் எனக்கு முன்னவே வந்தவ.''
தொடர்ந்து அவளுடைய பெரிய கண்களையே பாசத்துடன் பார்த்தவாறு நான் கூறினேன்:
""இல்லியா?''
கடைக்காரன் வாசலின் ஓரத்தில், சிறுமி நின்றுகொண்டிருந்த இடத்திற்கு வந்து கேட்டான்:
""மகளே... உனக்கு என்ன வேணும்?''
சிறுமி அப்போது இறுகப் பிடித்திருந்த கையால் கண்ணாடி புட்டியைத் தொட்டுக் காட்டினாள்.
கடைக்காரன் ""எவ்வளவு?'' என்று கேட்டபோது கையைத் திறந்து காட்டினாள்.
அவளுடைய கையில் பூசணம் பிடித்த ஒரு இருபது பைசா நாணயம் இருந்தது.
கடைக்காரன் உடனடியாகக் கூறினான்:
""மகளே... இது ஐம்பது பைசா ஆச்சே!''
புட்டியின் மூடியைத் திறக்கச் சென்ற அவன் அதற்குப்பிறகு திறக்கவில்லை. அந்த சிறுமியின் முகத்தைப் பார்க்கவில்லை பிறகு குறிப்பிட்டுக் கூறும் வகையில் எதுவுமே நடக்காததைப்போல என்னிடம் கேட்டான்:
""என்ன வேணும்? அரிசி வேணாமா? எத்தனை கிலோ?''
சிறுமியின் நீட்டிய கையில் அப்போதும் அந்த நாணயம் இருந்தது. அவளுடைய கையோ புட்டியின் வெளியே இருந்தது.
கடைக்காரன் கூறியது எதுவுமே அவளுக்குப் புரிந்திருக்காது என்ற விஷயத்தை ஒரு உள்ளதிர்ச்சியுடன் நான் நினைத்துப் பார்த்தேன்.
நான் கடைக்காரனிடம் கேட்டேன்:
""இங்க ஐம்பது பைசாவுக்குக் குறைவான மிட்டாய் இல்லையா?''
"இல்லை' என்று அவன் தலையை ஆட்டினான்.
தொடர்ந்து கூறவும் செய்தான்:
""இப்போ மிட்டாய்களுக்கு அதிக விலையாச்சே?''
ஒரு நிமிட நேரம் அங்கிருந்த கொள்கலன்களைப் பார்த்துவிட்டு, ஒரு பெரிய புட்டியிலிருந்து அழகாக வண்ணத்தாளில் சுற்றப்பட்டிருந்த ஒரு மிட்டாயை நான் எடுத்தேன். அதற்கு சற்று நீண்ட ஒரு கைப்பிடி இருந்தது.
நான் கேட்காமலே கடைக்காரன் கூறினான்:
""அது "லாலிபாப்'. விலை ஒன்றரை ரூபாய்.''
நான் எதுவுமே கூறாமல் ஒரு "லா−லிபாப்'பை எடுத்து சிறுமியின் கையில் கொடுத்தேன்.
சிறுமி தயங்கியபோது நான் அவளை என்னோடு சேர்த்துப் பிடித்து அவளுடைய கண்களையே கூர்ந்து பார்த்தவாறு கூறினேன்.
""இது உனக்குத்தான்... வாங்கிக்கோ.''
சிறுமி என்னுடைய முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாளே தவிர மிட்டாயை வாங்கவில்லை.
இனம்புரியாத ஒரு பயமோ தயக்கமோ அந்தச் சிறுமியை வெளியே பிடித்து இழுப்பதைப்போல தோன்றியது.
என் மனம் திடீரென்று கவலையால் நிறைந்தது.
நான் மீண்டும் அவளை என்னோடு சேர்த்துப் பிடித்தவாறு கூறினேன்.
""இது... உனக்குத்தான்.''
அப்போது கடைக்காரன் கூறினான்:
""வாங்கிக்கோ மகளே... தாத்தா தர்றதுதானே?''
தொடர்ந்து அவன் அதைச் சிறுமியின் கையில் வற்புறுத்திக் கொடுத்தான்.
சிறுமி ஒரு நிமிட நேரம் என் கண்களையே கூர்ந்து பார்த்தாள். அப்போது திடீரென்று அவளுடைய முகம் பிரகாசமயமானது.
நான் எதுவும் கூறாமல் அவளையே பார்த்தவாறு அங்கு நின்றுகொண்டிருக்க மட்டும் செய்தேன்.
பிறகு... அவள் சாலையில் கால் வைத்ததும் கடைக்காரன் கூறினான்:
""நில்லு...''
அவன் முதலில் பார்த்த புட்டியிலிருந்து ஒரு மிட்டாயை எடுத்து சிறுமியின் கையில் கொடுத்தான்.
""இந்தா... இதையும் நீ வச்சுக்கோ.''
சிறுமி அப்போதும் தன் கையிலிருந்த இருபது பைசா நாணயத்தை அவனிடம் கொடுத்தாள்.
அவன் அதை வாங்கமாட்டான் என்றுதான் நான் நினைத்தேன்.
ஆனால்...
அவன் அதை வாங்கிக்கொண்டான்.
என் பார்வையைப் பார்த்ததும் அவன் கூறினான்:
""இருந்தாலும் எனக்கு நஷ்டம்தான்...''
நான் எதுவும் கூறவில்லை. எனினும் அவனுடைய முகத்தில் போலித்தனம் இருப்பதாக எனக்குத் தோன்றியது.
சிறுமியின் முகத்தில் என்னவென்று கூறமுடியாத சந்தோஷம் இருந்தது.
கடைக்காரன் மீண்டும் கூறினான்:
""தீப்பெட்டி கம்பெனியில வேலை செய்யுற ஒரு தமிழனோட மகள்...''
நான் எதுவும் கூறவில்லை.
கடையின் வாசலிலிருந்த மங்கலான வெளிச்சத்தின் ஒரு பகுதி சாலையில் இருந்தது.
முதலில் சிறுமி மிகவும் மெதுவாகவே நடந்தாள். தன் பிஞ்சுக்கைகளில் இரண்டு மிட்டாய்களையும் அவள் பத்திரமாகப் பிடித்திருந்தாள். தொடர்ந்து அவளுடைய நடைக்கு வேகம் அதிகரிக்கவும், இறுதியில் அவள் ஓடி இருளில் மறையவும் செய்தாள்.
என் பொருட்கள் அனைத்தையும் வாங்கிக்கொண்டு, நானும் வீட்டை நோக்கி நடந்தேன். பையின் சுமை காரணமாக இருக்கவேண்டும்- நான் மிகவும் மெதுவாகவே நடந்தேன்.
மலையில் ஏறி, இறங்கி, அப்படியே...