மன்னரைச் சேர்ந்தொழுகுதல் என்ற அதிகாரத்தையும் திருக்குறளில் படைத்திருக்கிறார் திருவள்ளுவர். அதாவது மன்னர்கள், தலைவர்கள் உள்ளிட்டவர்களிடம் நெருங்கிப் பழகக் கூடியவர்கள் எப்படி எல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்த அறவுரையைத்தான் இந்த அதிகாரத்தில் வள்ளுவர் எழுதியிருக்கி றார். இந்த அத்தியாயமே, கலைஞரின் நிழல் என்று அனைவராலும் வர்ணிக்கப்படும் சண்முகநாதன் அவர்களுக்காகவே எழுதியது போல் அமைதிருக்கிறது.
குறிப்பாக, தலைவர்களிடம் நெருங்கிப் பழகும்போது...
குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில வேண்டுப வேட்பச் சொலல் என்பது போல நடந்துகொள்ளவேண்டும் என்கிறார். இதன் பொருள், "சம்மந்தப்பட்ட தலைவரின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதைக் கவனித்து குறிப்பறிந்து, எதைச் சொன்னாலும் தகுந்த நேரம் பார்த்து, அவர் வெறுக்கக் கூடியவைகளை நீக்கி, அவர் விரும்புகிறவற்றையே சொல்லவேண்டும். அவர் விரும்பு வதுபோலவே நடந்துகொள்ள வேண்டும்' என்பதாகும்.
ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம், கலைஞரின் மனம் உணர்ந்து, அவர் என்ன நினைக்கிறார் என்பதை அறிந்து, அவர் மனம் கோணாமல், அவரிடம் உதவியாளராகவும் செயலாளராகவும் இருந்து, அவருக்காகவே இந்த வாழ்க்கையை வாழ்ந்து தீர்த்திருக்கிறார் சண்முகநாதன்.
அதேபோல் மரணத்திலும் கூட அவர் சென்ற பாதையிலேயே அவரை அடியொற்றிச் சென்று, தனது இறுதிப் பயணத்தையும் மேற்கொண்டிருக்கிறார் கலைஞரின் கால்முளைத்த நிழலான சண்முகநாதன்!
திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கை தான் சண்முகநாதனின் சொந்த ஊர். கலைஞரின் சொந்த மாவட்டத்துக்காரர். அவர் ஆரம்பத்தில் காவல்துறையில் சுருக்கெழுத்தராக வேலை
மன்னரைச் சேர்ந்தொழுகுதல் என்ற அதிகாரத்தையும் திருக்குறளில் படைத்திருக்கிறார் திருவள்ளுவர். அதாவது மன்னர்கள், தலைவர்கள் உள்ளிட்டவர்களிடம் நெருங்கிப் பழகக் கூடியவர்கள் எப்படி எல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்த அறவுரையைத்தான் இந்த அதிகாரத்தில் வள்ளுவர் எழுதியிருக்கி றார். இந்த அத்தியாயமே, கலைஞரின் நிழல் என்று அனைவராலும் வர்ணிக்கப்படும் சண்முகநாதன் அவர்களுக்காகவே எழுதியது போல் அமைதிருக்கிறது.
குறிப்பாக, தலைவர்களிடம் நெருங்கிப் பழகும்போது...
குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில வேண்டுப வேட்பச் சொலல் என்பது போல நடந்துகொள்ளவேண்டும் என்கிறார். இதன் பொருள், "சம்மந்தப்பட்ட தலைவரின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதைக் கவனித்து குறிப்பறிந்து, எதைச் சொன்னாலும் தகுந்த நேரம் பார்த்து, அவர் வெறுக்கக் கூடியவைகளை நீக்கி, அவர் விரும்புகிறவற்றையே சொல்லவேண்டும். அவர் விரும்பு வதுபோலவே நடந்துகொள்ள வேண்டும்' என்பதாகும்.
ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம், கலைஞரின் மனம் உணர்ந்து, அவர் என்ன நினைக்கிறார் என்பதை அறிந்து, அவர் மனம் கோணாமல், அவரிடம் உதவியாளராகவும் செயலாளராகவும் இருந்து, அவருக்காகவே இந்த வாழ்க்கையை வாழ்ந்து தீர்த்திருக்கிறார் சண்முகநாதன்.
அதேபோல் மரணத்திலும் கூட அவர் சென்ற பாதையிலேயே அவரை அடியொற்றிச் சென்று, தனது இறுதிப் பயணத்தையும் மேற்கொண்டிருக்கிறார் கலைஞரின் கால்முளைத்த நிழலான சண்முகநாதன்!
திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கை தான் சண்முகநாதனின் சொந்த ஊர். கலைஞரின் சொந்த மாவட்டத்துக்காரர். அவர் ஆரம்பத்தில் காவல்துறையில் சுருக்கெழுத்தராக வேலை பார்த்தவர். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், எதிர்க்கட்சித் தலைவர்களின் பேச்சுக்களைக் குறிப்பெடுத்து, அப்படியே மேலிடத்துக்கு அனுப்பிவைப்பது அவரது வேலையாக இருந்திருக்கிறது. அப்படி சண்முகநாதன் தனது கூட்டங்களில் தனது பேச்சைக் கர்ம சிரத்தையாகக் குறிப்பெடுத்து வந்ததை கவனித்து வந்திருக்கிறார் கலைஞர். சண்முகநாதன் குறிப்பெடுத்த கலைஞரின் பேச்சே, கலைஞர் மீது வழக்குப் பதியவும் காரணமாக இருந்திருக்கிறது. இருந்தபோதும் அவரை வெறுக்காத கலைஞர், அண்ணா தலைமை யில் 1967-ல் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று, அவர் அமைச்சராக ஆன நேரத்தில், சண்முகநாதனை அழைத்து, "எனக்கு உதவியாளராக என்னுடனேயே இருந்துவிடுகிறீர்களா?' என்று கேட்டிருக்கிறார்.
சண்முகநாதனோ, "மன்னிக்க வேண்டும். எனக்கு என் அரசு சம்பளம் முக்கியம். நான் என் தம்பி தங்கைகளை கரையேற்ற வேண்டியிருக்கிறது' என்று ஒரேயடியாக மறுத்துவிட்டுப் போய்விட்டாராம்.
இதையறிந்த சண்முகநாதனின் அப்பா, "கலைஞர் எவ்வளவு பெரிய தலைவர். சிந்தனையாளர். முற்போக்குவாதி. உனக்கு அதிக சம்பளம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. அவரிடமே உதவியாளராக சேர்ந்துகொள்' என்று அறிவுரை சொல்லியிருக்கிறார். இதன் பிறகே, கலைஞரிடம் பணிக்கு வந்திருக்கிறார்' சண்முகநாதன். அன்று தொடங்கி, கலைஞரின் இறுதி நிமிடம் வரை, அவரை விட்டுப் பிரியாத நிழலாகவே இருந்தார்.
சண்முகநாதனின் திருமணத்தையும் கலைஞர்தான் நடத்தி வைத்திருக்கிறார். அப்போது அழகிரி, ஸ்டாலின் என தனது பிள்ளைகளுக்கும் ஒரே மாதிரியான ஆடைகளை எடுத்துக் கொடுத்து, தங்கள் வீட்டுப் பெண்களின் நகைகளையும் மணப் பெண்ணுக்கு அணிவித்து, வெகு தடபுடலாக தங்கள் வீட்டு திருமணம் போலவே அந்தத் திருமணத்தை நடத்தி வைத்தாராம் கலைஞர். காலப் போக்கில் கலைஞர் குடும்பத்தில் ஒருவராகவே ஆகிவிட்டார் சண்முகநாதன்.
கலைஞர் பதவியில் இருந்தால், சண்முகநாதன் அவரது தனிச் செயலாளராக இருப்பார். பதவியில் அவர் இல்லாத போது அவரது உதவியாளராக மாறிவிடுவார். இப்படி, ஏறத்தாழ 50 ஆண்டுகாலத்திற்கு மேல், கலைஞரிடம் இரட்டை நிலையில் பணியாற்றியவர் சண்முகநாதன். எனினும் தனது இந்த ஜென்மமே கலைஞருக்காகத்தான் என்ற ஒரே சிந்தனையோடு, தனது வாழ்க்கையை வாழ்ந்து முடித்திருக்கிறார் அவர்.
அதிகாலையில் கலைஞர் படுக்கையில் இருந்து எழுந்தது முதல், அவர் இரவு கூட்டங்கள், சந்திப்புகள் எல்லாவற்றை யும் முடித்துவிட்டு படுக்கைக்குச் செல்லும் வரை, கலைஞருடனேயே அவர் சுழன்றுகொண்டு இருப்பார். கலைஞரைச் சுற்றியே அவரது உலகம் உருண்டு கொண்டிருந்தது. இப்படி சண்முகநாதனின் உலகம் ஒரு நாளைக்கு சராசரியாக 12, 13 மணி நேரம், ஓய்வின்றி கலைஞருக் காக இயங்கிக்கொண்டே இருந்தது. சில நேரம் படுக்கைக்குச் சென்ற பின்னரும், கலைஞருக்கு, ஏதேனும் சந்தேகம் வந்தால், சண்முக நாதன் தேவைப்படு வார்.
சண்முகநாதனும், கலைஞரை சந்திக்க யார் வருகிறார்கள்?
எப்படிப்பட்டவர் கள் வருகிறார்கள் என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்பட மாட் டார். கலைஞர் சாப்பிட்டாரா? மருந்துகளை எடுத்துக் கொண் டாரா? அவர் எழுதவேண்டியதை எழுதிவிட் டாரா? மேடைப் பேச்சுக்கு குறிப்புகளை எடுத்து விட்டாரா? கலைஞர் சொன்ன நூல்களை எடுத்து வைத்துவிட்டோமா? என்றுதான் சிந்திப்பார்.
கலைஞரின் உலகமும் சண்முகநாதன் இல்லாமல் அசையாது என்ற நிலைதான் இருந்தது. கலைஞர் சொல்வதைக் குறிப்பெடுப்பது தொடங்கி, அவர் இடும் அத்தனை வேலைகளையும் செய்துகொண்டிருந்தார் சண்முகநாதன்.
கலைஞரைச் சந்திக்க வருகிறவர்கள், அமைச் சர்களாக, கட்சியின் மா.செ.க்களாக இருந்தாலும் அவர்களிடமும், "தலைவரைத் தொந்தரவு பண்ணாதீங்க. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க' என்று கறாராகச் சொல்வார் சண்முகநாதன். அவர் அப்படிச் சொன்னாலும் யாரும் கோபித்துக்கொள்ள மாட்டார்கள். காரணம் கலைஞரின் காவல் அரண் அவர்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால் கலைஞருக்குக் கொடுக்கும் மரியாதையை அவர் நிழலாக இருந்த அவருக்கும் அனைவரும் கொடுத்துவந்தார்கள்.
குடும்ப உறுப்பினர்களின் பிரச்சினைகளையும் கூட அவர்தான் கலைஞரின் மன நிலைபார்த்து, அவரது கவனத்துக்குக் கொண்டு போகிறவராக இருந்தார்.
வீரப்பன் ராஜ்குமாரை கடத்திய நேரத்தில், அவரை மீட்க இரு மாநிலத் தூதுவராக நான் வீரப்பன் காட்டுக்குப் போன போது, கலைஞரின் மனக் குறிப்பறிந்து நமக்கு அவ்வளவு பெரிய ஒத்துழைப்பைக் கொடுத்தவர் சண்முகநாதன் தான். நக்கீரனுக்கு நெருக்கடி வரும் போதெல்லாம், கலைஞரின் குரல், அவர் கொடுக்கும் இணைப்பின் மூலம்தான் வரும்.
சந்துக்குள் இருக்கும் எனது ஜானிஜான் கான் தெரு வீட்டை ஒருமுறை பார்த்துவிட்டு, உடனடியாக சி.எம்.மான கலைஞருக்கு, ஒரு விண்ணப்ப மனுவைக் கொடுங்கள். பெரிய வீட்டை பெறலாம் என்று அக்கறையோடு நம்மிடம் வலியுறுத்தி யவர் அவர். அதை நாம் மறுத்துவிட் டோம்.
கலைஞரிடம் அந்த தகவலை கொண்டு சென்றார் சண்முக நாதன். கலைஞரும் நம்மை நேரில் வர வழைத்து, "சண்முக நாதன் சொன்னார்...
ஏன் தயக்கம்?'' என்று கேட்க, "நன்றி அண்ணே, எனக்கு வீடு வேண்டாம்'' என்று மறுத்தது என்பது வேறு விசயம்.
அதற்கு சண்முகநாதன், "யார், யாரோ வீடு வாங்கு றாங்க. நீங்க ஏன் இப்படி வேண்டாம் என்கிறீர்கள். பிழைக்கத் தெரியாத ஆளா இருக்கீங்களே''ன்னு வருத்தமும் பட்டார்.
கலைஞருடனேயே அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இருந்த போதும், தன் பெயரைக் கெடுத்துக் கொள்ளாமல், கண்ணியமாக வாழ்ந்த அவரது வாழ்க்கை, அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஒரு அரிய பாடம்.
கலைஞர் மறைந்த பிறகு, மனதளவிலும் உடலள விலும் சோர்ந்து போன சண்முகநாதன், அவர் வழி யிலேயே நோய் படுக்கையில் விழுந்து, கலைஞர் உயிர் விட்ட காவேரி மருத்துவமனையிலேயே அட்மிட் ஆகி, அங்கேயே மரணத்தையும் தழுவியிருக்கிறார்.
மரணத்திலும் கூட கலைஞரை ஃபாலோ பண்ணி யிருக்கிறார் சண்முகநாதன்.
அவரது மரணம் தி.மு.க.வினரை மட்டுமல்லாது அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
"எங்களது கோபாலபுரக் குடும்பத்தின் ஒரு முக்கியமான தூண் சரிந்துவிட்டது. அவரைக் காவேரி மருத்துவமனையில் நேரில் சென்று சந்தித்தபோது, அடிக்கடி என்னை எதற்காக வந்து சந்திக்கிறாய்? நீ உனது பணிகளைக் கவனி என்று உரிமையோடு சொன்னார். அத்தகைய அன்புள்ளத்தை இவ்வளவு சீக்கிரமாக இழப்போம் என்று நான் நினைக்கவில்லை' என்று முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டதோடு, துயரம் தாங்காமல் தேம்பித் தேம்பி அழுதார்.
அவர் வடித்த கண்ணீரில் சண்முகநாதனின் உயரமும் அவர் கலைஞரிடம் காட்டிய விசுவாசமும் தெரிந்தது.
கலைஞரின் வரலாற்றில், சண்முகநாதனுக்கான இடம் தனித்துவமானது.
-ஆழ்ந்த வருத்தத்தோடு
நக்கீரன்கோபால்